Monthly Archives: திசெம்பர் 2010

“விக்கி லீக்ஸ்’ விவகாரம் என்ன ஆகும்?

large_141243.jpg

லண்டன் : "விக்கி லீக்ஸ்’ இணையதள நிறுவனர் ஜூலியன் அசேஞ்ச் (39) நேற்று ஸ்காட்லாந்து யார்டு போலீசாரிடம் சரண் அடைந்தார். அவர் மீதான பாலியல் வழக்குகள் குறித்து அவரிடம் ஸ்வீடன் நாட்டு அதிகாரிகள் விசாரிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டதன் பேரில், அவர் சரண் அடைந்ததாக ஸ்காட்லாந்து போலீசார் தெரிவித்தனர். பின்பு அவர் கைது செய்யப்பட்டார்.

"விக்கி லீக்ஸ்’ இணையதள நிறுவனர் ஜூலியன் அசேஞ்ச் மீது, இந்தாண்டின் துவக்கத்தில், ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த இரு பெண்கள், தங்களை அவர் பாலியல் பலாத்காரம் செய்ததாக வழக்கு தொடுத்தனர். இக்குற்றச்சாட்டை மறுத்த அசேஞ்ச், அவர்கள் தன்னுடன் உடன்பட்டு உறவு வைத்துக் கொண்டதாக விளக்கம் அளித்தார். இதையடுத்து, "விக்கி லீக்ஸ்’ இணையதளம், அமெரிக்கா மற்றும் பிரிட்டன் படைகள் ஈராக் மற்றும் ஆப்கனில் நடத்திய போர் அட்டூழியம் குறித்த ஐந்து லட்சம் ரகசிய ஆவணங்களை வெளியிட்டது. அதன் பின், சமீபத்தில் அமெரிக்க வெளியுறவு தொடர்பான இரண்டரை லட்சத்துக்கும் அதிகமான ரகசிய ஆவணங்களை வெளியிட்டது. இதனால் அமெரிக்காவுக்கும், அதன் கூட்டணி மற்றும் நட்பு நாடுகளுக்கும் பலவிதங்களில் நெருக்கடி ஏற்பட்டது. இந்நிலையில், கடந்த மாதம், ஸ்வீடன் நாட்டு கோர்ட் ஒன்று, அசேஞ்ச் மீது இரு பெண்கள் தொடுத்த பாலியல் வழக்கில், அவரை கைது செய்ய உத்தரவிட்டது. இதையடுத்து, "இன்டர்போல்’ போலீஸ் இணையதளத்தில் அவரை தேடும் உத்தரவு வெளியிடப்பட்டது. கோர்ட்டின் இந்த உத்தரவு, அமெரிக்க அரசின் நெருக்கடியின் பேரிலேயே எடுக்கப்பட்டது என, அசேஞ்சின் வக்கீல்கள் கூறிவந்தனர். நேற்று அவர் பிரிட்டன் ஸ்காட்லாந்து யார்டு போலீசாரிடம் சரண் அடைவார் என செய்திகள் தெரிவித்தன.

இந்நிலையில்,"ஸ்வீடன் அதிகாரிகள், பாலியல் வழக்கு தொடர்பாக அவரிடம் விசாரிக்க வேண்டும் என விடுத்த கோரிக்கையை ஏற்று, அவர் நேற்று காலை சரண் அடைந்தார். அவர் மீது இரண்டு பாலியல் பலாத்காரம் மற்றும் ஒரு கற்பழிப்பு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன’ என, ஸ்காட்லாந்து யார்டு போலீசார் தெரிவித்தனர். பின்பு அவர் கைது செய்யப்பட்டார். ஸ்வீடன் கோர்ட் பிறப்பித்த உத்தரவில் குறிப்பிடப்பட்ட, "நாடு கடத்தும்’ வழக்கை எதிர்த்து, அசேஞ்ச் சட்டரீதியாக போராடுவார் என அவரது வக்கீல்கள் தெரிவித்துள்ளனர். இன்று ஸ்வீடனுக்கு அவர் நாடுகடத்தப்பட்டால், அமெரிக்க ரகசியங்களை வெளியிட்டதற்காக பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தி அவரை எளிதில் அமெரிக்காவுக்கு நாடுகடத்திவிட முடியும் என்பதால், அவர் அதை எதிர்த்து போராட வேண்டியுள்ளதாக அவர்கள் கூறினர். இதுகுறித்து அவரது வக்கீல் மார்க் ஸ்டீபன்ஸ் கூறுகையில்,"அவர் மீது எந்தக் குற்றச்சாட்டும் சுமத்தப்படவில்லை. அவர் மீதான நாடு கடத்தல் வழக்கு இன்னும் 28 நாட்களுக்குள் விசாரிக்கப்படும்’ என்றார். ஆகவே "விக்கி லீக்ஸ்’ விவகாரத்தில் அவர் எப்போது கைதாகி விசாரிக்கப்படுவார் என்பது இனித்தான் தெரியும்.

நாடு சுற்றுவதில் கில்லாடி

* கடந்த 1971, ஜூலை மாதம் ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாண்ட் மாகாணத்தின் டவுன்ஸ்வில்லே என்ற ஊரில் பிறந்தார். இவரது பெற்றோர், திரையரங்கம் ஒன்றை நடத்தினர். அதோடு, நாடு சுற்றுவதில் அவர்களுக்குத் தீராத ஆசை இருந்தது.

* வளரிளம் பருவத்தில் இவர் "கம்ப்யூட்டர் புரோகிராம்’ வடிவமைப்பதில் தேறினார்.

* இணையதளத்தில் புகுந்து தகவல்களைத் திருடியதாக, 1995ல் கைது செய்யப்பட்டார். அபராதம் கட்டிய பின் எச்சரிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டார்.

* மெல்போர்ன் பல்கலைக்கழகத்தில் தனது 20வது வயதில் கணிதம் மற்றும் இயற்பியல் கற்றார்.

* இவர் நிரந்தரமாக ஓரிடத்தில் தங்கியதாக சரித்திரம் இல்லை. ஐஸ்லாந்தில் இருந்து கென்யா வரை இவர் தங்காத நாடே இல்லை.

* தனது பல நடவடிக்கைகளை இவர் மிக மிக ரகசியமாகவே வைத்துக் கொள்வார். எப்போதும் பல மொபைல் போன்களுடன் தான் திரிவார்.

* கடந்த 2006ல் "விக்கி லீக்ஸ்’ இணையதளத்தை துவக்கினார்.

* "விக்கி லீக்ஸ்’ இணையதளத்தில் ஐந்து முழுநேர ஊழியர்களும், பல தன்னார்வ ஊழியர்களும், 800 பகுதிநேர தன்னார்வ ஊழியர்களும் பணியாற்றி வருகின்றனர்.

* "விக்கி லீக்ஸ் ஒரு போதும் சமரசம் செய்து கொள்ளாது. புலனாய்வுப் பத்திரிகையியல் இன்னும் நிரப்பப்படாமலே உள்ளது. அந்த இடத்தை "விக்கி லீக்ஸ்’ நிரப்பும்’ என்று அடிக்கடி கூறுவார்.

* "ட்விட்டர்’ "பேஸ்புக்’ போன்ற சமூக வலைத்தளங்களில் எழுதுவார்.

* "விக்கிலீக்ஸ்’ இணையதளத்திற்கு உலகம் முழுவதும் ஆதரவாளர்கள் அதிகம் என்று கூறப்பட்டது.

source:dinamalar

பின்னூட்டமொன்றை இடுக

Filed under Uncategorized

புலிகளின் குரல் என்ற பெயரில் புதிய வானொல ி: எதிரியின் யுக்தி

புலிகளின் குரல் என்ற பெயரில் புதிய வானொலி: எதிரியின் யுக்தி

மாவீரர் நாள் நிகழ்வுகள் ஒலிபரப்பப்பட்ட காரணத்தால் சீற்றமடைந்துள்ள எதிரியானவன் எமது வானொலியை முடக்குவதற்கு திட்டமிட்டுள்ளான்.அதன்படி ‘புலிகளின் குரல் என்ற பெயரிலேயே புதிதாக ஒரு வானொலியைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளான்.

எதிரிகளின் புதிய தாக்குதல் குறித்து மக்களை விழிப்பாக இருக்குமாறு புலிகளின் குரல் நிர்வாகம் அறிவித்துள்ளது.

இது குறித்து புலிகளின் குரல் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

புலிகளின் குரல் மீதான எதிரிகளின் புதிய தாக்குதல் விழிப்பாக இருங்கள் மக்களே!

அன்பான தமிழ் மக்களே!,

தாயகத்தில் தமிழ்மக்கள் மீது சிறிலங்கா அரசு நிகழ்த்திய இனப்படுகொலையின் உச்சமான முள்ளிவாய்க்கால் படுகொலையை அடுத்து எமது தேசிய வானொலியான புலிகளின்குரல் தாயகத்தில் தனது ஒலிபரப்பை நிறுத்தவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இருந்தபோதும் சில நாட்களுக்குள்ளேயே மீண்டும் புத்துயிர்பெற்று அது மீளவும் இயங்கத் தொடங்கியது.

அன்று தொடக்கம் இன்றுவரை பல்வேறு குழப்ப நிலைகள் கருத்து மோதல்கள் ஆகியவற்றிற்குள் சிக்காது நாம் எமது பணியினைச் செய்து வருகின்றோம்.

நிதிச் சிக்கல்கள் ஒருபுறம், இந்த வானொலியை நிறுத்தவென எதிரி எடுக்கும் நடவடிக்கைகள் ஒருபுறமென பல்வேறு நெருக்கடிக்குள்ளும் எமது தேசிய வானொலி தனது சேவையை வழங்கி வந்துகொண்டிருக்கின்றது.

தமிழீழத் தேசிய எழுச்சிநாளான மாவீரர் நாள் நிகழ்வுகளை வழமை போலவே புலிகளின் குரல் வானொலி நேரடியாக ஒலிபரப்பி வந்துள்ளது. அவ்வகையில் 2009 ஆம் ஆண்டுக்குரிய மாவீரர்நாள் நிகழ்வுகளையும் 2010 ஆம் ஆண்டுக்குரிய மாவீரர்நாள் நிகழ்வுகளை எமது வானொலி சிற்றலை வழியாக தாயகம் உட்பட ஆசிய நாடுகளிலும் சிறப்புற ஒலிபரப்பியிருந்தது.

மாவீரர் நாள் 2010 நிகழ்வுகள் உலகமெங்கும் புலிகளின் குரல் வழியாக ஒலிபரப்பப்பட்டதோடு தாயகத்திலும் எமது மக்கள் இவ்வொலிபரப்பைக் கேட்டு தமது மாவீரர் நாள் அஞ்சலி நிகழ்வை மேற்கொண்டார்கள். எமது வானொலி ஒலிபரப்பானது எதிரிகளுக்கு மிகப்பெரும் சவாலாக அமைந்த காரணத்தால் குறிப்பாக தாயகத்தில் மாவீரர்நாள் நிகழ்வுகள் ஒலிபரப்பப்பட்ட காரணத்தால் சீற்றமடைந்துள்ள எதிரியானவன் எமது வானொலியை முடக்குவதற்கான பல சதித்திட்டங்களை மேற்கொண்டான். இதுவரை அவற்றில் தோல்வியடைந்து வந்திருந்தாலும் இவ்வாறான முயற்சிகளை தொடர்ந்தும் மேற்கொண்ட வண்ணமேயுள்ளான்.

இந்நிலையில் புதிதாக ஒரு உத்தியைக் கையாண்டு எமது வானொலி மீதான தனது தாக்குதலைத் தொடுக்கத் திட்டமிட்டுள்ளான். அதன்படி ‘புலிகளின் குரல் என்ற பெயரிலேயே புதிதாக ஒரு வானொலியைத் தொடங்கி, அதை இயக்குவதாகத் திட்டமிட்டுள்ளான். இதன்மூலம் இரண்டு விடயங்களைச் சாதிக்க முடியுமென எதிரி நினைக்கின்றான்.

1. தமிழ் மக்களைக் குழப்பத்தில் ஆழ்த்துவதோடு அவர்களைப் போராட்டச் செயற்பாடுகளிலிருந்து விலகியிருக்கச் செய்தல்.

2. புதிதாக தாம் நிறுவப்போகும் போலி வானொலியை உண்மையான ‘புலிகளின் குரல்’ வானொலி என நம்பும் மக்களுக்கு, தனது கருத்துக்களை ஊட்டி, எமது தாயக விடுதலைப் பயணத்தைப் படிப்படியாகக் குலைப்பது.

இவையிரண்டு நோக்கங்களுமே எமது மக்களை போராட்டப் பணிகளிலிருந்து ஒதுங்கியிருக்கச் செய்யும் விளைவையே நோக்கமாகக் கொண்டுள்ளன.

எனவே அன்பார்ந்த தமிழ் மக்களே,

புலிகளின் குரல் வானொலியின் செயற்பாட்டை முடக்குவது எதிரிக்குரிய முக்கிய பணியாகிப் போனதால் பல்வேறு சதித்திட்டங்களோடு எதிரி களமிறங்கியுள்ளதை அறிய முடிகின்றது. அதன் ஒருகட்டமே இந்த ‘புலிகளின் குரல்’ என்ற பெயரிலேயே புதிய போலி வானொலியைத் தொடங்கி நடத்துவது. இதுகுறித்த தெளிவை எமது மக்களுக்கு வழங்க வேண்டியதும் எச்சரிக்க வேண்டியதும் புலிகளின் குரல் நிர்வாகத்தின் கடமையாதலால் இந்த ஊடக அறிக்கையை நாம் வெளியிடுகின்றோம்.

எதிரியின் சூழ்ச்சித்திட்டத்துக்குப் பலியாகாமல், தொடர்ந்தும் எமது வானொலியோடு இணைந்திருக்கும்படி எமது மக்களை அன்போடும் உரிமையோடும் கேட்டுக் கொள்கிறோம்.

நன்றி.

புலிகளின் குரல் நிர்வாகம்.

பின்னூட்டமொன்றை இடுக

Filed under Uncategorized

உயிர் பயத்தில் நடுங்கிய மகிந்த! லண்டனில் ஓயாத அலைகள்

கடந்த 2-ம் தேதி பிரிட்டனில் ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக் கழகத்தில் உரையாற்றுவதற்காக லண்டனுக்கு வந்த இலங்கை அதிபர் ராஜபக்ஷே சர்வதேசக் கண்டனங்களால் நடுங்கிப்போனார். இவ்வளவு எதிர்ப்புகளைப் பார்த்த பல்கலைக்கழகம், ‘ராஜபக்ஷே உரையாற்ற வேண்டாம்!’ என அறிவிக்க…உயிரைக் கையில் பிடிக்காத குறையாக ராஜபக்ஷே இலங்கை சென்று சேர்ந்தார்.

இவ்வாறு தமிழக வார சஞ்சிகை ஜூனியர் விகடன் தனது இவ்வார இதழில் செய்தி வெளியிட்டுள்ளது.

காட்சி:1
இரு கைகளும் பின்னால் கட்டப்பட்ட நிலையில் அழைத்து வரப்படும் போராளிகள் ஓர் இடத்தில் தலைகுப்புறத் தள்ளப்படுகிறார்கள். சிங்கள ஷூக்கள் அவர்களின் முதுகுகளை வெறித்தனமாக மிதிக்கின்றன. அடுத்த கணமே போராளிகளின் தலைகளைக் குறிவைத்து சிங்களர்கள் கண்மூடித்தனமாகச் சுடுகிறார்கள். தலை சிதறி, குலுங்கக்கூட சக்தியற்று போராளிகள் செத்து விழ… நம் ஈரக்குலையே இற்றுப்போகிறது.

காட்சி:2

சுட்டுக் கொல்லப்பட்ட பல போராளிகளின் உடல்கள் அலங்கோலமாகக் கிடக்கின்றன. விடுதலைப் புலிகளின் ‘நிதர்சனம்’ தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராகப் பணியாற்றிய அருட்பிரகாசம் சோபனா என்கிற இசைப்பிரியாவின் உடலும் அங்கே கிடக்கிறது. ஆடைகள் கிழிக்கப்பட்டு, அலங்கோலமாகக் கிடக்கும் இசைப்பிரியாவின் உடலைக் கைகாட்டும் சிங்கள அதிகாரிகள் கெக்கலி கொட்டிச் சிரிக்கிறார்கள். மனதைக் கல்லாக்கிக்கொண்டு அவர்களின் வக்கிர உரையாடலைக் கேட்டால்… கொல்வதற்கு முன் அந்தப் பெண் போராளிகளை சிங்கள வெறி எப்படி எல்லாம் சிதைத்து இருக்கிறது என்பது அப்பட்டமாக நம் நெஞ்சை அறுக்கிறது.

காட்சி:3
இரு போராளிகளைக் கொன்று அவர்களின் உடல்களைத் தலை மட்டுமே வெளியே தெரியும்படி மண்ணுக்குள் நட்டுவைத்து இருக்கிறார்கள். அந்தப் போராளிகள் யார் எனத் தெரியக் கூடாது என்பதற்காக அவர்களின் முகம் தீயால் கருக்கப்பட்டு இருக்கிறது. நாடு கேட்டுப் போராடியவர்கள் பிணமாக நட்டுவைக்கப்பட்டு இருக்கும் காட்சி, இனவெறிக் கொடூரத்தின் உச்சபட்ச சாட்சியாய் உலுக்குகிறது.

இங்கிலாந்தில் உள்ள ‘சேனல் 4’ சிங்கள அரசின் இனவெறிக் கொடூரங்களாக சமீபத்தில் ஒளிபரப்பிய இந்தக் காட்சிகள் உலகையே உலுக்கி இருக்கின்றன. இலங்கை அதிபர் ராஜபக்ஷே லண்டனுக்கு வர ஆயத்த மான வேளையில், இந்தக் கொடூரக் காட்சிகளை அம்பலப்படுத்திய ‘சேனல் 4’ தொலைக்காட்சி, ”ஈழத்தில் நடந்த கொடூரமான படுகொலைகள், கதற வைக்கும் கற்பழிப்புகள், உடலில் ஒட்டுத்துணிகூட இல்லாத அளவுக்குப் பெண் போராளிகளை நிர்வாணமாக்கி ரசித்திருக்கும் சிங்கள வெறித்தனங்கள் என நூற்றுக்கணக்கான காட்சிகளின் பதிவுகள் எங்களிடம் இருக்கின்றன. ஆனால், அவற்றைப் பார்ப்பதற்கான சக்தி இந்த உலகத்துக்குத்தான் இல்லை!” என்று அறிவித்தது. அதோடு, இனவெறியின் உச்சபட்சக் கொடூரமாக சிங்கள அதிகாரிகள் நடத்திய நெஞ்சு நடுங்க வைக்கும் அட்டூழியத்தை ஐந்து நிமிடங்கள் ஓடக்கூடிய வீடியோ பதிவாக உருவாக்கி, ஐக்கிய நாடுகள் சபையின் ஆலோசனைக் குழுவுக்கும் அனுப்பி இருக்கிறது ‘சேனல் 4’.

ஈழப் போர் முடிவுக்கு வந்த காலத்தில் இருந்தே ‘சேனல் 4’ தங்களுக்குக் கிடைத்த வீடியோ பதிவு களையும், புகைப்பட ஆதாரங்களையும் தொடர்ந்து உலகின் பார்வைக்கு வெளிச்சமாக்கி வருகிறது. ”அந்தக் காட்சிகள் சித்தரிக்கப்பட்டவை!” என ஆரம்பத்தில் மறுத்த சிங்கள அரசு, இப்போது ஒளிபரப்பாகும் அப்பட்டமான காட்சிகளைப் பார்த்து ஆடிப்போய் இருக்கிறது.

போர் நடந்தபோதும், ஆயிரமாயிரம் துயரங்களோடு போர் முடிவுக்கு வந்தபோதும் உலக நாடுகளும் ஐ.நா. சபையும் பாராமுகத்தை மட்டுமே பதிலாக்கின. ஆனால், ‘சேனல் 4’ ஒளிபரப்பிய காட்சிகள் இப்போது இந்த உலகத்தைப் பதறவைக்கிறது. இசைப்பிரியா சீரழித்துக் கொல்லப்பட்டுக் கிடக்கும் காட்சிகளைப் பார்த்த ஐ.நா. சபையின் சிறப்புப் பிரதிநிதியான கிறிஸ்டோபர் ஹேன்ஸ், ”இந்தக் கொடூரக் காட்சிகள் குறித்து உடனடியாக விசாரிக்கப்பட வேண்டும். கொடூரத்தை அரங்கேற்றியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்!” என வலியுறுத்தி இருக்கிறார். பன்னாட்டு மனித உரிமை அமைப்புகளும் சிங்கள இனவெறி மீறலை விசாரிக்கச் சொல்லி ஐ.நா-வை வற்புறுத்தி வருகின்றன.

இதற்கு மத்தியில் கடந்த 2-ம் தேதி பிரிட்டனில் ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக் கழகத்தில் உரையாற்றுவதற் காக லண்டனுக்கு வந்த இலங்கை அதிபர் ராஜபக்ஷே சர்வதேசக் கண்டனங்களால் நடுங்கிப்போனார். போர்க் கொடூரக் காட்சிகளைப் பார்த்து உறைந்து போன பிரிட்டன் வாழ் புலம்பெயர் தமிழர்கள் ராஜ பக்ஷே தங்கி இருந்த ‘டோசெஸ்டர்’ ஹோட்டலை முற்றுகையிடவும், ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத் தமிழ் மாணவர்கள் ராஜபக்ஷேவின் உரையைப் புறக்கணிக்கவும் தயார் ஆனார்கள்.

இதற்கிடையில், பிரிட்டனில் உள்ள சர்வதேச மன்னிப்பு சபை, ”பிரிட்டனிலேயே ராஜபக்ஷே கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட வேண்டும். ராணுவ அத்துமீறலை நடத்திய அனைவரையும் பிரிட்டனின் சர்வதேச சட்டங்களின் கீழ் விசாரிக்க வேண்டும்!” என அறிவிக்க… பதறிப்போனார் ராஜபக்ஷே. இவ்வளவு எதிர்ப்புகளைப் பார்த்த பல்கலைக்கழகம், ‘ராஜபக்ஷே உரையாற்ற வேண்டாம்!’ என அறிவிக்க… உடனடியாக ஹோட்டலுக்குத் திரும்பினார் ராஜபக்ஷே. லண்டனில் இலங்கைத் தூதராக இருக்கும் அம்சா, (ஈழப் போர் நடந்த காலகட்டத்தில் இலங்கையின் துணைத் தூதராக சென்னையில் பணியாற்றிய அதே அம்சா.) தமிழகத்தில் செய்ததைப்போலவே லண்டனிலும் சில பத்திரிகையாளர்களைத் தன்வசமாக்கி ராஜபக்ஷேவின் விளக்கத்தை அறிவிக்க ஏற்பாடு செய்தார்.

ஆனால், ‘சேனல் 4’ ஒளிபரப்பிய காட்சிகளுக்கு எவ்வித விளக்கத்தையும் கொடுக்க வாய்ப்பு இல்லை என்பதை உணர்ந்த ராஜபக்ஷே, அனைத்து மீடியாக் களையும் சந்திப்பதைத் தவிர்த்துவிட்டார். ‘ராஜபக்ஷே கைது செய்யப்படும் வரை போராட்டங்களைக் கைவிட மாட்டோம்!’ என பிரிட்டன் தமிழ்ப் பேரவையினரும் களமிறங்க… ராஜபக்ஷே பத்திரமாகக் கிளம்பிச் செல்ல தனி விமானத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. உயிரைக் கையில் பிடிக்காத குறையாக ராஜபக்ஷே இலங்கை சென்று சேர்ந்தார்.

எவ்வித எதிர்ப்பும் இல்லாமல் ராஜ மரியாதையோடு வந்து போவதற்கு பிரிட்டன் என்ன… ஆறரை கோடி மறத் தமிழர்கள் வாழும் தமிழ்நாடா?!

ஜூனியர் விகடன்

பின்னூட்டமொன்றை இடுக

Filed under Uncategorized

Animals Face to Face

Animals Face to Face

01_unterthiner_fred001_unterthiner_bear01_unterthiner_macaca001_unterthiner_squirrel07_unterthiner_albatross11_unterthiner_penguinsun-2009-02-20-110355

பின்னூட்டமொன்றை இடுக

Filed under Uncategorized

பதறவைக்கும் வீடியோ…இலங்கைப் போர்க்குற் ற ‘புதிய’ ஆதார வீடியோ ராஜபக்ஷேவுக்கு நெருக ்குதல்

தமிழ்ப் பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாகக் கொல்லப்பட்டதாக கருதப்படுபவை உள்ளிட்ட இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பான புதிய ஆதார வீடியோ காட்சிகளை இங்கிலாந்தின் ‘சேனல் 4′ தொலைக்காட்சி ஒளிபரப்பியது. இதன் தொடர்ச்சியாக, இலங்கை அதிபர் ராஜபக்ஷேவுக்கு ஐ.நா., மன்னிப்பு சபை உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளால் நெருக்குதல் அதிகரித்துள்ளது.

பதறவைக்கும் வீடியோ…

இலங்கை ராணுவத்தின் போர்க் குற்றங்கள் என நம்பப்படும் புதிய ஆதார வீடியோ காட்சிகளை வெளியிட்டுள்ள சேனல் 4, கடந்த ஆண்டு தமது சேனலில் ஒளிபரப்பட்ட வீடியோவின் விரிவான பகுதியே என்று குறிப்பிட்டுள்ளது.

அந்த வீடியோவில், இலங்கை ராணுவத்தினர் போன்றவர்களால் பலர் சுட்டுக் கொல்லப்படும் கோரக் காட்சிகள் இடம்பெற்றுள்ளது.

அந்தக் கோரத்தின் உச்சமாக, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டதாக சந்தேகிக்கப்படும் தமிழ்ப் பெண்களில் உடல்கள் நிர்வாண நிலையில் காண்பிக்கப்பட்டுள்ளது.

தற்போது எடிட் செய்யப்பட்டே இந்தக் காட்சிகளை வெளியிடுவதாவும், அப்படி கத்தரி போடாத வீடியோ பகுதியில் வயது வந்தவர்கள் கூட காண முடியாத வகையிலான படுகோரமான காட்சிகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. (அது தொடர்பான வீடியோ செய்தி கீழே… (நன்றி: சேனல் 4)

கற்பனைக்கு அப்பாற்பட்ட சித்ரவதைகளுக்கு இளைஞர்கள் ஆளாக்கப்பட்டு கொல்லப்பட்டிருப்பதும் அந்தப் புதிய ஆதாரக் காட்சிகளின் மூலம் அம்பலமாகியிருக்கிறது.

விடுதலைப் புலிகள் மட்டுமன்றி, பத்திரிகையாளரான அருட்பிரகாசம் சோபனா எனும் இயற்பெயர் கொண்ட இசைப்பிரியா உள்ளிட்டோர் சித்ரவதைச் செய்து கொல்லப்பட்ட காட்சிகளும் அதில் இடம்பெற்றுள்ளதாக தெரிகிறது.

இந்த வீடியோ காட்சிகளை இங்கிலாந்துக்கான இலங்கை தூதரகம் முற்றிலும் நிராகரித்துள்ளது. கடந்த ஆண்டு இதேபோல் வெளியான வீடியோவை தொழில்நுட்ப பரிசோதனைக்கு உட்படுத்தி, அவற்றை போலியானவை என்று இலங்கை அரசு கூறியதையும் தூதரகம் சுட்டிக்காட்டியுள்ளது.

அதேநேரத்தில், கடந்த ஆண்டு வெளியான வீடியோ உண்மையானதாகவே தெரிந்தது என ஐ.நா. சோதனைகள் கூறியது குறிப்பிடத்தக்கது.

ராஜபக்ஷேவுக்கு நெருக்குதல்…

போர்க் குற்றங்களின் ஆதாரமாக சில வீடியோ காட்சிகளை சேனல் 4 வெளியிட்டதை அடுத்து, இலங்கை அதிபர் ராஜபக்ஷேவுக்கு ஐ.நா., மன்னிப்பு சபை உள்ளிட்ட சர்வதேச அமைப்புகள் நெருக்குதல் தந்துள்ளன.

சேனல் 4 தொலைக்காட்சி புதிதாக வெளியிட்டுள்ள ஆதாரங்கள் குறித்து விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என சட்டவிரோத கொலைகள் தொடர்பாக விசாரணை நடத்தும் ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்புப் பிரதிநிதி பேராசிரியர் கிறிஸ்டொப் ஹேன்ஸ் வலியுறுத்தியுள்ளார்.

அதேபோல், பிரிட்டனின் சர்வதேச சட்டங்களின் கீழ் இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்ஷே மற்றும் இலங்கை அதிகாரிகள் மீதும் போர்க் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்று சர்வதேச மன்னிப்புச் சபையும் வேண்டுகோள் விடுத்துள்ளது

பின்னூட்டமொன்றை இடுக

Filed under Uncategorized

வீட்டிற்குள் நுழையும் வில்லன்கள்: பெற்றோ ரே உஷார்..

வீட்டிற்கே வந்து வில்லங்கத்தை ஏற்படுத்தும் மொபைல் போன் மற்றும் இன்டர்நெட் பயன்பாடுகளால், "டீன் – ஏஜ்’ பருவத்தினர் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மனதளவிலும், உடல் அளவிலும் தங்கள் குழந்தைகள் பாதிப்படையாமல் தடுக்க, பெற்றோர் அவர்களது பக்கம் கவனத்தை திருப்ப வேண்டியது அவசியமாகும்.

large_135684.jpg

உலக நாடுகளுக்கு இணையாக நமது நாட்டில் தொழில்நுட்ப வளர்ச்சியும், நவீனத்துவமும் போட்டி போட்டு வளர்ந்து வருகின்றன. இந்த தொழில் நுட்ப வளர்ச்சியில், அனைத்து தரப்பினரையும் சென்றடையக்கூடியதாக மொபைல் போனும், இன்டர்நெட் வசதியும் மாறியுள்ளன.இந்த தலைமுறையில் இரண்டு வயது முதலே குழந்தைகள் மொபைல் போன் மற்றும் கம்ப்யூட்டரை இயக்குவதில் முன்னேறியுள்ளனர். இந்த முன்னேற்றம் ஒருபுறம் அவர்களுக்கு ஆபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.தமிழகத்தில் கோவை மற்றும் சென்னையில் சமீபத்தில் பள்ளி மாணவர்கள் கடத்தல் சம்பவத்தை தொடர்ந்து, சென்னையில் போலீஸ் கமிஷனர் தலைமையில் பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் கலந்துகொண்ட ஆலோசனை கூட்டத்தில் இந்த விவகாரம் எதிரொலித்தது.அந்த கூட்டத்தில் மாணவர்களை பாதுகாப்பது மற்றும் அவர்களை வழிநடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. பள்ளிக் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் கொடுமைகள், கம்ப்யூட்டர் வழியாக பள்ளிக்குழந்தைகளுக்கு வரும் பிரச்னைகள் தொடர்பாக பேசப்பட்டது.கூட்டத்தில் பங்கேற்ற தன்னார்வ தொண்டு நிறுவன அமைப்பின் நிர்வாகி ஒருவர், பாலியல் கொடுமைகள் குறித்து பல விஷயங்களை எடுத்துக் கூறியதுடன், கம்ப்யூட்டர், இன்டர்நெட் பயன்படுத்தும் குழந்தைகளுக்கு, அதன் மூலம் ஏற்படும் பாதகங்களை பட்டியலிட்டார்.பள்ளிகளில் கம்ப்யூட்டர் பாடமாக இருந்தாலும், அவர்கள் அந்த வளாகத்தில் இணையதளங்களில் தகவல் தேடுவதில்லை. வீட்டில் இருக்கும் போதும், சில நேரங்களில் இன்டர்நெட் மையங்களுக்கும் சென்று பல்வேறு தகவல்களை தேடுகின்றனர்.

குறிப்பாக தற்போது எட்டு வயதில் இருந்து 18 வயதுக்குட்பட்டவர்கள், "ஆர்குட், டிவிட்டர், பேஸ்புக்’ உள்ளிட்ட சமூக வலைதளங்களுக்குள் செல்கின்றனர். அதன் மூலம் புதிய நண்பர்கள் வட்டாரத்தை உருவாக்கிக் கொள்கின்றனர். இதில், அவர்களுக்குள் புதிய போட்டியே ஏற்படுகிறது. இணையதளத்திற்குள் நுழைந்து தேடும் போது, பல்வேறு ஆபாச இணைய தளங்களும் பளிச்சிடுகின்றன. ஆர்வமிகுதியால் சிலர் இவற்றை பார்க்கின்றனர். இது அவர்களை தவறான பாதையில் செல்ல தூண்டுகிறது. இந்தியாவில் இருந்து வெளியாகும் ஆபாச இணையதளங்கள் பெரும்பாலும் தடை செய்யப்பட்டிருந்தாலும், வெளிநாடுகளில் இருந்து வெளியாகும் இணைய தளங்களை நாம் ஒன்றும் செய்ய முடியாத நிலை உள்ளது.பொதுவாக தற்போது குழந்தைகள் ஆபாசபடத்தை வைத்திருத்தல், பிரசுரித்தல் உள்ளிட்டவை தடை செய்யப்பட்டு, மீறி செய்தால் கடுமையான தண்டனை வழங்கப்பட்டு வருகிறது. சென்னையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, குழந்தைகள் ஆபாசப்படங்கள் இணையதளம் மூலம் பரப்பப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது.

சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸ் துணை கமிஷனர் ஸ்ரீதர் தலைமையில் இயங்கும் சைபர் கிரைம் பிரிவு அதிகாரிகள் இந்த விஷயத்தில் அக்கறை எடுத்ததன் விளைவாக, நெதர்லாந்து நாட்டை சேர்ந்தவர் கைது செய்யப்பட்டார். புழல் சிறையில் இருக்கும் அவருக்கு தண்டனை வாங்கித் தருவதில் போலீசார் விரைந்து செயல்பட்டு வருகின்றனர்.

இது தொடர்பாக, சென்னை மத்திய குற்றப்பிரிவு கூடுதல் துணை கமிஷனர் சுதாகர் கூறியதாவது:இன்டர்நெட்டில் ஆபாச இணைய தளங்கள் அதிகளவில் உலவுகின்றன. இதில், குழந்தைகள் ஆபாச படங்களை வெளியிடுவது தடைசெய்யப்பட்டுள்ளது.இதை விளம்பரப் படுத்தினாலோ, வைத்திருந்தாலோ, நெட் பிரவுசிங் செய்தாலோ, பரிமாற்றம் செய்தாலோ, உருவாக்கினாலோ கடுமையான தண்டனை விதிக்கப்படுகிறது.பள்ளி மாணவர்கள் இன்டர்நெட் பிரவுசிங்கில் இருக்கும் போது ஆபாச பட, "பாப் அப்’கள் தெரியும்படி செய்கின்றனர். இதனால், மாணவர்கள் இந்த வெப்சைட்களில் நுழைந்து பார்க்கின்றனர்; தங்கள் மனதை பாழ்படுத்திக் கொள்கின்றனர். வீட்டில் உள்ள கம்ப்யூட்டரை பெரியவர்களது கண்காணிப்பு உள்ள பகுதிகளில் வைக்க வேண்டும். இவை தனியறையில் இருந்தால் தவறு நடக்க வாய்ப்புள்ளது. தற்போது மொபைல் போன்களிலும் இன்டர்நெட் பார்க்கும் வசதியுள்ளது. பள்ளி மாணவர்களுக்கு கேமரா உள்ளிட்ட அனைத்து வசதிகளும் உள்ளடக்கிய போனை வாங்கிக் கொடுக்காமல் இருந்தாலே பல பிரச்னைகளை தவிர்க்க முடியும். பெற்றோரின் கண்காணிப்பும் அளவான சுதந்திரமும் பெரும்பாலான பிரச்னைக்களுக்கு முற்றுப்புள்ளியாக அமையும். இவ்வாறு சுதாகர் கூறினார்

source:dinamalar

பின்னூட்டமொன்றை இடுக

Filed under Uncategorized

போர்க்குற்றவாளி மகிந்த ஒக்ஸ்போர்டில் ஆற ்ற இருந்த சிறப்புரை ரத்து

பிரித்தானியாவுக்கு வருகைதந்திருக்கும் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாளை ஒக்ஸ்போர்டில் ஆற்ற இருந்த சிறப்புரை ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக ஒக்ஸ்போர்ட் யூனியன் அமைப்பு அறிவித்துள்ளது.

இது குறித்து அந்த அமைப்பு தமது இணையத்தளத்தில் ஒரு அறிவித்தலை வெளியிட்டிருந்தது.

இந்த உரையை ஆற்றுவதற்காக இலங்கை ஜனாதிபதி பிரிட்டனுக்கு வந்ததை பிரிட்டனில் வாழும் தமிழர்கள் வன்மையாக கண்டித்து விமான நிலையத்தில் ஒரு ஆர்ப்பாட்டத்தையும் நடத்தியிருந்தார்கள்.

நாளை அவர் உரையாற்றவிருந்த மன்றத்தின் முன்பாகவும் ஆர்ப்பாட்டம் நடத்த தமிழ் அமைப்புக்கள் சிலவற்றால் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இந்த நிலையிலேயே அந்த உரை நிகழ்வு தவிர்க்க முடியாத காரணங்களால் ரத்துச் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

எனினும், ஈழத்தமிழர்களின் ஆர்ப்பாட்டத்தை நிறுத்தமுடியாது என தெரிந்ததாலும், நேற்றையதினம் சனல்4 வெளியிட்ட போர்க்குற்ற காணொளியுமே இச் சிறப்புரை ரத்துச் செய்யப்பட்டமைக்கு காரணம் என அறியக்கூடியதாக இருக்கின்றது.

ஆனால், பாதுகாப்புக் காரணங்களுக்காகவே அந்த உரை ரத்துச் செய்யப்பட்டதாகவும், இந்த ரத்துக்கு தாம் வருத்தமடைவதாகவும் அந்த அமைப்பு கூறியுள்ளது.

மேலும், ஈழத்தமிழர்களினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஆர்ப்பாட்டங்களின் அளவு பெரிதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால், இந்த உரை பாதுகாப்பாக நடக்கும் என்று தாம் கருதவில்லை என்றும் அந்த அமைப்பு கூறியுள்ளது.

எனினும், மஹிந்த ராஜபக்ஷ, லண்டன் ஒக்ஸ்பேர்ட்டில் நடைபெறவிருந்த சிறப்புரை ரத்துச் செய்யப்பட்டமைக்காக தான் வருந்துவதாகவும், இம்முறை இல்லாவிடினும், மீண்டுமொருமுறை பிரித்தானியாவிலோ, இல்லை வேறெந்த நாட்டிலோ தான் சிறப்புரை நடாத்துவேன் என கூறியதாக தெரியப்படுகின்றது.

இவ்வுரை ரத்துச் செய்யப்பட்டாலும் நாளை ஒக்ஸ்போர்ட் முன்னால் நடைபெறுவதாக இருந்த ஆர்ப்பாட்டம், மஹிந்த ராஜபக்ஷவை கைது செய்யக்கோரிஅவர் தங்கியிருக்கும் விடுதியின் முன்னால் நடைபெறும் என பிரித்தானிய தமிழர் பேரவை அறிவித்துள்ள போதிலும், மக்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருக்கின்றது, அனைவரையும் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளது

source:puthinamnews

பின்னூட்டமொன்றை இடுக

Filed under Uncategorized

போர் ஒத்திகை-இலங்கையில் பரபரப்பு

புலிகளோடு நடைபெற்ற 3 தசாப்தகால யுத்தங்கள் முடிவடைந்து 18 மாதங்கள் ஆகின்ற நிலையிலும், புலிகளைத் தாம் முற்றாக அழித்துவிட்டோம் என இலங்கை கங்கணம் கட்டி அலைகிறது. இந்நேரத்தில் சுமார் 2,500 படையினர் அடங்கலாக முப்படைகளின் பாரிய போர் ஒத்திகை ஒன்று கடந்த 21ம் திகதி முதல் 9 நாட்களாக நடைபெற்றுவருகிறது. மன்னார் அடங்கலாக சாலைதுறையில் இந்த பாரிய ஒத்திகை இடம்பெற்றுவருவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவகள் தெரிவிகின்றன. இலங்கை வரலாற்றில் முப்படைகளும் இணைந்து முதல் தடவையாக இவ்வாறானதொரு பாரிய போர் ஒத்திகை ஒன்றை நீர் காகங்கள் என்ற பெயரில் நடத்திவருவது ஏன்? இதன் பின்னணி தான் என்ன?

குறிப்பாக இங்கு நடைபெற்று வரும் பாரிய படை ஒத்திகையில், வானில் இருந்து குதித்து குறிப்பிட்ட ஒரு இடத்தைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரும் நடவடிக்கையும், சிறுபடகுகள் மூலம் ஊடறுத்துச் சென்று தாக்குதல் நடத்துவதும், மற்றும் தரையிறக்கம் செய்வதுமே மேற்கொள்ளப்படுவதாக இலங்கைப் பாதுகாப்புச் செயலகம் தெரிவித்துள்ளது. வான் படையினர் மற்றும் கடல் படையினரின் உதவியோடு, இராணுவத்தின் கமாண்டோப் படைப்பிரிவினர், திடீரென இடங்களைக் கைப்பற்றுவது எவ்வாறு என்று பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதன் பின்னணி தான் என்ன?

இலங்கை அரசானது வெளிநாட்டுப் படை ஒன்று இலங்கைக்குள் திடீரென ஊடுருவலாம் என்ற அச்சத்தில் உள்ளதா? பிறநாடுகளின் படையாக இருக்க வாய்ப்பே இல்லை. அவ்வாறு எந்த நாடும் இலங்கை மீது படையெடுக்கவேண்டிய அவசியம் தற்போது இல்லை. ஆனால் அப்படி இருந்தும் இவ்வாறானதொரு நடவடிக்கை ஏன் என்ற கேள்வி தமிழர்கள் மட்டுமல்ல சிங்களவர்கள் மத்தியிலும் எழுகின்றது. அப்படியாயின் புலிகளின் புலிகளின் அணிகள் பிற நாடுகளில் இருந்து இலங்கைக்குள் எப்போதும் ஊடுருவலாம் என்ற அச்சத்தில் இலங்கை தற்போது இருப்பது அம்பலமாகிறது.

புலிகள் புதிதாக ஆள் பலத்தை திரட்டி, அணி ஒன்றைத் திரட்டி தம்மைத் தயார்ப்படுத்தி வருவதற்கு பல காலம் பிடிக்கும். அப்படியாயின் இந்நிலையில் இலங்கை அரசானது தற்போது அவசர அவசரமாக இந்த ஒத்திகையைச் செய்துபார்க்கவேண்டிய அவசியம் இல்லை. கணிசமான அளவு போராளிகள் தப்பிச் சென்றிருந்தால் மட்டுமே, இலங்கை அரசானது இது குறித்து கவலையடைய வேண்டும். அப்படியாயின் தற்போது இலங்கை இராணுவம் இவ்வாறு ஒத்திகை பார்த்து எந்த விடயத்தை தானே வெளிக்கொண்டுவர முனைகிறது

source:athirvu

பின்னூட்டமொன்றை இடுக

Filed under Uncategorized