Daily Archives: திசெம்பர் 29, 2010

4 மனைவிகளால் அடித்துக்கொல்லப்பட்ட அப்பா வி ;-)

Four%20Wives.jpg

வங்காளதேசத்தில் 4 முறை திருமணம் செய்த ஒருவரை, அவரது 4 மனைவிகளும் ஒன்றாக சேர்ந்து சரமாரியாக அடித்துக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வங்காளதேசத்தைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் யூனுஷ் பெபாரி (46). இவர் ஏற்கனவே 2 முறை திருமணம் ஆனவர். இந்த நிலையில், முதல் 2 மனைவிகளுக்கு தெரியாமல் மேலும் 2 பேரை மணந்தார்.

இதில் முதல் இரு மனைவிகளுக்கும் தங்களது கணவர் பெபாரிதான் என்பது தெரியும். ஆனால் 3 மற்றும் 4வது மனைவிகள் குறித்து அவர்களுக்கு எதுவும் தெரியாது. ரகசியமாக இதை வைத்திருந்தார் பெபாரி. அதே போல அந்த லேட்டஸ்ட் மனைவிகளுக்கும், முதல் இரு மனைவிகள் குறித்து தெரியாது. இப்படி ரகசியமாக நான்கு மனைவிகளுடன் நான்கு வாழ்க்கை வாழ்ந்து வந்தார் பெபாரி.

ஒவ்வொரு மனைவியுடனும் தனித் தனியாக வெளியில் சென்று சுற்றுவதை வழக்கமாக வைத்திருந்தார் பெபாரி. இந்த நிலையில், கிராமத் திருவிழாவுக்கு முதல் 2 மனைவிகளுடன் சென்றார்.

அப்போது எதிர்பாராத வகையில், பெபாரியின் 3வது மனைவி அங்கு வந்து விட்டார். இதையடுத்து சண்டை மூண்டது. பெபாரியின் குட்டு வெளிப்பட்டது. அதிர்ச்சி அடைந்த மூன்று மனைவிகளும் அவரை 4வது மனைவியிடம் கூட்டிச் சென்றனர். 3 பெண்கள் தனது கணவரை இழுத்து வருவதைப் பார்த்த 4வது மனைவிக்கு பெரும் குழப்பம், பின்னர்தான் அந்த மூன்று பேரும் பெபாரியின் மனைவியர் என்று தெரிய வந்து அதிர்ச்சி அடைந்தார்.

அவ்வளவுதான், பொங்கி எழுந்த நான்கு பேரும் சேர்ந்து பெபாரியா சரமாரியாக கையில் கிடைத்ததை வைத்து அடித்து நொறுக்கி விட்டனர். அவரும் எவ்வளவு தான் தாங்குவார். இறுதியில் அடி தாங்க முடியாமல் பரிதாபமாக இறந்து போனார்.

source:narumugai

பின்னூட்டமொன்றை இடுக

Filed under Uncategorized