கம்ப்யூட்டரில் உருவாக்கப்படும் பைல்களின் அளவுகளை கிலோ பைட், மெகா பைட் என்று சொல்கிறோம். மோடம் தகவல் அனுப்பும் வேகத்தை பிட்களில் சொல்கிறோம். இவை குறிப்பாக எதைக் குறிக்கின்றன என்றும், சில அடிப்படை வேறுபாடுகளையும் இங்கு காணலாம்.
Bit: கம்ப்யூட்டர் சார்ந்த அளவு கோலில் மிகக் குறைந்த அளவு இதுவே. பிட்களின் அடிப்படையில் எந்த பைலின் அளவும் இருக்க முடியாது. இதனுடைய மதிப்பு 0 அல்லது 1 ஆகும்.
Byte இது 8 பிட்கள் இணைந்த ஒரு அலகு. ஒரு பைட் அளவிலும் பைலை உருவாக்குவது கடினம். Kilobyte(KB) கிலோ பைட். ஏறத்தாழ 1000 பைட்கள் (துல்லிதமாக என்றால் 1024 பைட்) கொண்டது ஒரு கிலோ பைட். ஒரு சிறிய பைலை டவுண்லோட் செய்கையில் அந்த பைலின் அளவினை இந்த அலகில் தான் குறிப்பிடுவார்கள்.
Megabyte (MB) = 1,048,576 பைட்கள் அல்லது 1,024 கிலோபைட்கள் . Gigabyte (GB) கிகா பைட் 1024 மெகா பைட். ஹார்ட் டிஸ்க்குகளின் கொள்ளளவை இந்த அலகில் தான் குறிப்பிடுவார்கள். சரி, இந்த அலகுகளை சில சாதனங்களுக்குப் பொருத்திப் பார்க்கலாமா!
* ஒரு 3.25 அங்குல பிளாப்பியில் 1.44 மெகா பைட் தகவல்களைப் பதியலாம். (1,474 கிலோ பைட்)
* ஒரு சிடியில் 650 முதல் 700 மெகா பைட்கள் அளவில் தகவல்களைப் பதியலாம். ஆனாலும் முழு அளவில் எந்த சிடியும் எழுதப் படுவதில்லை. 3.25 பிளாப்பி அளவில் சொல்வதென்றால் ஒரு சிடியில் 450 பிளாப்பிகளை அடக்கலாம்.
* 20 கிகா பைட் ஹார்ட் டிரைவில் 31 சிடிக்களில் உள்ள தகவல்களை அதாவது 14,222 பிளாப்பியில் உள்ள தகவல்களை அடக்கலாம்.
* சாதாரணமாக ஒரு பக்க அளவில் டெக்ஸ்ட் ஒன்றை உருவாக்கி அதனைப் பைலாக மாற்றினால் அது 4 கேபி அளவில் இருக்கும்.
ஒரு பைலின் அளவு தெரிய அதன் பெயரில் மீது ரைட் கிளிக் செய்து அதன் கீழாக வரும் மெனுவில் Properties என்ற பிரிவைத் தேர்ந்தெடுத்துப் பார்க்கலாம்.
இன்னும் ஒரு சிறிய உதாரணம். பிட் கடுகு அளவு என்றால் பைட் துவரம் பருப்பு. கிலோ பைட் தக்காளி என்றால் மெகா பைட் கத்தரிக்காய். கிகா பைட் ஒரு பூசணிக்காய்
source:dinamalar