Daily Archives: பிப்ரவரி 16, 2011

கனிமொழி எம்.பி கைது

தி.மு.க. கண்டன ஆர்ப்பாட்டம்; கனிமொழி எம்.பி.-5 ஆயிரம் பேர் கைது

106 தமிழக மீனவர்கள் இலங்கையில் சிறை வைப்பு: சென்னையில் தி.மு.க. கண்டன ஆர்ப்பாட்டம்; கனிமொழி எம்.பி.-5 ஆயிரம் பேர் கைது

சென்னை, பிப். 16-

இந்திய கடல் எல்லையில் மீன் பிடித்துக் கொண்டிருந்த நாகை, காரைக்கால் பகுதி தமிழக மீனவர்கள் 106 பேரை இலங்கை கடற்படையினர் நேற்று கைது செய்தனர். மீனவர்கள் அனைவரும் யாழ்ப்பாணம் பருத்தி துறையில் சிறை வைக்கப்பட்டுள்ளனர். இலங்கை கடற்படையின் இந்த செயலை கண்டித்தும், அவர்களை உடனடியாக விடுதலை செய்ய கோரியும் தி.மு.க. சார்பில் இன்று தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

சென்னையில் இலங்கை தூதரகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. ஆனால் போலீசார் அதற்கு அனுமதி வழங்க வில்லை. எனவே மைலாப்பூர் லஸ்கார்னர் அருகில் உள்ள நாகேஸ்வரராவ் பூங்கா அருகே காலை 10 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு கனிமொழி எம்.பி. தலைமை தாங்கினார். வடசென்னை, தென்சென்னை, திருவள்ளூர் மாவட்ட தி.மு.க.வினர், மகளிர் அணியினர் இதில் கலந்து கொண்டனர்.

அப்போது, இலங்கை அரசே தமிழக மீனவர்களிடம் அத்துமீறி நடக்காதே. கைதான மீனவர்களை உடனே விடுதலை செய். கண்டிக்கிறோம் ராஜபக் சேயை கண்டிக்கிறோம். மத்திய அரசே அப்பாவி தமிழக மீனவர்களை காப்பாற்று” என்று கோஷம் எழுப்பினார்கள். மீனவர்களுக்கு ஆதரவான வாசகங்கள் அடங்கிய அட்டைகளையும் ஏந்தி வந்தனர்.

ஆர்ப்பாட்டத்தின்போது கனிமொழி எம்.பி. பேசியதாவது:-

தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் தொடர்ந்து தாக்கி வருகிறார்கள். நேற்று 106 மீனவர்களை கைது செய்துள்ளனர். எதற்கும் ஒரு எல்லை உண்டு. இனியும் இது போன்ற சம்பவங்கள் நடந்தால் எங்களால் பொறுத்துக் கொள்ள முடியாது. 106 மீனவர்கள் கைதானதை கேள்விப்பட்டதும் தி.மு.க. தலைவர் முதல்- அமைச்சர் கலைஞர் மிகவும் வேதனைப்பட்டார். அவர்களை உடனே விடுதலை செய்ய நடவடிக்கை எடுக் கும்படி மத்திய அரசை வற்புறுத்தினார். தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தவும் அறிவுறுத்தப்பட்டதால் பெரும் திரளாக வந்திருக்கிறோம். மீனவர்கள் மீதான தாக்குதலை நிறுத்தாவிட்டால் எங்கள் போராட்டம் தொடரும்.

தமிழர்களின் உணர்வை இதைவிட ஆக்ரோஷமாக வெளிப்படுத்துவோம். மீன வர் சமுதாயத்துக்கு நிச்சயம் நீதி கிடைக்க வேண்டும். இதுதான் தி.மு.க. தலைவர் கலைஞரின் எண்ணம். கைதான தமிழக மீனவர்களை இலங்கை அரசு உடனே விடுதலை செய்ய வேண்டும். இவ்வாறு கனிமொழி பேசினார்.

அதன் பிறகு கனிமொழி தலைமையில் தி.மு.க.வினர் ஊர்வலமாக புறப்பட்டு ஆழ்வார்பேட்டையில் உள்ள இலங்கை தூதரகத்தை முற்றுகையிடுவதற்காக செல்ல முயன்றனர். அவர்களை நாகேஸ்வரராவ் பூங்கா அருகே கனிமொழி உள்பட சுமார் 5 ஆயிரம் தி.மு.க.வினரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் வேன், பஸ்களில் ஏற்றப்பட்டு மந்தவெளியில் உள்ள பி.எஸ்.எஸ். பள்ளி மைதானத்துக்கு கொண்டு போகப்பட்டனர். அமைப்பு செயலாளர்கள் டி.கே.எஸ்.இளங்கோவன் எம்.பி., பெ.வீ. கல்யாணசுந்தரம், தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் ஜெ.அன்பழகன், வி.எஸ். பாபு, எம்.எல்.ஏ.க்கள் ரங்கநாதன், சங்கரிநாராயணன், முன்னாள் அமைச்சர் கோமதி சீனிவாசன், முன்னாள் எம்.எல்.ஏ. செங்கை சிவம், மாணவர் அணி செயலாளர் கடலூர் இள. புகழேந்தி, தலைமை நிலைய செயலாளர்கள் சதாசிவம், எஸ்.ஏ.எம்.உசேன். மகளிர் அணி துணைத் தலைவர் விஜயா தாயன்பன், முன்னாள் மாவட்ட செயலாளர் பலராமன் மற்றும் நிர்வாகிகள் வி.எஸ்.ரவி, வி.எஸ்.ஜெ.சீனிவாசன், ஆர்.டி.சேகர், ஏ.டி.மணி, சுரேஷ்குமார், ஐ.கென்னடி, சேப்பாக்கம் மதன்மோகன், இந்திராநகர் ரவி, இளைஞர் அணி வி.எஸ். ராஜ், அகஸ்டின்பாபு, ஜெ.கருணாநிதி, காமராஜ், தனசேகரன், பாண்டி பஜார் எஸ்.ஜி.தமிழரசன், உதயசூரியன், ஏழுமலை, அடையாறு லோகநாதன், ஸ்ரீகாந்த், அன்புதுரை, வில்லிவாக்கம் எஸ்.டி.விஜய்ஆனந்த், மா. அகிலன், ராஜாமுகமது, சுகி, மேட்டுக்குப்பம் கமலக் கண்ணன் உள்பட ஏராளமான நிர்வாகிகள்- தொண்டர்கள் கைதானார்கள்.

source:maalaimalar

பின்னூட்டமொன்றை இடுக

Filed under Uncategorized

உடல் பருமனை குறைக்க ஆசையா? இதை படியுங்கள ்

உடல் பருமனை குறைக்க எ‌ளிய வ‌ழிக‌ள்

20udal.jpgஇன்றைய காலகட்டத்தில் ஆண்கள், பெண்கள் என இருபாலருக்கும் பெரும் பிரச்சனையாக இருப்பது உடல் பருமன் அல்லது ஊளைச் சதை உடம்பு.

இதற்கு ஆண்களுக்கு முக்கியக் காரணமாக அமைவது பணியிடத்தில் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்வது, வீட்டுச் சாப்பாடு இல்லாமல் கண்ட இடங்களில் கண்டவற்றை வாங்கிச் சாப்பிடுவதால் கொழுப்பு அதிகரிப்பது போன்றவையாகும்.

பெண்களைப் பொறுத்தவரை உடல் உழைப்பு குறைந்து போனது மட்டுமின்றி, போதுமான சத்தான உணவு இல்லாததும் ஒரு காரணமாக இருக்கிறது. இதுதவிர, அதிக நேரம் தொலைக்காட்சி முன்பு அமர்வது, பகலில் அதிக நேரம் தூங்குவது போன்றவையும் காரணமாக உள்ளது.

இதுபோன்றவர்களுக்கு எளிய வழியில் உடல் பருமனைக் குறைப்பது எப்படி என்பதை இப்போது பார்ப்போம்.

சாதாரணமாகத் தண்ணீர் குடிப்பதற்குப் பதிலாக சோம்பு கலந்த த‌ண்‌ணீரைப் பருகி வந்தால் உடம்பில் உள்ள ஊளைச் சதை குறைந்து உடல் வடிவம் அழகு பெறும்.

சாப்பிடும் உணவில் பூண்டு, வெங்காயம் அதிகமாகச் சேர்த்து வந்தால் உடலில் உள்ள தேவையற்றக் கொழுப்புகளைக் குறைத்து உடலிற்கு புத்துணர்ச்சி தரும்.

பப்பாளிக்காயைச் சமைத்து உண்டு வந்தால் உடல் மெலியும். இதுதவிர, மந்தாரை வேரை நீர்விட்டு பாதியாக காய்ச்சி தொடர்ந்து அருந்தி வந்தாலும் பருத்த உடல் மெலியும்.

அமுக்கிராவேர் பெருஞ்சீரகம் பாலில் காய்ச்சி குடித்து வந்தால் உடல் எடை குறையும். சுரைக்காய் வாரத்திற்கு 2 தடவை சாப்பிட்டு வந்தால் வயிற்றுச் சதை குறையும்.

மேலும் சதை போடுவதைத் தடுக்க வேண்டுமென்றால், தேநீரில் எலுமிச்சம் பழச்சாறு கலந்து காலையில் குடித்துவர வேண்டும். இதுதவிர, வாழைத்தண்டு சாறு, அருகம்புல் சாறு இவற்றில் ஏதாவது ஒன்றை தொடர்ந்து பருகி வந்தாலும் சதை போடுவதைத் தடுக்கலாம்.

இது எ‌ல்லாவ‌ற்‌றி‌ற்கு‌ம் மேலாக காலை‌யி‌ல் அரை ம‌ணி நேர‌ம் நடைப‌யி‌ற்‌சி மே‌ற்கொ‌ண்டா‌ல்கொழு‌ப்பு‌ம் கரையு‌ம், உட‌‌ல் எடையு‌ம் குறையு‌ம், பு‌த்துண‌ர்வாகவு‌ம் இரு‌க்கு‌ம்.

source:

பின்னூட்டமொன்றை இடுக

Filed under Uncategorized