Daily Archives: ஜூலை 20, 2011

தமிழ் மண்ணிற்கும் தமிழ்த்தாய்கும் என்ற ும் துரோகம் இழைக்கமாட்டோம்.

கிளிநொச்சியில் நடைபெற இருந்த மகிந்தவின் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் ஒரே மேடையில் இசை நிகழ்ச்சி நடாத்துவதற்கு தமிழகத்தில் இருந்து சென்றுள்ளதாக தகவல் வெளிவந்துள்ள நிலையில் தமிழகத்தில் உள்ள தமிழ் உணர்வாளர்களது வேண்டுகோள்களை ஏற்று கொழும்பில் இருந்து திரும்ப உள்ளதாக மனோ தெரிவித்துள்ளார். தமிழ்த்திரையுலக பின்னணிப் பாடகர்களான மனோ சுசித்திரா கிறிஸ் ஆகியோர் கொலைவெறியன் மகிந்தராசபக்சவுடன் ஒரே மேடையில் ஏறி இசைநிகழ்ச்சியில் கலந்து கொள்ள கிளிநொச்சி சென்றுள்ளதாக பரபரப்பாக தகவல்கள் வெளிவந்திருந்தது. இதனையடுத்து அதிர்ச்சியும் ஆத்திரமும் அடைந்த தமிழ் உணர்வாளர்கள் துரிதமாக களத்தில் இறங்கி சிங்களனின் சதி முயற்சியை தடுத்துநிறுத்தியுள்ளனர்.

இலங்கை சென்றிருந்த தமிழக பாடகர்களை தனது வலையில் சிக்கவைக்க மகிந்தர் போட்ட நாடகத்தை நேற்றைய தினம் அதிர்வு இணையம் வெளியிட்டது. இதனை அடுத்து தாய் தமிழகத்தில் உள்ள பல உணர்வாளர்கள் பாடகர்களைத் தொடர்புகொண்டு நிலையை எடுத்துரைத்துள்ளனர். இதன் காரணமாக தாம் உடனே தமிழகம் திரும்ப இருப்பதாக மனே சற்று முன்னர் தெரிவித்துள்ளார் என அதிர்வு இணையம் அறிகிறது. மதிமுக கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ நாம்தமிழர் கட்சியின் முதன்மை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் உள்ளிட்ட தமிழ்த்தேசிய உணர்வு சக்திகள் இவர்களை தொடர்பு கொண்டு தமது எதிர்ப்பினை நேரடியாகத் தெரிவித்துள்ளதுடன் இந்த நிகழ்வின் பின்னணியில் தீட்டப்பட்டிருக்கும் சதியைப்பற்றியும் எடுத்துக் கூறியுள்ளனர்.

இதனை ஏற்றுக் கொண்ட இவர்கள் கொழும்பில் இருந்து உடனடியாக நாடு திரும்ப உள்ளதாகத் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக கொழும்பில் இருந்து ஊடகங்களிற்கு தகவல் தெரிவித்த பின்னணிப்பாடகர் மனோ அவர்கள் தமிழ் மண்ணிற்கும் தமிழ்த்தாய்கும் எப்போதும் துரோகம் செய்யமாட்டோம் என தெரிவித்துள்ளார். இந்த நிகழ்வு தொடர்பாக தமக்கு முழுமையான விபரங்கள் தெரியப்படுத்தப்படவில்லை எனவும் முத்தவர்களது(தமிழ் உணர்வாளர்கள்) வேண்டுகோளை ஏற்று கிளிநொச்சி செல்லாது தமிழகம் திரும்ப உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கலையரங்கம் திறப்பு விழா நிகழ்ச்சியொன்றில் பாடவேண்டும் என்று சொல்லித்தான் எங்களை அழைத்து வந்தனர். இங்கு வந்த பிறகுதான் பிரச்சினை எங்களுக்கு தெரிய வந்தது. நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டாம் என்று நடிகர் சங்கத்தினர் தொடர்பு கொண்டு பேசினார்கள்.

இதையடுத்து அந்த நிகழ்ச்சியை ரத்து செய்து விட்டோம். விமான நிலையத்துக்கு திரும்பிக்கொண்டு இருக்கிறோம். இன்று இரவு அல்லது நாளை காலை விமானத்தில் சென்னை வந்து விடுவோம்.இவ்வாறு அவர் கூறினார்.

யாழிலும் கிளிநொச்சியிலும் தமிழக பாடகர்கள் வருவதாக இராணுவம் ஒலிபெருக்கி மூலம் அறிவித்தது மண்கவ்வியுள்ளது.

source:athirvu

Advertisements

பின்னூட்டமொன்றை இடுக

Filed under Uncategorized

ரஞ்சிதா தான் படுக்கை அறை காட்சியை எடுத்த து

படுக்கை அறை காட்சியை எடுத்தது ரஞ்சிதா தான்: நித்தியின் வழக்கறிஞர் ஸ்ரீதர்

nithi-ranji-1.jpg2010 மார்ச் முதல் வாரத்தில் வெளியான நித்யானந்தா – நடிகை ரஞ்சிதா சம்பந்தப்பட்ட வீடியோ காட்சிகள் பெரும் அதிர்வை உண்டாக்கின. இதையடுத்து நித்யானந்தா தலைமறைவானார். பின்னர் கைது செய்யப்பட்டார். ஜாமினில் வெளியே உள்ள நித்யானந்தா கடந்த 13.07.2011 அன்று சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய நித்யானந்தா நக்கீரன் உள்ளிட்ட சில ஊடகங்கள் வழக்கறிஞர் ஸ்ரீதர் மூலம் பணம் கேட்டு மிரட்டியதாக பொய் குற்றச்சாட்டை கூறினார்.

இதையடுத்து, ‘நக்கீரன் வெளியிட்டது உண்மையான வீடியோ காட்சிகள்தான் என்பதில் உறுதியாக இருக்கிறோம். சட்டப்பூர்வமாகவும் இதனை நிரூபிப்போம். வீடியோ காட்சிகள் போலியானவை என்று சொல்லும் நித்யானந்தாவும் ரஞ்சிதாவும் நீதிமான்கள், சட்ட வல்லுநர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், தடயவியல் நிபுணர்கள், பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட 100 பேர் முன்பாக இந்த வீடியோ காட்சிகள் போலியானவை என்பதை நிரூபிக்கத் தயாரா என்று நக்கீரன் பகிரங்கமாக சவால் விடுகிறது.

இந்த சவாலை எதிர்கொண்டு, தங்களின் பரிசுத்தத் தன்மையை நிரூபிக்க நித்யானந்தாவும் ரஞ்சிதாவும் தயாரா?’ என்று நக்கீரன் கூறியிருந்தது.

இந்நிலையில் சென்னையில் 18.07.2011 அன்று செய்தியாளர்களை சந்தித்த நித்யானந்தாவின் வழக்கறிஞராக இருந்த ஸ்ரீதர்,

எனக்கும் நக்கீரனுக்கும் எந்த தொடர்பும் இல்லை. நித்யானந்தா தொடர்பான வழக்கை நான்தான் நக்கீரன் மீது தொடர்ந்தேன். நான் எந்தக் கட்சியையும் சாராதவன். நித்யானந்தா எனக்கு வந்து ஒரு கிளைண்ட்.

நித்தியானந்தாவுக்கு யாரோ தவறான ஒரு அட்வைஸ் கொடுத்திருக்கிறார்கள். தேவையில்லாமல் அவர் நக்கீரன் மற்றும் சில ஊடங்களை மட்டும் குற்றம் சாட்டியிருக்கிறார். அன்றைக்கு ஆளும் கட்சி, எதிர்க்கட்சி உள்பட அனைத்து ஊடங்களும் நித்யானந்தா பற்றிய செய்திகளை வெளியிட்டது. யாரும் நித்யானந்தாவை மிரட்டவில்லை.

இந்த சிடி விஷயம் பற்றி தெரிந்தது 5 பேர்தான். நித்யானந்தா, ரஞ்சிதா, லெனின் தர்மானந்தா, ஆர்த்திராவ். நித்யானந்தா என்னிடம் சொல்லும்போது, சிடி உண்மையானது என்றார். அப்போது அட்வைஸ் பண்ணினோம். உண்மையான சிடியாக இருந்தால் தாமதப்படுத்த வேண்டாம். கன்சல்டிங் பாட்னர் என்று சொல்லிவிட்டு கேஸில் இருந்து தப்பிக்க பாருங்க. அதைவிட்டுட்டு ரொம்ப டீப்பா போனீங்கன்னா டிரபுள் வரும். அதற்கேற்ற மாதிரி அவர் ஒத்துக்கிட்டார்.

இதையடுத்து ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அதில் சிடியில் இருந்தது நான்தான் என்று ஒப்புக்கொண்டார். அப்போது யோக நிலையில் இருந்ததாக கூறியிருந்தார். அதைப்போல ரஞ்சிதாவும், ஆமாம் நான் சாமிக்கு சேவை செய்வேன் என்று பேட்டி கொடுத்தார்.

தற்போது சிடி பொய் என்று கூறுகின்றனர். இது வழக்கை திசை திருப்பும் செயல். அந்த சிடியை பார்த்தால் நித்யானந்தா எழுந்து கையை நீட்டி அங்கபாரு என்று சொல்லும்போது, ரஞ்சிதா அதுவெல்லாம் ஒன்றும் இல்லை படு என்று சொல்லுகிற மாதிரி இருக்கும். அதை உன்னிப்பா கவனித்தால் தெரியும். கண்டிப்பா ரஞ்சிதா படுக்கை அறை காட்சியை, போக்கஸ் லைட் நடுவில் எடுத்திருக்காங்க அப்படியின்னா வேர்க்க விறுவிறுத்துதான் எடுத்திருப்பாங்க.

அப்போது நான் வழக்கறிஞராக சொல்லிவிட்டேன். ரஞ்சிதாதான் எடுத்திருக்காங்க. ரஞ்சிதாவிடம் சரண் அடைவதுதான் பெஸ்ட். ரஞ்சிதாவுக்கு பணத்தை செட்டில் செய்து நித்யானந்தா அந்த அட்வைஸை மட்டும் கரெக்டா செய்துவிட்டார் என்று கூறினார்

source:nakkheeran

பின்னூட்டமொன்றை இடுக

Filed under Uncategorized