Daily Archives: நவம்பர் 23, 2010

சமையல் குறிப்புகள்

21kdr5.jpg

வெனிலா பர்பி

தேவையானவை:

முந்திரிப் பருப்பு – 100 கிராம், தேங்காய்ப்பூ – 100 கிராம், சர்க்கரை – 200 கிராம், நெய் – 50 கிராம், வெனிலா எசென்ஸ் – சில துளிகள்.

எப்படிச் செய்வது?

முந்திரிப் பருப்பை அரை மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும்.

பின்பு தேங்காய் பூ, முந்திரிப் பருப்பு இரண்டையும் நைஸôக அரைக்க வேண்டும். கனமான பாத்திரத்தில் சர்க்கரையைப் போட்டுத் தேவையான தண்ணீர் விட்டு சர்க்கரை நன்றாக கரைந்து கொதிக்கும்போது அரைத்த விழுதைப் போட்டுக் கிளற வேண்டும்.

தீயைக் குறைவாக எரிய விட வேண்டும். நெய்யைச் சிறிது சிறிதாக விட்டுக் கிளற வேண்டும். பாத்திரத்தில் ஒட்டாமல் பர்பி பதமாக வரும்போது இறக்கி, எசென்ஸ் விட்டுக் கிளறி நெய் தடவிய தட்டில் கொட்ட வேண்டும். ஆறிய உடன் தேவையான அளவுக்கு வில்லைகளாக வெட்டிச் சுவைக்க வேண்டும்.

ஆர்.ஜெயலட்சுமி, திருநெல்வேலி டவுன்.

தக்காளி தோசை

மசால் தோசையைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். தக்காளி தோசையைக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

தேவையானவை:

தக்காளி – 500 கிராம், உளுந்து – 100 கிராம், புழுங்கல் அரிசி – 400 கிராம், மிளகாய் வற்றல் – 50 கிராம், பெருங்காயத் தூள் – 1 ஸ்பூன், எண்ணெய் – 50 கிராம்

வெட்டப்பட்ட வெங்காயம், பச்சைமிளகாய், கொத்தமல்லி, கறிவேப்பிலை, உப்பு – தேவையான அளவுக்கு.

எப்படிச் செய்வது?

அரிசி, உளுந்தைக் கழுவி ஊற வைத்து பின் உளுந்தைக் கிரைண்டரில் போட வேண்டும். அதனுடன் துண்டு துண்டாக நறுக்கப்பட்ட தக்காளி, மிளகாய் வற்றல் ஆகியவற்றைப் போட்டு அரைக்க வேண்டும். தேவையான உப்பு, பெருங்காயத்தையும் அதில் போட வேண்டும். 4 மணி நேரம் கழித்து மாவில் வெங்காயம், கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து எண்ணெய் ஊற்றி பொன்னிறத்தில் தோசை சுட வேண்டும். பிடித்தமான சட்னியைச் செய்து பரிமாறினால் மிகவும் சுவையாக இருக்கும்.

source:dinamani

பின்னூட்டமொன்றை இடுக

Filed under Uncategorized

இந்த வார டவுண்லோட் – பயர்பாக்ஸ் பிரவுசரில ் கால்குலேட்டர்

E_1290444804.jpeg

நமக்கு கால்குலேட்டர் எப்போதெல்லாம் தேவைப் படும் என்று முன்கூட்டியே கணக்கிட முடியாது. எப்போது வேண்டுமானாலும் தேவைப் படலாம். இன்டர்நெட்டில் உலா வருகையில், இது தேவைப்பட்டால், பிரவுசரை மூடி, பின்னர், புரோகிராம்ஸ் சென்று, கால்குலேட்டரை இயக்க நேரம் வீணாகிவிடும். இதற்கெனவே, பயர்பாக்ஸ் பிரவுசரில், அதன் டாஸ்க் பாரில் வைத்து இயக்கும் வகையில் ஒரு கால்குலேட்டர் தரப்பட்டுள்ளது. அதுவும் ஒரு சயின்டிபிக் கால்குலேட்டராக உள்ளது என்றால், அனைவருக்கும், குறிப்பாக மாணவர் களுக்கும், இளைஞர்களுக்கும் நன்மைதானே. இந்த பயர்பாக்ஸ் டாஸ்க்பார் சயின்டிபிக் கால்குலேட்டர் ஓர் ஆட் ஆன் தொகுப்பாக, புரோகிராமாகக் கிடைக்கிறது. இதனைப் பெற https://addons.mozilla.org/enUS/firefox/addon/6521/ என்ற முகவரிக்குச் செல்லவும். அடுத்து, அங்குள்ள “Add to Firefox” என்ற பட்டனில் கிளிக் செய்திடவும்.
உடனே “Software Installation” டயலாக் பாக்ஸ் கிடைக்கும். இதில் கிடைக்கும் “Install Now” பட்டனில் கிளிக் செய்திடவும். டாஸ்க் பார் சயின்டிபிக் கால்குலேட்டருக்கான புரோகிராம், உங்கள் பயர்பாக்ஸ் பிரவுசரில் பதியப்படும். அடுத்து “Restart Firefox” பட்டனில் கிளிக் செய்திடவும். இப்போது கம்ப்யூட்டர் நீங்கள் மேற்கொள்ள இருப்பதைப் புரிந்து கொண்டு, விண்டோஸ், டேப்ஸ், பிரவுசர் ஆகிய அனைத்தையும் புதிய இணைப்பு களுடன் தொடங்கும். பிரவுசர் மீண்டும் கிடைத்தவுடன், கால்குலேட்டர் ஐகானில் கிளிக் செய்து, டெக்ஸ்ட் ஏரியாவில் நீங்கள் என்ன கணக்குகளைப் போட விரும்புகிறீர்களோ, அவற்றை என்டர் செய்திடவும். இந்த கால்குலேட்டர் ஐகானில் ரைட் கிளிக் செய்து, உங்கள் எண் அடிப்படையை மாற்றிக் கொள்ளலாம்.

source:dinamalar

பின்னூட்டமொன்றை இடுக

Filed under Uncategorized