Daily Archives: செப்ரெம்பர் 15, 2011

விமானத்தில் உச்சா அடித்த நடிகர் பயணிகள் அதிர்ச்சி!

cinima.gif

Evening1111.jpg

விமானம் புறப்படும் போது, போதையில் இருந்த நடிகர் சிறுநீர் கழித்ததால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். விமானத்தை சுத்தப்படுத்தி மீண்டும் கிளம்ப ஒரு மணி நேரம் தாமதமானது. பிரபல பிரான்ஸ் நடிகர் ஜெராட் டிபார்டி. வயது 62. ஜீன் டி புளோரட், கிரீன் கார்ட் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு பாரிசில் இருந்து ஏர் பிரான்ஸ் விமானத்தில் பயணம் செய்தார். அப்போது நன்றாக மது குடித்து விட்டு வந்திருந்தார். விமானம் புறப்படும் போது, அவருக்கு வயிறு முட்டியது. உடனடியாக சிறுநீர் கழிக்க இருக்கையில் இருந்து எழுந்தார்.

பக்கத்தில் உட்கார்ந்திருந்த பயணி, நடிகரை ஒரு மாதிரி பார்த்தார். அதற்குள் விமான பணிப்பெண் ஓடிவந்து, விமானம் டேக் ஆப் ஆகிறது. இருக்கையில் உட்காருங்கள்� என்று கூறினார். வேறு விஷயமாக இருந்தால் பரவாயில்லை… சிறுநீர் பிரச்னையாயிற்றே. எப்படி பொறுப்பது? பணிப்பெண்ணுடன் போதையில் தகராறு செய்தார். இவர்கள் வாக்குவாதம் செய்து கொண்டிருந்த போதே, ஜெராட்டால் அடக்க முடியவில்லை. எதை பற்றியும் கவலைப்படாமல் விமான இருக்கைகளுக்கு நடுவில் உச்சா போய்விட்டு… அப்பாடா என்ற பெருமூச்சு விட்டார். அதை பார்த்த சக பயணிகள் அதிர்ச்சி அடைந்து விட்டனர்.

பணிப்பெண்ணிடம் இருந்து தகவல் பறக்க டேக் ஆப் இருந்த விமானம், மீண்டும் பார்க்கிங் ஏரியாவுக்கு கொண்டு வரப்பட்டது. பினாயில் ஊற்றி விமானம் முழுவதும் சுத்தம் செய்தனர். ஒரு மணிநேர தாமதத்துக்கு பிறகு விமானம் மீண்டும் புறப்பட்டது. விமானத்துக்குள் நடிகர் ஜெராட் போதையில் சிறுநீர் கழித்த சம்பவத்தை சக பயணி ஒருவர் அம்பலப்படுத்தி உள்ளார். இதை ஏர் பிரான்ஸ் விமான நிறுவனமும் உறுதி செய்தது. ஆனால் பிரச்னை எதுவும் இல்லை� என்று கூறியுள்ளது.

source:athirvu

பின்னூட்டமொன்றை இடுக

Filed under Uncategorized