Monthly Archives: மே 2011

குறுந்தகவல்(SMS) அனுப்பி சிக்கியுள்ள பாலித கோஹண: திடுக்கிடும் தகவல் !

2009 மே மாதத்தில் முடிவுக்கு வந்த விடுதலைப் புலிகளுடனான போரில், இலங்கை இராணுவம் சரணடைந்த பா.நடேசன் மற்றும் புலித்தேவன் உட்பட 20 பேரைச் சுட்டுகொண்றுள்ளது. போர் நடைபெற்ற காலகட்டத்தில் இலங்கை அரசாங்கத்தின் செயலாளராகப் பணியாற்றியவர் பாலித கோஹண ஆவார். இச் சரணடைவு குறித்து அவர் தனது கையடக்கத் தொலைபேசியில் இருந்து, வெளிநாட்டில் வசிக்கும் ஒருவருக்கு குறுந்தகவல் ஒன்றை மே 17 ம் திகதி அனுப்பியுள்ளார். இத் தகவல் தற்போது அவருக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளதோடு அது ஒரு ஆதாரமாக மாறும் வாய்ப்பும் அதிகரித்துள்ளதாக அதிர்வு இணையம் அறிகிறது.

2009 மே மாதம் 17ம் திகதி (ஞாயிற்றுக்கிழமை) சரியாக காலை 8.46 மணிக்கு அவர் தனது கையடக்கத் தொலைபேசியில் இருந்து குறுந்தகவல் ஒன்றை வெளிநாட்டில் உள்ள நபர் ஒருவருக்கு அனுப்பியுள்ளார். அதில் பா.நடேசன் மற்றும் புலித்தேவன் ஆகியோரை வெள்ளைக்கொடிகளைக் காட்டியவாறு, பசில் ராஜபக்ஷ குறிப்பிட்ட இடம் வழியாக வந்து 58ம் படைப் பிரிவிடம் சரணடையுமாறு பாலித கோஹண எழுதி இருக்கிறார். அவரிடம் இருந்து பெறப்பட்ட குறுந்தகவலை, வெளிநாட்டில் உள்ளவர் புலித்தேவனின் துறையா சட்டலைட் போனுக்கு அனுப்பிவைத்துள்ளார். பசில் ராஜபக்ஷ மற்றும் பாலித கோஹண ஆகியோர் கூறியது போல சுமார் 20 பேர் அடங்கிய குழு முதல் கட்டமாக சரணடையச் சென்றுள்ளது.

அவர்கள் சரணடையச் செல்லும்போது, அதனை நேரில் பார்த்த சாட்சி தற்போது வெளிநாடு ஒன்றில் வசித்துவருகிறார்(பாதுகாப்பு காரணங்களுக்காக அவர் பெயர் வெளியிடப்படவில்லை). பசில் ராஜபக்ஷ மற்றும் பாலித கோஹண ஆகியோர் கூறியபடி, மறுநாள் காலை தமது குடும்பத்தார் சகிதம் சென்ற புலித்தேவன், மற்றும் பா.நடேசன் ஆகியோரை, 58 வது படைப்பிரிவு ஒரு ரிரக் வண்டியில் ஏற்றிச் சென்றுள்ளது. அவர்கள் சென்று சுமார் 30 நிமிடங்களில் பலத்த துப்பாக்கிச் சத்தம் கேட்டதாக சம்பவ இடத்தில் நின்றவர் தெரிவிக்கிறார். அதன் பின்னர் உடனடியாகவே இலங்கை அரசு புலித்தேவன் மற்றும் நடேசன் ஆகியோர் கொல்லப்பட்டதாக அறிவித்தது யாவரும் அறிந்ததே.

இலங்கை மற்றும் அவுஸ்திரேலியப் பிரஜாவுரிமை பெற்றுள்ள பாலித கோஹண, தற்போது ஐநாவுக்கான இலங்கையின் வதிவிடப் பிரதிநிதியாகக் கடமையாற்றுகிறார். இவருக்கு எதிராக சர்வதேச நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டுள்ளது, என்பதனை நீதிமன்ற விசாரணைக் குழு ஏற்றுக்கொண்டுள்ளது. புலிகளின் அரசியல் தலைவர்களை வஞ்சகமாக ஏமாற்றி, அவ்விடத்துக்கு வரவழைத்து, அவர்கள் கொலைசெய்யப்பட காரணமாக இருந்தவர்களில் பாலித கோஹண மிக முக்கியமான நபராகக் கருதப்படுகிறார். அவருக்கு எதிராக வலுவான ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டு அவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

.தற்போது இது குறித்து பாலித கோஹண எழுதிய குறுந்தகவல்களும், அவர் கையடக்கத் தொலைபேசியில் இருந்து வந்த குறுந்தகவல்களும் ஆதாரமாக இணைக்கப்படும் சாத்தியக் கூறுகள் காணப்படுகின்றது. இந் நிலையில் ஹெரல்ட் துப்பறியும் நிறுவனம் இது குறித்து மேலதிகத் தகவல்களை வெளியிட்டுள்ளது. இருப்பினும் தான் சரணடைவதற்காக வழியை அவர்களுக்கு குறுந்தகவல் ஊடாக தான் சொன்னதாகவும், அவர்களின் உயிருக்கு உத்தரவாதத்தை தான் கொடுக்கவில்லை என்று பாலித கோஹண ஆங்கில இணையம் ஒன்றிற்கு தெரிவித்துள்ளார். எது எவ்வாறு இருந்தாலும், பாலித கோஹணவுக்கு எதிராக போடப்பட்டுள்ள வழக்கு மிகவும் காத்திரமான ஆதாரங்களைக் கொண்டுள்ளதாக அறியப்படுகிறது.

வழக்கு விசாரணைக்கு வரும் பட்சத்தில் அதில் இருந்து தப்பிக்க தனது அவுஸ்திரேலிய பிரஜாவுரிமையை அவர் ரத்துச்செய்ய தயங்கமாட்டார் என்ற கருத்துக்களும் முன்வைக்கப்படுகிறது.

source:athirvu

பின்னூட்டமொன்றை இடுக

Filed under Uncategorized

மானாட மயிலாட! கலைஞர் டிவி அசத்தல்!

!
kalainger TV maanada mayilada

தேர்தல் முடிவுகளை உற்சாகத்துடன் வெளியிட ஆரம்பித்த கலைஞர் டிவி, அதிமுக அணி தொடர்ந்து முன்னிலையில் இருந்ததால் பாதியிலேயே தேர்தல் முடிவுகள் வெளியிடுவதை நிறுத்தியது. ஒட்டுமொத்த தமிழர்களும் எதிர்பார்த்திருந்த தேர்தல் முடிவுகளை நிறுத்தியதோடு மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த தமிழர்களும் குதூகலமாக கண்டுகழிக்கும் ‌வகையில் மானாட மயிலாட நிகழ்ச்சியை ஒளிபரப்பி ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அசத்தலான டான்சுடன் ஒளிபரப்பான மானாட மயிலாட நிகழ்ச்சியைத் தொடர்ந்து மற்ற நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாயின

source:dinamalar

பின்னூட்டமொன்றை இடுக

Filed under Uncategorized

தமிழ்நாட்டில் அ.தி.மு.க., தனித்து ஆட்சி அமை க்கிறது; தி.மு.க., அமைச்சர்கள் பலர் தோல்வி

தமிழ் நாட்டில் அ.தி.மு.க. தனித்து ஆட்சி அமைக்கிறது. இதுவரை முன்னணி நி‌லவரம்தான் வந்து கொண்டிருக்கிறது என்றாலும் அ.‌தி.முக., 198 இடங்களில் முன்னிலையில் உள்ளது. தி.மு.க., 36 இடங்களில் மட்டுமே முன்னிலையில் உள்ளது. மேலும் தி.மு.க., அமைச்சர்களான பொங்கலூர் பழனிச்சாமி, வீரபாண்டி ஆறுமுகம், தமிழரசி, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் உட்பட பலர் தோல்வியைத் தழுவும் நிலையில் உள்ளனர். எனவே தேர்தல் முடிவு அ.தி.முக.,வுக்கு சாதகமாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேற்குவங்கத்ததில் திரிணாமுல்காங்., மற்றும் காங்கிரஸ் கூட்டணியினர் 205 இடங்களில் முன்னிலை வகித்து வருகின்றனர். இடதுசாரி கட்சியினர் 67 இடங்களில் முன்னிலை வகித்து வருகின்றனர். புதுச்சேரி யூனியனில் இன்று காலை ஓட்டு எண்ணும் பணி துவங்கியது முதல் தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி பின்னடைந்துள்ளது. என்.ஆர்., காங்கிரஸ் அ.தி,மு.க., கூட்டணி 7 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகின்றன.

கேரளாவில் .காங்கிரஸ் 73 இடங்களிலும், ஆளும் இடதூரி கூட்டணியினர் 66 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகின்றன.அசாமில் காங்கிரஸ் கூட்டணி 49 இடங்களிலும், அசாம் கனபரிஷத் 6 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகிறது. பா.ஜ., 8 வது இடங்களிலும், முன்னிலை வகிக்கிறது.

மாலை 5 மணிக்குள் முழு முடிவுகள் நிலவரம் தெரி்ந்து விடும்

source:dinamalar

பின்னூட்டமொன்றை இடுக

Filed under Uncategorized

“சதையை’ பார்க்கும் கிரிக்கெட் வீரர்கள் * ந டனப் பெண் ஆவேசம்

Gabriella-Pasqualotto-large.jpg
புதுடில்லி: "ஐ.பி.எல்., பார்ட்டிகளில் கிரிக்கெட் வீரர்கள் தவறாக நடந்து கொள்கின்றனர். நடனப் பெண்களின் சதையை தான் பார்க்கின்றனர்,” என, தென் ஆப்ரிக்க நடனப் பெண் பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார்.
ஐ.பி.எல்., தொடரில் பார்வையாளர்களை மகிழ்விக்க, அழகிகளின் நடனத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த தொடரில் மும்பை அணிக்கான போட்டிகளில் நடனம் ஆடுவதற்காக தென் ஆப்ரிக்காவில் இருந்து 40 பெண்கள், ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.
இரவில் போட்டிகள் முடிந்ததும் நடக்கும் பார்ட்டிகளில், நடக்கும் சம்பவங்கள் குறித்து கேபிரியல்லா (22) என்ற நடனப் பெண், சமீபத்தில் வெளியிட்ட "டுவிட்டர்’ செய்தியில்,"" கிரிக்கெட் வீரர்கள் தகாத முறையிலும், அருவெறுக்கத் தக்கவகையிலும் நடந்து கொள்கின்றனர். இவர்கள் எங்களை பெண்களாக பார்ப்பதில்லை. வெறும் சதைப் பிண்டமாகத்தான் பார்க்கின்றனர்,” என தெரிவித்து இருந்தார்.
இப்படி "உண்மையை’ வெளியிட்டதால், கடந்த வாரம் இவர் மும்பை அணியின் ஒப்பந்தத்தில் இருந்து நீக்கப்பட்டார். இதுகுறித்து கேபிரியல்லா கூறியது:
பொதுவாக பார்ட்டிகளின் போது, அனைத்து இடங்களிலும் காமிராக்கள் பொருத்தப்பட்டு, வீரர்கள் என்ன செய்கின்றனர் என்று கண்காணிக்கப்படுவார்கள். அப்படி இருந்தும் அவர்கள், எங்களை சுற்றித் தான் நின்று கொள்வார்கள். அவர்களை விட்டு நாங்கள் எங்கும் செல்ல முடியாது. மொத்தத்தில் எங்களை மாமிச பிண்டமாகத்தான் நடத்துகின்றனர். இதில் எந்தவொரு குறிப்பிட்ட வீரரையும் தெரிவிக்க விரும்பவில்லை. நாங்கள் சந்தித்த இந்திய வீரர்களில் தோனி, ரோகித் சர்மா இருவரும் எப்போதும், நாகரீகமுடன் நடந்து கொள்வார்கள்.
இதைத்தான் எனது "டுவிட்டரில்’ தெரிவித்தேன். ஆனால், என்னை தொடரில் இருந்து நீக்கிவிட்டனர். உண்மையில் என்ன தவறு செய்தேன் என்றே தெரியவில்லை. ஏதோ மிகப்பெரிய தவறு செய்த கிரிமினல் போல என்னை நடத்தினர். எனது தரப்பு நியாயம் என்ன என்பதை சொல்வதற்கு கூட வாய்ப்புத் தரவில்லை.
இவ்வாறு கேபிரியல்லா தெரிவித்தார்.

source:dinamalar

பின்னூட்டமொன்றை இடுக

Filed under Uncategorized

மகளின் மோபைலில் ஆபாசப் படம்:

தனது மகளின் கையடக்க தொலைபேசியில் இருந்த ஆபாச வீடியோ காட்சிகளை தனது மனைவி, மகளுடன் பார்வையிட்ட தந்தை தன்னனைத் தானே துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஒன்று கொக்கரல்லை பிரதேசத்தில் பதிவாகியுள்ளது. கொக்கரல்லை ஜனபாகமன பிரதேசத்தில் வசிக்கும் 43 வயதுடைய ஜே.ஏ.சுகத்தபால எனப்படும் மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டவராவார்.

கொக்கரல்லை பிரதேச பாடசாலையில் மகள் கல்வி கற்றுக்கொண்டிருந்த போதே தந்தை தற்கொலை செய்து கொண்டுள்ளார். மகளின் கையடக்க தொலைபேசி பாடசாலை அதிபருக்கு வழங்கப்பட்டு சோதனை செய்யப்பட்ட போது அதில் ஆபாச வீடியோ காட்சிகள் இருந்தமை கண்டறிப்பட்டமையாக தெரிவிக்கப்படுகிறது. அதன் பின்னர் குறித்த அதிபர் மாணவியின் பெற்றோரை பாடசாலைக்கு வரவழைத்து அவர் முன்னிலையிலேயே குறித்த வீடியோ காட்சிகளை பெற்றோருக்கு காண்பித்துள்ளார்.

இதனையடுத்து விரைந்து வீட்டுக்கு சென்ற தந்தை கைத்துப்பாக்கியை எடுத்து தன்னைத்தானே சுட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார். சம்பவம் தொடர்பில் கொக்கரல்லை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட குழுவினர் மேலதிக விசாரணை நடத்தி வருகின்றனர். குறித்த பள்ளி அதிபர் சற்றும் பின் விளைவுகளை யோசிக்காது நடந்துள்ளார். குறித்த மாணவியின் கையடக்கத் தொலைபேசியில் வேண்டும் என்றே யாராவது ஆபாசப் படங்களை தரவேற்றம் செய்திருக்கலாம். எனவே எதனையும் தீர விசாரிப்பது நல்லது

source:athirvu

பின்னூட்டமொன்றை இடுக

Filed under Uncategorized

ஏர்வாடி மனநோயாளிகள்

https://i2.wp.com/img.dinamalar.com/data/large/large_238484.jpg

ராமநாதபுரம்: அரசு காப்பகம் அமைப்பதில் தாமதம் ஆவதால், ஏர்வாடி தர்ஹா மனநோயாளிகள் மீண்டும் அடிமை நிலைக்கு ஆளாகியுள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி தர்ஹாவில் கடந்த 2002 ஆக.,6ல் நாட்டையே உலுக்கிய தீவிபத்து நடந்தது. 28 மனநோயாளிகள் தீயில் கருகினர். மனநோயாளிகளுக்கான காப்பகத்தை குடிசைத்தொழில் போல் பலரும் நடத்தியதே விபத்திற்கு காரணமானது. அங்கு மனநோயாளிகள் சங்கிலியால் கட்டப்பட்டதால் தப்பிக்க வழியின்றி, அத்தனை உயிர்களும் அநியாயமாக பலியாயின. வழக்கம் போல அசம்பாவிதம் நிகழ்ந்த பிறகே அரசு தரப்பு விழித்துக் கொண்டது. அவசரமாக அனைத்து மனநல காப்பகங்களையும் ஒழுங்குபடுத்த முன்வந்தது. அரசே மனநலகாப்பகம் அமைக்க வேண்டும் என, அனைத்து தரப்பினரும் குரல் கொடுத்தனர். காப்பகங்களை அமைக்க எந்த துறையின் கீழ் இப்பணியை மேற்கொள்வது என்ற சந்தேகம் அப்போது எழுந்தது. இதுவே அரசு காப்பக பணிகள் முடங்க முதல் காரணமானது. இப்பிரச்னையில் அமைக்கப்பட்ட ராமதாஸ் கமிஷனின் பரிந்துரையின் படி, மாவட்ட மருத்துவமனையில் மனநலபிரிவு தொடங்க, கோர்ட் உத்தரவிட்டது. அதன் படி மனநலபிரிவும் ஏற்படுத்தப்பட்டும், அரசு காப்பகம் இல்லாததால் அது பயனின்றி இன்றி உள்ளது.

இன்றைய நிலவரப்படி, இந்தியாவில் 10 ஆயிரம் மனநோயாளிகளுக்கு ஒருவர், என்ற விகிதத்தில்தான் மனநல மருத்துவர் எண்ணிக்கை உள்ளது. இந்நிலையில் மனநோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பது என்பது எட்டாக் கனியே. மனநோயாளிகளை காப்பகம் மூலம் பராமரிப்பதை தவிர, பெரிய அளவில் தீர்வு காணமுடியாது. தர்ஹா தலைவர் சார்பில் நிலம் அளித்து காப்பகம் நடத்த முன்வந்த நிலையில், இதுவரை அதற்கான எந்த பணியும் நடக்கவில்லை. உள்பிரச்னை காரணமாக தர்ஹா நிர்வாகம் கோர்ட் விசாரணையில் உள்ளது. இதனால் நிர்வாகிகள் இன்றி தர்ஹா செயல்படுகிறது. இந்நிலை ஆறு மாதமாக தொடர்வதால், மனநோயாளிகள் சிதறிப்போக காரணமானது. இதைப்பயன்படுத்தி மீண்டும் குடிசைத்தொழில் மனநலகாப்பகங்கள் முளைக்கத் துவங்கிவிட்டன. தர்ஹா உள்ளேயே மீண்டும் சங்கிலியால் மனநோயாளிகளை கட்டத்தொடங்கி உள்ளனர். மீண்டும் அடிமை நிலைக்கு திரும்பியுள்ள ஏர்வாடி தர்ஹா மனநோயாளிகளுக்கு, இதனால் பேராபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. மனநோயாளிகள் போர்வையில் குற்றவாளிகள்: முறையான கண்காணிப்பு இல்லாததால் மனநோயாளிகள் போர்வையில் நிறைய குற்றவாளிகள் தஞ்சம் அடைந்திருப்பதாக குற்றசாட்டு எழுந்துள்ளது.

ஏர்வாடி தர்ஹா யாத்திரிகர் நலப்பேரவை தலைவர் அம்ஜத் உசேன் கூறியதாவது: கண்காணிப்பு இல்லாமல் மனநோயாளிகள் போர்வையில் குற்றவாளிகள் அதிகம் தஞ்சம் அடைகின்றனர். கேரள போலீசார் பலமுறை வந்து இங்கு குற்றவாளிகளை கைது செய்து சென்றுள்ளனர். மனநோயாளிகளை மீண்டும் சங்கிலியால் கட்டி சித்திரவதை செய்யத்தொடங்கிவிட்டனர். காப்பாகம் அமைக்க எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்பது தான் உண்மை. தர்ஹா நிர்வாகம் செயல்பட்டால் இப்பிரச்னைக்கு தற்காலிக தீர்வு கிடைக்கும், என்றார்.

விதிமுறையால் தாமதமாகும் காப்பகம் : அரசு தரப்பில் காப்பகம் அமைப்பதற்கான முறையான விதிமுறைகள் இல்லாததே தாமத்திற்கு காரணமாக கூறப்படுகிறது. தர்ஹா நிர்வாகத்தின் முன்னாள் தலைவர் முகமது அமீர் ஹம்சா கூறியதாவது: காப்பாகத்திற்கு நிலம் வழங்குவதாக ஏற்கனவே நாங்கள் கோர்ட்டில் அறிவித்துவிட்டோம். காப்பகம் அமைக்கும் விதிமுறைகள் கேட்டுள்ள நிலையில், இதுவரை கிடைக்கவில்லை. தேர்தல் முடிவுக்கு பின் கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம். தர்ஹாவில் மனநோயாளிகளை சங்கிலியால் கட்டுவதை நாங்கள் அனுமதிப்பதில்லை, என்றார்

source;dinamalar

பின்னூட்டமொன்றை இடுக

Filed under Uncategorized

ஆஸி., பேஷன் ‌ஷோ: இந்து கடவுள் படத்துடன் மாட ல் அழகி

https://i2.wp.com/img.dinamalar.com/data/large/large_237764.jpg

சிட்னி: ஆஸ்திரேலியாவில் இனவெறி சமீபத்திய சர்ச்சையாக இருந்து வந்தது. இது தணிந்திருக்கும் இந்நேரத்தில் இந்துக்ககடவுள் அவமதிப்பு சம்பவம் உலகம் முழுவதும் கடும் கண்டனத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

சிட்னியில் கடந்த 2 ம் தேதி முதல் 6 ம்தேதிவரை ரோஸ்மவுன்ட் ஆஸ்திரேலியன் பேஷன்வீக் கொண்டாடப்பட்டது. இதில் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த பெண்கள் தங்கள் அறிவுக்கு எட்டியவாறு , ரசிகர்களை கவரும் விதமாக மெல்லிய உடை, பள,பளக்கும் மேக்கப் என தங்கள் அழகை காட்டினர். இதில் ஒரு அழகி நீச்சல் உடையில் வந்தார். கவர்ச்சிகள் தெரியும் விதமான இந்த உடை அணிந்த பெண்ணின் முன்னும், பின்னும் லஷ்மி கடவுள் பொறிக்கப்பட்டிருந்தது. இது இந்து மக்களின் கண்டத்திற்குள்ளாகியிருக்கிறது. உலகம் முழுவதும் உள்ள இந்து அமைப்பினர், சமூக ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்திருக்கின்றனர்.

அமெரிக்காவில் உள்ள இந்து அமைப்பினர் தங்களுடைய எதிர்ப்பு அறிககையில்: இந்துக்கடவுளான லட்சுமி கோயில்களிலும், வீடுகளிலும் வைத்து வழிபடத்தக்க போற்றுதலுக்குரிய தெய்வங்கள் . இவை நீச்சல் உடையில் பொறிக்கப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியையும் , வேதனையையும் தருகிறது. பணத்தாசை கொண்ட வணிக ரீதியான ஒரு நிறுவனம் இந்த போட்டியை நடத்தியிருக்கிறது. இனிவரும் காலங்களில் இது போன்ற செயல்கள் தடுக்கப்பட வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

ஐதராபாத்தில் பா.ஜ., கட்சியினர் இந்த சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆஸ்திரேலியா நாட்டு கொடியும், ஆடை வடிவமைப்பாளர் லிசாவின் உருவ பொம்மையும் தீ வைத்து கொளுத்தினர்.

இந்த அணிவகுப்புக்கான ஆடைகளை வடிவமைத்த லிசா பர்க் என்பவரிடம் இது குறித்து விளக்கம் கேட்டபோது அவர் கூறியதாவது: இந்து கடவுள்களை அவமதிக்க வேண்டும் என்பது எனது நோக்கம் அல்ல. அவர்களுடைய உருவம் என்னை மிகவும் கவர்ந்தது. எனவே அதுபோன்ற படங்களை இடம் பெறச் செய்தேன் என்றார்.

இது போன்ற சம்பவங்கள் நிகழும்போது மற்ற மதத்தினரை குறைகூறாமல் , சம்பவங்களுக்கு பொறுப்பானவர்கள் மற்றும் உரிய அதிகாரிகளிடம் முறையிட்டு தீர்வு காண்பதே இத்தகைய பிரச்னைகளுக்கு நல்ல தீர்வாக இருக்கும் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

source:dinamalar

பின்னூட்டமொன்றை இடுக

Filed under Uncategorized