Daily Archives: ஜனவரி 1, 2011

ஜிமெயிலிலும் “”இதுதானா நீங்கள் நினைத்தது ?’

கூகுள் தேடுதல் சாதனம் மூலம் தேடலை மேற்கொள்கையில், நாம் ஏதேனும் எழுத்துப் பிழை ஏற்படுத்தினால், உடனே கூகுள் “Did you mean” எனக் கேட்டுச் சரியான எழுத்துக்களுடன் அந்த தேடலுக்கான சொல் அல்லது சொல் தொடர்களை அமைக்கும். அல்லது இப்படி அமைத்துத் தான் தேட விரும்புகிறீர்களா? என்று பொருள்பட நமக்கு சில காட்டப்படும். பெரும்பாலும், கூகுள் அமைத்திடும் சொற்கள் சரியாகவே அமையும். இதன் மூலம் நாம் தவறு செய்தாலும், சரியான தேடலுக்கு இது உதவிடுகிறது.

இப்போது இந்த வகை உதவி, ஜிமெயில் தேடலுக்கும் வழங்கப்படுகிறது. இமெயில் இன்பாக்ஸ் அல்லது மற்ற பெட்டிகளில் நாம் காண விரும்பும் டெக்ஸ்ட் உள்ள இமெயில்களைப் பார்த்திட, சில சொற்களை அமைத்துத் தேடுகையில், இதுதானா நீங்கள் தேடுவது என, வேறு சில சொற்களும் காட்டப்படுகின்றன. சொற்களில் எழுத்துப் பிழை இருக்கையில், சரியான எழுத்துக்களுடன் சொற்கள் காட்டப்படுகின்றன. இதனால் நம் தவறுகள் திருத்தப்படுகின்றன. தேடல்கள் விரைவு படுத்தப்படுகின்றன

source:dinamalar

பின்னூட்டமொன்றை இடுக

Filed under Uncategorized