போலீஸ்காரர் பொண்டாட்டி நடத்திய கூத்து



போலீஸ்காரர் பொண்டாட்டி நடத்திய மினி பார்

சேலம் மாவட்டத்தில், பிராந்திக்கடைகள் இல்லாத கிராமப்புறங்களில் குடிமக்களுக்கு சரக்கு தேவைகளை பூர்த்திசெய்வதற்கு அந்த ஊரில் உள்ள யாராவது ஒருவர் சரக்கு வாங்கி வந்து விற்பனை செய்வார். இதற்கு “சந்துக்கடை” என்று பெயர்.

இந்த “சந்து” கடைகள் இல்லாவிட்டால் யாராவது கள்ளசாராயம் விற்க ஆரம்பிப்பார்கள் என்பதாலும், மாத மாதம் தங்களுக்கும் கொஞ்சம் சில்லறையும், உள்ளூரில் கள்ளச்சாராயம் விற்பவர்கள் பற்றி தகவலும் கொடுப்பார்கள் என்பதால் மதுவிலக்கு காவல்துறையும் இந்த “சந்து” கடைகளை கண்டுகொள்ள மாட்டார்கள். வீரகனூர் பக்கமுள்ள, கிழக்கு ராஜாபாளைய்த்தில் இருக்கும் சீராளன் என்பவர் தமிழ் நாடு காவல்துறையில் சென்னை மாநகர் ஆயுதப்படையில் காவலராக பணியாற்றுகிறார்.

சென்னையிலிருந்து சில மிலிட்டரி பாட்டில்களையும், பர்மா பஜாரிலிருந்து சில வெளிநாட்டு பாட்டில்களையும், போலீஸ்காரர் என்ற கோதாவில் தள்ளிக்கொண்டு வந்து வீட்டில் “சும்மா” இருக்கும் தன் மனைவி ஜெகதாம்பாள் மூலமாக, கிழக்கு ராஜாபாளையத்தில் கூடுதல் விலைக்கு விற்றுவந்தார்.

உள்ளுரில் சரக்கு யாருக்காவது ‘சரக்கு” வேண்டுமென்றால், அங்கிருந்து 14 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள வீரகனூர் சென்றுதான் வாங்கி வரவேண்டியிருந்தது.

தன் ஊரில் உள்ள சொந்தக்காரர்கள், அண்ணன் தம்பிகள் எல்லாம் தண்ணிக்கு திண்டாடுவதை பார்த்த சீராளனுக்கு அந்த மக்களுக்கு உதவவேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் தனது காவல்துறை அதிகாரத்தை பயன்படுத்தி தனது வீட்டிலேயே ஒரு மதுபானக்கடை துவக்கிவிட்டார்.

முதலில் பாட்டிலுக்கு இரண்டு ரூபாய் கூடுதலாக வைத்து விற்பனை செய்த சீராளன், பின்னர் பாட்டிலுக்கு பத்து ரூபாய் கூடுதலாகவும் சில சமையத்தில் பீர்பாட்டிலுக்கு இருபது ரூபாய் வறை கூடுதலாக வைத்து விற்றுள்ளார்.

நேற்று சரக்கு வாங்கப்போன ஒரு குடிமகன், கூடுதல் விலை கட்டுபடியாகாத காரணத்தால் கடுப்பாகிப்போனவர், சேலம் மாவட்ட எஸ்.பி மயில் வாகனத்துக்கு ஒரு போன் போட்டு, உங்கிட்ட வேலை செய்யிற ஆளுகிட்டேயே இப்படி அநியாய வெலைக்கு சரக்கு விக்கலாமா…? கொஞ்சம் விலையை குறைச்சு பாட்டில் விக்கச் சொல்லுப்பா… என்று போட்டுக்கொடுத்துவிட்டார்.

எஸ்.பி. ஆத்திரமடைந்து, ஆத்தூர் மதுவிலக்கு காவல்துறையை தொடர்பு கொண்ட எஸ்.பி இன்னும் ஒருமணி நேரத்தில் ஜெகதாம்பாள் மீது எப்.ஐ.ஆர் போட்டிருக்க வேண்டும் என்று சொல்லிவிட்டார்.

பறந்து போன ஆத்தூர் போலீசார் ஜெகதாம்பாளையும், அவறது வீட்டில் 47, பெட்டிகளில், அடுக்கி வைக்கப்பட்டிருந்த 440, பாட்டில் பீர், பிராந்தி, விஸ்க்கி என ஒரு மினி டாஸ்மாக் கடையையும் தூக்கிக்கொண்டு வந்துவிட்டனர்.

நல்ல வேலை சீராளன் போலிசாக இருந்ததால் இந்த அளவோடு போனது… கொஞ்சம் பெரிய அதிகாரியாக இருந்திருந்தால் இன்னும் என்னென்ன செய்திருப்பாரோ?

source:nakkheeran

பின்னூட்டமொன்றை இடுக

Filed under Uncategorized

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s