Monthly Archives: ஒக்ரோபர் 2010

இலவசத்தை ஒழித்திடு, விழித்திடு தமிழா

இலவசத்தை ஒழித்திடு, விழித்திடு தமிழா : நோட்டீஸ் வினியோகத்தால் பரபரப்பு

"மனம் வெதும்பும் ஒரு தமிழனின் மனசாட்சி’ என்ற பெயரில் விலாச மில்லாமல் வினியோகிக்கப்படும் நோட்டீசால் பரபரப்பு ஏற்பட்டது.

நகர பகுதிகளில் கடந்த இரு தினங்களாக "இன்றைய தமிழகம்’ என்ற தலைப்பிட்டு முகவரியில்லாமல் சில மர்ம நபர்களால் நோட்டீஸ் வினியோகிக்கப்பட்டு வருகிறது. "ஒரு நாளைக்கு 18 மணி நேரம் உழைக்கும் என்னிடம் ஒருவர் கேட்டார், எதற்காக இத்தனை கஷ்டப்படுகிறாய்?’ "நான் கேட்டேன், கஷ்டப்படாமல் எப்படி வாழ்க்கை ஓட்ட முடியும்?’ அவர் சிரித்தபடி சொன்னார், "என்னை பார் ஒரு ரூபாய்க்கு அரிசி வாங்கி உண்டு விட்டு உறங்கி விடுவேன். போரடித்தால் வண்ணத் தொலைக்காட்சியில் திரைப் படம் பார்த்திடுவேன். உழைக்காமல் நோய் வந்தால் மருத்துவரிடம் ஓடுவேன். உயர் சிகிச்சை பெற்றிடுவேன், ராஜமரியாதையுடன். நான் யார் தெரியுமா? தமிழ் நாட்டு குடிமகன்!’

"என் நாட்டில் உணவுக்கு அரிசி ஒரு ரூபாய், சமைப்பதற்கு காஸ் அடுப்பு இலவசம், பொழுதுபோக்கிற்கு வண்ணத் தொலைகாட்சி மின்சாரத்துடன் இலவசம். எதற்காக உழைக்க வேண்டும்? மனைவி, பிள்ளை பெற்றால் 6,000 ரூபாய் இலவச சிகிச்சையுடன். குழந்தைக்கு சத்துணவு இலவசம் பாலர் பள்ளியில். படிப்பு, சீருடை, முட்டையுடன் மதிய உணவும் இலவசம். பாடப்புத்தகம் இலவசம். படிப்பும் இலவசம். பள்ளி செல்ல பஸ் பாஸ் இலவசம். தேவையென்றால் சைக்கிளும் இலவசம். "பெண் பருவமடைந்தால் திருமண உதவித் தொகை 25,000 ரூபாய் இலவசம், ஒரு சவரன் தாலியுடன், திருமண செலவும் இலவசம். தேவையென்றால் மாப்பிள்ளையுடன் பேப்பரில் விளம்பரமும் இலவசம். மகள் பிள்ளை பெற்றால் மீண்டும் அதே கதை தொடரும் அவள் வாழ்க்கை யிலும். நான் எதற்கு உழைக்க வேண்டும்!’

"இலவசம் என்பதற்கு இரண்டு அர்த்தம் உண்டு, ஒன்று கையூட்டு, மற்றொன்று பிச்சை. இதில் நீ எந்த வகை? எதை எடுத்து கொள்வது? உழைக்காமல் உண்டு சோம்பேறியாகிறாய். இலவசம் நின்று போனால் உன் நிலை? உழைப்பவர் சேமிப்பை களவாடத் தலைப்படுவாய்? இதே நிலை தொடர்ந்தால், இலவசம் வளர்ந்தால், அமைதிப் பூங்காவாம் தமிழகம், கள்வர் பூமியாய் மாறும் நிலை, இன்னும் வெகு தொலைவில் இல்லை. தமிழா விழித்தெழு, உழைத்திடு, இலவசத்தை வெறுத்திடு, அழித்திடு, தமிழகத்தை தரணியில் உயர்த்திடு. நாளைய தமிழகம் நம் கையில், உடன் பிறப்பே சிந்திப்பாயா? மனம் வெதும்பும் ஒரு தமிழனின் மனசாட்சி!’ இவ்வாறு அந்த நோட்டீசில் அச்சிடப்பட்டுள்ளது

source:dinamalar

பின்னூட்டமொன்றை இடுக

Filed under Uncategorized

பரவி வரும், “கட்டிப்பிடி’ கலாசாரம்

தமிழகத்தில் பொது இடங்களில் பரவி வரும், "கட்டிப்பிடி’ கலாசாரம் இளைய சமுதாயத்தை பாழாக்கி வருகிறது.

கலாசாரத்தில் தோய்ந்த நம் பண்பாட்டை சீரழிக்கும் விதமாக, சென்னை போன்ற பெரு நகரங்களில் பெருகி வரும் பைக் காதல், பீச், பார்க் மறைவிட காதல்களால், மாணவ, மாணவியர் தவறான பாதைக்கு செல்லக் கூடிய அபாயகரமான சூழல் ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக சென்னை, மதுரை, கோவை, திருச்சி போன்ற பெருநகரங்களில் இது போன்ற நிலை அதிகம் இருப்பதால், எங்கே தங்கள் மகனும், மகளும் இதே போன்றதொரு நிலைக்கு

சென்று விடுவார்களோ என பெற்றோர் அஞ்சுகின்றனர். சென்னையைப் பொறுத்தவரை, சாலைகளில் செல்லும் போது, சிலர் துப்பட்டாவால் முகம் முழுவதையும் மூடிக் கொண்டும், சிலர் ஹெல்மட் அணிந்து முகத்தை மறைத்துக் கொண்டும், சிலர் வெளிப்படையாகவும், முன்னே ஓட்டிச் செல்லும் இளைஞரை இறுக்கி அணைத்தபடியும், அசிங்கமாக சேட்டைகள் செய்தபடியும் செல்கின்றனர்.

இதே போல், தினமும், சென்னை மெரீனா, பெசன்ட் நகர் பீச்களில், இரவு வேளைகளில் மட்டுமல்லாது, மாலை வேளைகளிலும், பகலிலும் மொட்டை வெயிலில் அமர்ந்து கொண்டு பலர், காதலர்கள் என்ற போர்வையில், பட்டவர்த்தனமாக, மற்றவர்களின் பார்வையில் படும்படி ஆபாச செய்கைகளில் ஈடுபடுவதை காணலாம். போதா குறைக்கும், இது போன்ற (கள்ள)காதலர்களின் அட்டகாசம் உயிரியல் பூங்கா, சிறுவர் பூங்கா போன்ற பூங்காக்கள்,

நினைவு மண்டபங்கள், ஆள் நடமாட்டம் அதிகம் இல்லாத இடங்கள், புதர் மறைவுகளிலும் அதிகம் காணப்படுகிறது.

இது போன்ற அசிங்கங்களில் ஈடுபடுவோருக்கு தங்களைப் பற்றியும் கவலை இல்லை. தங்கள் பெற்றோர் மற்றும் உறவினர்களைப் பற்றியும் கவலை இல்லை. இது போன்ற அசிங்கங்களை போலீசாரும் அவ்வளவாக கண்டு கொள்வதில்லை. மற்றவர்கள் தங்களைப் பார்க்கும் போது, அவர்கள் மனதில் தேவையற்ற சஞ்சலம் ஏற்படுமே என்பதையும் அவர்கள் கண்டு கொள்ளவில்லை. இதனால், இளைய சமுதாயத்தினர் மன ரீதியாக

பாதிக்கப்படுகின்றனர். குறிப்பாக மாணவ, மாணவர்கள் மத்தியில் இது போன்ற நிகழ்வுகள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இதை பார்க்கும் அவர்கள், தாங்களும் இதே போன்று நடந்து கொள்ள வேண்டும் என்ற ஆவலில் தவறு செய்ய நேரிடுகிறது. இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு, இனியேனும் பொது இடங்களில் வரம்பு மீறி நடந்து கொள்பவர்களுக்கு அரசும், போலீசாரும் உரிய கட்டுப்பாடுகளை விதிக்க

வேண்டும். இல்லையெனில், ஏற்கனவே "டிவி’, சினிமா, ஆபாச புத்தகங்களால் பாதிக்கப்பட்டுள்ள இளைய தலைமுறையினர் தடம்மாறிப் போக வாய்ப்பு ஏற்பட்டு விடும்.

source:dinamalar

பின்னூட்டமொன்றை இடுக

Filed under Uncategorized

பரவி வரும், “கட்டிப்பிடி’ கலாசாரம்

தமிழகத்தில் பொது இடங்களில் பரவி வரும், "கட்டிப்பிடி’ கலாசாரம் இளைய சமுதாயத்தை பாழாக்கி வருகிறது.

கலாசாரத்தில் தோய்ந்த நம் பண்பாட்டை சீரழிக்கும் விதமாக, சென்னை போன்ற பெரு நகரங்களில் பெருகி வரும் பைக் காதல், பீச், பார்க் மறைவிட காதல்களால், மாணவ, மாணவியர் தவறான பாதைக்கு செல்லக் கூடிய அபாயகரமான சூழல் ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக சென்னை, மதுரை, கோவை, திருச்சி போன்ற பெருநகரங்களில் இது போன்ற நிலை அதிகம் இருப்பதால், எங்கே தங்கள் மகனும், மகளும் இதே போன்றதொரு நிலைக்கு சென்று விடுவார்களோ என பெற்றோர் அஞ்சுகின்றனர். சென்னையைப் பொறுத்தவரை, சாலைகளில் செல்லும் போது, சிலர் துப்பட்டாவால் முகம் முழுவதையும் மூடிக் கொண்டும், சிலர் ஹெல்மட் அணிந்து முகத்தை மறைத்துக் கொண்டும், சிலர் வெளிப்படையாகவும், முன்னே ஓட்டிச் செல்லும் இளைஞரை இறுக்கி அணைத்தபடியும், அசிங்கமாக சேட்டைகள் செய்தபடியும் செல்கின்றனர்.

இதே போல், தினமும், சென்னை மெரீனா, பெசன்ட் நகர் பீச்களில், இரவு வேளைகளில் மட்டுமல்லாது, மாலை வேளைகளிலும், பகலிலும் மொட்டை வெயிலில் அமர்ந்து கொண்டு பலர், காதலர்கள் என்ற போர்வையில், பட்டவர்த்தனமாக, மற்றவர்களின் பார்வையில் படும்படி ஆபாச செய்கைகளில் ஈடுபடுவதை காணலாம். போதா குறைக்கும், இது போன்ற (கள்ள)காதலர்களின் அட்டகாசம் உயிரியல் பூங்கா, சிறுவர் பூங்கா போன்ற பூங்காக்கள், நினைவு மண்டபங்கள், ஆள் நடமாட்டம் அதிகம் இல்லாத இடங்கள், புதர் மறைவுகளிலும் அதிகம் காணப்படுகிறது.

இது போன்ற அசிங்கங்களில் ஈடுபடுவோருக்கு தங்களைப் பற்றியும் கவலை இல்லை. தங்கள் பெற்றோர் மற்றும் உறவினர்களைப் பற்றியும் கவலை இல்லை. இது போன்ற அசிங்கங்களை போலீசாரும் அவ்வளவாக கண்டு கொள்வதில்லை. மற்றவர்கள் தங்களைப் பார்க்கும் போது, அவர்கள் மனதில் தேவையற்ற சஞ்சலம் ஏற்படுமே என்பதையும் அவர்கள் கண்டு கொள்ளவில்லை. இதனால், இளைய சமுதாயத்தினர் மன ரீதியாக பாதிக்கப்படுகின்றனர். குறிப்பாக மாணவ, மாணவர்கள் மத்தியில் இது போன்ற நிகழ்வுகள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இதை பார்க்கும் அவர்கள், தாங்களும் இதே போன்று நடந்து கொள்ள வேண்டும் என்ற ஆவலில் தவறு செய்ய நேரிடுகிறது. இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு, இனியேனும் பொது இடங்களில் வரம்பு மீறி நடந்து கொள்பவர்களுக்கு அரசும், போலீசாரும் உரிய கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும். இல்லையெனில், ஏற்கனவே "டிவி’, சினிமா, ஆபாச புத்தகங்களால் பாதிக்கப்பட்டுள்ள இளைய தலைமுறையினர் தடம்மாறிப் போக வாய்ப்பு ஏற்பட்டு விடும்.

source:dinamalar

1 பின்னூட்டம்

Filed under Uncategorized

சச்சின் இரட்டை சதம் அடித்ததும், ஆஸ்திரேல ியர்களின் வெறியாட்டம் தொடங்கியது

இந்தியாவில் ஆஸ்திரேலியர் வெறியாட்டம்; கிரிக்கெட் ‌தோல்வியால் அநாகரிகத்தின் உச்சத்தைத் தொட்டனர்
large_107054.jpg

புதுடில்லி: இந்தியாவுக்கு எதிரான கிரிக்கெட் டெஸ்ட் தொடரில் தோல்‌வி அடைந்ததைப் பொறுத்துக் கொள்ள முடியாத ஆஸ்திரேலியர்கள், புதுடில்லியில் வெறியாட்ட்டத்தில் ஈடுபட்டனர். விளையாட்டில் வெற்றி தோல்வி சகஜம் என்ற உண்மையைப் புரிந்து கொள்ளாமல், இத்தகைய அநாகரிகமான செயல்களில் அவர்கள் ஈடுபட்டனர்.

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிக்காக வந்திருந்த ஆஸ்திரேலிய விளையாட்டு வீரர்கள், வீரர்களுக்கான கிராமத்தில் தங்கள் வெறியாட்டத்தை அரங்கேற்றினர். காமன்வெல்த் போட்டிகளில் அதிகப் பட்ச பதக்கங்களைக் குவித்திருந்தபோதும், கிரிக்கெட்டில் கிடைத்த தோல்வியை அவர்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

விளையாட்டு கிராமத்தில் இருந்த மின்சார சாதனங்களையும் மேஜை நாற்காலிகளையும் அவர்கள் போட்டு உடைத்தனர். இந்தியாவின் வெற்றிக்கு வழி வகுத்த சாதனை வீரர் சச்சின் டெண்டுல்கரை வாய்க்கு வந்தபடி திட்டித் தீர்த்தனர். அவர்கள் தங்கி இருந்த 8வது மாடியிலிருந்து ஒரு வாஷிங் மிஷினைத் தூக்கி எறிந்தனர்.

செவ்வாய் கிழமையன்று சச்சின் இரட்டை சதம் அடித்ததும், ஆஸ்திரேலியர்களின் வெறியாட்டம் தொடங்கியது. அங்கு இருந்த இந்திய ஊழியர்கள் அவர்களைச் சமாதானப்படுத்த முயன்றனர். டில்லி போலீசாருக்கு இது குறித்து புகார் தரப்பட்டும், இந்த சம்பவங்கள் ஆஸ்திரேலியாவுடன் அரசு ரீதியாக மோதலை ஏற்படுத்தும் என்று கருதி, அந்த புகாருக்கு முக்கியத்துவம் தரவில்லை. இது குறித்து போலீசார் கூறுகையில், விளையாட்டு கிராமத்துக்குப் பொறுப்பான குழுவினரிடமிருந்து புகார் வராததால் வழக்கு பதிவு செய்வில்லை என்றனர். இந்த சம்பவம் குறித்து விளையாட்டு ஏற்பாட்டுக்குழுவினர் கூறுகையில், இந்த சம்பவம் குறித்து ஆஸ்திரேலிய விளையாட்டுக்குழுத் தலைவருடன் விவாதித்த பின்னர், புகார் தருவதில்லை என முடிவு செய்தோம் என்றனர். விளையாட்டு வீரர்கள் இந்த செயலுக்காக மன்னிப்பு தெரிவித்தனரா என்று நிருபர்கள் கேட்டதற்கு, அவர்கள் கருத்து கூற மறுத்து விட்டனர்

source:dinamalar

பின்னூட்டமொன்றை இடுக

Filed under Uncategorized

“ஜப்பானுக்கு’ நுரையீரல்; “இந்தியாவுக்கு’ இ தயம், கல்லீரல்

"ஜப்பானுக்கு’ நுரையீரல்; "இந்தியாவுக்கு’ இதயம், கல்லீரல் : உடல் உறுப்பு தான பரிமாற்றத்தால் பரபரப்பு

large_105908.jpg

விபத்தில் மூளைச்சாவு ஏற்பட்ட ஆந்திர வாலிபரின் நுரையீரல், ஜப்பான் நாட்டு தொழிலதிபருக்கும், இதயம் மும்பை நகை வியாபாரிக்கும், கல்லீரல் சென்னை கார்பென்டருக்கும் நேற்று "ஆபரேஷன்’ மூலமாக வெற்றிகரமாக பொருத்தப்பட்டது. இந்த உடல் உறுப்புகளின் அதிவேக பரிமாற்றத்தினால் சென்னை சாலைகளில் பெரும்பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலை, அண்ணா நகர் இரண்டாவது பிரதான சாலைகள் நேற்று காலையில் மிகுந்த பரபரப்பாக இருந்தது. போக்குவரத்து போலீசாரும் தானியங்கி சிக்னல்களை நிறுத்தி வைத்து விட்டு, வழக்கத்திற்கு மாறாக பதட்டத்துடன் போக்குவரத்தை சீரமைத்து கொண்டிருந்தனர். அடுத்த சில நிமிடங்களில் ஒரு போலீஸ் ஜீப் அனைத்து சிக்னல்களையும் வேகமாக கடந்து சென்றது. அதை பின் தொடர்ந்து கறுப்பு நிற "ஸ்கார்பியோ’ கார் மற்றும் ஆம்புலன்ஸ் வாகனம் மின்னல் வேகத்தில் சென்றது.வேடிக்கை பார்த்த பொதுமக்கள், ஆர்வமாக போக்குவரத்து போலீசாரிடம் விசாரித்தனர். உடல் உறுப்புகளை மருத்துவமனைக்கு எடுத்து செல்கின்றனர் என அவர்கள் கூறினர்.

அதன் பிறகு விசாரித்த போது கிடைத்த விவரங்கள் வருமாறு:ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர் காடி தமோதி (20). சென்னையில் பணிபுரிந்த இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு ரயில் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார். அவரை சென்னை அரசு பொதுமருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். சுயநினைவை இழந்திருந்த காடி தமோதியை டாக்டர்கள் குழு சோதித்த போது, அவருக்கு மூளைச்சாவு (பிரைன் டெட்) ஏற்பட்டது தெரிந்தது. இதுகுறித்து அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதிர்ச்சியடைந்த அவர்கள் கண்ணீர் விட்டு கதறினர். தங்களை தேற்றிக்கொண்டு, பெருந்தன்மையுடன் காடி தமோதி உடல் உறுப்புகளை தானமாக கொடுக்க முன்வந்தனர். உடல் உறுப்பு தானம் செய்பவர்கள், அதை பெறப்போகும் நபர்களின் விவரங்களை சேகரிக்க, அரசால் நியமிக்கப்பட்டுள்ள டாக்டர் அமலோர் பவநாதன் கவனத்திற்கு இது கொண்டு செல்லப்பட்டது. இதயம் மற்றும் நுரையீரல் பாதிக்கப்பட்டு, தனியார் மருத்துவமனையில் உயிருக்கு போராடும் இருவர் அந்த உறுப்புகளை தானமாக பெற தகுதியுடையவர்கள் என தெரிந்தது.காடி தமோதியின் உடல் உறுப்புகளை அவர்களுக்கு கொடுக்க ஒப்புதல் பெறப்பட்டது. நேற்று, காடி தமோதியின் உடல் உறுப்புகளை ஆபரேஷன் செய்து அகற்றுவதற்கு திட்டமிடப்பட்டது. குறித்த நேரத்திற்குள் இதயம் மற்றும் நுரையீரலை பாதிக்கப்பட்டவர்கள் உடலில் பொருத்த வேண்டும் என்பதால், சென்னை போக்குவரத்து போலீசாரின் உதவி கேட்கப்பட்டது. அதன்படி முகப்பேர், பிராண்டியர் லைப் லைன் மருத்துவமனை டாக்டர்கள் குழு, நேற்று அதிகாலை 4 மணிக்கு சென்னை அரசு பொது மருத்துவமனை வந்தது. பூக்கடை போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் மற்றும் போலீசார் ஜீப்பில் தயாராக நின்றிருந்தனர்.உடல் உறுப்புகளை எடுத்து செல்ல "ஏசி’ வசதியுள்ள "ஸ்கார்பியோ’ கார் மற்றும் ஆம்புலன்ஸ் வாகனமும் அங்கு எடுத்து வரப்பட்டது.

காடி தமோதி உடலில் ஆபரேஷனை துவக்கிய டாக்டர்கள் சரியாக காலை 10:08 மணிக்கு இதயம் மற்றும் நுரையீரல்களை பிரித்தெடுத்து பெட்டியில் பத்திரப்படுத்தி வைத்தனர். மருத்துவமனையில் இருந்து பெட்டியுடன் வெளியேறிய டாக்டர் குழு "ஸ்கார்பியோ’ காரில் ஏறியது. சரியாக 10:10 மணிக்கு அந்த வாகனங்கள் புறப்பட்டன. போக்குவரத்து போலீஸ் "ஜீப்’ முன் செல்ல அதை தொடர்ந்து "ஸ்கார்பியோ’ கார் மற்றும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் வேகமாக சென்றது.பூந்தமல்லி நெடுஞ்சாலை வழியாக சென்ற அந்த வாகனங்கள் அடுத்த சில நிமிடங்களில் அண்ணா "ஆர்ச்’ சந்திப்பை அடைந்தது. அங்கிருந்து வலதுபுறம் திரும்பி அண்ணா நகர் ரவுண்டானா நோக்கி விரைந்தது. அங்கிருந்து இடதுபுறம் திரும்பி அண்ணா நகர், 12வது அவென்யூ சாலை வழியாக திருமங்கலம் நூறடி சாலையை அடைந்தது. அந்த சாலையில் ஓரிரு வினாடி பயணித்து அம்பத்தூர் – திருமங்கலம் சாலை வழியாக முகப்பேர் பிராண்டியர் லைப் லைன் மருத்துவமனையை 10:22 மணிக்கு அடைந்தது.

சரியாக 12 கி.மீ., தூரம் பயணித்த இதயம் மற்றும் நுரையீரல் "ஆபரேஷன்’ தியேட்டருக்கு எடுத்து செல்லப்பட்டது. தயாராக இருந்த மருத்துவமனையின் தலைவர் செரியன் தலைமையிலான டாக்டர்கள் குழுவினர் ஆபரேஷனை துவக்கினர்.நுரையீரல்கள், ஜப்பான் நாட்டை சேர்ந்த கட்டட தொழிலதிபர் சோதி சகேதா (67), இதயம், மும்பையை சேர்ந்த நகை விற்பனையாளர் வினோத் ஜெயின் (42) ஆகியோருக்கு வெற்றிகரமாக 6 மணி நேரத்தில் பொருத்தப்பட்டது. இதேபோல காடி தமோதியின் கல்லீரல் அகற்றப்பட்டு ஆம்புலன்ஸ் மூலம் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனை எடுத்து செல்லப்பட்டது. அங்கு உயிருக்கு போராடிய, சென்னை மாதவரத்தை சேர்ந்த விஜயராகவன் (50) என்ற கார்பென்டருக்கு பொருத்தப்பட்டது. ஸ்டான்லி மருத்துவமனை கல்லீரல், குடல் சார்ந்த அறுவை சிகிச்சை பிரிவு தலைவர் டாக்டர் சுரேந்திரா தலைமையிலான டாக்டர்கள் குழுவினர் இந்த ஆபரேஷனை 10 மணி நேரம் மேற்கொண்டனர்.

இது குறித்து பிராண்டியர் லைப் லைன் மருத்துவமனை அதிகாரி ஒருவர் கூறியதாவது: நாட்டில் ஏராளமானவர்களுக்கு நுரையீரல் பாதிப்பு ஏற்படுகிறது. ஆனால் நுரையீரல் தொடர்பான ஆபரேஷன்கள் நாட்டில் அதிகம் செய்வதில்லை. கடந்த 1997ம் ஆண்டு டாக்டர் செரியன் இந்த ஆபரேஷனை முதல் முறையாக செய்துள்ளார். தற்போது மருத்துவத்துறையில் நவீன வளர்ச்சிகள் ஏற்பட்டுள்ள நிலையில், நுரையீரல் ஆபரேஷன் செய்யப்படுகிறது.நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டவர்கள் யாரும் இந்தியாவில் இருந்து பதிவு செய்யாததால் ஜப்பான் நாட்டை சேர்ந்தவருக்கு அவை பொருத்தப்பட்டுள்ளது. அவர் கடந்த 25 நாட்களாக எங்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ஒருபக்க நுரையீரல் மாற்று ஆபரேஷனுக்கு ஐந்து லட்ச ரூபாய் வரையும், இரண்டு பக்க நுரையீரல் மாற்று ஆபரேஷனுக்கு எட்டு லட்ச ரூபாய் வரையும் செலவாகும். இதயம் மாற்று ஆபரேஷனுக்கு ஐந்து முதல் எட்டு லட்ச ரூபாய் வரை செலவாகும். இந்த அறுவை சிகிச்சைகள் மேற்கொண்டவர்கள் மூன்று நாட்கள் தீவிர சிகிச்சை பிரிவிலும், அதன் பிறகு 15 நாட்கள் வரை சாதாரண வார்டிலும் தங்கி சிகிச்சை பெற வேண்டும். அவர்களுக்கு முதலில் நாள்தோறும், அதன் பிறகு 3 நாட்கள், 5 நாட்கள், வாரத்திற்கு ஒரு முறை, மாதத்திற்கு ஒரு முறை என மருத்துவ சோதனை செய்யப்படும். உலகத்தில் மூன்று முறை ஒரே நேரத்தில் இரண்டு உடல் உறுப்பு மாற்று ஆபரேஷன்கள் செய்யப்பட்டுள்ளன. ஒரே நேரத்தில் தற்போது நான்காவது முறையாக சென்னையில் இந்த ஆபரேஷன் செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு அதிகாரி கூறினார்.

இதயம் மற்றும் நுரையீரலை வேகமாக எடுத்து சென்ற பிராண்டியர் லைப் லைன் மருத்துவமனையின் டிரைவர்களான, வில்லிவாக்கம் சீனிவாசன் (33), நாகர்கோவில் கிருஷ்ணன் (32) கூறியதாவது:உடல் உறுப்புகளை எடுத்து செல்வதற்காக அதிகாலை 4 மணி முதல் அரசு மருத்துவமனையில் காத்திருந்தோம். எந்த நேரத்திலும் உடல் உறுப்புகள் வாகனத்திற்கு எடுத்து வரப்படலாம் என்பதால் உணவு சாப்பிடவும், சிறுநீர் கழிக்கவும் செல்ல முடியவில்லை. போக்குவரத்து போலீசார் சிக்னல்களை நிறுத்தி வைத்து இயக்கிதால் மணிக்கு 120 கி.மீ., வேகத்தில் சென்று உடல் உறுப்புகளை கொண்டு சேர்த்தோம். எங்களால் இருவர் உயிர் பிழைத்ததை நினைத்தால் மகிழ்ச்சியாக உள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.

source:dinamalar

பின்னூட்டமொன்றை இடுக

Filed under Uncategorized

இருக்கட்டும், நமக்குத்தான் `எந்திரன்` ரி லீஸ் ஆகிவிட்டதே!

தமிழ் ஈழத்தில்… மலர்ந்தது சிங்கள தேசம்! – ப.திருமாவேலன்

ப.திருமாவேலன்

மட்டக்களப்பு பன்குடா பகுதியைச் சேர்ந்த சீனித்தம்பி பத்மநாபனை, தமிழ் ஈழப்

பகுதியில் பெரும்பாலானவர்கள் அறிவார்கள். அந்தப் பகுதியில் மிக வசதியான குடும்பத்துக்காரர். தன்னுடைய செல்வத்தை எல்லாம் போராளிகளுக்கு உணவு தயாரித்துக் கொடுப்பதற்காகவே செலவு செய்தார். காட்டுப் பகுதியில் பதுங்கி இருக்கும் புலிகளுக்கு சாப்பாடு செய்து அனுப்பிவைப்பதுதான் அவரது வேலையாக இருந்தது. இந்திய ராணுவம் அங்கு இருந்தபோதும், அதே காரியத்தை சீனித்தம்பி செய்தார். அதைக் கண்டுபிடித்த ராணுவம், காலில் சுட்டு அவரைக் கைது செய்தது. ராணுவ முகாமில் சிறைவைக்கப்பட்ட நிலையில், அவர் இறந்துபோனார். உடலைக்கூட, அவரது குடும்பத்தினருக்குத் தர வில்லை!

அப்பாவுக்கு ஏற்பட்ட நிலையை, அவரது மகள் ஷகிலா உணர்ந்தார். உடனே, அவரும் நாட்டுக்காகப் போராட புலிகள் அமைப்புக்குள் இணைந்தார். புலிகளின் மிகப் பெரிய வெற்றியாகச் சொல்லப்படும் ஆனையிறவு சமரில் சித்திரா என்று பெயரிடப்பட்டு, இவர் களத்தில் இறங்கினார். அதில் சித்திராவுக்கு விலா எலும்பில் பலத்த காயம் ஏற்பட்டது. அதன் பிறகு, அவர் புலிகள் அமைப்பில் இருந்து விலகினார். அதே அமைப்பைச் சேந்த உருத்தி என்பவரைக் காதலித்துத் திருமணம் செய்துகொண்டார். இருவருக்கும் இரண்டு பிள்ளைகள் பிறந்தனர். 2007 ஜூலையில் மேஜர் உருத்தி, சிங்கள ராணுவத்தால் கொலை செய்யப்பட்டார். அப்பா, கணவர் இருவரையும் நாட்டுக்காகக் கொடுத்த அந்தப் பெண், மாவீரர் குடும்பங்களுக்கு மாதம்தோறும் தரப்படும் தொகையை மட்டும் வாங்கி, தானும் உண்டு தனது குழந்தைகளையும் காப்பாற்றி வந்தார். அவரது உடலில் ஏற்பட்ட பாதிப்பு காலப்போக்கில் அதிகமாகி, அறுவை சிகிச்சை செய்தால் மட்டுமே பிழைக்க முடியும் என்று சொன்னார்கள். அதற்கான செலவு ` 38 ஆயிரம் என்றும் சொல்லப்பட்டது.

அதற்காகப் பல இடங்களில் அலைந்தார். வெளிநாட்டில் இருக்கும் தனது உறவினர் மூலமாக அதை வாங்க முயற்சித்தார். அங்கே இருந்து பணத்தை அனுப்பிவைக்கும் சிரமத்தால், தொகை வந்து சேரவில்லை. சிகிச்சைக்கு வழி இல்லாமல், கடந்த 17-ம் தேதி சித்திரா செத்துப்போனார். அவரது இரண்டு பிள்ளைகளும் அநாதையாக நிற்கின்றன. இது தனிப்பட்ட ஒரு சித்திராவின் கதை அல்ல; ஓர் இனத்தின் கதை. ஒவ்வொரு குடும்பத்திலும் உழைக்க முடிந்தவர் அனைவரையும் போர் தின்று துப்ப… மற்றவர்கள் பிழைக்க வழி தெரியாமல் கிடப்பதுதான் இன்றைய ஈழத் தமிழனின் நிலை!

சொந்த தேசத்து மக்களை இப்படிச் சூன்யத்தில் தள்ளிவிட்ட இலங்கை அரசாங்கம், மகிழ்ச்சியாக இருக்கிறது. `ஓர் இனத்தை அழிக்க வேண்டுமானால், அம்மக்களைக் கொல், அவர்கள் வாழும் மண்ணைக் கைப்பற்று` என்பதுதான் அரசியல் பாசிசத்தின் அரிச்சுவடி. இன்றைய ஈழத்தில் அதுதான் நடந்தது. இன்னும் ஒரே ஆண்டில், `மலர்ந்தது சிங்கள தேசம்` என்ற அறிவிப்பை அவர்கள் செய்ய இருக்கிறார்கள். பயங்கவாதத்துக்கு எதிரான போர் என்று சொல்லி, விடுதலைப் புலிகள் அமைப்பின் மீது போர் தொடுக்கப்பட்டது. அந்த அமைப்பை முழுமையாக ஒழித்துவிட்டோம் என்று கடந்த ஆண்டு மே மாதம் அறிவித்தார்கள். அதற்குப் பிறகாவது வடக்கு, கிழக்கு, யாழ்ப்பாணம் பகுதி வாழ் தமிழ் மக்களை நிம்மதியாக வைத்திருக்கலாம். ஆனால், அதைச் செய்யவில்லை. அதாவது, அங்கே நடந்துகொண்டு இருப்பது பயங்கரவாதத்துக்கு எதிரான போர் அல்ல; ஓர் இனத்துக்கு எதிரான போர் என்பதால்தான், ஈழத் தமிழர்களை இன்னும் சிறுகச் சிறுகச் சித்ரவதை செய்து கொன்று தீர்த்து வருகிறார்கள் என்றே அங்கே இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. "தமிழர்கள் அதிகம் வாழும் பகுதிகளில், 55 சதவிகிதத்துக்கு மேல் சிங்களவர்களைக் குடியமர்த்த வேண்டும். அடுத்த தேர்தலில் இந்தப் பகுதிகளில் சிங்கள எம்.பி-க்களே அதிகமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு நாடாளுமன்றத்துக்கு அனுப்பிவைக்க வேண்டும்" என்ற முடிவோடு, இந்தக் காரியங்கள் செய்யப்படுகின்றன.

"வடக்கு மாகாணத்தில் சிங்களவர்கள்தான் முன்னர் பெருமளவில் வாழ்ந்தார்கள். பின்னர், அவர் கள் தமிழர்களால் விரட்டி அடிக்கப்பட்டார்கள். சிங்களவர் விரும்பினால், மீண்டும் வடக்குப் பகுதிக் குப் போய் வாழலாம்" என்று பகிரங்கமாக அறிவித்து உள்ளார் ஜனாதிபதி மகிந்தா ராஜபக்ஷே. "வட கிழக்கின் பாதுகாப்பு கருதி, அங்கு நிரந்தர ராணுவ முகாம்களும் படைத் தளங்களும் அமைக்கப்படும். அதில் பணிபுரியும் ராணுவத்தினர் தங்கி வாழ, அந்தப் பிரதேசத்தில் ராணுவக் குடியிருப்புகள் அமைக்கப்படும்" என்று ராணுவத் தளபதி லெப்.ஜெனரல் ஜெகத் ஜெயசூர்ய அறிவித்தார். இப்போது வடக்கில் மட்டும் ஒரு லட்சம் ராணுவ வீரர்கள் உள்ளனர். அதையட்டி, ஒரு லட்சம் குடியிருப்புகள் கட்டப்பட உள்ளன. இவர்கள் அனைவருக்கும் போர் வெற்றிக்குத் துணை புரிந்ததற்காக நிலங்கள் கொடுக் கப்பட உள்ளன. பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் என்ற பெயரால், சிங்கள நிறுவனங்களுக்கு பல நூறு ஏக்கர் நிலங்கள் தாரை வார்க்கப்படுகின்றன. கடலோரப் பகுதி அனைத்தும் சுற்றுலாத்தலங்களாக மாற்றப்பட்டு, பீச் ரிசார்ட்ஸ் அமைக்க சிங்கள நிறுவனங்கள் உள்ளே நுழைந்துவிட்டன. மாவட்ட நிர்வாகத்தைக் கவனிக்க, அனைத்து இடங்களிலும் சிங்களவர்கள் நியமிக்கப்பட்டு உள்ளார்கள். ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரிகள் இதை மேற்பார்வை செய்கிறார்கள். மாவட்டக் காணி அதிகாரிகளாக நியமிக்கப்படும் சிங்கள அலுவலர்கள், ஏதாவது ஒரு திட்டத்தின் பெயரை எழுதி, நிலங்களைத் தாரை வார்க்கும் வேலையை நித்தமும் பார்த்து வருகிறார்கள். இன்னும் ஆறு மாதங்களில் தமிழர் நிலங்கள் அனைத் தும் கபளீகரம் செய்யப்பட்டு இருக்கும். இங்கு ஒரு சென்ட் நிலத்துக்கு போலிப் பத்திரம் வைத்திருந்தால், 20 ஆண்டுகளுக்கு வழக்கு நடக்கும். ஆனால், அங்கு ஓர் இனம் வாழ்ந்த நிலப் பகுதியே வேறு பெயர்களுக்கு பட்டப் பகலில் பட்டா மாற்றம் செய்யப்பட்டு வருகிறது!

60 ஆண்டுகளுக்கு முன்னால் திரிகோணமலையை தமிழர் தாயகத்தின் தலைநகர் என்றே பிரகடனம் செய்தார்கள். இதைத் தொடர்ந்தே, அந்தப் பகுதியில் சிங்களவர்களை அதிகமாகக் குடியேற்ற பல்வேறு திட்டங்களைப் போட்டார்கள். 1.3 சதவிகிதமாக இருந்த சிங்கள மக்கள்தொகை, கடந்த ஆண்டு 30 சதவிகிதம் ஆனது. 81.76 சதவிகிதமாக இருந்த தமிழர் தொகை, 23.5 சதவிகிதமாக சுருங்கிப்போனது. இன்று திரிகோணமலையை, தமிழர் பிரதேசமாகவே சொல்ல முடியாது. இதே நிலைமையை மட்டக்களப்பும் அம்பாறையும் நெருங்கிக்கொண்டு இருக்கின்றன. முல்லைத் தீவும் கிளிநொச்சியும் அதே கதியை அடையப்போகின்றன. தமிழர்களின் வீடுகள் இருந்த இடங்கள் இடிக்கப்பட்டு நிலங்களாகவும், நிலமாக இருந்த பகுதிகள் வீடு கட்டும் இடங்களாகவும் வழங்கப்படுகின்றன. தன்னுடைய இடம், வீட்டைச் சட்டரீதியாக யாரும் இனி திரும்பப் பெறுவதற்கான வாய்ப்பே இல்லை.

"இலங்கைத் தீவின் எந்த இடத்திலும் தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாழக் கூடாது என்பதற்கு ஏற்ப மகிந்தா அரசு மறைமுகத் திட்டத்தை அமல்படுத்தி வருகிறது. தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாழும் பிரதேசங்கள் இருந்தால், தமிழ் மக்கள் தமது பாரம்பரியத் தாயகம், அதற்கான சுயநிர்ணய உரிமை, தன்னாட்சி கோருவார்கள். அதனை இல்லாமல் செய்வதற்கான நடவடிக்கையே இது!" என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவர் இரா.சம்பந்தம் சொல்கிறார்.

இதைத் தமிழர்கள் மட்டும் சொல்லவில்லை. அந்த நாட்டின் மிக முக்கியப் பத்திரிகையான சண்டே லீடர் (கொலை செய்யப்பட்ட லசந்தாவின் பத்திரிகை!) `மகிந்தாவின் சிங்களக் குடியேற்றம்` என்ற தலைப்பில் கட்டுரை வெளியிட்டது. `தமிழர்கள் அதிகம் வாழும் முறிகண்டியில் 12 ஆயிரம் சிங்களவர்கள் குடியேற்றப்பட்டு இருக்கிறார்கள். இது மீண்டும் ஓர் இனக் கலவரத்தை ஏற்படுத்துவதற்கான திட்டம்` என்று சொல்கிறது அந்தப் பத்திரிகை. இந்த முறிகண்டி பிள்ளையார் கோயிலுக்கு அருகில் வேண்டும் என்றே புத்த விகார் நிறுவப்பட்டது. நில உரிமையாளர் புத்த விகார் அமைக்கக் கூடாது என்று நீதிமன்றம் போய் தடை வாங்கி இருக்கிறார். ஆனால், வட கிழக்கு மாகாணத்தின் அனைத்துப் பகுதிகளிலும் புத்த விகார்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. `யாழ்ப்பாணத்தில் அரச மரங்கள் இருக்கும் இடங்களில் எல்லாம் புத்தர் சிலைகளை வைக்கிறார்கள்` என்று சொல்கிறார் ஒரு பத்திரிகையாளர்.

மன அழுத்தம் போக்கவும் நம்பிக்கையை ஏற்படுத்தவும், புத்த பிட்சுக்கள், தமிழர் பகுதியில் மனநல வகுப்புகளை நடத்திக்கொண்டு இருக்கிறார்கள். `இது தமிழர்களை மதம் மாற்றும் முயற்சி` என்று இந்து அமைப்புகள் குற்றம் சாட்டுகின்றன. பௌத்தர் கள் கொண்டாடும் பொசன் பண்டிகை, வெசாக் பண்டிகைக் கொண்டாட்டங்கள்தான் தமிழர் பகுதிகளில் அதிகமாக நடக்கின்றன. கிளி நொச்சியில் நடந்த பொசன் பண்டிகையை ராணுவத் தளபதி ஊறுஊ ராஜகுரு தலைமை தாங்கி நடத்தினார்!

சகல இடங்களிலும் உயர் அதிகாரிகளாக சிங்களர்கள் நியமிக்கப்படுகிறார்கள் என்பதைவிட, பள்ளிக்கூடங்களில் சிங்கள ஆசிரியர்களே அதிகமாக வேலைக்கு அமர்த்தப்படுகிறார்கள். இவர்களிடம் பேசுவதற்காக சிங்களம் படித்தாக வேண்டிய நெருக் கடி அனைவருக்கும் ஏற்பட்டுள்ளது. காலப்போக்கில் சிங்கள வழிக் கல்வியைக் கொண்டுவரவும், தமிழ்க் கல்வியை முற்றிலுமாகத் தடைபோடுவதற்கும் இது வழிவகுக்கும். முல்லைத் தீவு, அளம்பில், செம்மலை, வட்டுக்கால், முள்ளிவாய்க்கால், மாத்தளம், சாலை ஆகிய தமிழ்ப் பகுதிகள் அனைத்திலும் சிங்கள மீனவர்களே மீன் பிடிக்கிறார்கள். தமிழ் மீனவர்களுக் குப் படகும் இல்லை. வலையும் இல்லை. இருந்தும், மீன் பிடிக்கச் சென்றால், அவர்களைக் கடல்பகுதிக்கு ராணுவம் விடுவது இல்லை. இப்படி தமிழன் மொத்த மாக தண்ணீர் தேசத்தில் தத்தளிக்கிறான். "சண்டை நேரத்துல செத்திருந்தா, நிம்மதியாப் போயிருக்கும்!" என்றே ஒவ்வொரு தமிழனும் ஒப்பாரிவைக்கிறான். சமாதியில் போய் உட்கார்ந்துகொண்டு சாவை அழைப்பதுபோலவே அவர்களது வாழ்க்கை.

இருக்கட்டும், நமக்குத்தான் `எந்திரன்` ரிலீஸ் ஆகிவிட்டதே!

நன்றி : ஆனந்த விகடன்

பின்னூட்டமொன்றை இடுக

Filed under Uncategorized

கனடாவில் சூடுபிடிக்கிறது பர்தா விவகாரம்: கற்பழிக்கப்பட்ட

கனடாவில் சூடுபிடிக்கிறது பர்தா விவகாரம் – இன்று கனடா நீதிமன்றம் வழங்கவுள்ள தீர்ப்புக்கு பலத்த எதிர்பார்ப்பு

3660628_200_200.jpg
கடந்த சில மாதங்களாகவே முஸ்லிம் பெண்கள் கண்களை மட்டும் வெளிக்காட்டும் மத பாரம்பரிய ஆடையான பர்தாவை அணிவதற்கு ஐரோப்பிய நாடுகள் கடும் எதிர்ப்பைக் காட்டத் தொடங்கியுள்ளன.

கடந்த சில மாதங்களுக்கு முனனர் பிரான்ஸ் நாட்டில் பொது இடங்களில் பர்தா அணிவது கூடாது என்பது சட்டமாக்கப்பட்டது. சட்டத்தை மீறி பொது இடங்களில் பர்தா அணிந்தால் $200 அபராதம் கட்ட வேண்டும். மேலும் பெண்களை பர்தா அணியச் சொல்லி வற்புறுத்துபவர்களுக்கும் 1 வருட சிறை தண்டனை என்ற சட்டம் அமலாகியுள்ளது.

இதனால் இஸ்லாமிய பயங்கரவாதிகளின் தாக்குதல்களுக்கு பிரான்ஸ் உள்ளாகி வருவதாக உளவுத்துறை அறிவிப்பும் வெளியிடப்பட்டது. பிரான்ஸை தொடர்ந்து பிரிட்டனிலும் பர்தா விவகாரம் சில மாதங்களாக சர்ச்சைக்குள்ளாகி வருகிறது.

பிரிட்டனில் உள்ள முஸ்லிம் பெண்களில் 70 விழுக்காட்டிர் பர்தா அணிவதை விரும்பவில்லை என்ற ஆய்வு முடிவுகள் வெளியிடப்பட்டு பிரிட்டன் நாடாளுமன்றத்திலும் இது குறித்து விவாதிக்கப்பட்டது. இஸ்லாமிய சமய அமைப்புக்கள சில கடுமையான கண்டனங்களை தெரிவித்ததால் அரசு பர்தாவிற்கு தடை இல்லை என அறிவித்தது.

இருப்பினும் பிரிட்டனில் உள்ள சில கல்வி நிறுவனங்கள் தங்கள் வளாகத்திற்குள் முகத்தை மூடும் படியான எந்த ஆடையையும் அணியக் கூடாது என உத்திரவிட்டுள்ளன.

கடந்த வாரம் பிரிட்டன் நீதிமன்றத்தில் பர்தா அணிந்து கொண்டு சாட்சியமளிக்க வந்த பெண்ணிடம் நீதிபதிகள் பர்தா அணிந்துகொண்டு சாட்சியம் கூறினால் முக பாவணைகளை பார்க்க முடியாது எனவே அவற்றை நீக்கி விட்டு சாட்சியமளித்தால் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும் என கண்டிப்புடன் கூறினர்.

கனடாவிலும் 32 வயது பெண்ணொருவர் தன் உறவினர்களால் கற்பழிக்கப்பட்டதாக பர்தா அணிந்து கொண்டு சாட்சியம் கூறியுள்ளார். ஆண்ட்டரியோ நீதிமன்றம் இந்த வழக்கு குறித்த விசாரணையை நடத்திய போது அந்த பெண்ணை பர்தாவை நீக்கி விட்டு சாட்சியமளிக்க கூறியுள்ளனர்.

தொடர்ந்து ஒவ்வொரு வழக்கிலும் இது போன்று கூறிக் கொண்டிருக்கக் முடியாது எனபதால் இதை முறைப்படுத்தும் ஆணையை ஆண்ட்டரியோ நீதிமன்றம் இன்று வழங்க உள்ளது. தீர்ப்பை அறிய அனைத்து தரப்பு மக்களும் பலத்த எதிர்பார்ப்புடன் உள்ளனர்

source:tamilcnn

பின்னூட்டமொன்றை இடுக

Filed under Uncategorized

பார்வையற்றவர் பெற்ற பிஎச்.டி டாக்டர் பட் டம்

large_105558.jpg

திருநெல்வேலி : கண்பார்வையற்றவர் கணிதம் மற்றும் புள்ளியியலில் டாக்டர் பட்டம் பெற்று சாதனை படைத்துள்ளார். நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலையில் நேற்று நடந்த பட்டமளிப்பு விழாவில் "கணிதவியல் மற்றும் புள்ளியல்’ பாடத்தில் ஆராய்ச்சி மேற்கொண்டு பிஎச்.டி.,டாக்டர் பெற்றவர் முழுவதும் கண்பார்வையற்ற சிவசக்திவேல். அனைவரது புருவங்களையும் உயர்த்தி அவர் கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரியில் இணைப்பேராசிரியராக பணியாற்றுகிறார். வழக்கமாக பார்வையற்றவர்கள் வரலாறு, தமிழ் போன்ற கலைப்பாடங்களைத்தான் தேர்ந்தெடுத்து படிப்பார்கள்.

ஆனால் கணிதம் மற்றும் புள்ளியியலில் பி.எச்டி., டாக்டர் பட்டம் பெற்ற சிவசக்திவேல் இதுகுறித்து கூறுகையில், எனக்கு சொந்த ஊர் அருகில் உள்ள ஏழுசாட்டுப்பத்தாகும். நான் கன்னியாகுமரி, அந்தோணியார் பள்ளியில் பயிலும் வரையிலும் கண்பார்வை நன்றாக இருந்தது. இருப்பினும் வகுப்பு நடக்கும்போது ஆசிரியர் எழுதிபோட்டதை கரும்பலகைக்கு அருகில் வந்து பார்த்து எழுதிவிட்டு செல்லும் நிலையில் இருந்தேன். நான் பணிபுரியும் விவேகானந்தா கல்லூரியில்தான் பி.ஏஸ்.சி.,பயின்றேன். திருச்செந்தூர் கல்லூரியில் எம்.எஸ்.சி.,யும், மதுரையில் எம்.பில் பயின்றேன். விவேகானந்தா கல்லூரியில் துணைப்பேராசிரியராக 1983ல் பணிக்கு சேர்ந்தேன். அப்போது பார்வை இருந்தது. பணியில் சேர்ந்த பிறகு முழுமையாக பிறகு அரைகுறையாக இருந்த பார்வை முழுவதுமாக பறிபோனது. இதனால் நான் நிறைய சிரமங்களை சந்தித்தேன்.

பார்வையற்றவர் வகுப்பு நடத்த முடியாது என மாணவர்கள் எழுதியதுபோலசிலர் புகார் மனுக்கள் போட்டனர். எனக்கு கண் பார்வை பறிபோனது போல வேலையும் பறிபோகும் நிலை ஏற்பட்டது.இருப்பினும் என் மீது மாணவர்கள் நம்பிக்கை வைத்திருந்தார்கள். 1995ல் கண்பார்வையற்றவர்களுக்கான பாதுகாப்பு சட்டம் வந்தது. அதன்படி எனக்கு பாதுகாப்பு கிடைத்தது. இத்தகைய காலகட்டங்கள் போராட்டம் மிகுந்தவை. பி.எச்.டி.,க்கு 2005ல் பதிவு செய்தேன். இடையில் பார்வை போனதால் வழக்கமான பார்வையற்றோர்கள் பின்பற்றும் பிரெய்லி முறையை நான் கற்றுக்கொள்ளவில்லை. எனவேயாராவது நண்பர்கள் பாடத்தை சொல்லச்சொல்ல நன்றாக கேட்டுக்கொண்டு எழுதி பழகினேன்.

வகுப்பில் மாணவர்கள் சேட்டை செய்வார்கள் என்பதெல்லாம் இல்லை. நான் பாடம் நடத்தும்போது மாணவர்கள் நன்றாக கேட்டுக்கொள்கிறார்கள். எனக்கு திருமணமாகி மனைவியும் இரண்டு மகன்களும் உள்ளனர். எனது மனைவி தங்கம், அரசு பள்ளியில் கணித ஆசிரியர் என்பதால் எனது படிப்பிற்கும் கல்லூரி பணிக்கும் உதவினார்,. மூத்த மகன் சிவசங்கர், பி.இ.,முடித்துவிட்டு பணியில் உள்ளார். இளையமகன் சிவரஞ்சன் காரியாப்பட்டி சேது பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆணுஞூடு பயில்கிறார். இப்போதும் எனக்கு உயர்கல்வி பயில உதவி புரிவது என்னிடம் முன்பு பயின்ற பழைய மாணாக்கர்கள்தான். அவர்களில் சிலர்தான்எனக்கு பயிலவும், வகுப்பு நடத்துவதற்காக குறிப்புகள் தரவும், விடைத்தாள் திருத்தவும் உதவுகிறார்கள் என்றார்.

source:dinamalar

பின்னூட்டமொன்றை இடுக

Filed under Uncategorized

இந்திய கம்ப்யூட்டர்களை சீர்குலைக்க ஸ்டக ்ஸ்நெட் வைரஸ் அனுப்பி தாக்குதல்

Tamil news paper, Tamil daily news paper, Tamil news, Tamil movie news, Tamil news paper online, political news, business news, financial news, sports news, today news, India news, world news, daily news update
புதுடெல்லி: இந்தியாவின் முக்கிய கம்ப்யூட்டர்கள் மற்றும் நெட்வொர்க்கை சீர்குலைக்கும் வகையில் ஸ்டக்ஸ்நெட் வைரஸ் அனுப்பப்பட்டதாக தகவல் வெளியாகியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உரிய நேரத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதால் பாதிப்புகள், நெட்வொர்க் அசம்பாவிதங்கள் தவிர்க்கப்பட்டன என்று தகவல் தொழில்நுட்பத்துறை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

ஸ்டக்ஸ்நெட் என்ற கம்ப்யூட்டர் வைரஸ் பல நாடுகளை மிரட்டி வருகிறது. பென் டிரைவ் மற்றும் நெட்வொர்க் மூலம் பரவும் இந்த வைரஸ், கம்ப்யூட்டர்களின் எஸ்சிஏடிஏ சிஸ்டத்தில் பாதிப்பை ஏற்படுத்தி தொழிற்சாலைகளில் முக்கிய வேலைகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். ஈரான் அணுமின்நிலையத்தை ஸ்தம்பிக்க செய்வதற்காக, இந்த ஸ்டக்ஸ்நெட் வைரஸ் மூலம் எதிரி நாடுகள் சமீபத்தில் மிகப்பெரிய தாக்குதலை நடத்தியது. இதனால் ஈரானில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கம்ப்யூட்டர்களில் ஸ்டக்ஸ்நெட் வைரஸ் புகுந்து பாதிப்பை ஏற்படுத்தியது. இதை முறியடிக்கும் பணியில் ஈரான் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

கம்ப்யூட்டர் வைரஸ் மூலமான ‘சைபர் போர்’ தொடங்கிவிட்டது. இதை உடனே கண்டுபிடிக்க வேண்டும் என்று அமெரிக்காவும் அறிக்கை விட்டது. இந்நிலையில், ஸ்டக்ஸ்நெட் வைரஸ் மூலம் இந்தியாவுக்கு, சீனா பாதிப்பை ஏற்படுத்தியதாகவும் தகவல் வெளியானது. இந்திய அரசு நிறுவனங்களின் கம்ப்யூட்டர்களை வைரஸ் பாதிப்பில் இருந்து தடுப்பதற்காக, மத்திய தகவல் தொழில்நுட்ப துறையில் கம்ப்யூட்டர் எமர்ஜென்சி ரெஸ்பான்ஸ் டீம் (சி.இ.ஆர்.டி) என்ற தனிப்பிரிவு கடந்த 2004-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. ஸ்டக்ஸ்நெட் வைரஸ் தாக்குதல் குறித்து பெட்ரோலியத்துறை அமைச்சகம், எரிசக்தி துறை அமைச்சகத்துக்கு, சி.இ.ஆர்.டி-யின் இயக்குனர் ஜெனரல் குல்சன் ராய் கடந்த ஜூலை 24-ம் தேதி கடிதம் அனுப்பி முன்னெச்சரிக்கை விடுத்தார்.

இதனால் இந்திய நிறுவனங்களில் உடனடியாக கம்ப்யூட்டர் வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள் ளப்பட்டன. இதனால் பாதிப்புகள் தவிர்க்கப்பட்டுள்ளன. இன்சாட் பாதிப்பில்லை இஸ்ரோ தகவல்.

இந்திய செயற்கைகோள் இன்சாட்&4பி, ஸ்டக்ஸ்நெட் வைரஸால் கடந்த ஜூலை 7&ம் தேதி பாதிப்படைந்ததாகவும், இதனால் அதில் உள்ள 24 டிரான்ஸ்பாண்டர்களில், 12 செயல்படவில்லை எனவும் தகவல் வெளியானது. இதை மறுத்த இஸ்ரோ அதிகாரிகள், ‘‘செயற்கைக்கோள்களில் உள்ள புரோகிராம் லாஜிக் கன்ட்ரோலர் (பிஎல்சி) மட்டும்தான் கம்ப்யூட்டர் வைரஸ் பாதிப்புக்கு உள்ளாகும். இன்சாட்-4பி செயற்கைக்கோளில் பி.எல்.சி. இல்லை. அதற்கு பதிலாக உள்நாட்டில் தயாரான சாப்ட்வேர் பயன்படுத்தப்பட்டுள்ளது. எனவே இன்சாட்-4பி செயற்கைகோளை ஸ்டக்ஸ்நெட் போன்ற வைரஸ் பாதிக்க வாய்ப்பில்லை என்றனர்.

source:dinakaran

பின்னூட்டமொன்றை இடுக

Filed under Uncategorized

சச்சின் அபாரம்:ஆஸ்., எதிரான டெஸ்ட்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சச்சின் தெண்டுல்கர் 150 ரன்கள் எடுத்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

Sachin-Tendulkar_9.jpg

இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. மொகாலியில் நடந்த முதல் டெஸ்டில், வென்ற இந்திய அணி 1 0 என தொடரில் முன்னிலையில் உள்ளது. இரு அணிகள் இடையிலான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் பெங்களூருவில் நடக்கிறது.

இரண்டாவது நாள் ஆட்டத்தில் சச்சின் 25 ரன்கள் எடுத்த நிலையில், ஹாரிட்ஸ் பந்தை பவுண்டரிக்கு விரட்டி, சர்வதேச டெஸ்ட் அரங்கில் 14 ஆயிரம் ரன்களை கடந்து புதிய உலக சாதனை படைத்தார்.

இந்நிலையில் இன்று 3வது ஆட்டத்தின் போது தொடர்ந்து ஆடிய சச்சின் அபாரமாக விளையாடி சதம் அடித்தார். அவர் தனது 49 வது சதத்தை நிறைவு செய்தார். மேலும் சச்சின் 150 ரன்கள் எடுத்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி கொண்டிருக்கிறார்.

171வது டெஸ்ட் போட்டியில் பங்கேற்றுள்ள சச்னின் தெண்டுல்கர் அபாரமாக ஆடி தனது 49 சதத்தைப் பூர்த்தி செய்துள்ளா

source:nakkeeran

பின்னூட்டமொன்றை இடுக

Filed under Uncategorized