Daily Archives: ஓகஸ்ட் 17, 2011

ஆபாசப்படம் எடுத்த சிப்பாய் மாட்டினார் !

தரம் 10 மாணவனை ஆபாசப்படம் எடுத்த சிப்பாய் மாட்டினார் !

பாடசாலை மாணவன் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்தமையுடன் ஆபாச வீடியோ எடுத்துக் கொண்டமைக்காக முன்னாள் இராணுவ சிப்பாய் ஒருவர் கேகாலையில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு உள்ளார். 3 பிள்ளைகளின் தந்தையான ஓய்வுபெற்ற இராணுவச் சிப்பாயான இவர் ஆட்டோ ஓட்டி பிழைத்துவருகிறார். போயா தினங்களை அனுஷ்டித்து அதனூடாகக் கிடைக்கும் தின் பண்டங்களை இவர் அம்மாணவனுக்குக் கொடுத்து நட்பை வளர்த்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது. மாணவன் அப் பிரதேசத்தில் முன்னணிப் பாடசாலை ஒன்றில் தரம் 10 இல் பயில்பவர் என்று கூறப்படுகிறது. சம்பவ தினமன்று குறித்த மாணவன் நேரத்துக்கு வீடு திரும்பாததால் பதற்றமுற்ற தாயார் அவனைத் தேடிச் சென்றுள்ளார்.

அவர்கள் வீட்டிற்கு அருகாமையில் உள்ள மறைவிடம் ஒன்றில் குறித்த சிப்பாயின் ஆட்டோ நிற்பதைப் பார்த்த தாயார் அங்கே சென்றபோது, சிப்பாய் மாணவனை வீடியோ எடுத்துக்கொண்டு இருந்ததாகவும் அவனை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகவும் தாயார் பொலிசாரிடம் முறைப்பாடு செய்துள்ளார். இதனை அடுத்து கேகாலைப் பொலிசார் குறித்த சிப்பாயைக் கைதுசெய்துள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது. மேற்படி அச்சிப்பாய் தீவிர சமய நம்பிக்கை உள்ளவர் என்றும் தெரிவிக்கப்படுகிறது. இவர் கொடுக்கும் தின்பண்டங்களில் ஏதாவது கலக்கப்பட்டிருக்கிறதா என்ற கோணத்திலும் பொலிசார் விசாரணை நடத்திவருவதாக மேலும் அறியப்படுகிறது.

source:athirvu

பின்னூட்டமொன்றை இடுக

Filed under Uncategorized