பிச்சை எடுத்து, ஏழை மாணவர்களின் கல்விக்க ு உதவி வரும் ஊனமுற்றவர்


"பிச்சை புகினும் கற்பித்தல் நன்றே’:புது மொழி படைக்கும் ஊனமுற்றவர்

large_113804.jpg

காரைக்குடி : பிச்சை எடுத்து, ஏழை மாணவர்களின் கல்விக்கு உதவி வருகிறார் காரைக்குடியை சேர்ந்த செல்வராஜ் (69). மதுரை உசிலம்பட்டியை சேர்ந்த இவர், மயிலாடுதுறை ஏ.வி.சி. கல்லூரியில் படித்து, பி.ஏ., பொருளாதார பட்டம் பெற்றவர். போலியோ தாக்கி கால்கள் செயல் இழந்ததால், கைகளில் செருப்பை மாட்டி கொண்டு, தவழ்ந்து செல்கிறார். திருமணம் செய்து கொள்ளாத இவருக்கு வேலையும் கிடைக்கவில்லை. உசிலம்பட்டியில் சைக்கிள் பழுதுபார்க்கும் கடை நடத்தி, நஷ்டமானதால், காரைக்குடிக்கு இடம் பெயர்ந்தார்.

யாசகம்: தற்போது இவரது தொழில் யாசகம் செய்வது. இது தவறு தான். ஆனால், "கற்கை நன்றே, கற்கை நன்றே. பிச்சை புகினும் கற்கை நன்றே’ என்ற நன்னெறியை தழுவி, கடந்த நான்கு ஆண்டாக, ஏழை மாணவர்களுக்கு (இலவச) கல்விச்செல்வம் கொடுத்து வருகிறார். மாலையில் டியூசன் எடுப்பது, புத்தகம், நோட்டு வாங்கி கொடுப்பது என இவரது வாழ்க்கை நகர்ந்து கொண்டிருக்கிறது.

அவர் கூறுகையில், ""காலை, மாலையில் மூன்று மணி நேரம் பிச்சை எடுப்பேன். 300 ரூபாய் வாடகையில் குடிசை பகுதியில் வசிக்கிறேன். பிச்சை எடுப்பது வருத்தம் அளித்தாலும், மாணவர்களுக்கு உதவுவது திருப்தி தருகிறது. கல்விக்காக பிச்சை எடுப்பதை கவுரமாக கருதுகிறேன்,” என்றார்

source:dinamalar

2 பின்னூட்டங்கள்

Filed under Uncategorized

2 responses to “பிச்சை எடுத்து, ஏழை மாணவர்களின் கல்விக்க ு உதவி வரும் ஊனமுற்றவர்

 1. ஐயா இவ​ரை நான் பலமு​றை பார்த்திருக்கி​றேன்,
  சிலமு​றை உதவியும் இருக்கி​றேன்,
  ஆனால் இவர் இவரது ​தே​வைக்கு அதிகமாக​வே பிச்​சைஎடுக்கிறார், என​வே இவ​​ரை நாம் ஊக்குவிக்கக்கூடாது என்று எண்ணுவது உண்டு,

  இவர் ஒரு கல்வித் ​தொண்டர் எனத்தகவல் ​கொடுத்த​மைக்கு நன்றி,
  இவ​ரைச் சந்திக்கப் புறப்பட்டுவிட்​டேன்
  அன்பன்
  கி. கா​ளைராசன்

 2. இப்படிபட்ட செய்திகளை நாளிதள்கள் வெளியிடும் போது, அவர்களது முகவரியும் குறிப்பி்ட்டால் படிப்பவர்களில் சில நல்லவர்கள் உதவ இயலும்.

  காளையராசன் அவர்களே முடிந்தால் அவரது முகவரியை இங்கே பதியுங்கள். சில ஆயிரம் ரூபாய் அவருக்காக காத்திருக்கின்றன.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s