Daily Archives: ஜூலை 1, 2011

கூகுள்ளை பின்னுக்குத் தள்ளிய பேஸ்புக்

கூகுள் நிறுவனர்களை பின்னுக்குத் தள்ளிய ஜூக்கர்பெர்க்!

கூகுள் நிறுவனர்கள் செர்ஜி பிரின் மற்றும் லாரி பேஜை விட இன்று பெரிய பணக்காரராக மாறியுள்ளார் பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர் பெர்க்.

இன்று அவரது சொத்து மதிப்பு 18 பில்லியன் டாலர். கூகுள் நிறுவனர்களின் சொத்து மதிப்பு 17 பில்லியன் டாலர்கள்தான்.

இதன் மூலம் டெக்னாலஜி வர்த்தக உலகின் 3 வது பெரிய பணக்காரராக மாறியுள்ளார் மார்க் ஜூக்கர்பெர்க்.

ஜிஎஸ்வி கேபிடல் கார்ப் நிறுவனம் பேஸ்புக்கில் 225000 பங்குகளை தலா 29.28 டாலருக்கு வாங்கியதன் மூலம் இந்த புதிய அந்தஸ்தை ஜூக்கர்பெர்க் பெற்றுள்ளார்.

இதன் மூலம் போஸ்புக்கின் இன்றைய மதிப்பு 70 பில்லியன் டாலர்களாக உயர்ந்துள்ளது.

தொழில்நுட்பத் துறையில் அதிக சொத்துமதிப்பு கொண்டவர் என்ற முறையில் இன்றும் முதலிடம் வகிப்பவர் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ்தான். அவரது சொத்துமதிப்பு 56 பில்லியன் டாலர்கள்

source:voicetamil

Advertisements

பின்னூட்டமொன்றை இடுக

Filed under Uncategorized

3rd அம்பயரும் சூதாட்டத்தில் சிக்கியுள்ளா ரோ?

Singh-Dhoni-large.jpg

பார்படாஸ்: பார்படாஸ் டெஸ்டில் இந்திய கேப்டன் தோனி, "நோ-பாலில்’ அவுட்டானது தெரியவந்துள்ளது. இதற்கு "டிவி ரீப்ளேயில்’ நேர்ந்த தவறு தான் காரணம் என்பது அம்பலமாகியுள்ளது.
இந்தியா அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க, வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ளது. முதல் டெஸ்டில் இந்திய அணி வெற்றி பெற்றது. இதில், இந்திய அணிக்கு எதிராக தீர்ப்புகள் வழங்கப்பட்டன. விராத் கோஹ்லி (பந்து இடுப்பில் பட்டது), ரெய்னா (பந்து பேட்டில் படவில்லை), கேப்டன் தோனி ("நோ-பாலில்’ அவுட்) ஆகியோருக்கு தவறான அவுட் கொடுக்கப்பட்டது.
மீண்டும் மோசம்:
தற்போது இரு அணிகள் இடையிலான இரண்டாவது டெஸ்ட், பார்படாசில் நடக்கிறது. இதன் முதல் இன்னிங்சில் இந்திய அணி 38 ரன்னுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இந்நிலையில் இணைந்த லட்சுமண், ரெய்னா ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்டது. அப்போது 53 ரன்கள் எடுத்திருந்த ரெய்னாவுக்கு, பந்து தொடையில் பட்ட நிலையில் தவறாக "அவுட்’ கொடுக்கப்பட்டது.
சந்தேகத்துக்குரிய "அவுட்’:
இப்போட்டியின் 59வது ஓவரின் கடைசி பந்தை எட்வர்ட்ஸ் வீசினார். இதை தோனி (2 ரன்) "மிட் ஆன்’ திசையில் தூக்கி அடித்தார். அதை அங்கு நின்றிருந்த சந்தர்பால் "கேட்ச்’ செய்தார். இருப்பினும் எட்வர்ட்ஸ் வீசிய பந்து "நோ-பாலாக’ இருக்கலாம் என்று, அம்பயர் இயான் கோல்டு சந்தேகப்பட்டார்.
"ரீப்ளேயில்’ தவறு:
இதனால், தோனியை சற்று நிற்கச் சொல்லிவிட்டு, "டிவி’ அம்பயரிடம் முறையிட்டார். இங்கு தான் தவறு ஏற்பட்டுள்ளது. அதாவது எட்வர்ட்ஸ் வீசிய சந்தேகத்துக்குரிய பந்தை "ரீப்ளே’ செய்து பார்க்காமல், வேறொரு பந்துவீச்சை "ரீப்ளே’யில் காண்பித்துள்ளனர். அதில், எட்வர்ட்ஸ் "கிரீசுக்கு’ வெளியே கால் வைக்கவில்லை. இதன்படி தோனிக்கு "அவுட்’ தரப்பட்டது. உண்மையில் தோனி அவுட்டான பந்து, "நோ-பால்’ தான் என்பது தற்போது தெரியவந்துள்ளது. இந்த தவறுக்கு "ரீப்ளே’ ஒளிபரப்பியவரே காரணம். இவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தோனி வெளியேறிய சிறிது நேரத்தில், பேட்டிங்கில் மற்றவர்களும் சொதப்ப, இந்திய அணி 201 ரன்னுக்கு ஆல் அவுட்டானாது. ஏற்கனவே "டி.ஆர்.எஸ்.,’ முறை இல்லாமல், இந்திய அணி அதிகமாக பாதிக்கப்பட்டு கொண்டுள்ளது. இந்நிலையில் "ரீப்ளே’ ஒளிபரப்பு செய்பவர்களும், தங்கள் பங்குக்கு இந்திய அணியை சோதிக்க துவங்கியுள்ளது, பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

மழையால் ஆட்டம் பாதிப்பு
இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின், இரண்டாவது நாள் ஆட்டம் பெரும்பாலும் மழையால் பாதிக்கப்பட்டது. நேற்று முன்தினம் மொத்தம் 25.3 ஓவர்கள் மட்டும் தான் வீசப்பட்டது. மழையால் போட்டி நிறுத்தப்பட்ட போது, வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுக்கு 98 ரன்கள் எடுத்து, 103 ரன்கள் பின் தங்கியிருந்தது.

source:dinamalar

பின்னூட்டமொன்றை இடுக

Filed under Uncategorized