Daily Archives: ஓகஸ்ட் 8, 2011

வேளாங்கன்னியில் சிங்களவர்கள் விரட்டியட ிப்பு !

தமிழ் நாட்டில் உள்ள வேளாங்கன்னி கோவிலுக்கு அருகாமையில் உள்ள லாட்ஜ் ஒன்றில் தங்கியிருந்த சிங்களவர்களை வெளியேறக்கோரி தமிழ் உணர்வாளர்கள் போராட்டம் நடித்தியுள்ளனர். பணத்தைப் பார்க்காமல் மனச்சாட்சியைப் பாருங்கள் ! இலங்கையில் கொல்லப்பட்ட தமிழர்களை ஒரு கணம் யோசியுங்கள் ! என்ற கோகஷங்களால் லாட்ஜ் உரிமையாளர்கள் மனம்மாறி சிங்களவர்களை அங்கிருந்து வெளியேறுமாறு பணித்துள்ளனர். இதனை அடுத்து பெட்டி படுக்கைகளோடு சிங்களவர்கள் வேறு லாட்ஜ் ஒன்றைத் தேடி அங்கிருந்து அகன்றனர்.

அவர்கள் எங்கு தங்கினாலும் தாம் அங்கெல்லாம் சென்று போராட்டம் நடத்துவோம் என தமிழ் உணர்வாளர்கள் கூறியுள்ளனர். இனப்படுகொலை புரிந்த சிங்களவர்களுக்கு தமிழ் நாட்டு மண்ணை மிதிக்கும் தகுதி இல்லை என உணர்வாளர்கள் அதிர்வு இணைய நிருபரிடம் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே சென்னையில் சிங்களவர்கள் தாக்கப்பட்டு அவர்கள் இலங்கை திரும்பியுள்ள நிலையில் , தமிழ் நாட்டில் தற்சமயம் தங்கியுள்ள நூற்றுக்கணக்கான சிங்களவர்கள் பெரும் அச்சத்தில் இருப்பதாகவும் அடுத்த விமானத்தைப் பிடித்து இலங்கைக்குச் செல்லவேண்டும் என்ற நிலையில் இருப்பதாகவும் அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

பின்னூட்டமொன்றை இடுக

Filed under Uncategorized

ஆ. ராசா, கனிமொழி வரிசையில் தயாநிதி மாறன்!

images?q=tbn:ANd9GcRfd5LnkecfI2SZxCq2vtm0GAl2LLE7JM0vItOa369SNC0fdza2ew

Dayanidhi_Maran-150x150.jpg

2011 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. படுதோல்வியடைந்தது. ஏற்கெனவே ஸ்பெக்ட்ரம் ஊழலில் சிக்கி ஆ. ராசாவும், கனிமொழியும் சிறை யிலுள்ளனர். சூன் மாத இறுதியில் வெளிவரவுள்ள குற்றப் பத்திரிகையைத் தொடர்ந்து மத்திய ஜவுளித்துறை அமைச்சர் தயாநிதி மாறன் அமைச்சர் பதவியை இழந்து கைதாகும் நிலை ஏற்பட்டுள்ளது. ஏன், ‘சூலை 7 இல் மாறன் கைது’ என்று பத்திரிகைகள் செய்தி வெளியிடவும் தொடங்கியுள்ளன. ‘நம் வாழ்வு’ வாசகர்களுக்கு இந்த ஊழல் தொடர் கைது பற்றிய சிறிய தெளிவை அளிப்பது நல்லது.

முரசொலி மாறனின் வாரிசாக தி.மு.க. தலைவர் மு.கருணாநிதியால் முதல் முறையாக எம்.பி.யாக்கப்பட்டு எடுத்த எடுப்பிலேயே கேபினட் அமைச்சருமாகி, தி.மு.க. விலும், காங்கிரசிலும் மிகுந்த செல்வாக்கு பெற்றார் தயாநிதி மாறன். மாறன் தன் சகோதரர் கலாநிதியுடன் இணைந்து அரசியலில் – தி.மு.க.வில் வலுவாகக்காலூன்றி ‘சன்’ குழும சாம்ராஜ்யத்தைக் கட்டியெழுப்ப பல திட்டங்களைத் தீட்டினர். இத்திட்டத்தின் முதல் செயல்பாடாக ‘தினகரன்’ நாளிதழ் வாங்கப்பட்டு ஒரு பிரதி ரூ. 1க்கு விற்று எழுத்து வழி ஊடகத்தை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர். ‘மத்தியில் சிறந்த அமைச்சர் யார்?’ என்ற சர்வே தினகரனில் வெளிவந்தது. அதன்பின் ‘கருணாநிதியின் அரசியல் வாரிசு யார்?’ என்ற சர்வேயும் வெளிவந்தது. இவைகளில் மத்தியில் சிறந்த அமைச்சர் தயாநிதி மாறன் என்றும், மு.க.ஸ்டாலினைத் தொடர்ந்து அடுத்தபடியாக தி.மு.க.வில் செல்வாக்குள்ள வாரிசாகவும் மறைமுகமாகக் காட்டப்பட்டார் தயாநிதி. இப்படி மு.க.ஸ்டாலினை முன்னிறுத்தி கலைஞருக்குப் பின் அழகிரியையும், கனிமொழியையும் அப்புறப்படுத்த மாறன் சகோதரர்கள் முயன்ற கதை நாம் அறிந்ததே.

தயாநிதி மாறன் தன் தந்தையின் மறைவுக்குப் பின் 2006 இல் அரசியலுக்குள் நுழைந்த காலத்திலிருந்தே தன்னையும், தன் சகோதரரின் வர்த்தக நலன்களையும் வளர்த்தெடுக்கவே முயற்சித்து வந்துள்ளார் என்று அவரது கட்சியினரே பேசுவதாக ‘இந்தியா டுடே’யில் செய்தி வெளியானது.

முன்னாள் தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் தயாநிதி மாறனின் ஊழல் கைவரிசை பற்றிய செய்திகள் வெளிவராத நாளும் இல்லை, வெளியிடா பத்திரிகையும் இல்லை. ஏர்செல்லின் உரிமையாளர் (முன்னாள்) சிவ சங்கரன், நீதிபதி சிவராஜ் பாட்டீல் ஒரு நபர் கமிட்டியின் முன்பு தயாநிதிக்கெதிரான வாக்குமூலம் அளித்துள்ளார்.

அவ்வாக்குமூலத்தின்படி 2005 இல் ஏர்செல் டிஷ்நெட் நிறுவனத்துக்கு உரிமம் வழங்குவதில் தொலைத் தொடர்புத் துறை தேவையில்லாக் காலதாமதம் செய்ததால் ஏர்செல் கம்பெனிக்கு ஸ்பெக்ட்ரம் வீணாகி யது. இதனால் சிவசங்கரன் ஏர்செல் பங்குகளை மாக் ஸிஸீக்கு விற்றார். இந்தச் சூழ்நிலையில் மாக்ஸிஸ் வச மிருந்த ஏர்செல்லுக்கு 2001 ஆம் ஆண்டின் விலைப்படி மாறன் உரிமத்தை விற்றார். இதனால் அரசுக்குப் பெருத்த இழப்பு ஏற்பட்டது. அதாவது ‘முதலில் வருபவருக்கு முன்னுரிமை’ என்ற விதியை மீறி கொல்கொத்தாவில் ஏர்செல்லுக்கு 4.4. மெ.ஹெர்ட்ஸ் + 4.4. மெ.ஹெர்ட்ஸ் தொடக்க நிலை அலைவரிசை ஒதுக்கப்பட்டது. தயாநிதி மாறனின் தலையீடு இன்றி இம்முறைகேடு நடந்திருக்க வாய்ப்பில்லை என்கிறது அறிக்கை.
இவ்வாறு முறைகேடாக உரிமங்களையும், அலைவரிசையையும் பெற்றதற்கு நன்றிக்கடனாக மாறன் குடும்பத்தவரின் ‘சன்’ டைரக்ட் பிரைவேட் லிமிடெட்டில் மாக்ஸீஸ் குழுமம் ரூ. 625 கோடி முதலீடு செய்தது. மேலும் மாறன் குடும்பத்துக்குச் சொந்தமான சவுத் ஏஷியா எஃப்.எம். லிமிடெட் நிறுவனத்திலும் மாக்ஸிஸ் ரூ. 100 கோடி முதலீடு செய்தார்.

ஐ.மு.கூ. அரசின் ‘முதலில் வருவோருக்கு முன்னுரிமை’ என்ற கொள்கையை மாறன் மீறியுள்ளது வெளிப் படையான உண்மை. காரணம், 2004 டிசம்பர் 14 இல் ஆறு சர்க்கிள்களுக்கு உரிமம் கோரி வோடஃபோன் விண்ணப்பித்தது. அதற்கு மாறாக 2006 ஜனவரியில் நான்கு சர்க்கிள்களுக்கும், மார்ச் 3 இல் மூன்று சர்க்கிள்களுக்கும் மாக்ஸீஸ் விண்ணப்பித்து, அதே ஆண்டு டிசம்பர் 5 இல் உரிமத்தையும் பெற்றது. வோடஃபோன் மூன்று ஆண்டுகள் காத்திருக்க, ஏர்செல் மாக்ஸிஸ் உடனே பெற்றது எப்படி? ஏர்செல் என்பது ஓர் உண்மை நிறுவனமா இல்லை முகமூடி (சன் குழுமம்) நிறுவனமா என்று சி.பி.ஐ. விசாரித்து வருகிறது. சிவசங்கரனின் வாக்கு மூலம் ‘சூரியக் குடும்பத்தின்’ அசூர வளர்ச்சியைத் தடுத்து அவர்களை தகிப்பிற்குள்ளாக்கியுள்ளது. மாறன் – மாக்ஸிஸ் – ஏர்செல் கூட்டணி குறித்த புலனாய்வு மேற்கொள்ளும் துழாய்வில் ராசா, கனிமொழி வரிசையில் தயாநிதி என்பது ஏறக்குறைய உறுதியாகியுள்ளது.

மற்றொரு ஊழல், 323 பி.எஸ்.என்.எல். தொலைபேசி இணைப்புகளை தன் மூலமாக சன் டிவி இலவசமாகப் பயன்படுத்திக் கொள்ள செய்து அரசுக்கு ரூ. 440 கோடி இழப்பு ஏற்படச் செய்தார் மாறன் என்று சி.பி.ஐ அறிக்கை கூறுகிறது. இந்த 323 தொலைபேசி இணைப்புகளும் பி.எஸ்.என்.எல். போட்கிளப் பகுதியிலுள்ள தயாநிதி மாறனின் இல்லத்தில் நிறுவப்பட்டு திருட்டுத்தனமாக 3.4 கி.மீ. தொலைவுக்கு தரையடி வழியாக சன் டிவி அலுவலகம் அமைந்துள்ள அண்ணா அறிவாலயத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. இவ்விணைப்புகளில் பெரும்பாலானவை சென்னை பி.எஸ்.என்.எல்.லின் தலைமை பொது மேலாளரின் பெயரில் பதிவாகியுள்ளது. இவ்விணைப்புகள் அனைத்தும் அதிவேக தகவல்கள் பரிமாற்ற வசதியுள்ள ஐ.எஸ்.டி. என் தொழில்நுட்பத் தன்மையுடையவை. பி.ஆர்.ஏ. வசதி கொண்ட (குரல் தரவுகளை தடையின்றி எடுத்துச் செல்லக்கூடிய தொழில் நுட்பம்) வீடியோ கான்ஃபரன்சிங் போன்றவற்றிற்கு பயன்படக்கூடிய இணைப்புகள். மார்ச் 2007 ஒரு மாதத்தில் மட்டும் 24371515 என்ற ஒரு தொலைபேசி இணைப்பிலிருந்து மட்டுமே 48,72,027 அழைப்பு அலகுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

இப்படி ஸ்பெக்ட்ரம் ஊழல், மாறன் – மாக்ஸிஸ் – ஏர்செல் கூட்டணி ஊழல், பி.எஸ்.என்.எல். ஊழல் என்று பல ஊழல்களில் சிக்கித் தவிக்கும் மாறன் சகோதரர்கள் தி.மு.க.வாலும், காங்கிரசாலும் கைவிடப்பட்ட நிலையில் நீதி தேவதையின் நியாயத் தீர்ப்பை பெறுவார்கள் என்று நம்புவோம். ஊழல் இல்லா இந்தியா உருவாக இது ஓர் உருப்படியான முன்னுதாரணமாகட்டும்.

source:namvalvu

பின்னூட்டமொன்றை இடுக

Filed under Uncategorized

கழுத்தை நெரித்து கொன்ற பின் செக்ஸ்

கபட நாடகமாடிய காதலன் கழுத்தை நெரித்து கொன்ற பின் உறவு !

கடந்த வருடம் டிசம்பர் மாதத்தில் பிரித்தானியா லங்கஷியர் பகுதியில், ஒரு வீட்டின் கதவை தீயணைக்கும் படையினர் அவசரமாக உடைக்கின்றனர். அங்கே என்ன நடக்கிறது என்று தெரியாத நிலையில் அக்கம் பக்கத்தினர் திகைத்தனர் ! அவசரமாக பராமெடிக்ஸ் என்னும் அதி தீவிர சிக்கிசைப் பிரிவினர் உடைக்கப்பட்ட கதவுகள் ஊடாக உள்ளே சென்று அனா என்னும் 23 வதுப் பெண்ணைக் காப்பாற்ற முயல்கின்றனர். இருப்பினும் அவர் பரிதாபமாக இறந்துபோனார். அவரைக் கொண்றதாக அவரின் காதலன் டானியல் கைதுசெய்யப்படுகிறார். ஆனால் எல்லொரும் கூறுவது போல அவர் தான் கொலைசெய்யவில்லை என்று கூறவில்லை. மாறாக புதிதாக ஒரு கதையைக் கூறி பிரித்தானிய பொலிசாரையும், நீதிபதிகளையும் குழப்பிவிடார். அவர் கூறுவதில் ஞாயம் இருக்கிறதா இல்லையா என்று எல்லோரும் வாதிட்டனர். பிரித்தானிய பத்திரிகைகளில் முதல் இடம் பிடித்த இக் கொலை வழக்கு பலரால் விவாதிக்கப்பட்டது. அது என்ன தெரியுமா ? மாட்டருக்கு வருவோம் !

தானும் தனது காதலியும் செக்ஸ்சில் ஈடுபடும்போது அதீத செக்ஸ் காரணமாக அவர் இறந்தார் என்கிறார் காதலர் டானியல். அப்படியானால் செக்ஸ் செய்யும்போது அவர் இறந்தாரா இல்லை இறந்த பின் இந் நபர் செக்ஸ் செய்தாரா என்று எல்லாம் பல கேள்விகள் எழுந்தது. குறிப்பாக டானியல் என்னும் இச் சந்தேக நபர், தான் பெண்களோடு செக்ஸ் செய்யும்போது அவர்களின் கழுத்தைப் பிடிப்பது வழக்கம், அதுபோலத் தான் இவர் கழுத்தையும் பிடித்தேன் என்கிறார். என்ன கொஞ்சம் இறுக்கிப் பிடித்துவிட்டேன் அதனால் அவர் மூச்சுத் திணறி இறந்துவிட்டார் எனக் கூறி "விதி" என்னும் படத்தில் வரும் கதைபோல நீதிமன்றில் சொல்லியுள்ளார். இதனால் நீதிபதிகள் தடுமாறிப்போய் உள்ளனர். கடந்த 1 வருடமாக இந்த வழக்கு தேங்கிக் கிடந்தது. சந்தேக நபரின் வக்கீலும் லேசுப்பட்ட ஆள் இல்லை. இது கொலை அல்ல விபத்து என வாதிட்டார். சந்தேக நபரான டானியல் விடுதலையாவார் என்று பொலிசார் அஞ்சினர். ஆனால் நீதி தோற்றுப்போகுமா ?

மாரித் தவக்கை தன்வாயால் கெடும் என்பதுபோல, இவரது வழக்கில் தற்போது புதுத்திருப்பம் ஏற்பட்டுள்ளது. சிறையில் இருக்கும் டானியல் தனது நெருங்கிய நண்பர் ஒருவரிடம் தான் தனது காதலியை வேண்டும் என்றே கழுத்தை நெரித்துக் கொண்றதாகத் தெரிவித்துள்ளார். தனது காதலி தன்னுடன் இருக்கும்போது, வேறு ஒரு ஆணுடன் பழகி வந்ததாகவும் அதனைத் தான் அறிந்து கோபம் கொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். டானியலின் உற்ற நண்பர் உடனே இதைப் பொலிசாருக்கு போட்டுக்கொடுத்துவிட்டார். அதனை இரகசியமாக பதிவுசெய்த பொலிசார் மேற்படி டானியலை அழைத்து விசாரனை நடத்தியுள்ளனர். அவ்விசாரணையில் டானியல் தான் வேண்டுமென்றே தன் காதலியைக் கொலைசெய்ததாக தற்போது ஒப்புகொண்டுள்ளார். இதனை அடுத்து இந்த வழக்கு வெகுவிரைவில் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்வழக்கு இம் மாதம் கோட்டில் எடுக்கப்பட்டு, குற்றவாளிக்கு தண்டனை வழங்கப்படலாம் என லங்கஷியர் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

source:athirvu

1 பின்னூட்டம்

Filed under Uncategorized