Daily Archives: ஒக்ரோபர் 18, 2010

இணையத்தில் வெளியான பெண்டகன் இரகசியம்!?

விக்கிலீக் வெளியிடும் ஈராக் போர் ரகசிய ஆவணங்கள் : பென்டகன் அலறல்

டெஹ்ரான்: ஈராக்குடனான அமெரி்க்க போர் குறித்து 5 லட்சம் ஆவணங்களை வெளியிடப்போவதாக விக்கிலீக் இணையதள பத்திரிகை ‌தெரிவித்துள்ளதைத் தொடர்ந்து அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் முன்‌னெச்சரிக்கை நடவடிக்கையில் இறங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆப்கானிஸ்தானில் கடந்த 9 ஆண்டுகளாக அமெரிக்கா ‌மேற்கொண்ட போர் குறித்த 70,000 ரகசிய ஆவணங்களை கடந்த ஜூலை மாதம் விக்கிலீக் எனும் இணையதளம் வெளியிட்டு பரபரப்பூட்டியது. மிகவும் ரகசியமான வைக்கப்பட்டிருந்த ஆவணங்கள் ‌எப்படி வெளியானது என்பது குறித்து இன்னமும் விடைகிடைக்காமல் பென்டகன் திணறி வருகிறது. இந்நிலையில் ஈராக்கில் அமெரிக்கா மேற்கொண்ட போர் நடவடிக்கை குறித்து 5 லட்சம் ஆவணங்களை அடுத்த வாரம் வெளியிட இருப்பதாக செய்திகள் வெளியானது . இதனால் பென்டகன் கலக்கமடைந்துள்ளது. ஈராக்கின் அமெரிக்க ‌‌போர் நடந்த காலங்களில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள், அபு காரியாப் சிறைச்சாலையில் போர் கைதிகளை சித்ரவதை செய்தது. நடந்து முடிந்த ‌பொதுத்தேர்தலில் நடைபெற்ற முறைகேடுகள் , அரசியல்வாதிகளை கைப்பாவையாக நடத்தியது , போரின் அப்பாவி மக்கள் பலியானதை குறைந்து எண்ணிக்கையினை அறிவித்தது என ஒவ்வொன்றாக நடந்த சம்பவங்களை விளக்கி ஆவணங்களை வெளியிட விக்கிலீக் முடிவு செய்துள்ளதாக தகவல்களை வெளியாகியுள்ளன. இதனை முறியடிக்க பென்டகன் 120 பேர் கொண்ட குழுவினை அதிரடியாக நியமித்துள்ளது. ஆவணங்கள் வெளியிடவுள்ள இணையதளத்தினை தீவிரமாக கண்காணிக்க இவர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இது குறித்து அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சர் ரூபர்ட்‌ஸ் கேட்ஸ் கூறுகையில், விக்கிலீக்கின் இந்த செயல் நாட்டின் பாதுகாப்பு நலனனுக்கு உகந்ததல்ல என்றார்.

source:dinamalar

பின்னூட்டமொன்றை இடுக

Filed under Uncategorized

இலவசத்தை ஒழித்திடு, விழித்திடு தமிழா

இலவசத்தை ஒழித்திடு, விழித்திடு தமிழா : நோட்டீஸ் வினியோகத்தால் பரபரப்பு

"மனம் வெதும்பும் ஒரு தமிழனின் மனசாட்சி’ என்ற பெயரில் விலாச மில்லாமல் வினியோகிக்கப்படும் நோட்டீசால் பரபரப்பு ஏற்பட்டது.

நகர பகுதிகளில் கடந்த இரு தினங்களாக "இன்றைய தமிழகம்’ என்ற தலைப்பிட்டு முகவரியில்லாமல் சில மர்ம நபர்களால் நோட்டீஸ் வினியோகிக்கப்பட்டு வருகிறது. "ஒரு நாளைக்கு 18 மணி நேரம் உழைக்கும் என்னிடம் ஒருவர் கேட்டார், எதற்காக இத்தனை கஷ்டப்படுகிறாய்?’ "நான் கேட்டேன், கஷ்டப்படாமல் எப்படி வாழ்க்கை ஓட்ட முடியும்?’ அவர் சிரித்தபடி சொன்னார், "என்னை பார் ஒரு ரூபாய்க்கு அரிசி வாங்கி உண்டு விட்டு உறங்கி விடுவேன். போரடித்தால் வண்ணத் தொலைக்காட்சியில் திரைப் படம் பார்த்திடுவேன். உழைக்காமல் நோய் வந்தால் மருத்துவரிடம் ஓடுவேன். உயர் சிகிச்சை பெற்றிடுவேன், ராஜமரியாதையுடன். நான் யார் தெரியுமா? தமிழ் நாட்டு குடிமகன்!’

"என் நாட்டில் உணவுக்கு அரிசி ஒரு ரூபாய், சமைப்பதற்கு காஸ் அடுப்பு இலவசம், பொழுதுபோக்கிற்கு வண்ணத் தொலைகாட்சி மின்சாரத்துடன் இலவசம். எதற்காக உழைக்க வேண்டும்? மனைவி, பிள்ளை பெற்றால் 6,000 ரூபாய் இலவச சிகிச்சையுடன். குழந்தைக்கு சத்துணவு இலவசம் பாலர் பள்ளியில். படிப்பு, சீருடை, முட்டையுடன் மதிய உணவும் இலவசம். பாடப்புத்தகம் இலவசம். படிப்பும் இலவசம். பள்ளி செல்ல பஸ் பாஸ் இலவசம். தேவையென்றால் சைக்கிளும் இலவசம். "பெண் பருவமடைந்தால் திருமண உதவித் தொகை 25,000 ரூபாய் இலவசம், ஒரு சவரன் தாலியுடன், திருமண செலவும் இலவசம். தேவையென்றால் மாப்பிள்ளையுடன் பேப்பரில் விளம்பரமும் இலவசம். மகள் பிள்ளை பெற்றால் மீண்டும் அதே கதை தொடரும் அவள் வாழ்க்கை யிலும். நான் எதற்கு உழைக்க வேண்டும்!’

"இலவசம் என்பதற்கு இரண்டு அர்த்தம் உண்டு, ஒன்று கையூட்டு, மற்றொன்று பிச்சை. இதில் நீ எந்த வகை? எதை எடுத்து கொள்வது? உழைக்காமல் உண்டு சோம்பேறியாகிறாய். இலவசம் நின்று போனால் உன் நிலை? உழைப்பவர் சேமிப்பை களவாடத் தலைப்படுவாய்? இதே நிலை தொடர்ந்தால், இலவசம் வளர்ந்தால், அமைதிப் பூங்காவாம் தமிழகம், கள்வர் பூமியாய் மாறும் நிலை, இன்னும் வெகு தொலைவில் இல்லை. தமிழா விழித்தெழு, உழைத்திடு, இலவசத்தை வெறுத்திடு, அழித்திடு, தமிழகத்தை தரணியில் உயர்த்திடு. நாளைய தமிழகம் நம் கையில், உடன் பிறப்பே சிந்திப்பாயா? மனம் வெதும்பும் ஒரு தமிழனின் மனசாட்சி!’ இவ்வாறு அந்த நோட்டீசில் அச்சிடப்பட்டுள்ளது

source:dinamalar

பின்னூட்டமொன்றை இடுக

Filed under Uncategorized