Daily Archives: நவம்பர் 8, 2010

பாகம் 3: முஹம்மது ஒரு பாவி, இயேசு பரிசுத்த ர்

பாகம் 3: முஹம்மது ஒரு பாவி, இயேசு பரிசுத்தர்

இயேசு, கிறிஸ்தவம் மற்றும் பாவம் பற்றிய ஆய்வு

முஹம்மது ஒரு பாவியா? என்ற தொடர் கட்டுரைகளின் இரண்டு பாகங்களை கீழ் கண்ட தொடுப்புகளில் படிக்கலாம்.

பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? – குர்‍ஆனின் சாட்சி
பாகம் 2: முஹம்மது ஒரு பாவியா? – ஹதீஸ்களின் சாட்சி

இந்த தற்போதைய கட்டுரை மூன்றாம் பாகமாக வெளியிடப்படுகின்றது

இயேசு பரிசுத்தராவார், அவர் பாவியல்ல‌

இயேசு பாவமில்லாதவர் என்று இஸ்லாமும், கிறிஸ்தவமும் போதிக்கின்றன. இயேசு பாவம் செய்யவில்லை, அவரிடம் பாவம் இல்லை என்று பைபிள் தெள்ளத்தெளிவாகச் சொல்கிறது.

பைபிளிலிருந்து சில வசனங்கள்:

வானங்களின் வழியாய்ப் பரலோகத்திற்குப்போன தேவகுமாரனாகிய இயேசு என்னும் மகா பிரதான ஆசாரியர் நமக்கு இருக்கிறபடியினால், நாம் பண்ணின அறிக்கையை உறுதியாய்ப் பற்றிக்கொண்டிருக்கக்கடவோம். நம்முடைய பலவீனங்களைக்குறித்துப் பரிதபிக்கக்கூடாத பிரதான ஆசாரியர் நமக்கிராமல், எல்லாவிதத்திலும் நம்மைப்போல் சோதிக்கப்பட்டும், பாவமில்லாதவராயிருக்கிற பிரதான ஆசாரியரே நமக்கிருக்கிறார் (எபிரேயர் 4:14-15).

ஆனபடியினாலே, தேவனானவர் எங்களைக்கொண்டு புத்திசொல்லுகிறதுபோல, நாங்கள் கிறிஸ்துவுக்காக ஸ்தானாபதிகளாயிருந்து, தேவனோடே ஒப்புரவாகுங்கள் என்று, கிறிஸ்துவினிமித்தம் உங்களை வேண்டிக்கொள்ளுகிறோம். நாம் அவருக்குள் தேவனுடைய நீதியாகும்படிக்கு, பாவம் அறியாத அவரை நமக்காகப் பாவமாக்கினார் (2 கொரிந்தியர் 5:20).

"அவர் பாவஞ்செய்யவில்லை, அவருடைய வாயிலே வஞ்சனை காணப்படவுமில்லை" (1 பேதுரு 2:22).

பாவஞ்செய்கிற எவனும் நியாயப்பிரமாணத்தை மீறுகிறான்; நியாயப்பிரமாணத்தை மீறுகிறதே பாவம். அவர் நம்முடைய பாவங்களைச் சுமந்து தீர்க்க வெளிப்பட்டாரென்று அறிவீர்கள்; அவரிடத்தில் பாவமில்லை (1 யோவான் 3:4-5).

குர்ஆன் மற்றும் ஹதீஸ்களிலிருந்து சில வசனங்கள்:

இயேசுவின் பிறப்பு பற்றி மரியாளுக்கு நற்செய்தியை அறிவிக்க காபிரியேல் தூதன் வந்தார் என்று குர்ஆன் போதிக்கிறது. குர்ஆன் 19:19ம் வசனத்தில் காபிரியேல் தூதன் கீழ்கண்டவாறு கூறுகிறார்:

"He said: "Nay I am only a messenger from thy Lord (to announce) to thee the gift of a holy son."

முஹம்மது ஜான் குர்‍ஆன் தமிழாக்கம்

"நிச்சயமாக நான் உம்முடைய இறைவனின் தூதன்; பரிசுத்தமான புதல்வரை உமக்கு அளிக்க (வந்துள்ளேன்") என்று கூறினார்.

பீஜே குர்‍ஆன் தமிழாக்கம்

நான் உமக்குப் பரிசுத்தமான புதல்வனை அன்பளிப்புத் தருவதற்காக (வந்த) உமது இறைவனின் தூதன்.

"பரிசுத்த" என்ற வார்த்தை அரபி மொழியில் "ஜகியா (zakiyya)" என்பதாகும், இதன் மூல அர்த்தம் "பரிசுத்தம்" என்பதாகும். இந்த வார்த்தையானது முக்கியமாக "சுத்தமுள்ள, குற்றமில்லாத, பரிசுத்த, குறையில்லாத" என்ற பொருளில் பயன்படுத்தப்படுகிறது.

இயேசு பாவத்தை அறிக்கையிடவில்லை என்று சஹீஹ் புகாரி கூறுகிறது.

….அவ்வாறே மக்கள் ஈசா(அலை) அவர்களிடம் சென்று, ‘ஈசாவே! நீங்கள் அல்லாஹ்வின் தூதராக இருக்கிறீர்கள். மர்யமிடம் இறைவனிட்ட அவனுடைய வார்த்தையும் அவன் (ஊதிய) உயிரும் ஆவீர்கள். நீங்கள் தொட்டிலில் சிறுவராய் இருந்தபோதே மனிதர்களிடம் பேசினீர்கள். (எனவே,) எங்களுக்காக உங்களுடைய இறைவனிடம் பரிந்து பேசுங்கள். நாங்கள் (சிக்கிக்கொண்டு) இருக்கும் (அவல) நிலையை நீங்கள் கவனிக்கவில்லையா?’ என்று கேட்பார்கள். அதற்கு ஈசா(அலை) அவர்கள், ‘என் இறைவன் இன்று (என் மீது கடும்) கோபம்கொண்டுள்ளான். இதற்கு முன் அவன் இதைப்போல் கோபம் கொண்டதில்லை. இதற்குப் பிறகும் இதைப் போல் அவன் ஒருபோதும் கோபம் கொள்ளப்போவதுமில்லை – (தாம் புரிந்துவிட்டதாக) எந்தப் பாவத்தையும் அவர்கள் குறிப்பிடாமல் …

ஆக, ஆரம்பகால இஸ்லாம் இயேசுவிடம் பாவம் இல்லை என்று கூறுகிறது. இருந்தபோதிலும், ஏற்கனவே சொன்னது போல, பிறகு வந்த இஸ்லாமியர்கள் முஹம்மது இயேசுவை விட தரம் தாழ்ந்த நிலையில் (பாவ சுபாவமுள்ளவராக) இருக்கிறார் என்ற உண்மையை சகித்துக்கொள்ள அவர்களால் முடியவில்லை. எனவே, முஹம்மதுவை இயேசுவிற்கு நிகராக பாவமில்லாதவராக இருக்கிறார் என்பதை காட்டும் படி பல முயற்சிகளை எடுத்தார்கள்.

"முஸ்லீம் ஸ்டடீஸ்" பாகம் 2, பக்கம் 346ல், ஐ. கோல்டுசைஹெர் (Goldziher) கீழ்கண்ட விதமாக கூறுகிறார்:

"An unconscious tendency prevailed to draw a picture of Muhammad that should not be inferior to the Christian picture of Jesus."

முஹம்மதுவின் சுபாவம் இயேசுவின் சுபாவத்திற்கு நிகராக இருக்கிறது என்று காட்டுவதற்கு பல சுயநினைவு இல்லாத கோட்பாடுகள் உருவாக்கப்பட்டு இருக்கின்றன‌.

இந்த கோட்பாடு, குர்ஆனில் சொல்லப்பட்ட முஹம்மதுவின் வார்த்தைகளுக்கு எதிர்மறையாக உள்ளது.

பாவம் மற்றும் பாவம் செய்பவர்கள் பற்றிய கிறிஸ்தவ கோட்பாடு: THE CHRISTIAN DOCTRINE OF SIN AND SINNER

கில்கிறைஸ்ட் அவர்களின் புத்தகம் இந்த விவாதம் பற்றி அதிகபடியான விளக்கத்தைக் கொடுக்கிறது.

இங்கு ஒரு விவரத்தை குறிப்பிடவேண்டும், அதாவது "பாவங்களிலிருந்து நபிகளுக்கு பாதுகாப்பு" என்ற இஸ்லாமிய கோட்பாடு என்பது, நபிகள் தவறுகள் செய்யாமல் அல்லது தவறான முடிவுகளை எடுக்காமல் பாதுகாக்கப்படுகிறார்கள் என்பதை மட்டுமே குறிக்கிறது. இந்த இஸ்லாமிய கோட்பாடு, பாவம் பற்றி பைபிள் சொல்லும் கோட்பாட்டோடு எப்படி வித்தியாசப்படுகிறது என்பதை நாம் அறிந்துக்கொள்ளவேண்டும். "பாவமின்மை" என்று பைபிள் சொல்லும் கோட்பாடு இஸ்லாம் சொல்லும் "பாவத்திலிருந்து பாதுகாப்பு" என்ற கோட்பாட்டை விட வித்தியாசமானது. அதாவது, பைபிள் சொல்லும் "பாவமின்மை" என்ற கோட்பாடு என்பது பாவம் செய்யாமல் இருக்கும் நிலை மட்டுமல்ல, அது தேவனின் பரிசுத்தம், அன்பு மற்றும் நீதியை முழுவதுமாக வெளிப்படுத்தும் உள்ளத்தின் நிலையாகும். பைபிளின் படி "பாவம்" செய்பவர்கள், தேவனின் மகிமையை விட்டுவிட்டவர்கள் ஆவார்கள் (ரோமர் 3:23), மற்றும் அவர்கள் தேவனின் நீதியை அடையாதவர்களாக இருக்கிறார்கள்.

முஹம்மதுவின் "பாவத்திலிருந்து பாதுகாப்பு" என்ற கோட்பாடிற்கும், இயேசுவின் பாவமின்மை என்ற கோட்பாட்டிற்கும் வித்தியாசம் உள்ளது. முஹம்மதுவின் பாவத்திலிருந்து பாதுகாப்பு என்பது அவருக்கு வெளிப்பட்ட வசனங்கள் உண்மையானவைகள் என்பதை காட்ட சொல்லப்படுகிறது. ஆனால், இயேசுவின் பாவமின்மை என்பது அவரது தெய்வீகத்தன்மைக்கு அது ஆதாரமாக உள்ளது, மற்றும் ம‌னிதனின் உண்மை மனநிலை பற்றி கிறிஸ்தவ கோட்பாட்டிற்கு ஆதாரமாக உள்ளது. பாவ‌த்திலிருந்து விடுத‌லை அல்ல‌து இஸ்மாஹ் என்ற‌ இஸ்லாமிய‌ கோட்பாடு, முஹ‌ம்ம‌துவிற்கு வெளிப்ப‌ட்ட‌ வெளிப்பாடுக‌ளுக்கு ஆதார‌மாக‌ கொடுக்க‌ப்ப‌ட்ட‌தே த‌விர‌, முஹ‌ம்ம‌து "ஒரு பாவ‌மும் அறியாத‌, க‌றைதிரை இல்லாத‌ மாச‌ற்ற‌ ம‌னித‌ர்" என்ப‌த‌ற்கு ஆதார‌மாக‌ கொடுக்க‌ப்ப‌ட்ட‌து அல்ல‌. (Thomson, "Muhammad: His Life and Person", "The Muslim World", Vol. 34, p. 115.")

கிறிஸ்தவத்தின் "பாவமின்மை" என்பது பாவமில்லாத பரிசுத்தமாகும். இதன் படி இந்த குணத்தை பெறாதவர்கள் தேவனின் நீதியை விட்டுவிட்டவர்களாக கருதப்படுவார்கள், அதாவது பாவிகளாக கருதப்படுவார்கள். இதற்கு எதிர்மறையாக, இஸ்லாமுக்கு தெரிந்த பாவத்திலிருந்து பாதுகாப்பு என்பது, மனித வழக்கத்தின்படி, மறுபடியும் பாவம் செய்யக்கூடிய நிலையை உடைய மனநிலையை குறிக்கிறது. மீட்கப்படவேண்டிய "விழுந்துவிட்ட மனித நிலையைப் பற்றி" இஸ்லாமுக்கு ஒன்றுமே தெரியாது. இஸ்லாமிய கோட்பாடு "வேண்டுமென்றே தெரிந்தே செய்யும் தவறுகளிலிருந்து பாதுகாப்பு" என்பது பற்றி மட்டும் கூறுகிறது. ஆனால், இறைவனின் பரிசுத்தத்தை தன் இதயத்தில் கொண்டு இருக்கும் மனிதனின் நிலையைப் பற்றி இஸ்லாமிய கோட்பாடு கூறுவதில்லை. இதனால், தான் இஸ்லாம், நபிகள் செய்யும் பாவங்களுக்கு முலாம் பூசி அவைகள் "சிறிய தவறுகள்" என்றும், மறதியில் செய்யப்படும் "தவறுகள்" என்றும் கூறுகிறது. (Gilchrist, op cit, page 275)

எதிரொலி: முஹம்மது எப்படிப்பட்ட பாவியாக இருந்தார்?

மனிதன் பாவசுபாமுள்ளவன் அல்ல, ஆனால், பாவத்தின் பக்கம் அதிகமாக சாய்கின்றவனாக இருக்கிறான் என்று இஸ்லாம் போதிக்கின்றது. மனிதன் பாவசுபாமுள்ளவன் என்று கிறிஸ்தவர்கள் நம்புகிறார்கள். இயேசுக் கிறிஸ்து கூறும் போது,மனிதன் இயற்கையாகவே தீயவனாக இருக்கிறான் என்று கூறினார்.

உங்களில் எந்த மனுஷனானாலும் தன்னிடத்தில் அப்பத்தைக் கேட்கிற தன் மகனுக்குக் கல்லைக் கொடுப்பானா? மீனைக் கேட்டால் அவனுக்குப் பாம்பைக் கொடுப்பானா? ஆகையால், பொல்லாதவர்களாகிய நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல ஈவுகளைக் கொடுக்க அறிந்திருக்கும் போது, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா தம்மிடத்தில் வேண்டிக் கொள்ளுகிறவர்களுக்கு நன்மையானவைகளைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா? ஆதலால், மனுஷர் உங்களுக்கு எவைகளைச்செய்ய விரும்புகிறீர்களோ, அவைகளை நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்; இதுவே நியாயப்பிரமாணமும் தீர்க்கதரிசனங்களுமாம். (மத்தேயு 7:9-12)

தேவனுடைய விருப்பத்திற்கு எதிராக போராடும் மனித சுபாவம் பற்றி மற்றோரு இடத்தில் பவுல் கூறுகிறார்:

"ஆதலால் நான் விரும்புகிற நன்மையைச் செய்யாமல், விரும்பாத தீமையையே செய்கிறேன்…." "ஆகிலும் என் மனதின் பிரமாணத்துக்கு விரோதமாய்ப் போராடுகிற வேறொரு பிரமாணத்தை என் அவயவங்களில் இருக்கக் காண்கிறேன்; அது என் அவயவங்களில் உண்டாயிருக்கிற பாவப்பிரமாணத்துக்கு என்னைச் சிறையாக்கிக் கொள்ளுகிறது" (ரோமர் 7:19,23.)

எல்லா மனிதர்களும் பாவம் செய்து தெய்வ மகிமை அற்றவர்களாக இருக்கிறார்கள் (ரோமர் 3:23) என்று கிறிஸ்தவர்கள் நம்புகிறார்கள். நாம் நம்முடைய உள்ளத்திலும், சரீரத்திலும் நம்முடைய ஆத்துமாவிற்கு எதிராக ஒரு யுத்தத்தை அனுதினமும் செய்துக்கொண்டு இருக்கிறோம். இந்த பாவ சுபாவமானது நாம் இறைவனின் விருப்பத்தின் படி எதுவும் செய்யக்கூடாது என்று போராடிக்கொண்டு இருக்கிறது.

இப்போது, முஹம்மதுவின் விண்ணப்பத்திற்கு நேராக நம் கவனத்தை திருப்புவோம்.

அல்லாஹ்! நான் பாவங்கள் புரிந்துள்ளதையும் உன்னிடம் ஒப்புக்கொள்கிறேன். எனவே, என்னை மன்னிப்பாயாக! ஏனெனில், பாவத்தை மன்னிப்பவன் உன்னைத் தவிர வேறெவரும் இல்லை. என் பாவங்களை மன்னிப்ப்பாயாக, தெரிந்தும் தெரியாமலும் செய்த பாவங்களையும் மன்னிப்பாயாக. நான் முந்திச் செய்த, பிந்திச் செய்கின்ற, இரகசியமாகச் செய்த, பகிரங்கமாகச் செய்த பாவங்களை மன்னித்துவிடு. வேடிக்கையாகவோ அல்லது தெரிந்தே செய்த தவறுகளையும் மன்னிப்பாயாக. நான் செய்த எல்லா தீய செயல்களிலிருந்து உன்னிடம் பாதுகாப்பு வேண்டுகின்றேன். அழுக்கிலிருந்து வெண்மையான ஆடையை நீ தூய்மைப் படுத்துவதைப் போன்று தவறுகளிலிருந்து என் உள்ளத்தைத் தூய்மைப்படுத்துவாயாக! கிழக்கிற்கும் மேற்கிற்கும் இடையே நீ ஏற்படுத்திய இடைவெளியைப் போன்று எனக்கும் என் தவறுகளுக்குமிடையே நீ இடைவெளியை ஏற்படுத்துவாயாக.

முஹம்மதுவின் இந்த பாவமன்னிப்பு பற்றிய விண்ணம், அவர் ஒரு பாவம் செய்கின்ற கலங்கமுள்ள சுபாவமுள்ளவர் என்பதை காட்டுகின்றதல்லவா? தன் பாவங்களை இறைவன் மன்னிக்கவேண்டும் என்ற இந்த விண்ணப்பத்தை முஹம்மது அடிக்கடி செய்துள்ளார். ஏன் இவர் அடிக்கடி இந்த ஜெபத்தை செய்யவேண்டும்? அவரின் இந்த விண்ணப்பமானது ஏதோ ஒருசில சாதாரண பாவங்களை தெரியாமல் செய்யும் மனிதனின் விண்ணப்பமல்ல. இது பயத்தோடு கூடிய, ஒரு முக்கியமான (சீரியஸான) விண்ணப்பமாகும், அதாவது தன்னுடைய செயல்கள் மிகவும் மோசமானவைகளாக தீயவைகளாக இருக்கின்றன என்ற உணர்வுள்ள மனிதன் செய்யும் விண்ணப்பம் தான் இந்த முஹம்மது செய்த விண்ணப்பம். அவர் தன்னுடைய பாவங்களுக்காக கல்லரையில் துன்பம் அனுபவிக்கவேண்டி வரும் என்பதை நம்பியவராக இந்த விண்ணப்பத்தை செய்துள்ளார். தன்னுடைய சுபாவத்தில் இருக்கும் பாவ உணர்வுகள் பற்றிய ஓர் சரியான உணர்வு உள்ளவாராக இவர் வேண்டுதல் செய்துள்ளார். தான் என்னென்ன தவறுகள் செய்தார் என்ற பட்டியலை இந்த வேண்டுதலில் அவர் குறிப்பிடவில்லையானாலும், அவருடைய இந்த ஜெபமானது அவர் பாவ சுபாவமுள்ள ஒரு சாதாரண மனிதன் தான் என்பதைக் காட்டுகிறது. இந்த பாவசுபாவம் அவருக்குள் இருந்து செயல்பட்டுக்கொண்டு இருக்கிறது, அதனை இவர் சமாளித்தே ஆகவேண்டும். அவர் தன்னைத் தான் ஒரு தீர்க்கதரிசி என்றுச் சொல்லிக்கொண்டு செய்த அனைத்து செயல்களும் இந்த பாவசுபாவத்தினால் தான். எதிர்காலத்திலும் கூட தான் பாவம் செய்யப்போகிறார் என்பதை முஹம்மது அறிந்திருந்தார். தன்னுடைய எதிர்கால பாவங்களை மன்னிக்கும்படி அவர் இறைவனிடம் வேண்டுதல் செய்கிறார். அதுமட்டுமல்ல, அப்படியே தன் பாவங்களை இறைவன் மன்னிப்பார் என்பதற்கு ஒரு வசனத்தையும் சொல்லிவிட்டார் (குர்ஆன் 48:1,2). அவர் தன் உள்ளத்தின் ஆழத்தில் "தான் ஒரு பாவி" என்பதை அறிந்திருந்தார், அதனால் அவர் பாவமன்னிப்பிற்காக வேண்டுதல் செய்யவேண்டிய அவசியம் அவருக்கு இருந்தது.

பாகம் மூன்றின் முடிவுரை: எல்லா மனிதர்களுக்கும் இருந்த பாவ சுபாவமே முஹம்மதுவிற்கும் இருந்தது.

கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமிய போதனைகளின்படி இயேசு பரிசுத்தமுள்ளவரும், பாவமில்லாதவருமாக இருக்கிறார். மனிதனின் பாவ சுபாவம் பற்றி மார்க்க போதனைகள் வித்தியாசமாக இருந்தாலும், முஹம்மதுவின் நடத்தைகள் மற்றும் அவரது தனிப்பட்ட ஜெபங்களை நாம் கூர்ந்து கவனித்தால், கிறிஸ்தவ‌ போதனைகளின் படி, "பாவி" என்ற தலைப்பிற்கு முஹம்மது பொருத்தமானவராக இருக்கிறார் என்பதை அறியலாம்.

பாவத்திலிருந்து மீட்பு (இரட்சிப்பு) என்பது இயேசுக் கிறிஸ்து மூலமாக வருகிறது. முஹம்மதுவிற்கு இது தெரியவில்லை. உண்மையான மன்னிப்பை பெறுவதற்கு பதிலாக, முஹம்மது கல்லரையில் தனக்கு காத்திருக்கும் வேதனையை நினைத்தவராக பயத்துடனே தன் வாழ்க்கையை வாழ்ந்தார். முஹம்மது தனக்கு தானாகவே ஒரு வித்தியாசமான கலவையுடன் கூடிய மற்றும் பல சம்பிரதாயங்கள், மூடபழக்கவழக்கங்கள் வன்முறைகளைக் கொண்ட மதத்தை உருவாக்கிவிட்டார். இவையெல்லாம் அவர் செய்தது, தனக்கு தெரியாத அந்த இறைவனை திருப்திபடுத்த அவர் எடுத்த முயற்சியாகும்.

இந்த வேண்டுதலை செய்யுங்கள்:

"இறைவனாகிய இயேசுவே, நான் ஒரு பாவி என்பதை அறிக்கையிடுகிறேன். என் ஆத்துமாவில் பாவம் உண்டென்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். தயவு செய்து என் பாவங்களை மன்னியும். இப்பாவங்கள் உம்முடைய பார்வையில் மிகவும் கொடுமையானவைகள் என்பதை நான் அறிவேன். என் பாவங்களுக்காக நீர் மரித்தீர் என்பதை நம்புகிறேன். நீர் மறுபடியும் உயிரோடு எழுந்தீர் என்பதை விசுவாசிக்கிறேன். நீர் என் இருதயத்தில் வரும்படி நான் அழைக்கிறேன், என் பாவங்களை கழுவும் படியும் என்னை உம்மிடம் சேர்த்துக்கொள்ளும்படியும் கேட்டுக்கொள்கிறேன். நீர் தேவ குமாரன் என்பதையும், நீர் எனக்காக காட்டிய அன்பை நான் பெற்றுக்கொள்கிறேன். உமக்கு முழுவதுமாக கீழ்படிவேன் என்று உறுதிகூறுகிறேன்."

BIBLIOGRAPHY

[1] "Sahih Bukhari", translated into English by Dr. Muhammad Muhsin Khan, at the Islamic University in Medina, published by Kitab Bhavan, New Delhi, India.
[2] "Muhammad and the Religion of Islam", by John Gilchrist, page 273, published by Jesus to the Muslims, Durban, South Africa. It can be found on the web at:http://answering-islam.org/Gilchrist/Vol1/

[3] "The Koran", by N. J. Dawood, published by Penguin, London England
[4] "The Meaning of the Glorious Koran", by M. Pickthall. published by Mentor, NY, NY.
[5] "The Koran", by A. J. Arberry, published by Oxford University Press, Oxford, England.

[6] "The Koran", by J. M. Rodwell, published by Everyman, London, England.
[7] "The Holy Quran", by Yusef Ali, published by Amana, Beltsville, Maryland.
[8] The Hughes Encyclopedic Dictionary of Islam"

[9] "Ency. of Islam", pub. by Brill, Netherlands.
[10] "Sahih Muslim", translated by A. Siddiqi, published by International Islamic Publishing House, Riyadh, KSA.
mo-sinner.htm
Rev A: 4/26/00

ஆங்கில மூலம்: Was Muhammad a Sinner?

சைலஸ் அவர்களின் இதர கட்டுரைகள்

முஹம்மது பற்றிய இதர கட்டுரைகள்

பின்னூட்டமொன்றை இடுக

Filed under Uncategorized

Answering PJ: பிஜேயின் மிகப்பெரிய பாவம்: இறைவனுக் கு இணை வைத்தல்

பிஜேயின் மிகப்பெரிய பாவம்: இறைவனுக்கு இணை வைத்தல்

முன்னுரை: "பாவங்களிலேயே மிகப்பெரிய பாவம் இறைவனுக்கு இணை வைத்தலாகும்", அதாவது, ஒரு மனிதனை இறைவனுக்கு சமமாக கருதுவது, அல்லது தொழுதுக்கொள்வது. பிஜே அவர்கள் இதைப் பற்றி தன் குர்-ஆன் மொழியாக்கத்தில் என்ன கூறியுள்ளார் என்பதை முதலில் காண்போம், அதன் பிறகு ஏன் இந்த கட்டுரை எழுதப்படுகின்றது என்பதை விளக்குகிறேன்.

பிஜே குர்-ஆன் மொழியாக்கம், தமிழ் கலைச் சொற்கள், பக்கம் 71:

இவ்வாறு இறைவனுக்கு இணை கற்பித்தல், மனிதர்கள் செய்கின்ற குற்றங்களிலேயே மிகவும் பெரிய குற்றம் எனவும், இக்கொள்கையிலிருந்து திருந்திக்கொள்ளாமல் ஒருவர் மரணித்து விட்டால் அவருக்கு மன்னிப்பு இல்லை; என்றேன்றும் நரகத்தில் கிடப்பார் என்றும் இஸ்லாம் கூறுகிறது.

பிஜே குர்-ஆன் மொழியாக்கம், பொருள் அட்டவணை, தலைப்பு: "11. அல்லாஹ்விற்கு இணை கற்பிக்கக் கூடாது", பக்கம் 109:

. . . அல்லாஹ்விற்கு இணை கற்பித்தல் பெரும் பாவமாகும் – 4:48

அல்லாஹ்விற்கு இணை கற்பித்தல் பெரும் வழிகேடு – 4:116

அல்லாஹ்விற்கு இணை கற்பித்தல் மிகப்பெரும் அநியாயம் – 31:13 . .

பிஜே அவர்கள் ஒரு புதிய தளத்தை கிறிஸ்தவர்களுக்கு பதில்கள் தருவதற்காகவே ஆரம்பித்துள்ளார், அந்த தளம் பற்றி நான் கொடுத்த அறிமுக கட்டுரையை கீழே படிக்கவும்.

கிறிஸ்தவத்திற்கு பதில்: பீஜேயின் புதிய தளம் ஆரம்பம்

இந்த புதிய தளத்தில், அவர் முதலாவது முகப்பு பக்கத்தில் பதித்து இருந்த ஒரு கட்டுரை: "மறுக்க முடியுமா, இதை மறைக்க முடியுமா?" என்பதாகும். இந்த கட்டுரைக்கு நாம் இப்போது பதிலை காணலாம்.

பிஜே அவர்கள் தம்முடைய புதிய தளத்தில்(http://jesusinvites.com/) எழுதியவைகளை முதலாவது படிப்போம்:

பாரான் (ஹிரா) மலையின் பிரகாசம்

கர்த்தர் சீனாயிலிருந்து எழுந்தருளி,சேயீரிலிருந்து அவர்களுக்கு உதயமானார்,பாரான் மலையிலிருந்து பரிசுத்தவான்கள் நடுவிலிருந்து பிரசன்னமானார். அவர் வலதுபுறத்தில் அக்கினிமயமான பிரமானம் அவர்களுக்கு வெளிப்பட்டது.

(உபகாமம் 33:1,2)

"பாரான் மலையிலிருந்து பிரகாசமாய்த் தோன்றி" என்பதன் பொருள் என்ன? பாரான் மலை என்பது மோசே வாழ்ந்த பகுதியிலும் இல்லை. இயேசு வாழ்ந்த பகுதியிலும் இல்லை. மாறாக அது மக்காவில் அமைந்துள்ள மலைகளில் ஒரு மலையின் பெயராகும். அவன் வளர்ந்து வனாந்திரத்தில் குடியிருந்தான். அவன் வளர வளர வில் வித்தையிலும் வல்லவனானான். பாரான் வனாந்தரத்தில் அவன் குடியிருக்கையில் அவனுடைய தாய் எகிப்து தேசத்துப் பெண் ஒருத்தியை அவனுக்கு விவாகஞ் செய்வித்தான்

(ஆதியாகமம் 21:12-21)

சீனாய் மலையில் தோன்றிய பிரகாரசம் மோசேவின் வேதம் என்றால், சீயேரில் தோன்றிய ஒளி இயேசுவின் வேதம் என்றால், பாரானில் தோன்றிய பிரகாசம் எது?

மோசே காலம் முதல் நபிகள் நாயகம் காலம் வரை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைத் தவிர அப்பகுதியில் எவரும் கர்த்தரின் தூதர் என அறியப்படவில்லை.

எனவே, பாரான் (ஹிரா) மலையிலிருந்து தோன்றிய பிரகாசம் என்பது நபிகள் நாயகத்தையும் அவர்களுக்கு அருளப்பட்ட வேதத்தையும் குறிக்கிறது , மறுக்க முடியுமா, இதை மறைக்க முடியுமா?

பிஜே அவர்களுக்கு தமிழ் கிறிஸ்தவனின் பதில்:

பிஜே அவர்களின் மேற்கண்ட வரிகளின்படி, அவர் கீழ்கண்ட விவரங்களை முன் வைக்கின்றார்:

1) உபாகமம் 33:1-2 வசனங்களில் முஹம்மது பற்றிய தீர்க்கதரிசனம் உள்ளது.

2) இவ்வசனங்களில் வரும் "பாரான்" மலை என்பது, மக்காவில் இருக்கும் ஒரு மலையாகும் (ஹிரா).

3) பாரான் மலையிலிருந்து தோன்றிய பிரகாசம் என்பது முஹம்மதுவையும், குர்-ஆனையும் குறிக்கும்.

பின்னூட்டமொன்றை இடுக

Filed under Uncategorized

மிஷால் அல்காதி அவர்களுக்கு மறுப்பு: எல்ல ா முஸ்லிம்களும் நரகத்திற்குச் செல்வார்களா?

மிஷால் அல்காதி அவர்களுக்கு மறுப்பு: எல்லா முஸ்லிம்களும் நரகத்திற்குச் செல்வார்களா?

நம்முடைய "எல்லா முஸ்லிம்களும் நரகத்திற்குச் செல்வார்களா?" என்ற கட்டுரைக்கு அல்காதி என்பவர் பதில் கொடுத்துள்ளார், அவரது மறுப்பிற்கு நம் பதிலை இக்கட்டுரையில் காண்போம்.

மிஷால் அல் காதி என்பவர் நம்முடைய "எல்லா முஸ்லிம்களும் நரகத்திற்குச் செல்வார்களா?" என்ற கட்டுரைக்கு பதில் கூறியுள்ளார்.

மரியம் சூரா (19):17ம் வசனத்தை நபி அவரக்ளும்(அவர் மீது சாந்தி உண்டாகட்டும்) மற்றும் இதர நபித்தோழர்களாகிய இபின் மஸூத், சுலைமான் இபின் முரா போன்றவர்களும் விளக்கியுள்ளார்கள். உலக மக்கள் அனைவரும் எப்படி நரக நெருப்பின் மீது அமைக்கப்பட்ட "சிரத்" என்ற பாதையின் மீதாக சொர்க்கத்தை அடைகிறார்கள் என்பதை இவ்வசனம் விளக்குகிறது. அதிகமாக பயபக்தியுடையவர்கள் மட்டுமே அந்த பாதையை கடக்கமுடியும். நபி(ஸல்) அவர்கள் கூறியதாக நபித்தோழர் சுலைமான் இபின் முரா கூறியதாவது: "அதிகமாக பக்தியுடையவர்களை இந்த பாதையின் பயணம் எந்த பாதிப்பையும் உண்டாக்காது, இப்ராஹிம் நபியவர்களை எப்படி இறைவன் நெருப்பிலிருந்து காப்பாற்றினானோ அதுபோல, இவர்களையும் காப்பாற்றுவான். ஒரு நபரின் பக்திக்கு ஏற்றாற்போல, உவ்வுலகில் அவர் வாழ்ந்த வாழ்க்கையின் தரத்திற்கு ஏற்றாற்போல, இந்த பாதையின் பயணம் இருக்கும் இருக்கும். சிலர் மின்னல் வேகத்தில் கடப்பார்கள், சிலர் புயலைப்போல வேகமாக கடப்பார்கள், சிலர் ஓடுவார்கள், சிலர் நடப்பார்கள் சிலர் தவழ்ந்துச் செல்வார்கள். இந்த விவரங்கள் அனைத்தும் நபியவர்களின் அனேக ஹதீஸ்களில் உள்ளது.

திரு அல்காதி அவர்கள் கூறியதை நான் மறுபடியும் சொல்லட்டும், அதாவது அவரின் கூற்றுப்படி, நல்ல பக்தியுள்ள இஸ்லாமியர்கள் நரகத்திற்குள் நுழையமாட்டார்களாம், ஆனால், ஒரு பாலம் போல இருக்கும் ஒரு பாதையின் வழியாக கடந்துச் செல்வார்களாம். இந்த பயணமானது அவர்களை பாதிக்காது என்று கூறுகிறார்.

திரு அல்காதி அவர்கள், சில ஹதீஸ்கள் மீது ஆதாரப்பட்டு இந்த விளக்கத்தைக் கூறுகிறார் (ஆனால், அவர் அந்த ஹதீஸ்களின் எண்களைத் தரவில்லை, அப்படி கொடுத்து இருந்தால், நாம் சரி பார்த்து இருந்திருப்போம்). ஆனால், ஹதீஸ்களை விட குர்‍ஆன் மிகவும் தெளிவாக கீழ்கண்டவாறு கூறுகிறது.

மேலும், அதனைக் கடக்காமல் உங்களில் யாரும் (போக) முடியாது இது உம்முடைய இறைவனின் முடிவான தீர்மானமாகும். அதன் பின்னர், தக்வாவுடன் – பயபக்தியுடன் இருந்தார்களே அவர்களை நாம் ஈடேற்றுவோம்; ஆனால், அநியாயம் செய்தவர்களை அ(ந் நரகத்)தில் முழந்தாளிட்டவர்களாக விட்டு விடுவோம்.

(குர்‍ஆன் 19:71-72)

There will be no one of you who will not enter it (Hell). This was an inevitable decree of your Lord. Afterwards he may save some of the pious, God-fearing Muslims out of the burning fire.

பின்னூட்டமொன்றை இடுக

Filed under Uncategorized

தன்னை நாயெனக் கருதும் பசுக்கன்று

cow.jpgபிரிட்டனில், பசுக்கன்று ஒன்று தன்னை நாய் எனக் கருதி நாயைப் போல் நடந்துகொள்கிறது. நாயைப் போன்று அது குரைக்கவும் செய்கிறது.

4 மாத வயதான இந்த பசுக்கன்றை அது பிறந்தவுடன் பண்ணையாளர் பென் பொவர்மன் என்பவர் தனது வீட்டிற்கு கொண்டுவந்து அதை இரு நாய்களுடன் வளர்க்க ஆரம்பித்தார்.

ஹென்றி எனப் பெயரிடப்பட்ட இப்பசுக்கன்று, மந்தைக் கூட்டத்திலிருந்து விலகி, வீட்டில் தன்னுடன் வளர்க்கப்பட்ட நாய்களுடன் விளையாடுவதற்கே விரும்புகின்றது.

பென் பொவர்மனின் வீட்டின் அருகிலுள்ள குடிசையில் இப்பசுக்கன்று உறங்குவதுடன் ஒவ்வொரு காலைவேளையும் சமையலறையின் ஜன்னல் வழியே தனது தலையை விட்டு டோஸ்டரிலிருந்து உணவுப்பொருட்களை களவாடி உண்கிறதாம்.

அக்கன்றானது பென் மற்றும் அவரது மனைவி கெத்தரின் (42) ஆகிய இருவராலும் டோர்ஸெட் பிராந்தியத்திலுள்ள 450 ஏக்கர் நிலத்திலுள்ள பண்ணையிலிருந்து வீட்டுக்கு கொண்டுவரப்பட்டது. அதனது தாய் அதற்கு ஒழுங்கான முறையில் பாலூட்டாமையே இதற்குக் காரணம்.

தற்போது அக்கன்று அந்தக் குடும்பத்தின் ஓர் அங்கமாக இருப்பதுடன் தன்னை நாயென நினைத்துக்கொண்டு வீட்டிலுள்ள நாய்களுடன் விளையாடுகின்றது.

தற்போது அந்தக் கன்று குறித்த வீடியோ, இணையத்தளங்களிலும் வெளியாகி பல்லாயிரக்கணக்கானோர் பார்வையிடுகின்றனர்.

இது தொடர்பாக பென் குறிப்பிடுகையில் ‘அது உண்மையில் தன்னை நாயென நினைத்துக்கொண்டுள்ளது. காரணம் அது எங்கள் ஏனைய இரு நாய்களுடன் வளர்ந்தது. அது நாய்களை துரத்தி விளையாடுகின்றது.

அப்பசுக்கன்று எனது பின்னால் வந்து நின்று அதனது தலையை எனது கால்களுக்கிடைய போட்டு என்னைத் தூக்குவது அதற்கு மிகவும் பிடிக்கும்.

எமது பிள்ளைகள் ஹென்றி மீது மிகுந்த அன்புக்கொண்டவர்கள். எங்களால் அதனை விற்கமுடியாது. எனவே அது இன்னும் 10 அல்லது 15 வருடங்களுக்கு எம்முடன் இருக்கமுடியும்’ எனத் தெரிவித்துள்ளார்.

source:pathivu

பின்னூட்டமொன்றை இடுக

Filed under Uncategorized

உலகின் மிக நீளமான பூனை

cut.jpgஅமெரிக்காவில் உள்ள பூனையொன்று உலகிலேயே மிக நீளமான வளர்ப்பு பூனையென்ற புதிய சாதனையை நிலைநாட்டியுள்ளது.

ஸ்டீவி எனும் 5 வயதுடைய இந்தப் பூனை அண்மையில் அளவிடப்பட்டபோது அதனது மூக்கு முதல் வால் வரையிலான நீளம் 48.5 அங்குலமாக இருந்தது. அதையடுத்து அப்பூனை உலக சாதனை பூனையாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

நவேடா மாநிலத்தின் ரெனோ நகரைச் சேர்ந்த அப்பூனையின் உரிமையாளர்களான ரொபின் ஹென்ரிக்ஸன் மற்றும் எரிக் பிரேன்ஸ்னெஸ் குறிப்பிடுகையில், ‘இப்பூனையை பார்த்தவர்கள் அந்த பூனையின் நீளத்தைப் பார்த்து திகைத்ததுடன், அதனை உலக சாதனை வெளியீட்டாளர்களுக்கு அறிவித்தால் நிச்சயம் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெறும் என்று கூறினார்கள். அதன்பின் நாங்கள் உலக சாதனை வெளியீட்டாளர்களுக்கு அறிவிப்பது என்று தீர்மானித்தோம்.

ஸ்டீவ் மூன்று வருடத்திற்கு முன்பே அபூர்வமான முறையில் நீளமாக இருந்ததை நாங்கள் அவதானித்தோம்’ என்று கூறியுள்ளனர்.

ஸ்டீவ்வுக்கு முன்னர் உலக சாதனைக்குரியதாக விளங்கிய பூனை 48 அங்குல நீளமானதாகும்.

source:pathivu

பின்னூட்டமொன்றை இடுக

Filed under Uncategorized