மாணவிகள் இறுக்கமான ஜீன்ஸ் அணிய தடை;


ஈரானில் மாணவிகள் இறுக்கமான ஜீன்ஸ் அணிய தடை; உடலில் பச்சை குத்தக் கூடாது
ஈரானில் மாணவிகள் இறுக்கமான ஜீன்ஸ் அணிய தடை; உடலில் பச்சை குத்தக் கூடாது
டெக்ரான், ஜன 12-

ஈரானில் மாணவிகள் இறுக்கமான ஜீன்ஸ் அணிய தடை விதிக்கப்பட்டுள்ளது. முஸ்லிம் நாடான ஈரானில் கல்லூரி மாணவிகள் உடை கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. இஸ்லாமிய முறைப்படி ஆடைகள் அணிய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி பல்கலைக் கழகங்களில் படிக்கும் மாணவிகள் இறுக்கமான ஜீன்ஸ் பேண்ட் அணிந்து வரக் கூடாது.

நீளமான நகம் வளர்த்து அவற்றில் சாயம் பூசக் கூடாது. மிகவும் பிரகாசமான வண்ண ஆடைகளை அணியவோ, உடலில் பச்சை குத்தவோ கூடாது என்று அந்நாட்டு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

மாணவிகளுக்கு மட்டு மின்றி மாணவர்களுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி அவர்கள் தங்கள் தலை முடிகளில் சாயம் பூசக் கூடாது. கண் இமைகளை சரி செய்யக் கூடாது. மாணவிகளை கவரும் வகையில் இறுக்கமான ஆடைகள், சட்டைகள் மற்றும் கையில்லா சட்டைகள், நகைகள் அணியவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இவை தவிர பெண்களுக்கான உடை கட்டுப்பாடுகளும் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. தலையில் துணியின்றி தொப்பி அணிய கூடாது. மேலும் உடல் தெரியும்படி இறுக்கமான மற்றும் குட்டையான ஜீன்ஸ் அணிய கூடாது. நீளமான நகம் வளர்க்கவோ, இறுக்கான ஓவர் கோட் அணியவோ, கண்ணை பறிக்கும் உடைகளை அணியவோ கூடாது. காதுகளில் வளையங்கள் மட்டும் அணியலாம். அவை தவிர ஆடம்பர நகைகளை அணியவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேற்கத்திய நாடுகளின் கலாசாரம் பரவுதலை தடுக்க ஈரானில் கடந்த 1979-ம் ஆண்டு இஸ்லாமிய சட்டம் நடை முறைப்படுத்தப்பட்டது. இது குறித்து பிரசாரம் செய்யப்பட்டும் வருகிறது. இந்த நிலையில் தற்போது மேலும் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது

source:maalaimalar

பின்னூட்டமொன்றை இடுக

Filed under Uncategorized

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s