கூகுள் அதிரடியால் சரியும் பயர்பாக்ஸ்


E_1312109588.jpeg
பயர்பாக்ஸ் பிரவுசரில் இதுவரை இயங்கி வந்த கூகுள் டூல்பார், தற்போது புழக்கத்தில் இருக்கும் பயர்பாக்ஸ் பதிப்பு 5 தொடங்கி, இனி வர இருக்கும் பிரவுசர்களில் கிடைக்காது என கூகுள் அதிரடியாக அறிவித்துள்ளது. இந்த டூல்பார் மூலம் தான், தானியங்கி மொழி பெயர்ப்பு, கிளவ்ட் புக்மார்க், ஹிஸ்டரி சேவ் செய்தல், தேடல் வசதி போன்றவை பயர்பாக்ஸ் பிரவுசரில் கிடைத்து வந்தன. இனி இவை பயர்பாக்ஸ் பிரவுசரில் கிடைக்காது. இதற்குக் காரணம் குரோம் பிரவுசரை, கூகுள் முன்னுக்குக் கொண்டு வர ஆசைப்படுவதே ஆகும்.
தொழில் நுட்ப ரீதியாக எப்படி வெற்றி பெறுவது என்பதனை கூகுள் நிறுவனத் தினைப் பார்த்துத்தான் கற்றுக் கொள்ள வேண்டும். இதற்கு அந்நிறுவனம் வழங்கும் குரோம் பிரவுசரே சாட்சி. இதன் பயன்பாடு தொடர்ந்து அதிக வாடிக்கை யாளர்களைக் கவர்ந்து வருகிறது. அறிமுகப்படுத்தப் பட்டு மூன்று ஆண்டுகளுக்கும் குறைவான காலத்தில், இதன் பயன்பாடு வேகமாக உயர்ந்து உள்ளது. பிரவுசர் பயன்பாடு குறித்து ஆய்வு செய்து முடிவுகளை வெளியிடும் இணையதளமான நெட்மார்க்கட் ஷேர் (http://www.netmarketshare.com/ ?source=NASite) அண்மையில் வெளியிட்ட தகவல்கள் குரோம் வளர்ந்து வருவதனை உறுதி செய்துள்ளன.
கடந்த ஓராண்டில், குரோம் பிரவுசர் பயன்பாடு 7.24%லிருந்து 13.11% ஆக உயர்ந்துள்ளது. சில குறிப்பிட்ட தகவல் தொழில் நுட்ப தளங்களில், இதன் பயன்பாடு இன்னும் கூடுதலாக 15% லிருந்து 24.4% ஆக உள்ளது.
மற்ற பிரவுசர்களில் சபாரி பிரவுசர் நல்ல வளர்ச்சியைக் கொண்டுள்ளது. 2.6% கூடுதலாக இதற்கு வாடிக்கையாளர்கள் மாறி உள்ளனர். தொழில் நுட்ப தளங்களில் சபாரி பிரவுசரின் பயன்பாடு 10.5% ஆக உள்ளது.
குரோம் வளர்ச்சியில் அதிகம் பாதிக்கப்பட்டவை பயர்பாக்ஸ் மற்றும் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசர் களாகும். மொஸில்லா பயர்பாக்ஸ் பயன்பாடு 23.8% லிருந்து 21.7% ஆகக் குறைந்தது. தொழில் நுட்ப தளங்களில் இதன் பயன்பாடு 34.4% லிருந்து 30.9% ஆகக் குறைந்திருந்தது. கடந்த மூன்று ஆண்டுகளில் 10% அளவிற்குக் குறைந்தது இந்த ஆண்டில் தான். அதிகம் பாதிக்கப்பட்ட இன்டர்நெட் எக்ஸ் புளோரர் பிரவுசர், தானாகவே இந்த வீழ்ச்சியைத் தேடிக் கொண்டது எனக் கூறலாம். இதன் பயன்பாடு 60.3%லிருந்து 53.7% க்குச் சென்றுள்ளது. தொழில் நுட்ப தளங்களில் இதன் பயன்பாடு, 37.9% லிருந்து 31.1% ஆகக் குறைந்துள்ளது. மொத்தத்தில் இதன் பயன்பாடு விரைவில் 50% க்கும் கீழாகச் செல்லலாம். இதற்குக் காரணம், மைக்ரோசாப்ட் தன்னுடைய இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 9னை, விண்டோஸ் எக்ஸ்பி சிஸ்டத்தில் இயக்க முடியாத நிலையில் வடிவமைத்ததுதான்.
அடுத்தபடியாக பாதிப்பு பயர்பாக்ஸ் பிரவுசருக்குத்தான். கடந்த ஆண்டுகளில், இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசருடன் ஒப்பிடுகையில், பயர்பாக்ஸ் பிரவுசர் தான் மிகவும் பாதுகாப்பான, நிலையாக இயங்கும் பிரவுசராக மதிக்கப்பட்டுப் பயன்படுத்தப்பட்டது. ஆனால் இந்த சிறப்பு அம்சங்களை குரோம் எடுத்துக் கொண்டுள்ளது.
மேலும் கூகுள் திட்டமிட்டே பயர்பாக்ஸ் பிரவுசருக்கான ஆதரவை விலக்கி வருகிறது. அண்மையில் வெளியிட்ட அறிக்கையில் (http://www.google.com/support/toolbar/bin/answer.py?answer= 1342452&topic=15356%29), பயர்பாக்ஸ் பிரவுசருக்கான கூகுள் டூல்பார், பயர்பாக்ஸ் பிரவுசர் 5 மற்றும் இனி வெளியிடப்பட இருக்கும் அடுத்த பதிப்பு களில் இயங்காது என அறிவித் துள்ளது. பதிப்பு 4 வரை மட்டுமே கூகுள் டூல் பார் இயங்கும். தற்போது பயர்பாக்ஸ் 5 பரவலாகப் பயன்படுத்தப் படுகிறது. பயர்பாக்ஸ் 6, ஆகஸ்ட் மத்தியிலும், அதன் பின் 6 வாரங்கள் சென்ற பின்னர், பயர்பாக்ஸ் 7 பதிப்பும் வெளியிடப்பட இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
பயர்பாக்ஸ் பதிப்பு 5 கூகுள் டூல்பார் இல்லாமல் இருப்பதனாலேயே, பயர்பாக்ஸ் பயன்படுத்துபவர்களில் பலர், புதிய பதிப்பு 5க்கு மாறாமால் உள்ளனர். இவர்கள் புதிய கூகுள் டூல்பாரினை எதிர்பார்க்கின்றனர் என்று மொஸில்லா நிறுவன வல்லுநர் ஒருவர் கூறியுள்ளார்.
பயர்பாக்ஸ் பிரவுசரில் பல விஷயங்கள் கூகுள் டூல் பார் மூலமே இயக்க முடிந்தது. எடுத்துக் காட்டாக, பலர் கூகுள் டூல் பார் மூலம் தான் புக்மார்க்ஸ் சேவ் செய்தனர். இப்போது அந்த டூல் பார் இயங்கவில்லை என்றால், புக்மார்க்ஸை இழக்க வேண்டியதுதான் என எண்ணுகின்றனர். ஆனால், அவை www.google.com/bookmarks என்ற முகவரியில் உள்ள தளத்தில் கிடைக்கும் என்பது பலருக்குத் தெரியவில்லை.
மொஸில்லா நிறுவனம் தன் பயர்பாக்ஸ் பிரவுசர் மூலம், பிரவுசர் பயன்பாடு மற்றும் தேடுதல் குறித்த வாடிக்கையாளர்களின் அனுபவங்களை, கூகுள் நிறுவனத்தின் ஆய்வுக்குத் தொடர்ந்து தந்து வந்தது. இதற்கான ஒப்பந்தம் 2004ல் மேற்கொள்ளப்பட்டு, மூன்று முறை புதுப்பிக்கப்பட்டு, தற்போது முடிவிற்கு வந்துள்ளது. இதற்கு முன்னர், மொஸில்லா தன் பயர்பாக்ஸ் பிரவுசரை, கூகுள் டூல்பாருடன் சேர்த்தே வழங்கி வந்தது. இதற்கு கூகுள் நிறுவனம் கணிசமான பணத்தை மொஸில்லாவிற்கு வழங்கி வந்தது. இப்போது அனைத்தும் முடிவிற்கு வந்துள்ளது.

ஆனால், மொஸில்லா இதனால் கலவரம் அடையவில்லை. மீண்டும் தன்னுடைய மொஸில்லா பயனாளர் களின் தொழில் நுட்ப குழுவினை உயிர்ப்பித்துள்ளது. இதன் மூலம், தகவல் தொழில் நுட்ப வல்லுநர்கள் பல தகவல்களை விவாதித்து தங்கள் படைப்புகளில் பயன்படுத்த முடியும். இவை பயர்பாக்ஸ் பிரவுசர் கட்டமைப் பில் மாற்றங்களை ஏற்படுத்த பயன்படும். உடனடியாகச் செயல்பட்டு மொஸில்லா நிறுவனம் தன் பயர்பாக்ஸ் வாடிக்கையாளர்களைத் தக்க வைக்க வேண்டியுள்ளது. உடனே அவர்களின் பயத்தைப் போக்க, சில மாற்றங் களையும் வசதிகளையும் பயர்பாக்ஸ் தராவிட்டால், அது பிரவுசர் சந்தையில் தன் பங்கினை இழக்கும் என்பது உறுதி

source:dinamalar

பின்னூட்டமொன்றை இடுக

Filed under Uncategorized

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s