Monthly Archives: ஜூன் 2011

அமெரிக்கா,கனடாவில் வசிக்கும் நண்பர்களுக ்கு,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

அமெரிக்கா,கனடாவில் வசிக்கும் நண்பர்களுக்கு இலவச தமிழ் வேதாகமம்

”நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்” எனச் சொல்லி உலகத்திற்கு ஒளியாய் வந்த இயேசுகிறிஸ்துவை இன்னும் அறியாதவரா நீங்கள்?
மறுபடியும் பிறந்த அனுபவம் இன்னும் இல்லாத நண்பரா நீங்கள்?
கிறிஸ்தவ மார்க்கத்தைப் பற்றி மேலும் அறிய விரும்புகிறீர்களா?
அமெரிக்கா மற்றும் கனடாவில் வசிக்கும் கிறிஸ்தவர்களல்லாத ஆனால் கிறிஸ்தவ மார்க்கத்தை பற்றி மேலும் அறிய விரும்பும் தமிழ் நண்பர்களுக்கு இலவசமாக தமிழ் வேதாகமங்களை பரிசளிக்க விரும்புகிறோம்.
கீழ்கண்ட மின்னஞ்சலுக்கு உங்கள் வேண்டுகோளை அனுப்பினால் மேற்கொண்டு விவரங்கள் உங்களுக்கு அனுப்பப்படும்.

thewayofsalvation

இத்தகவலை கிறிஸ்தவரல்லாத உங்கள் மற்ற நண்பர்களுக்கும் தெரிவிக்கலாம். கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக.

From "The way of salvation" ministry we are glad to issue free tamil bibles for non Christians /non believers who are interested in learning more about Jesus Christ.
Right now we are taking requests only from residents of USA and Canada.
Please send us a email at

thewayofsalvation

We will contact you with further information.
Please share this information with your non-christian tamil friends.
God bless you all.

source:.thewayofsalvation

Advertisements

பின்னூட்டமொன்றை இடுக

Filed under Uncategorized

டில்லி திகார் சிறையில் கருணாநிதி;!!

சென்னை: ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் கைதான, கனிமொழி ஜாமின் மனுவை, சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்ததைத் தொடர்ந்து, திகார் சிறையிலிருக்கும் மகளை சந்திப்பதற்காக, தி.மு.க., தலைவர் கருணாநிதி, இன்று காலை 8.30மணியளவில் ஜெட் ஏர்வேஸ் விமானம் மூலம் டில்லி சென்றார்.

சுப்ரீம் கோர்ட்டில், கனிமொழியின் ஜாமின் மனு நேற்று தள்ளுபடி செய்யப்பட்ட தகவல் அறிந்த கருணாநிதி, மிகுந்த மனவேதனை அடைந்தார். முன்னாள் அமைச்சர்களை, கோபாலபுரம் வீட்டிற்கு வரவழைத்து ஆலோசனை நடத்தினார். பின், சிறையிலிருக்கும் மகளை சந்திக்க டில்லி செல்ல முடிவு செய்தார். நேற்று, நிருபர்களை சந்திப்பதை தவிர்த்தார். கருணாநிதி, இன்று காலை, 8.30 மணிக்கு, ஜெட் ஏர்வேஸ் விமானம் மூலம் டில்லி சென்றார். அவருடன், முன்னாள் அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, வேலு, கருணாநிதிபி.ஏ.சண்முகநாதன், தலைமையிடத்து செயலாளர்காஜாமொகைதீன் மற்றும் பாதுகாப்பு பிரிவை சேர்ந்த பாண்டியன், வினோதன், கணேசன்,டாக்டர் பிரவீன் உதவியாளர் நத்தியானந்தம் உட்பட10 பேர் செல்கின்றனர்.

டில்லி செல்லும் கருணாநிதி, தனியார் ஓட்டலில் தங்குகிறார். திகார் சிறைக்கு சென்று, மகள் கனிமொழியை சந்தித்து பேச உள்ளார். மகளை வெளியில் கொண்டு வர, அடுத்து என்ன செய்வது என, சட்ட வல்லுனர்களை கலந்தாலோசிக்கவும் முடிவு செய்துள்ளார். காங்கிரஸ் தலைவர்களையும் சந்தித்து பேச முடிவு செய்திருப்பதாகவும், அவர் திரும்பி வரும் தேதி முடிவாகாததால், ஓரிரு நாட்கள் டில்லியிலே தங்கியிருப்பார் என்றும் கூறப்படுகிறது.

source:dinamalar

பின்னூட்டமொன்றை இடுக

Filed under Uncategorized

சீனாவின் அட்டூழியம்

தரையையும் தரவில்லை தண்ணீரையும் விடவில்லை: சீனா அட்டூழியம்

இமயமலையில் இருந்து இந்தியாவுக்கு ஏராளமான தண்ணீரை கொண்டு வரும், பிரம்மபுத்திரா நதியை கபளீகரம் செய்யும் முயற்சியில், தற்போது சீனா ஈடுபட்டு வருகிறது. இதனால் அசாம், அருணாச்சல பிரதேச மாநிலங்களின் விவசாயம் பெரிதும் பாதிக்கப்படும்.

பிரம்மபுத்திரா நதி, திபெத் பகுதியில் இருக்கும் இமயமலையில் தோன்றி, இந்தியாவுக்குள் அருணாச்சல பிரதேசம், அசாம் வழியாக ஓடி, வங்கதேசத்தில் நுழைந்து கடலில் கலக்கிறது. 2,800 கி.மீ., ஓடும் இந்த ஆறு இந்தியாவின் பெரிய ஆறுகளில் ஒன்று. 1,700 கி.மீ., தூரம் வரை திபெத் மலைப்பகுதிகளிலே இந்த ஆறு பாய்கிறது. பல கிளை ஆறுகளைக் கொண்ட பிரம்மபுத்திரா, சில இடத்தில் 10 கி.மீ., வரை அகலம் கொண்டது. இந்தியாவின் அருணாச்சல பிரதேசம், அசாம் மாநிலங்களின் விவசாயம், பிரம்மபுத்திரா நதியை நம்பியே இருக்கிறது.சீனாவின் கட்டுப்பாட்டில் திபெத் இருப்பதால் பிரம்மபுத்திரா பாயும் பகுதியில் முன்பு சீனா அணையை கட்டியது. இது நீர் மின் திட்டத்துக்காக கட்டப்பட்டது என சீனா தெரிவித்தது. இது ஒருபுறம் இருக்க, அணையிலிருந்து புதிய பாதை அமைத்து நீர் ஆதாரத்தை சீனாவுக்கு திருப்பும் முயற்சியும் மெல்ல நடந்து வருகிறது. 5,400 கோடி ரூபாய் செலவில் இதற்கான பணிகள் நடக்கின்றன. ஆண்டுதோறும் இந்தியாவுக்கு வரும் நீரின் அளவு குறைந்து வருவதே இதற்கு சாட்சி. இதே நிலை நீடிக்குமானால் இந்தியாவுக்கு வரும் மொத்த நீரும் திருடப்பட்டு விடும்.

சீனாவின் இந்த திட்டத்தை தடுத்த நிறுத்த, அசாம் முதல்வர் தருண் கோகோய், வெளியுறவுத்துறை அமைச்சர் கிருஷ்ணாவை சந்தித்து வலியுறுத்தினார். ஆனால் இது போன்ற முயற்சிகளில் ஈடுபடவில்லை என சீனா தெரிவித்ததாக கிருஷ்ணா கூறியுள்ளார். அணைப்பகுதியில் சில வேலைகள் நடப்பது, செயற்கோள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. சீனாவின் இந்த பேச்சை எந்த அளவுக்கு நம்புவது என்று தெரியவில்லை. இந்தியாவில் இருமாநிலங்களுக்கு இடையில் ஏற்படும் நதிப்பிரச்னைகளைக் கூட தீர்க்க முடிவதில்லை. இந்நிலையில் சீனாவுடனான இந்த பிரச்னை, இருநாடுகளுக்கிடையேயான உறவில் பாதிப்பை ஏற்படுத்தும்.ஏற்கனவே அருணாச்சல் பிரதேசத்தை சொந்தம் கொண்டாடுவதன் மூலம், தரையில் கை வைத்த சீனா, தற்போது தண்ணீரையும் விடவில்லை.

source:dinamalar

பின்னூட்டமொன்றை இடுக

Filed under Uncategorized

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதிற்க ு நடிகர் விஜய்தான் காரணம்

ஆட்சி மாற்றத்துக்கு விஜய்தான் காரணம்! சீமான் பரபரப்பு பேச்சு!!
Director Seeman speach
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதிற்கு நடிகர் விஜய்தான் காரணம் என்று டைரக்டரும், நாம் தமிழர் கட்சித்தலைவருமான சீமான் சீரியஸாக பேசி காமெடி செய்துள்ளார். பெப்ஸி விஜயன் மகன் சபரீஷ் ஹீரோவாக அறிமுகமாகும் மார்க்கண்டேயன் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இதில் நடிகர்கள் விஜய் மற்றும் சல்மான்கான், டைரக்டர் சீமான் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

விஜயலட்சுமி விவகாரத்தில் சிக்கியிருக்கும் டைரக்டர் சீமான் பேசுவதற்காக மைக்கை பிடித்ததும், விழாவுக்கு வந்திருந்தவர்கள் எல்லோரும் சீரியஸாக கேட்க ஆரம்பித்த‌னர். ஆனால் சீமானோ காமெடியாக பேசினார். அதிலும் நடிகர் விஜய் பற்றிய பேசிய பேச்சை கேட்டதும் அரங்கத்தினுள் ஒரே கிச்சு கிச்சு. சீமான் பேசும்போது, தமிழ்நாட்டில் ஒரு புரட்சியை நடத்திவிட்டு சத்தம் போடாமல் அமர்ந்திருக்கிறார் என் தம்பி விஜய். அவர் நடத்திய மவுன புரட்சிதான் இன்று ஒரு ஆட்சி மாற்றம் ஏற்படவே வழி வகுத்தது, என்றார்.

தேர்தல் நேரத்தில் வெளிப்படையாக பிரச்சாரம் செய்ய தயங்கி, தனது அப்பாவை தேர்தல் களத்திற்கு அனுப்பி வைத்தவர் விஜய். அதிமுகவுக்கு ஆதரவாக விஜய் அறிக்கை தர மாட்டார்; பேட்டி கொடுக்க மாட்டார் என்று அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரே இரு மாதங்களுக்கு முன்பு பலமுறை பத்திரிகையாளர்களிடம் தெரிவித்திருக்கிறார். அதேப்போலவே விஜய் மக்கள் இயக்கம் அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்ததே தவிர விஜய் வெளிப்படையாக ஆதரவு தெரிவிக்கவில்லை. இன்னும் சொல்லப்போனால் தேர்தலுக்கு முன்பு முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்கக் கூட மறுத்துவிட்ட விஜய், ஜெயித்த பிறகு சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

உண்மை இப்படியிருக்க… டைரக்டர் சீமானோ… ஆட்சி மாற்றத்திற்கு விஜய்தான் காரணம் என்று பேசியிருப்பது… அதுவும் ரொம்பவே சீரியஸாக பேசியிருப்பது சரியா? தவறா? என்பதை ரசிகர்கள்தான் சொல்ல வேண்டும்

பின்னூட்டமொன்றை இடுக

Filed under Uncategorized

காப்பாற்றப்பட்ட தமிழகம்:ரஜினி கொடுத்த வா ய்ஸ் சிங்கப்பூரில் இருந்து…………

சென்னை: "முதல்வர் ஜெயலலிதா மகத்தான வெற்றி பெற்றதன் மூலம், தமிழகம் காப்பாற்றப்பட்டுள்ளது’ என, நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

இது குறித்து அரசு வெளியிட்டுள்ள அறிக்கை: சிங்கப்பூர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நடிகர் ரஜினிகாந்த், அங்கிருந்து நேற்று முதல்வர் ஜெயலலிதாவுடன் தொலைபேசியில் பேசினார். தற்போதுதான், மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து, தன் இருப்பிடத்திற்கு திரும்பியுள்ளதாகவும், உடன் உங்களிடம் தான் முதலில் பேச வேண்டும் என, முடிவு செய்து, தொடர்பு கொண்டதாகவும் ஜெயலலிதாவிடம் தெரிவித்தார். அதைக் கேட்ட முதல்வர் ஜெயலலிதா, "உங்களின் குரலை தொலைபேசியில் கேட்டதும் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன்’ என்றார். அத்துடன் ரஜினி குணமடைந்து, விரைவில் நாடு திரும்ப வேண்டும் என்ற தன் விருப்பத்தையும் தெரிவித்தார். அதற்குப் பதில் அளித்த நடிகர் ரஜினிகாந்த், "நீங்கள் மகத்தான வெற்றி பெற்றதன் மூலம் தமிழகம் காப்பாற்றப்பட்டுள்ளது’ என, ஜெயலலிதாவிடம் கூறினார். வெற்றி பெற்றதற்கு தன் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டதோடு, இன்னும் ஒன்றரை மாதங்களில் நாடு திரும்ப இருப்பதாகவும் கூறினார். ஏற்கனவே சென்னையில், ரஜினிகாந்த் சிகிச்சை பெற்ற போது, முதல்வர் ஜெயலலிதா நலம் விசாரித்ததை நினைவு கூர்ந்து, லதா ரஜினிகாந்த்தும் தன் நன்றியை தெரிவித்துக் கொண்டார். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது

source:dinamalar

பின்னூட்டமொன்றை இடுக

Filed under Uncategorized

மைசூர் நகருக்குள் யானை அட்டகாசம்(படம் இண ைக்கப்பட்டுள்ளது)

மைசூர் நகருக்குள் இரண்டு யானைகள் அட்ட்காசம் செய்தன.ரோட்டில் சென்ற வாகனங்கள் ,மனிதர்கள்,கால்நடைகள் எல்லாவற்றையும் துவசம் செய்தது.அந்த சம்பவத்தில் புகைப்படங்கள் இணைக்கப்பட்டுள்ளது.

Mad Elephant

Elephant-001.jpg

In India, two elephants broke into a suburb of the city of Mysore, in the southern Indian state of Karnataka. They emerged from the woods and become like a mad destroy everything in its path. They attacked the livestock grazed the cars going by and tried to trample the people who stand in their way. Three hours of elephants held in h0rror the whole town, until they had no effect tranquilizer. 05 More images after the break…

Elephant-002.jpg

Elephant-003.jpg

Elephant-004.jpg

Elephant-006.jpg

பின்னூட்டமொன்றை இடுக

Filed under Uncategorized

தமிழில் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 9

மைக்ரோசாப்ட் இந்தியா நிறுவனம், தன் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 9ஐ, தமிழ் மொழியில் வெளியிட்டுள்ளது. ஏற்கனவே இந்தி மொழியில் வெளியிட்டிருந்த நிலையில், அண்மையில் மேலும் 53 மொழிகளில், தன் பிரவுசரை வடிவமைத்துத் தந்துள்ளது. இவற்றில் தமிழ், அசாமீஸ், வங்காள மொழி, குஜராத்தி, கன்னடம், மலையாளம், மராத்தி, ஒரியா, பஞ்சாபி மற்றும் தெலுங்கு ஆகிய இந்திய மொழிகள் அடங்கும். உள்நாட்டு மொழிகளில் தன் பிரவுசரை வெளியிட்டதன் மூலம், அனைத்து தரப்பு மக்களிடம் தன் சாதனங்களை மைக்ரோசாப்ட் கொண்டு செல்லும் முயற்சியில் வெற்றி பெறும் வாய்ப்புகள் அதிகரிக்கிறது. பிரவுசர் போட்டியில், மற்ற பிரவுசர்களை முந்திச் செல்ல இது கை கொடுக்கும் என மைக்ரோசாப்ட் எண்ணுகிறது.
இந்த பிரவுசர் வெளியான போது, மைக்ரோசாப்ட் இந்தியாவில் பிரபலமான 29 இணைய தளங்களுடன் ஒப்பந்தம் மேற்கொண்டிருந்தது. இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 9 ஐ பிரபலப்படுத்த இந்த ஒப்பந்தம் வழி வகுக்கிறது. 1990 முதல் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இந்தியப் பிரிவு, இந்தியாவில் செயல்பட்டு வருகிறது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
தமிழ் மற்றும் பிற மொழிகளில் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசரை உங்கள் கம்ப்யூட்டரில் இயக்க,

source:dinamalar

பின்னூட்டமொன்றை இடுக

Filed under Uncategorized