“விக்கி லீக்ஸ்’ விவகாரம் என்ன ஆகும்?


large_141243.jpg

லண்டன் : "விக்கி லீக்ஸ்’ இணையதள நிறுவனர் ஜூலியன் அசேஞ்ச் (39) நேற்று ஸ்காட்லாந்து யார்டு போலீசாரிடம் சரண் அடைந்தார். அவர் மீதான பாலியல் வழக்குகள் குறித்து அவரிடம் ஸ்வீடன் நாட்டு அதிகாரிகள் விசாரிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டதன் பேரில், அவர் சரண் அடைந்ததாக ஸ்காட்லாந்து போலீசார் தெரிவித்தனர். பின்பு அவர் கைது செய்யப்பட்டார்.

"விக்கி லீக்ஸ்’ இணையதள நிறுவனர் ஜூலியன் அசேஞ்ச் மீது, இந்தாண்டின் துவக்கத்தில், ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த இரு பெண்கள், தங்களை அவர் பாலியல் பலாத்காரம் செய்ததாக வழக்கு தொடுத்தனர். இக்குற்றச்சாட்டை மறுத்த அசேஞ்ச், அவர்கள் தன்னுடன் உடன்பட்டு உறவு வைத்துக் கொண்டதாக விளக்கம் அளித்தார். இதையடுத்து, "விக்கி லீக்ஸ்’ இணையதளம், அமெரிக்கா மற்றும் பிரிட்டன் படைகள் ஈராக் மற்றும் ஆப்கனில் நடத்திய போர் அட்டூழியம் குறித்த ஐந்து லட்சம் ரகசிய ஆவணங்களை வெளியிட்டது. அதன் பின், சமீபத்தில் அமெரிக்க வெளியுறவு தொடர்பான இரண்டரை லட்சத்துக்கும் அதிகமான ரகசிய ஆவணங்களை வெளியிட்டது. இதனால் அமெரிக்காவுக்கும், அதன் கூட்டணி மற்றும் நட்பு நாடுகளுக்கும் பலவிதங்களில் நெருக்கடி ஏற்பட்டது. இந்நிலையில், கடந்த மாதம், ஸ்வீடன் நாட்டு கோர்ட் ஒன்று, அசேஞ்ச் மீது இரு பெண்கள் தொடுத்த பாலியல் வழக்கில், அவரை கைது செய்ய உத்தரவிட்டது. இதையடுத்து, "இன்டர்போல்’ போலீஸ் இணையதளத்தில் அவரை தேடும் உத்தரவு வெளியிடப்பட்டது. கோர்ட்டின் இந்த உத்தரவு, அமெரிக்க அரசின் நெருக்கடியின் பேரிலேயே எடுக்கப்பட்டது என, அசேஞ்சின் வக்கீல்கள் கூறிவந்தனர். நேற்று அவர் பிரிட்டன் ஸ்காட்லாந்து யார்டு போலீசாரிடம் சரண் அடைவார் என செய்திகள் தெரிவித்தன.

இந்நிலையில்,"ஸ்வீடன் அதிகாரிகள், பாலியல் வழக்கு தொடர்பாக அவரிடம் விசாரிக்க வேண்டும் என விடுத்த கோரிக்கையை ஏற்று, அவர் நேற்று காலை சரண் அடைந்தார். அவர் மீது இரண்டு பாலியல் பலாத்காரம் மற்றும் ஒரு கற்பழிப்பு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன’ என, ஸ்காட்லாந்து யார்டு போலீசார் தெரிவித்தனர். பின்பு அவர் கைது செய்யப்பட்டார். ஸ்வீடன் கோர்ட் பிறப்பித்த உத்தரவில் குறிப்பிடப்பட்ட, "நாடு கடத்தும்’ வழக்கை எதிர்த்து, அசேஞ்ச் சட்டரீதியாக போராடுவார் என அவரது வக்கீல்கள் தெரிவித்துள்ளனர். இன்று ஸ்வீடனுக்கு அவர் நாடுகடத்தப்பட்டால், அமெரிக்க ரகசியங்களை வெளியிட்டதற்காக பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தி அவரை எளிதில் அமெரிக்காவுக்கு நாடுகடத்திவிட முடியும் என்பதால், அவர் அதை எதிர்த்து போராட வேண்டியுள்ளதாக அவர்கள் கூறினர். இதுகுறித்து அவரது வக்கீல் மார்க் ஸ்டீபன்ஸ் கூறுகையில்,"அவர் மீது எந்தக் குற்றச்சாட்டும் சுமத்தப்படவில்லை. அவர் மீதான நாடு கடத்தல் வழக்கு இன்னும் 28 நாட்களுக்குள் விசாரிக்கப்படும்’ என்றார். ஆகவே "விக்கி லீக்ஸ்’ விவகாரத்தில் அவர் எப்போது கைதாகி விசாரிக்கப்படுவார் என்பது இனித்தான் தெரியும்.

நாடு சுற்றுவதில் கில்லாடி

* கடந்த 1971, ஜூலை மாதம் ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாண்ட் மாகாணத்தின் டவுன்ஸ்வில்லே என்ற ஊரில் பிறந்தார். இவரது பெற்றோர், திரையரங்கம் ஒன்றை நடத்தினர். அதோடு, நாடு சுற்றுவதில் அவர்களுக்குத் தீராத ஆசை இருந்தது.

* வளரிளம் பருவத்தில் இவர் "கம்ப்யூட்டர் புரோகிராம்’ வடிவமைப்பதில் தேறினார்.

* இணையதளத்தில் புகுந்து தகவல்களைத் திருடியதாக, 1995ல் கைது செய்யப்பட்டார். அபராதம் கட்டிய பின் எச்சரிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டார்.

* மெல்போர்ன் பல்கலைக்கழகத்தில் தனது 20வது வயதில் கணிதம் மற்றும் இயற்பியல் கற்றார்.

* இவர் நிரந்தரமாக ஓரிடத்தில் தங்கியதாக சரித்திரம் இல்லை. ஐஸ்லாந்தில் இருந்து கென்யா வரை இவர் தங்காத நாடே இல்லை.

* தனது பல நடவடிக்கைகளை இவர் மிக மிக ரகசியமாகவே வைத்துக் கொள்வார். எப்போதும் பல மொபைல் போன்களுடன் தான் திரிவார்.

* கடந்த 2006ல் "விக்கி லீக்ஸ்’ இணையதளத்தை துவக்கினார்.

* "விக்கி லீக்ஸ்’ இணையதளத்தில் ஐந்து முழுநேர ஊழியர்களும், பல தன்னார்வ ஊழியர்களும், 800 பகுதிநேர தன்னார்வ ஊழியர்களும் பணியாற்றி வருகின்றனர்.

* "விக்கி லீக்ஸ் ஒரு போதும் சமரசம் செய்து கொள்ளாது. புலனாய்வுப் பத்திரிகையியல் இன்னும் நிரப்பப்படாமலே உள்ளது. அந்த இடத்தை "விக்கி லீக்ஸ்’ நிரப்பும்’ என்று அடிக்கடி கூறுவார்.

* "ட்விட்டர்’ "பேஸ்புக்’ போன்ற சமூக வலைத்தளங்களில் எழுதுவார்.

* "விக்கிலீக்ஸ்’ இணையதளத்திற்கு உலகம் முழுவதும் ஆதரவாளர்கள் அதிகம் என்று கூறப்பட்டது.

source:dinamalar

Advertisements

பின்னூட்டமொன்றை இடுக

Filed under Uncategorized

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s