Monthly Archives: செப்ரெம்பர் 2010

கிளி வடிவத்தில் இருக்கும் அதிசய பூ

p2

p1p3

இந்த உலகில் ஒவ்வொன்றும் அதிசயம். அதிசயங்களுக்குப் பஞ்சமே வராது.

அது போன்ற அதிசயங்களில் ஒன்றுதான் பறக்கும் கிளி வடிவத்திலான அதிசயப் பூ.

இந்த பூ. வடிவத்தில் மட்டும் கிளிபோல் அல்லாமல் சிறகு, அலகு, உடல் என ஒவ்வொரு பாகமும் வெவ்வேறு வர்ணங்களில் இருப்பது பஞ்சவர்ணக் கிளியை நினைவுபடுத்துகிறது.

தாய்லாந்தில் காணப்படும் `பேரட் பிளவர்’ என்னும் இந்த அதிசயப் பூச்செடி அழியும் நிலையில் பாதுகாக்கப்படும் ஒரு செடியாக இருந்து வருகிறது. சமீபத்தில் இந்தச் செடி பூத்துக் குலுங்கியது.

thanks:tntj

பின்னூட்டமொன்றை இடுக

Filed under Uncategorized

உங்களுக்கு பிடித்த படத்தை, இலவசமாக, நல்ல த ரத்துடன் இனி பார்க்கலாம்

3002850.jpg
நியூயார்க் : யூடியூப் இலவசமாக படங்களை பார்க்கும் புதிய சேவையை அறிமுகப்படுத்தி உள்ளது. பிரபல படத்தயாரிப்பு நிறுவனங்கள் லயன்ஸ்கேட், எம்ஜிஎம் அண்ட் சோனி பி்க்சர்ஸ், பிலிங்பாக்ஸ் மற்றும் மேலும் பல நிறுவனங்களிடம் ஒப்பந்தம் போட்டு உள்ளது. தன்னுடைய தொகுப்பில் மொத்தம் 400 முழுநீள திரைப்படங்கள் உள்ளது. ஹாலிவுட் மற்றும் பாலிவுட் திரைப்படங்கள் இந்த இணைப்பில் உள்ளது (டபிள்யூடபிள்யூடபிள்யூ.யூடியூப்.காம்/மூவிஸ்) . சில முழுநீளத்திரைப்படங்கள் முன்னதாகவே யூடியூப்பில் வெளியிடப்பட்டு இருந்தது,ஆனால் அது குறிபிட்ட சில நாடுகளில் மட்டும் பார்க்க முடியும். தற்போது உலகம் முழுவதிலும் அனைவரும் பார்க்கும் வசதியை யூடியூப் கொண்டு வந்து உள்ளது. ஜாக்கி சானின் பிரபல படங்கள்,பாலிவுட்டின் சிறந்த நகைச்சுவை படங்களும் இலவசமாக பார்க்கலாம். இனிவரும் காலங்களில் ‌ஹெச்டி படங்களையும் வெளியிட உள்ளது. உங்களிடம் யூடியூப் இணைக்கப்பட்ட இணைய தள வசதி உடைய தொலைக்காட்சி இருந்தால் போதும், இலவசமாக படத்தை பார்க்கலாம்

source:dinamalar

பின்னூட்டமொன்றை இடுக

Filed under Uncategorized

புதிய வைரஸ் எச்சரிக்கை

E_1284978041.jpeg

கூகுள், நாசா,டிஸ்னி, கோகா கோலா போன்ற மிகப் பெரிய பாதுகாப்பான நிறுவனங்களை எல்லாம் பாதித்த வைரஸ் ஒன்று இப்போது உலகெங்கும் பரவி வருகிறது. “Here You Have” என்று பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த வைரஸ், இந்த சொற்களை சப்ஜெக்ட் பெட்டியில் கொண்டு வரும் இமெயில்கள் மூலம் பரவுகிறது. உங்கள் நண்பரின் மின்னஞ்சல் முகவரியிலிருந்து வரும், மின்னஞ்சல் கடிதமாக இது இன் பாக்ஸை வந்தடைகிறது. அதில் "நீங்கள் கேட்ட பாலியல் பட பைல் இதோ இங்குள்ளது’ என்று ஒரு பிடிஎப் பைலுக்கு லிங்க் தருகிறது. இது பிடிஎப் பைலே அல்ல. .scr. என்ற துணைப்பெயருடன் உள்ள ஒரு கோப்பு. விண்டோஸ் ஸ்கிரிப்ட் அடங்கிய வைரஸ் கோப்பு.

இது CSRSS.EXE என்னும் கோப்பினை உங்கள் விண்டோஸ் டைரக்டரியில் பதிக்கிறது. இயங்கத் தொடங்கியவுடன் உங்கள் ஆண்ட்டி வைரஸ் கோப்பின் இயக்கத்தை நிறுத்துகிறது. இது ஒரு பாட்நெட் வகை வைரஸ். ஆனால் பழைய நிம்டா, அன்னா கோர்னிகோவா (2001 ஆம் ஆண்டு) மற்றும் மெலிஸ்ஸா வைரஸ் போல பரவுகிறது. ஆர்வத்தில் அல்லது ஆசையில் இதில் உள்ள லிங்க்கில் கிளிக் செய்தவுடன் இந்த வைரஸ் உங்கள் கம்ப்யூட்டரில் வந்து இறங்குகிறது. அடுத்து உங்கள் இமெயில் முகவரி ஏட்டில் உள்ள அனைத்து முகவரிக்கும் இதே போல ஒரு செய்தியை அனுப்புகிறது. இது கடந்த செப்டம்பர் 10 முதல் உலகெங்கும் பரவி வருகிறது. தேடுதல் தளங்களில் தேடப்பட்ட தகவல்களில் இந்த தகவல் தான் இரண்டாம் இடம் கொண்டிருந்தது. SANS Technology Institute என்ற நிறுவனத்தின் இன்டர்நெட் கண்காணிப்பு பிரிவு, இந்த இமெயில் டன் கணக்கில் பரவுவதாக அறிவித்துள்ளது. மெக் அபி நிறுவனம் இந்த வைரஸ் குறித்து முழுமையாக அறிய சில நாட்கள் ஆகும் என்று தெரிவித்துள்ளது. இந்த வைரஸ் பாதிப்பால் Comcast என்ற கம்ப்யூட்டர் நிறுவனம் தன் இமெயில் சர்வர்களை எல்லாம் மூடிவிட்டது.

இந்த வைரஸை அனுப்பிய சர்வர் மூடப்பட்டுவிட்டது. அதிலிருந்து இந்த வைரஸ் கோப்பு எடுக்கப் பட்டிருக்கலாம். ஆனாலும், ஏற்கனவே பரவிய கம்ப்யூட்டர்களிலிருந்து இந்த வைரஸ் இன்னும் உலகம் முழுவதும் பரவி வருகிறது.
இதிலிருந்து எப்படி தப்பிப்பது?

நல்ல ஆண்ட்டி வைரஸ் தொகுப்பினை பதிந்து இயக்குங்கள். ஏற்கனவே பதிந்திருந்தால், உடனே அப்டேட் செய்திடவும். இமெயில் இணைப்புகள் எது வந்தாலும் திறப்பதற்காக முயற்சி எடுக்க வேண்டாம். அனுப்பியவருக்கு தனி இமெயில் அனுப்பி, அனுப்பியதை உறுதி செய்து கொண்டு பின் திறக்கவும். “Here you Have” அல்லது “Just For You” என்று இருந்தால் எந்த சலனமும் இல்லாமல், முற்றிலுமாக அழித்துவிடவும். இந்த வைரஸ், நார்டன்/சைமாண்டெக் ஆண்ட்டி வைரஸ் தொகுப்புகளால் பாதுகாக்கப்பட்ட கம்ப்யூட்டர்களில் பரவ முடியவில்லை என்று ஒரு செய்தியும் வந்துள்ளது.

இருப்பினும் இமெயில்களைக் கவனமாகக் கையாளுங்கள்

source:dinamalar

பின்னூட்டமொன்றை இடுக

Filed under Uncategorized

இந்த வார டவுண்லோட் – லேப்டாப் டச்பேட்

E_1284978053.jpeg

லேப்டாப்பில் கீ போர்டினைப் பயன்படுத்து பவர்களுக்கு அடிக்கடி எழும் பிரச்னை, அவர்கள் விரல் அல்லது கைகளின் அடிப்புறம், டச்பேடில் தாங்கள் அறியாமலே அழுத்தப்பட்டு, டெக்ஸ்ட் கர்சர் இழுத்துச் செல்லப்படுவதுதான். சில லேப்டாப்களில், டச்பேட் அருகேயே ஒரு சிறிய ஸ்விட்ச் தரப்பட்டு, அதனை இயக்கினால், டச்பேட் இயக்கம் நிறுத்து வகையில் அமைக்கப் பட்டிருக்கும். ஆனால் பல லேப்டாப் மாடல்களில் இந்த ஸ்விட்ச் தரப்பட்டி ருக்காது. இதற்கு சாப்ட்வேர் புரோகிராம்கள் தயாரிக்கப்பட்டு வழங்கப்படுகின்றன. அவை குறித்து ஏற்கனவே இந்த பகுதியில் எழுதப்பட்டுள்ளது. மேலும் ஒரு புரோகிராம் இணைய தளத்தில் அண்மையில் வெளியிடப்பட்டுள்ளது. அதன் பெயர் டச்பேட் பால் (Touchpad Pal) இது டச்பேடைத் தற்காலிகமாக நிறுத்திவைக்கும் பணியினைச் சிறப்பாக மேற்கொள்கிறது. இதனை இன்ஸ்டால் செய்து இயக்கிவிட்டால், டெக்ஸ்ட்டினை கீ போர்ட் மூலம் உள்ளிடுகையில், தானாகவே டச்பேடின் இயக்கத்தினை நிறுத்திவிடுகிறது. இதனால், டச்பேடில் நம்மை அறியாமலேயே விரல்கள் பட்டு, கர்சர் இழுத்தடிக்கப்படுவது நடைபெறுவதில்லை. இந்த மாற்றத்தினை, இந்த புரோகிராம், சிஸ்டம் ட்ரேயில் தெரிவிக்கிறது. டச்பால் புரோகிராமினை விண்டோஸ் 16 மற்றும் 32 பிட் சிஸ்டம் புரோகிராம்களில் இன்ஸ்டால் செய்து பயன்படுத்தலாம். விண்டோஸ் விஸ்டா மற்றும் விண்டோஸ் 7 தொகுப்புகளிலும் இயங்குகிறது. மெமரியில் 10 எம்பி இடத்தை மட்டுமே எடுத்துக் கொள்கிறது. இதனை இலவசமாகப் பெறhttp://tpp.desofto.com/ என்ற முகவரியில் உள்ள தளத்திற்குச் செல்லவும்

source:dinamalar

பின்னூட்டமொன்றை இடுக

Filed under Uncategorized

விண்வெளியில் உங்களின் “முகம்’ மிதக்க ஆசைய ா?

large_88299.jpg

விண்வெளியில் தங்கள் புகைப்படம் மிதக்க வேண்டும் என்று ஆசைப்படுபவர்களுக்காக, ஒரு புதிய திட்டத்தை அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான "நாசா’ அறிவித்துள்ளது. இத்திட்டத்தின் கீழ், புகைப்படத்தை மட்டுமல்லாமல், பெயரையும் விண்வெளியில் மிதக்க விட முடியும்.

விண்வெளி வீரர்கள் போல, விண்வெளியில் பறக்க வேண்டும் என்று ஆசைப்படுபவர்களுக்காக, ஒரு "விண்வெளி சுற்றுலா’ திட்டத்தை வெளிநாடுகளில், பல்வேறு நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இந்த விண்வெளி சுற்றுலா திட்டம், வரும் 2012ம் ஆண்டு முதல் செயல்படுத்த தேவையான பணிகள் தற்போது நடந்து வருகின்றன. ஆனால், சாமான்யர்கள் இச்சுற்றுலாவில் தற்போது பங்கேற்க முடியாது. காரணம், இதற்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள அதிகமான கட்டணம் தான்.அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு நிறுவனம் விண்வெளிச் சுற்றுலாவிற்கு 90 லட்ச ரூபாய் கட்டணமாக அறிவித்துள்ளது. இதற்கு சம்மதித்து, கிட்டத்தட்ட 300 பேர் முன் பணம் கட்டியுள்ளனர்.

இந்நிலையில், விண்வெளிக்கு பறக்க முடியாவிட்டாலும் பரவாயில்லை, நமது முகமாவது பறந்தால் போதும் என்று நினைப்பவர்களுக்காக ஒரு புதிய திட்டத்தை அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா அறிமுகப்படுத்தியுள்ளது."பேஸ் இன் ஸ்பேஸ்’ என்று பெயரிடப்பட்டுள்ள இத்திட்டத்தின் கீழ், ஒருவர் தனது புகைப்படத்தையோ அல்லது பெயரையோ விண்வெளியில் பறக்க விட முடியும். இத்திட்டத்திற்காக, "பேஸ் இன் ஸ்பேஸ்’ என்ற பெயரில் ஒரு இணையதளம் துவக்கப்பட்டுள்ளது. தங்களின் புகைப்படத்தை விண்வெளிக்கு அனுப்ப விரும்புபவர்கள், அதை இந்த இணையதளத்தில் "அப்லோடு’ செய்ய வேண்டும்.இவ்வாறு அனுப்பி வைக்கப்படும் புகைப்படங்கள் மற்றும் பெயர்களை, விண்வெளிக்கு கொண்டு செல்ல டிஸ்கவரி எஸ்.டி.எஸ்.,-133 மற்றும் எண்டோவர் எஸ்.டி.எஸ்., – 134 என்ற இரண்டு விண்வெளி ஓடங்கள் பயன்படுத்தப்படும்.

"பேஸ் இன் ஸ்பேஸ்’ திட்டம் குறித்து, திட்ட மேலாளர் ஜான்ஷான்னான் கூறுகையில், "இத்திட்டம் பொதுமக்களுக்காக கொண்டு வரப்பட்டுள்ளது. பொதுமக்களின் புகைப்படங்கள் மற்றும் பெயர்களை விண்வெளி வீரர்கள் கொண்டு சென்று, பூமியின் வட்டப்பாதையில் மிதக்க விடுவார்கள். விண்வெளியில் இருந்து ஓடம் திரும்பியதும், விண்வெளிக்கு சென்று வந்த கமாண்டரின் கையெழுத்துடன் ஒரு நினைவுச் சான்று இன்டர்நெட் மூலம் அனுப்பி வைக்கப்படும். இத்திட்டத்தின் மூலம், புகைப்படம் அனுப்பியவர் தனது புகைப்படம் விண்வெளியில் மிதந்து கொண்டிருக்கிறது என்ற இனிய நினைவுகளை பெற முடியும். அவர் மறைந்தாலும், அவரது புகைப்படம் நீண்ட காலத்திற்கு விண்வெளியில் மிதந்து கொண்டிருந்து, வரலாற்றில் அவரது உருவத்தை பதிய வைக்கும்’ என்றார்.

அதிக கட்டணம் செலுத்த முடியாதவர்கள், விண்வெளி சுற்றுலாவிற்கு ஏற்ற உடல்நிலை, வயது இல்லாதவர்கள், நாசாவின் இந்த "பேஸ் இன் பேஸ்’ திட்டத்தின் மூலம் தங்களின் விண்வெளி சுற்றுலா குறித்த ஆவலை ஓரளவிற்கு பூர்த்தி செய்து கொள்ளலாம். நாசாவின் இத்திட்டத்திற்கு அமெரிக்கா மட்டுமல்லாமல், உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் ஆதரவு பெருகி வருகிறது.

பொதுமக்களுக்கு இதுதான் முதல் முறை : விண்வெளியில் பெயர்களை மிதக்கவிடும் திட்டங்கள் சில ஏற்கனவே செயல்படுத்தப்பட்டுள்ளன. கடந்த 1977ம் ஆண்டு, தொடக்க கல்வி மாணவர்களின் கையெழுத்துக்கள், "விண்வெளியில் மாணவர்களின் கையெழுத்து’ என்று பெயரிடப்பட்ட ஒரு திட்டத்தின் மூலம் விண்வெளிக்கு எடுத்துச் செல்லப்பட்டன. "காசினி’ விண்வெளி ஓடத்தின் மூலம், சனி கிரகத்தின் வெளிவட்ட பாதையிலும், "போனிக்ஸ் மார்ச் லேண்டர்’ என்ற விண் ஓடத்தின் மூலம் செவ்வாய் கிரக வட்டப்பாதையிலும், மற்றொரு விண்கலம் மூலம் சந்திரனின் வெளிவட்ட பாதையிலும் இந்த கையெழுத்துக்கள் "டிவிடி’ டிஸ்க்குகள் மூலம் மிதக்கவிடப்பட்டன.

இந்த வகையில் "வாயேஜர் 1′ என்ற விண்கலம் மூலம், "போனோகிராப் ரிக்கார்டு’ முறையில் பதிவு செய்யப்பட்ட முத்தம், தாயின் அன்பான அரவணைப்பு, பூமியில் எழும் பல்வேறு வகையான சத்தங்கள் அடங்கிய டிஸ்க் விண்வெளியில் பறக்கவிடப்பட்டது. ஆனால், நாசா அறிமுகப்படுத்தியுள்ள "பேஸ் இன் பேஸ்’ என்ற திட்டம் தான், பொதுமக்களும் தங்கள் புகைப்படங்களை விண்ணில் மிதக்கவிடும் ஒரு வாய்ப்பை உருவாக்கியுள்ளது. விண்வெளி வரலாற்றில் இது முதன் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

source:dinamalar

பின்னூட்டமொன்றை இடுக

Filed under Uncategorized

கூடுதல் வசதிகள் தரும் இணையதளம்

ComputerWorkshop.jpg

இணையப் பயன்பாடு மற்றும் மொபைல் அப்ளிகேஷன்களுக்கான கூடுதல் வசதிகளைத் தரும் புரோகிராம்களைத் தருவதற்காகவே ஓர் தளம் இணையத்தில் இயங்குகிறது.Lab Pixies என்ற பெயரில் உள்ள இந்த தளத்தில், பேஸ்புக், மை ஸ்பேஸ், ஹை 5, ஆர்குட், ஆண்ட்ராய்ட், ஐ போன், ஐ கூகுள் என்பவற்றுக்கான கூடுதல் வசதி புரோகிராம் களையும் இந்த தளம் கொண்டுள்ளது. கேம்ஸ், செய்யவேண்டிய பணிகள் கொண்ட பட்டியல், காலண்டர், கடிகாரம் என வழக்கமான வசதிகளைத் தரும் புரோகிராம் களும் உள்ளன. இந்த தளத்தில் உள்ள என்பதில் கிளிக் செய்தால் இவை அனைத்தும் கொண்ட பட்டியல் வகைப்படுத்தப்பட்டு கிடைக்கிறது. எடுத்துக்காட்டாக, பேஸ்புக் தளத்தில் கூடுதல் வசதிகளைத் தரும் புரோகிராம்கள் பெற வேண்டுமென்றால் Facebook என்பதில் கிளிக் செய்தால் போதும். இங்கு கிடைக்கும் சில லிங்க்குகளை கிளிக் செய்தால், அவை உங்களை யு–ட்யூப் தளத்திற்கு எடுத்துச் சென்று, சில அப்ளிகேஷன்களை எப்படி இயக்குவதென்ற வீடியோக்களைக் காட்டும். இந்த தளத்தில் கிடைக்கும் அப்ளிகேஷன் புரோகிராம்கள் அனைத்தும் சின்னஞ்சிறு வசதிகளைத் தருவதாகவே உள்ளன. இவை பற்றி பெரிய அளவில் எதுவும் கூற முடியாதென்றாலும் நாம் கொண்டுள்ள சிறிய அளவிலான எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுகின்றன. சிறிய அளவிலான எரிச்சல்களைப் போக்குகின்றன. நாம் கம்ப்யூட்டரைத் திறந்து வீடியோக்கள், இமெயில், செய்திகள், சீதோஷ்ண நிலை தகவல்கள், கேம்ஸ் மற்றும் பல தகவல்களைத் தேடி அறிவதை நம் தினப்படி வேலைகளாக வைத்துள்ளோம். இவற்றை அறிய, அவற்றிற்கான ஐகான் அல்லது இலச்சினைகளைத் தேடி, கிளிக் செய்து, பின் மெனுவைத் தேர்ந்தெடுத்து எனப் பல கிளிக் செயல்களுக்குப் பின்னரே அறிய முடிகிறது. இந்த சிறிய புரோகிராம்கள் மூலம் ஒரே கிளிக்கில் இவற்றை அறிய முடிகிறது. 2005 ஆம் ஆண்டில் கூகுள் தளத்தில் கூடுதல் வசதிகளுக்காக இந்த தளம் ஐ கூகுள் (iGoogle) என்ற அப்ளிகேஷனை அறிமுகப்படுத்தியது. அதன் பின்னர் பல அப்ளிகேஷன் புரோகிராம்கள் உருவாக்கித் தரப்படுகின்றன. இந்த தளம் குறித்த சிறப்பு செய்தி என்னவென்றால், இதனை அண்மையில் கூகுள் நிறுவனம் விலைக்கு வாங்கி தனதாக்கிக் கொண்டது. எனவே நமக்குக் கூடுதல் வசதி அளிக்க, இனி அதிக புரோகிராம்களை இந்த தளத்தில் எதிர்பார்க்கலாம். இந்த தளத்தின் முகவரிhttp://www.labpixies.com/
source:dinamalar

பின்னூட்டமொன்றை இடுக

Filed under Uncategorized

வேர்ட் டிப்ஸ்

ComputerWorkshop.jpg

வேர்டில் எல்லைக் கோடு அச்சிட
வேர்ட் தொகுப்பில் ஆவணங்களைத் தயாரிக்கையில், பக்கங்கள் அழகாகக் காட்சி அளிக்க பார்டர்களை ஏற்படுத்தி அச்சடிக்கும் பழக்கம் பலரிடம் உள்ளது. ஆனால் நமக்கு வாசகர்களிடம் இருந்து வரும் கடிதங்களில் பலர், இந்த எல்லைக் கோடுகள் சில வேளைகளில், மேலே உள்ளவையோ, பக்கவாட்டில் உள்ளவையோ, அச்சிட மறுக்கின்றன என்று தெரிவித்து, அதனை எப்படி அச்சிடவைப்பது என்றும் கேட்டுள்ளனர்.
முதலில் இதற்கான காரணத்தைத் தெரிந்து கொள்வோம். இப்படிப்பட்ட நிகழ்வுகளுக்குக் காரணம், பார்டர் கோடுகளை மிகப் பெரிதாக அமைப்பதுதான். எல்லை மீறிச் செல்லும் இந்த பெரிய எல்லைக் கோடுகளை அச்சுப்பொறியால் அச்சிட இயலுவதில்லை. அனைத்து பிரிண்டர்களும், தாளின் ஓரங்களைச் சுற்றி “dead space” என்று ஓர் இடத்தைக் கொள்கின்றன. இந்த இடமானது பிரிண்டரால் பயன்படுத்த என பிரிண்டர் ஒதுக்கிக் கொள்கிறது. எனவே இதில் எதுவும் அச்சாகாது. ஒவ்வொரு பிரிண்டரும் ஒவ்வொரு வகையில் இந்த அச்சிடா இடத்தை வரையறை செய்துள்ளன. அது எவ்வளவு என்பதை பிரிண்டருடன் தரப்படும் குறிப்பேட்டில் இருந்து தெரிந்து கொள்ளலாம்.
எனவே நாம் இதனை உணர்ந்து நம் பார்டர் கோடுகளை அமைக்க வேண்டும். இதனை அமைத்திடும் வழிகளை வேர்ட் தருகிறது. நீங்கள் வேர்ட் 2007க்கு முன்னர் வந்த தொகுப்புகளைப் பயன்படுத்துபவராக இருந்தால், கீழ்க்குறித்துள்ளபடி செட்டிங்ஸ் அமைக்கவும்.
1. Format மெனுவிலிருந்து Borders and Shading என்பதைத் தேர்ந்தெடுக்கவும். வேர்ட் Borders and Shading டயலாக் பாக்ஸினைக் காட்டும்.
2.இந்த டயலாக் பாக்ஸில் Page Border டேப் தேர்ந்தெடுக்கவும்.
3. பின்னர் இதில் Options பட்டனில் கிளிக் செய்திடவும். இப்போது Border and Shading Options என்ற டயலாக் பாக்ஸ் கிடைக்கும்.
4. இதன் மூலம் மேல், கீழ், இடது மற்றும் வலது ஓரங்களை செட் செய்திடலாம். Dead SpaceUS அதிகமாக இருக்கும் வகையில் செட் செய்திடவும்.
5. அடுத்து இருமுறை ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.
நீங்கள் வேர்ட் 2007 தொகுப்பினைப் பயன்படுத்துபவராக இருந்தால், கீழ்க்குறிப்பிட்ட நடைமுறையைப் பின்பற்றவும்.
1. ரிப்பனில் Page Layout என்ற டேப் காட்டப்படுகிறதா என்று பார்த்து, அதனைத் தேர்ந்தெடுக்கவும்.
2. Page Background குரூப்பில் Page Borders என்ற பக்கத்தினைக் கிளிக் செய்திடவும். வேர்ட் இப்போது Borders and Shading டயலாக் பாக்ஸில், Page Border டேப்பினைக் காட்டும்.
3. அடுத்து ஆப்ஷன்ஸ் பட்டனைக் கிளிக் செய்திடவும். இப்போது வேர்ட் Border and Shading Options என்ற டயலாக் பாக்ஸைக் காட்டும்.
4.இந்த டயலாக் பாக்ஸில் உள்ள கண்ட்ரோல்களைப் பயன்படுத்தி, உங்களுக்கு பார்டர் எப்படி தோற்றமளிக்க வேண்டும் என்பதனை உறுதி செய்திடவும். வேர்டில் பாராகிராப் பார்டர் அமைப்பதற்கான கண்ட்ரோல் போலவே இவையும் செயல்படுகின்றன.
5. இவற்றின் மூலம் மேல், கீழ், இடது மற்றும் வலது ஓரங்களை செட் செய்திடலாம். Dead SpaceUS அதிகமாக இருக்கும் வகையில் செட் செய்திடவும்.
6. அடுத்து இருமுறை ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.
இனி நீங்கள் அச்சடிக்கையில், இன்னும் ஆவணத்தின் எல்லைக் கோடுகள் அச்சிடப் படவில்லை என்றால், நீங்கள் செட் செய்த பேஜ் பார்டர் செட்டிங்ஸ் மற்றும் பேஜ் மார்ஜின் செட்டிங்ஸ் இணைந்து ஒத்துப் போகவில்லை என்று பொருள். உங்களுடைய பேஜ் பார்டர் செட்டிங்ஸ் Dead SpaceUS அதிகமாக இருக்கும் வகையிலும், பேஜ் மார்ஜினுக்குக் குறைவாகவும் இருக்கும்படியும் செட் செய்யப்பட்டிருக்க வேண்டும். எடுத்துக்காட்டாக, உங்களுடைய பேஜ் பார்டர், கீழாக 36 புள்ளிகளில், அதாவது ஒன்றரை அங்குல இடத்தில் அச்சிட செட் செய்யப்பட்டிருந்தால், பக்கத்தின் கீழ்ப்பாகத்திற்கான பேஜ் மார்ஜின் இதனைக் காட்டிலும் அதிகமாக இருக்க வேண்டும். இதனை மீண்டும் சோதனை செய்து உறுதி செய்து பின் ஓகே கிளிக் செய்து அச்சிட்டுப் பார்க்கவும்.
திறக்கும் பைல் உன்னுடையதல்ல!
வேர்ட் தொகுப்பில் ஏதேனும் மாற்றங்களை ஏற்படுத்த முனைகையில், அல்லது அதனை பெயர் மாற்ற, அழிக்க முற்படுகையில்,இந்த ஆவணமானது இன்னொருவரால் பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது என்ற செய்தி கிடைக்கும். நாம் ஒருவர் தானே கம்ப்யூட்டரைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம். இந்த பைலைத் தான் மூடிவிட்டோமே, பின் ஏன் இந்த செய்தி என நாம் திகைப்போம். இந்த எதிர்பாராத செய்தி, திகைப்பினை சந்திக்காமல் இருக்க சிலவற்றை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
வேர்ட் எப்போதும் ஒரு டாகுமெண்ட் யாரால் பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கப்படுகிறது, அல்லது மற்றவர் பயன்படுத்த முடியா நிலையில் வைக்கப்பட்டிருக்கிறது என்பதைத் தேடி அறிந்து கொண்ட பின்னரே செயல்படும். இதன் மூலம் டாகுமென்ட் ஒன்றில் இருவர் ஒரே நேரத்தில் எடிட் செய்து சிக்கல் ஏற்படும் சூழ்நிலை தடுக்கப்படுகிறது.
நீங்கள் முதன்முதலாக வேர்ட் தொகுப்பினைத் திறக்கிறீர்கள். டாகுமெண்ட் ஒன்றைத் திறக்க முயற்சிக்கிறீர்கள். அப்போது அந்த டாகுமெண்ட் “locked for editing by another user?” என்று செய்தி கிடைக்கிறது. வேர்ட் உங்களுக்கு படிக்க மட்டுமே அந்த டாகுமெண்ட்டைத் திறக்கிறது. ஆனால் உங்களுக்கோ அதனை எடிட் செய்திட வேண்டும் என்பது நோக்கம்.
இங்கு என்ன நடக்கிறது என்பதனை வேர்ட் எப்படி ஆவணங்களைத் திறக்கிறது என்பதனைப் பார்த்து புரிந்து கொள்ளலாம். நீங்கள் டாகுமெண்ட் ஒன்றைத் திறக்கையில், வேர்ட் அந்த டாகுமெண்ட்டிற்கான owner file ஒன்றைத் திறக்கிறது. அந்த பைல் நீங்கள் திறக்க இருக்கும் அதே பைல் பெயரில் திறக்கப்படுகிறது. அந்த பெயருக்கு முதலாக ஒரு டில்டே அடையாளம் (a tilde (~)) இருக்கும். இதனை அடுத்து ஒரு டாலர்(($)) அடையாளமும் இருக்கும். எடுத்துக் காட்டாக நீங்கள் திறக்க விரும்பும் கோப்பின் பெயர் BigBudget.doc என்றால், வேர்ட் ~$gBudget.doc என்ற பெயரில் இன்னொரு கோப்பிற்கு உரிமையுள்ளவருக்கென ஒரு பைலைத் திறக்கிறது.
இந்த உரிமையாளருக்கான பைல் மூலம் தான், வேர்ட் அப்போது அந்த டாகுமெண்ட்டை யார் திறந்து வைத்துப் பயன்படுத்துகிறார்கள் என்று அறிந்து கொள்கிறது. இது ஒரு தற்காலிக பைல் தான். (நீங்கள் பைலை மூடுகையில் இது அழிக்கப்படுகிறது) இந்த பைலில் தான், அந்த ஆவணத்தைத் திறந்தவர், கம்ப்யூட்டரில் எந்த லாக் இன் பெயரில் நுழைந்தாரோ அவரின் பெயர் இருக்கும். பைல் அழிக்கப்படுகையில் அதுவும் நீக்கப்படும்.
இங்கு தான் பிரச்னையே தொடங்குகிறது. ஆரம்பத்தில் சொன்னபடி என்ற செய்தி வருகிறது என்றால், அதற்கான காரணம் கீழ்க்குறித்த மூன்றில் ஒன்றாக இருக்கலாம்.
1. வேர்ட் தொகுப்பு, இறுதியாகப் பயன்படுத்தப் பட்ட போது, சரியாக மூடப்படவில்லை. இதனால் அது உருவாக்கிய தற்காலிக பைல் அழிக்கப்படவில்லை. இதற்குக் காரணம் கம்ப்யூட்டருக்கு வந்த மின்சாரம் திடீரென தடை பெற்று, இயக்கம் முடங்கிப் போயிருக்கலாம்.
2. இந்த டாகுமெண்ட், நெட்வொர்க் ஒன்றில் இன்னொருவரால் திறக்கப்பட்டிருக்கலாம்.
3. வேர்ட் தொகுப்பு இரண்டாவது முறையாகத் திறக்கப்பட்டு அங்கே இந்த டாகுமெண்ட் திறக்கப்பட்டிருக்கலாம்.
மேலே சொன்ன எவையும் நடைபெற்றிருக்க வாய்ப்பே இல்லை எனத் தெளிவாக நீங்கள் உறுதி செய்து கொண்டால், நீங்கள் இந்த டாகுமெண்ட்டைக் கீழ்க்காணும் வழிகளில் சென்று பத்திரமாக, உங்களுக்காகவே, எடிட் செய்வதற்காகவே திறக்கலாம்.
1. உங்களுடைய சிஸ்டத்தில் வேர்ட் எத்தனை முறை திறக்கப்பட்டிருந்தாலும், அனைத்தையும் மூடவும்.
2. டாஸ்க் மேனேஜர் விண்டோவினைத் திறக்கவும். (கண்ட்ரோல் + ஆல்ட்+டெலீட் – Ctrl+Alt+Del அழுத்தவும்)
3. அப்ளிகேஷன் (Application) டேப் தேர்ந்தெடுத்து, அதில் வேர்ட் இயங்கிக் கொண்டிருப்பதாகத் தெரிந்தால், அதனைத் தேர்ந்தெடுத்து நிறுத்தவும். நீங்கள் மேலே 1ல் கூறியதனைச் சரியாக நிறைவேற்றி இருந்தால், இந்த டேப்பில் வேர்ட் இயக்கத்தினைக் காண முடியாது.
4. அடுத்து Processes டேப்பினைப் பார்க்கவும்.
5. Processes பட்டியலில் Winword.exe என்ற பைல் பெயர் உள்ளதா எனப் பார்க்கவும். இருந்தால் அதனைத் தேர்வு செய்து End Process என்பதில் கிளிக் செய்திடவும். எச்சரிக்கை செய்தி கிடைக்கும். யெஸ் என அனுமதி தரவும். இந்த செயல்பாடு எதற்காக என்றால், வேர்ட் சில வேளைகளில் குழப்பமடைந்து, உங்கள் கம்ப்யூட்டர் மெமரியில் சில வேலைகளை விட்டு வைக்கும்.
6. டாஸ்க் மேனேஜரை நிறுத்தவும்.
7. அடுத்து விண்டோஸ் எக்ஸ்புளோரர் பயன்படுத்தி, நீங்கள் திறக்க விரும்பும் கோப்பு உள்ள போல்டரைத் திறக்கவும். அதில் மேலே சொன்ன டில்டே மற்றும் டாலர் அடையாளங்களுடன், நீங்கள் தேடும் பைலின் பெயரையும் கொண்டு ஒரு பைல் இருந்தால், அதனை அழிக்கவும். இப்போது நீங்கள் திறக்க விரும்பும் பைலை, உங்களுடையதாக, உங்களுக்கே உரிமையானதாக நீங்கள் திறந்து எடிட் செய்திடலாம்.

source:dinamalar

பின்னூட்டமொன்றை இடுக

Filed under Uncategorized