தன்னை நாயெனக் கருதும் பசுக்கன்று


cow.jpgபிரிட்டனில், பசுக்கன்று ஒன்று தன்னை நாய் எனக் கருதி நாயைப் போல் நடந்துகொள்கிறது. நாயைப் போன்று அது குரைக்கவும் செய்கிறது.

4 மாத வயதான இந்த பசுக்கன்றை அது பிறந்தவுடன் பண்ணையாளர் பென் பொவர்மன் என்பவர் தனது வீட்டிற்கு கொண்டுவந்து அதை இரு நாய்களுடன் வளர்க்க ஆரம்பித்தார்.

ஹென்றி எனப் பெயரிடப்பட்ட இப்பசுக்கன்று, மந்தைக் கூட்டத்திலிருந்து விலகி, வீட்டில் தன்னுடன் வளர்க்கப்பட்ட நாய்களுடன் விளையாடுவதற்கே விரும்புகின்றது.

பென் பொவர்மனின் வீட்டின் அருகிலுள்ள குடிசையில் இப்பசுக்கன்று உறங்குவதுடன் ஒவ்வொரு காலைவேளையும் சமையலறையின் ஜன்னல் வழியே தனது தலையை விட்டு டோஸ்டரிலிருந்து உணவுப்பொருட்களை களவாடி உண்கிறதாம்.

அக்கன்றானது பென் மற்றும் அவரது மனைவி கெத்தரின் (42) ஆகிய இருவராலும் டோர்ஸெட் பிராந்தியத்திலுள்ள 450 ஏக்கர் நிலத்திலுள்ள பண்ணையிலிருந்து வீட்டுக்கு கொண்டுவரப்பட்டது. அதனது தாய் அதற்கு ஒழுங்கான முறையில் பாலூட்டாமையே இதற்குக் காரணம்.

தற்போது அக்கன்று அந்தக் குடும்பத்தின் ஓர் அங்கமாக இருப்பதுடன் தன்னை நாயென நினைத்துக்கொண்டு வீட்டிலுள்ள நாய்களுடன் விளையாடுகின்றது.

தற்போது அந்தக் கன்று குறித்த வீடியோ, இணையத்தளங்களிலும் வெளியாகி பல்லாயிரக்கணக்கானோர் பார்வையிடுகின்றனர்.

இது தொடர்பாக பென் குறிப்பிடுகையில் ‘அது உண்மையில் தன்னை நாயென நினைத்துக்கொண்டுள்ளது. காரணம் அது எங்கள் ஏனைய இரு நாய்களுடன் வளர்ந்தது. அது நாய்களை துரத்தி விளையாடுகின்றது.

அப்பசுக்கன்று எனது பின்னால் வந்து நின்று அதனது தலையை எனது கால்களுக்கிடைய போட்டு என்னைத் தூக்குவது அதற்கு மிகவும் பிடிக்கும்.

எமது பிள்ளைகள் ஹென்றி மீது மிகுந்த அன்புக்கொண்டவர்கள். எங்களால் அதனை விற்கமுடியாது. எனவே அது இன்னும் 10 அல்லது 15 வருடங்களுக்கு எம்முடன் இருக்கமுடியும்’ எனத் தெரிவித்துள்ளார்.

source:pathivu

Advertisements

பின்னூட்டமொன்றை இடுக

Filed under Uncategorized

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s