Monthly Archives: ஒக்ரோபர் 2010

பிச்சை எடுத்து, ஏழை மாணவர்களின் கல்விக்க ு உதவி வரும் ஊனமுற்றவர்

"பிச்சை புகினும் கற்பித்தல் நன்றே’:புது மொழி படைக்கும் ஊனமுற்றவர்

large_113804.jpg

காரைக்குடி : பிச்சை எடுத்து, ஏழை மாணவர்களின் கல்விக்கு உதவி வருகிறார் காரைக்குடியை சேர்ந்த செல்வராஜ் (69). மதுரை உசிலம்பட்டியை சேர்ந்த இவர், மயிலாடுதுறை ஏ.வி.சி. கல்லூரியில் படித்து, பி.ஏ., பொருளாதார பட்டம் பெற்றவர். போலியோ தாக்கி கால்கள் செயல் இழந்ததால், கைகளில் செருப்பை மாட்டி கொண்டு, தவழ்ந்து செல்கிறார். திருமணம் செய்து கொள்ளாத இவருக்கு வேலையும் கிடைக்கவில்லை. உசிலம்பட்டியில் சைக்கிள் பழுதுபார்க்கும் கடை நடத்தி, நஷ்டமானதால், காரைக்குடிக்கு இடம் பெயர்ந்தார்.

யாசகம்: தற்போது இவரது தொழில் யாசகம் செய்வது. இது தவறு தான். ஆனால், "கற்கை நன்றே, கற்கை நன்றே. பிச்சை புகினும் கற்கை நன்றே’ என்ற நன்னெறியை தழுவி, கடந்த நான்கு ஆண்டாக, ஏழை மாணவர்களுக்கு (இலவச) கல்விச்செல்வம் கொடுத்து வருகிறார். மாலையில் டியூசன் எடுப்பது, புத்தகம், நோட்டு வாங்கி கொடுப்பது என இவரது வாழ்க்கை நகர்ந்து கொண்டிருக்கிறது.

அவர் கூறுகையில், ""காலை, மாலையில் மூன்று மணி நேரம் பிச்சை எடுப்பேன். 300 ரூபாய் வாடகையில் குடிசை பகுதியில் வசிக்கிறேன். பிச்சை எடுப்பது வருத்தம் அளித்தாலும், மாணவர்களுக்கு உதவுவது திருப்தி தருகிறது. கல்விக்காக பிச்சை எடுப்பதை கவுரமாக கருதுகிறேன்,” என்றார்

source:dinamalar

2 பின்னூட்டங்கள்

Filed under Uncategorized

சமூக வலைதளம் மூலம் சம்பாதிக்கும் சிறுவன ்

பெங்களூரு : இணையதளங்களால், மாணவர்கள் தவறான பாதைக்கு செல்வதாக புகார்கள் எழும் நிலையில், சமூக வலைதளம் வாயிலாக, 13 வயது சிறுவன் ஒரு தொகையை சம்பாதித்து வருகிறான். இணையதளங்களில், அண்மைக்காலமாக பாலியல் மற்றும் சைபர் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இதனால், பெற்றோர் தங்கள் பிள்ளைகளை இணையதளங்களை பயன்படுத்துவதற்கு அனுமதிக்க தயங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

எனினும், ஆர்குட், பேஸ்புக் மற்றும் பிளாக் உள்ளிட்ட சமூக வலைதளங்களை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, பிளாக்கில் எழுதுவதற்கு பெரும்பாலானோர் ஆர்வம் காட்டுகின்றனர். டீன்-ஏஜ் பிள்ளைகள் சமூக வலைதளங்களில் அதிக நேரங்களை செலவிடுகின்றனர்.

பெங்களூரில் உள்ள சர்வதேச பள்ளி ஒன்றில், 9ம் வகுப்பு படித்து வரும் விஷால் என்ற மாணவன், பிளாக்கில் எழுதுவதன் மூலம் மாதந்தோறும் 3,680 ரூபாய் சம்பாதித்து வருகிறான்.

அவனது பிளாக்கில் எழுதுவதால், விளம்பரத்திற்கென்று உள்ள பகுதிகளில், பல்வேறு நிறுவனங்களை சேர்ந்தவர்கள் விளம்பரம் அளிக்கின்றனர். இதனால், அவனுக்கு விளம்பர வருவாய் கிடைக்கிறது. இதுதவிர, மற்றவர்களில் பிளாக்குகளை மேம்படுத்தி, விளம்பரம் செய்வதன் வாயிலாகவும், டிசைன் செய்து தருவதாலும் வருவாய் ஈட்டுகிறான். பிளாக் உட்பட இரண்டு இணையதளங்களையும் வைத்துள்ளான். அவற்றின் வாயிலாகவும் வருவாய் வருகிறது. இதுதவிர, இ-புத்தகம் ஒன்றையும் எழுதி வருகிறான்.

இதுகுறித்து விஷால் கூறியதாவது: முதலில், வலைதளங்களில் எழுதுவதற்கு எனது வயது தடையாக இருந்தது. ஆனால், ஆறு மாதம் வரை மட்டுமே அந்த சிரமம் இருந்தது. தற்போது, வயதே எனக்கு சாதகமாகி விட்டது. தற்போது, 60 பக்கம் கொண்ட இ-புத்தகம் ஒன்றை எழுதி வருகிறேன். அது முடியும் தறுவாயில் உள்ளது. எனது நண்பர்கள் பிளாக்கில் எழுதுவதற்கு உதவுவதோடு, அவர்களின் பிளாக்குகளை பிரபலப்படுத்தவும் உதவி செய்கிறேன். இவ்வாறு விஷால் கூறினான்

source:dinamalar

பின்னூட்டமொன்றை இடுக

Filed under Uncategorized

இந்த வார இணைய தளம் – ஆங்கிலத்தில் எழுத கூக ுள் உதவி

ComputerWorkshop.jpg

வாரந்தோறும் ஏதேனும் ஆரவாரமாகச் செய்து, இணையத்தின் மூலம் அனைவரையும் வளைத்துப் போடும் முயற்சிகளில் கூகுள் ஈடுபட்டு வருவதனை நாம் கண்கூடாகக் காண்கிறோம். அந்த வகையில் கூகுள் லேப்ஸ் மையத்திலிருந்து இன்னொரு வசதி நமக்குக் கிடைத்துள்ளது. ஆங்கிலத்தில் கடிதம், கட்டுரை என எந்த டெக்ஸ்ட் அமைக்க வேண்டும் என்றாலும், அதற்கான சொற்களை எடுத்துக் கொடுத்து உதவுகிறது. இந்த வசதி தரும் சாப்ட்வேர் சாதனத்திற்கு Google Scribe என்று பெயர் கொடுத்துள்ளது. இந்த வசதி கிடைக்கும் தளத்தின் பெயர் http://scribe.googlelabs. com.
இந்த வசதியினைப் பெற நாம் முதலில் இணைய இணைப்பில் இந்த தளத்திற்குச் செல்ல வேண்டும். இதில் நாம் டைப் செய்யத் தொடங்கிய வுடனேயே இந்த சொல் இதுவாக இருக்க வேண்டும் எனப் பல சொற்களைப் பட்டியலிட்டுக் காட்டுகிறது. நாம் தொடர்ந்து டைப் செய்திடலாம்; அல்லது நாம் டைப் செய்திட விரும்பும் சொல் இருப்பின், கர்சரை நகர்த்தாமல், அதன் எதிரே இருக்கும் எண்ணுக்கான கீயை அழுத்தினால் போதும். அந்த சொல் அமைக்கப்படுகிறது. அடுத்து, அடுத்த சொல் டைப் செய்திடுகையில், நீங்கள் அமைக்க இருக்கும் வாக்கியம் என்னவாக இருக்கும் என்று உணர்ந்து, மீண்டும் அடுத்த சொற்களைத் தருகிறது. இதனால், நமக்கு எழுத்துப் பிழை இல்லாமல் சொற்கள் கிடைக்கின்றன. அடுத்து ஆங்கிலத்தில் நல்ல சரியான சொற்கள் நம் எண்ணத்திற்கேற்ப தேர்ந்தெடுக்கும் வகையில் தரப்படுகின்றன. இதில் அனைத்து பிரிவு களுக்கும் சொற்கள் கிடைக் கின்றன. அறிவியல் துறையில் நீங்கள் எழுத வேண்டும் என முயற்சித்தாலும், உங்களுடைய பொருளை உணர்ந்து கொண்டு, அதற்கேற்ற சொற்கள் பட்டியலிடப்படுகின்றன. இது ஆங்கிலத்தில் எழுத விரும்பும் அனைவருக்கும் ஒரு பயனுள்ள தளமாகும்.

source:dinamalar

பின்னூட்டமொன்றை இடுக

Filed under Uncategorized

மொபைல்போனில் நிர்வாண குளியல் படம்

create_mobile_phone_wallpapers.jpg

வீட்டு பாத்ரூமில் குளிக்கும்போது நிர்வாணப் படம் எடுத்து வைத்திருப்பதாக லாரி டிரைவர் மிரட்டியதால், வனக்கல்லூரி பெண் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இவரை தற்கொலைக்குத் தூண்டியதாக லாரி டிரைவர் மற்றும் அவரது மனைவியை போலீசார் கைது செய்தனர்.

கோவை, சீரநாயக்கன்பாளையம் அடுத்துள்ள கருமலை செட்டிபாளையத்தைச் சேர்ந்தவர் வேணுகோபால்(42); லாரி அதிபர். இவரது மனைவி கவிதா(35); இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இவர்களுக்கு சொந்தமான வீட்டில், கேரளாவைச் சேர்ந்த லாரி டிரைவர் சிவக்குமார்(33) என்பவர் தனது மனைவி பார்வதியுடன் வசித்து வந்தார். இரு ஆண்டுகளுக்கு முன் வேணுகோபால் மற்றும் சிவக்குமார் ஆகியோர் கூட்டு சேர்ந்து புதிதாக லாரி வாங்கினர். வரவு – செலவு கணக்கில் பிரச்னை ஏற்பட்டு இருவரும் பிரிந்தனர்.

வீட்டைக் காலி செய்த சிவக்குமார், அதே ஊரில் வேறு வீட்டில் குடியேறினார். அதன்பின், தனது கணவர் வேணுகோபாலுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக பிரிந்த கவிதா, தனியாக வசித்து வந்தார். குடும்பத்தை நடத்த வழியின்றி, கோவை வனக்கல்லூரிக்கு கூலி வேலைக்கு சென்று வந்தார். இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்ட சிவக்குமார், கவிதாவுக்கு செக்ஸ் தொந்தரவு கொடுத்தாக கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த 19ம் தேதி காலை வேலைக்குச் சென்ற கவிதா காலை 11.00 மணிக்கே வீடு திரும்பினார்.

காரணம் குறித்து அவரது தாயார் கேள்வி எழுப்பிய போது, "உடல்நிலை சரியில்லை’ என கூறியுள்ளார். மறுநாள் வேலைக்குச் செல்லாமல் வீட்டிலிருந்த கவிதா, சாணிப்பவுடரை கரைத்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். பிரேதத்தை மருத்துவ பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிய ஆர்.எஸ்.,புரம் போலீசார், பரிசோதனை முடித்து உறவினர்களிடம் ஒப்படைத்தனர். கவிதாவின் உடலை அடக்கம் செய்துவிட்டு வீடு திரும்பிய உறவினர்கள், சமையலறை "பிரிட்ஜ்’ஜில் ஒரு கடிதமும், மொபைல்போனும் வைக்கப்பட்டிருந்ததைக் கண்டெடுத்து ஆர்.எஸ்.புரம் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

கடிதத்தில், கவிதா கூறியிருப்பதாவது: எங்களது வீட்டுக்கு சிவக்குமார் குடிவந்த போதே, "அவன் நல்லவன் அல்ல; செயல், பேச்சு சரியில்லை. ஏதோ உள்நோக்கத்துடன் குடிவந்துள்ளான்’ என, கணவரிடம் தெரிவித்தேன். அப்படியிருந்தும், அவன் எங்களது வீட்டுக்கு குடிவந்து விட்டான். நான் கணவரை பிரிந்த பின், நிறைய தொந்தரவுகளை கொடுத்தான். நான் பாத்ரூமில் குளிக்கும் போது மொபைல்போனில் நிர்வாணப் படம் எடுத்து வைத்திருப்பதாக மிரட்டி, பல்வேறு இடங்களுக்கு அழைத்தான். மறுத்த போது, "உனது நிர்வாணப் படத்தை வெளியிட்டு விடுவேன்’ என, மிரட்டினான். அவனது தொல்லை தாங்காமல் தற்கொலை செய்து கொள்கிறேன். எனது சாவுக்கு சிவக்குமாரும், அவனது மனைவி பார்வதியுமே காரணம். என்னை செத்துப் போகுமாறு, அவனது மனைவி அடிக்கடி மிரட்டினாள். இவ்வாறு, கடிதத்தில் கூறப்பட்டிருந்தது.

இது குறித்து விசாரணை நடத்திய இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை, கவிதாவை தற்கொலைக்குத் தூண்டியதாக, லாரி டிரைவர் சிவக்குமார் மற்றும் அவரது மனைவி பார்வதியை கைது செய்தார். இவர்களிடம் இருந்து மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன

source:dinamalar

1 பின்னூட்டம்

Filed under Uncategorized

எம்.எல்.ஏ.க்களை இழுக்க பேரம்:வீடியோவில் ஆத ாரம்; உரையாடல் முழு விவரம்

பெங்களூர், அக். 22-
எம்.எல்.ஏ.க்களை இழுக்க பேரம்: குமாரசாமி வெளியிட்ட வீடியோவில் ஆதாரம்; உரையாடல் முழு விவரம்
கர்நாடகாவில் ஆட்சியை காப்பாற்றி கொள்வதற்காக எடியூரப்பா எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்களை இழுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

இதற்காக பெருந்தொகை பேரம் பேசப்படுகிறது. பாரதீய ஜனதா எம்.எல்.ஏ. சுரேஷ் கவுடா, ஜனதா தளம் (எஸ்) எம்.எல்.ஏ. ஸ்ரீனிவாசை இழுக்க பேரம் பேசினார்.

அவர்கள் பேசிய டெலிபோன் பேச்சு, வீடியோ ஆதாரத்தை குமாரசாமி வெளியிட்டார். அதில் இருந்த உரையாடல்கள் வருமாறு:-

சுரேஷ் கவுடா (பா.ஜனதா):- அணி மாற உங்களுக்கு எவ்வளவு பணம் வேண்டும்?

ஸ்ரீனிவாஸ் (ஜனதா தளம்):- எனக்கு ரூ.100 கோடி வேண்டும் உங்களால் தரமுடியுமா?

சுரேஷ் கவுடா (சிரித்து கொண்டே):- நான் அசோக்கிடம் (உள்துறை மந்திரி) பேசட்டுமா. ரூ.15 கோடி வரை தரலாம்.

ஸ்ரீனிவாஸ்:- ரூ.15 கோடி மட்டும்தானா?

சுரேஷ்கவுடா:- நீங்கள் அசோக்கிடம் பேசுவது நல்லது. வாருங்கள் அவரை சந்தித்து பேசுங்கள். உங்கள் கோரிக்கை நிறைவேற்றப்படும்.

ஸ்ரீனிவாஸ்:- எனக்கு கொடுக்கும் பணம் முடிவானால் நான் எனது ராஜினாமா கடிதத்தை உடனே தருகிறேன்.

சுரேஷ் கவுடா:- நீங்கள் அசோக்கிடம் பேசுங்கள் அவர் முடிவு செய்வார். பேரம் முடிவானால் நீங்கள் 2 காருடன் வாருங்கள் ஒரு காரில் பணத்தை நிரப்புகிறோம். வீட்டுக்கு எடுத்து செல்லுங்கள்.

ஸ்ரீனிவாஸ்:- இல்லை. பணம் முடிவாகும்வரை என்னால் எங்குமே வரமுடியாது. அஸ்வதா (ராஜினாமா செய்த ஜனதா தளம் எம்.எல்.ஏ) என்னிடம் போனில் பேசினார். அவருக்கு ரூ.25 கோடி பேசிவிட்டு ரூ.5 கோடி மட்டுமே கொடுத்து இருக்கிறீர்கள். எனவே நீங்கள் உரிய பணத்தை எனக்கு கொடுத்தால் உங்களுடன் வர தயாராக இருக்கிறேன்.

சுரேஷ்கவுடா:- ரூ.15 கோடி என்று பேசி முடிக்கவா? அசோக் இதை தர தயாராக இருக்கிறார்.

ஸ்ரீனிவாஸ்:- இல்லை, இல்லை, எனக்கு குறைந்தது ரூ.25 கோடி வேண்டும்.

இவ்வாறு அந்த உரை யாடல் செல்கிறது.

இந்த ஆதாரத்தை வெளியிட்ட குமாரசாமி சில எம்.எல்.ஏ.க்களுக்கு ரூ.50 கோடி வரை தர மேலும் பேசப்படுவதாக தெரிவித்தார்.

ஆனால் இந்த வீடியோ ஆதாரம் உண்மை இல்லை என்று பாரதீய ஜனதா கூறியுள்ளது

source:maalaimalar

பின்னூட்டமொன்றை இடுக

Filed under Uncategorized

குழந்தை பெற்றால் பெண்கள் மூளை வளரும்: ஆய ்வில் தகவல்

குழந்தை பெற்றால் பெண்கள் மூளை வளரும்: ஆய்வில் தகவல்

வாஷிங்டன், அக். 21-

குழந்தை பெற்றுக் கொள்ளும் பெண்களுக்கு உடலில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து அமெரிக்காவில் உள்ள யேல் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஆய்வு நடத்தினார்கள்.

அதில் பெண்கள் மூளையில் ஏற்படும் மாற்றங்கள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டன. புதிதாக கர்ப்பமான பெண்களின் மூளையை முதலில் ஸ்கேன் செய்து பார்த்தனர். அடுத்து அவர்கள் குழந்தை பெற்ற பின் ஏற்படும் மாற்றங்கள் குறித்து ஸ்கேன் செய்து பார்த்தனர்.

இதில் பெண்கள் குழந்தை பெற்ற பிறகு அவர்களின் மூளை வளர்ச்சி அடைந்து புத்திசாலியாக மாறி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

பெண்கள் வயிற்றில் குழந்தை இருக்கும்போது உடலில் உள்ள ஹார்மோன் சுரத்தல் அதிகரிக்கிறது. இதன் மூலம் மூளையிலும வளர்ச்சி ஏற்படுவது தெரிந்தது

source:maalaimalar

பின்னூட்டமொன்றை இடுக

Filed under Uncategorized

கம்ப்யூட்டரின் கிளிப் போர்டுகள்

E_1287396346.jpeg

கம்ப்யூட்டருக்குப் புதியவரா ? கம்ப்யூட்டரின் கிளிப் போர்டுகள்

கம்ப்யூட்டரைப் பயன்படுத்தும் போது, எதனை நாம் காப்பி செய்தாலும் அது கிளிப் போர்டுக்குச் செல்கிறது. பின்னர் எந்த இடத்தில், எந்த அப்ளிகேஷனில் நாம் இருந்தாலும், கண்ட்ரோல்+வி அல்லது இன்ஸெர்ட் கட்டளை கொடுத்தால், கிளிப் போர்டில் உள்ள ஐட்டம் அங்கு பேஸ்ட் செய்யப்படுகிறது. இங்கு பயன்படுவது சிஸ்டம் தரும் கிளிப் போர்டு ஆகும். இது இல்லாமல், இன்னொரு கிளிப் போர்டும் நம்மிடம் உள்ளது. அது எம்.எஸ். ஆபீஸ் தொகுப்பில் தரப்பட்டுள்ளது . இது ஆபீஸ் தொகுப்பின் அனைத்து புரோகிராம்களிலும் செயல்படும். வேர்ட், எக்ஸெல், பிரசன்டேஷன் பாயின்ட், பெயிண்ட் என எந்த புரோகிராமில் இருந்து காப்பி கட்டளை கொடுத்தாலும், உடனே அது இந்த கிளிப் போர்டில் வந்து அமர்ந்து கொள்கிறது. மேலே குறிப்பிட்ட அப்ளிகேஷன் புரோகிராமில் இருந்து, தனித்தனியே, ஒவ்வொன்றி லிருந்தும் ஒன்றை காப்பி செய்து இந்த கிளிப் போர்டுக்குக் கொண்டு செல்லலாம். பின்னர் அங்கிருந்து, வேறு எந்த புரோகிராமிலும் இதனை ஒட்டலாம். உங்களுக்குத் தெரியுமா? எந்த விண்டோஸ் புரோகிராம் இயங்கிக் கொண்டிருந்தாலும், பிரிண்ட் ஸ்கிரீன் கீயை அழுத்தினால், அப்போதைய திரைத் தோற்றம் காப்பி செய்யப்படும். இதுவும் கிளிப் போர்டில் ஒட்டிக் கொள்ளும். இதனையும் வேறு ஒரு விண்டோஸ் புரோகிராமில் இணைக்கலாம். இவ்வாறாக, மொத்தம் 24 ஐட்டங்களை, கிளிப் போர்டில் சேர்த்து வைக்கலாம். 25 ஆவது ஐட்டம் வருகையில், இறுதியாக உள்ள ஐட்டம் தானாக வெளியேறும். இவை நாம் ஆபீஸ் தொகுப்பி னை மூடும் வரை அப்படியே இருக்கும்.
ஆபீஸ் தொகுப்பில் உள்ள எந்த புரோகிராமிலும், கிளிப் போர்டினைத் திறந்து பார்க்கலாம். வேர்ட், எக்ஸெல் என ஏதேனும் ஒரு புரோகிராமினைத் திறந்து, கண்ட்ரோல் +சி+சி என அழுத்துங்கள். வலது புறமாகக் கிளிப் போர்டு திறக்கப்பட்டு, அதில் காப்பி செய்து வைக்கப்பட்டுள்ள ஐட்டங்கள் வரிசையாகக் காட்டப்படும். இந்த கிளிப் போர்டு திறந்தவுடன் கீழாக Options என்று ஒரு கட்டம் தெரியும். இதில் கீழாக உள்ள அம்புக் குறியில் கிளிக் செய்தால் அதில் பல ஆப்ஷன்களுடன் மெனு ஒன்று கிடைக்கும். இதில் 1) ஆபீஸ் கிளிப் போர்டு தானாகக் காட்டப்பட, 2) கண்ட்ரோல் +சி இருமுறை இயக்கப்பட்டால் ஆபீஸ் கிளிப் போர்டு திறக்கப்பட, 3) ஆபீஸ் கிளிப் போர்டு காட்டப்படாமலேயே காப்பி செய்யப்படும் ஐட்டங்கள் இணைக்கப்பட, 4) டாஸ்க்பாரில் ஆபீஸ் கிளிப் போர்டு ஐகான் காட்டப்பட மற்றும் 5) காப்பி செய்யப்படுகையில் அதன் நிலை என்ன என்று டாஸ்க் பாரில் காட்ட என ஐந்து ஆப்ஷன்கள் தரப்பட்டிருக்கும். நாம் விரும்பும் வகையில் தேவையானதை டிக் செய்து வைத்துக் கொள்ளலாம்.
கிளிப் போர்டு திறக்கப்பட்டால், அது ஸ்டேட்டஸ் பாரில், நேரம் காட்டப்படும் இடம் அருகே காட்டப்படும். அதன் அருகே கர்சரைக் கொண்டு சென்றால், கிளிப்போர்டில் 24 வைக்கும் இடத்தில் எத்தனை ஆப்ஜெக்ட் காப்பி செய்து வைக்கப்பட்டுள்ளது என்று காட்டும். காப்பி செய்யப்படும் ஒவ்வொரு ஐட்டத்திற்கும் ஆபீஸ் கிளிப் போர்டில் ஒரு ஐகான் தெரியும். அந்த அந்த புரோகிராமின் ஐகான் காட்டப்பட்டு காப்பி செய்யப்பட்டிருப்பது எந்த புரோகிராமிலிருந்து எடுக்கப்பட்டது எனக் காட்டப்படும். மேலும் காப்பி செய்யப் பட்ட டெக்ஸ்ட்டிலிருந்து ஒரு சிறிய பகுதி காட்டப் படும். அது கிராபிக் ஆக இருந்தால் அதன் சிறிய படம் தெரியும். இதன் மூலம் நாம் கிளிப் போர்டு பட்டியலைப் பார்க்கையில் அது என்ன என்று அறிந்து கொண்டு தேவையான தை பேஸ்ட் செய்திடலாம். கிளிப் போர்டில் இருப்பதை அப்படியே மொத்தமாக நாம் விரும்பும் பைலில் பேஸ்ட் செய்திடலாம். அல்லது தேவைப்பட்ட ஒன்றை மட்டும் தேர்ந்தெடுத்து பேஸ்ட் செய்திடலாம். ஜஸ்ட் பேஸ்ட் கட்டளை கொடுத்தால் இறுதியாக எதனைக் காப்பி செய்தோமோ அது மட்டுமே பேஸ்ட் செய்யப்படும். அல்லது கிளிப் போர்டில் உள்ள பட்டியலில் நமக்குத் தேவையானதைத் தேர்ந்தெடுத்து கிடைக்கும் மெனுவில் பேஸ்ட் கட்டளை கொடுத்தால் பேஸ்ட் ஆகும். இதற்கு மாறாக சிஸ்டம் கிளிப் போர்டு இயங்குகிறது. இதில் நாம் அப்போது காப்பி செய்திடும் ஐட்டம் தங்கும். இங்கு ஒரே ஒரு ஐட்டம் மட்டுமே தங்கும். இரண்டு கிளிப் போர்டும் எப்படி இணைந்து செயல்படு கின்றன? ஆபீஸ் கிளிப் போர்டில் பல ஐட்டங்களை காப்பி செய்திடுகையில் கடைசி ஐட்டம் மட்டுமே சிஸ்டம் கிளிப் போர்டில் தங்கும். கண்ட்ரோல்+ வி அல்லது பேஸ்ட் கட்டளை கொடுத்தால் இறுதியாகக் காப்பி செய்த ஐட்டம் மட்டுமே பேஸ்ட் செய்யப்படும். இது சிஸ்டம் கிளிப் போர்டிலிருந்து நமக்குக் கிடைக்கும் source:dinamalar

பின்னூட்டமொன்றை இடுக

Filed under Uncategorized

டைசனிடம் ரூ.125 கோடி நஷ்ட ஈடு கேட்டு வழக்கு

0.jpgபுகைப்படக்காரர் மீது தாக்குதல்:டைசனிடம் ரூ.125 கோடி நஷ்ட ஈடு கேட்டு வழக்கு

லாஸ்ஏஞ்சல்ஸ், அக். 20-

பிரபல குத்துச்சண்டை வீரர் டைசன் கடந்த நவம்பர் மாதம் அமெரிக்காவில் உள்ள லாஸ்ஏஞ்சல்ஸ் நகருக்கு சென்று இருந்தார். விமான நிலையத்தில் அவரை புகைப்பட நிபுணர் அன்டோனியா படம் எடுத்தார். இதனால் கோபம் அடைந்த டைசன் புகைப்பட நிபுணரை தாக்கினார். அவரது கேமராவையும் பறித்து உடைத்தார்.

இது தொடர்பாக டைசன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ஆனால் போதிய ஆதாரம் இல்லை என்று கூறி டைசனை கோர்ட்டு விடுவித்துவிட்டது.

இந்த நிலையில் அன்டோனியா லாஸ்ஏஞ்சல்ஸ் கோர்ட்டில் டைசன் மீது சிவில் வழக்கு தொடர்ந்துள்ளார். அதில் டைசன் என்னை தள்ளி கேமராவையும் உடைத்து அவமானப்படுத்திவிட்டார். இதற்காக டைசன் ரூ.125 கோடி நஷ்ட ஈடு தரவேண்டும் என்று கூறியுள்ளார்.

டைசன் தாக்கியதால் தனது தண்டுவடம் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் அவர் கூறி இருக்கிறார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வருகிறது. அதில் டைசனுக்கு அபராதம் விதிக்கபடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது

source:maalaimalar

பின்னூட்டமொன்றை இடுக

Filed under Uncategorized

திடுக்கிடும் தகவல்;ஆயுத பயிற்சி கேரள இளை ஞர்களுக்கு காஷ்மீரில்

large_108979.jpg

ஜம்மு – காஷ்மீரில் செயல்படும் பயங்கரவாத அமைப்பினர் கேரள மாநிலம், திருச்சூரில் இருந்து இளைஞர்களை தேர்வு செய்து, ஆயுதப்பயிற்சி அளித்து வருவதாக திடுக் தகவல்கள் வெளியாகியுள்ளன. திருச்சூரில் நடந்த தமிழக – கேரள போலீஸ் உயரதிகாரிகள் கலந்தாய்வு கூட்டத்தில், இது குறித்த ரகசிய தகவல்கள் பரிமாறிக்கொள்ளப்பட்டன.

கடந்த 1990களில் டில்லி, மும்பை உள்ளிட்ட இடங்களில் நடந்த குண்டுவெடிப்பு பயங்கரவாத சதிச்செயல்களை தொடர்ந்து, "சிமி’ (ஸ்டூடன்ட்ஸ் இஸ்லாமிக் மூவ்மென்ட் ஆப் இந்தியா) என்ற அமைப்பு, சட்டவிரோத செயல்கள் தடைச்சட்டத்தின்படி (முன்னெச்சரிக்கை சட்டம் 1967, செக்ஷன் 3ன்படி) தடை செய்யப்பட்டது. இந்த அமைப்பின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மத்திய அரசின் நடவடிக்கை மற்றும் தீவிர கண்காணிப்பின் காரணமாக, "சிமி’ யின் செயல்பாடுகள் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டன. எனினும், வெளியில் முகம் காட்டாமல் திரைமறைவில் ரகசியமாக செயல்பட்டு வந்த தலைமை நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலரும் வேறு சில அமைப்புகளுக்கு தாவினர். சிலர், வேறு பெயரில் புதிய அமைப்புகளை துவக்கி, ஜனநாயக வழிமுறைகளின்படி செயல்படுவதாக கூறி வருகின்றனர்.

"சிமி’ அமைப்பினரின் கடந்த கால செயல்பாடுகளை நன்கு ஆராய்ந்தறிந்த மத்திய, மாநில புலனாய்வு ஏஜன்சிகள், தற்போதும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு, ஒற்றுத்தகவல்களை ரகசியமாக சேகரித்து, உள்நாட்டு பாதுகாப்பை உறுதிப்படுத்தும் முனைப்பில் ஈடுபட்டுள்ளன. இரு ஆண்டுகளுக்கு முன் எல்லை பாதுகாப்பு படையினர், ஜம்மு – காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கு எதிரான தாக்குதல் நடவடிக்கையில் ஈடுபட்ட போது, கேரள மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.

இதன் மூலம், இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாத செயல்களில் கேரள இளைஞர்களை, பயங்கரவாத அமைப்பினர் ஈடுபடுத்தி வருவது அம்பலமானது.மேலும், கேரள மாநிலத்திலிருந்து இளைஞர்களை தேர்வு செய்து ஆயுதப்பயிற்சி அளித்து தாக்குதல் நடத்தி வருவதும் வெளிச்சத்துக்கு வந்தது. இதையடுத்து, மத்திய புலனாய்வு ஏஜன்சியின் பார்வை கேரள மாநிலம், திருச்சூர் பக்கம் திரும்பியது. அந்த மாநில போலீசாரும், புலனாய்வு ஏஜன்சிகளும் உஷார் படுத்தப்பட்டன. திருச்சூரை மையமாக கொண்டு செயல்படும் சந்தேகத்துக்குரிய சில அமைப்புகள் தீவிர கண்காணிப்பின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன.

இந்நிலையில், தமிழக – கேரள மாநில பாதுகாப்பு மற்றும் உளவு தகவல் சேகரிப்பு தொடர்பான இரு மாநில போலீஸ் உயரதிகாரிகளின் கலந்தாய்வு கூட்டம், சமீபத்தில் திருச்சூரில் நடந்தது.இக்கூட்டத்தில் பங்கேற்ற கோவை – திருச்சூர் போலீஸ் உயரதிகாரிகள், இரு மாநில எல்லைக்குள்ளும் செயல்படும் "மாபியா கேங்’ மற்றும் மத அடிப்படைவாத அமைப்புகள் குறித்த தகவல்களை பரிமாறிக்கொண்டனர். அப்போது, மத்திய அரசால் தடை செய்யப்பட்ட "சிமி’ அமைப்பு தொடர்பாகவும் விரிவான முறையில் பேசப்பட்டன.

திருச்சூர் போலீஸ் உயரதிகாரி ஒருவர் பேசுகையில், " திருச்சூரில் "சிமி’யின் ரகசிய செயல்பாடுகள் தொடர்பான உறுதிப்படுத்தத்தக்க தகவல் ஏதுமில்லை’ என்றார். அதே வேளையில், "ஜம்மு – காஷ்மீரில் இந்தியாவுக்கு எதிராக செயல்படும் பயங்கரவாத அமைப்புகளுக்கு கேரளாவில் ஆட்கள் தேர்வு செய்யப்படுவதாக உளவுத் தகவல்கள் கிடைத்துள்ளன. இது தொடர்பாக கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளோம். சந்தேகத்துக்குரிய அமைப்புகள், அதன் தலைவர்கள், உறுப்பினர்கள், நிதியுதவி அளிக்கும் நபர்களை தொடர்ச்சியாக கண்காணிக்க, போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது’ என்றார். அதே போன்று, தமிழக எல்லைக்குள் குறிப்பாக, கோவையில் செயல்படும் பயங்கரவாத ஆதரவு அமைப்புகள் தொடர்பான ரகசிய தகவல்கள், திருச்சூர் போலீசாருக்கு அளிக்கப்பட்டன.

இது குறித்து, திருச்சூர் போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், "இரு மாநில போலீஸ் உயரதிகாரிகள் கூட்டத்தில் பாதுகாப்பு மற்றும் உளவுத்தகவல் பரிமாற்றம் தொடர்பாக பல்வேறு விஷயங்கள் இடம்பெற்றன. மத அடிப்படைவாத அமைப்புகளின் செயல்பாடுகள் மட்டுமின்றி, சந்தன மரம் கடத்துவோர், எரிசாராயம் கடத்துவோர், வனக் கொள்ளையர் குறித்தும் விரிவான ஆலோசனைகள் நடத்தப்பட்டன. தமிழகம் – கேரளா எல்லைப்பகுதிகளை பாதுகாப்பது தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டன. பயங்கரவாத செயல்பாடுகள் மற்றும் கிரிமினல்களின் நடமாட்டத்தை கண்டறிந்து தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில் இந்த கலந்தாய்வு கூட்டம் அமைந்தது’ என்றார்

source:dinamalar

பின்னூட்டமொன்றை இடுக

Filed under Uncategorized

இணையத்தில் வெளியான பெண்டகன் இரகசியம்!?

விக்கிலீக் வெளியிடும் ஈராக் போர் ரகசிய ஆவணங்கள் : பென்டகன் அலறல்

டெஹ்ரான்: ஈராக்குடனான அமெரி்க்க போர் குறித்து 5 லட்சம் ஆவணங்களை வெளியிடப்போவதாக விக்கிலீக் இணையதள பத்திரிகை ‌தெரிவித்துள்ளதைத் தொடர்ந்து அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் முன்‌னெச்சரிக்கை நடவடிக்கையில் இறங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆப்கானிஸ்தானில் கடந்த 9 ஆண்டுகளாக அமெரிக்கா ‌மேற்கொண்ட போர் குறித்த 70,000 ரகசிய ஆவணங்களை கடந்த ஜூலை மாதம் விக்கிலீக் எனும் இணையதளம் வெளியிட்டு பரபரப்பூட்டியது. மிகவும் ரகசியமான வைக்கப்பட்டிருந்த ஆவணங்கள் ‌எப்படி வெளியானது என்பது குறித்து இன்னமும் விடைகிடைக்காமல் பென்டகன் திணறி வருகிறது. இந்நிலையில் ஈராக்கில் அமெரிக்கா மேற்கொண்ட போர் நடவடிக்கை குறித்து 5 லட்சம் ஆவணங்களை அடுத்த வாரம் வெளியிட இருப்பதாக செய்திகள் வெளியானது . இதனால் பென்டகன் கலக்கமடைந்துள்ளது. ஈராக்கின் அமெரிக்க ‌‌போர் நடந்த காலங்களில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள், அபு காரியாப் சிறைச்சாலையில் போர் கைதிகளை சித்ரவதை செய்தது. நடந்து முடிந்த ‌பொதுத்தேர்தலில் நடைபெற்ற முறைகேடுகள் , அரசியல்வாதிகளை கைப்பாவையாக நடத்தியது , போரின் அப்பாவி மக்கள் பலியானதை குறைந்து எண்ணிக்கையினை அறிவித்தது என ஒவ்வொன்றாக நடந்த சம்பவங்களை விளக்கி ஆவணங்களை வெளியிட விக்கிலீக் முடிவு செய்துள்ளதாக தகவல்களை வெளியாகியுள்ளன. இதனை முறியடிக்க பென்டகன் 120 பேர் கொண்ட குழுவினை அதிரடியாக நியமித்துள்ளது. ஆவணங்கள் வெளியிடவுள்ள இணையதளத்தினை தீவிரமாக கண்காணிக்க இவர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இது குறித்து அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சர் ரூபர்ட்‌ஸ் கேட்ஸ் கூறுகையில், விக்கிலீக்கின் இந்த செயல் நாட்டின் பாதுகாப்பு நலனனுக்கு உகந்ததல்ல என்றார்.

source:dinamalar

பின்னூட்டமொன்றை இடுக

Filed under Uncategorized