வேர்ட் 2007ல் ஷார்ட்கட் கீகளின் தனித் தோற்ற ம்


ஆபீஸ் 2007ல் உள்ள வேர்ட் தொகுப்பில் கிடைக்கும் ஷார்ட் கட் கீ தொகுப்புகள், முன்பு வந்த வேர்ட் 2003 மற்றும் வேர்ட் 2000 ஆகியதொகுப்புகளில் உள்ளது போலவே இருக்கின்றன. ஆனால் இதில் ஒரு சிறப்பான தோற்றம் உள்ளது. முந்தைய வேர்ட் தொகுப்புகளில், நீங்கள் ஷார்ட் கட் கீ தொகுப்புகளை நன்கு அறிந்திருக்க வேண்டும். எடுத்துக் காட்டாக, கண்ட்ரோல்+பி (Ctrl+B) அழுத்தினால் எழுத்துக்களை போல்ட் செய்திட, கண்ட்ரோல் + சி (Ctrl+C)அழுத்தினால் காப்பி செய்திட என்பவற்றை மனதில் வைத்துப் பயன்படுத்துவோம். வேர்ட் 2007 பதிப்பில் இந்த மனப்பாட வேலை எல்லாம் தேவை இல்லை. இவை அனைத்தும் வேகமாகத் திரையில் காட்டப்படுகின்றன. ஆல்ட் மற்றும் பிற தொகுப்பு முன் கீயினை அழுத்துகையில் இந்த எழுத்துக்கான கீயுடன் இணைந்த மற்ற எழுத்துக்களின் இணைப்புடன் அவற்றில் மேற்கொள்ளப்படும் செயல் முறையும் காட்டப்படுகின்றன. எடுத்துக் காட்டாக, ஆல்ட் (Alt) கீயினை அழுத்தினால், டூல்பார் பட்டன்களுக்கு மேலாக இந்த செயல்முறைகள் தோன்றும்.
AltF = Office Button
Alt1 = Save
Alt2 = Undo
Alt3 = Redo
AltH = Home
AltN = Insert tab
AltP = Page Layout tab
AltS = References tab
AltM = Mailings tab
AltR =Review tab
AltV =View tab
AltL = Developer tab
இதே போல மற்ற கீகளுக்குமான செயல்முறைகளை, அந்த அந்த கீ அழுத்திக் காணலாம்.

source:dinamalar

பின்னூட்டமொன்றை இடுக

Filed under Uncategorized

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s