பெண்களிடம் ஆண்கள் விரும்பாதவை


1306155179amd_fighting_couple.jpgஆண்கள் சில விஷயங்கள் தங்கள் காதில் விழுந்தாலே முகத்தைச் சுளிப்பார்கள். மனைவியோ, காதலியோ கீழ்க்கண்ட 5 விஷயங்களை தங்கள் துணைவர் காதில் போடமல் இருப்பது நல்லது…

1. `நாம கொஞ்சம் பேசணும்

உங்களவர், உலக சாம்பியன் வேகத்தில் ஓடி மறைய வேண்டும் என்று நினைக்கிறீர்களா? மேற்கண்ட மூன்று வார்த்தைகளைக் கூறினால் போதும்.

`ஏதோ பிரச்சினையைக் கிளப்பத் தான் அடி போடுகிறாள்’ என்று உணர்ந்துகொண்டு உடனடியாகத் தலைமறைவாகி விடு வார்.

`பேசுவது’ எல்லாம் கடைசியில் அழுகை, ஆத்திரம், தீர்வில்லாத நிலையில் தான் முடியும் என்று ஆண்களுக்குத் தெரியும்.

பெண்கள் கண்ணீர் சிந்தும் சூழ்நிலையை எப்படிக் கையாளுவது என்று ஆண்களுக்குத் தெரியாது. அப்போது கன்னாபின்னா வென்று நடக்கத் தொடங்கி விடுவார்கள்.

எதையும் மனந்திறந்து பேசித் தீர்க்க வேண்டும் என்பது கட்டுரைகளில் சரியாகத் தெரியலாம். ஆனால் நடைமுறையில் அவ்வளவாக ஒத்து வராது.

2. `நீங்க அம்மா பையன்’

பெண்கள் தங்கள் துணைவருடன் உறவு சீர் கெட விரும்பினால், அவரின் அம்மாவை அடிக்கடி பேச்சில் இழுத்தால் போதும். `பாருங்க… உங்க அம்மா இப்படிப் பண்றாங்க’, `உங்க அம்மா எப்போதும் அப்படித்தான்’ என்றெல்லாம் சொல்வதை எந்த ஆணும் விரும்புவ தில்லை.

பெண்களுக்கு எப்படித் தங்கள் அம்மாவைப் பிடிக்குமோ, அப்படித்தான் ஆண் களுக்கும் தங்கள் அம்மாவைப் பிடிக்கும். அதனால் அம்மாவைக் குறை சொல்வதை அவர்கள் ரசிப்பதில்லை. அதேபோல, `நீங்க அம்மா பிள்ளை… உங்க அம்மா சொல்றது தான் உங்களுக்கு வேத வாக்கு’ என்று கூறுவதையும் விரும்புவதில்லை.

பெண்கள் தங்களைத் தமது கணவர் அல்லது காதலரின் அம்மாவுடன் தராசுத் தட்டில் நிறுத்துப் பார்ப்பதை நிறுத்த வேண்டும். இந்த விஷயத்தில் ஆக்கபூர்வமான அணுகுமுறையில் நடந்துகொள்ள வேண்டும். அது, பெண்கள் தாங்கள் அம்மாவாகும்போது உதவும்.

3. `உங்க நண்பரைப் பாருங்க’

`உங்க நண்பரைப் பாருங்க… எவ்வளவு ஸ்டைலா இருக்காரு! நீங்களுந்தான் இருக்கீங்களே, தொந்தியும் தொப்பையுமா…’ என்று பேசும் பெண்கள் இருக்கிறார்கள். இவர்கள் தங்கள் துணைவருடான உறவுக்குக்குத் தாங்களே வேட்டு வைப்பவர்கள்.

இப்படி பேசத் தொடங்குவது, `அப்படின்னா நீ `அவனை’யே காதலிச்சிருக்கலாம்’ அல்லது, `நீ அவனையே கல்யாணம் பண்ணிக்கிட்டிருக்கலாம்’ என்ற வெறுப்பான கத்தலில் தான் முடியும்.

பெண்கள் தங்கள் கணவரின் அல்லது துணைவரின் நண்பரிடம் வெளிப்படை யாகக் காணாத பல குறைபாடுகள் இருக்கக்கூடும்.

கண்ணில் தெரிவதை மட்டும் கண்டு, வியப்பது அறிவீனம். பெண்கள் எப்படித் தங்களை இன்னொரு பெண்ணுடன் ஒப்பிடுவதை விரும்புவதில்லையோ, அதேபோலத்தான் ஆண்களும் என்று உணர வேண்டும்.

4. `நீங்க எப்பவும் இப்படித்தான்…

திருந்தவே மாட்டீங்க’ முத்திரை குத்தப்படுவதை ஆண்கள் விரும்புவதில்லை. அதிலும் அவர்களே தங்களிடம் இருந்து துறக்க விரும்பும் பழக்கங்களை, குறைபாடுகளை அடிக்கடி குத்திக்காட்டுவதை தாங்குவதே இல்லை.

ஒருவரைப் பற்றி, `இவர் இப்படித்தான்’ என்று வெகு சீக்கிரமாக முடிவு கட்டிவிடுவது பெண்களின் குறைபாடு. எல்லாருமே தவறு செய்வது இயல்பு. சிலருக்கு இயல்பாகவே சில தவறுகள் சிலமுறை நேர்ந்துவிடும்.

அதுகுறித்து அந்த ஆணே வருத்தத்தில், குற்ற உணர்வில் இருப்பார். அப்போது, ஆறுதலாக இருப்பதுதான் பெண் துணையின் மீதான மதிப்பை ஆணுக்கு உயர்த்தும்.

மாறாக, நொந்த வேளையில் `லந்து’ செய்வது வெறுப்பைத்தான் ஏற்படுத்தும். `இப்பல்லாம்…’ என்ற வார்த்தையையும் தவிர்க்கலாம். `இப்பல்லாம் நீங்க முன்ன மாதிரி அன்பாயில்ல…’ என்று மூக்கைச் சிந்துவதால் பயனில்லை.

5. `தலையெல்லாம் நரைச்சுப் போச்சு’

மத்திய வயதை நெருங்கும் ஆண்களுக்கு தலையில் நரைமுடிகள் தலைகாட்டத் தொடங்குமë. அவற்றை `இளநரை’ என்றெண்ணிச் சமாதானம் அடைவது ஆண்களின் வழக்கம். அதுகுறித்து அதிகம் சுட்டிக்காட்டுவதும், `உடனே சலூனுக்கு ஓடிப்போய் `டை’ அடிச்சுட்டு வாங்க’ என்று நெட்டித் தள்ளுவதும் ஆண்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தும்.

`கல்யாணத்துக்கு முன்னால கொடியிடையா இருந்தே… இப்போ தடியிடையா ஆயிட்டே…’ என்று சொன்னால் உங்களுக்குக் கோபம் வருமில்லையா?

source;viyappu

1 பின்னூட்டம்

Filed under Uncategorized

One response to “பெண்களிடம் ஆண்கள் விரும்பாதவை

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s