Monthly Archives: ஓகஸ்ட் 2011

ஈழப்பெண்களின் மார்புகளை அறுத்து ராஜபக்ச ே

ஈழப்பெண்களின் மார்புகளை அறுத்து ராஜபக்சே: சீமான் ஆவேசம் !

இலங்கையில் தமிழர்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள பாலியல் வன்முறைகள் குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் அறிக்கை விடுத்துள்ளார். அவ்வறிக்கையில், ��இலங்கையின் கிழக்கு மாவட்டங்களில் சிறிலங்க இராணுவத்தினரும், காவல் துறையினரும் தமிழ்ப் பெண்களை முகாம்களுக்குக் கடத்திச் சென்று அவர்களின் மார்பகங்களை அறுத்துவிட்டு, பிறகு கொன்றுவிடுவதாக அங்குள்ள தமிழர்கள் என்னைத் தொடர்பு கொண்டு அச்சத்துடன் கூறுகின்றனர். இலங்கையின் கிழக்கு மாவட்டமான மட்டக்களப்பில் உள்ள கல்லடி, காந்திபுரம், ஊரணி உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து இப்படி பெண்கள் இராணுவத்தினரால் பிடித்துச் செல்லப்படுகின்றனர் என்றும், இரவு நேரங்களில் வீட்டிற்குள் புகுந்து இவ்வாறு பிடித்துச் செல்வது கடந்த ஒரு மாத காலமாக நடந்து வருகிறது என்றும் கூறும் தமிழர்கள், அவ்வாறு பிடித்துச் செல்லப்படும் தமிழ்ப் பெண்களின் மார்பகங்கள் அறுக்கப்பட்டுக் கொல்லப்பட்ட சில சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.

இதுவரை 20க்கும் மேற்பட்ட பெண்கள் இவ்வாறு பிடித்துச் செல்லப்பட்டுள்ளனர் என்றும், அவர்களில் ஒருவரும் வீடு திரும்பவில்லையென்றும் கூறுகின்றனர். பிடித்துச் செல்லப்படும் பெண்களின் மார்பகங்கள் அறுக்கப்பட்டு, அவைகள் ஒரு யாகசாலைக்கு அனுப்பப்பட்டு, அங்கு யாக குண்டத்தில் வீசப்படுகிறது என்றும், இந்த யாகம் இலங்கை அதிபர் ராஜபக்சே நீண்ட காலம் வாழ மேற்கொள்ளப்படுவதாகவும் தங்களுக்கு தெரியவந்துள்ளதென அம்மக்கள் தெரிவிக்கின்றனர். இது குறித்து காவல் நிலையங்களுக்குச் சென்று புகார் கூறினால் அதனை அவர்கள் ஏற்க மறுக்கிறார்கள் என்றும் கூறுகின்றனர். இலங்கையின் கிழக்கு மாவட்டங்களான திருகோணமலை, மட்டக்களப்பு ஆகியவற்றில், பல இடங்களில் கிரீஸ் தடவிய மனிதர்களை ஏவிவிட்டு பெண்களை மீது பாலியல் வன்முறை தொடுக்கப்பட்ட சம்பவங்களினால் அங்கு காவல் துறையினருக்கு எதிராக தமிழர்கள் போராடி வருகின்றனர்.

அவர்களின் போராட்டத்திறகு இதுவும் ஒரு காரணம் என்று சொல்லப்படுகிறது. கிரீஸ் மனிதன் அச்சுறுத்தலினால், இரவில் பெண்கள் எவரும் தங்கள் இல்லங்களில் தூங்காமல், ஒரு இடத்தில் எல்லோரும் கூடி ஒன்றாகவே துயில் கொண்டு வருகின்றனர். இச்செய்தியை அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரே என்னிடம் பேசி உறுதி செய்துள்ளார். தமிழர்கள் மீது நேரடியாக போர் தொடுத்து பல இலட்சக்கணக்கானவர்களை அழித்தொழித்த சிறிலங்க அரசு, இப்போது தமிழினத்தை அழிக்க இப்படிப்பட்ட பாலியல் வன்முறைகளை கட்டவிழ்த்துவிட்டுள்ளது என்று ஈழத் தமிழர்கள் கூறுகின்றனர். அவர்கள் கூறும் நிகழ்வுகளை கேட்டால் நெஞ்சம் பதறுகிறது. தமிழர்கள் பெரும்பாலும் வீட்டை விட்டு வெளியே வர அச்சப்பட்டு, வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடப்பதாக அவர்கள் கூறுகின்றனர்.

இது பாரிய மனித உரிமைப் பிரச்சனையாகும். இலங்கையில் அரச படைகளே இப்படிப்பட்ட வன்முறையின் பின்னணியில் இருந்து செயல்படுகின்றன. எவ்வித பாதுகாப்பும் இன்று தமிழர்கள் வாழ்வு ஒவ்வொரு நாளும் அச்சுறுத்தலிற்குள்ளாகியுள்ளது. �இலங்கையிலுள்ள தமிழர்கள் எங்கள் நாட்டு மக்கள், அவர்கள் பற்றி தமிழ்நாட்டின் முதல்வர் பேசத் தேவையில்லை� என்று கூறும் கோத்தபய ராஜபக்சே கும்பல் நடத்தும் ஆட்சியின் யோக்கியதைக்கு இது ஒரு அத்தாட்சியாகும். கோத்தபய ராஜபக்சதான் சிறிலங்க அரசின் பாதுகாப்புச் செயலர் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது கட்டுப்பாட்டிலுள்ள இராணுவம்தான் தமிழர்களுக்கு எதிரான இப்படிப்பட்ட மறைமுக வன்முறைகளை ஏவிவிட்டு வேடிக்கை பார்க்கிறது. ஈழத் தமிழர்கள் மீது ஈடிணையற்ற அன்பும், அக்கறையும் காட்டிவரும் மாண்புமிகு தமிழக முதல்வர் ஜெயலலிதா அம்மையார் அவர்கள், இப்பிரச்சனையிலும் கவனம் செலுத்தி, ஐ.நா.விற்கும், பன்னாட்டு மனித உரிமை அமைப்புகளும் உடனடி நடவடிக்கை எடுக்குமாறு கூறி தடுத்து நிறுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

இந்திய மத்திய அரசு, இலங்கை அரசுக்கு ஆதரவாகத்தான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. எனவே, இப்பிரச்சனையை மனித உரிமை அமைப்புக்களிடம் தமிழக முதல்வர் நேரிடையாகவே கொண்டு செல்ல வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்�� என்று தெரிவித்துள்ளார்.

source:athirvu

Advertisements

பின்னூட்டமொன்றை இடுக

Filed under Uncategorized

போலீஸ்காரர் பொண்டாட்டி நடத்திய கூத்து


போலீஸ்காரர் பொண்டாட்டி நடத்திய மினி பார்

சேலம் மாவட்டத்தில், பிராந்திக்கடைகள் இல்லாத கிராமப்புறங்களில் குடிமக்களுக்கு சரக்கு தேவைகளை பூர்த்திசெய்வதற்கு அந்த ஊரில் உள்ள யாராவது ஒருவர் சரக்கு வாங்கி வந்து விற்பனை செய்வார். இதற்கு “சந்துக்கடை” என்று பெயர்.

இந்த “சந்து” கடைகள் இல்லாவிட்டால் யாராவது கள்ளசாராயம் விற்க ஆரம்பிப்பார்கள் என்பதாலும், மாத மாதம் தங்களுக்கும் கொஞ்சம் சில்லறையும், உள்ளூரில் கள்ளச்சாராயம் விற்பவர்கள் பற்றி தகவலும் கொடுப்பார்கள் என்பதால் மதுவிலக்கு காவல்துறையும் இந்த “சந்து” கடைகளை கண்டுகொள்ள மாட்டார்கள். வீரகனூர் பக்கமுள்ள, கிழக்கு ராஜாபாளைய்த்தில் இருக்கும் சீராளன் என்பவர் தமிழ் நாடு காவல்துறையில் சென்னை மாநகர் ஆயுதப்படையில் காவலராக பணியாற்றுகிறார்.

சென்னையிலிருந்து சில மிலிட்டரி பாட்டில்களையும், பர்மா பஜாரிலிருந்து சில வெளிநாட்டு பாட்டில்களையும், போலீஸ்காரர் என்ற கோதாவில் தள்ளிக்கொண்டு வந்து வீட்டில் “சும்மா” இருக்கும் தன் மனைவி ஜெகதாம்பாள் மூலமாக, கிழக்கு ராஜாபாளையத்தில் கூடுதல் விலைக்கு விற்றுவந்தார்.

உள்ளுரில் சரக்கு யாருக்காவது ‘சரக்கு” வேண்டுமென்றால், அங்கிருந்து 14 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள வீரகனூர் சென்றுதான் வாங்கி வரவேண்டியிருந்தது.

தன் ஊரில் உள்ள சொந்தக்காரர்கள், அண்ணன் தம்பிகள் எல்லாம் தண்ணிக்கு திண்டாடுவதை பார்த்த சீராளனுக்கு அந்த மக்களுக்கு உதவவேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் தனது காவல்துறை அதிகாரத்தை பயன்படுத்தி தனது வீட்டிலேயே ஒரு மதுபானக்கடை துவக்கிவிட்டார்.

முதலில் பாட்டிலுக்கு இரண்டு ரூபாய் கூடுதலாக வைத்து விற்பனை செய்த சீராளன், பின்னர் பாட்டிலுக்கு பத்து ரூபாய் கூடுதலாகவும் சில சமையத்தில் பீர்பாட்டிலுக்கு இருபது ரூபாய் வறை கூடுதலாக வைத்து விற்றுள்ளார்.

நேற்று சரக்கு வாங்கப்போன ஒரு குடிமகன், கூடுதல் விலை கட்டுபடியாகாத காரணத்தால் கடுப்பாகிப்போனவர், சேலம் மாவட்ட எஸ்.பி மயில் வாகனத்துக்கு ஒரு போன் போட்டு, உங்கிட்ட வேலை செய்யிற ஆளுகிட்டேயே இப்படி அநியாய வெலைக்கு சரக்கு விக்கலாமா…? கொஞ்சம் விலையை குறைச்சு பாட்டில் விக்கச் சொல்லுப்பா… என்று போட்டுக்கொடுத்துவிட்டார்.

எஸ்.பி. ஆத்திரமடைந்து, ஆத்தூர் மதுவிலக்கு காவல்துறையை தொடர்பு கொண்ட எஸ்.பி இன்னும் ஒருமணி நேரத்தில் ஜெகதாம்பாள் மீது எப்.ஐ.ஆர் போட்டிருக்க வேண்டும் என்று சொல்லிவிட்டார்.

பறந்து போன ஆத்தூர் போலீசார் ஜெகதாம்பாளையும், அவறது வீட்டில் 47, பெட்டிகளில், அடுக்கி வைக்கப்பட்டிருந்த 440, பாட்டில் பீர், பிராந்தி, விஸ்க்கி என ஒரு மினி டாஸ்மாக் கடையையும் தூக்கிக்கொண்டு வந்துவிட்டனர்.

நல்ல வேலை சீராளன் போலிசாக இருந்ததால் இந்த அளவோடு போனது… கொஞ்சம் பெரிய அதிகாரியாக இருந்திருந்தால் இன்னும் என்னென்ன செய்திருப்பாரோ?

source:nakkheeran

பின்னூட்டமொன்றை இடுக

Filed under Uncategorized

பிஜே யுடன் நேரடி விவாதம்-சாக்சி

img_527_dr-zakir-naik-debate-on-crucifixion-chennai-refutation-by-bro-jerry-part-4-of-4-flv.jpg
43829537_200.jpg

கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர சகோதரிகளுக்கு ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.நீண்ட இடைவெளிக்குப் பின் மீண்டும் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.இந்த இடைபட்ட நாற்களில் நடைப்பெற்ற முக்கிய சம்பவங்களை உங்களுக்கு விவரித்துச்சொல்லுவதற்கு ஆவலாக உள்ளேன்.

முதலில் SAN பற்றி உங்களுக்கு அறிமுகப்படுத்த விரும்புகிறேன்.( http://sakshitimes.org/ )இது ஒரு அனைத்து கிறிஸ்தவர்களின் கூட்டமைப்பு.இதில் பலர் இணைந்து ஆண்டவரின் நாமத்தை உலக்குக்கு அறிவித்து வருகிறார்கள்.இதில் இஸ்லாமியர்களுடனான விவாதப் பிரிவு ஜெர்ரி தாமஸ் என்பவர் உடபட அநேகரை கொண்டு செயல்படுகிறது.இது கிறிஸ்தவ சபைகளின் கீழ்(அதாவது ஆதரவுடன்) இயங்கும் சுயாதீன அமைப்பு.

இந்த அமைப்பின் மூலம் செய்யப்பட்டது என்ன?

"டாக்டர் ஜாகிர் நாயக் /எம். எம். அக்பர் விவாதம் புரிய மறுக்கிறார்கள்:"

கேரளாவிலும் ,ஆந்திராவிலும் கிறிஸ்தவ சபைகளுக்கு சவாலாக விளங்கிய இஸ்லாமிய தாவா பிரச்சாரகர்களின் வாதஙக்ளுக்கு விளக்கம் அளித்தது(http://www.sakshitimes.org/index.php?option=com_content&task=view&id=545&Itemid=62 ) ,பல இடங்களில் விவாதக்கூட்டங்களை நடத்தி நேரடி விவாதங்களில் கலந்துக்கொள்ளுவது (http://www.sakshitimes.org/index.php?option=com_content&task=view&id=554&Itemid=62 )போன்ற செயல்பாடுகளால் அந்த மாநிலங்களில் உள்ள தாவா பிரச்சங்கிகளின்(இதர மார்க்கத்தார்களை இஸ்லாமுக்கு வரும் படி அழைக்கும் இஸ்லாமியர்கள்) கிறிஸ்தவ எதிர் தாக்குதல்களை முறியடித்தது.மேலும் பல இஸ்லாமிய நண்பர்களால் பெருமையுடன் அறிமுகப்படுத்தப்படும் டாக்டர் ஜாகிர் நாயக் அவர்களை விவாதத்துக்கு அவர்கள் அலுவலகத்துக்கே சென்று அழைப்புக்கடிதம் கொடுத்து அழைத்தார்கள்.ஆனால் செல்லாத பல காரணங்களை சொல்லி டாக்டர் ஜாகிர் நாயக் தட்டிக்கழித்துவிட்டார்.(http://www.sakshitimes.org/index.php?option=com_content&task=view&id=537&Itemid=42) இது போலவே கேரளாவின் தாவா பிரசங்கி எம் எம் அக்பர் விவாதம் செய்ய ஒப்புக்கொண்டுவிட்டு பின்பு விவாதத்திற்கு வரவில்லை(http://www.sakshitimes.org/index.php?option=com_content&task=view&id=308&Itemid=42&limit=1&limitstart=1).இதெல்லாம் பழைய கதைகள்.ஆனால் இது அறியாத பல தமிழ் இஸ்லாமிய நண்பர்கள் நேரடி விவாத்த்திற்கு கிறிஸ்தவர்கள் வரமாட்டார்கள் என்று முடிவு செய்து அதை பிரச்சாரமாக்கிவிட்டார்கள்.

உமர் அண்ணா போன்ற சில நண்பர்கள் நேரடி விவாத்த்தை தவிர்க்கிறார்கள்.இதற்கு பல காரணங்கள் இருக்கலாம்.அது அவர்களின் தனிப்பட்ட விருப்பம்.அவர்களை நிர்பந்திக்க முடியாது.ஆனால் என்னைப்பொருத்தவரை நேரடி விவாதம் சாத்தியமானதே.இதற்காக பல வருடங்கள் ஜெபித்து வருகிறேன்.

கடந்த சில நாட்கள் முன்பு சாக்சி அமைப்பின் நிர்வாகிகளிடம் சில இஸ்லாமிய நண்பர்கள் விவாத அறைகூவல் விட்டனர்.இதை சாக்சி ஏற்றுக்கொண்டவுடன் உடனடியாக TNTJ விடம் அறிமுகப்படுத்தப்பட்டனர்.முதல் அறிமுகத்துக்காக TNTJ மாநில அலுவலத்துக்கு சென்றனர் சாக்சி நிர்வாகிகள்.ஆனால் அங்கு வீடியோ சகிதம் TNTJ அமைப்பினர் சகோதரர் பி.ஜெய்னூல் ஆபிதீன் அவர்கள் தலைமையில் ஒரு விவாத ஒப்பந்த நிகழ்ச்சியாக அதை மாற்ற முடிவு செய்தனர்.இதை எதிர்பார்காத சாக்சி கொஞ்சம் சுதாரித்து பின்பு பேச ஆரம்பித்தனர்.பல நிபந்தனைகளோடு TNTJ அமைப்பினர் பேச ஆரம்பித்தனர்.ஆனால் அவைகளை ஏற்றுக்க்கொள்ளும் அதிகாரம் அந்த குழுவுக்கு முழுமையாக இல்லை.காரணம் TNTJ எதை சொல்ல வருகிறது என்பதை தெரிந்துகொள்ளவே வந்திருந்ததால் அவர்கள் விவாத ஒப்பந்த அதிகாரம் பெற்றிருக்கவில்லை.இரண்டாவது மொழிப்பிரச்சனை.சாக்சி அமைப்பில் தலைமை ஏற்று வந்திருந்த அஜய் அவர்களுக்கு தமிழ் முழுமையாக புரியாது.அவர் ஆங்கிலத்திலேயே அதிகம் பேசக்கூடியவர்.TNTJ ல் பி.ஜே அவரகள் தமிழில் பேச அதை அஜய் அவரக்ளுடன் வந்தவர்கள் மற்றும் சகோதரர் கலீல் ரசூல் அவர்கள் ஆகியோர் ஆங்கிலத்தில் சொல்லிவந்தனர்.ஆனாலும் அந்த பேச்சு முழுமை அடையவில்லை.மீண்டும் மெயில் மூலம் பேசி ஒப்பந்த தேதி அறிவிக்கலாம் என்ற நிபந்தனைகளோடு சாக்சி குழுவின் சந்திப்பு அன்று முடிவடைந்தது".

இந்த வீடியோ தொடுப்பு :

இதன் பின் சில மெயில் பரிமாற்றங்கள் நடைபெற்றன.அதில் TNTJ வின் நிபந்தனைகள் சரியானது அல்ல என்று சாக்சியால் சொல்லப்பட்டது.ஆனால் TNTJ அது தங்களின் நிலைபாடு என்றது.இதன் பின் TNTJ அனுப்பிய ஒரு மெயில் சாக்சியால் தவறவிடப்பட்டது.அதில் TNTJ குறிப்பிட்ட தேதியை அறிவித்து அந்த தேதிக்குள் சில நிபந்தனைகள் வைத்து இல்லையென்றால் சாக்சி விவாதத்தில் இருந்து ஓடிவிட்டது என்று வெளியிடுவோம் என்று அறிவித்திருந்தது.ஆனால் இணையத்தில் இந்த செய்தி வெளியானவுடன் சாக்சி தனது தரப்பு நிலையை விளக்கியது.ஓட்டம்பிடித்தார் என்று போடவேண்டிய அவசியம் என்ன?எங்களின் மற்ற உறுப்பினர்களின் மெயில் ஐடி மற்றும் போன் நம்பர் இருந்தும் இந்த விசயத்தில் இவ்வளவு அவசரம் காட்ட வேண்டியதில்லை என்ற கேள்வியுடம்(இடையில் சில வாக்குவாதங்கள் மெயிலில் நடந்தது அவைகளை உஙக்ளுக்கு தொடுப்புக்கொடுக்கிறேன்.அதில் படித்துக்கொள்ளவும். http://www.sakshitimes.org/index.php?option=com_content&task=view&id=555&Itemid=42 )ஒப்பந்த அமர்வுக்கு தேதி கேட்டு மெயில் அனுப்பியது.TNTJ தரப்பில் ஜூன் மாதம் 3 ந்தேதி அளிக்கப்பட்டது.

"TNTJ மற்றும் SAN(சாக்சி) விவாதம் ஒப்பந்தம் கையெழுத்தானது:"

இதற்கிடையில் நேரடி விவாத ஆர்வத்தில் இருந்த எனக்கு சாக்சியில் தொடர்பு கிடைத்தது.அதினால் விவாத ஒப்பந்தம் செய்ய பொறுப்பெடுத்துக்கொண்டு சகோதரர் அஜய் அவர்கள் தலைமையில் TNTJ அலுவலகத்துக்கு சென்றோம்.மாலை 3 மணிக்கு சென்ற நாஙகள் சகோதர் பி.ஜெய்னூல் ஆபிதீன் அவர்கள் தலைமையில் இருந்த TNTJ அணியினருடன் இரவு 12.30 மணிவரை விவாதத்திற்கான இறுதி ஒப்பந்த வடிவத்தை கொண்டு வந்தோம்.கடைசியில் எல்லாம் முடிந்து விட்டது என்ற நிலையில் பி.ஜே அவர்கள் எங்களிடம் விடைபெற்றார்கள்.நாங்கள் அமர்ந்து ஒப்பந்தத்தை தமிழில் டைப் செய்துவந்த TNTJ சகோதரர்களுடன் பேசிய படியே வாரகடைசி நாட்களான சனி ஞாயிறு ஆகிய கிழமைகளின் நேரத்தை குறிக்கும் பொழுது ஞாயிற்றுக்கிழமை காலையில் இருந்து எங்களால் முடியாது வேண்டுமானால் வெள்ளி,சனி கிழமை வைக்கலாம் என்று எங்கள் தரப்பில் கேட்கப்பட்டதற்கு TNTJ தரப்பு மறுத்துவிட்டது.உடனே பி.ஜே அவர்களுக்கு போன் செய்து இது தொடர்பாக பேசப்பட்ட பொழுது அவர் ஞாயிறு மதியம் 2 மணியில் இருந்து இரவு 11 மணிவரை விவாதிக்கலாம் என்ற செய்தியை சொன்னார்.ஆனாலும் நேரத்தை தவிர அனைத்து விவரங்களும் முடிவு செய்யப்பட்டுவிட்ட நிலையில் இது எங்கள் சபைத்தலைவர்களிடம் கலந்துரையாடிவிட்டு அதை உறுதி செய்கிறோம் அதற்குள் விவாத ஒப்பந்த வரைவை மெயில் செய்ய கேட்டுக்கொண்டு விடைபெற்று அங்கிருந்து கிளம்பினோம்.(இவை அனைத்தும் இரண்டு தரப்பாரும் வீடியோவில் பதிவு செய்துள்ளோம்.கர்த்தருக்கு சித்தமானால் சீக்கிரம் வெளியிடப்படும்).இது நடைபெற்றது ஜூன் 3 தேதி.

இதன் பின் பல மெயில் பரிமாற்றத்திற்கு(அவைகள் அனைத்தும் இந்த இணைப்பில் உள்ளதுhttp://www.sakshitimes.org/index.php?option=com_content&task=view&id=555&Itemid=42 ) பிறகு மீண்டும் ஜூன் 3 தேதி உறுதி செய்யப்பட்ட விவாத நிபந்தனைகளை ஒப்பந்தமாக்கி கையெழுத்து இட ஜூலை 29 தேதி TNTJநேரம் ஒதுக்கியது.அன்று மாலை 5 மணிக்கு சென்ற நாங்கள் அடுத்த நாள் அதிகாலை ஏறக்குறைய 4 மணிவரை உட்கார்ந்து விவாத ஒப்பந்தத்தை கையெழுத்திட்டோம்..(இதில் முக்கியமானவை இரண்டு தரப்பாரும் வீடியோவில் பதிவு செய்துள்ளோம்.கர்த்தருக்கு சித்தமானால் சீக்கிரம் வெளியிடப்படும்).அதை பதிவிறக்க இந்த தொடுப்பில் செல்லவும்.படிக்க மட்டும் இந்த தொடுப்பில் செல்லவும்.ஜூன் 3 தேதியில் இருந்து ஜூலை 29 வரை இந்த செய்தி TNTJ வால் தங்கள் இணைய தளத்தில் வெளியிடப்படவில்லை.அதற்கு பல வேலை பளுவால் இதை செய்ய முடியவில்லை என்ற விளக்கம் TNTJவால் தரப்பட்டது.

தொடர்ந்து நேரடி விவாதத்தில் ஆர்வமுள்ள கிறிஸ்தவர்கள் எங்களோடு இணைய உங்களை அழைக்கிறோம்.இமெயில் ஐடி:mycoimbatore எல்லோரும் விவாதம் செய்ய வேண்டும் என்பதில்லை.நாம் இணைந்து கர்த்தரின் இராஜ்ஜியத்தைக்கட்டுவோம் வாருங்கள்.ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துகிறேன்.கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பராக.தொடர்ந்து ஜெபியுங்கள்.கர்த்தருடைய விலையேறப்பெற்ற நாமம் மகிமைப்படுவதாக.ஆமேன்.

source:www.tamilchristians.com

பின்னூட்டமொன்றை இடுக

Filed under Uncategorized

சொன்னதைச் செய்தார் செல்வி ஜெயலலிதா !

ஈழத் தமிழர்களுக்கு சொன்னதைச் செய்தார் செல்வி ஜெயலலிதா !

தமிழக மக்களுக்கு வழங்கப்பட்டு வரும் நலத்திட்டங்கள் அனைத்தும் தமிழக முகாம்களில் வாழும் இலங்கை தமிழ் மக்களுக்கும் விரிவுபடுத்தப்படும் எனத் தமிழக முதல்வர் முன்னர் கூறியிருந்தார். அதன் முதல் கட்டமாக பல ஈழத் தமிழ் குடும்பங்களுக்கு பல்வேறு நலத் திட்டங்களை அவர் வழங்கியுள்ளார். ஈழத் தமிழ் குடும்பங்களை நேரில் சந்தித்து அவர் இத் திட்டங்களைக் கையளித்துள்ளார். இது குறித்து அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில்; தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா இலங்கைத் தமிழர்கள் நலனில் எப்போதும் மிகுந்த அக்கறையும், ஆதரவும் கொண்டு அவர்கள் நல்லமுறையில் வாழ தமிழக மக்களுக்குக் கிடைக்கப் பெறும் அனைத்து நலத் திட்டங்களும் அவர்களுக்கும் கிடைத்திட நடவடிக்கை எடுத்து வருகிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல்வர் ஜெயலலிதா நேற்று(16.08.2011) தலைமைச் செயலகத்தில் வைத்து திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி முகாம் வாழ் இலங்கை தமிழர்கள் லட்சுமி வேலு, வேலு, லட்சுமி துரைசாமி ஆகியோருக்கு ஆதரவற்ற முதியோர் ஓய்வூதியத் திட்டத்திற்கான ஆணையையும், புவனேஸ்வரி, நாககன்னி, சுந்தரியம்மாள் ஆகியோருக்கு ஆதரவற்ற பெண்கள் ஓய்வூதியத் திட்டத்திற்கான ஆணையையும், இன்பரதி, சிவபாக்கியம், கமலாதேவி ஆகியோருக்கு ஆதரவற்ற விதவையர் ஓய்வூதியத் திட்டத்திற்கான ஆணையையும்,

சுகநந்தினி, வத்சலா, பத்மவேணி ஆகியோருக்கு திருமண உதவி திட்டத்தின் கீழ் திருமாங்கல்யம் செய்ய தலா 4 கிராம் தங்கம் மற்றும் 25,000 ரூபாய் நிதியுதவியும், திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி முகாமில் இயங்கி வரும் அன்னை தெரசா மகளிர் சுய உதவிக் குழுவைச் சேர்ந்த அமிர்தசெல்வநாயகி, ஜூலியட் கொன்சி, தென்றல் மகளிர் சுய உதவிக் குழுவைச் சேர்ந்த நாகம்மாள், ஞானசீலி, புதிய உதயம் மகளிர் சுய உதவிக் குழுவைச் சேர்ந்த விஜயா, பத்மஜோதி ஆகிய மகளிர் சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்தவர்களுக்கு சுழல் நிதியினையும், வாசுகி, பாக்கியலட்சுமி ஆகியோருக்கு இலவச தையல் இயந்திரங்களையும் வழங்கினார் என அதிர்வு இணையம் அறிகிறது. (புகைப்படங்கள் சில இணைக்கப்பட்டுள்ளது)

source:athirvu

பின்னூட்டமொன்றை இடுக

Filed under Uncategorized

ஆபாசப்படம் எடுத்த சிப்பாய் மாட்டினார் !

தரம் 10 மாணவனை ஆபாசப்படம் எடுத்த சிப்பாய் மாட்டினார் !

பாடசாலை மாணவன் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்தமையுடன் ஆபாச வீடியோ எடுத்துக் கொண்டமைக்காக முன்னாள் இராணுவ சிப்பாய் ஒருவர் கேகாலையில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு உள்ளார். 3 பிள்ளைகளின் தந்தையான ஓய்வுபெற்ற இராணுவச் சிப்பாயான இவர் ஆட்டோ ஓட்டி பிழைத்துவருகிறார். போயா தினங்களை அனுஷ்டித்து அதனூடாகக் கிடைக்கும் தின் பண்டங்களை இவர் அம்மாணவனுக்குக் கொடுத்து நட்பை வளர்த்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது. மாணவன் அப் பிரதேசத்தில் முன்னணிப் பாடசாலை ஒன்றில் தரம் 10 இல் பயில்பவர் என்று கூறப்படுகிறது. சம்பவ தினமன்று குறித்த மாணவன் நேரத்துக்கு வீடு திரும்பாததால் பதற்றமுற்ற தாயார் அவனைத் தேடிச் சென்றுள்ளார்.

அவர்கள் வீட்டிற்கு அருகாமையில் உள்ள மறைவிடம் ஒன்றில் குறித்த சிப்பாயின் ஆட்டோ நிற்பதைப் பார்த்த தாயார் அங்கே சென்றபோது, சிப்பாய் மாணவனை வீடியோ எடுத்துக்கொண்டு இருந்ததாகவும் அவனை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகவும் தாயார் பொலிசாரிடம் முறைப்பாடு செய்துள்ளார். இதனை அடுத்து கேகாலைப் பொலிசார் குறித்த சிப்பாயைக் கைதுசெய்துள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது. மேற்படி அச்சிப்பாய் தீவிர சமய நம்பிக்கை உள்ளவர் என்றும் தெரிவிக்கப்படுகிறது. இவர் கொடுக்கும் தின்பண்டங்களில் ஏதாவது கலக்கப்பட்டிருக்கிறதா என்ற கோணத்திலும் பொலிசார் விசாரணை நடத்திவருவதாக மேலும் அறியப்படுகிறது.

source:athirvu

பின்னூட்டமொன்றை இடுக

Filed under Uncategorized

தங்கையுடன் தவறான உறவுக்கு தூண்டிய இணைய ச ாட்டிங்(வீடியோ இணைப்பு)

இணையதள அரட்டை – குறும் படம் – வீடியோ இணைப்பு

இணையத்தில் அரட்டை அடித்தல் இளையோர்களுக்கு மிகவும் பிடித்தமான விடயம். இந்த அரட்டை காரணமாக இளையோர்கள் மத்தியில் மிகவும் பிரபலம் ஆகி இருக்கின்ற மந்திர வார்த்தை asl plz என்பதாகும். இதில் a என்பது age ஐயும், s என்பது sex ஐயும், l என்பது location ஐயும் குறிக்கின்றன. இளையோர்களின் இணைய அரட்டையை மையப்படுத்தி இந்தியாவில் குறும்படம் ஒன்று எடுக்கப்பட்டு உள்ளது. இதற்கு asl plz என்றுதான் பெயர் வைத்து உள்ளனர். இணைய உலகில் இக்குறும்படம் பிரபலம் அடைந்து வருகின்றது. இளைஞன் ஒருவர் ஒன் லைனில் யுவதி ஒருவரை கண்டு பிடிக்கின்றார். பரஸ்பரம் இணையத்தில் கண்டு கொள்ளாமலேயே இருவருக்கும் ஒருவரை ஒருவர் பிடித்து விடுகின்றது.

இருவரும் இன்ரநெட் கபே ஒன்றில் சந்திக்கின்றமைக்கு தீர்மானிக்கின்றனர். மிகுந்த ஆவலுடன் கபேயில் காத்து இருக்கின்றார் யுவதி. பல எதிர்பார்ப்புகளுடன் வந்து சேர்கின்றார் இளைஞன். ஒருவரை ஒருவர் சந்திக்கின்றமைக்கு முன்பாக இருவர் மனதிலும் எத்தனையோ எண்ணங்கள் அலை மோதுகின்றன. ஒருவரை ஒருவர் கண்டு கொள்கின்றார்கள். ஆனால் இருவரது இதயமும் சுக்கு நூறாக வெடித்து விடுகின்றது. ஏன் என்று குறும்படத்தை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

பின்னூட்டமொன்றை இடுக

Filed under Uncategorized

குளிக்கும்போது படையினர் மொபைல் போனில் பட ம் எடுத்தனர்: அதிர்ச்சி சாட்சியம் !

போரின் இறுதிக்கட்டத்தின்போது தமிழ்ப் பொதுமக்கள் மற்றும் கைப்பற்றப்பட்ட பெண்போராளிகள் மீது படைகள் பாலியல் தாக்குதல்களை மேற்கொள்ளவில்லை என்று பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஸ தெரிவித்திருந்தார். அத்துடன் எந்தவொரு பாலியல் தாக்குதலும் அங்கு நடக்கவில்லை என்றும் இந்தியாவின் ஹெட்லைன்ஸ் ருடே தொலைக்காட்சிக்கு அளித்த செவ்வியில் கூறியுள்ளார். இராணுவத்தின் போர்க்குற்றங்களின் பட்டியலில் முகாம்களில் இருந்த பெண்கள் மீதான துன்புறுத்தலும் அடங்கியுள்ளது. இதனை ஹெட்லைன்ஸ் ருடே தொலைக்காட்சி பாதிக்கப்பட்டவர்களின் வாக்குமூலங்களுடன் தற்போது வெளிச்சத்துக்குக் கொண்டு வந்துள்ளது.

பாதிக்கப்பட்ட ஒருவர் தான் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டதாக தம்மிடம் தெரிவித்ததாக ஹெட்லைன்ஸ் ருடே தொலைக்காட்சி கூறியுள்ளது. முகாமில் ஒவ்வொரு முறையும் நாங்கள் காலையில் எழுகின்றபோது, நான்கு – ஐந்து பெண்கள் காணாமல் போயிருப்பர். அவர்களுக்கு என்ன நடந்தது என்று நாம் அறியவில்லை� என்று பாதிக்கப்பட்ட மற்றொருவர் ஹெட்லைன்ஸ் ருடே தொலைக்காட்சியிடம் கூறியுள்ளார். உணவுக்காகவும், (மாதவிடாய்) சுகாதாரத் துண்டுகளுக்காகவும், உடைகளுக்காகவும் தான் ஒவ்வொரு முறையும் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டதாக வேறொரு பெண்ணும் சாட்சியம் அளித்துள்ளார்.

குளிக்கும்போது ஆண் படையினர் தம்மை கையடக்கத் தொலைபேசிகளில் படம் எடுத்ததாகவும், அதற்காகவே தம்மை திறந்தவெளியில் குளிக்க நிர்ப்பந்தித்ததாகவும் ஹெட்லைன்ஸ் ருடேயிடம் மற்றொரு பெண் கூறியுள்ளார். அரசாங்கத்தினால் உலகிற்கு வெளிப்படுத்தப்பட்டாத இரகசிய முகாம் ஒன்றில் ஒரு பெண் ஒரு ஆண்டைக் கழித்துள்ளார். �அது ஒரு சித்திரவதை முகாம். அடிப்படை வசதிகள் எமக்கு கிடைக்கவில்லை. அரசசார்பற்ற நிறுவனங்களும் அனுமதிக்கப்படவில்லை.� என்கிறார் சுந்தரி என்னும் ஒரு பெண். அது ஒரு இராணுவ முகாம். என்ன பிரச்சினையென்றாலும் இராணுவத்தினரையே அணுக வேண்டும். அவர்கள் சில பெண்களிடம் தவறாக நடந்து கொண்டனர்.� என்று தெரிவித்துள்ளார் சுந்தரி.

அங்கே பாலியல் வன்புணர்வுகள் நடந்தன. இளம்பெண்கள் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டனர். ஆனால் எப்படி அதை வெளியே சொல்ல முடியும்? அவர்கள் சங்கடப்படுவார்கள், பெண்கள் ஆடைகளின்றி அறைகளில் அடைக்கப்பட்டிருந்தனர். நாங்கள் விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்ததால், அவர்கள் எம்மை துன்புறுத்தினர். எம்மைத் தடுத்து வைத்துத் துன்புறுத்தினர் என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

source:athirvu

பின்னூட்டமொன்றை இடுக

Filed under Uncategorized