Daily Archives: ஜூன் 8, 2011

இலங்கைத் தமிழர்கள் :முதலமைச்சர் ஜெயலலிதா வின் அதிரடி நடவடிக்கை:

முதலமைச்சர் ஜெயலலிதாவின் அதிரடி நடவடிக்கை: தமிழ் நாடு சட்ட மன்றில் தீர்மானம் !

மகிந்த ராஜபக்ஷவை போர்க்குற்றவாளி எனத் தெரிவித்த ஜெயலலிதா, இலங்கை மீது மத்திய அரசு பொருளாதாரத் தடையைக் கொண்டுவரவேண்டும் எனக் கோரி தமிழக சட்ட மன்றில் இன்று தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியுள்ளார் என அதிர்வு இணையம் அறிகிறது. இத் தீர்மானத்தை முதல் அமைச்சர் ஜெயலலிதா கொண்டுவந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்க விடையமாகும்.

அதன் விவரம் வருமாறு:-

தமிழனின் பண்பு யாருக்கும் தாழ்ந்தவனாக இருப்பதல்ல. யாரையும் தாழ்த்துவதல்ல என்றார் பேரறிஞர் அண்ணா. இப்படிப்பட்ட உயரிய எண்ணத்தைக் கொண்ட தமிழர்கள் உலகெங்கும் பரவி இருக்கிறார்கள். மொழி மற்றும் கலாச்சார பாரம்பரியத்தில் ஒற்றுமையுடன் திகழும் இலங்கைத் தமிழர்களுக்கும், தமிழ்நாட்டில் வாழும் தமிழர்களுக்கும் இடையே உள்ள தொப்புள் கொடி உறவு அனைவரும் அறிந்த ஒன்றாகும். இலங்கைக்கு விடுதலை கிடைத்து விட்டாலும், அங்கு வாழும் தமிழர்கள் அவர்கள் நாட்டிலேயே இரண்டாம் தர குடிமக்களாக நடத்தப்படுவதை எதிர்த்து, இலங்கைத் தமிழர்கள் பல்லாண்டு காலமாக போராடி வந்தனர். இவர்களின் கோரிக்கைகளில் உள்ள நியாயத்தை உணர்ந்து தேவையான அரசமைப்புச் சட்டத்திருத்தங்களை கொண்டு வந்து, தமிழர்கள் கவுரவத்துடனும், சம உரிமையுடனும், சுயமரியாதையுடனும் வாழ்வதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்காமல் அவர்களை முற்றிலும் ஒழித்துக்கட்ட இலங்கை அரசு நடவடிக்கை எடுத்தது.

பரவலாக குண்டுமழை பொழிந்து அப்பாவி மக்களை கொன்று குவித்தது. மனிதர்கள் வாழும் இடங்களின் மீதும், மருத்துவ மனைகள் மீதும் குண்டுகளை வீசியது. மனிதாபிமான முறையில் செய்ய வேண்டிய உதவிகளை செய்ய மறுத்தது. உள்நாட்டில் இடம் பெயர்ந்தவர்கள் மற்றும் விடுதலைப்புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்று சந்தேகப்படக்கூடியவர்கள் உள்பட இந்தச் சண்டையில் பலியானவர்கள் மற்றும் எஞ்சியுள்ளவர்கள் மீது மனித உரிமை மீறல்களை நிகழ்த்தியது. இலங்கை அரசை விமர்சிப்பவர்கள் மற்றும் ஊடகங்கள் உள்பட போர்ப் பகுதிக்கு வெளியே இருப்பவர்கள் மீது மனித உரிமை மீறல்களை நிகழ்த்தியது. போன்ற கடுமையான, நம்பத்தகுந்த குற்றச்சாட்டுக்களை உள்நாட்டுப்போரின் போது இலங்கை அரசு நிகழ்த்தியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளரால் நியமனம் செய்யப்பட்ட குழு கண்டறிந்து இருக்கிறது.

எனவே, இத்தகைய போர்க் குற்றங்களை நிகழ்த்தியவர்களை போர்க்குற்றவாளிகள் என்று பிரகடனப்படுத்த ஐக்கிய நாடுகள் சபையை இந்திய அரசு வலியுறுத்த வேண்டும் எனவும், தற்போது இலங்கை முகாம்களில் உள்ள தமிழர்கள் அனைவரும் தங்களது சொந்த இடங்களுக்கு திரும்பி, சிங்களர்களுக்கு இணையாக கண்ணியமாக வாழவகை செய்யும் வரையில், அனைத்து குடியுரிமைகளையும் தமிழர்கள் பெறும் வரையில், மற்ற நாடுகளுடன் இணைந்து இலங்கை அரசின் மீது பொருளாதாரத் தடையை விதிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தமிழ்நாடு சட்டமன்றப்பேரவை இந்திய அரசை கேட்டுக் கொள்கிறது. எனக் குறிப்பிட்டுத் தீர்மானத்தை முன் வைத்தார்.

இதையடுத்து இந்த தீர்மானத்தின் மீது விவாதம் நடந்தது. அனைத்துக்கட்சி உறுப்பினர்களும் பேசினார்கள். முதலமைச்சர் ஜெயலலிதாவின் பதில் உரைக்கு பிறகு குறித்த தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. ஶ்ரீலங்கா அரசின் நடவடிக்கைகளுக்கு சாதகமாகக் காய்நகர்த்திய திமுக அரசு தமிழகத்தில் ஆட்சியதிகாரத்திலிருந்து இறக்கப்பட்டுள்ள நிலையில், ஆட்சிப் பொறுப்பை ஏற்றிருக்கும் அதிமுக தலைமையடன் நெருக்கம் பேண மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசு பெருமுயற்சி எடுத்து வரும் நிலையில், தமிழகத்தின் புதிய அரசு சட்டசபையில் இத் தீர்மாணம் நிறைவேற்றியிருப்பது முக்கியமானது எனக் கருதப்படுகிறது.

மேலும், இலங்கை போர்க்குற்ற விசாரணைகளுக்கு இந்தியா ஆதரவில்லை என அந் நாட்டின் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் அந்நாட்டுப் பாராளுமன்றத்தில் தெரிவித்திருக்கும் அதே தினத்தில் தமிழக அரசு இந்த தீர்மாணம் நிறைவேற்றியிருப்பது குறிப்பிடத்தக்கது.

source:athirvu

பின்னூட்டமொன்றை இடுக

Filed under Uncategorized

இலங்கைப் பூசாரி செக்ஸ் ஆசை

இலங்கைப் பூசாரி செக்ஸ் ஆசை: கம்பி எண்ணும் நிலையில் !

இலங்கையைச் சேர்ந்த பூசாரி ஒருவர் பெண்களிடம் தவறாக நடக்க முற்பட்டதாக அவுஸ்திரேலியாவில் கைதாகியுள்ளார். குற்றம்சாட்டப்பட்ட பூசகரான பிரேம்காந்தன் ராஜரட்ண சர்மா, Carrum Downs என்ற பிரதேசத்தில் உள்ள ஸ்ரீ சிவ விஷ்ணு ஆலயத்தில் பணிபுரிந்துள்ளார். 2004 ம் ஆண்டு அளவில் ஆலயத்துக்கு பூசைக்குச் சென்ற 23 வயதுடைய பெண் சில சங்கடங்களில் இருந்தாகக் கூறப்படுகிறது. குறிப்பிட்ட இப் பெண்ணின் பிரச்சனைகளை தான் தீர்த்துவைப்பதாகக் கூறி, முதலில் ஜோசியம் பார்க்கவேண்டும் எனச் சொல்லி, அவர் அப் பெண்ணை தனியான அறை ஒன்றுக்குள் கொண்டுசென்று, தவறான செயலில் ஈடுபட்டுள்ளார். இதே போல 2009ம் ஆண்டு தன்னோடு தவறாக நடக்க முயற்சித்ததாக மேலும் ஒரு பெண் அவுஸ்திரேலியப் பொலிசாரிடம் முறையிட்டுள்ளார்.

இவ்விரு பெண்களும் கொடுத்த புகார்களில் பூசாரி பற்றிச் சொல்லப்பட்ட விடையங்கள் ஒற்றுமையுடன் காணப்பட்டதால், பொலிசார் பூசாரியைக் கைதுசெய்து விசாரணை நடத்தியுள்ளனர். 2009ம் ஆண்டு பாதிக்கப்பட்டதாகச் சொல்லப்படும் பெண்ணை பூசாரி பலவந்தமாக முத்தமிட முனைந்துள்ளார் என அரச தரப்பு வக்கீல் தெரிவித்துள்ளார். பிரேம்காந்தன் ராஜரட்ண சர்மாவின் வக்கீல் பேசும்போது, பிரதிவாதியின் உடல் நிலையைக் கருத்தில்கொண்டு அவரை நாடு கடத்தவேண்டாம் எனத் தெரிவித்தார். குற்றவாளி குற்றங்களை ஒப்புக்கொள்வதாகாவும் வக்கீல் மேலும் தெரிவித்தார்.

ஆனால் பிராங்ஸ்டன் மஜிஸ்திரேட் நீதிபதி அதனை ஏற்க மறுத்திவிட்டார். ஒரு குருக்கள் அல்லது மத போதகர்கள் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை சர்மா கெடுத்துவிட்டதாக நீதிபதி தெரிவித்துள்ளார். 18 மாத சிறைத் தண்டணை வழங்கித் தீர்பளித்துள்ள பிராங்ஸ்டன் மஜிஸ்திரேட் நீதிபதி, ஆண்மீகத்தில் அல்லது பொது இடங்களில் பூஜைகளில் ஈடுபட அவருக்கு 2 வருடத்துக்கு தடை விதித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்க விடையமாகும்

source:athirvu

பின்னூட்டமொன்றை இடுக

Filed under Uncategorized