Monthly Archives: செப்ரெம்பர் 2011

ஆபாச திரைப்பட போஸ்டர்கள்

2.jpg

ஆபாச திரைப்பட போஸ்டர்கள் ஒட்ட தடை விதிக்க வேண்டும் என்று கலெக்டருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து நாகை, திருவாரூர் மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு உரிமை நலச்சங்க தலைவர் பாஸ்கரன் நாகை மாவட்ட கலெக்டருக்கு கோரிக்கை மனு ஒன்று அனுப்பியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

நாகை நகரத்தின் முக்கிய வீதிகள், பள்ளி சுவர்களிலும், பள்ளிகள் அருகிலும், கோவில்களின் சுற்றுசுவர்களிலும் ஆபாச திரைப்படங்களின் போஸ்டர்கள் ஒட்டப்படுகின்றன. கோவில் சுவர்களிலும், பள்ளிகளின் எதிரிலும் இவ்வாறு ஆபாச திரைப்படங்களின் போஸ்டர்கள் ஒட்டப்படுவதால் பள்ளி மாணவ, மாணவிகள் பாதிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

இளைஞர்களிடம் பாலுணர்வை தூண்டும் வகையில் மிகவும் மோசமான வகையில் உள்ளன. இவ்வாறான போஸ்டர்களை ஒட்ட கோர்ட்டு தடை விதித்துள்ளதாக தெரிகிறது. ஆனால் இதையெல்லாம் பொருட்படுத்தாமல் வியாபார நோக்கத்தோடு பள்ளிகளின் எதிரிலும், கோவில்களின் சுற்றுச்சுவர்களிலும் ஆபாச திரைப்பட போஸ்டர்கள் ஒட்டப்படுவது வேதனைக்குரியது.

கண்ட இடங்களிலும் ஆபாச திரைப்படங்களின் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருப்பது சாலையில் செல்வோரின் கவனத்தையும் சிதறடிக்கிறது. இதனால் வாகனங்களில் செல்வோர் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள்.

இத்தகைய போஸ்டர்களால் சமூகம் சீரழியும் சூழ்நிலை உள்ளது. ஆபாச திரைப்பட போஸ்டர்களால் ஒட்டு மொத்த நகரத்தின் அழகே கெடும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே சுற்றுப்புறம், தமிழ் கலாசாரம் சீரடையவும், பண்பாடு காக்கப்படவும் ஆபாச திரைப்பட போஸ்டர்கள் ஒட்ட தடை விதிக்க வேண்டும். இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

source:nakkheeran

பின்னூட்டமொன்றை இடுக

Filed under Uncategorized

சமூக வலைதளங்களால் இளைஞர்களுக்கு ஆபத்து

large_314803.jpg

தொலைத்தொடர்புத் துறையில், இன்று பெரும் பங்கு வகிக்கும், சமூக வலைதளங்களில் வெளியிடப்படும், பதிவுகளை மற்றவர்கள் தவறாக பயன்படுத்தும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. இதனால், பதிவுகளை வெளியிடுவதில் எச்சரிக்கையாக இல்லாவிட்டால், தேவையற்ற பிரச்னைகளை சந்திக்க நேரும் என்று, வலைதள வல்லுனர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கல்வி, வணிகம், திருமணம், வேலைவாய்ப்பு போன்ற எந்த ஒரு விஷயங்களுக்கும், தேவையான தகவல்களைத் தருவதில், இணையதளங்கள் முன்னணியில் உள்ளன. அதனால், நவீன உலகில் உடனுக்குடன் தகவல்களை பெற, இணையதளத்தை மக்கள் அதிகமாக நாடிச் செல்கின்றனர். தொலை தூரக் கல்வியிலிருந்து மாறி, இணையதளத்தில், "ஆன்-லைன்’ கல்வி கற்கும் நிலையும் வந்துவிட்டது.இத்தகைய நவீன தொழில்நுட்ப முன்னேற்றங்களுடன், தற்போது இளம் தலைமுறையினரை சுண்டியிழுக்க, "சோஷியல் நெட்வொர்க்ஸ்’ என்கிற சமூக வலைதளங்கள் குவிந்து கிடக்கின்றன. ஒவ்வொரு வலைதளமும், போட்டி போட்டு தொழில்நுட்ப வசதிகளைத் தருகின்றன.

கடந்த ஐந்தாண்டுகளாக, இணையத்தில் சமூக வலைதளங்களின் ஆக்கிரமிப்பு அதிகமாக உள்ளது. பிரபலமான "பேஸ்புக், ஆர்குட்’ போன்ற நான்காயிரம் சமூக வலைதளங்கள், இணையதளத்தில் கொட்டிக் கிடக்கின்றன. இதில், செக்ஸ் மற்றும் ஆபாச தகவல்களுக்காக மட்டும் 3,000 வலைதளங்கள் உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்த இணையதளத்தின் முகப்பு பக்கத்தில் துவங்கி, ஆபாச தகவல்கள் படிப்படியாக, பல்வேறு இணையதளங்களின் வழியே நீண்டுக் கொண்டு செல்கின்றன. தகவல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியானது, ஒரு புறம் நன்மைக்காக பயன்பட்டாலும், இன்றைய தலைமுறையினரை தவறான வழியில் சீரழிப்பதாகவும் மாறியுள்ளது.

இதுகுறித்து, "பேஸ்புக்’ வலைதளத்தின், சென்னை அலுவலக ஒருங்கிணைப்பாளர் வசந்த் கூறியதாவது:"பேஸ்புக்’கில் பல லட்சம் உறுப்பினர்கள் இணைந்த வண்ணம் உள்ளனர். இது, தற்போது ஒரு குழுமம் அல்லது தனிநபர் பற்றிய தகவல்களின் தொகுப்பு இணையமாக, முதலிடத்தில் உள்ளது. மற்ற, "ஆர்குட், ஹை பைவ், ட்விட்டர்’ போன்ற நெட்வொர்க்குகளும், சமமான உறுப்பினர்களைக் கொண்டுள்ளன. பள்ளி மாணவர்களை சுண்டியிழுக்கும் ஆபாச படங்கள் இணையதளங்களில் அதிகமாக உள்ளன. இவற்றின் மீது, தகவல் தொழில் நுட்பச் சட்டத்தின் மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆபாச தளங்களை பார்க்க, எந்த கட்டுப்பாடும் வரையறுக்கப்படாததால், பல இளைஞர்களின் வாழ்க்கை சீரழிகிறது.இவ்வாறு வசந்த் கூறினார்.

எச்சரிக்கை… : சமூக வலைதள உறுப்பினர்கள் கவனிக்க வேண்டியவை:
* சமூக வலைதளத்தில், உங்களது சுய விவரங்கள் முழுவதையும், அனைவரும் பார்க்கும்படி வெளியிட வேண்டாம். ஏனெனில், "பேஸ் புக்’ வலைதளத்தில், "ஸ்பை’ என்ற பட்டனை "கிளிக்’ செய்தால், உங்களது சுய விவரம் பற்றி அனைவரும் அறிந்து கொள்ள முடியும். எனவே, எச்சரிக்கையுடன், உங்கள் பதிவுகளை வெளியிட வேண்டும்.
* தெரியாத நபருடன் வலைதள நண்பராக இணைவதைத் தவிருங்கள்.
* புகைப்படங்கள் மற்றும் காட்சிப் பதிவுகளை, பிறருடன் சமூக வலைதளத்தில் பகிர்ந்து கொள்வதில், எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்.
* கவர்ச்சி படங்கள், காட்சிப் பதிவுகளை உங்களது பதிவிலிருந்து நீக்கினால் நல்லது.
* கவர்ச்சியான மற்றும் தனிப்பட்ட குடும்ப மற்றும் பெண் நண்பர்களின் படங்களை வெளியிடுவதால், அதை சிலர் தவறாக பயன்படுத்த அதிக வாய்ப்புகள் உள்ளன.

source:dinamalar

பின்னூட்டமொன்றை இடுக

Filed under Uncategorized

கம்ப்யூட்டர் கேள்வி பதில்

E_1315730539.jpeg

கேள்வி: டி.பி. ஐ.( ஈ.க.ஐ.) என்பதன் முழு விளக்கத்தினையும், அதன் பயன்பாட்டினையும் குறிப்பிடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

-கே. தவமணி, கோவை.
பதில்: டிஜிட்டல் படங்கள் புள்ளிகளால் அமைக்கப்படுகின்றன. இதனை அளவு செய்திட DPI (Dots Per Inch) என்பதைப் பயன்படுத்துகிறோம். இதனை ரெசல்யூசன் (Resolution) என்றும் சொல்கிறோம். எந்த அளவிற்கு இந்த புள்ளிகளின் எண்ணிக்கை, அதாவது டி.பி.ஐ. அதிகமாக இருக்கிறதோ, அந்த அளவிற்கு ஒரு படம் தெளிவாகவும் துல்லியமாகவும் இருக்கும். போட்டோ ஒன்றின் தன்மை சிறப்பாக இருக்க குறைந்தது அது 300 DPIல் இருக்க வேண்டும். அதற்கு மேல் செல்லச் செல்ல, அதன் சிறப்புத் தன்மையில் பெரிய வேறுபாடு இருக்காது. இணையத்தில் அல்லது கம்ப்யூட்டர் மானிட்டர் திரையில் சிறப்பாகத் தோற்றமளிக்க, ஒரு படம் 72 டி.பி.ஐ. இருந்தால் போதுமானது.

கேள்வி: விண்டோஸ் 7 சிஸ்டம் பயன்படுத்துகிறேன். இதில் டிபிராக் செய்வது குறித்த கட்டளையை எப்படிக் கொடுப்பது. விண்டோஸ் எக்ஸ்பியில் உள்ளது போல் இல்லையே! ஏன்? விளக்கவும்.
-தே. உதயகுமார், கோவை.
பதில்: ஆப்பரேட்டிங் சிஸ்டம் இயங்கத் தேவையான டிபிராக் வசதி, விண்டோஸ் 7 சிஸ்டத்தில் பல உயர்நிலை மாற்றங்களை அடைந்து, கூடுதல் வசதிகளைத் தருகிறது. நீங்கள் இடம் மற்றும் கட்டளை தெரியாமல் தடுமாறுவது போல பல வாசகர்கள் அனுபவித்துள்ளனர். இதன் முழுப் பயனையும் அடைய, கீழே கண்டுள்ளபடி செயல்படவும். ஸ்டார்ட் அழுத்தி, கிடைக்கும் சர்ச்பாக்ஸில், cmd என டைப் செய்திடவும். மேலாகக் கிடைக்கும் பட்டியலில், cmd ஐகானில் ரைட் கிளிக் செய்திடவும். இங்கு Run as Administrator என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இப்போது கட்டளை விண்டொ திறக்கப்படும். இங்கு defrag என டைப் செய்து என்டர் தட்டவும். இப்போது டிபிராக் கட்டளையுடன் பயன்படுத்தக் கூடிய சில ஸ்விட்ச்களுடன் விண்டோ கிடைக்கும். இங்கு defrag கட்டளையை டைப் செய்து, உடன்/டைப் செய்து பின்னர், எந்த செயல்பாடு வேண்டுமோ, அதற்கான ஸ்விட்சை டைப் செய்திடவும். எடுத்துக்காட்டாக, சி ட்ரைவ் முழுவதும், அனைத்து வால்யூம்களையும் டிபிராக் செய்திட defrag/c என டைப் செய்திட வேண்டும். இங்கு ஒன்றுக்கு மேற்பட்ட ஸ்விட்சுகளையும் பயன்படுத்தலாம். அதற்கேற்ற வகையில் டிபிராக் செயல்பாடு மேற்கொள்ளப்படும்.

கேள்வி: விண்டோஸ் கிராஷ் ஆனால், அப்போது திறக்கப்பட்டு வேலை மேற்கொள்ளப்படும் அனைத்து போல்டர்களூம் கிராஷ் ஆகின்றன. நான் எக்ஸ்பி பயன் படுத்துகிறேன். அப்போது பயன்பாட்டில் உள்ள போல்டர் மட்டும் கிராஷ் ஆகும் வழியும் உள்ளது என்று என் நண்பர் கூறுகிறார். இது உண்மையா?
-ஜி. கண்ணதாசன், புதுச்சேரி.
பதில்: நீங்கள் விரும்புவது போல அந்த போல்டர் மட்டும் பாதிப்புக்குள்ளாகி, மற்ற போல்டர்கள் எந்த வகையிலும் சிக்காத வகையில் செட் அப் செய்திடலாம்.
இதற்கு கண்ட்ரோல் பேனலைத் திறந்து Folder Options என்னும் பிரிவினைத் தேர்ந்தெடுக்கவும். அதில் வியூ டேபிற்குச் செல்லவும். அதில் பல ஆப்ஷன்கள் தரப்பட்டிருக்கும். அவற்றில் ‘Launch folder windows in a separate process’ என்று ஒன்று இருக்கும். அதன் அருகே டிக் மார்க் அடையாளம் ஏற்படுத்தி பின் ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.

கேள்வி: என் கம்ப்யூட்டரில் விண்டோஸ் எக்ஸ்பி பல ஆண்டுகளாகப் பயன்படுத்தி வருகிறேன். இதன் டாஸ்க் பாரில், வலது பக்கம் உள்ள நோட்டிபிகேஷன் ஏரியாவில், நிறைய ஐகான்கள் காணப்படுகின்றன. இவற்றை எப்படிக் குறைப்பது? இதனால், இயங்கும் புரோகிராம்கள் நின்று போகாதா?
-எஸ்.கே. வேல்ச்சாமி சாமுவேல், விழுப்புரம்.
பதில்: அதிக எண்ணிக்கையில், உங்கள் கம்ப்யூட்டரில் புரோகிராம்களை இன்ஸ் டால் செய்து இயக்கிவிட்டால், டாஸ்க் பாரின் வலது கோடியில் உள்ள நோட்டி பிகேஷன் ஏரியாவில் நிறைய ஐகான்கள் இடத்தை அடைத்துக் கொள்ளும். இதனைச் சரி செய்திட டாஸ்க் பாரின் காலி இடத்தில் ரைட் கிளிக் செய்து புராபர்ட்டீஸ் தேர்ந்தெடுக்கவும். இதில் ‘Hide inactive icons’ என்று உள்ள இடத்தில் எதிரே உள்ள கட்டத்தில் டிக் அடையாளம் ஏற்படுத்தவும். பொதுவாக இது சரியாகவே தன் வேலையை மேற்கொள்ளும். சில வேளைகளில் நமக்கு வேண்டிய ஐகான்களைக் கூட மறைத்து வைக்கும். அப்போது மீண்டும் இதே போல் சென்று புராபர்ட்டீஸ் மெனுவில் Customize பட்டனில் கிளிக் செய்திடவும். பின் உங்களுக்குத் தேவையான ஐகானைக் கிளிக் செய்து தேர்ந்தெடுக்கவும். பின் ‘Always Show’ என்பதைத் தேர்ந்தெடுத்து ஓகே கிளிக் செய்து வெளியேறினால் அந்த ஐகான் காட்டப்படும்.

கேள்வி: தேடுதல் கட்டங்களில் பயன்படுத்த ஏதேனும் ஷார்ட்கட் கீ உண்டா? பயர்பாக்ஸ் பிரவுசரை நான் பயன்படுத்துகிறேன்.
-தி.நாராயணன், திருப்பூர்.
பதில்: உங்கள் கேள்வி புதிய கோணத்தில் பிரவுசர் பயன்பாட்டினை நோக்க வைக்கின்றது. இந்த நோக்கில் தேடிய போது, ஷார்ட்கட் கீ பயன்பாடு இல்லாமல் வேறு ஒரு தகவல் கிடைத்தது. பயர்பாக்ஸ் மற்றும் குரோம் பிரவுசர்களில் இதனைப் பயன்படுத்தலாம். எடுத்துக்காட்டாக, தலைப்பு ஒன்றை கட்டுரை அல்லது டாகுமெண்ட் ஒன்றிலிருந்து காப்பி செய்து தேட விரும்புகிறீர்கள். காப்பி செய்த பின்னர், தேடல் கட்டம் அல்லது குரோம் பிரவுசரில் ஆம்னி பாக்ஸில், ரைட் கிளிக் செய்திடுங்கள். உடன் கிடைக்கும் கீழ் விரி கட்டத்தில் Paste and Search என்று இருப்பதில் கிளிக் செய்திடுங்கள். உடன் நீங்கள் காப்பி செய்த சொற்கள் ஒட்டப்பட்டு தேடல் தொடங்கும். பேஸ்ட் செய்து, பின்னர் என்டர் அழுத்தத் தேவை இல்லை.

கேள்வி: விண்டோஸ் சிஸ்டத்திலேயே பைல்களை ஸிப் செய்திடும் வசதி உள்ளது என்றும், விண்ஸிப், விண் ஆர்.ஏ.ஆர். பயன்படுத்த தேவை இல்லை என்றும் கூறப்படுகிறது. மேலும் அவ்வாறு ஸிப் செய்தால், தர்ட் பார்ட்டி புரோகிராம் கொண்டு விரித்து பைல்களைப் பெற முடியுமா?
-டி.பத்மலதா, திண்டுக்கல்.
பதில்:விண்டோஸ் இயக்கத்தில் ஸிப் செய்திடும் வசதி தரப்பட்டுள்ளது. முதலில் ஸிப் செய்திட வேண்டிய பைல்கள் அனைத்தையும் தேர்ந்தெடுக் கவும். பைல்களைச் சுற்றி ஒரு பாக்ஸ் அமைத்துத் தேர்ந்தெடுக்கலாம். அல்லது கண்ட்ரோல் கீ அழுத்திக் கொண்டு தேர்ந்தெடுக்கலாம். பின்னர் இதில் ரைட் கிளிக் செய்திடவும். கிடைக்கும் மெனுவில் Send To என்பதில் கிளிக் செய்திடவும். இப்போது விரியும் கட்டத்தில், Compressed (Zipped Folder) என்று இருப்பதனைத் தேர்ந்தெடுத்தால், உடன் அனைத்து பைல்களும் ஸிப் செய்யப்பட்டு கிடைக்கும். இந்த ஸிப்டு பைலுக்கு விண்டோஸ் அளிக்கும் பெயர் உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால், எப்2 அழுத்தி புதிய பெயர் டைப் செய்து கொள்ளலாம். இதனை விண்டோஸ் மூலமும், மற்ற தர்ட் பார்ட்டி புரோகிராம் (Winzip, WinRAR) மூலமும், விரித்து பைல்களைப் பெறலாம்.

கேள்வி: இன்டர்நெட் சேவை தரும் நிறுவனங்கள், இணைப்பு தரும் போது சொல்லும் வேகம் சரியாகக் கிடைக்கிறதா என்று எப்படி அறிவது? குறைவாக இருந்தால் யாரிடம் முறையிடுவது?
-சி. ரங்கநாத், கோவை.
பதில்: இன்டர்நெட் இணைப்பு தரும் நிறுவனங்கள், தங்கள் இணைப்பில் கிடைக்கும் வேகத்தினைப் பற்றிக் குறிப்பிடுகையில் அதிக பட்ச வேகம் என்று குறிப்பிடுவார்கள். இன்னும் நுணுக்கமாகக் கேட்டால், அப்லோடிங் ஸ்பீட், டவுண்லோடிங் ஸ்பீட் என்று தனித்தனியே கூறி, இவை எல்லாம் சேர்த்துத்தான் இதன் வேகம் என்று கூறுவார்கள். இருப்பினும் உங்கள் இன்டர்நெட் வேகத்தினை அறிய கீழே தந்துள்ளபடி செயல்படவும்.
உங்கள் இன்டர்நெட் இணைப்பின் வேகத்தை அறிய, முதலில் இணைப்பை இயக்குங்கள். பின் http://speedtest.net/ என்ற முகவரியில் உள்ள தளத்திற்குச் செல்லுங்கள். அங்கு வேகத்தைச் சோதனை செய்வதற்கான தொடர்பில் கிளிக் செய்தால், உடனே உங்கள் பிராட்பேன்ட் இணைப் பிற்கான ரௌட்டருக்கும் கம்ப்யூட்டருக் குமான வேகத்தையும், இன்டர்நெட் டவுண்லோட் வேகத்தினையும் மற்றும் அப்லோடிங் வேகத்தையும் அது அளந்து காட்டும். கீழாக உங்களுக்கு இன்டர்நெட் இணைப்பு தரும் நிறுவனத்தின் பெயருடன், இணைப்பின் தன்மையை நட்சத்திரக் குறியிட்டுக் காட்டும். அதிலேயே வரைபடம் ஒன்று காட்டப்பட்டு அதில் இணைய இணைப்பினை நீங்கள் பெறும் நகரம் சுட்டிக் காட்டப்படும். இது ஏறத்தாழ, உங்களுக்கு இணைப்பு தரும் நிறுவனம் உறுதி அளித்த வேகம் எனில் விட்டுவிடலாம். பெருத்த வேறுபாடு இருந்தால், உடனே அந்நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை மையத்தைத் தொலைபேசி அல்லது மின் அஞ்சல் மூலம் தொடர்பு கொண்டு கேட்டு சரி செய்திடச் சொல்லுங்கள்

source:dinamalar

பின்னூட்டமொன்றை இடுக

Filed under Uncategorized

கட்டபொம்மன் கொள்ளைக்காரனா…? கொதிக்கும் ச முகம்…!

kattapomman.jpg

“மக்களுக்கான நீதி” என்ற ஒரு சமூக மாத இதழில் கிருஷ்ணபரையனார் என்பவர் வீரபாண்டிய கட்டபொம்மன் தியாகியா…? கொள்ளைக்காரனா…? என்ற தலைப்பில் ஒரு கட்டுரை வெளியிட்டுள்ளார். அதில் மா.பெ.சிவஞான கிராமணியார் அவர்கள் இந்திய சுதந்திர போராட்டத்தில் தமிழகத்தின் பங்கு பற்றி எழுதும் போது சரியான வீரர்கள் யாரும் கிடைக்காமல் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தார்.

அப்படி தமிழர்கள் யாரையும் பற்றி எழுதாமல் விட்டால் தமிழகத்துக்கு இழுக்கு ஏற்பட்டுவிடுமே என்ற எண்னத்தில் வெள்ளைக்காரனை எதிர்த்த ஒரே காரணத்துக்காக கட்டபொம்மனை வீரனாக்கி எழுதிவிட்டார்.

இப்படி வெள்ளையனை எதிர்த்தவர்களை எல்லாம் வீரர் என்றால் எத்தனையோ திருடர்களையும், கொல்லையர்களையும் வெள்ளைக்காரர்கள் தூக்கில் போட்டுள்ளார்கள். அவர்களையும் நாம் சுதந்திர போராட்ட வீரர்கள் என்று எழுதவேண்டியிருக்கும்.

கிராமணியார் கட்டபொம்மனை நாடகமாக தயாரித்தார். பின்னர் அதை பந்துலு அவர்கள் சினிமாவாக எடுத்தார். சினிமாவின் பிரமாண்டத்தாலும், நடிகர் திலகத்தின் ஈடு இணையற்ற நடிப்பாலும், ஒரு கோழை, வழிப்பறி கொள்ளைக்காரன் வீரனாகிவிட்டான்.

கட்டபொம்மன் ஒரு வீரனுமல்ல, அவன் பாண்டியனுமல்ல… அவன் ஒரு வழிப்பறி கொள்ளைக்காரன், ஆந்திராவை சேர்ந்த தெலுங்கன் என்று கட்ட பொம்மனை எட்டுப்பக்கத்திற்கு விமர்சனம் செய்து எழுதியுள்ளார் கிருஷ்ணப்பரையனார்.

’’வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்ளைப்பற்றி தவறான தகவல்களை வெளியிட்டுள்ளார் கிருஸ்ணபரையனார் அவர்கள். இந்த கட்டுரைக்கு அவர் வருத்தம் தெறிவிக்கவேண்டும்,இல்லையானால் தமிழகம் முழுவதும் அவரை கண்டித்து நாங்கள் ஆர்ப்பாட்டம் நடத்துவோம்.

சென்னையில் உள்ள அவரது அலுவலகத்தை இழுத்துபூட்டும் போராட்டம் நடத்துவோம்’’ என்கிறார் தமிழ்நாடு நாயுடு, நாயக்கர் மகர்ரஜகள் சங்க மாநில இளைஞர் அணி அமைப்பாளர் பிரனவ்குமார்.

உயிரோடு உள்ளவர்களால்..செத்துவிட்டவர்களுக்கும் பிரச்சனையப்பா….

– சிவசுப்பிரமணியன்

http://ilakkiyam.nakkheeran.in/Grammar.aspx?GRM=142

பின்னூட்டமொன்றை இடுக

Filed under Uncategorized

விமானத்தில் உச்சா அடித்த நடிகர் பயணிகள் அதிர்ச்சி!

cinima.gif

Evening1111.jpg

விமானம் புறப்படும் போது, போதையில் இருந்த நடிகர் சிறுநீர் கழித்ததால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். விமானத்தை சுத்தப்படுத்தி மீண்டும் கிளம்ப ஒரு மணி நேரம் தாமதமானது. பிரபல பிரான்ஸ் நடிகர் ஜெராட் டிபார்டி. வயது 62. ஜீன் டி புளோரட், கிரீன் கார்ட் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு பாரிசில் இருந்து ஏர் பிரான்ஸ் விமானத்தில் பயணம் செய்தார். அப்போது நன்றாக மது குடித்து விட்டு வந்திருந்தார். விமானம் புறப்படும் போது, அவருக்கு வயிறு முட்டியது. உடனடியாக சிறுநீர் கழிக்க இருக்கையில் இருந்து எழுந்தார்.

பக்கத்தில் உட்கார்ந்திருந்த பயணி, நடிகரை ஒரு மாதிரி பார்த்தார். அதற்குள் விமான பணிப்பெண் ஓடிவந்து, விமானம் டேக் ஆப் ஆகிறது. இருக்கையில் உட்காருங்கள்� என்று கூறினார். வேறு விஷயமாக இருந்தால் பரவாயில்லை… சிறுநீர் பிரச்னையாயிற்றே. எப்படி பொறுப்பது? பணிப்பெண்ணுடன் போதையில் தகராறு செய்தார். இவர்கள் வாக்குவாதம் செய்து கொண்டிருந்த போதே, ஜெராட்டால் அடக்க முடியவில்லை. எதை பற்றியும் கவலைப்படாமல் விமான இருக்கைகளுக்கு நடுவில் உச்சா போய்விட்டு… அப்பாடா என்ற பெருமூச்சு விட்டார். அதை பார்த்த சக பயணிகள் அதிர்ச்சி அடைந்து விட்டனர்.

பணிப்பெண்ணிடம் இருந்து தகவல் பறக்க டேக் ஆப் இருந்த விமானம், மீண்டும் பார்க்கிங் ஏரியாவுக்கு கொண்டு வரப்பட்டது. பினாயில் ஊற்றி விமானம் முழுவதும் சுத்தம் செய்தனர். ஒரு மணிநேர தாமதத்துக்கு பிறகு விமானம் மீண்டும் புறப்பட்டது. விமானத்துக்குள் நடிகர் ஜெராட் போதையில் சிறுநீர் கழித்த சம்பவத்தை சக பயணி ஒருவர் அம்பலப்படுத்தி உள்ளார். இதை ஏர் பிரான்ஸ் விமான நிறுவனமும் உறுதி செய்தது. ஆனால் பிரச்னை எதுவும் இல்லை� என்று கூறியுள்ளது.

source:athirvu

பின்னூட்டமொன்றை இடுக

Filed under Uncategorized

20 ஆண்டுகளாக தமிழ் பாடத்தில் சதம்: “மராத்திய’ ஆசிரியரின் சாதனை பயணம்

large_312718.jpg

மராத்தியை தாய்மொழியாக கொண்ட ஆசிரியர் இந்திராபாய், கடந்த 20 ஆண்டுகளாக தன் மாணவர்களை தமிழ்ப் பாடத்தில், 100 சதவீதம் தேர்ச்சி பெற வைத்திருக்கிறார். கோடம்பாக்கம், புலியூர் சென்னை மேல்நிலைப் பள்ளியின் உதவித் தலைமை ஆசிரியராக இருப்பவர் இந்திராபாய், 52, பத்தாம் வகுப்பு தமிழ் பாடத்தில், தன் மாணவர்களை, 20 ஆண்டுகளாக, 100க்கு 100 சதவீதம் பெற வைத்து, பல்வேறு தரப்பினரின் பாராட்டை பெற்றிருக்கிறார்.
தஞ்சாவூரை சொந்த ஊராக கொண்ட இந்திராபாயின் மூதாதையர்கள், சரபோஜி மன்னர் படை எடுத்து, தமிழகத்தை வென்ற போது இங்கு குடியேறினர். பின் அவருடைய ஆட்சிக் காலத்தில், மும்பையிலிருந்து வந்த பலர், தமிழகத்தில் நிரந்தரமாக தங்கினர். அவர்களில் இந்திராபாயின் குடும்பமும் அடக்கம். அப்பாவின் தமிழ் ஆர்வத்தால், பள்ளி நாட்களில் பேச்சு, கவிதை, கட்டுரை, சிறுகதை போன்ற போட்டிகளில் ஆர்வமுடன் கலந்து கொண்டு, மாவட்ட, மாநில அளவில் பரிசுகளை வென்றிருக்கிறார். பள்ளிப் படிப்பு முழுவதையும் ஆங்கில வழிக்கல்வியில் பயின்றவர், பின், எப்படியாவது தமிழ் படிக்க வேண்டும் என உறுதி எடுத்துக் கொண்டு, முதுகலை தமிழ் பாடத்தில், தங்கம் வென்றிருக்கிறார். “”எனக்கு ஆசிரியர் வேலை கிடைத்த உடன், என்னை போல் தமிழ் மொழியின் மீது ஆர்வமாக இருக்கும் மாணவர்களை ஊக்கப்படுத்தி, அவர்கள் மூலம் தமிழுக்கு சேவை செய்ய வேண்டும். அதுதான் என் முதல் கடமை என்று மனதிற்குள் சத்தியம் எடுத்துக் கொண்ட பிறகு தான், நான் வகுப்பறைக்குள்ளே சென்றேன்.
இப்போதும் தினமும் வகுப்பறைக்குள் செல்லும் போது, அந்த சத்தியத்தை மனதில் வைத்துக் கொண்டே நுழைவேன். இதில் இந்த நிமிடம் வரை நான் பின்வாங்கியதில்லை. என்னுடைய மாணவர்கள் இலக்கியம், சினிமா, அரசியல் என, பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிக் கொண்டிருக்கும் போது, நான் சிந்திய வியர்வை வீண் போகவில்லை என்ற திருப்தி கிடைக்கிறது” என்கிறார் தமிழாசிரியர் இந்திராபாய். இன்றைய காலக் கட்டத்தில் தமிழ் பாடம் எடுப்பவர்களை கண்டால் மாணவர்கள் பயந்தோடுகின்றனர். ஆனால் இந்திராபாய், இலக்கணத்தை கூட எளிய வகையில் புரியும்படி நடத்துகிறார். “”என்னுடைய தனிப்பட்ட குடும்ப வாழ்வை விட, பொதுத்தேர்வு எழுதப் போகும் மாணவர்களின் வாழ்க்கை தான் எனக்கு முக்கியம். அதனால் தான் என் கணவர் இறந்த ஒரு வாரத்தில் வகுப்புக்கு சென்றேன். எனக்குப் பின், என் பணியை, மாணவர்கள் யாரேனும் ஈடுபாட்டுடன் செய்தால் போதும். அதுவே மாணவர்களிடம் இருந்து பிரதிபலனாக எதிர்பார்க்கிறேன்” என்கிற இந்திராபாய், தன் தமிழ்ப் பணிக்காக பல்வேறு அமைப்புகளிடம் இருந்து விருது பெற்றுள்ளார்.

source:dinamalar

பின்னூட்டமொன்றை இடுக

Filed under Uncategorized

இவ்வார இணையதளம் : தினம் ஒரு சமையல்

E_1315121580.jpeg
சற்று வித்தியாசமாக, சமையல் செய்து உங்கள் குடும்பத் தினைரை அசத்த வேண்டுமா! குறிப்பாக நம் வழக்கமான உணவு முறை இல்லாமல், மற்ற மாநிலங்கள் மற்றும் நாடுகளில் உள்ள, நாம் கடந்த சில ஆண்டுகளாகச் சாப்பிட்டு வருகின்ற உணவினைத் தயாரிக்க எண்ணுகிறீர்களா! உங்களுக்கென ஓர் இணைய தளம் வடிவமைக்கப் பட்டுள்ளது. இதன் பெயர் kitchendaily. இதன் இணைய முகவரி http://www.kitchendaily.com/.
இந்த தளம் சென்றவுடன் நம் கவனத்தைக் கவர்வது, வலது பக்கம் உள்ள கட்டுரை களே. பின்னர், உணவுப் பண்டங்களை எப்படி செய்வது, அதற்கான தயாரிப்பு முறை, தேவையான சமையல் பொருட்கள் மற்றும் பல தலைப்புகளில் நாம் பெறும் தகவல்களே. இவற்றுடன் தளம் மேலாக Main, Recipes, HowTo, Features, Chefs & Experts, Dinner Tonight, Holidays & Parties, Videos, and My Tools. என்ற பிரிவுகள் கொடுக்கப்பட்டு, ஒவ்வொன்றிலும் அளப்பரிய தகவல்கள் உள்ளன. இவை எல்லாம் வழக்கமான தலைப்புகள் தானே என்று எண்ணினால் ஏமாற்றம் தான். உள்ளே ஒவ்வொரு உணவுப் பொருள் குறித்தும் தனித்தனியே தகவல்கள் உள்ளன. புரோட்டின் முதல் அனைத்து சத்தான உணவு குறித்து நாம் அறிந்து கொள்ள முடிகிறது. HowTo என்ற சமைப்பதனைச் சொல்லித் தரும் பிரிவிலும் இந்த தகவல்கள் கிடைக்கின்றன. மேல் நாடுகளில் புகழ் பெற்ற சமையல் வல்லுநர்கள் நேரடியாகத் தரும் செயல் முறைகளும் இங்கு கிடைக்கின்றன. Dinner Tonight என்ற பிரிவில் தரப்படும் உணவுப் பண்டங்கள் வாராவாரம் மாற்றப்பட்டு, அவற்றிற்கான குறிப்புகள் இடம் பெற்றிருப்பதனைக் காணலாம்.
நமக்கென்ன இருக்கப் போகிறது என்று எண்ணாமல், ஒருமுறை சென்று பார்க்கவும். பின்னர், இதனை ரசித்துப் பார்ப்பீர்கள்.

source:dinamalar

பின்னூட்டமொன்றை இடுக

Filed under Uncategorized