Monthly Archives: ஜனவரி 2011

பிரபாகரன் மகிழ்ச்சி செய்தி !!தமிழீழ வானத் தில் விடியலின் வெளிச்சம்

prabhakaran.jpg

"விடுதலைப்புலிகள் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிருடன் இருக்கிறாரா? இல்லையா?’ என்கிற கேள்வி உலகம் முழுவதும் உள்ள தமிழர்களின் கேள்வியாக உள்ளது. தமிழகத்திற்கு வரும் டக்ளஸ் தேவானந்தாவின் ஆட்கள், ""பிரபாகரனா? அவர் இறந்து ஒரு வருடத்திற்கு மேலாகிவிட்டது. ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றவாளியான அவர் இறந்துவிட்டார் என இறப்புச் சான்றிதழை இலங்கை அரசிடமிருந்து பெற்று சி.பி.ஐ. தாக்கல் செய்துவிட்டது” என எகத்தாளமாக பதில் சொல்கிறார்கள்.

தமிழகத்தில் உள்ள ஈழ ஆதரவு தலைவர்களான நெடுமாறனும், வைகோவும், ""பிரபாகரன் உயிருடன் இருக்கிறார்” என்று ஓங்கி அடித்துச் சொல்கிறார்கள்.

இந்நிலையில் பிரபாகரனைப் பற்றிய தகவல்களுடன் ஒரு பெண்ணும் ஒரு ஆணும் தமிழகத்தைச் சேர்ந்த ஒரு இயக்கத் தலைவரை சந்தித்துப் பேசியிருக்கிறார்கள் என்கிற ரகசிய தகவல் நமக்கு வர… உடனடியாக புலனாய்வில் இறங்கினோம். அந்தச் சந்திப்பு நடந்த இடம் சென்னையில் உள்ள அண்ணா சர்வதேச விமான நிலையம் என்றதும், அங்கு பல நிலைகளில் வேலை செய்யும் ஊழியர்களையும், ஈழ ஆதரவு பிரமுகர்களையும் தொடர்பு கொண்டோம்.

prabhakaran1.jpg""சுமார் இருபத்தைந்து நாட்களுக்கு முன்பு கொங்கு மண்டலமான சேலம், ஈரோடு பகுதியைச் சேர்ந்த ஈழ ஆதரவு தலைவர் ஒருவர் சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்திருக்கிறார். இலங்கையிலிருந்து விமானத்தில் வந்திருந்த ஒரு பெண்ணையும் ஆணையும் விமான நிலையத்திலிருந்து அழைத்துக்கொண்டு போய் பேசினார். அந்தப் பெண் நடுத்தர வயதைச் சேர்ந்தவர். அவருடன் வந்தஆணிற்கு இரண்டு கைகளும் இல்லை. ஏதோ ஒரு வெடிகுண்டுத் தாக்குதலில் அந்த நபர் கைகளை இழந்திருப்பார் என பார்க்கும்போது தெரிந்தது.

சுமார் 30 நிமிடங்கள் அந்த பிரமுகருடன் பேசிக்கொண்டிருந்த அவர்கள், அதன்பிறகு மேற்கத்திய நாடுகளுக்குப் போகும் விமானத்தில் ஏறிப் பறந்தார்கள்.

பொதுவாக இலங்கையிலிருந்து வரும் விமானங்களை சிறப்பாக கண்காணிப்பதற் கெனவே ஏர்போர்ட்டில் சுற்றி வரும் மத்திய உளவுத்துறையும், அயல்நாடுகளில் துப்பறியும் "ரா’ அமைப்பும் இந்தச் சந்திப்பைப் பற்றி மிகவும் லேட்டாகத்தான் கண்டுபிடித்தார்கள். அவர்கள் போய் இலங்கை விமானப் பயணி களின் லிஸ்ட்டை செக் செய்தார்கள். அதற்குள் வந்தவர்கள் பறந்துவிட்டார்கள். அந்தச் சந்திப்பு பற்றிய விபரங்களை அறிய தமிழகம், இலங்கை என அவர்கள் களம் புகுந்த பிறகுதான் அந்தச் சந்திப்பு வெளியுலகத்திற்குத் தெரிய ஆரம்பித் தது” என்கிறது விமான நிலைய வட்டாரங்கள்.

இந்தியாவின் இரு பெரும் புலனாய்வு நிறுவனங்களுக்குப் போட்டியாக நாம் நமது தேடலை விரிவுபடுத்தி னோம். ஒரு பெரிய பொக்கிஷமே நமக்கு விடையாகக் கிடைத்தது.

ஈழ யுத்தத்தில் மிகப் பிரபலமான பெயர் ரூபன். இவர் இலங்கை ராணுவ விமானப் படைக்குப் போட்டியாக, விடுதலைப் புலிகளின் விமானத்தை இயக்கியவர். இலங்கை ராணுவத்துடன் நடை பெற்ற மோதலில் இவர் மரணமடைந்து மாவீரர் ஆகிவிட்டார்.

அவரது பெயரிலேயே இன்னொருவர் இருந்தார். அவர் சின்னரூபன் என அழைக்கப் பட்டார். தனது அன்புக்குப் பாத்திரமான சின்னரூபனை பிரபாகரன் மெய்க்காவல் படையில் இணைத்துக் கொண்டார்.

prabhakaran2.jpgமுள்ளிவாய்க்கால் படுகொலைகள் நடைபெற்றுக்கொண்டிருந்த யுத்தத்தின் இறுதி நாட்களில் சின்னரூபன் என்ன ஆனார்? என தேடிய சொந்த பந்தங்களிடம் தெளிவாகவே சின்னரூபன்… ""நான் தமிழீழக் கனவை நினை வாக்க மேதகு தலைவர் பிரபாகரன் அவர்களுடன் தப்பித்துச் சென்றுகொண்டிருக்கிறேன். என்னை யாரும் தேடவேண்டாம். என்னோடு தொடர்பு கொள்ளவும் வேண்டாம்” என்றார்.

சின்னரூபனின் பதிலைக் கேட்ட உறவினர்களுக்கு ஏகப்பட்ட சந்தோஷம். "அடுத்தகட்ட போராட்டத்திற்கு வலுசேர்க்க தலைவர் பயணம் செய்கிறார். அவருடன் சின்னரூபனும் செல்கிறார்’ என்கிற சந்தோஷத்திற்குப் பிறகு அவரிடமிருந்து அவர்களுக்கு எந்தத் தொடர்புமில்லை.

கடந்த மாதம் சின்னரூபனிடமிருந்து ஒரு செய்தி அவர்களுக்கு வந்திருக்கிறது. அதன் தொடர்ச்சியாக ஒரு ரகசியமான இடத்தில் சின்னரூபனை அவர்கள் சந்தித்திருக் கிறார்கள். "தலைவரும் நலம், நானும் நலம். சூழல் கூடி வரும் போது தலைவர் வெளி யே வருவார்’ என ரூபன் சொன்ன செய்தி யைக் கேட்டு ஆனந்தக் கூத்தாடியிருக்கிறார்கள்.

அந்தத் தகவலை தமிழகத்திற்கு சொல்லிவிட்டு மேற்கத்திய நாடு ஒன்றுக்கு தப்பிச் சென்றுவிட்டார்கள். அவர்கள் சின்னரூபனின் அக்காவும், மற்றொரு ஆண் உறவினரும். முள்ளிவாய்க்கால் போரின் போது அவர்கள் சின்னரூபனுடன் தொடர்பிலேயே இருந்தவர்கள். அந்தப் போரில் காயம்பட்டவர்கள்.

இத்தனை கடுமையான தாக்குதல்கள், காயங்கள் இவைகளுக்கு நடுவே வேறு நாட்டிற்கு தப்பித்துப் போகும் சூழலிலும், நல்ல செய்தியை உலகம் அறியட்டும் என அந்த நம்பிக்கைக்குரிய தலைவரை மட்டும் சந்தித்துவிட்டுச் சென்றிருக் கிறார்கள்.

தமிழீழ வானத்தில் விடியலின் வெளிச்ச ரேகைகள் படரத் தொடங்கியிருக்கின்றன.

-பிரகாஷ்

source:nakkheeran

அபிமான பதிவுகள்:

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கு கிடைத்துள்ள முதல் வெற்றி

இந்தியாவில் ..சுவிஸ் வங்கியில் பணம் போட்டவர் லிஸ்ட் :

கம்ப்யூட்டர் கேள்வி-பதில்

தாயின் குரல் மூலம் செயற்படுத்தப்படும் குழந்தையின் மூளை

3 ஜி கருவி மூலம் டூவீலரில் விபத்துகளை குறைக்கலாம்: மாணவரின் அரிய கண்டுபிடிப்பு

மாணவிகள் இறுக்கமான ஜீன்ஸ் அணிய தடை

3 பின்னூட்டங்கள்

Filed under Uncategorized

மகனை பறி கொடுத்து 4 பெண்களை காப்பாற்றியவ ர்

மகனை பறி கொடுத்து 4 பெண்களை காப்பாற்றியவர்: விருதுக்கு பரிந்துரை

தேனி : தேனி அருகே டொம்புச்சேரியில், தீ விபத்து மீட்பு பணியின் போது மகன் இறந்த நிலையிலும் விபத்தில் சிக்கிய நான்கு பெண்களை காப்பாற்றியவருக்கு மத்திய, மாநில அரசுகள் விருது வழங்க போலீஸ் நிர்வாகம் பரிந்துரை செய்துள்ளது.

தேனி அருகே டொம்புச்சேரி வடக்கு காலனியை சேர்ந்தவர் சுப்பையா. கடந்த 15ம் தேதி இவரது வீட்டில் மின்கசிவு காரணமாக தீ பற்றிக் கொண்டது. வீட்டிற்குள் நான்கு பெண்கள் இருந்துள்ளனர். பக்கத்து வீட்டில் வசிக்கும் கணேசன், அவரது மகன்கள் பிரபாகரன், பிரபு ஆகியோர் தீ எரிந்து கொண்டிருந்த வீட்டின் கதவினை உடைத்து உள்ளே சிக்கியிருந்த நான்கு பெண்களை மீட்டனர்.மீட்பு பணி நடந்து கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக மின்வயர் அறுந்து பிரபாகரன் மீது விழுந்தது. இதில் சம்பவ இடத்திலேயே பிரபாகரன்(22) உயிரிழந்தார். கணேசன் பலத்த காயமடைந்தார்.

அங்கிருந்த வயர்மேன் மொக்கை, மின்கம்பத்தில் ஏறி அறுந்து விழுந்த வயரின் மறுமுனையினை துண்டித்து விட்டார். இல்லாவிட்டால் மேலும் அதிகமானோர் பலியாகியிருப்பர்.தகவல் அறிந்த பாலகிருஷ்ணன் எஸ்.பி., டொம்புச்சேரிக்கு சென்று கணேசன் குடும்பத்திற்கு 10 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கினார். தீயால் பாதிக்கப்பட்ட சுப்பையாவிற்கு 2000 ரூபாய் நிதி வழங்கப்பட்டது.பாலகிருஷ்ணன் எஸ்.பி., கூறியதாவது: டொம்புச்சேரியில் ஏற்கனவே ஜாதிப்பிரச்னை நடந்துள்ளது. ஆனாலும் விபத்து நடந்த நேரம் ஜாதியை பற்றி சிந்திக்காமல் கணேசன் மனிதநேயத்தை மட்டுமே மனதில் கொண்டு உதவிபுரிந்துள்ளார். இதற்காக அவர் தனது மகனையே இழந்துள்ளார்.

இதனால் கணேசனுக்கு விருது வழங்குமாறு மத்திய, மாநில அரசுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. தகுந்த நேரத்தில் துரிதமாக செயல்பட்டு மின் இணைப்பை துண்டித்த வயர்மேன் மொக்கைக்கும் விருது வழங்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது என்றார்.

source:dinamalar

பின்னூட்டமொன்றை இடுக

Filed under Uncategorized

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கு கிடைத ்துள்ள முதல் வெற்றி

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கு கிடைத்துள்ள முதல் அங்கீகாரம்! இராஜதந்திர வெற்றி

நாடுகடந்த தமீழீழ அரசாங்கத்துக்கு உலக நாடுகளில் முதலாவதுஅங்கீகாரமாக புதிதாக அமையவுள்ள தென்சூடானிய அரசாங்கத்தின்அங்கீகாரம் கிடைத்துள்ளது.

சூடானுடன் தாம் இணைந்திருக்க விரும்பவில்லை என்பதைபுதியதொரு தோ்தலொன்றின் மூலம் வெளிக்காட்டி, தென் சூடானியமக்கள் தனியாகப் பிரிந்து செல்வதற்கான அங்கீகாரத்தைப் பெற்றுள்ளனர்.

அதற்கான போராட்டங்களை முன்னெடுத்து வந்த சூடானிய மக்கள் கிளர்ச்சிஇயக்கத்துடன், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதிநிதிகள் கடந்த காலங்களில்பலமான தொடர்புகளைப் பேணி வந்திருந்தனர்.

அதன் காரணமாக தெற்கு சூடான் சுதந்திரம் பெறும் நிகழ்வுகளில் கலந்துகொள்ளவெனநாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதிநிதிகள் உத்தியோகபூர்வ முறையில்அழைக்கப்பட்டுள்ளதுடன், அவர்களுக்கு இராஜதந்திர அந்தஸ்தும் வழங்கப்படவுள்ளது.

அதன் காரணமாக உலக நாடுகளில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தைஉத்தியோகபூர்வமாக அங்கீகரித்த முதலாவது நாடு என்ற பெருமையை தெற்கு சூடான்அரசாங்கம் பெற்றுக் கொள்ளவுள்ளது. அது நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின்செயற்பாடுகளில் ஒரு திருப்பு முனையாகவும், மைல் கல்லாகவும் அமையவுள்ளதாகஅரசியல் அவதானிகள் பலரும் கருத்து வெளியிட்டுள்ளனர்.

பின்னூட்டமொன்றை இடுக

Filed under Uncategorized

சுவிஸ் வங்கியில் பணம் போட்டவர் லிஸ்ட் : “வ ிக்கிலீக்ஸ்’ வெளியிடும்?

large_168176.jpg

லண்டன் : சுவிட்சர்லாந்து வங்கி ஒன்றின் முன்னாள் பணியாளர் ஒருவர், சுவிஸ் வங்கிகள் சிலவற்றில் ஆசியா, அமெரிக்காவை சேர்ந்தவர்கள் யார் யார் எல்லாம் சட்ட விரோதமாக பணம் சேர்த்து வைத்துள்ளனர் என்பது உள்ளிட்ட பல்வேறு விவரங்களை "விக்கிலீக்ஸ்’ நிறுவனத்திடம் அளித்து விட்டதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். சுவிட்சர்லாந்தின் ஜூரிச் நகரில் இயங்கி வரும் ஜூலியஸ் பார் என்ற வங்கியில் பணியாற்றியவர் ருடால்ப் எல்மர். இவர் கடந்த சில நாட்களுக்கு முன், சுவிஸ் வங்கிகள் பற்றிய பல்வேறு ரகசிய ஆவணங்களை "விக்கிலீக்ஸ்’ நிறுவனத்திடம் ஒப்படைக்கப் போவதாக கூறியிருந்தார். அதன்படி, நேற்று லண்டனில் "பிரன்ட் லைன்’ கிளப்பில், அதன் உரிமையாளரும், "விக்கிலீக்ஸ்’ பிரதிநிதியும், ஜூலியன் அசாஞ்சின் நண்பருமான வாகன் ஸ்மித் முன்னிலையில், அந்த ரகசிய ஆவணங்களை ஒப்படைத்தார்.

அந்த ஆவணங்கள் அனைத்தும் இன்னும் ஓரிரு நாட்களில் "விக்கிலீக்ஸ்’ இணையதளத்தில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆசியா, அமெரிக்கா, பிரிட்டன் நாடுகளை சேர்ந்த கோடீஸ்வரர்கள், தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள் ஆகிய 40 பேர் சுவிஸ் வங்கிகள் சிலவற்றில் வரி ஏய்ப்பு செய்வதற்காக 2,000 கணக்குகளில் போட்டு வைத்துள்ள பணம் பற்றிய ஆவணங்களை "விக்கிலீக்ஸ்’ நிறுவனத்திடம் ஒப்படைத்ததாக எல்மர் நேற்று அளித்த பேட்டியில் கூறியுள்ளார். வங்கி விதிகளை மீறியதற்காக எல்மர், நாளை, சுவிட்சர்லாந்தில் வழக்கில் ஆஜராக உள்ளார்.

source:dinamalar

பின்னூட்டமொன்றை இடுக

Filed under Uncategorized

கம்ப்யூட்டர் கேள்வி-பதில்

கேள்வி: கூகுள் தளங்களில் தேடுகையில், சில வேளைகளில் நாம் ஏற்கனவே பார்த்த தளத்தைத் தேடுகிறோம். ஆனால் அதே தகவல் இருக்கும் பல தளங்கள் கொண்ட பட்டியல் தருவதால், நாம் தேடும் இணைய தளத்தைப் பெற நேரம் ஆகிறது. ஏற்கனவே பார்த்ததனால், அதனை கூகுள் மெமரியில் வைத்துத் தரும் வசதி உள்ளதா? -ஜி. கோயில் பிச்சை, தேவாரம்
பதில்: கூகுள் நிறுவனத்திற்கு நல்ல பயனுள்ள வேலை தந்திருக்கிறீர்கள். உங்கள் விருப்பத்தை நேரடியாக நிறைவேற்றும் வசதியை கூகுள் இன்னும் தரவில்லை. ஆனால் கூகுள் தளம் மூலம் சென்ற வாரம் சில தகவல்களுக்காக தேடலை மேற்கொண்ட போது, கூகுள் சைட் பிரிவியூ என்ற ஒரு வசதி இருப்பது
தென்பட்டது. தேடல் முடிவுகளை அடுத்து, ஒரு சிறிய லென்ஸ் போல ஐகான் ஒன்று இருந்தது. இதன் பெயர் சர்ச் பிரிவியூ அல்லது சைட் பிரிவியூ. இதன் மூலம் நமக்குக் காட்டப்படும் தளத்தின் முன்னோட்டக் காட்சியினை நாம் பார்க்க முடிகிறது. இதனால், நாம் அந்த தள விளக்கப் பகுதியில் கிளிக் செய்து, தளம் டவுண்லோட் ஆகி, பின்னர் அதனைப் பார்த்து, நாம் தேடுவது அதுதானா என்று அறிய நேரம், இன்டர்நெட் பேண்ட்வித் போன்றவற்றை வீணாக்காமல், தளம் என்னவென்று அறிய முடிகிறது. ஏற்கனவே தளத்தைப் பார்த்து ரசித்துப் பின்னர் அது எங்கே என்று தெரியாமல் தேடுபவர்களுக்கு இந்த வசதி மிகவும் உதவியாக இருக்கும். முன்னோட்டக் காட்சியைப் பார்த்தவுடன், இது தான் தேடப்படும் தளமா என்று முடிவு செய்து திறந்து பார்க்கலாம். அருகில் உள்ள படத்தில் தினமலர் குறித்து தேடிப் பார்த்த பிரிவியூ காட்சியைக் காணலாம்.

கேள்வி: நோட்பேடில் உள்ள டெக்ஸ்ட் பைலை பிரிண்ட் எடுக்க முயற்சிக்கையில், அச்செடுக்க வசதியாக, அதன் மார்ஜின் போன்றவற்றை மாற்றி அமைக்க முடியுமா? ஹெடர் மற்றும் புட்டர் செட் செய்திட வழி உண்டா? -கே. அய்யப்பராஜ், சிவகாசி.
பதில்: இந்த வசதி உள்ளது. மார்ஜின் செட் செய்து, உங்கள் ஹெடர் மற்றும் புட்டர்களை மாற்றலாம். நோட்பேடில் பைல் திறந்து, பின்னர் ஊடிடூஞு/கச்ஞ்ஞு குஞுtதணீ செல்லவும். இங்கு மார்ஜின் போன்றவற்றை நீங்கள் விரும்பும் வகையில் செட் செய்து கொள்ளலாம். இதில் ஹெடர் மற்றும் புட்டர் பாக்ஸ்களில் உள்ள “&f” “Page &p” பார்த்து குழப்பம் அடைய வேண்டாம். – இது பைல் பெயரை அச்சிடுமாறு கூறுகிறது. பைலுக்குப் பெயர் இல்லை என்றால் அப்படியே விட்டுவிடும். d என்று கொடுத்தால் தேதி அச்சிடப்படும். t என்பது நேரத்தை, நம் கம்ப்யூட்டர் கடிகாரத்திலிருந்து பெற்று அச்சிடும். p பக்க எண்ணை அச்சிடும். ஹெடர் மற்றும் புட்டரில் உள்ளவற்றை இடது, வலது மற்றும் நடு என அமைக்க வேண்டுமா? டூ, ணூ, ஞி எனத் தரவும். ஹெடர் மற்றும் புட்டரில் உங்கள் டெக்ஸ்ட்டையும் தரலாம். என்ன! இந்த சின்ன நோட்பேடில் இவ்வளவா என்று பார்க்கிறீர்களா!

கேள்வி: இன்டர்நெட் சைட் ஒன்றைப் பார்த்துக் கொண்டிருக்கையில், அதில் பலூன் டிப் என்று எழுதப்பட்டிருந்தது. அதன் பின் அதனையே பாப் அப் டெஸ்கிரிப்ஷன் என்று போட்டிருந்தது. ஏன் இரண்டு பெயர்? என்ன வித்தியாசம்? -கே. மாலதி, கோயம்புத்தூர்.
பதில்: நீங்கள் குழப்பம் அடைந்த மாதிரி எனக்கும் அனுபவம் ஏற்பட்டது? பலூன் டிப், பாப் அப் டிப், டெஸ்கிரிப்ஷன் டிப், டூல் டிப் எனப் பல சொற்றொடர்களை ஒரே மாதிரியான கம்ப்யூட்டர் வசதிக்கு இடப்படுகிறது. இவை அனைத்தையும் ஸ்கிரீன் டிப் என அழைக்கலாம். ஐகான் ஒன்றில், மவுஸ் கர்சரைக் கொண்டு செல்கையில் இந்த ஸ்கிரீன் டிப் கிடைக்கிறது. அது அந்த ஐகான் குறித்தோ அல்லது ஐகான் காட்டும் புரோகிராம் குறித்தோ இருக்கலாம். மிக விளக்கமாகவோ அல்லது சிறிய அளவில் தனி குறிப்பாகவோ இருக்கலாம்.
நோட்டிபிகேஷன் ஏரியா வில் உள்ள ஐகான்களில் கர்சர் செல்கையில் தரப் படும் டிப்ஸ்களுக்கு பலூன் அல்லது பப்பிள் டிப்ஸ் என்று சொல்கின்றனர். இதில் இரண்டு வகை உள்ளன. ஒரு வகை, அந்த ஐகான் காட்டும் புரோகிராமில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்று காட்டும். நெட்வொர்க் செயல்பாடு, வால்யூம் நிலை போன்றவை இதில் அடங்கும். இன்னொரு வகை என்ன புரோகிராமினை அந்த ஐகான் காட்டுகிறது என்று அறிவிக்கும். டெஸ்கிரிப்ஷன் டிப்ஸ் என்பது இந்த ஸ்கிரீன் டிப்கள் அதிகமான தகவலைத் தரும்போது பெறும் பெயர்களாகும். வேர்ட் டாகுமெண்ட் மற்றும் பாடல் பைல்களைக் காட்டுகையில் இந்த டிப் கிடைக்கும். ஸ்டார்ட் மெனுவில் வலது மூலையில் கிடைக்கும் டிப்களை, டூல் டிப் என அழைக்கின்றனர். அவை உங்கள் மவுஸ் கர்சர் எந்த போல்டர் அருகே செல்கின்றன என்று காட்டும்.

கேள்வி: இன்டர்நெட் தளங்களைப் பார்க்கையில் பலவிதமான பிழைச் செய்திகள் கிடைக்கின்றன. பொதுவாக இல்லாமல் எர்ரர் கோட் என்றெல்லாம் வருகிறது. இதற்கான தீர்வுகள் எங்கே கிடைக்கும்? -சா. இளவழகன், பாண்டிச்சேரி. பதில்: இது போன்ற புதுவிதமான எர்ரர் கோட் வருகையில், தளத்தினை மூடி, இன்டர்நெட் இணைப்பினை மீண்டும் உயிர்ப்பித்து, அதே தளத்தைப் பெற்று, மீண்டும் எர்ரர் வருகிறதா எனப் பார்க்கவும். பொதுவாக, இந்த தளங்கள் இயங்கிக் கொண்டிருக்கும் மற்ற தளங்கள் அல்லது புரோகிராம்களுடன் ஏற்படும் குறியீடு மோதல்களால் ஏற்படுபவை. தீர்வுகள் இப்போது இன்டர்நெட்டில் கிடைக்கின்றன. இந்த பிழைச் செய்திகளை அப்படியே காப்பி செய்து, பின்னர் தேடல் இஞ்சின் ஒன்றைத் திறந்து அதில் பேஸ்ட் செய்து என்டர் தட்டவும். உடனே இதே போன்ற பிழைச் செய்தி குறித்து ஏற்கனவே தகவல் மற்றும்
விளக்கங்கள் குறித்து எழுதப்பட்ட தளங்கள் கிடைக்கும். அதில் கூறப்பட்டவை பார்த்து மேற்கொண்டு செயல்படலாம்.

கேள்வி: எனக்கு ஏற்பட்ட சிக்கல் குறித்து என் நண்பர் எழுதுகையில் ‘gpedit.msc’ என்ற பைலைத் திறந்து பார்த்தால், தீர்வு இருக்கலாம் என்று எழுதி உள்ளார். இந்த பைலைத் திறந்து பார்க்கலாமா? -தி. கண்ணப்பன், காரைக்கால்.
பதில்: உங்கள் சிக்கல் என்ன என்று எழுதவில்லையே! உங்கள் சந்தேகம் ‘gpedit.msc’ ’ பைலத் திறந்து பார்க்கலாமா? என்பது தான், இல்லையா? தாராளமாக. ஸ்டார்ட் அழுத்தி வரும் மெனுவில் ரன் கட்டத்தில் இதனை டைப் செய்து என்டர் அழுத்த இந்த பைல் கிடைக்கும். இதில் விண்டோஸ் சிஸ்டம் இயங்கும் பல பிரிவுகள் கிடைக்கும். இதில் சிஸ்டம் இயங்கும் விதத்தினை மாற்றி அமைக்கலாம். எடுத்துக்காட்டாக, நீங்கள் பைல்களை அழிக்கையில், அழிக்கப்படும் பைல் ரீசைக்கிள் பின்னுக்குச் செல்லக் கூடாது என விரும்பினால், இந்த பைலைத் திறந்து, செட்டிங் மாற்றலாம். ஆனால் ஒன்றைக் கவனத்தில் கொள்ள வேண்டும். ஏதாவது எக்குத் தப்பாக எதனையாவது
மாற்றிவிட்டால், கம்ப்யூட்டர் இயங்குவது சிரமப்படலாம். எனவே உங்கள் உள் எச்சரிக்கை சரியானதுதான். கவனத்துடன் பைலைத் திறந்து பாருங்கள்.

கேள்வி: முன்பு ஒருமுறை சிஸ்டம் பற்றி இன்பர்மேஷன் பெற சிஸ்டம் இன்போ (Systeminfo என டைப் செய்து பெறலாம் என்று எழுதியிருந்தீர்கள். நிறைய தகவல்கள் கிடைக்கின்றன. இவற்றை எப்படி ஸ்டோர் செய்வது? -நி.
முத்துகிருஷ்ணன், விழுப்புரம்.
பதில்: நல்ல கேள்வி. அப்போதே இதனை எப்படி சேவ் செய்து வைப்பது எனவும் சொல்லி இருக்கலாம். எழுதினேன் என்று நினைவு. பரவாயில்லை. இதோ அதற்கான வழி. கமாண்ட் ப்ராம்ப்டில்‘systeminfo> info.txt’ என டைப் செய்திடுங்கள். info.txt என்ற பெயரில் அனைத்து தகவல்களும் சேவ் செய்யப்படும். பொறுமையாக அனைத்து தகவல்களையும் படித்துத் தெரிந்து செயல்படலாம்.

கேள்வி: பலர் பிரவுசரை மாற்ற அறிவுரை கூறியும், இன்னும் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 6ஐத்தான் பயன்படுத்துகிறேன். பழகிவிட்டதால், இந்த பிரச்னை. இதில் ஏற்படும் தற்காலிக பைல்களை, பிரவுசரே அழிக்கும் வகையில் செட் செய்திட முடியுமா?
-டி. சிவக்குமார், மதுரை.
பதில்: ஏன் குற்ற உணர்ச்சியுடன் கடிதம் எழுதி உள்ளீர்கள். பிரவுசரை மாற்றி, புதிய இன்டர்நெட் எக்ஸ்புளோரரைப் பயன்படுத்தலாம். இருப்பினும் உங்கள் கேள்விக்கு பதில் தருகிறேன். தற்காலிகப் பைல்களை இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 6 அழிக்கும். அதற்கான செட்டிங்ஸ் இதோ. பிரவுசரைத் திறக்கவும். பின்னர், Tools / Internet Options… and Advanced எனச் செல்லவும். இதில் கீழாக செக்யூரிட்டி ஏரியா (Security area) என்ற பகுதிக்குச் செல்லவும். Empty Temporary Internet Files folder when browser is closed என்ற இடத்தில் டிக் அடையாளதைதை ஏற்படுத்தவும்.

கேள்வி: என்னுடைய கம்ப்யூட்டரில் மட்டும், இன்டர்நெட் இணைப்பு
ஏற்படுத்துகையில், இணைப்பு உள்ளது என்பதைக் காட்டும் ஐகான்
காட்டப்படவில்லை. நெட்வொர்க் கார்டில் எல்.இ.டி. விளக்கும் தெரியவில்லை. இது எதனால்? வைரஸ் புகுந்ததன் விளைவா?
-மா. நிர்மலா ராஜன், தாம்பரம்.
பதில்: டெஸ்க்டாப்பில் My Network Places மீது ரைட் கிளிக் செய்திடவும். பின்னர் கிடைக்கும் மெனுவில் Properties தேர்ந்தெடுக்கவும். இங்கு உங்கள் லேன் அல்லது டயல் அப் அல்லது பிராட்பேண்ட் ஐகான் மீது ரைட் கிளிக் செய்து கிடைக்கும் மெனுவில் Properties தேர்ந்தெடுக்கவும். இங்கு Show icon in notification area when connected என்ற பெட்டியில் கர்சர் கொண்டு கிளிக் செய்திடவும். இப்போது டாஸ்க் பாரின் வலது பக்கம், இன்டர்நெட்
இணைப்பிற்கான ஐகான் சிறிய விளக்குடன் காட்டப்படும்.

source:dinamalar

பின்னூட்டமொன்றை இடுக

Filed under Uncategorized

தாயின் குரல் மூலம் செயற்படுத்தப்படும் க ுழந்தையின் மூளை

baby.jpgகுழந்தையின் மொழியை கற்றுக்கொள்ளும் மூளையின் பாகம் தாயின் குரல் மூலமே செயற்படுத்தப்படுகின்றது என ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

மொன்ட்ரியல் பல்கலைக்கழகத்தினைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களே இவ்வாய்வினை மேற்கொண்டிருந்தனர்.

இவர்களின் ஆய்வின்படி குழந்தைகளின் மூளையின் மொழியை கற்கும் பகுதியானது தாயின் குரலுக்கு மட்டுமே துலங்களைக் காட்டுவதாகவும் மற்றையவர்களின் குரலுக்கு அவ்வாறு காட்டுவதில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாய்விற்கு பல குழந்தைகளை உட்படுத்தியதாகவும் அவை உறங்கும்போது அவற்றின் தலைகளுக்கு இலக்ட்ரோட் வழங்கியுள்ளனர்.

இதன் போது குழந்தைகளின் தாய்க்கு அவர்களை ‘ ஹலோ ‘ என மெதுவாக அழைக்கும் படி கூறியுள்ளன.

இதனைத்தொடர்ந்து வேறு பெண்களுக்கும் குழந்தைகளை அவ்வாறு அழைக்கும் படி கூறியுள்ளனர்.

குழந்தையின் தாய் அழைத்த போது குழந்தையின் மூளையின் இடதுபகுதி அதாவது மொழியினை செயற்படுத்தும் பகுதியின் மாற்றங்களை அவதானித்ததாகவும். மற்றையவர்கள் அழைத்தபோது குரல்களை அடையாளங்கண்டு கொள்ளும் மூளையின் வலது பகுதியிலேயே மாற்றங்கள் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது

source:

பின்னூட்டமொன்றை இடுக

Filed under Uncategorized

3 ஜி கருவி மூலம் டூவீலரில் விபத்துகளை குற ைக்கலாம்: மாணவரின் அரிய கண்டுபிடிப்பு

டூவீலரில் 3 ஜி கருவி மூலம் 80 சத விபத்துகளை குறைக்கலாம்: மாணவரின் அரிய கண்டுபிடிப்பு

large_164251.jpg

விருதுநகர்: விருதுநகரில் நடந்த, 37வது மாநில அளவிலான ஜவகர்லால் நேரு அறிவியல் கண்காட்சியில் இடம் பெற்ற மானாமதுரை மாணவர் மணிகண்டனின் புதிய கண்டுபிடிப்பான "3 ஜி’ வாகன கட்டுப்பாட்டு கருவியால், 80 சதவீத விபத்துகளை குறைக்க முடியும்.

உலகில், ஆண்டுக்கு 12 லட்சம் பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கின்றனர். டூவீலர்களால் 75 சதவீத விபத்துகள் அதிகரித்துள்ளன. இதை கட்டுப்படுத்தும் விதமாக, சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஓ.வி.சி., மெட்ரிக் பள்ளி மாணவர் வி.ஆர். மணிகண்டன், ஜி.எஸ்.எம்., தொழில்நுட்பத்திலான கருவி மூலம், "3 ஜி’ வாகன கட்டுப்பாட்டு கருவியை கண்டுபிடித்துள்ளார். ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் டூவீலரை பதிவு செய்யும் போது, அதில் இந்த டிவைஸ் பொருத்தலாம். இதன் விலை 2,200 ரூபாய். இதை பொருத்திய பின், இதற்காக தனி எண் தரப்படும்.வாகனம் திருடு போனால் அதற்குரிய எண்ணை, மொபைல் போன் மூலம் அழைத்தால் வாகனம் நின்று விடும். அதிலிருந்து எச்சரிக்கை ஒலி எழும்பும். வாகனம் இருக்கும் இடத்தை எஸ்.எம்.எஸ்., மூலம் தெரிவிக்கும். மேலும், "ஹெல்மெட்’ அணிந்த பின்பே வாகனத்தை இயக்க முடியும். வாகனம் விபத்துக்குள்ளாகும் போது, சம்பந்தப்பட்ட மொபைல் எண்ணிற்கு இந்த இடத்தில் வாகனம் விபத்துக்குள்ளாகியுள்ளது என எஸ்.எம்.எஸ்., தரும்.சைடு ஸ்டாண்ட் போட்டிருக்கும் போது, டூவீலரை இயக்க முடியாது. குறிப்பிட்ட இடங்களில் இத்தனை கிலோ மீட்டர் வேகத்தில் செல்ல வேண்டும் என்பதை கண்டுபிடிக்கும். "பிரேக் ஷூ’ தேய்ந்து விட்டால், வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை செய்யும்.

இரவு நேரங்களில் மட்டுமே முகப்பு விளக்குகள் எரியும். பகலில் "ஆன்’ செய்தாலும் எரியாது. "எப்.சி.’ எடுக்க வேண்டிய தேதியை, அறிவுறுத்தும். திருட்டு வாகனங்களோ, ரோடுகளில் தவறு செய்யும் வாகனங்கள் 200 மீட்டரில் வரும் போதே, நெடுஞ்சாலை கண்காணிப்பு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கும். வாகன "பயோ டேட்டா’ வழங்கும் விதமாக "3 ஜி’ கட்டுப்பாட்டு கருவியை கண்டுபிடித்துள்ள மணிகண்டனுக்கு, விருதுநகரில் நடந்த மாநில அறிவியல் கண்காட்சியில் முதல் பரிசு வழங்கப்பட்டது.

இதுகுறித்து மணிகண்டன் கூறியதாவது: நான் கண்டுபிடித்துள்ள கருவிகளை டூவீலரில் பொருத்தும் போது, ஹெல்மெட் அணியாமல் ஏற்படும் பலியை 95 சதவீதம், விபத்து நடந்த இடத்தை தெரிவிப்பதன் மூலம் பலியை 75 சதவீதம், வேக கட்டுப்பாடு மூலம் 85 சதவீதம், பிரேக் ஷூ, இண்டிகேட்டர், முகப்பு விளக்கு கட்டுப்பாடு, சைடு ஸ்டாண்டு ஆகியவற்றால் ஏற்படும் விபத்துகளை 95 சதவீதம் குறைக்க முடியும். டூவீலர்களால் ஏற்படும் விபத்துகளில் 80 சதவீதத்தை கட்டுப்படுத்த முடியும். இதற்கான தொகை மிகக் குறைவு தான். ஆர்.டி.ஓ., அலுவலகங்களில் வாகனங்களுக்கு, "ஸ்மார்ட் கார்டு’ வழங்குவதற்கு பதிலாக ஜி.எஸ்.எம்., கருவிகளை பயன்படுத்தலாம்.இவ்வாறு மணிகண்டன் கூறினார்

source:dinamalar

பின்னூட்டமொன்றை இடுக

Filed under Uncategorized