Daily Archives: ஓகஸ்ட் 9, 2011

இன்டர்நெட் மூலம் ஆண்களிடம் பழகி ரூ. 40 லட் சம் சுருட்டிய பெண்.

இன்டர்நெட் மூலம் ஆண்களிடம் பழகி ரூ. 40 லட்சம் சுருட்டிய பெண்.

இன்டர்நெட் மூலம் ஆண்களிடம் பழகி ரூ. 40 லட்சம் வரை சுருட்டிய மோசடி ராணி சென்னையில் கைது செய்யப்பட்டார். சென்னை, ஒட்டேரி ஜமாலியா பெரம்பூர் நெடுஞ்சாலையை சேர்ந்தவர் பிரியதர்ஷினி (வயது 25), பி. எஸ். சி. பட்டதாரியான இவர் மீது பல மோசடி புகார்கள் கூறப்பட்டன. தந்தையை இழந்த இவர் தாயார் மற்றும் அண்ணனோடு வசித்து வந்தார். இன்டர்நெட்டில் பல தரப்பட்ட வசதி படைத்த இளைஞர்களோடு இவர் தொடர்பு வைத்து ரூ. 40 இலட்சம் வரை சுருட்டியதாக புகார் தெரிவிக்கப்பட்டது.

இவரிடம் சென்னை கே. கே. நகரைச் சேர்ந்த மகேஷ் (வயது 28) என்ற வாலிபர் ரூ. 12 லட்சம் வரை பறிகொடுத்துள்ளார். சினிமாவில் நடிப்பதற்கு தயாராகி வரும் இருவருக்கு கோடீஸ்வரர் டாடா குடும்பத்தை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்து வைப்பதாக ஆசை வார்த்தை காட்டி உள்ளார். இதை நம்பி இவரும் பணத்தை வாரி இறைத்துள்ளார். கடைசியில் மோசம் போனது தெரிந்தவுடன் ஓட்டேரி பொலிஸில் புகார் கொடுத்தார். இதேபோல் யாசர் அராபத் என்ற வாலிபர் ரூ. 90 ஆயிரமும், சாய்நவீன் என்பவர் ரூ. 1 லட்சத்தையும், ஒரு லேப்டாப்பையும் பறிகொடுத்ததாக புகார் கொடுத்து உள்ளனர். புகார்கள் மேலும் குவித்த வண்ணம் உள்ளன.

கமிஷனர் திரிபாதி உத்தரவின் பேரில் கூடுதல் கமிஷனர் தாமரைக்கண்ணன், இணை கமிஷனர் செந்தாமரைக்கண்ணன், துணை கமிஷனர் அஸ்வின் கோட்னிஸ், உதவி கமிஷனர் லோகநாதன் ஆகியோர் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர்கள் அரிக்குமார், ரவீந்திரன், ரேவதி ஆகியோர் இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர். இன்று மாலையில் பிரியதர்ஷினி கைது செய்யப்பட்டார். அவரது வீட்டில் பொலிஸார் சோதனை போட்டார்கள். 28 சவரன் தங்க நகைகள், 1 லேப்டாப், 11 செல்போன்கள், இரண்டு ஏ.சி. மெஷின்கள், வாஷிங்மெஷின், பிரிட்ஜ், கம்யூட்டர் மற்றும் ஏராளமான பொருட்களையும், ரொக்கப் பணத்தையும் பொலிஸார் பறிமுதல் செய்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் மதிப்பு ரூ. 6 லட்சம் ஆகும். இந்த பொருட்கள் எல்லாம் மோசடி செய்த பணத்தில் வாங்கியதாக கண்டறியப்பட்டுள் ளது. அவரை நேற்று இரவு மாஜிஸ்திரேட் வீட்டில் ஆஜர்படுத்தி 15 நாட்கள் நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் ஓட்டேரி பகுதியில் நேற்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பிரியதர்ஷினி பல குரலில் பேசுவதில் வல்லமை பெற்றவர். ஆண் குரலிலும், இனிய பெண் குரலிலும், குழந்தைகள் குரலிலும் கூட இவர் பேசுவார். பல குரல்களில் பேசுவது போல, இவருக்கு சரளா, மஞ்சு, பிரியா போன்ற பல பெயர்களும் உள்ளன. தனது வலையில் விழும் ஒவ்வொரு ஆணிடமும், ஒவ்வொரு பெயரில் பேசுவார்.

இவரை �பேச்சில் மயக்கும் மோகினி� என்று இவரிடம் ஏமாந்த வாலிபர்கள் பொலிஸாரிடம் வர்ணித்துள்ளனர். சிலரிடம் காதலிப்பது போல் நடித்து பணம் கறந்துள்ளார். சில வாலிபர்களிடம் அழகான பெண்ணை திருமணம் செய்து வைப்பதாக சொல்லி தனது மாய வலையில் சிக்க வைத்து உள்ளார். மோசடி ராணி பிரியதர்ஷனியை தனியார் துப்பறியும் நிறுவனம் ஒன்றுதான் முதலில் கண்காணித்து பிடித்து உள்ளது. ஆனால் அந்த துப்பறியும் நிறுவன அதிகாரிகளை பிரியதர்ஷனி மிரட்டி விட்டார். அதன் பிறகுதான்.

பொலிஸ் உதவியை நாடி உள்ளனர். பணம் கொடுத்த வாலிபர்களை பிரியதர்ஷினியோடு பேசவைத்து கையும், களவுமாக பொலிஸார் பிடித்துள்ளனர். அதன் பிறகுதான், தனது ஏமாற்று வித்தைகளை ஒப்புக் கொண்டார். நேற்று வீட்டிற்கு கொண்டு போகும்போது பொலிஸாரையே பிரியதர்ஷினி மிரட்டினார். கைதான பிரியதர்ஷினி திருமணம் செய்து கொள்ளவில்லை. ஆனால் பல ஆண்களை திருமணம் செய்வதாக ஏமாற்றி உள்ளார். இவரது தந்தை சிவில் சப்ளை கார்ப்பரேஷனில் வேலை பார்த்துள்ளார். அவர் திடீரென்று இறந்து போகவே குடும்பம் வறுமையில் தள்ளாடியதாகவும் வசதி வாய்ப்புகளை பெருக்கி கொள்வதற்காகவே இன்டர்நெட்டில் வாலிபர்களை வளைத்து நூதனமான முறையில் மோசடி மூலம் பணம் சம்பாதித்ததாகவும் பிரியதர்ஷினி பொலிஸாரிடம் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

source:athirvu

பின்னூட்டமொன்றை இடுக

Filed under Uncategorized