Monthly Archives: ஏப்ரல் 2011

ஆபாச உடையில் சென்ற இலங்கைப் பெண் துணிகரக ் கொள்ளை !

குவைத் நாட்டில் உள்ள பிரபல வணிகஸ்தலம் ஒன்றில் உள்ள நகைக்கடையில் இலங்கைப் பெண்கள் துணிகரமகாகக் கொள்ளையடித்துள்ளனர். குறிப்பிட்ட பெண்கள் மிகவும் கவச்சியாக உடை அணிந்து நகைக்கடைக்குள் சென்று, நகைகளைப் பார்வையிட்டதோடு, ஆபாசமாகப் பேசி வியாபாரியின் கவனத்தை திசைதிருப்பியும் உள்ளனர். வியாபாரி ஏமாந்து அசடுவழிந்தவேளை, பெறுமதியான நகை ஒன்றை அந்தரங்க இடத்தில்வைத்து, மறைத்து அதனை அப்பெண் எடுத்துச் சென்றுவிட்டார் எனத் தெரிவிக்கப்படுகிறது. அப் பெண்களைப் பார்த்து தனது கவனம் திசைதிரும்பியது என்னவோ உண்மைதான் ஆனால் நகையை மீட்டுத் தருமாறு வியாபாரி பொலிசாரிடம் கூறியுள்ளார்.

வணிகஸ்தலத்துக்கு விரைந்த பொலிசார், அவ்விடத்தில் இருந்து தப்பிச் சென்ற பெண்ணை சிறிது தூரத்தில் வைத்து கைதுசெய்தனர். அப்பெண்ணை சோதனையிட்டபோது அவரிடம் எதுவும் இருக்கவில்லை. இருப்பினும் நகைக்கடையினுள் இருந்த கமராவில் பதிவான காட்சிகளைப் பார்வையிட்டவேளை, குறித்த பெண் நகையைத் திருடி, தனது சட்டைக்குள் வைப்பது பதிவாகியிருந்தது. இதனை அடுத்து பொலிசார் அப்பெண்னை கைதுசெய்து விசாரித்தவேளை, இதேபோல சுமார் 12 தடவை நகைகளை தாம் வெவ்வேறு இடங்களில் கொள்ளையிட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

இப்பெண்ணோடு சம்பந்தப்பட்ட மற்றொருவரையும் பொலிசார் வலைவீசித் தேடிவருவதாக குவைத்தில் இருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. இப் பெண் சிங்களவராக இருக்கலாம் எனச் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது source:athirvu

Advertisements

பின்னூட்டமொன்றை இடுக

Filed under Uncategorized

போராளித் தளபதிகள் சித்ரவதை.. அதிரவைக்கும ் புகைப்பட ஆதாரம்!

அதிரவைக்கும் அதிர்வு… புகைப்பட ஆதாரம்!

ழ மண்ணில் இனப்படுகொலை நடந்து இரண்டு ஆண்டுகள் ஆகியும்

அந்த துயரத்தின் வலியும் ரணமும் இன்னும் நீங்கவில்லை!

போரில் கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தின் தாங்கமுடியாத துன்பம் ஒருபுறம் என்றால்… சிங்களப் படையி​னரால் கைதுசெய்யப்பட்டுக் காணாமல் போனவர்களுடைய குடும்பத்தினரின் மன உளைச்சலோ சொல்லில் அடக்கமுடியாத சோகம்!

இப்படி காணாமல் போனவர்களைப் பற்றிய தகவல்களைப் பன்னாட்டு மனித உரிமை அமைப்புகள் வெளியிட்டு வருகின்றன. அமெரிக்காவைத் தலைமை​யிடமாகக் கொண்டு இயங்கும் ‘மனித உரிமை கண்காணிப்பகம்’ எனும் அமைப்பு, புதிய ஆதாரங்களுடன் அறிக்கை ஒன்றை கடந்த வாரம் வெளியிட்டுள்ளது.

ஈழப் போர் முடிந்த காலகட்டமான மே 16 முதல் 18 வரை வட்டுவாகல் எனும் இடத்தில் வைத்துதான், புலிகள் பகுதியில் இருந்து வந்தவர்களை ராணுவம் பிடித்துச் சென்றது. அவர்களின் பெரும்பாலோரின் கதி என்ன என்பதே தெரியவில்லை! காணாமல் போனவர்களைப் பற்றிய தகவல்களை அறிய, சம்பந்தப்பட்டவர்களின் உறவினர்கள், நண்பர்களைத் தேடிக் கண்டுபிடித்து, அவர்கள் மூலமாக ‘மனித உரிமை கண்காணிப்பகம்’ ஆதாரங்களைத் திரட்டியிருக்கிறது!

அந்த அமைப்பின் ஆசிய பிராந்திய இயக்குநர் பிராட் ஆடம்ஸ் இது பற்றி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன்படி, ஃபிரான்சிஸ் ஜோசப் என்ற கத்தோலிக்கப் பாதிரியார் தலைமையில், கணிசமான விடுதலைப் புலிகள், வட்டுவாகல் பாலத்தின் தென்புறத்தில் சிங்களப் படையிடம் சரண் அடைந்துள்ளனர். அவர்கள் அனைவரையும் ஒரு பேருந்தில் ஏற்றிச்சென்றதை போராளி ஒருவரின் மனைவி பார்த்துள்ளார். அதன் பிறகு அந்தப் பெண்ணின் கணவர் உள்பட அந்தப் பேருந்தில் சென்ற யாரைப் பற்றியும் இதுவரை ஒரு தகவலும் இல்லை.

இது போன்ற பலரின் தேடல் சோகங்களைத் தெரிவித்துள்ள மனித உரிமைக் கண்காணிப்பகம், போராளித் தளபதி கேணல் ரமேஷ் தொடர்பான வீடியோ காட்சிகளையும் வெளியிட்டுள்ளது. விடுதலைப் புலிகளின் தீவிரப் பற்றாளர்கள் அதைப் பார்த்தால், ரொம்பவும் மனம் பதறிப் போவார்கள். பிரபாகரனுடன் முரண்பட்டு கருணா தப்பிச் சென்றபோது கிழக்கு மாகாணத்தின் தலைமைப் பொறுப்பில் இருந்தவர், கேணல் ரமேஷ். கருணாவைத் திருத்த முயன்று, முடியாமல் போகவும், பிறகு பாதுகாப்பாக வன்னிக்கு வந்துசேர்ந்தவர். எதிரியையும் துரோகியையும் தொடர்ந்து கவனித்து வந்தவர். அப்படி இருந்தவர், பிரபாகரனின் கட்டளைப்படி காயம்பட்ட மக்களைக் காப்பாற்று​வதற்காக சரண் அடைந்தார்.

‘மக்களோடு மக்களாகச் சென்றவரை, இவர்தான் கேணல் ரமேஷ் என்பதை முன்னாள் போராளிகள் இருவர் மூலமே கண்டுபிடுத்துள்ளனர்’ என்று ஒரு சாட்சி கூறியதாகச் சொல்கிறது, மனித உரிமை கண்​காணிப்பகம்.

ரமேஷையும் மேலும் மூவரையும் தனியாகப் பிரித்த சிங்களப் படையினர், அருகில் இருந்த ஒரு குடிசைக்குத் தனியாக அழைத்துச்சென்றுள்ளனர். அங்கு ரமேஷிடம் கடுமையாக விசாரணை நடத்தியுள்ளனர். அந்தக் கண்காணிப்பகத்தின் வீடியோவில் இது தெளிவாக விரிகிறது.

மட்டக்களப்பு மாவட்டத்துக்கே தளபதியாக இருந்தவரை, ஓலைக் கொட்டகையின் கீழ் உட்காரவைத்து, விசாரணையைத் தொடங்குகிறார்கள். இயற்பெயர் என்ன, சொந்த ஊர் எது, திருமணம் ஆகிவிட்டதா, மனைவி, குழந்தைகள் பெயர் என்ன, புலிகள் இயக்கத்தில் சேர்ந்தது எப்போது, இயக்கப் பெயர் என்ன, இயக்கத்தில் என்ன பொறுப்பு, முதலில் பொறுப்புவகித்த பகுதி எது, கடைசியாகப் பொறுப்பு வகித்த பிரதேசம் எது… இப்படி அடுத்தடுத்து விடாமல் கேட்டுக்கொண்டே போகிறார், எதிர்ப்புறம் உள்ளவர். திடீரென, ‘மட்டக்களப்பு பிரதேசத்தின் சிங்களப் படை அதிகாரிகளின் பெயர் தெரியுமா?’ என கேள்வியாளர் கேட்க, பதில் அளிக்கத் தடுமாறுகிறார், ரமேஷ். அந்தக் காட்சி முடியும் தறுவாய் அது… எதிர்த் தரப்பில் நின்றவர் என்ன செய்தாரோ… பயந்துபோன கோழிக்குஞ்சு போல, ”ஐ அண்டர்ஸ்டுட் சார்… அண்டர்ஸ்டுட் சார்” என கேணல் ரமேஷ் சொல்வதுடன் காட்சி முடிவடைகிறது.

இன்னொரு வீடியோவில், சாதாரண உடையுடன் படுக்கையில் கிடத்தப்பட்டு இருக்கிறார், ரமேஷ். சில விநாடி​களில் காட்சி மாறுகிறது.. சுற்றிலும் சிங்களப் படையினர் உட்கார்ந்து இருக்க, அவர்களுக்கு நடுவில் இருக்கிறார், ரமேஷ். பின்னணியில் ஒரு டிராக்டர் ஓடும் சத்தம் கேட்கிறது. அங்கும் கேள்வி மேல் கேள்வி கேட்கிறார்கள். ரமேஷிடம் ‘இன்று 22-ம் தேதி’ எனச் சொல்லும் அவர்கள், ‘பிரபாகரனின் மனைவி எங்கே இருக்கிறார்?’ என்றும் கேட்கிறார்கள் (மே 17-ம் தேதி சரண் அடைந்ததாக ரமேஷ் சொல்கிறார். 17-ம் தேதிதான் பிரபாகரனையும் அவரது குடும்பத்தினரையும் கொன்றதாக ராணுவம் சொல்கிறது. ஆனால் 22-ம் தேதி பிரபாகரனின் மனைவி எங்கே என்று கேட்கிறார்கள்!). அடுத்து, ரமேஷின் முதுகில் உள்ள குண்டு காயத்தின் வடுவைக் காட்டி, ‘எப்போது, எந்த சண்டையில் இந்தக் காயம் பட்டது?’ எனக் கேட்க, ‘1988-ல் இந்திய ராணுவக் காலத்தில் பட்டது’ என்கிறார், ரமேஷ்.

இப்படி எல்லாம் ரமேஷ் கடுமையாக விசாரிக்கப்பட்டு, சித்ரவதை செய்யப்பட்டுக் கொல்லப்பட்டு இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. ஆனால், போரில் ரமேஷ் கொல்லப்பட்டார் என்றே சிங்கள ராணுவ அதிகாரிகள் தொடர்ந்து சொல்லிவருகிறார்கள். முதல் வீடியோ டிசம்பர் மாதமும் அடுத்த வீடியோ கடந்த வாரமும் வெளியே வந்துள்ளன. டிசம்பர் மாதம் வெளியானதை ‘போலி வீடியோ’ என்று சிங்களப் படை சொன்னது. அதே பதிலைதான் இப்போதும் சொல்கிறார்கள்.

இந்த நிலையில்தான், நடேசன், புலித்தேவன் இருவரும் சுட்டுப் பொசுக்கப்பட்டு சடலங்களாகக் கிடக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. ஐரோப்பாவைத் தளமாகக் கொண்ட ‘அதிர்வு’ இணையதளம், இந்தப் படங்களை வெளியிட்டுள்ளது. ‘நடேசனுடன் சேர்ந்து சரண் அடைந்த அவரின் மனைவி, முதலில் கொலை செய்யப்பட்டுள்ளார். பிறகு, நினைத்துப் பார்க்கமுடியாத அளவுக்கு நடேசனும் புலித்தேவனும் கட்டிவைத்துச் சித்ரவதை செய்யப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டனர்’ என்றும் சொல்கிறது ‘அதிர்வு’ தகவல். அதற்கு ஆதாரமாக, இருவரின் வயிற்றுப் பகுதியிலும் கை மணிக்கட்டிலும் காயங்கள் இருப்பதைக் காட்டுகின்றனர்.

”நடேசன், புலித்தேவன் ஆகிய இருவரும் சரண் அடைவது குறித்து 18 மணி நேரத்துக்கு முன்பே ஐ.நா-வுக்குத் தெரியும்” என்று ஐ.நா-வில் பணியாற்றிய அதிகாரி ஒருவர் சொன்னதாகத் தகவல் இப்போது கசிந்துள்ளது.

”வன்னியில் நடந்த இறுதிப் போரில் விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவுப் பொறுப்பாளர் நடேசன், புலித்தேவன் உட்பட முக்கியஸ்தர்கள் சரணடைவது குறித்த தகவல்கள் 18 மணி நேரத்துக்கு முன்பாக ஐ.நா-வுக்குத் தெரியும். ஆனால் சரண் அடைந்தவர்களை இலங்கை ராணுவம் படுகொலை செய்து உள்ளது. சரணடைபவர்களின் விவரங்களும் ஐ.நா-வுக்கு அறிவிக்கப்பட்டு இருந்தது. ஐக்கிய நாடுகள் சபை சார்பாக அவர்களை வரவேற்பதற்கு கொழும்பில் பணியாற்றிய ஐ.நா. அதிகாரிகள் வவுனியாவுக்குச் செல்லவும் திட்டமிட்டு இருந்தனர்.

அப்போது (2009-மே) கொழும்புவில் பணியாற்றிய ஐ.நா. அதிகாரிகளில் பலரும் தற்போது பணியில் இருந்து விலகி உள்ளனர். அல்லது இலங்கையை விட்டு வெளியேறி உள்ளனர். சரணடைவது தொடர்பான மாயைகளை உருவாக்கி, விடுதலைப் புலிகளைக் கொலை செய்யவே கொழும்புவும் கொழும்புவுக்கு ஆதர​வான சில அதிகாரிகளும் முயற்சிகள் மேற்கொண்டார்கள்…” என்றும் ஐ.நா. தொடர்பான ஒருவர் கூறியதாக இணை​யங்களில் தகவல் பரவி உள்ளது.

இதுவரை ”நடேசன், புலித்தேவன் சுட்டுக் கொல்லப்பட்டது கட்டுக்கதை” என்று சொன்ன சிங்களத் தரப்பும் அவர்களுக்கு ”ஆமாம் சாமி” போட்ட​வர்களும், இந்தப் புகைப்படங்களைப் பார்த்தபின் என்ன சொல்வார்களோ, தெரியவில்லை.

அடுத்தடுத்து ஆதாரங்கள் வந்து​கொண்டே இருக்கின்றன. ஆனால், குற்றவாளிகள் மீது விசாரணைகூடத் தொடங்கவில்லை, இன்னும்! என்ன உலகமோ?

– இரா.தமிழ்க்கனல்

source:vikatan

பின்னூட்டமொன்றை இடுக

Filed under Uncategorized

உறுதி செய்யப்பட்டுவிட்டது:ஈழத்தில் நடந் தது படுகொலை!

humanrights.jpg

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் மூலமாக ஓர் இன அழிப்பு முயற்சியை இலங்கை அரசு திட்டமிட்டு நடத்தியது என்று தமிழ்ச் சமூகம் கூறிவந்தது. உலகில் பலரும் இதை இனப்படுகொலை என்றார்கள். சமூக ஆர்வலர்களும் மனித உரிமை அமைப்புகளும் இதைப் போர்க்குற்றம் என்று வரையறுத்தார்கள். சிலர் மனித உரிமை மீறல்கள் என்றார்கள். இப்படியாக, இலங்கை அரசுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் கொஞ்சம் கொஞ்சமாக வலுவிழந்து கொண்டே வந்திருக்கின்றன.

எத்தனையோ புகார்கள், கோரிக்கைகள் வந்த பிறகும் ஐ.நா.வுக்கு மட்டும் தமிழர்கள் மீது கரிசனம் பிறக்கவில்லை என்று குறைகூறப்பட்டது. 2009-ம் ஆண்டு மே 18-ம் தேதி நந்திக்கடலில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் கொடூரமாக முடிவுக்கு வந்தபிறகு, ஓராண்டு வரை ஐ.நா. எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. முக்கிய அரசியல் தலைவர் படுகொலை செய்யப்பட்டால்கூட அவசர அவசரமாக விசாரணைக் குழு அமைத்துப் புலனாய்வு செய்வதுதான் ஐ.நா.வின் வழக்கம். இங்கே பல்லாயிரக்கணக்கான அப்பாவி மக்கள் போர் என்ற பெயரில் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டபோது, ஐ.நா. வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்ததாகக் குற்றம்சாட்டப்பட்டது.

போர் முடிந்து சுமார் 13 மாதங்களுக்குப் பிறகு இது தொடர்பாக நிபுணர் குழுவை ஐ.நா. அமைத்தது. இந்தோனேஷியாவின் முன்னாள் அட்டர்னி ஜெனரல் மார்ஸýகி தாரூஸ்மன் தலைமையிலான இந்தக் குழுவில் தென்னாப்பிரிக்க மனித உரிமை ஆர்வலர் யாஸ்மின் சூகா, அமெரிக்க வழக்கறிஞர் ஸ்டீவன் ராட்னர் ஆகியோர் இடம்பெற்றிருக்கின்றனர்.

பெரும்பாலானவர்கள் நினைத்துக் கொண்டிருப்பதைப் போல இது விசாரணைக் குழு அல்ல. இனப்படுகொலை, போர்க்குற்றங்கள் என்கிற ரீதியில் விசாரணை நடத்துவது இதன் நோக்கமுமல்ல. இலங்கை அரசை அதன் கடமைக்குப் பொறுப்பாக்குதல் என்கிற அடிப்படையிலேயே இந்த நிபுணர்குழு பணியாற்றியது. அதுவும் ஐ.நா.வின் பொதுச் செயலருக்கு ஆலோசனை வழங்குவதற்காக மட்டுமே. இந்த அளவிலாவது ஒரு குழு அமைக்கப்பட்டதே என்பதில் பலருக்குத் திருப்தி ஏற்பட்டது என்பதையும் மறுக்க முடியாது.

கடந்த மார்ச் 31-ம் தேதியே இந்தக் குழு தனது அறிக்கையைத் தயாரித்து விட்டது. விசாரணைக் குழுக்களைப் போல இந்த நிபுணர் குழு செய்தியாளர் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யவில்லை. கடந்த 12-ம் தேதி தனது அறிக்கையை நேரடியாக ஐ.நா.பொதுச் செயலர் பான் கீ மூனிடம் வழங்கியது. அவரும் அதை வெளியிடவில்லை. ஐ.நா.வில் இருக்கும் இலங்கை அரசின் பிரதிநிதிகளுள் ஒருவரான ஷவேந்திர சில்வாவிடம் அறிக்கையின் ஒரு பிரதியை அவர் ஒப்படைத்தார்.

இப்படிப்பட்ட ரகசிய அறிக்கை எப்படியோ அண்மையில் ஊடகங்களில் வெளியானது. இலங்கை அதிபர் ராஜபட்சவுக்கு ஆதரவானதாகக் கருதப்படும் "தி ஐலேண்ட்’ பத்திரிகை இந்த அறிக்கையை வெளியிட்டது. ஐக்கிய நாடுகள் சபையோ, இலங்கை அரசோ எந்த மறுப்பும் தெரிவிக்கவில்லை என்பதால், இதுவே உண்மையான அறிக்கையாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான உச்சகட்ட போரை, "நெருக்கடியில் உள்ள அப்பாவிகளை மீட்கும் நடவடிக்கை’ என்றே இலங்கை அரசும் ராஜபட்சவும் கூறிவந்தனர். பொதுமக்கள் கொல்லப்படக்கூடாது என்கிற கொள்கையின் அடிப்படையிலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்றும் அவர்கள் கூறினர்.

ஆனால் ஐ.நா.வின் அறிக்கையில் இதற்கு நேர் எதிரான கருத்து கூறப்பட்டுள்ளது. சர்வதேச மனிதநலச் சட்டத்தையும் மனித உரிமைச் சட்டத்தையும் இலங்கை ராணுவமும் விடுதலைப்புலிகளும் மீறியிருப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் உண்மையாக இருப்பதற்கு முகாந்திரம் இருப்பதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இவற்றில் சில போர்க்குற்றங்கள் என்கிற வரையறைக்குள் வரும் அளவுக்கு மிகக் கொடிய குற்றங்கள் எனவும் அந்த அறிக்கை குறிப்பிட்டுள்ளது.

2008-ம் ஆண்டு செப்டம்பர் முதல் போர் முடிவுக்கு வரும் வரையில் வன்னிப் பகுதியில் நடந்த சம்பவங்கள் பற்றி இந்த அறிக்கை விளக்கியிருக்கிறது.

வன்னிப் பகுதியில் முன்னேறிச் சென்ற ராணுவம் மிக அதிக அளவில் குண்டுகளை வீசி, பெரும் எண்ணிக்கையிலான மக்களைக் கொன்றிருக்கிறது. இந்தக் குண்டுவீச்சில் இருந்து தப்பியோடிய சுமார் 3 லட்சத்து 30 ஆயிரம் பொதுமக்கள் ராணுவத்துக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே சிக்கிக் கொண்டனர். இவர்களையே விடுதலைப் புலிகள் கேடயமாகப் பயன்படுத்தி இலங்கை ராணுவத்தின் தாக்குதலைச் சமாளித்தனர் என்று அந்த அறிக்கை கூறுகிறது.

அப்பாவிகள் கொல்லப்படுவதை எதிர்த்த ஊடகங்களையும் விமர்சித்த சமூக ஆர்வலர்களையும் இலங்கை அரசு பல்வேறு வழிகளில் மிரட்டியும் துன்புறுத்தியும் அடக்கியிருக்கிறது. மர்மான "வெள்ளை வேன்களை’ பயன்படுத்தி அரசுக்கு எதிரானவர்களைக் கடத்திச் செல்லும் நடவடிக்கைகள் நடந்திருக்கின்றன. இப்படிக் கடத்தியவர்கள் காணாமலேயே போயிருக்கிறார்கள்.

ஐ.நா.வின் அறிக்கையில் கூறப்பட்டிருக்கும் மிக முக்கியமான தகவல், 3 பாதுகாப்பு வலயப் பகுதிகளில் நடத்தப்பட்ட தாக்குதலைப் பற்றியது. கடுமையான தாக்குதல் நடக்க இருப்பதால், இந்தப் பாதுகாப்பு வலயப் பகுதிக்குள் சென்று விடுமாறு ராணுவம் முதலில் பொதுமக்களை அறிவுறுத்தியது. இந்தப் பகுதியில் கனரக ஆயுதங்கள் பயன்படுத்தப்படாது என்றும் ராணுவம் உறுதியளித்தது. இதனால், பல இடங்களில் சிதறிக்கிடந்த மக்கள் இந்தப் பகுதிகளில் குவிந்தனர்.

இந்தப் பகுதிகளைப் பற்றிய தெளிவான வரைபடமும் உளவுத் தகவல்களும் ராணுவத்திடம் இருந்தன. அப்படியிருந்தும், பாதுகாப்பு வலயப் பகுதியில் இருந்த ஐ.நா. மையமும் உணவு வழங்கும் பகுதியும் ராணுவத்தால் குண்டுவீசித் தகர்க்கப்பட்டன.

காயமடைந்தவர்களுக்கு உதவி செய்வதற்காக வந்த செஞ்சிலுவைச் சங்க கப்பல் நின்று கொண்டிருந்த கடற்கரைப் பகுதியிலும் இலங்கை ராணுவம் சரமாரியாகக் குண்டுகளை வீசியது. இந்தக் கப்பல் வருவது குறித்த தகவல் ஏற்கெனவே இலங்கை அரசுக்கும் ராணுவத்துக்கும் தெரிவிக்கப்பட்டிருந்தது. ராணுவத்தின் உளவுப் பிரிவுக்கும் இதுபற்றித் தெரியும். அப்படியிருந்தும் கப்பலையொட்டிய கடற்கரைப் பகுதியில் குண்டுகள் வீசப்பட்டன என்று ஐ.நா. அறிக்கை கூறுகிறது.

வன்னியில் இருந்த எல்லா மருத்துமனைகளும் தாக்குதலுக்கு இலக்காகின. இது தவறுதலாக நடந்ததாகக் கூற முடியாது. மருத்துவமனைகள் எங்கெங்கு இருக்கின்றன என்பது ராணுவத்துக்கு நன்றாகவே தெரிந்திருந்தும், குறிவைத்து இந்த மருத்துவமனைகள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

இதுபோன்ற தாக்குதல்களால் உணவு, மருந்து வினியோகம் ஆகியவை முடங்கின. வன்னிப் பகுதியில் யாருக்கும் அறுவைச் சிகிச்சைக்குத் தேவையான மருந்துகளும் கருவிகளும் கிடைத்துவிடக்கூடாது என்பதில் ராணுவம் மிகவும் கவனமாகவே இருந்தது.

போர் நடந்த பகுதியில் சிக்கியிருந்த மக்களின் எண்ணிக்கை வேண்டுமென்றே குறைத்துக் கூறப்பட்டது. இதன் பிறகு தாக்குதல் தீவிரப்படுத்தப்பட்டது. முடிவில் 2009-ம் ஆண்டு ஜனவரி முதல் மே மாதம் வரையிலான காலத்தில் மட்டும் பல்லாயிரக் கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர். இவர்களில் பெரும் பகுதியினர் யாரென்றே அடையாளம் காணப்படவில்லை.

போர் முடிவுக்கு வந்துவிட்டதாக அறிவிக்கப்பட்ட பிறகும் அரசின் கொடுமைகள் நிற்கவில்லை. போரில் இருந்து தப்பியவர்கள் பிரத்யேக முகாம்களில் அடைக்கப்பட்டனர். அடையாளம் காண்கிறோம் என்கிற பெயரில் அனைவரும் சித்திரவதை செய்யப்பட்டனர். விடுதலைப் புலிகள் என்கிற சந்தேகத்தின் பேரில் முகாம்களில் இருந்து பிடித்துச் செல்லப்பட்டவர்கள் சித்திரவதை செய்யப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டனர். பெண்கள் பலாத்காரம் செய்யப்பட்டார்கள்.

முகாம்களில் கூட்டநெரிசல் அதிகமாக இருந்ததால் அடிப்படை வசதிகள் ஏதும் செய்யப்படவில்லை. கிட்டத்தட்ட சித்திரவதை முகாம்கள் போலவே இவை இருந்தன என்று ஐ.நா. அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது

source:dinamani

http://thamilislam.tk

பின்னூட்டமொன்றை இடுக

Filed under Uncategorized

லஞ்சம் தவிர்த்து, நெஞ்சம் நிமிர்த்து: ஒரு “ஹீரோ’வின், “ப்ளாஷ்பேக்’

large_224921.jpg

"ஒரு நாள் இந்த ஆபீசுக்குள்ளே போய், கலெக்டர் சீட்டில் உட்காரணும்…’ புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தை தன் சகோதரருடன் சைக்கிளில் கடக்கும்போதே, ஆசை விதை, அந்த சிறுவனுக்குள் முளைவிட்டிருந்தது. அந்த விதை, இன்று விருட்சமாக வளர்ந்து, மதுரையில் மையம் கொண்டு, நாட்டையே திரும்பி பார்க்க வைத்துள்ளது. தேர்தல் களத்தை சூடாக்கிய அந்த, "ஹீரோ’ மதுரை மாவட்ட கலெக்டர் சகாயம்.

புதுக்கோட்டை மாவட்டம் பெருஞ்சுணை கிராமத்தை சேர்ந்த, உபகாரம் என்பவருக்கு, ஐந்து மகன்கள். இதில் கடைக்குட்டியாய் பிறந்தவர் சகாயம். பெருஞ்சுணையில் பள்ளிப்படிப்பு, புதுக்கோட்டையில் பட்டப்படிப்பு, சென்னையில் முதுநிலை பட்டப்படிப்பு, சட்டப்படிப்பு என, அடுத்தடுத்து தன் கல்வி தகுதியை சகாயம் உயர்த்திக் கொண்டார். சிறுவனாய் இருந்தபோது முளைத்த, "கலெக்டர் கனவு’ நிறைவேற, யு.பி.எஸ்.சி., தேர்வு எழுத வைத்தது. ஐ.ஏ.எஸ்., கிடைக்காத நிலையில், ஏற்கனவே எழுதியிருந்த, டி.என்.பி.எஸ்.சி., குரூப்-1 தேர்வு முடிவுகள் வெளியாக, துணை கலெக்டரானார் சகாயம். தர்மபுரியில் பயிற்சி கலெக்டர், நீலகிரி மாவட்டம், கூடலூரில், ஆர்.டி.ஓ., திருச்சி கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது), கள்ளக்குறிச்சி சர்க்கரை ஆலை சிறப்பு அதிகாரி, காஞ்சிபுரம் ஆர்.டி.ஓ., திருச்சி சிவில் சப்ளைஸ் முதுநிலை மண்டல மேலாளர், கோவை கலால் பிரிவு துணை கமிஷனர், சென்னை, டி.ஆர்.ஓ., தொழில் வணிகத்துறை இணை இயக்குனர், மாநில தேர்தல் ஆணைய செயலர், நுகர்பொருள் வழங்கல் துறை இணை ஆணையர், நாமக்கல் மாவட்ட கலெக்டர், புது திருப்பூர் மேம்பாட்டு கழக நிர்வாக இயக்குனர், மதுரை கலெக்டர் என, இவர், "பந்தாடப்பட்ட’ விதமே இவரது நேர்மைக்கு சான்றாக சொல்லலாம்.

பதவி வகித்த இடங்களில் சகாயம் படைத்த சாதனைகளில் சில:

* அ.தி.மு.க., ஆட்சி காலத்தில், நீலகிரி மாவட்டம், கூடலூரில் ஆர்.டி.ஓ.,வாக இருந்த போது, நேர்மையான நடவடிக்கைகளால், அப்பகுதி மக்களின், "தோழனாக’ மாறினார் சகாயம். அப்போது மாவட்ட கலெக்டராக இருந்த லீனாநாயருக்கு, சகாயத்தின் செல்வாக்கு சங்கடத்தை கொடுக்க, அதிரடியாக அங்கிருந்து மாற்றம் செய்யப்பட்டார்.

* காஞ்சிபுரம் ஆர்.டி.ஓ.,வாக இருந்தபோது, மாசடைந்த குளிர்பானத்தை விற்பனை செய்தது தொடர்பாக வந்த புகாரையடுத்து, "பெப்சி’ குளிர்பான உற்பத்தி ஆலைக்கு, "சீல்’ வைத்து பரபரப்பு ஏற்படுத்தினார். பாலாற்றில் மணல் திருட்டை தடுக்க எடுத்த கடுமையான நடவடிக்கையால், கொலை முயற்சி தாக்குதலில் இருந்து தப்பினார்.

* கோவை மாவட்டத்தில் கலால் துறை துணை ஆணையராக இருந்த போது, மதுபானக் கடை ஏலத்தை அரசு விதிமுறைப்படி நடத்த வேண்டும் என்பதில் உறுதியாய் இருந்தார். அரசியல்வாதிகள், பினாமிகள் பெயரில் ஏராளமான கடைகளை எடுப்பதையும், "சிண்டிகேட்’ முறையில் நடந்த முறைகேடுகளுக்கு, "செக்’ வைத்தார்.

* அ.தி.மு.க., ஆட்சி நடந்த போது, திருப்பூர் அ.தி.மு.க., பிரமுகர் ஒருவருக்கு சொந்தமான பிராந்தி கடைகளில் அதிரடி சோதனைகளை நடத்தி பரபரப்பு ஏற்படுத்தினார். கோவையில் பிரபலமான சைவ ஓட்டலில், அனுமதி பெறாமல் மது வகைகள் பதுக்கி விற்கப்படுவதை அறிந்து, நேரடியாக, "ரெய்டு’ நடத்தி பரபரப்பை ஏற்படுத்தினார்.

* சென்னை டி.ஆர்.ஓ.,வாக இருந்தபோது, பிரபல ஓட்டல் நிறுவனம் ஆக்கிரமித்திருந்த, 48 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை அதிரடியாக மீட்டார். இதேபோல், 500 கோடி ரூபாய் மதிப்புள்ள பல்வேறு ஆக்கிரமிப்புகள், சகாயத்தால் அரசின் வசமானது. சுனாமி நிவாரண பணிகளில் நடந்த முறைகேடுகளை களைந்து, உண்மையிலேயே பாதிக்கப்பட்டவர்கள் பலன் பெற உதவினார்.

* தி.மு.க., ஆட்சியின் போது, முதல்வருக்கு இவர் எழுதிய கடிதம், அதிகாரிகள் மட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. "நேர்மையான அதிகாரிகள் புறக்கணிக்கப்படுகின்றனர்’ என்பதோடு, தன் சொத்து விவரம், வங்கிக் கணக்கு உள்ளிட்டவற்றை கடிதத்தில் குறிப்பிட்டு, "இது தவிர எனக்கு ஏதாவது சொத்து இருந்தால், நடவடிக்கை எடுங்கள்’ என்று பகிரங்கமாக சவால் விடுத்தார். அதோடு, "நியாயம் கேட்டு, குடும்பத்தோடு உண்ணாவிரதம் இருப்பேன்’ என்ற போர் குரலை தொடர்ந்தே, சகாயத்திற்கு ஐ.ஏ.எஸ்., தகுதி உயர்வு கிடைத்தது என்கிறது நேர்மையான அதிகாரிகள் வட்டாரம்.

* நாமக்கல் மாவட்ட கலெக்டராக சகாயம் பணியாற்றிய இரண்டரை ஆண்டுகள், அந்த மாவட்ட மக்களுக்கு பொற்காலமாக இருந்தது. அந்த காலகட்டத்தில் தன் சொத்து கணக்கை வெளியிட்டு, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் மட்டத்தில் பொறாமைக்குள்ளானார்; பொதுமக்கள் மத்தியில் பெருமைக்குள்ளானார்.

* இவரது நேர்மைக்கு தேர்தல் கமிஷன் கொடுத்த அங்கீகாரம், தற்போதைய மதுரை கலெக்டர் பதவி. இவரது இருக்கைக்கு பின்புறம் இருக்கும் வாசகங்கள், "லஞ்சம் தவிர்த்து, நெஞ்சம் நிமிர்த்து!’

source:dinamalar

பின்னூட்டமொன்றை இடுக

Filed under Uncategorized

மெகா தேர்தல் ரிசல்ட் ஸ்பெஷல்

ன்பார்ந்த வாசகப் பெருமக்களே…

தமிழகச் சட்டசபைத் தேர்தல் களத்தில், 234 தொகுதிகளிலும் வெற்றியின் முகட்டைத் தொடப்போவது யார் என்றும் தோல்வியைத் தழுவத் தயாராக இருப்பவர் யார் என்ற நிலவரங்களைக் காட்டும் மெகா ரிசல்ட் ஸ்பெஷல் உங்கள் கைகளில் தவழ்கிறது!

தமிழகத்தின் 234 சட்டமன்றத் தொகுதிகள் மற்றும் புதுவையின் 30 தொகுதிகளில் வெற்றி பெறப்​போகும் வெற்றி வேட்பாளரை அறிய, ஜூ.வி-யின் பிரமாண்டமான நிருபர் குழு, தேர்தல் களத்தின் மூலை முடுக்கு எல்லாம் புகுந்து புறப்பட்டது.

மூன்று முக்கியமான நெருக்கடிகளை நமது குழு எதிர்கொண்டது!

அதில் முதலாவது… இதுவரை இருந்த 234 தொகுதிகள் மறு சீரமைப்புக்குப் பிறகு பல விதங்களில் மாறி உள்ளது. 234 என்ற எண்ணிக்கை மாறவில்லையே தவிர… நகரங்களும் கிராமங்களும் வெவ்வேறு தொகுதிகளாக மாறி உள்ளன. எனவே கடந்த கால வெற்றி, தோல்விகளை மையமாக வைத்து… எந்த முடிவுக்கும் வர முடியாது!

அரசியல் தட்ப வெட்பம், மாநிலம் முழுவதும் ஒரே மாதிரி சீரான நிலையில் இல்லை. ஆளும் கட்சிக்கான எதிர்ப்போ… எதிர்க் கட்சிக்கான ஆதரவோ… தொகுதிக்குத் தொகுதி, மாவட்டத்துக்கு மாவட்டம் மாறியபடியே இருந்தது. அதாவது 1996 சட்டமன்றத் தேர்தலிலோ, 2004 நாடாளுமன்றத் தேர்தலின்போதோ இருந்த ஒரே சீரான அலை இம்முறை இல்லை… இது இரண்டாவது!

வேட்பாளரின் வெற்றி தோல்வியைத் தீர்மானிப்பதில் பணம் மிக மிக முக்கியமான விஷயமாக இருக்கிறது. பணம் கொடுத்தால்தான் ஜெயிக்கலாம் என்று பெரும்பாலான வேட்பாளர்கள் நினைப்பதும், பணம் கொடுத்தால் கொடுத்த கட்சிக்கு வாக்களிப்பேன் என்று பெரும்பாலான வாக்காளர்கள் நினைப்பதுமான மனோபாவம் அனைத்துத் தொகுதியிலும் வெளிப்படையான விஷயமாக இருக்கிறது. மக்கள் மனசை பணம் படைத்தவர் மாற்றலாம் என்ற விதி… மூன்றாவது சிக்கல்!

கடந்த புதன் மற்றும் வியாழக் கிழமைகளில் (ஏப்ரல் 6, 7) இந்தத் தேர்தல் நிலவரங்களை அறிய நமது நிருபர் படை முயன்றது. மகுடம் யாருக்கு என்பது மே 13-ம் தேதிதான் தெளிவாகத் தெரியும். ஆனாலும் மகுடத்தை எட்டிப்பிடிப்பதற்கான ஓட்டத்தில் யார் முன்னே போய்க்கொண்டு இருக்கிறார்கள் என்பதை ஜூ.வி-யின் இந்தத் தேர்தல் ரிசல்ட் ஸ்பெஷல் உங்களுக்கு கலங்கரை விளக்கமாகக் காட்டும்.

நமக்குக் கிடைத்துள்ள எண்ணிக்கையை வைத்துப் பார்த்தால், தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய இரண்டு கட்சிகளுக்குமே தனித்து ஆட்சியை அமைக்கத் தேவையான மந்திர எண் 118 கிடைக்காது என்பதே இன்றைய நிலவரம். சட்டமன்றத்தில் அதிக உறுப்பினர்களைக்கொண்ட கட்சியாக அ.தி.மு.க. வரும் என்றே தெரிகிறது. அவர்கள் கூட்டணி ஆட்சியை அமைப்​பதற்கான சூழ்​நிலையே உருவாகும்​போல!

தேர்தலுக்கு இன்னமும் 6 நாட்கள் இருக்கும் சூழலில் 3 காரணங்கள் நாம் இதுவரை எடுத்த முன்னணி நிலவரத்தில், மாற்றங்கள் ஏற்படுத்தும் சக்தி படைத்தவை!

தேர்தல் கமிஷனின் கெடுபிடிகளையும் மீறி, (அல்லது அவர்கள் தங்களைத் தாங்களே இறுக்கம் தளர்த்திக்கொண்டால்!) நினைத்த தொகுதி​களில் எண்ணிவைத்த பணத்தை விநியோகிக்க முடிந்தாலோ…

‘மன சாட்சிப்படி வாக்களியுங்கள்’ என்று ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ அறிவித்தது. தமிழகத்தில் பரவலாக 48 தொகுதிகளின் வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கும் சக்தி ம.தி.மு.க-வுக்கு இருப்பது கடந்த காலங்களில் நிரூபிக்கப்பட்டது. இந்தக் கட்சியினருக்கு கருணாநிதி என்றால் எட்டிக் காய்தான். ஆனால், சமீபத்திய கடுப்பு ஜெயலலிதா மீதே அதிகமாக இருக்கிறது. மன வேதனை ஜெயலலிதா மீதான கோபமாக மாறினாலோ….

கருணாநிதியும் ஜெயலலிதாவும் தங்களது கடைசி அஸ்திரமாகப் பயன்படுத்தப்​போகும் லாஸ்ட் புல்லட் தாக்குதலைப் பொறுத்தோ…

இந்த முன்னணி நிலவரத்தில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு இருக்​கிறது என்பதையும் சொல்லியாக வேண்டும்.

அன்பார்ந்த வாக்காளப் பெருமக்களே…

இது நமக்கான தேர்தல். யாரோ 234 பேரை எம்.எல்.ஏ.க்களாக ஆக்க… எந்தக் கட்சியையோ ஆட்சியில் அமர்த்த ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் திருவிழா அல்ல இது.

இதில் நாம் பார்வையாளர்கள் அல்ல. நாம் ஒவ்வொருவரும் பங்கேற்பாளர். நம்மைக் காக்க இருக்கும் ஜனநாயகத் தேவதையை நாமே உருவாக்கப்போகிறோம். படைப்புக் கடவுளுக்கு இருக்கும் வலிமை நமக்கும் உண்டு. அதை நிரூபிக்கும் நாள் ஏப்ரல் 13…

வாக்களிக்க மறவாதீர்கள்

source:vikatan

பின்னூட்டமொன்றை இடுக

Filed under Uncategorized

பாராளுமன்ற கூட்டத்தில் ஆபாச படம் பார்த்த எம்.பி

இந்தோனேஷியாவில் பாராளுமன்ற கூட்டத்தில் ஆபாச படம் பார்த்த எம்.பி.
ஐகார்த்தா, ஏப். 11-

இந்தோனேஷியாவில் பாராளுமன்ற கூட்டத்தின் போது எம்.பி. ஒருவர் தனது கம்ப்யூட்டரில் ஆபாச படம் பார்த்தார்.

இந்தோனேஷியாவை சேர்ந்தவர் அரிபின்டோ. இவர் பி.கே.எஸ். கட்சியின் எம்.பி. ஆக உள்ளார். தற்போது அங்கு பாராளுமன்ற கூட்டம் நடைபெற்று வருகிறது. அதில் அவர் கலந்து கொண்டார். கூட்டத்தில் விவாதம் நடந்தது. மற்ற எம்.பி.க்கள் காரசாரமாக விவாதத்தில் கலந்து கொண்டு பேசினார்கள்.

ஆனால் அரிபின்டோ மட்டும் தான் எடுத்து சென்ற கையடக்க கம்ப்யூட்டரில் நிர்வாண படங்களை மறைத்து வைத்து பார்த்து ரசித்தார். இக்காட்சி பாராளு மன்றத்தில் பொருத்தப்பட்டுள்ள கேமராவில் பதிவானது.

மேலும், இது அங்கிருந்து ஒளிபரப்பாகும் இன்டர்நெட்டிலும் ஒளிபரப்பப்பட்டது. இதை அந்நாட்டு பத்திரிகைகளும் வெளியிட்டன. இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அந்நாட்டு மக்கள் அரிபின்டோ எம்.பி. குறித்து சரமாரியாக வசை பொழிந்து தங்கள் கருத்துக்களை தெரிவித்துள்ளனர். எம்.பி.யின் இச்செயல் வெட்ககேடானது. இந்த தண்டனைக்காக அவரை சவுக்கால் அடிக்க வேண்டும் என்று கூறியுள்ளனர். மற்றொரு தரப்பினரோ இவரை கல்லால் அடித்து சித்ரவதை செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.

தற்போது இந்த விவகாரம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே இந்த விவகாரம் குறித்து விசாரிக்க உத்தரவிடப்பட்டது. இதுகுறித்து பாராளுமன்ற கவுன்சில் துணை தலைவர் நுதிர் மன்முனீர் கருத்து கூறியுள்ளார்.

அவரது இந்த செயல் பாராளுமன்றத்தின் கண்ணியத்தையும், மதிப்பையும் குலைப்பதாக உள்ளது. எனவே, அவர் தனது பதவியை ராஜினாமா செய்வது நல்லது. இல்லாவிட்டால் அவர் எம்.பி. பதவியில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்படுவார் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஆனால் இந்த குற்றச்சாட்டை அரிபின்டோ எம்.பி. திட்டவட்டமாக மறுத்துள்ளார். இ-மெயிலை திறந்துபோது ஆபாச படங்கள் வெளியாகி விட்டன. நான் வேண்டுமென்றே அவற்றை பார்க்கவில்லை என தெரிவித்துள்ளார்.

source:maalaimalar

பின்னூட்டமொன்றை இடுக

Filed under Uncategorized

ஒரு பெண் நள்ளிரவில் நடத்திய அதிரடி ஆக்சன ்

large_219949.jpgதிருச்சி: திருச்சியில், அமைச்சர் நேரு போட்டியிடும் மேற்கு தொகுதியில், அதிரடியாக செயல்பட்டு, பணப் பட்டுவாடா, பரிசுப் பொருட்கள் வினியோகத்தை கட்டுப்படுத்தியதோடு, நேற்று முன்தினம், தனியாளாக சென்று, ஆம்னி பஸ்சில் பதுக்கி வைத்திருந்த, 5.11 கோடி ரூபாயை பறிமுதல் செய்த ஆர்.டி.ஓ., சங்கீதாவுக்கு, தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் பாராட்டு தெரிவித்துள்ளார்.

திருச்சி ஆம்னி பஸ்சில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த, 5 கோடியே 11 லட்சத்து 27 ஆயிரம் ரூபாய் பணத்தை பறிமுதல் செய்ததன் மூலம், "தேர்தல் நேரத்தில் முறைகேடாக பதுக்கிவைக்கப்பட்டிருந்த அதிகளவு பணத்தை பறிமுதல் செய்தவர்’ என்ற பெருமைக்கு, திருச்சி ஆர்.டி.ஓ., சங்கீதா சொந்தக்காரர் ஆகிவிட்டார். நேற்று முன்தினம், அமைச்சருக்கு நெருக்கமானவருக்கு சொந்தமான ஆம்னி பஸ்சில் பணம் இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில், அந்த இடத்துக்கு டிரைவருடன் தனியாக சென்று, ஆம்னி பஸ்சில் பதுக்கி வைத்திருந்த, 5 கோடியே 11 லட்சத்து 27 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்தார். இதையறிந்த தமிழக தேர்தல் கமிஷனே, அதிர்ச்சி அடைந்தது. தமிழகத்தில், ஏன் இந்தியாவில் கூட இவ்வளவு பெரிய தொகையை தேர்தல் நேரத்தில், யாரும் பறிமுதல் செய்ததில்லை. அப்படியிருக்க ஆர்.டி.ஓ., சங்கீதா, ஆம்னி பஸ்சில், 5.11 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்த விஷயம், நாடு முழுவதும் பேசப்படும் விஷயமாக மாறியுள்ளது.

இப்படி ஒரு சாதனைக்கு சொந்தக்காரரான திருச்சி ஆர்.டி.ஓ., சங்கீதாவின் (33) சொந்த ஊர், சேலம் மாவட்டம், மேட்டூர். இவரது தந்தை சண்முகம், கால்நடைத் துறையில், துணை இயக்குனராக இருந்து ஓய்வு பெற்றவர். தாயார் ஜமுனா. இவருடைய தம்பி சுரேஷ், மெக்கானிக்கல் இன்ஜினியரிங் முடித்து விட்டு, சென்னையில் சொந்தமாக தொழில் செய்து வருகிறார். கடந்த 2000மாவது ஆண்டு சென்னையிலுள்ள அரசு சித்த மருத்துவக் கல்லூரியில் பி.எஸ்.எம்.எஸ்., படித்த சங்கீதா, சென்னையில் ஏழு ஆண்டு டாக்டராக பணியாற்றியுள்ளார். இந்த காலகட்டத்தில், 2004ம் ஆண்டு சென்னையைச் சேர்ந்த முரளி என்ற சிவில் கான்ட்ராக்டரை திருமணம் செய்து கொண்டார். அதன்பின், தன் சிறுவயது லட்சியமான கலெக்டர் ஆகவேண்டும் என்பதற்காக, சிவில் சர்வீஸ் தேர்வில் பங்கேற்றுள்ளார். ஆனால், வெற்றி கிடைக்கவில்லை. மீண்டும் 2009ம் ஆண்டு டி.என்.பி.எஸ்.சி., தேர்வெழுதி ஆர்.டி.ஓ.,வாக தேர்வானார். கடந்த 2009 டிசம்பரில் திருவாரூரில் பயிற்சி ஆர்.டி.ஓ.,வாக பணியில் சேர்ந்த சங்கீதா, அங்கிருந்து மாற்றலாகி, ஆறு மாதங்களுக்கு முன்தான் திருச்சி ஆர்.டி.ஓ.,வாக பதவியேற்றார்.

தேசிய அளவில் புகழ்பெறும் அளவு, சாதனை படைத்துள்ள ஆர்.டி.ஓ., சங்கீதா, நமது நிருபரிடம் கூறியதாவது: திருவாரூர் கலெக்டராக இருந்த சந்திரசேகரன் சாரை, என்னுடைய குரு என்றே கூறலாம். அவர்தான் என்னுடைய சிறப்பான பணிக்கு வழிகாட்டி. அவருடைய ஆலோசனைகள், என்னுடைய பணியை நான் சிறப்பாக செய்ய உதவியாக உள்ளது. 5.11 கோடி ரூபாய் பணத்தை பறிமுதல் செய்தது என்னுடைய பணிகளில் ஒன்று. என்னுடைய வேலையை செய்ததற்காக இவ்வளவு பாராட்டுகள் தேவையில்லை என நினைக்கிறேன். பணத்தை பறிமுதல் செய்தபோது, முதலில் அதை எப்படியாவது அரசிடம் ஒப்படைத்து விடவேண்டும் என்ற நோக்கத்தில் தான் செயல்பட்டேன். அப்போது தனியாளாக இருக்கிறோம் என்ற பயஉணர்ச்சி எல்லாம் இல்லை. நான் எப்போதும், எந்த ஒரு விஷயத்தையும் அலட்சியப்படுத்துவதில்லை. ஆகையால் தான் நள்ளிரவில் வந்த அழைப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து, ஆம்னி பஸ்சை சோதனையிட்டேன்.

"மக்களுக்காக பணி செய்யவேண்டும்’ என்ற சிறுவயது முதலே நினைத்துக் கொண்டிருப்பேன். அப்படிப்பட்ட பணியில் உள்ளதால் மகிழ்ச்சியுடன் வேலை செய்து வருகிறேன். டாக்டர் தொழிலைவிட இதில் நேரடியாக மக்களுக்கு உதவ முடியும். நேர்மையான வழியில் பணியை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் தான், பணியாற்றி வருகிறேன். 5.11 கோடி பணம் பறிமுதல் செய்ததை விட, ஆழ்வார்தோப்பு பகுதியில் கவுன்சிலர் வீட்டில் சோதனையிடும்போது சுற்றி, 100க்கும் மேற்பட்டோர் கூடியிருந்ததையே, "த்ரில்லிங்’கான விஷயமாக கருதுகிறேன். மீண்டும் ஐ.ஏ.எஸ்., படிக்கும் எண்ணமில்லை. ஏனென்றால், தமிழகத்தை விட்டு வெளியே செல்ல விரும்பவில்லை. இந்த பணியே எனக்கு மிகுந்த மனநிறைவை அளிக்கிறது. இவ்வாறு சங்கீதா கூறினார்.

தமிழகத்தில் முதன்முறையாக பெரிய அளவிலான தொகை, 5.11 கோடி பணத்தை பறிமுதல் செய்த ஆர்.டி.ஓ., சங்கீதாவுக்கு, நேற்று முன்தினம் இரவு, வீடியோ கான்பரன்ஸ் மூலம், தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீன்குமார், பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். ஆர்.டி.ஓ., சங்கீதாவின் துணிச்சல் மிக்க பணியை பாராட்டி மத்திய அரசோ, இந்திய தேர்தல் கமிஷனோ விருது வழங்குகிறதோ இல்லையோ, அமைச்சர் நேரு போட்டியிடும், திருச்சி மேற்கு தொகுதியில், தேர்தல் கமிஷனின் விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்தி, சிறப்பாக பணியாற்றி வரும் சங்கீதாவுக்கு, திருச்சி மாநகர மக்கள், "தைரியலட்சுமி’ என்ற விருதை வழங்கிவிட்டனர்.

source:dinamalar

http://thamilislam.tk

பின்னூட்டமொன்றை இடுக

Filed under Uncategorized