Monthly Archives: பிப்ரவரி 2011

மரக்கரண்டியால் புலியை விரட்டிய மலேசிய பழ ங்குடி வீரப் பெண்மணி

large_188134.jpg

கோலாலம்பூர் : மலேசியாவை சேர்ந்த ஒரு பழங்குடியினப் பெண், தனது கணவன்மேல் பாய்ந்த புலியை, பெரிய மரக்கரண்டியைக் கொண்டு, தலையிலேயே "நச்’சென அடித்து விரட்டியுள்ளார்.

மலேசிய நாட்டின் வட பகுதியில் அடர்ந்த காடுகள் அதிகம். இங்கு, பாரம்பரிய வேட்டைத் தொழிலில் ஈடுபட்டுள்ள ஜகாய் பழங்குடியினரும் ஒருபகுதியில் வசித்து வருகின்றனர். பழங்குடியினர் குடியிருப்பை சேர்ந்த டாம்புன் ஜெடியூ என்பவர் நேற்று தனது குடிசைக்கு அருகிலேயே அணில் வேட்டையில் ஈடுபட்டிருந்தார். அப்போது, திடீரென அவர் மீது புலி ஒன்று பாய்ந்து, அவரை தாக்கியுள்ளது. இதை சற்றும் எதிர்பாராத டாம்புன் அலறியபடி, அருகில் இருந்த மரத்தில் ஏறி தப்ப முயன்றுள்ளார்.அப்போதும் விடாத புலி, அவரை இழுத்து கீழே தள்ளியுள்ளது. புலியின் வாயை இறுகப் பிடித்துக் கொண்டபடி, டாம்புன் அபயக்குரல் எழுப்பியுள்ளார். இதைக் கேட்ட அவரது மனைவி, பெரிய மரக்கரண்டியை எடுத்து வந்து, புலியின் தலையிலேயே ஒரு "போடு’ போட்டுள்ளார். இதில் அதிர்ச்சி அடைந்த புலி, தலை சுற்றியபடி அருகில் இருந்த புதருக்குள் பாய்ந்து தப்பியோடி விட்டது.

இதையடுத்து, தலையிலும், கால்களிலும் காயங்களுடன் நகர்ப்பகுதி மருத்துவமனை ஒன்றில் டாம்புன் அனுமதிக்கப்பட்டார். அவர் கூறும்போது,’ எனது மனைவி மட்டும் உரிய நேரத்தில் வரவில்லை என்றால், நான் இறந்திருப்பேன்,’ என்றார். இதுபற்றி கேள்விப்பட்ட வனத்துறை அதிகாரிகள், சம்பந்தப்பட்ட இடத்தில் இருந்து, ஆள் நடமாட்டம் இல்லாத அடர்ந்த காட்டுக்குள் புலியை விரட்டியடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.புலியை முறத்தால் நையப்புடைத்த புறநானூறு காலத்து வீரப் பெண்மணி பற்றி கேள்விப்பட்டுள்ள நாம், இப்போதுதான் முதல்முறையாக இப்படி ஒரு நிகழ்ச்சி நடந்ததாக அறிகிறோம்.

source:dinamalar

பின்னூட்டமொன்றை இடுக

Filed under Uncategorized

புதிய இந்திய டேப்ளட் பிசி அறிமுகம்

வந்துவிட்டது இந்திய டேப்ளட் பிசி

https://i2.wp.com/img.dinamalar.com/data/uploads/E_1297578781.jpeg
லேப்டாப் கம்ப்யூட்டர் தயாரிப்பில் ஈடுபட்டு வரும் பெங்களூருவில் இயங்கும் மைக்ரோ ஸ்டார் இண்டர் நேஷனல் (MSIMicro Star International) நிறுவனம், தன் முதல் டேப்ளட் பிசியை அண்மையில் விற்பனைக்கு அறிமுகப் படுத்தியுள்ளது. MSI WindPad 100W Tablet PC என அழைக்கப்படும் இந்த பட்டய கம்ப்யூட்டர் இன்டெல் மொபைல் ப்ராசசரில் இயங்குகிறது. 10.1 அங்குல மல்ட்டி பாய்ண்ட் டச் ஸ்கிரீன், இரண்டு வீடியோ கேமராக்கள், ஜி-சென்ஸார், ஏ.எல்.எஸ். லைட் சென்சார் என நவீன தொழில் நுட்பங்களைக் கொண்டதாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆறு மணி நேரத்திற்கும் அதிகமாக திறன் தரும் பேட்டரி இதில் தரப்பட்டுள்ளது. விண்டோஸ் இன்டெல் வடிவமைப்பில் இந்த அளவிற்கு பேட்டரி திறன் கொண்டது இதுவே முதல் மொபைல் கம்ப்யூட்டராகும்.
இந்த பட்டய கம்ப்யூட்டரின் பரிமாணம் 274x173x18.5 மிமீ. எடை பேட்டரியுடன் 800 கிராம். ஒரு எஸ்.டி. கார்ட் ரீடர், யு.எஸ்.பி. 2 ஸ்லாட், மினி எச்.டி.எம்.ஐ. போர்ட் ஆகியன இருப்பதால், வழக்கமான கம்ப்யூட்டரில் உள்ள அனைத்து மல்ட்டி மீடியா வசதிகளையும் இதில் பெறலாம். எடை 800 கிராம் இருப்பதால், தங்களுடைய டேட்டா மையத்தைத் தங்களுடனேயே தூக்கிச் செல்ல விரும்பும் இளைஞர் களுக்கு உகந்ததாக இது உள்ளது.
இரண்டு கேமராக்கள் இருப்பதனால், இயக்குபவர் தன் சோஷியல் நெட்வொர்க் தளங்கள் மூலம், நண்பர்களுடன் தொடர்ந்து நேரடியாகத் தொடர்பில் இருக்கலாம். இன்னொரு கேமரா கான்பரன்ஸ் வசதிக்கான படங்கள் மற்றும் வீடியோக்களைத் தயார் செய்திடலாம்.
அறிமுகமாக, தற்போது இந்த பட்டய கம்ப்யூட்டர் மும்பையில் உள்ள 12 இ-ஸோன் விற்பனை மையங்களில் மட்டும் கிடைக்கிறது. விரைவில் இந்திய நகரங்கள் அனைத்திலும் விற்பனை செய்யப்படும் என இந்நிறுவன பொது மேலாளர் எரிக் குயோ தெரிவித்துள்ளார்.
இதன் சிறப்பம்சங்களை இங்கு காணலாம்.
1.WindTouch UI: இந்த கம்ப்யூட்டரில், வழக்கமான இன்டர்பேஸ் இல்லாமல், எம்.எஸ்.ஐ. நிறுவனம் தயாரித்த WindTouch என்னும் இடைமுகம் தரப்பட்டுள்ளது. இதில் கம்ப்யூட்டரில் வேலை, பொழுது போக்கு, கருவிகள் மற்றும் நெட்வொர்க் என்று நான்கு பிரிவுகள் தரப்பட்டுள்ளன.
2.EasyFace: முகம் அறிந்து இயக்கம். இந்த Face Recognition Software எம்.எஸ்.ஐ. நிறுவனத்தின் தயாரிப்பு. பட்டய பிசியில் தரப்பட்டுள்ள 1.3 எம்பி வெப்கேம் சாதனத்துடன் இணைந்து செயல்படுகிறது. இத்துடன் பயோமெட்ரிக் தொழில் நுட்பம், லாக் இன் பாஸ்வேர்ட் பாதுகாப்பு ஆகியவையும் உண்டு.
3. Taskbar magnifier: டாஸ்க் பாரினைச் சற்றுப் பெரிதாக்கிக் காட்டுவதன் மூலம், விரல்களால் தொட்டு இயக்கும் வசதி எளிதாகக் கிடைக்கிறது.
4. Photo Management Software: விரல்களினால் தொட்டு, புகைப்படங் களைப் பெரிதாக்கவும், சுழற்றவும் முடிகிறது. இதன் மூலம் எளிதாக நம் புகைப் படங்களை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள முடிகிறது.
5. பதிந்தே கிடைப்பது: பல புரோகிராம்கள் இதில் பதியப்பட்டு கிடைக்கின்றன. Microsoft Office Starter 2010 தொகுப்பு கிடைக்கிறது. இதில் டேப்ளட் பிசிக்களுக்கான வேர்ட் மற்றும் எக்ஸெல் 2010 உள்ளன.எனவே அலுவலக வேலைகளை எங்கும் எந்த நேரத்திலும் மேற்கொள்ளலாம். இத்துடன், அடோப் ரீடர், அடோப் பிளாஷ் பிளேயர் தரப்படுகிறது. இதனால் மல்ட்டிமீடியா அனுபவம் எளிதாகிறது.
6. ஹார்ட்வேர் சிறப்புகள்: இதில் மிகக்குறைந்த மின் சக்தியில் இயங்கும் இன்டெல் மொபைல் ப்ராசசர் (Intel Atom Z530 processor) இயங்குகிறது. ஆப்பரேட்டிங் சிஸ்டம் Windows 7 Home Premium. 2 ஜிபி டி.டி.ஆர்.2 மெமரி கிடைக்கிறது. 32 ஜிபி சாலிட் ஸ்டேட் ட்ரைவ் , இரண்டு யு.எஸ்.பி. போர்ட் உள்ளன. இவற்றுடன் இரண்டு கேமராக்கள் இதன் பயன்பாட்டினை இன்னும் சிறப்பாக மாற்றுகின்றன.
இதன் விலை ரூ.22,000 என்ற அளவில் இருக்கலாம். தொடக்கத்தில் ரூ.34,000 என்ற அளவில் திட்டமிடப்பட்டது.
இந்த டேப்ளட் பிசியைத் தயாரித்த, எம்.எஸ்.ஐ. என அழைக்கப்படும் மைக்ரோ ஸ்டார் இண்டர்நேஷனல் நிறுவனம், கம்ப்யூட்டருக்கான மெயின் போர்ட், கிராபிக் கார்ட்ஸ் மற்றும் நோட்புக் கம்ப்யூட்டர் தயாரிப்பில் முன்னணியில் இயங்கும் நிறுவனமாகும். கிராபிக் கார்ட் தயாரிப்பில் உலக அளவில் பெயர் பெற்றது.மெயின் போர்டு தயாரிப்பில் முதல் மூன்று நிறுவனங்களில் இடம் பெற்றுள்ளது.

source:dinamalar

பின்னூட்டமொன்றை இடுக

Filed under Uncategorized

இந்த பதிவை படிப்பவர்களுக்கு இரத்தம் வந் தால் நான் பொருப்பல்ல

1. செருப்புஇல்லாமநாமநடக்கலாம்

ஆனா,

நாமஇல்லாமசெருப்புநடக்கமுடியாது.

– தீவிரமாகயோசிப்போர்சங்கம்(எங்களுக்குவேறுஎங்கும்கிளைகள்
கிடையாது)

2. என்னதான்மனுசனுக்குவீடு, வாசல், காடு, கரைன்னுஎல்லாம்இருந்தாலும்,

ரயிலேறனும்னா,

ஃப்ளாட்பாரத்துக்குவந்துதான்ஆகனும். இதுதான்வாழ்க்கை.

3. பஸ்ஸ்டாப்கிட்டவெய்ட்பண்ணாபஸ்ஸுவரும்.

ஆனா,

ஃபுல்ஸ்டாப்கிட்டவெய்ட்பண்ணாஃபுல்லுவருமா?

நல்லாயோசிங்க! குவாட்டர்கூடவராது!!!

4. என்னதான்பொண்ணுங்கபைக்ஓட்டினாலும்,

ஹீரோஹோன்டா, ஹீரோயின்ஹோன்டாஆய்டாது!!

அதேமாதிரி,

என்னதான்பசங்கவெண்டைக்காய்சாப்பிட்டாலும்,

லேடீஸ்ஃபிங்கர், ஜென்ட்ஸ்ஃபிங்கர்ஆய்டாது!!!

5. டிசம்பர்31க்கும்,

ஜனவரி1க்கும்

ஒருநாள்தான்வித்தியாசம்.
ஆனால்,

ஜனவரி1க்கும்,

டிசம்பர்31க்கும்,

ஒருவருசம்வித்தியாசம்.

இதுதான்உலகம்.

6. பஸ்ஸ்டாண்ட்லபஸ்நிக்கும்.

ஆட்டோஸ்டாண்ட்லஆட்டோநிக்கும்.

சைக்கிள்ஸ்டாண்ட்லசைக்கிள்நிக்கும்.

ஆனா…

கொசுவத்திஸ்டாண்ட்லகொசுநிக்குமா??

யோசிக்கனும்…!!

7. தத்துவம்1:

இஞ்ஜினியரிங்காலேஜ்லபடிச்சாஇஞ்ஜினியர்ஆகலாம்.

ஆனா

பிரசிடன்சிகாலேஜ்லபடிச்சாபிரசிடன்ட்ஆகமுடியுமா?

தத்துவம்2:

ஆட்டோக்கு’ஆட்டோ’ன்னுபேர்இருந்தாலுமอ,

மேன்யுவலாத்தான்டிரைவ்பண்ணமுடியும்.

தத்துவம்3:

தூக்கமருந்துசாப்பிட்டாதூக்கம்வரும்,

ஆனா

இருமல்மருந்துசாப்பிட்டாஇருமல்வராது!

(என்னகொடுமைசார்இது!?!)

தத்துவம்4:

வாழைமரம்தார்போடும்,

ஆனா

அதைவச்சுரோடுபோடமுடியாது!

(ஹலோ! ஹலோ!!!!)

தத்துவம்5:

பல்வலிவந்தால்பல்லைபுடுங்கலாம்,

ஆனாகால்வலிவந்தால்காலைபுடுங்கமுடியுமா?

இல்லைதலைவலிவந்தால்தலையைதான்புடுங்கமுடியுமா?

(டேய்! எங்கஇருந்துடாகிளம்புறீங்க?!)

தத்துவம்6:

லாஸ்ட்பட்நாட்லீஸ்ட்…

சன்டேஅன்னைக்குசண்டைபோடமுடியும்,

அதுக்காக,

மன்டேஅன்னைக்குமண்டையபோடமுடியுமா?

(ஐயோ! ஐயோ!! ஐயோ!!! காப்பாத்துங்க!!!)

8. பில்கேட்ஸோடபையனாஇருந்தாலும்,

கழித்தல்கணக்குபோடும்போது,

கடன்வாங்கித்தான்ஆகனும்.

– ராவெல்லாம்முழ்ச்சுகெடந்துயோசிப்போர்சங்கம்

9. கொலுசுபோட்டாசத்தம்வரும்.

ஆனா,

சத்தம்போட்டகொலுசுவருமா?

10. பேக்வீல்எவ்வளவுஸ்பீடாபோனாலும்,

முன்வீல அதால முந்த முடியாது

ஃமுப்ரன்ட்வீலமுந்தமுடியாது.

இதுதான்உலகம்

11.T Nagar போனாடீவாங்கலாம்.

ஆனால்

விருதுநகர்போனாவிருதுவாங்கமுடியுமா?

12. என்னதான்பெரிய

வீரனாஇருந்தாலும்,

வெயில்அடிச்சா,

திருப்பிஅடிக்கமுடியாது.

13. இளநீர்லயும்தண்ணிஇருக்கு,

பூமிலயும்தண்ணிஇருக்கு.

அதுக்காக,

இளநீர்லபோர்போடவும்முடியாது,

பூமிலஸ்ட்ராபோட்டுஉரியவும்முடியாது.

14. உங்கள்உடம்பில்

கோடிக்கணக்கானசெல்கள்இருந்தாலும்,

ஒருசெல்லில்கூட

ஸிம்கார்ட்போட்டுபேசமுடியாது.

15. ஓடுறஎலிவாலைபுடிச்சா

நீ’கிங்’கு

ஆனா…

தூங்குறபுலிவாலைமிதிச்சா

உனக்குசங்கு.

16. நிக்கிறபஸ்ஸுக்குமுன்னாடிஓடலாம்

ஆனா

ஒடுறபஸ்ஸுக்குமுன்னாடிநிக்கமுடியாது.

17. வண்டிஇல்லாமல்டயர்ஓடும். ஆனால்…

டயர்இல்லாமல்வண்டிஓடுமா?

18. இதுமல்லாக்கபடுத்துகிட்டுயோசிக்கவேண்டியவிஷயம்.

சைக்கிள்ஓட்டுறதுசைக்கிளிங்னா, ட்ரெய்ன்ஓட்டுறதுட்ரெய்னிங்கா? இல்ல

பிளேன்ஓட்டுறதுபிளானிங்கா?

19.என்னதான்நீபுதுமாடல்மொபைல்வச்சிருந்தாலும்

மெஸேஜ்Forwardதான்பண்ணமுடியும்,

Rewind
லாம்பண்ணமுடியாது.

20. "Tea"
க்கும்"Cofee"க்கும்என்னவித்தியாசம்?

Tea"லஒரு"e" இருக்கும். "Coffee"ல2 "e" இருக்கும்.

நன்றி

source:

பின்னூட்டமொன்றை இடுக

Filed under Uncategorized

கால்களுடன் பாம்பு! லெபனானில் எலும்புக்க ூடு கண்டுபிடிப்பு

ஆதியாகமம்

3 அதிகாரம்:14. அப்பொழுது தேவனாகிய கர்த்தர் சர்ப்பத்தைப் பார்த்து: நீ இதைச் செய்தபடியால் சகல நாட்டுமிருகங்களிலும் சகல காட்டுமிருகங்களிலும் சபிக்கப்பட்டிருப்பாய், நீ உன் வயிற்றினால் நகர்ந்து, உயிரோடிருக்கும் நாளெல்லாம் மண்ணைத் தின்பாய்;

snakkee.jpgகால்களுடன் வாழ்ந்த பாம்பின் எலும்புக்கூடு லெபனானில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.பாம்புகள் ஊர்வன இனத்தை சேர்ந்தவை. அவைகளுக்கு கால்கள் கிடையாது.

இதற்கு முன்பு கால்களுடன் பாம்புகள் இருந்ததற்கான ஆதாரம் தற்போது கிடைத்துள்ளது. பழங்காலத்தில் வாழ்ந்த அரிய உயிரினங்கள் குறித்து ஆய்வு செய்யும் நிபுணர்கள் லெபனானில் ஒரு பாம்பின் எலும்பு கூட்டை கண்டெடுத்தனர்.

சுமார் 19 “இஞ்ச்” நீள முள்ள அந்த பாம்பின் எலும்பு கூட்டில் கால்கள் இருந்ததற்கான அடையாளங்கள் உள்ளன. இவை சுமார் 9 1/2 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்ததாக இருக்கலாம் என கருதப்படுகிறது.

லெபனானில் கண்டெடுக்கப்பட்ட பாம்பின் எலும்பு கூட்டில் சுமார் “1 இஞ்ச்” அளவுக்கு கால் எலும்புகள் இருந்தன. அதே நேரத்தில் பாம்பின் வயிற்றுப் பகுதியில் கால்கள் வளர்ந்து வந்ததற்கான அறிகுறிகளும் இருந்தன.

அந்த எலும்புகள் “1/2 இஞ்ச்” அளவில் வளர்ந்திருந்தன.இந்த வகை பாம்புகள் கால்கள் மூலம் நடந்து திரிந்ததால் நிலத்திலும், நீரிலும், பொந்துகளிலும் வாழ்ந்து இருக்கலாம் என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த இந்த வகை பாம்புகளின் கால்கள் காலப்போக்கில் படிப்படியாக மறைந்து அவை ஊர்வன இனத்தை சேர்ந்தவையாக மாறியிருக்கலாம் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர். source:tamilcnn

http://thamilislam.tk

பின்னூட்டமொன்றை இடுக

Filed under Uncategorized

வேர்ட் தொகுப்பில் சில சுருக்கு வழிகள்

Alt + F10 விண்டோவினை அதன் முழு அளவிற்கு மாற்றுகிறது
Alt + F5 விண்டோவினை பழைய வழக்கமான நிலைக்குக் கொண்டு வரும்.
Ctrl + Shift + A தேர்ந்தெடுக்கப்பட்ட டெக்ஸ்ட் முழுவதையும் கேப்பிடல் எழுத்துக்களாக மாற்றுகிறது. இதனை Shift+F3என்ற கீகளூம் மேற்கொள்ளும்.
Shift + F2 தேர்ந்தெடுக்கப்பட்ட டெக்ஸ்ட்டை கிளிப் போர்டுக்குக் கொண்டு செல்லாமல் காப்பி செய்கிறது. காப்பி செய்ததனை பேஸ்ட் செய்திட என்டர் அழுத்தினால் போதும்.
Ctrl+ Backspace பின்புறமாக ஒரு சொல்லை அழித்திடும். ஆனால் இது காப்பி செய்யப்பட மாட்டாது.
Ctrl+W, Ctrl+F4 இந்த இரண்டு கீ இணைப்புகளும் அப்போது பணியாற்றிக் கொண்டிருக்கும் பைலை சேவ் செய்திடவா என்று ஒரு டயலாக் பாக்ஸ் மூலம் கேட்டுவிட்டு பின் அழுத்தும் கட்டத்திற்கேற்றபடி பைலை மூடும்.
Alt + Ctrl + S பணியாற்றிக் கொண்டிருக்கும் விண்டோவினை படுக்கை வாக்கில் பிரிக்கும் கோடு கிடைக்கும். பின் அந்த கோட்டினை நகர்த்தி விண்டோவைப் பிரித்துப் பயன்படுத்தலாம்.
Ctrl + Shift + D தேர்ந்தெடுக்கப்பட்ட டெக்ஸ்ட்டின் கீழாக இரு கோடுகள் இடப்படும். இதனை நீக்குவதற்கு மீண்டும் இதே கீகளைப் பயன்படுத்தலாம்.
F5 அல்லது Ctrl+G செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஆவணத்தில் குறிப்பிட்ட பக்கத்திற்குச் செல்ல இந்த கீகளைப் பயன்படுத்தலாம்.
Ctrl+H ஒரு குறிப்பிட்ட டெக்ஸ்ட்டைக் கண்டுபிடித்து அதற்குப் பதிலாக நாம் தேர்ந்தெடுக்கும் அல்லது அமைக்கும் டெக்ஸ்ட்டை ஒட்டும்.
Ctrl+F2 அனைத்து பக்கங்களின் அச்சு தோற்றத்தைக் காட்டும்.
Alt F, I பணியாற்றிக் கொண்டிருக்கும் ஆவணத்தின் பிராபர்ட்டீஸ் பார்க்க இந்த கீகளை வரிசையாக அழுத்தவும்.
Shift + F5 ஆவணத்தில் முன்பு டெக்ஸ்ட்டை செருகிய இடத்திற்கு உங்கள் கர்சரை எடுத்துச் செல்லும். இது போல மூன்று முந்தைய இடத்திற்கு எடுத்துச் செல்லும். அதன்பின் மீண்டும் பழைய இடத்திற்கு வந்துவிடும். இது மிகவும் பயனுள்ள ஒரு ஷார்ட் கட். இதனால் ஒரு ஆவணத்தைத் திறந்திடுகையில் அதனை முன்பு பயன்படுத்துகையில் எந்த இடத்தில் எடிட் செய்து கொண்டிருந்தீர்களோ அந்த இடத்திற்கு இந்த கீகளைப் பயன்படுத்திச் சென்று விடலாம்

source:dinamalar

பின்னூட்டமொன்றை இடுக

Filed under Uncategorized

வேர்ட் டிப்ஸ்

E_1296991446.jpeg

வேர்ட் டேபிளில் ஹெடர்கள்

வேர்ட் தொகுப்பில் டேபிள் ஒன்றை உருவாக்குகிறீர்கள். அதனை பிரிண்ட் எடுக்க முயற்சிக்கையில் அது பல பக்கங்களில் அமைந்திருப்பதனையும் அடுத்த அடுத்த பக்கங்களில் டேபிளில் உள்ள வரிசைகளுக்கான தலைப்புகள் இல்லை என்பதனையும் உணர்கிறீர்கள். ஒவ்வொரு பக்கத்திலும் ஹெடர்கள் வந்தால் தானே ஒவ்வொரு காலமும் எது குறித்த தகவல்களைக் கொண்டுள்ளன என்று எளிதாகத் தெரியும். உடனே முதல் பக்கத்தில் இருக்கும் டேபிள் தலைப்பு உள்ள படுக்கை வரிசையினை அப்படியே காப்பி செய்து ஒவ்வொரு பக்கத்தின் முதல் வரிசையிலும் புதிய வரிசையினை ஏற்படுத்தி பேஸ்ட் செய்திடலாம். ஆனால் இது இன்னும் பிரச்னையை ஏற்படுத்தும். பின்னாளில் ஏதேனும் ஒரு வரிசையை இணைத்தாலோ அல்லது நீக்கினாலோ இரண்டாம் பக்கத்திலிருந்து உள்ள தலைப்பு அடுத்த பக்கத்திற்கோ அல்லது முந்தைய பக்கத்திற்கோ செல்லும். இந்த குழப்பத்தினைச் சரி செய்திட ஒரு வழியினை வேர்ட் தருகிறது. இதற்கான தீர்வினை Headings என்ற பகுதியில் பெறலாம். ஆம்; முதலில் முதல் பக்கத்தில் டேபிள் தலைப்பு அமைத்த வரிசையினை செலக்ட் செய்திடவும். பின் Table மெனு செல்லவும். விரியும் மெனுவில் கிடைக்கும் பிரிவுகளில் Heading Rows Repeat choice என்ற பிரிவினைக் கிளிக் செய்திடவும். பழைய வேர்ட் தொகுப்பாக இருந்தால் Headings என்று மட்டுமே இருக்கும். இனி பார்த்தால் ஒவ்வொரு பக்கத்திலும் தலைப்பில் இந்த ஹெடர்கள் இருக்கும். நீங்கள் எத்தனை வரிசையினை சேர்த்தாலும் நீக்கினாலும் இது அப்படியே தான் இருக்கும். இந்த ஹெடர்களில் மாற்றம் செய்திட வேண்டும் எனத் திட்டமிட்டால் முதல் பக்கத்தில் உள்ள தலைப்பு வரிசையில் மட்டுமே மாற்ற முடியும். இரண்டாவது பக்கத்திலோ அல்லது வேறு பக்கத்திலோ உள்ள ஹெடரில் மாற்ற முடியாது. மேலும் முதல் பக்கத்தில் என்ன மாறுதல் செய்கிறோமோ அது மற்ற பக்கத்திலும் அப்படியே மாற்றப்படும்.
வேர்ட் டேபிள் செல்களுக்கிடையே இடைவெளி

வேர்டில் டேபிள் உருவாக்கி தகவல்களை அமைக்கும் வசதியில் பல நகாசு வேலைகளை மேற்கொள்ளலாம். அவற்றில் ஒன்று செல்களுக் கிடையே சிறிய இடைவெளியை உருவாக்குவது. இது செல்களையும், அவற்றின் வரிசைகளையும் அழகாக எடுத்துக்காட்டும். இதற்கு டேபிள் எடிட்டர் ஒன்றை வேர்ட் கொண்டுள்ளது. பொதுவாக டேபிள் ஒன்றை உருவாக்குகையில், செல்களுக்கிடையே இடைவெளி எதுவும் ஏற்படுத்தப்பட மாட்டாது. செல்களைப் பிரிக்கும் கட்ட கோடு மட்டுமே காட்டப்படும். இதனையும் வேண்டாம் என்றால், மறைத்துவிடலாம். எனவே செல்களுக்கிடையே இடைவெளியை ஏற்படுத்த நாம் அதனுடன் வரும் டேபிள் எடிட்டரைப் பயன்படுத்த வேண்டும்.

1. முதலில் வடிவத்தினை மாற்ற எண்ணும் டேபிளில் எங்கேனும் ரைட் கிளிக் செய்திடவும். வேர்ட் Contex மெனுவினைக் காட்டும்.

2.இந்த மெனுவில் Table Properties என்ற ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்கவும். வேர்ட் உடனே, Table Properties டயலாக் பாக்ஸைக் காட்டும்.

3. இதில் Table டேப் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதனை உறுதி செய்திடவும்.

4. இந்த டயலாக் பாக்ஸின் கீழாக உள்ள Options என்ற பட்டனைத் தேர்ந்தெடுக்கவும். வேர்ட் Table Options டயலாக் பாக்ஸைக் காட்டும்.

5. இதில் Allow Spacing Between Cells என்ற செக் பாக்ஸில் டிக் அடையாளத்தை ஏற்படுத்தவும்.

6. இந்த செக் பாக்ஸின் வலது பக்கம், செல்களுக்கிடையே எவ்வளவு இடம் விடப்பட வேண்டும் என்பதனைத் தேர்ந்தெடுக்கவும்.

7. அடுத்து Table Options டயலாக் பாக்ஸை மூட ஓகே கிளிக் செய்திடவும்.

8. பின்னர், Table Properties டயலாக் பாக்ஸை மூடுவதற்கான ஓகே பட்டனைக் கிளிக் செய்திடவும்.
அடிக்கோடுகள் சலிப்பாக இருக்கின்றனவா?

வேர்ட் டாகுமெண்ட்டில், சில சொற்களை மற்ற சொற்களிலிருந்து பிரித்துக் காட்ட, எழுத்துக்களை தடிமனாக, சாய்வாக மற்றும் அடிக்கோடிட்டுக் காட்டுகிறோம். இவற்றை முறையே CTRL +B, CTRL +I மற்றும் CTRL +U கீகளை அழுத்தி அமைக்கிறோம். இதில் கோடு எப்போதும் ஒரு அளவில் அமைக்கப் படுகிறது. பல வேளைகளில், இந்தக் கோடு அமைவது நமக்குச் சலிப்பினைத் தருகிறது. ஏனென்றால், நம்மில் பலருக்கு, இன்னும் பலவகையான கோடுகளை அமைக்க வேர்ட் வசதிகளைத் தருகிறது என்பதனை அறியாமல் இருக்கிறோம். புள்ளிகள், டேஷ் கோடுகள், இரட்டை கோடுகள், அலை அலையாய் கோடுகள் ஆகியவற்றைக் கொண்டும் அடிக்கோடிடலாம். எப்படி அவற்றை அமைப்பது எனப் பார்க்கலாம்.

1. எந்த சொற்களுக்கு அடிக்கோடிட வேண்டுமோ, அவற்றைத் தேர்ந்தெடுக்கவும்.

2. அடுத்து “Font” dialog box திறக்கவும் “Home” டேப்பினை ரிப்பனில் தேர்ந்தெடுத்து இதனை மேற்கொள்ளலாம். பின்னர், வலது கீழாக உள்ள அம்புக்குறியினைக் கிளிக் செய்திடவும். அல்லது CTRL + SHIFT + F ஆகிய கீகளை ஒருசேர அழுத்தவும்.

3. இப்போது “Font” டயலாக பாக்ஸ் கிடைக்கும். உங்கள் விருப்பப்படி, “Underline style” என்பதனை அடுத்துள்ள டெக்ஸ்ட் பாக்ஸை விரிக்கவும். இங்கு நீங்கள் விரும்பும் வகையிலான அடிக்கோடு அமைக்க பல ஆப்ஷன்கள் கிடைக்கும். அவற்றிலிருந்து தேவையானதைத் தேர்ந்தெடுத்து அமைக்கலாம். இதே போல “Underline color” என்பதனைத் தேர்ந்தெடுத்து, அதற்கான வண்ணத்தையும் அமைக்கலாம். இதில் காட்டப்படும் வண்ணம் எதுவும் உங்களுக்கு மன நிறைவைத் தரவில்லை என்றால், “More Colors” என்பதில் கிளிக் செய்து மேலும் பல வண்ணங்களைப் பெற்று, தேர்ந்தெடுக்கலாம்.

4. பின்னர் ஓகே கிளிக் செய்து, டயலாக் பாக்ஸை மூடி வெளியேறலாம். இனி, நீங்கள் செட் செய்தபடி, அடிக்கோடுகள் கிடைக்கும்.
எத்தனை முறை திருத்தப்பட்டாய்?

உங்கள் வேர்ட் டாகுமெண்ட் எத்தனை முறை திறந்து திருத்தப்பட்டது என அறிய வேண்டுமா? இதனை சிறிய பீல்டு ஒன்றை, டாகுமெண்ட்டில் ஏற்படுத்துவதன் மூலம் அறிந்து கொள்ளலாம்.

ஒவ்வொரு முறை, நாம் வேர்ட் டாகுமெண்ட்டினைத் திறந்து, எடிட் செய்து, சேவ் செய்திடுகையில், டாகுமெண்ட் ப்ராப்பர்டீஸ் பகுதியில் இந்த தகவல் அப்டேட் செய்யப்படுகிறது. இதில் ஒரு பகுதிதான், பைல் எத்தனை முறை சேவ் செய்யப்படுகிறது என்பதாகும். இதனை Revision Number என அழைக்கின்றனர். நீங்கள் விரும்பினால், நீங்களாகக் கூட இந்த எண்ணை பீல்டில் அமைத்து, ஒவ்வொரு முறையும் அதனை அப்டேட் செய்திடலாம். கீழ்க்காணும் செயல்பாட்டினை மேற்கொள்ளவும்.

1. எங்கு இந்த Revision Number வேண்டுமோ அங்கு கர்சரைக் கொண்டு சென்று வைக்கவும்.

2. Insert மெனுவிலிருந்து Field என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். வேர்ட் Field டயலாக் பாக்ஸைக் காட்டும். நீங்கள் வேர்ட் 2007 தொகுப்பினைப் பயன்படுத்துவதாக இருந்தால், ரிப்பனில் உள்ள Insert டேப் காட்டப்படுவதனை உறுதி செய்திடவும். பின்னர், Text குரூப்பில், Quick Parts என்பதில் கிளிக் செய்திடவும். இங்கு தரப்படும் ஆப்ஷன்களில் Field என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.)

3. அடுத்து Categories என்ற பட்டியலில், Numbering என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். வேர்ட், Field Names பட்டியலில் இந்த ஆப்ஷன்களை அப்டேட் செய்து கொள்கிறது.

4. Field Names பட்டியலில் RevNum என்பதனைத் தேர்ந்தெடுக்கவும்.

5 .இதற்குப் பின்னர், தேர்வுகளை சேவ் செய்திட ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.

இனி, பீல்ட் உருவாக்கப்பட்டு அங்கே,எத்தனை முறை, டாகுமெண்ட் திருத்தப்பட்டு சேவ் செய்யப்பட்டது என்பது எண்ணால் காட்டப்படும்.

source:dinamalar

பின்னூட்டமொன்றை இடுக

Filed under Uncategorized

பவர்பாய்ண்ட்: ஆப்ஜெக்ட், படங்களைச் சுழற் ற

E_1296991469.jpeg

பவர்பாய்ண்ட் ஸ்லைட் ஒன்றில் டெக்ஸ்ட்டுடன் ஆப்ஜெக்ட்கள் எனப்படும் கூடுதல் படங்கள், உருவங்களை வைக்கிறோம். இவற்றை நம் விருப்பப்படி சுழற்றி குறிப்பிட்ட கோணத்தில் வைக்க முயற்சிப்போம். ஆப்ஜெக்டைத் தேர்ந்தெடுத்து வலது புறமாகச் சாய்த்து வைக்க முயற்சிக்கையில், நாம் எதிர்பார்க்கும் வழியில் அமையாமல் அது செல்லலாம். இதனைத் தவிர்த்து நம் விருப்பப்படி அவற்றை அமைப்பதற்குத் தேவையான வழிகளை இங்கு காணலாம்.

1. தேர்ந்தெடுக்கப்பட்ட ஆப்ஜெக்டைச் சுழற்ற முயற்சிக்கையில், ஷிப்ட் (Shift) கீயை அழுத்தியவாறு இருந்தால், 15 டிகிரி அளவில் அவற்றைத் துல்லியமாகச் சுழற்ற முடியும்.

2. பார்மட் டேப்பில் Rotate in the Arrange group என்பதில் கிளிக் செய்தால், குறிப்பிட்ட நிலையில் சுழற்ற வழி கிடைகும். பவர்பாய்ண்ட் 2003ல், பிக்சர் டூல்பாரில் Rotate என்பதில் கிளிக் செய்தால், இந்த விளைவினை மேற்கொள்ளலாம்.

3. குறிப்பிட்ட ஆப்ஜெக்டை ரைட் கிளிக் செய்திடவும். கிடைக்கும் மெனுவில் Format என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். அல்லது பார்மட் டேப் தேர்ந்தெடுத்து, அதில் கிடைக்கும் குடித்ஞு Size group-ல், Dialog launcher என்பதில் கிளிக் செய்திடவும். இங்கு இடது புறம் உள்ள பிரிவில், Size மீது கிளிக் செய்திடவும். இதில் உள்ள Rotation control –ல், சுழலுவதற்கான எண் மதிப்பை(value)த் தரவும். இந்த வேல்யூ + ஆக இருந்தால், சுழற்சி கடிகார சுழற்சியில் இருக்கும். அதுவே – மதிப்பாக இருந்தால், சுழற்சி கடிகார சுழற்சியின் எதிர்புறமாக இருக்கும். இதனையே 0 ஆகக் கொள்கையில், ஆப்ஜெக்ட் அதன் பழைய நிலையில் தக்க வைக்கப்படும். (சுழலுவதற்கான ஹேண்டிலுடன் போராடுவதற்கு இதி எளிதல்லவா!). இத்துடன், எந்த அளவில் சுழற்சியை மேற்கொண்டாலும், அதனை நீக்க, [Ctrl]+Z கீகளை எப்போதும் அழுத்தலாம்.

4. மிர்ரர் இமேஜ் வேண்டும் எனில், ஆப்ஜெக்ட் மீது ரைட் கிளிக் செய்திடவும். கிடைக்கும் மெனுவில், Format object என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இங்கு குடித்ஞு Size group -ல், Dialog launcher என்பதில் கிளிக் செய்திடவும். இங்கு 3D Rotation என்பதனைத் தேர்ந்தெடுத்து, அதில் X மதிப்பை 180 எனத் தரவும். பின்னர் இடூணிண்ஞு என்பதில் கிளிக் செய்தால், உடன் மிர்ரர் இமேஜ் கிடைக்கும்.

source:dinamalar

பின்னூட்டமொன்றை இடுக

Filed under Uncategorized

கம்ப்யூட்டர் கேள்வி-பதில்

E_1297049942.jpeg

கேள்வி: டேப்ளட் பிசி குறித்து அதிகம் எழுதப்படுகிறது; நாங்களும் கேள்விப்படுகிறோம். சுருக்கமாக, இன்றைய கம்ப்யூட்டர்கள் தராத, டேப்ளட் பிசிக்களில் கிடைக்கும் வசதிகள் என்ன என்று சொல்ல முடியுமா?
-ஆர். சந்திரப் பிரகாஷ், சோழபுரம்
பதில்: இந்த வசதிகள் குறித்து, தாங்கள் கூறுவது போல, கம்ப்யூட்டர் மலரில் பல கட்டுரைகள் வெளியிடப்பட்டன. தொடர்ந்து எழுதிக் கொண்டிருக் கிறோம். வரும் காலத்தில் கம்ப்யூட்டர் பயன்பாட்டில் பெரிய மாற்றத்தை டேப்ளட் பிசிக்கள் கொண்டுவர இருக்கின்றன. அவற்றின் பயன்கள் பலவாகும். நீங்கள் கேட்பது போல சுருக்கமாகச் சொல்வதென்றால், எங்கும் எளிதாக எடுத்துச் செல்லும் தன்மை, மொபைல் போனாகவும் (3ஜி மற்றும் 4ஜி வசதியுடன்) பயன்படுத்தும் வசதி, வை-பி இணைப்பு, இ-புக் ரீடராகச் செயலாற்றும் திறன், கேம்ஸ் விளையாட உதவிடும் சாதனம், ஆன்லைனில் செய்தி, பாடல், படம் பார்க்கும் வசதி, சமுதாய தளங்களை அணுகும் வசதி எனப் பல அம்சங்களை அடுக்கலாம். நீங்கள் இதற்கெல்லாம் தயாராகிக் கொள்ளுங்கள். அல்லது இப்போதே இங்கு கிடைக்கும் டேப்ளட் பிசிக்களை வாங்கிப் பயன்படுத்துங்கள்.
கேள்வி: வேர்ட் புரோகிராமில் பைல் ஒன்றைத் திறக்க Open மெனுவில் கிளிக் செய்தால் கிடைக்கும் பைல் பட்டியலில் அனைத்து டாகுமெண்ட் பைல்களும் கிடைக்கின்றன. இதற்குப் பதிலாக ஒரு குறிப்பிட்ட எழுத்தில் மட்டும் தொடங்கும் பைல் கிடைத்தால், நான் விரும்பும் பைலை விரைவில் தேர்ந்தெடுக்க எளிதாக இருக்குமே. இதற்கான வசதி உள்ளதா?
-டி. பூர்ண பிரகாஷ், செங்கல்பட்டு.
பதில்: நல்ல கேள்வி. பைல் ஒன்றை வேர்ட் புரோகிராமில் திறக்க விரும்பி, Open ஐகானை அழுத்துகிறீர்கள். உடனே உங்களுக்கு வேர்ட் Open டயலாக் பாக்ஸைத் திறந்து காட்டி, கர்சர் File Name என்ற கட்டத்தில் நிற்கிறது. நீங்கள் S என்ற எழுத்தில் தொடங்கும் டாகுமெண்ட் பைல்களின் பட்டியலை மட்டும் பெற விரும்பினால், S*.doc என டைப் செய்து என்டர் தட்டவும். உடன், அந்த ட்ரைவில் உள்ள டைரக்டரிகள், அல்லது போல்டர்கள் முதலாவதாகவும், பின்னர் S என்ற எழுத்தில் தொடங்கும் பைல்கள் அடுத்ததாகவும் கிடைக்கும். இனி இதில் நீங்கள் விரும்பும் பைலைத் தேர்ந்தெடுத்து திறக்கலாம். அதிக பைல்களை ஒரு போல்டரில் வைத்திருக்கையில் இந்த கட்டளை உங்களுக்குப் பயன் தரும். டாகுமெண்ட் பைல்கள் மட்டுமின்றி, வேறு எக்ஸ்டன்ஷகள் கொண்ட பைல்களையும் பட்டியலிட்டுக் கேட்கலாம். எடுத்துக் காட்டாக, டெக்ஸ்ட் பைல் ஒன்றைத் திறக்க வேண்டும் எனில் பொதுவாக *.txt எனக் கொடுத்துப் பெறலாம். இந்த வகைப் பைல்களில் S என்ற எழுத்தில் தொடங்கும் பைல் மட்டும் வேண்டும் எனில், S*.txt என டைப் செய்து பட்டியலைப் பெறலாம்.
கேள்வி: நான் விண்டோஸ் எக்ஸ்பி பயன்படுத்துகிறேன். என் கம்ப்யூட்டரில் 512 எம்பி ராம் மெமரி தான் உள்ளது. இதில் சில நேரங்களில் கேம்ஸ் லோட் செய்திடுகையில், அதற்கேற்ற வகையில் ராம் மெமரி கிடைக்கும் என எப்படி அறிவது?
-சி. பரணிராணி, மதுரை.
பதில்: உங்கள் கேம்ஸ் இயங்கத் தேவையான மெமரி எவ்வளவு என்று உங்களுக்குத் தெரியாதே. பின் எப்படி அதற்குப் போதிய மெமரி இருக்கிறதா என அறிவது? ஆனால், கம்ப்யூட்டரைப் பயன்படுத்தும் எந்த நேரத்திலும் நாம் ராம் மெமரியில் எவ்வளவு காலி இடம் உள்ளது என அறியலாம். இதற்கு கண்ட்ரோல் மற்றும் ஆல்ட் (Control, Alt,) பட்டன்களை அழுத்திக் கொண்டு டெலீட் (Delete) பட்டனை ஒரு முறை அழுத்தவும். இவ்வாறு அழுத்திய வுடன் கம்ப்யூட்டரில் விண்டோஸ் டாஸ்க் மேனேஜர் (Windows Task Manager) திரை கிடைக்கும். இதில் உள்ள டேப்களில் Performance என்ற டேபைத் தேர்ந் தெடுக்கவும். இதில் Physical Memory, Available என்ற பிரிவை நீங்கள் காணலாம். இதில் கிடைக்கும் எண் எத்தனை கிலோபைட் இடம் இன்னும் காலியாக உள்ளது என்று காட்டும். இதனை நீங்கள் எம்பி அளவில் பெற வேண்டுமென்றால் 1000 ஆல் வகுக்க வேண்டும். தோராய மான அளவில் எத்தனை எம்.பி. எனத் தெரிய வரும்.
கேள்வி: என் கம்ப்யூட்டர் டூயல் கோர், எக்ஸ்பி வகையைச் சேர்ந்தது. இதில் திடீரென வால்யூம் ஐகானைக் காணவில்லை. என்ன நடந்தது எனத் தெரியவில்லை. ஆனால் சவுண்ட் எல்லாம் சரியாக வருகிறது. எங்கு பிரச்னை?
-என். காமராஜ், திருமங்கலம்.
பதில்: உங்கள் டாஸ்க் பாரில் வலது மூலையில் கடிகாரத்திற்கு அடுத்ததாக அமர்ந்து கம்ப்யூட்டர் தரும் ஆடியோ அளவைக் கட்டுப்படுத்த உதவும் ஐகானைக் கானவில்லையா? என்ன செய்திடலாம்? உங்களிடம் விண்டோஸ் எக்ஸ்பி ஆப்பரேட்டிங் சிஸ்டம் உள்ளதா? முதலில் Start ––> Control Panel செல்லுங்கள்; பின் Sounds, Speech and Audio Devices என்ற தொடர்பில் கிளிக் செய்திடவும். இதனை அடுத்து Sounds and Audio Devices என்ற இடத்தில் கிளிக் செய்து அப்பிரிவைத் தேர்ந்தெடுக்கவும். இப்போது டேப்கள் உள்ள டயலாக் பாக்ஸ் ஒன்று தோன்றும். இதில் Volume டேப் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறதா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். இதில் “Place volume control icon in the taskbar” என்பதன் எதிரே உள்ள கட்டத்தில் டிக் அடையாளம் உள்ளதா எனக் கண்டறியுங்கள். இல்லை எனில் அதனை ஏற்படுத்தவும். இப்போது ஒலி அளவை மாற்ற உதவும் ஐகான் உங்கள் டாஸ்க் பாரில் அமர்ந்திருக்கும். இதனைப் பயன்படுத்தி உங்களுக்குப் பிரியமான பாடலை பிடித்த அளவிலான ஒலியோடு கேட்டு மகிழலாம்.
கேள்வி: நான் பெரும்பாலும் தமிழில் பெயர்களை டைப் செய்துவிட்டு இனிஷியலை ஆங்கிலத்தில் அமைக்க, பாண்ட் சென்று மாற்றி ஆங்கில எழுத்தினைக் கொண்டு வந்து பின் மாற்ற வேண்டியுள்ளது. வேறு சுருக்கு வழி உள்ளதா?
-எம். வெங்கடேச பெருமாள், திண்டுக்கல்.
பதில்: நீங்கள் தமிழ் டைப் செய்திட என்ன சாப்ட்வேர் அல்லது ட்ரைவர் பயன்படுத்துகிறீர்கள் என்று குறிப்பிட வில்லை. பொதுவாக யூனிகோட் எழுத்தில் நீங்கள் டைப் செய்தால், நீங்கள் பயன்படுத்தும், தமிழுக்கான ட்ரைவரிலேயே, ஆங்கிலத்திலும் தமிழிலும் மாறிக் கொள்ள ஏதேனும் இரண்டு கீகளை இணைத்துப் பயன்படுத்துமாறு தந்திருப்பார்கள். அல்லது நீங்களே அமைத்துக் கொள்ளுமாறு வைத்திருப்பார்கள். அவற்றைப் பயன்படுத்தினாலே போதும். உடன் ஆங்கில எழுத்தில் டைப் செய்திடலாம். பின்னர், உடனே மீண்டும் தமிழுக்கு மாறிவிடலாம். இந்த எழுத்துவகையில் ஆங்கிலமும் தமிழும் ஒரே எழுத்துவகையில் இருக்கும்படி அமைக்கப்பட்டிருக்கும். டிஸ்கி (TISCII) என்ற எழுத்து வகையிலும் இதே போல இருக்கும். ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கும், தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கும் மாறுவதற்கு, எடுத்துக் காட்டாக, ஆல்ட் + கே வைத்திருந்தால், இதனை மட்டும் அழுத்தினால் போதும்.
கேள்வி: வேர்ட் தொகுப்பில் உருவாக்கும் டாகுமெண்ட்களில் பல சொற்களின் கீழாக அன்டர்லைன் செய்கையில் சொற்களுக்கு இடையே கோடில்லாமல் சொற்களுக்கு மட்டும் கோடிடுவது எப்படி?
-என்.மல்லிகா, பொள்ளாச்சி.
பதில்: முதலில் எந்த சொற்களுக்குக் கீழ் அடிக்கோடு வர வேண்டும் என எண்ணுகிறீர்களோ, அவற்றைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர் Ctrl + Shift + W என்ற கீகளை அழுத்தவும். இப்போது சொற்களின் கீழாக மட்டும் அடிக்கோட்டினைப் பார்க்கலாம். சொற்களுக்கு இடையே உள்ள இடைவெளிகளில் கோடு இருக்காது. இதுவும் ஒரு அழகுதான்.
கேள்வி: வேர்டில் டெக்ஸ்ட் காப்பி செய்து ஒட்ட கண்ட்ரோல்+சி மற்றும் கண்ட்ரோல் +வி பயன்படுத்துகிறேன். ஆனால் என் நண்பரின் கம்ப்யூட்டரில் இன்ஸெர்ட் கீ அழுத்தினாலே, டெக்ஸ்ட் பேஸ்ட் ஆகிறது. இருவரும் ஆபீஸ் 2003 தான் பயன்படுத்துகிறோம். சிஸ்டம் எக்ஸ்பி.
-சி.மோகன், சென்னை.
பதில்: இன்ஸெர்ட் கீ அழுத்தினால் டெக்ஸ்ட் ஒட்டப்பட வேண்டுமானால், உங்கள் வேர்ட் புரோகிராமில் கீழ்க்காணும் செட் அப் வழிகளை மேற்கொள்ளவும்.
மெனு பாரில் Tools கிளிக் செய்து பின் விரியும் மெனுவில் இறுதியாக உள்ள Options என்பதனைக் கிளிக் செய்திடவும். இதில் கிடைக்கும் பல டேப்களில் Edit டேபினைக் கிளிக் செய்தால் பல செக் பாக்ஸ் கிடைக்கும். அதில் “Use the INS key for paste” என்ற செக் பாக்ஸ் முன் டிக் அடையாளத்தை ஏற்படுத்திப் பின் ஓகே கிளிக் செய்து வெளியேறவும். இனி ஏதாவது காப்பி அல்லது கட் செய்த டெக்ஸ்ட் அல்லது படத்தை ஒட்ட வேண்டுமானால், இன்ஸெர்ட் கீயைக் கிளிக் செய்தால் போதும். கிளிப் போர்டில் உள்ள படம் அல்லது டெக்ஸ்ட் ஒட்டப்படும்.
கேள்வி: எக்ஸெல் தொகுப்பில் Proper என்ற பங்சன், எந்த வகை கணக்கில் பயன்படுத்தப்படுகிறது. இதன் பயன் என்ன? பார்முலா அமைக்கலாம் என்றால், அதன் வடிவம் என்ன?
-கே. இன்பசேகரன், திருவில்லிபுத்தூர்.
பதில்: இது எக்ஸெல் ஒர்க்புக்கில் செல்களில் அமைக்கப்படும் பெயர்களுக்கானது ஒரு செல்லில் உங்கள் பெயரை A1 செல்லில் inbasekaran என்று டைப் செய்திடுங்கள். எப்படி என் பெயர் முதல் எழுத்தை சிறிய எழுத்தாக டைப் செய்தீர்கள் என்று கோபம் வருகிறதா! உடனே இன்னொரு செல், செல்லுங்கள். B1 என வைத்துக் கொள்வோம். இங்கு =PROPER(A1) என பார்முலா கொடுங்கள். உடனே அந்த செல்லில் உங்கள் பெயர் Inbasekaran எனக் காட்டப்படும். புரிகிறதா! இந்த கட்டளை எதற்கென்று.

source:dinamalar

பின்னூட்டமொன்றை இடுக

Filed under Uncategorized

சுற்றுச்சூழல் பாதிக்காத “ஏர்கூலர்’ கண்டு பிடிப்பு: மதுரை கே.வி., மாணவிக்கு தேசிய விருத ு

large_178827.jpg

மதுரை : சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காத, நவீன, "ஏர்கூலர்’ உருவாக்கியதற்காக, மதுரை கேந்திரிய வித்யாலயா பள்ளி மாணவி சத்யப்ரியாவுக்கு, தேசிய விருது கிடைத்துள்ளது.மதுரையில், பள்ளியளவில் நடந்த அறிவியல் கண்காட்சியில், சத்யப்ரியாவின் படைப்பு, பார்ப்போரை கவர்ந்தது. எனவே, மண்டல போட்டியில் பங்கேற்கும் தகுதி பெற்றார். அடுத்ததாக, டில்லியில் நடந்த கேந்திரிய வித்யாலயா பள்ளிகளுக்கான தேசிய அறிவியல் கண்காட்சி போட்டியில் இவரது படைப்பு போற்றப்பட்டது. மொத்தம், 18 மாதிரிகள் தேர்ந்தெடுக்கப்பட்டன.

இதிலிருந்து ஐந்து சிறந்த மாதிரிகள், ஜெய்ப்பூரில் நடந்த, 37வது ஜவகர்லால் நேரு தேசிய அறிவியல் கண்காட்சியில் (குழந்தைகளுக்கானது) இடம்பெற்றன. அதில், இவரது படைப்பும் இடம்பெற்றது; தேசிய விருதும் பெற்றார். சமீபத்தில் சென்னையில் நடந்த குழந்தைகள் அறிவியல் காங்கிரசிலும் பங்கேற்றார்.

சத்யப்ரியா கூறியதாவது:"ஏசி’யை பயன்படுத்துவதால் குளோரோ புளூரோ கார்பன்களின் அளவு அதிகரிக்கிறது. ஏர்கூலர் மூலம் ஓசோனில் மாற்றம் ஏற்படுகிறது. "ஏசி’க்கு மாற்றாக, அதே நேரம் ஏர்கூலரை புதிய விதமாக மாற்ற முயற்சித்தேன். களிமண் பானை, டியூப்கள், மின்விசிறி, தாமிர டியூப்கள் இவற்றின் மூலம் நவீன ஏர்கூலரை உருவாக்கினேன். வெட்டிவேர் மற்றும் நமக்குப் பிடித்தமான மூலிகைகளை ஏர்கூலரில் அடைத்தால், வெளியேறும் காற்று நறுமணமாக இருக்கும். 20 முதல் 30 டிகிரி வெப்பநிலையே இருப்பதால், உடலுக்கு இதமாக இருக்கும்.இந்த காற்றை சுவாசித்தால் ஆஸ்துமா, அலர்ஜி ஏற்படாது. குறைந்தபட்சம், 80 வாட்ஸ் மின்சாரம் போதும். 2,500 முதல் 3,500 ரூபாய்க்குள் செய்து விடலாம். சுற்றுச்சூழலுக்கு எந்தவிதத்திலும் தீங்கில்லாத இந்த ஏர்கூலருக்கு தேசிய விருது கிடைத்தது பெருமையாக உள்ளது.இவ்வாறு சத்யப்ரியா கூறினார்.

source:dinamalar

பின்னூட்டமொன்றை இடுக

Filed under Uncategorized

‘நேர்மையின் சம்பளம் மரணமா?’

உயிரோடு கொளுத்தப்பட்ட கலெக்டர்!

நேர்மைக்கு நெருப்பு

‘நேர்மையின் சம்பளம் மரணமா?’ என்ற கேள்வியை எழுப்பி இருக்கிறது மகாராஷ்​டிரா மாநிலத்தில் நடந்த குரூர சம்பவம்!

நாசிக் மாவட்டத்தின் கூடுதல் கலெக்டராக இருந்தவர் யஷ்வந்த் சோனாவானே. நேர்மையான அதிகாரியான யஷ்வந்த், கடந்த செவ்வாய்க்கிழமை நந்துகோன் என்ற இடத்துக்கு தாசில்தாருடன்அலுவலக காரில் சென்றார். வழியில் கெரசின் நிரப்பப்பட்ட சில டாங்கர்கள், ஆயில் டிப்போ அருகில் நின்று இருந்தன. ஏற்கெனவே, இந்த இடம் கெரசின் திருட்டுக்குப் பிரபலமானது. ஹெச்.பி.சி.எல்., பி.பி.சி.எல்., ஐ.ஓ.சி. போன்ற நிறுவனங்களின் சேமிப்புக் கிடங்குகள் அருகே, ‘எதற்கு இத்தனை டாங்கர்கள்?’ என்ற சந்தேகம் யஷ்வந்த்துக்குத் தோன்றவே… காரில் இருந்து இறங்கி விசாரித்தார்.

அடுத்தடுத்து நடந்த சம்பவங்கள்தான் இந்தியாவை உலுக்கின. நடந்தது என்ன என்பது பற்றி கூடுதல் டி.ஜி.பி-யான ரகுவன்ஷி, ”சிலர் பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் மற்றும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனங்களின் டாங்கர்களில் இருந்து கெரசினை திருட்டுத்தனமாக நிரப்பிக்கொண்டு இருந்தனர். அங்கு போன யஷ்வந்த், ஒருவனிடம் கேள்வி கேட்கவே, அவன் உடனே ஓடிவிட்டான். மற்றவர்களிடம் விசாரித்து, அதனைத் தன் செல்போன் கேமராவில் படம் எடுத்திருக்கிறார். மேலும், உடனடியாக இந்தஇடத்தில் ‘ரெய்டு’ நடத்தவும் உள்ளூர் அதிகாரி​களுக்கு உத்தரவிட்டு இருக்கிறார்.

அப்போது அந்தக் கும்பலுக்கும் கூடுதல் கலெக்டருக்கும் இடையே விவாதம் காரசாரமாக… ஒருவன் போபட் ஷிண்டேவுக்குத் தகவல் சொல்லி இருக்கிறான். இவன் கெரசின் கடத்தல் வழக்குகளில் ஏற்கெனவே பல முறை கைது செய்யப்பட்டவன். உடனே வந்த அவனுக்கும் கூடுதல் கலெக்டருக்கும் தீவிரமான வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. ஒரு கட்டத்தில் நிலைமை சிக்கலாவதை அறிந்த ஷிண்டே திடீரென யஷ்வந்த மீது கெரசினை ஊற்றித் தீவைத்துவிட்டான்.ஷிண்டே நெருப்பு பற்றவைத்ததும் அவன் ஓடிவிடாமல் இருக்க வேண்டும் என்பதால் அவனையும் கட்டிப்பிடித்து இருக்கிறார் யஷ்வந்த். இதனால் தீக்காயங்களுடன் அவன் மருத்துவமனையில் இருக்கிறான். ஷிண்டே, மகன் குனால், மச்சான் சீதாராம் பலேரோ மற்றும் அவன் கூட்டாளி ராஜு ஷிர்சாத் ஆகியோர் மீதும் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கிறார்கள் போலீஸார்!” என விவரித்தார்.

நாசிக் மாவட்ட கலெக்டர் வேலரசு, ”யஷ்வந்த் மிகஅமைதியானவர். கடின உழைப்பாளி. அவருக்கு இப்படி ஒரு சம்பவம் நேர்ந்தது கொடுமையானது. உடல் முழுக்க அவர் எரிந்துகொண்டு இருந்த சமயத்தில் அவரது டிரைவரும், உதவியாளரும் தங்கள் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள ஓடிவிட்டனர். உள்ளூர் காவல் துறையினர் விரைந்து செயல்பட்டும் அவர் உயிரைக் காப்பாற்ற முடியவில்லை…” என்றார் சோகத்துடன். நேர்மையாக இருந்த அதிகாரிக்கே இந்த நிலை என்றால்..?

– ந.வினோத் குமா

source:vikatan

பின்னூட்டமொன்றை இடுக

Filed under Uncategorized