Monthly Archives: ஜூலை 2011

டைட் ஜீன்ஸ், ஷாட் பனியன் – தொப்புள் தெரியு ம்படி வெளிக்காட்டும் உடை

E_1308903448.jpeg

பட்டாம்பூச்சிகளின் கதை! (4)

"ஹாய்… ஹாய்… ஹாய்!’ என்ன… சினிமாக்காரங்க ஸ்டைலில் சொல்றேன்னு பார்க்கறீங்களா… "அக்கா… உங்க அட்வைஸ் எல்லாம் ரொம்ப நல்லா இருக்கு… இப்படியெல்லாம் கூட பெண்களுக்கு கஷ்டம் உண்டா?’ என, நிறைய கல்யாணமாகாத வாசகியர் எழுதியிருக்கிறீர்கள். அதில் சில வாசகர்கள், "எங்களது கஷ்டத்தை மட்டும் எழுத மாட்டீர்களா… பெண்கள் கஷ்டம் மட்டும்தான் உங்களுக்கு பெருசா தெரியுதா?’ என, தொலைபேசியிலும், கடிதங்கள் மூலமும் நம், "தினமலர்’ இ-மெயிலிலும் பொருமி இருந்தீர்கள்.
சகோதரர்களே… பெண்ணே பெண்ணுக்கு எதிரியா இருந்து, தங்கள் வாழ்க்கையை அழித்துக் கொள்வதை சுட்டிக்காட்டி, அவர்களுக்கும், பெற்றோருக்கும் விழிப்புணர்ச்சி கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான் எழுதுகிறேன். நேரம் வரும் போது, உங்களது சோகங்களையும் எழுதுவேன்; சரியா?
இந்த வாரக் கதாநாயகியின் பெயர் ஷாந்தினி.
அழகான, துறு, துறு கண்கள், சிவந்த நிறம், வழ வழ தலைமுடி என, கொள்ளை அழகுடன் காணப்பட்ட தங்கள் பெண்ணை, விதவிதமான ஆடைகளை உடுத்தி வளர்த்தனர் பெற்றோர்.
ஷாந்தினியின் காது படவே, "என்ன அழகு… கொள்ளை அழகு’ என, நடுத்தர வர்க்க பெற்றோர், செல்லம் கொடுத்து வளர்த்தனர்.
சென்னையின் புகழ் பெற்ற கல்லூரியில் அடியெடுத்து வைத்தாள் ஷாந்தினி. அங்கே, "டிவி’ தொகுப்பாளினிகள், விளம்பரங்களில் வரும் பெண்கள், பணக்கார வெள்ளைத்தோல் அழகிகள் அனைவரையும் பார்த்து பிரமித்தாள். தானும், டைட் ஜீன்ஸ், ஷாட் பனியன் – தொப்புள் தெரியும்படி, தன் மார்பின் அளவுகள் வெளிக்காட்டும் உடையணிந்து, நண்பிகளுடன் திரிந்தாள்.
படிப்பிலும் அவள் கில்லாடி.
அவளது உடையலங்காரம் கண்களை கூச வைக்கும். கண்டிக்க வேண்டிய பெற்றோர், "பெண் மாடர்னா இருக்கா… இதில் என்ன தப்பு?’ என்று பெருமைப்பட்டனர்.
கேட்க வேண்டுமா?
இளைஞர் பட்டாளம் போட்டி போட்டு, ஷாந்தினியை சுற்ற ஆரம்பித்தது. இதில், பணக்கார ஷிவா – பெயர் மாற்றியுள்ளேன்; அள்ளிக் கொண்டான். "டேய்… நீ முடிச்சிட்டு எங்களுக்கு கொடுடா… இப்படி உடம்பை காட்டி உசுப்பேத்திட்டு திரியிறவ எல்லாம் பத்தினியா என்ன… நில்லுன்னா, படுப்பாளுக!’ என்று கும்மாளமிட்டனர்.
அவளை அனுபவிக்கத் தான் ஷிவாவும் துடித்தானே தவிர, திருமணம் செய்துக் கொள்ள விரும்பவில்லை. "பொண்டாட்டி ஆக்கிக் கொள்வதற்கு, பெற்றோர் பார்க்கும் அப்பாவி பெண் தான் வேண்டும்; இவளை மாதிரி உடம்பை காட்டும் ரகம் வேணாம்…’ என்பது, ஆண்களின் பொதுவான கருத்து.
செமஸ்டர் முடிந்து, லீவு வந்தது.
ஷாந்தினியின் பணக்கார நண்பிகள் எல்லாம், தங்கள், "பாய் பிரண்ட்ஸ்’சுடன் ஊட்டி, கொடைக்கானல் என, "ஹனி மூன் டிரிப்’ போவது தெரிய வந்தது ஷாந்தினிக்கு.
எப்படி இருக்கு பாருங்க…
தற்போது, சென்னையிலுள்ள புகழ்பெற்ற கல்லூரிகளில் நடக்கும் கூத்து இது.
தொடர்ந்து மூன்று நாட்கள் லீவு கிடைத்தாலே, ஆண் நண்பர்களுடன், "ஹனி-மூன்’ என்று சொல்லி, ஊட்டி, கொடைக்கானல் செல்கின்றனர். இந்தச் செய்தியை, அந்த கல்லூரி மாணவி வாயிலாகவே கேட்டு, நான் அதிர்ச்சி அடைந்தேன்.
இது என்ன அக்கிரமம் என்று நினைத்து, என் மனம் ஆறவே இல்லை. அப்படியானால், திருமணம் ஆன பிறகு, ஒரிஜினல் புருஷனுடன் செல்வது என்ன, "மூனாம்?’ அவர்களைத் தான் கேட்கணும்… சரி விஷயத்துக்கு வருகிறேன்…
"ஹேய்… ஷாந்த் டார்லிங்… நீ இன்னும் பழைய பஞ்சாங்கமாகவே இருக்கீயே… வீட்ல, "புராஜெக்ட் டூர்’ன்னு சொல்லிவிட்டு வா… ஜாலியா இருப்போம்!’ என, மனதை கரைத்தான் ஷிவா. சபலப்பட்ட ஷாந்தினியும், பணக்கார காதலன் கூட்டிச் செல்லும் ஸ்டார் ஓட்டல், ட்ரைவ் – இன், "காபி டே’க்கள் எல்லாம், அவள் இதுவரை அனுபவித்திராத சுகங்கள் என்பதால், மனம் அலை பாய்ந்தது; சபலம் ஜெயித்தது.
"சரி டா… வர்றேன்!’ என்றாள். இவளது நடுத்தர வர்க்கத் தோழியோ, "வேண்டாம் டீ… இந்த விபரீதம்!’ என்று தடுத்தாள்.
"ஏய்… உனக்கு இப்படி ஒரு லவ்வர் கிடைச்சா நீயும் தான் போவ… நான் போகலைன்னா, ஷிவா என் கூட பேசவே மாட்டான்; வேற எவளையாவது பிடிச்சிக்குவான் டீ!’ என்றாள்.
நன்கு படிக்கும் செல்ல மகள், என்ன மாதிரி ஆராய்ச்சி செய்யத் துடிக்கிறாள் என்பதை அறியாத பெற்றோர், உடனே மகளுக்கு அனுமதி கொடுத்தனர்; ஜோடிகள் பறந்தன.
ஊட்டி மலைத் தொடர்களில் பாடித் திரிந்து, நட்சத்திர ஓட்டல்களில் உல்லாசம் அனுபவித்தாள் ஷாந்தினி. "ஆஹா… இதுதாண்டா வாழ்க்கை!’ என நினைத்து, மிதந்தாள் ஷாந்தினி.
சென்னை வந்து சேர்ந்தனர்.
அதன் பிறகு தான் விபரீதமே ஆரம்பித்தது.
ஷாந்தினியுடன் இருந்ததை, மொபைல் போனில் சில விபரீத போஸ்களை எடுத்து வந்துவிட்டான் ஷிவா. அதை வைத்து, தன் நண்பர்களுடன் இன்பமாக இருக்கச் சொல்லி, ஷிவா மிரட்டவும், அதிர்ந்தாள் ஷாந்தினி.
"அடப்பாவி… உன்னோட சுயரூபம் இப்பதாண்டா தெரிந்தது. நீ உருப்படுவியா…’ எனக் கதறினாள் ஷாந்தினி.
"படிக்கும் போதே இப்படி எல்லாத்துக்கும் சம்மதிக்கிற நீ மட்டும் என்ன பத்தினியா… வாடி… இல்லன்னா, எல்லாருக்கும் இந்த காட்சியை, "பார்வேட்’ பண்ணிடுவேன்!’ என்று மிரட்டினான் ஷிவா.
ஒரு முறை, இரு முறை, "அட்ஜஸ்ட்’ செய்து பார்த்தாள் ஷாந்தினி; முடியவில்லை. இந்த நரகத்தில் இருந்து விடுபட வழி தெரியாமல், தற்கொலை செய்து கொண்டாள்.
துடித்துப் போயினர் பெற்றோர். மகளின் திடீர் மரணம், அவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
யாரையோ, "லவ்’ பண்ணி தோல்வியுற்றதால், தற்கொலை செய்து கொண்டதாக பெற்றோர் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால், என்னுடைய சகோதரியும், ஷாந்தினியும் ஒரே கல்லூரி மாணவிகள் என்பதால், எனக்கு உண்மை தெரிந்து மிகவும் அதிர்ந்து போனேன்.
பெற்றோரே… "பேஷன்’ என்ற பெயரில், உங்கள் பெண்களின் வாழ்க்கையை அழிக்கிறீர்கள். உங்கள் பிள்ளைகளை, குழந்தைகள் என்றே எப்போதும் நினைக்காதீர்கள். அவர்கள், டீன்-ஏஜ் பருவம் வந்ததும், அவர்களது மொபைல் போன், ரூம், கைப்பை என, எல்லாவற்றையும் அவர்களுக்குத் தெரியாமல் கவனியுங்கள்.
"நாங்கள் ரொம்ப, "டீசன்ட்’ ஆனவர்கள்; இப்படிச் செய்வது, "இன்டீசன்ட்’ அல்லவா’ என நினைக்காதீர்கள்.
உங்கள் மகள் வீடு தங்காமல், "டூர் போகிறேன்…’ என்றால், அது உண்மை தானா, எங்கிருக்கிறாள் என்பவற்றை விசாரித்து அனுப்புங்கள்.
"அது என் பெண்ணோட பிரைவசி… அதில் எல்லாம் நான் தலையிட மாட்டேன்!’ என, பெருமையாக அலட்டிக் கொள்ளாமல், என்ன, ஏது என, அவளது நண்பர்களை விசாரியுங்கள்.
கடைசியாக, உங்கள், "டீன்-ஏஜ்’ மகள்களிடம், மனம் விட்டு இதுபோன்ற விஷயங்களைக் கூறி, ஒரு பாடம் நடத்துங்கள். உங்கள் செல்ல மகள்களின் வாழ்வு, உங்கள் கைகளில்தான் உள்ளது என்பதை மறந்துவிடாதீர்!
— தொடரும்.

– ஜெபராணி ஐசக்

source:dinamalar

பின்னூட்டமொன்றை இடுக

Filed under Uncategorized

தெண்டுல்கர் ஊக்க மருந்தாக இருக்கிறார்;

தெண்டுல்கர் எனக்கு ஊக்க மருந்தாக இருக்கிறார்; இங்கிலாந்து கேப்டன் ஸ்டிராஸ் பேட்டி

லண்டன், ஜூலை. 15-

தெண்டுல்கர் எனக்கு ஊக்க மருந்தாக இருக்கிறார்; இங்கிலாந்து கேப்டன் ஸ்டிராஸ் பேட்டி

4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக இந்திய அணி இங்கிலாந்து சென்றுள்ளது. முன்னதாக 3 பயிற்சி ஆட்டங்களில் இந்தியா ஆடுகிறது. இதில் முதல் பயிற்சி ஆட்டம் இன்று தொடங்குகிறது.இங்கிலாந்து கேப்டன் ஸ்டிராஸ் இதுபற்றி கூறியதாவது:-

இந்திய அணியில் தெண்டுல்கர் மிகச்சிறந்த வீரராக திகழ்கிறார். அவர் இங்கும் சிறப்பாக ஆடுவார் என்று எதிர்பார்க்கிறோம். அவரது ஆட்டத்தில் இப்போது புதிய மாற்றம் தெரிகிறது. அவருக்கு ரன் குவிக்க வேண்டும் என்ற பசி எப்போதும் இருந்துகொண்டே இருக்கிறது. அதனால்தான் அவரால் அதிக ரன் குவிக்க முடிக்கிறது.

அதுமட்டுமல்லாமல் ஏதேனும் சாதனை நிகழ்த்திக்கொண்டே இருக்க வேண்டும் என்ற எண்ணமும் அவரிடம் உள்ளது. எனக்கும் கூட வயதாகி விட்டதாக எண்ணம் வரும். ஆனால் தெண்டுல்கரை பார்த்தால் இது மறந்து விடும். அவரை போல நாமும் ஆட வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டு நானும் நிலைத்து நின்று ஆடி வருகிறேன்.இதில் தெண்டுல்கர் எனக்கு ஒரு ஊக்க மருந்தாகவே இருக்கிறார்.

இங்கிலாந்து அணியை பொறுத்த வரை கடந்த 2 ஆண்டுகளாக சிறப்பாக ஆடி வருகிறோம். இந்தியா நெம்பர் 1 அணியாக இருந்தாலும் அதை எங்களால் வீழ்த்த முடியும். மற்ற இடங்களை விட எங்களது சொந்த மண்ணில் நாங்கள் சிறப்பாக ஆடுவோம்.

எனவே இந்திய அணிக்கு கடும் நெருக்கடி கொடுக்க முடியும். எங்கள் அணி வீரர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து சிறப்பாக ஆடுகிறோம். இது எங்களுக்கு பெரும் சாதகமாக அமைந்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

source:maalaimalar

பின்னூட்டமொன்றை இடுக

Filed under Uncategorized

காஷ்மீரில் இயேசுவின் கல்லறை

காஷ்மீரில் இயேசுவின் கல்லறை உள்ளதா?

(இயேசுக்கிறிஸ்துவைக் குறித்து பலவிதமான கருத்துக்கள் பிறஇன, மத மக்களிடையே நிலவுகின்றன. அவற்றுக்கு ஆதாரபூர்வமான பதில்களை கொடுக்க நாம் கடமைப்பட்டுள்ளோம். இக்கட்டுரையான காஷ்மீரில இயேசுவின் கல்லறை உள்ளதா? அகமதியா இயக்கதினர் கூறுவது உண்மைதானா என்பதை தர்க்க ரீதியிலும் வரலாற்று ரீதியிலும் ஆராய்கிறது)

இயேசுக்கிறிஸ்துவின் 12 வயதுக்கும் 30 வயதுக்கும் இடைப்பட்ட அறியப்படாத வாழ்வைப் பற்றி கதையெழுதியவர்கள், அவர் இஸ்ரேலில் தமது ஊழியத்தை ஆரம்பிப்பதற்கு முன்னர் இந்தியாவிற்கு வந்து பௌத்த மற்றும் இந்து மத நூல்களைக் கற்றதாக கற்பனை செய்துள்ளனர். இக்கதைகளில் இயேசுகிறிஸ்துவின் வாழ்வு இஸ்ரேலிலேயே முற்றுப்பெறுகின்றது. ஆனால் சரித்திர ஆதாரமற்ற நம்பமுடியாத பலவிதமான பிழைகளும் முரண்பாடுகளும் உள்ள இக்கதைகளையே முரண்படுத்தும் வண்ணம் அகமதியா இயக்கத்தினரின் வர்ணனை உள்ளது. இவ்வியக்கத்தின் ஆரம்பகர்த்தாவான மிர்ஸா குலாம் அஹமட் என்பார் இயேசுக்கிறஸ்து சிலுவையில் அறையப்படுவதற்கு முன்பு இந்தியாவிற்கு வரவேயில்லை என்று கூறுவதோடு “சிலுவையில் அறையப்பட்டு மயக்கமடைந்த இயேசு, கல்லறைக்குள் சுயஉணர்வு பெற்று, பின்னர் காணாமற்போன இஸ்ரவேலரைத் தேடி ஆப்கானிஸ்தானுக்கும் இந்தியாவிற்கும் வந்தார். வயதுமுதிர்ந்தவராக மரணமடைந்த அவருடைய கல்லறை இப்போது காஷ்மீரில் இருக்கிறது. என ஜீசன் இன் இன்டியா எனும் நூலில் எழுதியுள்ளார். (Jesus in India by Mizra Ghula Ahamd) இயேசுக்கிறிஸ்துப் பற்றி கிறிஸ்தவர்கள் மற்றும் இஸ்லாமியர்கள் மத்தியில் இருக்கும் தவறான கருத்துக்களை அகற்றுவதற்காகவே தனது நூலை வெளியிட்டுள்ளதாகவும் மிர்ஸா குலாம் அஹமட் தனது நூலில் குறிப்பிட்டுள்ளார். ஆரம்பத்தில் உருது மொழியில் எழுதப்பட்ட அவருடைய நூல் பிற்காலத்தில் ஆங்கிலம, தமிழ் உட்பட பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

இயேசுக்கிறிஸ்துவின் இந்திய விஜயத்தை பற்றிய அகமதியா இயக்கதினரது கதையும் சரித்திர ரீதியாக நம்பகமற்றது எனபதை அறிந்து கொள்வதற்கு அவ்வியக்கம் எவ்வாறு உருவானது என்பதை அறிந்துகொள்ள வேண்டும். இந்திய இஸ்லாமிய மறுமலர்ச்சி இயக்கமாக தம்மை அறிமுகப்படுத்திக் கொள்ளும் அகமதியா இயக்கம் Jesus in India எனும் நூலை எழுதிய மிர்ஸா குலாம் அஹமட் என்பாரிலேயே ஆரம்பத்தைக் கொண்டுள்ளது. அல்லாஹ்விடமிருந்து பலவிதமான தெய்வீக வெளிப்படுத்தல்கள் தமக்குக் கிடைத்தாக தெரிவித்த மிர்ஸா குலாம் அஹமட் 1880 இற்கும் 1884 இற்கும் இடைப்பட்ட காலத்தில் தனது மார்க்கக் கருத்துக்களை 4 புத்தகங்களில் வெளியிட்டார். இவை ஒரு புத்தகத்தின் நான்கு பகுதிகளாகும்). இவை பாரம்பரிய இஸ்லாமியரிடம் அதிக வரவேற்பைப் பெற்றாலும் கூட அகமதியா இயக்கத்தாரின் வித்துக்களை இதில் காணலாம். அதன் பின்னர் 1889 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 4 ஆம் திகதி மதத்தலைவருக்குரிய மரியாதையை தன் சீடர்களிடமிருந்து பெறுவதற்கும் அவர்கள் தனக்கு விசுவாசமாயிருப்பதற்கான வாக்குறுதியைப் பெறுவதற்குமான தெய்வீக வெளிப்படுத்தல்கள் தனக்கு கிடைத்துள்ளதாக மிர்ஸா குலாம் அஹமட் அறிவித்தார். இது பாரம்பரிய இஸ்லாமிலிருந்து அகமதியா இக்கம் தனியானதொரு குழுவாகப் பிரிவதற்க வழிவகுத்தது அதன்பின் அகமதியா இயக்கத்தினர் மிர்ஸா குலாம் அஹமட்டைத் தமது இயக்கத்தின் தலைவராக ஏற்றுக் கொண்டனர். இவர் 1891 ஆம் ஆண்டு. தான் வாக்களிக்கப்பட்ட “மசீஹ“ (மேசியா) என்றும் இஸ்லாமியர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் “மஹ்தி“ என்றும்அறிவித்தார். . இதன்காரணமாக இஸ்லாமும் அகமதியா இயக்கமும் ஒன்றிணைக்கப்பட்ட முடியாதவாறு இரண்டாகப் பிரிவடைந்தன.

பாரம்பரிய இஸ்லாமிய நம்பிக்கையின்படி, வரவிருக்கும் மசீஹ் உம் மஹ்தியும் இரு வேறுபட்ட நபர்கள். மசீஹ் என்பார் உலக முடிவில் பரலோகத்திலிருந்து வந்து இஸ்லாமிய மாரக்கத்தை மக்களுக்கு அறிவிக்கும் ஈஸாநபி(இயேசு) ஆனால் மஹ்தி என்பர் உலக முடிவில் ஈஸா நபிக்கு வருவதற்கு முன்பு உலகிற்கு வந்து இஸ்லாமியர்களை அவர்களது விசுவாசத்திற்குள் கொண்டுவருவதோடு ஈஸாவுக்கு எதிரானவர்களை அழிப்பவர். இந்த பாரம்பரிய இஸ்லாமிய நம்பிக்கை முரணாக, தான் மசீஹ் ஆகவும் மஹ்தியாகவும் வந்தவர் என மிர்ஸா குலாம் அஹமட் கூறியமையால் இவர் இஸ்லாமிய மறுமலர்ச்சி தலைவராகவல்ல மாறாக இஸ்லாமுக்கு எதிரியாகவே வந்தவர் என்றே பெரும்பாலான இஸ்லாமியர்கள் எண்ணினர். அதேசமயம் அக்காலத்தில் கிறிஸ்தவம் வளர்ச்சியடைந்து வந்தமையால், இந்தியர்களின் பார்வையில் கிறிஸ்தவத்தை இழிவுபடுத்தவும் மிர்ஸா குலாம் அஹமட் முயற்சித்தார். இதனால் இஸ்லாமியர்கள் மத்தியில் அதுவரை காலமும் ஈஸாநபியைப் பற்றி இருந்த நம்பிக்கைகள் ஆதாரமற்றவை எனக் கூறத்தொடங்கினார். எனினும் மிர்ஸா குலாம் அஹமட் தன்னை அல்லாஹ்வின் தீரக்கதரிசியாக அறிமுகப்படுத்தியமையினால் முஹம்மது நபியே இறுதித் தீர்க்கதரிசி என நம்பிய பாரம்பரிய இஸ்லாமியர்கள் இவரைத் தம் தீர்க்கதரிசியாக ஏற்கவில்லை.
மிர்ஸா குலாம் அஹமட் தன்னை அல்லாஹ்வின் இறுத்தீரக்கதரிசியாகவும் இஸ்லாமியர்களுடைய எதிர்ப்பார்ப்பின்படி வந்துள்ள மெசியாகவும் காண்பிப்பதற்காகவே இயேசுக்கிறிஸ்து இந்தியாவிற்கு வந்தார் என சொல்லத் தொடங்கினார்.

பாரம்பரிய இஸ்லாமியர்கள் குர்ஆன் 3:157-158 அடிப்படையாக்க் கொண்டு இயேசுக்கிறிஸ்து சிலுவையிலறையப்படவில்லை, என்றும் அல்லாஹ்வினால் அற்புதமான முறையில் காப்பாற்றப்பட்டு அவர் பரலோகத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டார் என்றும் நம்புகின்றனர். இவ்வாறு எடுத்துக் கொள்ளப்பட்ட ஈஸாநபி உலகமுடிவில் மீண்டும் வருவார் என்பது பாரம்பரிய இஸ்லாமியர்களின் எதிர்பார்ப்பாகவுள்ளது. இஸ்லாமியர்களின் இந்த நம்பிக்க்கையும் எதிர்பார்ப்பும் தவறானது என்றும் தானே வரவிருக்கும் மெசியா என்றும் காண்பிப்பதற்காகவே மிர்ஸா குலாம் அஹமட் இயேசுக்கிறிஸ்துவை இந்தியாவிற்கு கொண்டுவந்து விட்டார். இவருடைய கதையின்படி இயேசுகிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டாலும் அவர் சிலுவையில் மரணமடையவில்லை. மாறாக அவர் மயங்கிய நிலையிலேயே சிலுவையில் இருந்துள்ளார். பின்னர் கல்லறைக்குள் அவரது சரீரம் வைக்கப்பட்டபோது கல்லறையின் குளிர்ச்சியான நிலை அவரது மயக்கத்தை தெளியவைத்துள்ளது. அதேசமயம் அவருடைய சீடர்கள் தேவனால் தங்களுக்கு வெளிப்படுத்தப்பட்ட மருந்தை உபயோகித்து, இயேசுக்கிறிஸ்துவைப் பூரணமாக குணமாக்கினார்கள். நாற்பது நாட்களுக்குப் பின் காணாமற் போன இஸ்ரேலியரின் பத்துக் கோத்திரங்களையும் தேடி கீழ்த்திசை செல்லும் பிரயாணத்தை இயேசு கிறிஸ்து ஆரம்பித்தார். முதலில் ஆப்கானிஸ்தானிலும் பின்னர் காஷ்மீரிலும் குடியிருந்த அவர் 120வது வயதில் மரணமடைந்தார். அவருடைய கல்லறை இன்றுவரை காஷ்மீர் மாநிலத்தின் தலைநகரிலுள்ள ஸ்ரீநகரிலுள்ள கான்யா வீதியில் உள்ளது.

மிர்ஸா குலாம் அஹமட் எத்தகைய நோக்கத்துடன் இயேசுக்கிறிஸ்து இந்தியாவிற்கு வந்தார் என கதையெழுதினார் என்பதை அறிந்துகொண்டால் அவரது கதை வெறும் கற்பனைக் கதை என்பதை அறிந்து கொள்வதற்கு அதிக நேரம் எடுக்காது. இஸ்லாமிய மக்கள் மற்றும் கிறிஸ்தவ மக்களின் எதிர்பார்ப்பின்படி உலகமுடிவில் வரவிருக்கும் மெசியாவாக தான் வந்துள்ளதை காண்பிப்பதற்காகவே அவர் இவ்வாறு கதையை எழுதியுள்ளார். இஸ்லாமியர்களும் கிறிஸ்தவர்களும் இயேசுக்கிறிஸ்து பரலோகத்தில் இருக்கிறார் என நம்பிக்கொண்டிருந்தால் அவர்கள் அவரையே எதிர்பார்த்துக் கொண்டிருப்பார்கள் என்று கருதிய மிர்ஸா குலாம் அஹமட் அவர் பரலோகத்திற்குச் செல்லவில்லை. அவர் இந்தியாவிற்கு வந்துவிட்டார்.. இதோ அவருடைய கல்லறை காஷ்மீரில் இருக்கிறது. எனவே அவர் பரலோகத்திலிருந்து வர முடியாது. என தெரிவித்த மிர்ஸா குலாம் அஹமட் இயேசுக்கிறிஸ்து மீண்டும் வரமாட்டார். அவருடைய தன்மைகளுடைய ஒருவரே வருவார். அவ்வாறு அவருடைய ஆவியிலும் தன்மையிலும் இதோ நானே வந்திருக்கிற்றேன் என அறிவித்துள்ளார். “இயேசு கிறிஸ்துவின் இரண்டாவது வருகைப் பற்றிய தீர்க்கதரிசனத்தின்படி தோன்றியவரே மிர்ஸா குலாம் அஹமட் என்பதே அகமதியர்களின் நம்பிக்கையாகும். எனவே தன்னை வாக்களிக்கப்பட்ட மெசியாவாக காண்பிப்பதற்காகவே மிர்ஸா குலாம் அஹமட் இயேசுக்கிறிஸ்து இந்தியாவிற்கு வந்துவிட்டார் என கூறியுள்ளமை அவரது கதை கற்பனையிலுருவானது . அதில் எவ்வித உண்மையும் இல்லை என்பது உறுதியாகின்றது.

இயேசுக்கிறிஸ்து இந்தியாவிற்கு வந்த்தைப்பற்றி மிர்ஸா குலாம் அஹமட் எழுதிய கதை அவரது கற்பனையில் உருவானதாயிருக்க இயேசுவின் கல்லறை எப்படி காஷ்மீரில் இருக்கமுடியும் என்று நாம் கேட்கலாம். மிர்ஸா குலாம் அஹமட் தனக்கு அற்புதமான முறையில் இயேசுக்கிறிஸ்துவின் கல்லறை வெளிப்படுத்தப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார். வாக்களிக்கப்பட்ட மெசியாவான மிர்ஸா குலாம் அஹமட்டினால் இயேசுக்கிறிஸ்துவின் கல்லறை கண்டுபிடிக்கப்பட்டது என்பது பற்றி என்று அகமதியா இயக்கத்தினர் நம்புகின்றனர். எனினும் மிர்ஸா குலாம் அஹமட் கண்டுபிடித்த கல்லறை இயேசுக்கிறிஸ்துவினுடையதல்ல. ஏனென்றால் அதில் “யூஸ் ஆசாப்“ என்னும் பெயரே உள்ளது என்றும் காஷ்மீரிலிருந்தவர்கள் இயேசுக்கிறிஸ்துவையே “யூஸ் அசாப்“ என்று அழைத்தனர் என்று அகமதியா இயக்கதினர் தர்க்கிக்கின்றனர். யூஸ் அசாப் என்பவர் வெளிநாட்டிலிருந்து வந்த ஒரு தீரக்கதரிசி எனும் நம்பிக்கை காஷ்மீர் மக்கள் மத்தியல் இருக்கின்றமையால், அத்தீரக்கதரிசி இயேசுக்கிறிஸ்துவே என அகமதியா இயக்கத்தினர் கூறுவது ஏற்கத்தக்கதல்ல. மிர்ஸா குலாம் அஹமடே வரவிருக்கும் இயேசுக்கிறிஸ்துவாக வந்துள்ளார் என்பதை நிரூபிப்பதற்காக எவரோ ஒருவருடைய கல்லறையை இயேசுக்கிறிஸ்துவினுடையதாக கூறும் கதையை பக்கச்சார்பற்ற நிலையில் சிந்திக்கும் எவராலும் ஏற்றுக் கொள்ள முடியாது. மிர்ஸா குலாம் அஹமட் தானே வரவிருக்கும் மெசியா என்பதை இஸ்லாமியர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. இன்றும் இயேசுக்கிறிஸ்துவாக வந்திருப்பவர் நானே என்று கூறிக்கொள்ளும் பலர் இருக்கிறார்கள். இவர்கள் தாங்களை மார்க்கத் தலைவர்களாக காண்பித்து தம்மை மக்கள் பின்பற்ற வேண்டும் என எதிர்பாரக்கிறார்கள். அப்படிப்பட்ட ஒருவர் தான் மிர்ஸா குலாம் அஹமட் தான் மெசியாவான கிறிஸ்து என்பதைக் காண்பிப்பதற்காக இவர் இயேசுக்கிறிஸ்துவைப்பற்றிய கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமிய மதநூல்களில் உள்ள சரித்திரம் நம்பகமற்றது என்று கூறுகின்றனர். இதனால் இயேசுக்கிறிஸ்து இந்தியாவிற்கு வந்தார் என்ற கதையை எவ்விதத்திலும் நம்ப முடியாதுள்ளது.

நன்றி : கிறிஸ்தியல் வெளியீடு : இலங்கை வேதாகம கல்லூரி

source:paralogapathi

பின்னூட்டமொன்றை இடுக

Filed under Uncategorized

மகள்களின் வாழ்க்கையை நீங்களே சூறையாடலாம ா?

பட்டாம்பூச்சிகளின் கதை! (3)

ஹாய் ரீடர்ஸ்… "பட்டாம்பூச்சிகளின்’ உண்மைக் கதை, உங்கள் எல்லாருடைய மனதிலும், "பசக்’ என்று ஒட்டிக் கொண்டது குறித்து சந்தோஷமே… "அய்யோ பாவம் நம் கதாநாயகிகள்!’ என்று நீங்கள் எல்லாருமே கடிதங்களில் உருகி இருந்தீர்கள். எத்தனை விதமான விமர்சனங்கள். சரி… விஷயத்துக்கு வர்றேன்…

இதுவும் எங்கள் ஊரைச் சேர்ந்த குடும்பத்தினர் கதை தான். சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தில் இருந்து, வீழ்ந்து போன குடும்பம். எனவே, அந்த ஆடம்பரம், பகட்டுகளை விட முடியவில்லை. அந்தக் குடும்பத்தினருக்கு இரண்டு பெண்கள்; பேரழகிகள். அதனால், கவரிங் நகைகளை விதவிதமாக போட்டு, எப்போதுமே நகை கடை, "÷ஷா கேஸ்’கள் போல் திரிவர்.
வரதட்சணையாக நகைகளையும், பணத்தையும் கொட்டிக் கொட்டி கொடுத்தால்தான், நல்ல மாப்பிள்ளை அமையும் என்ற காலமல்லவா இது! தம் மகள்களுக்கு நல்ல வரன் அமைய வேண்டும் என்ற எண்ணத்தில், மிகப்பெரிய இடத்தில் வரன் பார்த்தனர். ஐம்பது சவரன் நகை, இரண்டு லட்சம் ரூபாய் என்று, பேசி முடித்தனர்.
பிளஸ் 2 படித்த பெண்ணை, எம்.ஏ., படித்திருக்கிறாள் என்று பொய்யும் கூறி விட்டனர். கோடீஸ்வர வீட்டுக்கு இவர்கள் போடும், ஐம்பது சவரன் நகை பெரிய விஷயம் இல்லை; இருப்பினும், பெண்ணின் அழகில் மயங்கி, சம்மதித்தனர்.
மாப்பிள்ளை வீட்டார், ஊர்க்காரர்களிடம், பெண் வீட்டாரை பற்றி விசாரித்த போது, ஊர் மக்கள் ஆச்சரியப்பட்டனர். "இவ்வளவு பணம் அவர்களிடம் நிச்சயமாகவே இல்லை; வாழ்ந்து கெட்ட குடும்பம் அது!’ என்று, எல்லாரும் சொல்லியும், மாப்பிள்ளை வீட்டார் நம்பவில்லை.
அது மட்டும் இல்லை… "அவங்க வீட்டு பெண்கள், கல்லூரியில் கால் வைத்ததே கிடையாது; பிளஸ் 2 பெயில். பெண்ணை பார்த்து ஏமாந்து விடாதீர்கள்!’ என்றனர், ஊரார்.
ஆனால், பெண் வீட்டாரின் நடை, உடை, பாவனை, அழகான தோற்றத்தை பார்த்த மாப்பிள்ளை வீட்டார், ஊரார், பொறாமையில் பேசுகின்றனர் என்று நினைத்தனர்.
திருமணம் முடிந்தது.
தம்பதிகள் விருந்துக்கு செல்லும் போதும், வெளியே போகும் போதும், நகைகள் எதுவும் அணிய மாட்டாள் நம் கதாநாயகி. கேட்டால், "லோக்கல்ஸ் தான் நிறைய நகை போடுவாங்க… தாலி செயின் மட்டும் போட்டால் தான், "டீசன்ட்’ ஆக இருக்கும்…’ என்பாள்; காரணம், நீல சாயம் வெளுத்துப் போகும் என்பதால் தான்.
"படித்த மருமகள், உங்கள் வீட்டில் சும்மா தானே இருக்கிறாள்… நாலு பேருக்கு கல்வி அறிவு கொடுக்கட்டுமே…’ என, மாப்பிள்ளைக்கு மிகவும் பழக்கமான ஸ்கூலில் வேலை செய்யும்படி அழைத்து, "சர்டிபிகேட்’ கேட்டனர். நம் கதாநாயகி, "திருதிரு’வென விழித்தாள்.
இப்படியாக உண்மைகள் வெளிவர, திடுக்கிட்டனர் மாப்பிள்ளை வீட்டார்.
படிப்பு விஷயத்திலேயே இவ்வளவு அப்பட்டமாக பொய் சொன்னவர்கள், மற்ற விஷயத்திலும் என்ன சொல்லியிருக்க மாட்டார்கள். அப்படியானால், ஊரார் சொன்னதும் உண்மையாக இருக்குமோ என எண்ணி, பெண்ணின் நகைகளை எடுத்து வரக் கூறினர். ஐம்பது சவரன் நகையும் போலி என தெரிந்ததும், பெண்ணை அடித்தே விரட்டி விட்டனர். அவமானம் தாங்க முடியாமல், வீட்டை காலி செய்து, பக்கத்து ஊருக்கு சென்றது நம் கதாநாயகியின் குடும்பம்.
அப்பவாவது திருந்தி இருக்கலாம்! இரண்டாவது பெண்ணை, பணக்கார தேங்காய் மண்டிக்காரர்கள் கேட்டனர்; இவர்களும், "எங்கள் நிலமை இதுதான்…’ என்று சொல்லி இருக்கலாம். உண்மையை மறைத்து, அவர்களிடமும், ஐம்பது சவரன் நகை, பணம், படிப்பு எல்லாம் பேசப்பட்டது. புதிய ஊரில் இவர்களைப் பற்றி யாருக்கும் அதிகம் தெரியாததால், திருமணம் தடபுடலாக நடந்தது.
நாட்கள் சென்றன; உண்மை ஒரு நாள் வெளிப்பட்டுத்தானே ஆக வேண்டும். உண்மை தெரிந்து ஏக ரகளை. பெண்ணுக்குப் போட்ட, ஐம்பது சவரன் நகைகளும், "கவரிங்’ என்றதும், மாப்பிள்ளை வீட்டார் ருத்ர தாண்டவம் ஆடினர். பெண் வீட்டாரை அழைத்து பஞ்சாயத்து செய்தனர்.
அப்போதுதான், இன்னொரு உண்மையும் தெரிந்தது… இவர்களது அக்கா வாழாவெட்டியாக வீட்டில் இருப்பதும், இதே நகை பிரச்னையால் தான் என்பதும்.
"இவ்வளவு மோசமான குடும்பமா? இதிலேயே இப்படி ஏமாற்றின நீங்க, இன்னும் எத்தனை விஷயத்தில் ஏமாற்றுவீங்க…’ என்று சொல்லி, பெண்ணையும் வீட்டுக்கே அனுப்பி வைத்தனர். இன்று, இரண்டு பெண்களும் வாழாவெட்டியாக, வீட்டில் உட்கார்ந்து கொண்டிருக்கின்றனர்.
இதில் விசேஷம் என்னவென்றால், வாழ்ந்து கெட்ட இந்த குடும்பத்தினர் மீது பரிதாபப்பட்ட உறவினர்களில் சிலர், "இந்தப் பெண்களை எங்களுக்கு திருமணம் செய்து கொடுங்க… உங்களால் முடிந்ததை செய்யுங்க… திருமணம் கூட நாங்களே செய்து கொள்கிறோம்…’ என, இரு பெண்களின் திருமணத்திற்கு, முன்பே சம்பந்தம் பேசினர்.
அவர்கள் எல்லாம் நடுத்தர குடும்பத்தினர் என்பதால், இவர்களுக்கு மனதில்லை.
"நல்ல வசதியான மாப்பிள்ளைகள் தலையில், ஆயிரம் பொய்யைச் சொல்லி கட்டி விடுவோம். திருமணம் நடந்த பிறகு, குழந்தை, குட்டிகள் வந்து விடும். அதன் பிறகு அவர்கள் பார்த்துக் கொள்வர்…’ என நினைத்து, பேராசைப்பட்ட பெற்றோரால், நம் கதாநாயகிகள் இருவரும், வாழ்க்கையை இழந்து, வெளியே தலைகாட்ட முடியாமல் நொந்து போய், வீட்டுக்குள்ளேயே அடைபட்டு கிடக்கின்றனர்.
இது தேவையா… பேராசைக்கும் ஒரு அளவில்லையா பெற்றோரே… "பணம்… பணம்’ என ஆசைபட்டு, உங்கள் செல்ல மகள்களின் வாழ்க்கையை நீங்களே சூறையாடலாமா?
— தொடரும்.

ஜெபராணி ஐசக்

source:dinamalar

பின்னூட்டமொன்றை இடுக

Filed under Uncategorized

அதிசய இயந்திரம் செய்து வைக்கும் திருமணம ் (காணொளி, பட இணைப்பு)

பிரித்தானியாவில் அறிமுகம் ஆகி உள்ளது காதலர்களுக்கு திருமணம் செய்து வைக்கின்ற இயந்திரம்.

காதல் ஜோடிகள் இதன் வாய்க்குள் ஒரு டொலர் அல்லது அல்லது பவுண்டு போட்டால் போதுமானது. இயங்க ஆரம்பித்து விடும்.

உங்களுடன் உரையாடும். உங்களுக்கு அறிவுறுத்தல்கள் கொடுக்கும்.

அதன் அறிவுறுத்தல்களின்படி நீங்கள் நடந்து கொள்ள வேண்டும்.

ஒரு ஜோடி பிளாஸ்ரிக் மோதிரத்தை உங்களுக்கு கொடுக்கும்.

திருமணத்தின் நிறைவில் உங்களுக்கு திருமண பதிவு சான்றிதழ்களும் வழங்கும்.

இத்திருமணம் ஒரு புதுமையான அனுபவம் என்பதால் இளைஞர்கள், யுவதிகள் மத்தியில் இயந்திரம் அதீத பிரபலமும், அமோக வரவேற்பும் பெறும் என்பதில் ஐயம் இல்லை.

conceptshed நிறுவனம் இந்த இயந்திரத்தை கண்டுபிடித்து உள்ளது.

(Visited 55 times, 1 visits today)

பின்னூட்டமொன்றை இடுக

Filed under Uncategorized

வெட்கமே இல்லாமல் பெட்ரூமுக்கு கூப்பிடு வது, ……….

பட்டாம்பூச்சிகளின் கதை (2)

ஹாய் வாசகர்களே…
"பட்டாம்பூச்சி’க்கு இத்தனை, "ரெஸ்பான்ஸ்’ இருக்கும் என்று எதிர்பார்க்கவே இல்லை. இந்த வாரம், எங்கள் ஊர்க்காரி மாதங்கி – பெயர் மாற்றியுள்ளேன்; அவளைப் பற்றி சொல்லப் போறேன்…

இவள், பெற்றோருக்கு ஒரே பெண். அதனால், இவள் நினைத்ததெல்லாம் பெற்றோர் செய்து கொடுப்பர் என்றுதானே நினைக்கிறீங்க… அதுதான் இல்லை. தாயார் சரியான கஞ்சம்; பணத்தை சேர்த்து, சேர்த்து தங்கமாக்கினாள்.
என்ன செய்வது? எங்கள் மாவட்டத்து பெண்களுக்கு நிறைய பணம், நகைகள் வரதட்சணையாக கொடுக்க வேண்டும். நடுத்தர குடும்பம்தான் மாதங்கியுடையது; வீட்டில், அவள் அம்மா வைத்ததுதான் சட்டம். ஐம்பது சவரன் என்றால், சாதாரண மாப்பிள்ளை; 70 – 100 சவரன் என்றால் தான் பணக்கார மாப்பிள்ளை கிடைக்கும். மகளை, பெரிய கோடீஸ்வரனுக்கு கட்டிக் கொடுக்க வேண்டும் என்பதற்காகவே, காசு சேர்க்க ஆரம்பித்தாள் அம்மாக்காரி.
வாழ்க்கையில் சுடிதார் போட்டதே கிடையாது மாதங்கி. காரணம், ரெடிமேடு டிரெஸ் விலை அதிகம் என்பது தான். மாதங்கிக்கு, தீபாவளிக்கு மட்டும் ஒரு டிரெஸ் எடுப்பார்; அதுவும் சாதாரண டிரெஸ் தான்.
மாதங்கியின் அம்மா, முழு, நூறு ரூபாய் நோட்டு கையில் கிடைத்தால் மாற்றவே மாட்டாள்; மாற்றினால், செலவாகி விடும் என்ற பயம். யார் வீட்டில் இருந்து பத்திரிகை வைத்தாலும், "கிப்ட்’ கொடுக்கணுமே என்பதற்காக, முக்கிய உறவினர்கள் தவிர, யார் வீட்டு கல்யாணத்திற்கும் போக மாட்டாள்.
வீட்டு வேலை எல்லாம் இருவருமே செய்வர். வீட்டில் விளையும் காய்களை வைத்தே ஓட்டி விடுவர். ஒரு முட்டையை சமைத்து, மூன்று பேரும் பார்த்துக் கொண்டே சாப்பிடுவர். இப்படி சேர்த்த காசுகள் அனைத்துமே சவரன்களாகின.
அத்தை மகன் ஒருவன், மாதங்கியை மிகவும் விரும்பினான்; ராணி மாதிரி வைத்துக் கொள்ள ஆசைப்பட்டான். ஆனால், அம்மாக்காரிக்கு, புருஷன் வீட்டு ஆட்களை பிடிக்கவே பிடிக்காது.
"ஆ… உனக்கெல்லாம் என் பெண்ணை கொடுப்பேனா… நல்ல பணக்காரனுக்குத்தான் கொடுப்பேன்…’ என்பாள் தாயார். அவள் ஆசைப்பட்டது போலவே பணக்கார இடம் வந்தது. மாமியார், மெத்த படித்த கோடீஸ்வரி; நான்கு பங்களாக்கள் உண்டு!
மகிழ்ச்சியுடன் பெண்ணை திருமணம் செய்து கொடுத்தனர். மாப்பிள்ளை வீடு, இவர்கள் வசதிக்கு ஏணி வைத்தாலும் எட்டாது. உறவினர் கூட்டம், மாதங்கிக்கு அடித்த அதிர்ஷ்டத்தை கண்டு வாயில் விரலை வைத்தது. அழகிய பங்களாவில் காலடி எடுத்து வைத்தாள் மாதங்கி. கூடவே, தாயாரின் துர்போதனைகளும் அவள் இதயத்தை ஆட்கொண்டன.
"மகளே… நீ போகிற வீடு பணக்கார வீடு. நீ பணத்தை பார்க்காதவள் என்று கேவலமாக நினைத்துக் கொள்ளப் போகின்றனர். எனவே, ராணி மாதிரி நடந்துக்கோ. வீட்டு வேலைகளைச் செய்யாதே. மாமனார், மாமியார், நாத்தனார் எல்லாருமே பொல்லாதவர்களாக தான் இருப்பர். உங்கப்பா எப்படி என் பேச்சை கேட்கிறாரோ, அப்படியே மாப்பிள்ளையும் உன் பேச்சை கேட்கும்படி அடிமையாக்கு…’ என, தூபம் போட்டாள்.
புகுந்த வீட்டில், 9:00 மணிக்கு எழுந்து, ஹாலுக்கு வந்து, கால், மேல் கால் போட்டு அமர்த்தலாக உட்கார்ந்து, "டிவி’ பார்த்தாள் மாதங்கி.
இவ்வளவு நாட்களும் வேலைக்காரி கையால் காபி குடித்தோம். இனியாவது, மருமகள் கையால் குடிப்போம் என நினைத்த மாமனாருக்கு அதிர்ச்சி. "அம்மா மாதங்கி… உன் கையால் காபி கொடும்மா!’ என்றார் மாமனார்.
"நான் என்ன உங்கள் வீட்டு வேலைக்காரியா, உங்களுக்கெல்லாம் காபி கொடுப்பதற்கு? நான் ராணி மாதிரி வளர்ந்தவள்…’ என்றாள் மாதங்கி.
எப்பவும் மாடியை விட்டு இறங்க மாட்டாள்; கிச்சன் பக்கம் எட்டிக் கூட பார்க்க மாட்டாள். சமையல்காரி தான் சமைக்கணும். ராணி மாதிரி வந்து சாப்பிடுவதோடு, "இது குறை… இது நொள்ளை, நொட்டை!’ என, சமையலைக் குறை சொல்வாள்.
இதே மாதங்கி, தன் தாய் வீட்டில், "லோ லோ’ன்னு சமையல் செய்வாள். அம்மா பேச்சைக் கேட்டதால் வந்த வினை. இப்படி ஒவ்வொரு விஷயத்திலும் மாமியார், மாமனார், கணவனை நோகடித்திருக்கிறாள்.
கணவரை சும்மா நச்சரிப்பது, "அங்க என்ன பேச்சு… உங்க அம்மாகிட்ட என்ன பேசினீங்க. இப்படி கையை ஆட்டினீங்களே, அதன் அர்த்தம் என்ன? உங்கப்பா கூட கார்டனில் நின்று என்ன பேசினீங்க… எங்க போனீங்க?’ என, "டார்ச்சர்’ செய்வாள். மகனிடம், மாமனார் – மாமியார், ஏதாவது தூபம் போட்டு விடுவரோ என்ற பயம் தான்.
"நமக்கிருக்கும் பணத்துக்கு, இன்னும் பணக்காரி மருமகளாக வந்தால், வீட்டை கவனிக்க மாட்டாள். எனவே, நடுத்தர குடும்பத்து பெண்ணை எடுத்தால், அவள் நம்மையும் கவனிப்பாள்; புருஷனுக்கும் அடங்கி நடப்பாள்; குடும்ப கவுரவத்தை கட்டி காப்பாள்…’ என நினைத்துதான், மாதங்கியை தேர்ந்தெடுத்தனர். ஆனால், அவர்களது கனவு சரிந்ததும், வெறுத்துப் போயினர் மாப்பிள்ளை வீட்டார்.
புகுந்த வீட்டினருக்கு, இவர்கள் வீட்டு வசதி நன்கு தெரியும். இருந்தும், இவளது அதிகப்படியான திமிர்தனம், மாமியாரை எரிச்சல் படுத்தியது. கணவனை அடக்கி ஆள நினைத்தாள் மாதங்கி. அவனோ, கோடிகளில் புரள்பவன். "போடீ…’ என்றான். விளைவு… மூன்று மாதத்திலேயே பிறந்த வீட்டிற்கு வந்தாள்.
அம்மாக்காரி என்ன செய்திருக்க வேண்டும்… மகளுக்கு நல்ல வார்த்தை கூறி, கணவன் வீட்டுக்கு அனுப்பியிருக்க வேண்டும்; ஆனால், இவள்தானே இதற்கெல்லாம் காரணம்!
"வாடீ என் செல்லமே… அவர்களுக்கென்ன இவ்ளோ திமிர்… நீ நம்ப வீட்லயே இரு…’ என்றாள்.
"மாப்பிள்ளை நம் வீட்டோடு வந்து விடுவார்…’ என்று நினைத்தாள். இப்படியே ஒருவருக்கொருவர், "ஈகோ’ பிரச்னை பெரிதாகியது. அப்புறம் என்ன… டைவர்ஸ் தான்.
இன்று, வேறு திருமணம் செய்து, "ஜாம் ஜாம்’ என இருக்கிறான் அவளது மாஜி கணவன்.
மாதங்கியின் தாயார், "நாங்கள் மட்டும் என்ன இளிச்சவாயர்களா…’ என்று, ஒரு மாப்பிள்ளை பார்த்து மறுமணம் செய்து வைத்தாள். இன்று, அந்த இரண்டாவது கணவனோ , மாதங்கியை, "ஏய் எச்ச நாயே… உன் முதல் புருஷன் உன்னை எப்படி தொடுவான்…’ என்பது போன்ற, காது கூசும் அளவிற்கு பேசி கொடுமைப் படுத்துகிறான்.
புகுந்த வீட்டில், மச்சினன், மாமியார் யார் இருந்தாலும், வெட்கமே இல்லாமல் பெட்ரூமுக்கு கூப்பிடுவது, வர மறுத்தால், "எச்ச நாய்க்கு வெட்கம் என்னடி வேண்டி கிடக்கு… நீ என்ன பத்தினியா… வாடீ…’ என, கேவலமாக பேசுவதுமாக இருக்கிறான்.
மாதங்கி உண்மையிலேயே நல்ல பெண். தனக்கு கிடைத்த மகாராணி போன்ற வாழ்க்கையை, அம்மா பேச்சை கேட்டு கெடுத்துக் கொண்டதை எண்ணி, தினமும் கண்ணீர் வடிக்கிறாள். தன் ஒரே மகளின் வாழ்க்கையை பாழாக்கி விட்டோமே என்ற வருத்தத்தில், படுத்த படுக்கையாகி விட்டாள் மாதங்கியின் அம்மா.
பெண்ணை பெற்ற தாய்மார்களே… நீங்கள் உங்கள் செல்ல மகள்களுக்கு நல்ல அறிவுரை கொடுங்க அல்லது உங்க திருவாயை மூடிக் கொண்டிருப்பதே சாலச் சிறந்தது!
— தொடரும்.

– ஜெபராணி ஐசக்

source:dinamalar

பின்னூட்டமொன்றை இடுக

Filed under Uncategorized

இளைஞர் பட்டாளமே, “ஜொள்’ விட்டுத் திரியும் ராஷ்மி

பட்டாம்பூச்சிகளின் கதை (1)

சில வாரங்களுக்கு முன், வார இதழ் ஒன்றில், சிறுகதை படித்தேன். கதாநாயகி, தன் கணவன் மீது உயிரையே வைத்திருக்கிறாள்; அவனுக்காகவே வாழ்கிறாள். அப்படியிருந்தும், நாயகன் இன்னொருத்தியின் மீது ஆசை கொண்டு, அவளையும், "வைத்து’க் கொள்ள அனுமதி கேட்கிறான். நாயகியோ, தான் விலகி விடுவதாக சொல்கிறாள். கடைசியில் நாயகன், தன் காதலியால் ஏமாற்றப்பட்டு, மனைவியிடம் சரணடைகிறான்; அவளோ, இவனை ஏற்றுக் கொள்ள மறுக்கிறாள்.
இந்தக் கதை என் உள்ளத்தில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது; காரணம், நான் ஒரு ராட்சஷி. என் கணவர் மட்டும் இப்படிச் செய்தால், குழவிக் கல்லை தலையில் போட்டு கொன்று இருப்பேன்.
உண்மைச் சம்பவங்கள் தான் கதைகளாக உருவாகின்றன. நான் ஒரு இளம் தாய். நான் சந்தித்த இளம் தாய்மார்களின் வாழ்க்கையை உங்களுடன் பகிர்ந்து கொள்வது, பல பெண்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறேன்.
தொடர்ந்து சில வாரங்கள் எழுதப் போகிறேன்… திருமணமாகாத பெண்கள், இளம் தாய்மார், வளர்ந்த பிள்ளைகளுடைய அன்னையர், முதிர் கன்னியர், இளவயதில் கணவரை இழந்தோர் என, சமூகத்தின் அனைத்து மட்டங்களில் உள்ள பெண்களும் படித்து கருத்துக்களை எழுதுங்கள்…
உங்களது கதையை பகிர்ந்து கொள்வதென்றாலும், என் பெயரிட்டு, வாரமலர் இதழுக்கு அனுப்புங்கள்.
– என்றென்றும் உங்களுடன்,
ஜெபராணி ஐசக்.

என் தோழியின் பெயர் ராஷ்மி; அவள் பெயரை மாற்றியுள்ளேன். கிராமத்தில், வசதியான குடும்பத்தில் பிறந்தவள். நிறம், உடற்கட்டு, உயரம் என, எதிலும் குறைவில்லை.
கிராமத்திலேயே, "மாடர்னா டிரெஸ்’ பண்ணுவாள். இரு சக்கர வாகனத்தில் அவள் கல்லூரிக்கு செல்லும் போது, இளைஞர் பட்டாளமே, "ஜொள்’ விட்டுத் திரியும். ராஷ்மியை, "மடக்கு’வதில் நடந்த போட்டியில், நண்பர்களாக இருந்த பலர் எதிரிகளாயினர்.
"ஏய் ராஷ்… நம்ப மாணவர் யூனியன் சேர்மன் உன்னை பிடித்தே தீருவேன்னு ஒத்தக் கால்ல நிக்கிறான் டீ…’ – தோழி.
"அவன் கிடக்கிறான் கருங்குரங்கு… என்னோட கற்பனையே வேறு. நல்ல கலரா, சல்மான், ஷாருக் ரேஞ்சில இருக்கணும்…’ இப்படிச் சொல்வாளே தவிர, யாரையும், "லவ்’ பண்ணவில்லை. இளைஞர் கூட்டமே இவள் பின்னால் அலைவதில் ஏக பெருமை அவளுக்கு!
"என்ன இப்படி… நடிகை மாதிரி பொண்ண வளக்குற… பேன்ட், டீ – ஷர்ட், ஸ்கர்ட் போட்டுக்கிட்டு திரியிறா உம் மக… கொஞ்சமாவது அடக்கம் வேணாமா… இவ போயி ஒரு இடத்துல குப்ப கொட்ட வேணாம்!’ என்ற உறவினர்களின் வசை பாடல்களை பெற்றோர் கண்டு கொள்ளவில்லை.
"அழகு ராணியாக, மாடர்ன் மங்கையாக வலம் வரும் மகள், படிப்பு, விளையாட்டு, நடனம், ஓவியம் என்று, எல்லாவற்றிலும் பிச்சு உதறுகிறாள். எதற்காக அவளை கண்டிக்கணும். என்ன… நம்ம பொண்ணுக்கு கொஞ்சம் திமிரு ஜாஸ்தி… வீட்டு வேலைகள் எதுவுமே கத்துக்க மாட்டேங்கறா… எடுத்தெறிஞ்சி பேசுறா… இது, அழகா இருக்கிற எல்லா பொண்ணுங்களுக்கும் இருக்கும் குணம்தானே விடு… எல்லாருக்கும் நம்ப பொண்ண கண்டு பொறாமை…’ என்பார் தகப்பனார்.
"பொண்ணுக்கு ஏத்த மாதிரி ராஜகுமாரன் வேணுமே!’ என, தேடி, தேடி பிடித்தனர் ஒரு மாப்பிள்ளையை. அழகான, சிவப்பு நிறத்தில், சுருள் சுருள் முடியுடன், இந்தி கதாநாயகன் போல், செல்வ செழிப்புடன் உள்ள ஒரு பிள்ளையை சென்னையில் கண்டதும், தெய்வ அனுக்கிரகம் என்று மகிழ்ந்தனர் பெற்றோர்.
"சென்னையிலுள்ள பெரும்பாலான இளம் பெண்களின் நடவடிக்கைகள் சரியில்லை; கிராமத்து பெண் தான் வேண்டும்!’ என, நினைத்த அபிஷேக் – இவரது பெயரையும் மாற்றியுள்ளேன்; பார்த்தவுடன் ராஷ்மியின் அழகில் மயங்கினான். தடபுடலாக நடந்த நிச்சயதார்த்த விழா, கிராமத்தையே அதிர வைத்தது. காக்ரா சோளியில், மணப்பெண் ராஷ்மி ஒரு கலக்கு கலக்கினாள்; திருமண நாள் நிச்சயிக்கப்பட்டது. இடைப்பட்ட நாட்களில், அபிஷேக் வருவதும், ராஷ்மியை வெளியே அழைத்துக் செல்வதும், மொபைல் போனில், "கடலை’ போடுவதுமாக இருந்தான்.
"ஆகா… நான் மிகவும் கொடுத்து வைத்தவள்; சாமி எனக்கு இப்படி ஒரு வாழ்க்கையை கொடுத்துட்டார்… என் கனவு பலித்தது!’ என மகிழ்ந்தாள் ராஷ்மி.
உலகத்துக்கு பொறுக்குமா…
யாரோ ஒரு விஷமி, இவளை ஒருதலையாக காதலித்து ஏமாந்து போனவன், அபிஷேக்குடன் தொடர்பு கொண்டு, " ராஷ்மி, நிறைய பேருடன் சுத்தினாள்… மிகவும் கெட்டவள்… நடத்தை சரியில்லை!’ என்று, "பற்ற’ வைத்து விட்டான்… அவ்ளோதான்!
நிலைகுலைந்து போன அபிஷேக், "மோசமான உன்னை என்னால் மணக்க முடியாது; திருமணத்தை நிறுத்துங்கள்!’ என்று கத்தினான். அதிர்ச்சியடைந்த ராஷ்மி, கெஞ்சி, கதறி அழுதிருக்கிறாள்; சமாதானம் அடையவில்லை அபிஷேக். இரண்டு, மூன்று பேர் இப்படி போன் செய்யவும், மிகுந்த சந்தேகம் வந்துவிட்டது அவனுக்கு. ஆனாலும், பணக்கார மாப்பிள்ளையை இழக்க மனதில்லாத பெற்றோரும், ராஷ்மியும், அவன் கால்களில் விழுந்து அழுதனர். தப்பே செய்யாத ராஷ்மி, "நான் தப்பு செய்து விட்டேன்… என்னை மன்னிச்சிடுங்க!’ என்று சொல்லும்படி கட்டாயப்படுத்தி இருக்கிறான் அபிஷேக்.
திருமண வரவேற்பும், சினிமா பட ரேஞ்சுக்கு, தடபுடலாக சென்னையில் நடத்தியிருக்கிறான் அபிஷேக்.
"இவளுக்கு வந்த வாழ்வை பாரு!’ என, உற்றார், நண்பர்கள் வெந்து மடிந்தனர்.
ஆரம்பித்தது திருமண வாழ்க்கை —
முதலிரவில் இருந்தே, சந்தேகப் பேய் அபிஷேக்கை ஆட்டிப் படைத்தது. "நீ சுத்தமானவள் இல்லை… நீ ஏற்கனவே கெட்டுப் போனவள்!’ என்றான் அபிஷேக்.
"இல்லைங்க… நான் ஒரு நீச்சல் வீராங்கனை; அதனால்தான் அப்படி இருக்கு. "ஸ்போர்ட்ஸ்’சில் ஈடுபடும் பெண்களுக்கு எல்லாம், "அப்படி’ ஆவது இயற்கை தான்!’ என்றாள் ராஷ்மி.
தினம் தினம் சண்டை; சந்தேகம். டிரைவர், காய்கறிக்காரன் முதல், ராஷ்மியை தொடர்புபடுத்தி சந்தேகம். மனைவி நின்றால், உட்கார்ந்தால், சிரித்தால் கூட சந்தேகம். இவை அனைத்தையும் தாங்கியபடி ராஷ்மி வாழ்கிறாள். விவாகரத்து செய்தால், பெற்றோர் தாங்க மாட்டார்கள்.
கர்ப்பமான ராஷ்மி, "கடவுளே… என் குழந்தையை அவரோட ஜாடையில் கொடுத்து விடு… இல்லையென்றால், எனக்கு வாழ்க்கையே இல்லை!’ என்று கதறி அழுது, ஆண் குழந்தை பிறந்தது.
அபிஷேக் மாதிரி இருந்தும், அவனால் ஒத்துக் கொள்ள முடியவில்லை. "இது, என் குழந்தை இல்லை…’ என்று, காதால் கேட்க முடியாத சொற்களில் அர்ச்சனை செய்தான்; அடுத்தும் கர்ப்பமானாள். நாட்களை எண்ணிப் பார்த்து, "இதுவும் என் குழந்தை இல்லை… இதோட அப்பா யாரு?’ என்று, தினம், தினம் அடி, உதை, சண்டை.
ஆனால், பெண் குழந்தையோ, தேவதை போன்று, அவ்வளவு அழகு. குழந்தைகளுக்காக, இந்த சித்ரவதைகளை சுமந்து, பட்டாம் பூச்சியாய் திரிந்த ராஷ்மி, இன்று ஒரே, "அழுவாச்சியா’ இருக்கிறாள்.
சில தினங்களில், "ஏய்… இன்று நம் வீட்டில் பார்ட்டி… கையில்லாத சோளி, விலை உயர்ந்த சேலை கட்டிக்கோ… பார்லர் போய், தலைமுடி, புருவங்களை அழகு பண்ணிக்கோ!’ என்பான் அபிஷேக்.
பார்ட்டி முடியும்; இரவு வரும். "ஏய் கச்சடா… உன்ன கல்யாணம் பண்ணி என் லைப்பே போச்சுடீ… கிராமத்து நாயே… பிச்சக்காரி… என்னடீ இங்கிலீஷ் பேசுற… உன்னோட உச்சரிப்பு சரியில்லை… சிட்டி பொண்ணுங்க மாதிரி நடந்துக்க தெரியல… என்னோட நண்பர்கள்ட்ட உன்ன அறிமுகம் செய்யவே அவமானமா இருக்கு! என் நண்பர்களை காமப் பார்வை பார்த்து, ஜொள்விட்டயேடீ… நீ திருந்தவே மாட்ட… உன்ன விவாகரத்து பண்றேன்… நீ ஓடிப் போ!’ என, இதுபோன்று, இரவு முழுவதும் ஒரே கொடுமை தான்.
இது, அவ்வப்போது நடக்கும் நிகழ்ச்சியாகி விட்டது, ராஷ்மியின் வாழ்வில்!
"நான், எல்லாவற்றையும் தாங்கிப் போவதால், உன்னை மன்னிச்சி ஏத்துகிட்டு இருக்கிறேன். வேறு ஆளாக இருந்தால், உன்னை வெட்டிடுவான்…’ – இப்படி தினமும், "டார்சர்’ கொடுப்பான் அபிஷேக்.
இவ்வளவையும் தாங்கியபடி, அரண்மனை வீட்டில் இருந்து, தேவதை போன்ற குழந்தைகளை அழைத்துக் கொண்டு, அழுதபடியே ஸ்கூலுக்கு வருவாள்.
"என் குழந்தைகளுக்காக, இந்த அவமானங்களை தாங்கிக்கிறேன். வசதி குறைவாக இருந்தாலும், தெருவில் போகும் அன்பான ஜோடிகளை பார்க்க ஆசையா இருக்கு… என் பின்னால் அலைந்தவர்கள் எத்தனை பேர்… இன்று நான் அனுபவிக்கும் அவமானம் எத்தனை!’ என, வாழ்ந்தும், வாழாவெட்டியாக உள்ள என் தோழி, நொந்து நூலாகிக் கிடக்கிறாள்.
பெற்றோரே… கணவனாக வரப் போகிறவனுக்கு, இப்படி ஒரு சந்தேகம் வந்து விட்டால், குடும்ப கவுரவம், கல்யாணம் நடக்கும் முன் ஏற்பட்டுவிட்ட செலவுகள், பணக்கார வரன் என்றெல்லாம் எண்ணி, பெண்ணின் வாழ்வை பாழடித்து விடாதீர்.
"இந்தக் கல்யாணம் வேண்டாம்!’ என்று அபிஷேக் எவ்வளவோ சொல்லியும், ராஷ்மியின் பெற்றோர், குடும்ப கவுரவம் கருதி, பிடிவாதமாக, கட்டிக் கொடுத்ததால், அவள் மீது தவறு இல்லாவிட்டாலும், அவன் சந்தேகப்படுகிறான். இதனால், அபிஷேக் – ராஷ்மி இருவரின் பெற்றோருக்கு மட்டுமல்ல, யாருக்குமே நிம்மதி இல்லை.
இந்த சந்தேகம், சண்டைகள், பிள்ளைகள் வளர்ந்தும், அவர்கள் மனதிலும் தாயை பற்றிய நல்ல எண்ணத்தை கொடுக்காது; அவர்கள் ராஷ்மியை மதிக்கவே மாட்டார்கள்.
வேண்டாமே இதுபோன்ற விபரீதக் கல்யாணம்.
— தொடரும்.
ஜெபராணி ஐசக்
source :dinamalar

பின்னூட்டமொன்றை இடுக

Filed under Uncategorized

”அந்த” மாதிரி பெண்கள்

தமிழகத்திலும் தலைதூக்குமா தாலிபானிஸம்?!……

ஜூலை 1-ம் தேதி… காலை நேரம். நாகை மாவட்டத்தைச் சேர்ந்த இஸ்லாமிய அமைப்புகளின் முக்கியப் பிரதிநிதிகள் மயிலாடு​துறை போலீஸ் ஸ்டேஷன் முன் திரண்டு இருந்தனர். எஸ்.பி., டி.எஸ்.பி-க்கள், இன்ஸ்பெக்டர்களும் அங்கு கூடியிருக்க, இஸ்லாமியப் பெருமக்கள் முகங்களில் கடுமையான கோபம்!

ஏன்?

‘பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா’ அமைப்பின் மயிலாடுதுறை மாவட்டப் பொறுப்பாளர் ஷபீக் அமீது, ”குத்தாலம் பகுதியில் எங்கள் மதத்தைச் சேர்ந்த சிலர், ‘இங்கு உள்ள ஒரு வீட்டில் விபசாரப் பெண்கள் கூடுகிறார்கள், அவர்களால் மதத்துக்கே கெட்ட பெயர் ஏற்படுகிறது. மற்றவர்களுக்கும் பெரும் இடைஞ்சலாக இருக்கிறது’ என்று ஐக்கிய ஜமாத்துக்குத் தகவல் கொடுத்தனர். ஐக்கிய ஜமாத்தினர் உடனே அந்த வீட்டுக்குப் போய், அங்கு இருந்த பெண்களை அழைத்து வந்து, மயிலாடுதுறையில் உள்ள மன்சூர் கைலி சென்டரில் வைத்து விசாரித்து அறிவுரை சொன்னார்கள்.

இதை யாரோ தப்பாக போலீஸில் தகவல் சொல்லிவிட, அவர்கள் எங்கள் இளைஞர்களையும், கைலி சென்டர் உரிமையாளர் அப்துல் ரஹூப்பையும் போலீஸ் ஸ்டேஷனுக்குக் கொண்டுசென்றனர். அதற்காக நியாயம் கேட்டுத்தான் இங்கே கூடி இருக்கிறோம்…” என்றார்.

”தவறு செய்தவர்களை அறிவுரை கூறித் திருத்த வேண்டிய போலீஸ், நல்லவர்​களைக் குற்றவாளி​களாக சித்திரிக்கிறது. எங்கள் இளைஞர்​​களையும் 60 வயது முதியவரான கைலி சென்டர் உரிமையாளர் அப்துல் ரஹூப்​பையும் கடுமையாகத் தாக்கி இருக்கிறார்​கள். எங்கள் ஆட்களைத் தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் விபசாரத்தில் ஈடுபட்டவர்களையும், அதில் சம்பந்தப்பட்ட பிரமுகர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை என்றால், போராட்டத்தில் இறங்கு​வோம்…” என்றார் முக்கியப் பிரமுகர்களை ஒருங்கிணைக்கும் ஷபியுல்லா.

போலீஸார் நம்மிடம், ”குத்தாலத்தில் உள்ள ஹமீது என்பவன் ஒரு விபசார புரோக்கர். அவனதுவீட்டில் பல ஊர்களில் இருந்தும் பெண்கள் கூடுகிறார்கள். அவர்களுக்கு பானு என்பவள்தான் தலைவி. இரண்டு, மூன்று மாவட்டங்களில் உள்ள முக்கியப் பிரமுகர்கள் பலருக்கும் இவர்கள்தான் பெண்களை அனுப்புகிறார்கள். இதைக் கேள்விப்பட்ட இஸ்லாமிய இளைஞர்கள் சிலர், 30-ம் தேதி காலையில் ஒரு வேனில் குத்தாலம் போயிருக்கிறார்கள். வீட்டில் இருந்த ஹமீது மற்றும் ஆறு பெண்களை அடித்துக் கடத்தி வந்து, மயிலாடுதுறையில் ஒரு வீட்டில்வைத்து கடுமையாகத் தாக்கி இருக்கிறார்கள். அடுத்து, மன்சூர் கைலி சென்டருக்கு கூட்டி வந்து தனி அறையில் வைத்து, பைப்பாலும், குச்சியாலும் பெண்களைக் கடுமையாகத் தாக்கி இருக்கிறார்கள். வழக்கமாக ரோந்து போகும் போலீஸாருக்கு இந்தத் தகவல் தெரிய வரவே, எங்களுக்குத் தகவல் சொன்னார்கள். நாங்கள் சென்று அந்தப் பெண்களையும் ஹமீதையும் மீட்டு மருத்துவ​மனையில் சேர்த்ததோடு, தாக்குதலில் ஈடுபட்ட​வர்களை ஸ்டேஷனுக்கு அழைத்து வந்தோம்…” என்று நடந்த சம்பவங்களைச் சொன்னார்கள்.

மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த ஹமீதிடம் பேசினோம். ”எனக்குப் பழக்கமான பெண்கள் சிலர் என் வீட்டில் ஃபாத்தியா ஓதுறதுக்காக வந்திருந்தாங்க. ஓதிக்கொண்டு இருந்த நேரத்தில், அங்கு வந்த இளைஞர்கள் சிலர், எங்களை அடித்து இப்படிச் செய்துவிட்டார்கள்!” என்றார்.

சிகிச்சையில் இருந்த பானு என்பவர், ”நான் சேலை வியாபாரம் செய்கிறேன். இந்தப் பெண் கவரிங் நகை விற்கிறார். இப்படி ஒவ்வொருத்தரும் ஒரு வியாபாரம் செய்றோம். ஹமீது வீட்டில் அன்னிக்கு ஃபாத்தியா ஓதத்தான் போனோம். எங்களைத் தப்பா நினைச்சு, சிலர் அடிஅடின்னு அடிச்சாங்க. ஆறு பேரில் ஒரு இந்துப் பெண்ணும் இருந்துச்சு. அதை அடிச்சு, ‘நான் இனிமே இப்படிப் பண்ண மாட்டேன்’னு எழுதி வாங்கிட்டு விரட்டிட்டாங்க. இன்னொரு முஸ்லிம் பொண்ணை அவங்க அண்ணன் வந்து அழைச்சுட்டுப் போயிட்டார். எங்க நாலு பேரையும்தான் போலீஸ் வந்து மீட்டுச்சு…” என்றார் மிரட்சியோடு.

எஸ்.பி-யான சந்தோஷ்குமாரிடம் பேசினோம். ”விபசாரம் நடக்கிறது என்றால் அதை எங்களிடம் சொன்னால், நாங்கள் நடவடிக்கை எடுக்கப் போகிறோம். அதை விட்டுவிட்டு, ஆட்களை சேர்த்துக்கொண்டு வீடு புகுந்து தாக்கி, அடைத்துவைத்து சித்ரவதை செய்வதை எப்படி அனுமதிக்க முடியும்? அதனால், ஹமீதின் வாக்குமூலத்தின்படி புகார் எடுத்துக்கொள்ளப்பட்டு, அவர்களைத் தாக்கியவர்களைக் கைது செய்தோம்!” என்றார்.

ஹமீது மற்றும் பெண்கள் மீது விபசார வழக்கு எதுவும் போடப்படாதது இஸ்லாம் பிரமுகர்களைக் கோபப்படுத்தி இருக்கிறது. அதனால் அடுத்த கட்டப் போராட்டங்களை ஆலோசித்து வருகிறார்கள்.

இந்த விவகாரத்தில் தவறு யார் பக்கம்? உண்மையில் அங்கு விபசாரம் நடந்ததா? நடந்திருந்தால், விபசாரம் செய்தவர்களைக் கண்மூடித்தனமாகத் தாக்கியது இளைஞர்களா? விபசாரம் நடந்தும், இத்தனை நாட்களாகக் போலீஸ் ஏன் கண்டு கொள்ளவில்லை?

source:vikatan

பின்னூட்டமொன்றை இடுக

Filed under Uncategorized

சிக்க வைத்த சி.பி.ஐ., சிங்கிரி அடிக்கும் தய ாநிதி

புதுடில்லி:"2ஜி’ ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடு விவகாரத்தில், தயாநிதிக்கும் பங்கு உள்ளது என, சி.பி.ஐ., அம்பலப்படுத்தியுள்ளது. "2004ம் ஆண்டு, தயாநிதி, தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக இருந்தபோது, ஏர்செல் நிறுவனபங்குகளை மலேசியநிறுவனத்திற்கு விற்க, அதன் உரிமையாளர் சிவசங்கரனுக்கு நெருக்கடி கொடுத்துள்ளார். அதற்கான அடிப்படைமுகாந்திரம் உள்ளது’ என, சி.பி.ஐ., நேற்று சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த விரிவானஅறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

"2ஜி’ ஸ்பெக்ட்ரம் வழக்கில் இதுவரையில் நடந்துள்ள விசாரணை விவரங்கள் அடங்கிய 71 பக்கங்கள்கொண்ட அறிக்கையை, சி.பி.ஐ., நேற்று சுப்ரீம்கோர்ட்டில் தாக்கல் செய்தது.இந்த வழக்கு விசாரணையை கண்காணித்துவரும் நீதிபதிகள் ஜி.எஸ்.சிங்வி மற்றும் ஏ.கே.கங்குலி ஆகியோர் அடங்கிய "பெஞ்ச்’ முன், சி.பி.ஐ., மூத்த வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால், அந்த அறிக்கையை அளித்தார்.

அதில் அவர் கூறியிருந்ததாவது:கடந்த 2004 -2007 காலகட்டத்தில் மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக தயாநிதி இருந்தார். அப்போது, ஏர்செல் தனது சேவையை விரிவாக்கம் செய்வதற்காக பல்வேறு இடங்களுக்கான உரிமம் கேட்டு தொலைத் தொடர்புத் துறை அமைச்சகத்துக்கு விண்ணப்பம் செய்தது.ஏர்செல் நிறுவனத்தோடு மேலும் இரு நிறுவனங்களும்உரிமம் கேட்டு விண்ணப்பித்தன. உரிமம் வழங்குவதற்காக, ஏர்செல் நிறுவனத்திடம், தேவையில்லாத, முக்கியத்துவம் இல்லாத கேள்விகள் கேட்கப்பட்டன. விசாரணைகள் நடத்தப்பட்டன.ஆனால், இந்த நடைமுறையை மற்ற இரு தொலைத்தொடர்பு நிறுவனங்களிடம், அமைச்சகம் மேற்கொள்ளவில்லை. அவர்களுக்கு உடனடியாக உரிமம் வழங்கப்பட்டுவிட்டது. அதே நேரம், ஏர்செல்லுக்கு உரிமம் வழங்குவதில் இழுத்தடிப்பு நடந்தது.

இவ்விவகாரத்தில் சி.பி.ஐ., யின் முதற்கட்ட விசாரணையில், தொலைத் தொடர்புத் துறையின் முன்னாள் அமைச்சர், ஏர்செல் நிறுவனத்திற்கு நிர்பந்தம் கொடுத்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் நிறுவனத்திற்கு ஏர்செல் நிறுவனத்தின் பங்குகளைவிற்கும்படி, ஏர்செல்லின் அப்போதைய அதிபர் சிவசங்கரன் நெருக்கடிக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறார்.அந்த நெருக்கடியின் விளைவாக, சிவசங்கரன், ஏர்செல் பங்குகளை மேக்சிஸ் நிறுவனத்திற்கு விற்ற பின்தான், அதாவது 2006, மார்ச் மாதத்திற்கு பின்தான், ஏர்செல் நிறுவனத்திற்கான உரிமங்கள் வழங்கும் நடவடிக்கைகள் துவங்கின. இறுதியில் மேக்சிஸ் நிறுவனத்திற்கு ஏர்செல் பங்குகளை விற்பதைத் தவிர அவருக்கு வேறு வழி தெரியவில்லை.

மேக்சிஸ் நிறுவனத்திற்கான, "இன்டென்ட்’ 2006 நவம்பரில் அளிக்கப்பட்டு, டிசம்பரில் உரிமம் வழங்கப்பட்டு விட்டது. இந்த பரிமாற்றத்தில் என்ன நடந்தது என்பது குறித்து தற்போது சி.பி.ஐ., விசாரித்து வருகிறது. அதேநேரம், சிங்கப்பூர் வங்கி மூலம், நடந்த இறுதிக் கட்ட பணப் பரிமாற்றங்கள் குறித்தும் விசாரித்து வருகிறது. வரும் 13ம் தேதி அந்த வங்கி விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளது.இவ்வாறு சி.பி.ஐ., தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், தயாநிதி,முன்னாள் செயலர் நிருபேந்திர மிஸ்ரா, சி.பி.ஐ.,க்கு அளித்த விளக்கத்தில் ," தயாநிதி , தனது அண்ணன் கலாநிதி நிறுவனத்திற்கு சாதகமாக, ஏர்செல் நிறுவனத்தை குறிவைத்தார்’ என்று தெரிவித்துள்ளார். இவ்வழக்கை, வரும் 11ம் தேதிக்கு சுப்ரீம் கோர்ட் ஒத்தி வைத்துள்ளது.

* ஏர்செல் நிறுவனத்தை மலேசியாவின் மேக்சிஸ் நிறுவனம் கைப்பற்றியது.
* இதற்காக, ஏர்செல் நிறுவன தலைவர் சிவசங்கரனை தயாநிதி மாறன் மிரட்டினார் என்பது குற்றச்சாட்டு.
* ஏர்செல் நிறுவனம் கைமாறியதும், சன் குழுமம் நடத்தும் "சன் டி.டி.எச்’ நிறுவனத்தில் மேக்சிஸ் நிறுவனம் 600 கோடி ரூபாய் முதலீடு செய்தது.
* "2ஜி’ ஊழல் விசாரணையை, வரும் ஆகஸ்ட் 31ம் தேதிக்குள் முடித்துக்கொள்வதாக சி.பி.ஐ., தரப்பில் மூத்த வக்கீல் வேணுகோபால், சுப்ரீம் கோர்ட்டில் தெரிவித்தார்.
* கடந்த 2001 முதல் 2008 வரையில், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடந்த குளறுபடிகள் பற்றிய விசாரணை, செப்டம்பர் 30ம் தேதிக்குள் முடிந்து விடும் என்றும் தெரிவித்தார்

source:dinamalar

பின்னூட்டமொன்றை இடுக

Filed under Uncategorized

இரவுநேர உடையணிந்து கவர்ச்சிகரமாக ஸ்கைபி ல் பேசி பணத்தை கறந்த பெண்: திடுக்கிடும் தகவல ் !

ஸ்கைபில் பேசி ஏமாற்றி கோடிக்கணக்கில் பணத்தை கறந்த பெண்: திடுக்கிடும் தகவல் !

வெளிநாடுகளில் குறிப்பாக மேலைத்தேய நாடுகளில் வாழ்ந்து வருகின்ற இலங்கைத் தமிழர்களை ஏமாற்றி தாயகத்தைச் சேர்ந்த தமிழ் யுவதி ஒருவரால் பேஸ் புக் சமூக இணைப்பு இணையத் தளம் மூலமாக குறைந்தது ஒரு கோடியே நாற்பது இலட்சம் ரூபாய் பணம் மோசடி செய்யப்பட்டு உள்ளது என அறியப்படுகிறது. இப் பெண்ணின் பெயர் தர்ஷனா எனத் தெரிவிக்கப்படுகிறது. கொழும்பில் இருந்து முதலில் பேஸ் புக் மூலம் தொடர்புகளை ஏற்படுத்தும் இவர் பின்னர் ஸ்கைப் ஊடாக சுவிஸ் லண்டன் எனப் பல நாடுகளில் உள்ள தமிழர்களைத் தொடர்புகொண்டு தான் தாய் தந்தை இழந்தவர் என்றும் பிரித்தானியாவுக்கு மாணவர் விசாப் பெற முயற்சிப்பதாகத் தெரிவித்து, அதற்காக வங்கியில் பணத்தைப் போடால் தான் இலகுவாக விசாவைப் பெறமுடியும் எனக் கூறி பலர் தலையில் முழகாய் அரைத்துள்ளார். இவர் ஸ்கைப் ஊடாகப் பேசும்போது இரவுநேர உடையணிந்தும், மிகவும் கவர்ச்சிகரமாகவும் பேசுவதால், பலர் நம்பி பணத்தை வாரி இறைத்துள்ளனர்.

இவர் பல பெயர்களிலும் பேஸ் புக்கில் நடமாடுகின்றார். யது கார்த்தி என்கிற பெயரிலும் பேஸ் புக் கணக்கு வைத்து இருக்கின்றார். குறித்த பெண் தன் கைகளை தானே வெட்டி காயப்படுத்தி அதனை வெப் காம் கமரா மூலம் காட்டிக் கூட சிலரிடம் பணம் கேட்டுள்ளார். இதனை நம்பி பலர் இவருக்கு பணத்தைக் கொடுத்துள்ளனர். வங்கியில் பணத்தைப் போட்டுக் காட்டி, மாணவர் விசா கிடைத்தபின்னர் அப்பணத்தை திருப்பித் தருவேன் என்றும் இவர் கூறிய ஆசைவார்த்தைகளை நம்பிய பலர் இவரது வங்கிக் கணக்கில் பணத்தை இட்டுள்ளனர். பணம் கிடைத்தவுடன் குறித்த நபர்களுடனான தொடர்பை இவர் கட் பண்னிவிடுவார். ஸ்கைப் திரையில் தோன்றவும் மாட்டார் ! இதுவே இவரின் வாடிக்கை !


யுவதியின் மோசடி நடவடிக்கைகளுக்கு தமிழ் ஊடகவியலாளர் ஒருவர்தான் சூத்திரதாரி என்றும் கூறப்படுகிறது. இப் பெண்ணின் கணக்குக்கு வரும் பணத்தை உடனடியாக தனது கணக்குக்கும் மாற்றும் நபரும் இவரே எனத் தெரிவிக்கப்படுகிறது. இந்நபரின் பெயர் ஜெய்சன் என்றும் சொல்லப்படுகிறது.

கட்டிலில் படுத்திருந்து, கைகளை பிளேடால் வெட்டி, இரவு நேர உடையணிந்து, குளைந்து பேசி, இவ்வாறு வித்தியாசமான கோணங்களில் இவர் பணப்பறிப்பு கொடிகட்டிப் பறந்துள்ளது. தற்போதும் ஒரு நபர் இவர் கதையில் ஏமாந்து, கொழும்பில் உள்ள தனது உறவினர் ஒருவரூடாக இப் பெண்ணின் வங்கிக் கணக்கில் பணத்தைப் போடச் சொல்லியுள்ளார். குறிப்பிட்ட உறவினர் பணத்தை வங்கியில் போடச் சென்றவேளை அவர் அப்பெண்ணின் வங்கிக் கணக்கில் சுமார் 1கோடியே 40 லட்சம் காசு இடப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. சந்தேகமுற்ற அவர் விடையத்தை பிரித்தானிய நபருக்கு தெரிவிக்க இப் பெண் குறித்து அவர் சில விசாரணைகளை நடத்தியுள்ளார். இதேவேளை இப் பெண்ணால் ஏற்கனவே ஏமாந்த மற்றுமொரு நபரையும் இவர் எதேச்சையாகச் சந்தித்துள்ளார்.

இவர்கள் கலந்துரையாடலில் வெளியான செய்திகளையே நீங்கள் தற்போது பார்க்கிறீர்கள். ஊரில் பல குடும்பங்கள் கஷ்டப்பட்டும், பல சிறுவர்கள் பெற்றோரை இழந்து தவிக்கும் நிலையில் அவர்களுக்கு உதவ சொற்பமான சிலரே முன்வருகின்றனர். ஆனால் அழகா இருந்தால் இல்லை கவர்ச்சி வார்த்தைபேசினால் மயங்கி உதவ பலர் இருக்கிறார்கள் போலும் !

source:athirvu

1 பின்னூட்டம்

Filed under Uncategorized