Monthly Archives: ஓகஸ்ட் 2010

வேர்ட் டிப்ஸ்

பின்னூட்டமொன்றை இடுக

Filed under Uncategorized

பறவைகள் நீண்ட தூரம் பறக்கும் ரகசியம்

Tamil news paper, Tamil daily news paper, Tamil news, Tamil movie news, Tamil news paper online, political news, business news, financial news, sports news, today news, India news, world news, daily news update

உலகின் பல்வேறு நாடுகளில் உள்ள பறவைகள் இனப்பெருக்கத்திற்காகவும் சீதோஷ்ண நிலை காரணமாகவும், ஒவ்வொரு ஆண்டும் இடம் பெயர்கின்றன. இந்த இடப் பெயர்ச்சியின் போது அவை பல ஆயிரம் கி.மீ. தூரத்தை கடக்கின்றன. சில பறவைகள் தொடர்ந்து பல மணி நேரம் பறந்து இலக்கை அடைகின்றன. “பல ஆயிரம் கி.மீ., தூரம் தொடர்ந்து பறப்பதற்கான உடல் திறன், இப்பறவைகளுக்கு எப்படி கிடைக்கிறது…’ என்பது, பறவைகள் குறித்த ஆய்வாளர்களின் நீண்ட நாள் கேள்வியாக இருந்தது. இந்நிலையில், நீண்ட தூர பயணம் மேற்கொள்ளும் பறவைகள் சக்தி பெற, “பெர்ரி’ பழங்களை அதிகமாக உண்ணுகின்றன என்ற புதிய தகவல் சான்பிரான்சிஸ்கோ நகரில் உள்ள அமெரிக்க ரசாயன கழகம் நடத்திய தேசிய கூட்டத்தில் வெளியிடப்பட்டுள்ளது. “மனிதர்களின் உடல் நலத்திற்கு சத்துக்கள் தரும் பழங்கள், காய்கறிகள் குறித்து நாங்கள் ஆய்வு செய்து கண்டுபிடித்துள்ளோம். இடப்பெயர்ச்சி செய்யும் பறவைகளும், அதிக சத்துக்கள் நிறைந்த உணவையே விரும்புகின்றன…’ என்று ரோட்தீவு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வு தலைவர் நவீன்டிராசீரம் கூறியுள்ளார். பெர்ரி பழங்களை உண்ணும் 12 பறவைகளை ரோட் தீவு, டின்னி பிளாக் தீவுகளில் நவீன்டிராசீரம் மற்றும் அவருடன் பணியாற்றுபவர்கள் சேகரித்தனர். இப்பறவைகள் அட்லாண்டிக் கடல் வழியாக பறக்கும் போது இடையே உள்ள தீவுகளில் இறங்கின. அப்போது பறவைகளின் ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் அளவு மற்றும் நன்கு பழுத்த நிலையில் உள்ள ஆரோவுட், வின்டர் பெர்ரி, பேபெர்ரி, சோக் பெர்ரி, எல்டர்பெர்ரி ஆகிய பழங்களின் பிக் மென்ட்களை ஆய்வாளர்கள் ஆய்வு செய்தனர். பறவைகள் நீண்ட தூரம் பறக்கும் திறன் குறித்து நவீன்டிராசீரம் கூறிய தாவது:

மற்ற பெர்ரி பழங்களின் சராசரியை விட ஆரோவுட் பழத்தில் 650 சதவீதத்திற்கும் அதிகமான பிக்மென்ட்டும் ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் 150 சதவீதத்திற்கும் அதிகமாகவும் உள்ளன. இதனால் தான் பறவைகள் ஆரோவுட் பழங்களை அதிகமாக உண்கின்றன. இலையுதிர் காலத்தில் இடப்பெயர்ச்சி செய்யும் சில பறவைகள், தங்கள் எடையைப் போல மூன்று மடங்கு பெர்ரி பழங்களை உண்ணுகின்றன. ஒரு மனிதன் தினசரி 136 கிலோ சாப்பிட்டால் எந்த அளவு சக்தி கிடைக்குமோ அதைவிட இது அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. இடப்பெயர்ச்சி செய்யும் சில பறவைகள் கறுப்பு நிறத்திலும், ஆழ்ந்த பிக்மென்ட் மற்றும் உயர்வான ஆன்டி ஆக்சிடன்ட் கொண்ட பழங்களை விரும்புவதை, முன்னதாக விஞ்ஞானிகள் அறிந்திருந்தனர். ஆன்டி ஆக்சிடன்ட், நோய் எதிர்ப்பு சக்தியை தருவதுடன், பறவைகள் நீண்ட தூரம் பறப்பதற்கான சக்தியையும், உடல் வெப்பம் அதிகரிக்கும் சக்தியையும் தருகின்றன. இவ்வாறு நவீன்டிராசீரம் கூறியுள்ளார். பழங்களை தின்று கொட்டைகளை எச்சங்களாக வெளியேற்றுவதன் மூலம் பழம் தரும் தாவரங்கள் பல இடங்களில் பரவுகின்றன. இதன் மூலம் சக்தியளிக்கும் பழங்களை தரும் பெர்ரி இன மர வகைகளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் உலகின் பல இடங்களில் அவை பரவ, இடப்பெயர்ச்சி செய்யும் பறவைகள் உதவுகின்றன.

source:dinakaran

பின்னூட்டமொன்றை இடுக

Filed under Uncategorized

பத்திரிகை துறையில் வெற்றிக்கொடி நாட்டிய “மலையாள மனோரமா’ ஆசிரியர்கே.எம்.மாத்யூ

large_53311.jpg

இந்திய பத்திரிகை உலகின் ஜாம்பவானும், மலையாள மனோரமா நாளிதழின் முதன்மை ஆசிரியருமான கே.எம்.மாத்யூ (93) காலமானார். கேரள மாநிலம் கோட்டயம் குஞ்ஞிக்குழி பகுதியில் உள்ள வீட்டில் நேற்று முன்தினம் அதிகாலை 6 மணியளவில் காலமானார். அவரது இறுதிச் சடங்குகள் நேற்று மாலை புத்தன் பள்ளியில் நடந்தது.

மறைந்த கே.எம்.மாத்யூ 1917ம் ஆண்டு ஜன., 2ம் தேதி கண்டத்தில் கே.சி.மாம்மன் மாப்பிள்ளை மற்றும் குஞ்ஞாண்டம்மா (மாம்மி) ஆகியோரது 8வது மகனாக பிறந்தார். கல்வியை முடித்த அவர் 1954ல் மலையாள மனோரமா நாளிதழின் நிர்வாக இயக்குனராகவும், பொது மேலாளராகவும் பதவி ஏற்றார். அவரது சகோதரன் கே.எம்.செரியனின் மறைவை அடுத்து, 1973ல் அவர் இந் நாளிதழின் முதன்மை ஆசியராக பதவி ஏற்றார். அவர் பதவியேற்ற போது மலையாள மனோரமா நாளிதழ் விற்பனை வெறும் 30 ஆயிரம் பிரதிகளாக இருந்தது. அதுவும் கோட்டயம் நகரில் மட்டுமே அந்நாளிதழ் அச்சிடப் பட்டு வந்தது. அதை தற்போது 18 லட்சம் பிரதிகளாக மாற்றி காட்டிய பெருமை அவரையே சேரும். அதற்காக அவர் இரவு, பகல் பாராமல் கடுமையாக உழைத்தார்.

கேரளத்தில் கோட்டயம் நகரில் மட்டுமே அச்சாகி வந்த நாளிதழை, அவர், மாநிலத்தில் 10 மாவட்டங்களிலும் அச்சிட வழி வகுத்தார். மேலும், மாநிலத்தை விட்டு சென்னை, பெங்களூரு, மங்களூரு, டில்லி, மும்பை ஆகிய வெளி மாநில நகரங்களிலும், பக்ரைன், துபாய் ஆகிய அரபு நாடுகளிலும் பதிப்புக்களை துவக்கி சாதனை படைத்தார். மலையாள மனோரமா நாளிதழ் மட்டுமல்லாமல் எம்.எம்.பப்ளிகேஷன்ஸ் சார்பில், மலையாள மனோரமா வார இதழ், மகளிருக்காக வனிதா, பாஷாபோஷினி, ஆங்கிலத்தில் தி வீக், குழந்தைகளுக்காக பாலரமா ஆகிய இதழ்களையும் அவர் துவக்கினார். இது தவிர சில ஆண்டுகளுக்கு முன் எம்.எம்.மியூசிக், மலையாள மனோரமா தொலைக்காட்சி சேனல், மாம்கோ பண்பலை வானொலி ஆகியவற்றையும் அவர் துவக்கி அனைத்திலும் வெற்றி கண்டார். பத்திரிகைத் துறை என்றில்லாமல், தகவல் துறையில் அவருக்கு நிகர் அவரே என்ற புதிய சாதனையையும் அவர் பல ஆண்டுகளாக சாதித்து வந்தார்.

பத்திரிகை துறையில் அவரது சாதனைகளை பாராட்டி மத்திய அரசு அவருக்கு 1998ம் ஆண்டு பத்மவிபூஷண் விருது வழங்கி பாராட்டியது. அவரை போலவே அவருக்கு அமைந்த அவரது துணைவியார் அன்னம்மாவும் சிறந்த நிர்வாகியாக திகழ்ந்தார். அவர் 2003ல் காலமாகும் வரை வனிதா இதழின் முதன்மை ஆசிரியராக பணியாற்றி வந்தார். இத்தம்பதிகளுக்கு மாம்மன் மாத்யூ, பிலிப் மாத்யூ, ஜேக்கப் மாத்யூ மகன்களும் மற்றும் மகள் தங்கம் மாம்மன் ஆகியோர் உள்ளனர். இவர்களில் மாம்மன் மாத்யூ மலையாள மனோரமா நாளிதழின் ஆசிரியராகவும், பிலிப் மாத்யூ இந்நாளிதழின் நிர்வாக ஆசிரியராகவும், செயல் ஆசிரியராக (எக்ஸ்க்யூட்டிவ் எடிட்டர்) ஜேக்கப் மாத்யூ ஆகியோர் பதவி வகித்து வருகின்றனர். இவர்களது மனைவியர் முறையே பிரேமா மாம்மன் மாத்யூ வனிதா இதழின் ஆசிரியராகவும், பீனா பிலிப் மாத்யூ பாலரமா இதழின் ஆசிரியராகவும், அம்மு ஜேக்கப் மாத்யூ மாஜிக்பேட் இதழின் ஆசிரியராகவும் பணியாற்றி வருகின்றனர். இவர்களை தவிர சி.சி.எஸ்.டெக்னாலஜிஸ் மற்றும் மிஸ்டர் பட்லேர்ஸ் ஆகிய நிறுவனங்களின் நிர்வாக இயக்குனரான சி.பி.மாம்மன் என்பவர் இவரது மருமகன்.

கடைசி துடிப்பு வரை பத்திரிகை வளர்ச்சி தான்: "மாத்துக்குட்டி அச்சாயன்’ என்று அனைவராலும் மரியாதையாகவும்,அன்பாகவும் அழைக்கப்பட்ட மலையாள மனோரமா நாளிதழின்முதன்மை ஆசிரியர் கே.எம். மாத்யூ தனது உயிரின் கடைசி துடிப்பு வரைபத்திரிகை வளர்ச்சி குறித்தே சிந்தித்து வந்தார். கோட்டயத்தில் தனது, "ரூப்கலா’ வீட்டில் கே.எம். மாத்யூ கடந்த 31ம்தேதி காலை உணவு முடித்துக் கொண்டு டாக்டர்களின் அறிவுரைப்படிசிறிது நேரம் ஓய்வெடுத்தார். காலை.11.30 மணிக்கு வீட்டில் இருந்துபுறப்பட்டு மலையாள மனோரமா அலுவலகத்திற்கு சென்றார். அங்கு வழக்கம்போல் நடைபெறும் ஆசிரியர்குழு ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றார். சிலஆலோசனைகளை அவர் அப்போது வழங்கினார். அதன் பின், பிற்பகல் ஒரு மணியளவில் வீடுதிரும்பினார். மதிய உணவுக்கு பின் மீண்டும்அவர் ஓய்வெடுத்தார். மாலையில் பேரக்குழந்தைகளுடன் சிறிது நேரம் விளையாடி அவர்களைமகிழ்வித்தார். அவரது மகன்கள் மாம்மன் மாத்யூ,ஜேக்கப் மாத்யூ ஆகியோருடன் குடும்ப விஷயங்கள் பேசினார். மாலை 5 முதல் இரவு 7 மணி வரை மீண்டும் பத்திரிகைகள் குறித்து அலச துவங்கினார்.

அவரது செயலரிடம் மறுநாள் நாளிதழில் வெளியாக உள்ள தலையங்க பக்கம், நான்காம் பக்க கட்டுரைகள் குறித்து கேட்டறிந்தார். அது தவிர, அன்றைய தினம் வெளியானசில நாளிதழ்களில் பிரசுரிக்கப்பட்ட சில செய்திகள் குறித்து கருத்து கேட்டறிந்தார். இரவு 7.45 மணிக்கு பிரார்த்தனை முடித்து ஐந்து நிமிடங்கள்சங்கீர்த்தனம் செய்தார். இரவு 8 மணிக்கு கஞ்சியும், மீன்கறியும், ஊறுகாயுடன் உணவை முடித்துக் கொண்ட அவர் இரண்டு மணிநேரம்தொலைக்காட்சிகளில் செய்திகளை பார்த்தார். இரவு 10 மணிக்கு உறங்கச் சென்றார். அவருடன் உதவியாளர் அனியன் என்பவர் இருந்தார். அதிகாலை 5.45 மணிக்கு எழுந்த அவர் சிறிதுகுடிநீர் பருகினார். பின், அவர் உதவியாளரிடம், "அதிகமாக குளிருகிறது.மின்விசிறியை "ஆப்’ செய்து விடுங்கள்’ என்றார். அப்போது அவரது கைகள் நடுங்கிக் கொண்டிருந்தன. உடனே அவரது உதவியாளர் அவரை மெதுவாக படுக்கையில் கிடத்தினார். டாக்டருக்கு தகவல் பறந்தது. டாக்டர் கே.சி.மாம்மன் வந்து பார்த்தார். அதற்குள் அவர் காலமாகி விட்டார். காலை 6 மணியளவில் மரணம் சம்பவித்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர். தொடர்ந்து, அவரது உடல் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, உடல் கெடாமல் இருக்க "எம்பாம்’ செய்யப்பட்டு மீண்டும் வீட்டுக்கு கொண்டு வரப்பட்டது.

கணவனின் வெற்றிக்கு பின்னால் மனைவி: ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கு பின்னால் ஒரு பெண் இருப்பதுஉலக நியதியாக இருந்து வருகிறது. இந்த நியதி மலையாள மனோரமா நாளிதழ் ஆசிரியர் கே.எம்.மாத்யூவின் வாழ்க்கையிலும் நடந்தது. அவரது மனைவி அன்னம்மா மாத்யூ. இவர்களது திருமணம் 1942ம்ஆண்டு செப்டம்பர் 7ம் தேதி நடந்தது. மலையாள மனோரமா நாளிதழின் சீப் எடிட்டரான கே.எம். மாத்யூவெற்றிக்கு பின் துணையாக இருந்தது அவரது மனைவியே தான். பத்திரிகையில் வரும் செய்திகளை சாதாரண வாசகர்களும் எளிதில் அறிந்துகொள்ளும் வகையில் அவரது செய்திகள் இடம் பெற்றது அந்நாளிதழின் வளர்ச்சிக்கு பெரும் துணையாக இருந்தது எனலாம். ஒரு நாளிதழை அனைத்து தரப்பினரும் விரும்பி படிக்கவேண்டும்என்பதற்காக அதற்கான பெரும் முயற்சிகளில் ஈடுபட்டு வெற்றி கண்டவர்.

எவ்வளவு பணிகள் இருந்தாலும் தம்பதிகள் இடையே இருந்துவந்த அன்பும், பாசமும் கடைசிவரை மாறவே இல்லை.கணவனுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் இன்முகத்துடன் சிரமம் பாராமல் உழைத்து வந்தார் அவரது மனைவி. ஒரு கட்டத்தில்மனைவியின் உடல் நலம் குன்றி நடக்க முடியாத நிலை ஏற்பட்டபோது,சக்கர நாற்காலியில் மனைவியை அழைத்துச் சென்று வந்தவர் கணவர். பத்திரிகை துறையில் மனைவிக்கு இருந்த ஆர்வத்தையும், மகளிருக்கு தேவையான தகவல்களை அளிக்கவேண்டும் என்பதற்காகவும்,மகளிர் முன்னேற்றத்திற்காகவும் மலையாள மனோரமா துவக்கிய,வனிதா இதழின் ஆசிரியராக அன்னம்மா மாத்யூ அமர்த்தப்பட்டார்.

கடந்த 2003ம் ஆண்டு அன்னம்மா மாத்யூ மறைந்தார். அவரதுமறைவிற்கு பின், கே.எம். மாத்யூ தளர்ந்து போனார்."எட்டாவது மோதிரம்’ என்ற தனது சுயசரிதையில் இது குறித்துகே.எம். மாத்யூ விளக்கி உள்ளார். தன்னுடைய வாழ்க்கையில் நடந்ததில் 99 சதவீதமும் இறைவன் அருளால் நடந்தது. மீதமுள்ள 1 சதவீதம்மட்டும் தான் அவர் செய்தது என்று நம்பினார்.அந்த 1 சதவீத பணியையும் நாம் ஆத்மார்த்தமாகவும், அர்ப்பணிப்புஉணர்வோடும், பணிவோடும் செயல்பட்டே தீரவேண்டும். நம் எதையும் நிச்சயிக்க முடியாது என்பதை நாம் உணரும்பட்சத்தில் நாம் செய்யும் செயல்கள் அனைத்திலும் ஆணவமோ, அகங்காரமோ இருக்காது’என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

source:dinamaalr

பின்னூட்டமொன்றை இடுக

Filed under Uncategorized

எலிகளை உண்ணும் தாவரம் கண்டுபிடிப்பு

Eliyunni1.jpg

உயிருடன் உள்ள எலி போன்ற உயிரினங்களை அப்படியே சாகடிக்கும் வல்லமை கொண்ட தாவரம் ஒன்று தொடர்பான அதிர்ச்சித் தகவலை விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ளனர். மனிதர்கள் மீது அப்படியே படர்ந்து கசக்கி கொன்று விடும் செடி கொடிகளைப் பற்றி கதைகளில் படித்திருப்பீர்கள். ஆனால் உண்மையில் அப்படி ஒரு செடி இருப்பதை விஞ்ஞானிகள் இப்போது கண்டுபிடித்துள்ளனர்.

இந்த செடியின் இலைகள் உயிருடன் உள்ள எலி போன்ற உயிரினங்களை அப்படியே சாகடிப்பதைப் பார்த்த விஞ்ஞானிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். பிரபல தாவர இயல் விஞ்ஞானிகள் ஸ்டூவர்ட் மெக்பெர்சன் அலாஸ்டியர் ரொபின்சன் தலைமையிலான விஞ்ஞானிகள் குழு பிலிப்பைன்ஸ் நாட்டில் விக்டோரியா மலைப்பகுதியில் செடி, கொடிகள் பற்றிய ஆராய்ச்சியை மேற்கொண்டிருந்தனர்.

அப்போதுதான் இந்த மாமிசம் உண்ணும் தாவரம் பற்றி தெரிந்து கொண்டனர். இந்த மலைப்பகுதியில் கிறிஸ்தவ மத பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த மிஷனரிகள் இந்த அபூர்வ தாவரம் பற்றி கேள்விப்பட்டனர். அவர்கள் கொடுத்த தகவலை ஆராய்ச்சி செய்தபோதுதான் இந்த தாவரம் பற்றி தெரிந்து கொண்டனர்.

source

பின்னூட்டமொன்றை இடுக

Filed under Uncategorized

இந்த வார டவுண்லோட்

கிளிப் பாக்ஸில் அடுக்கலாம்

E_1280642587.jpeg

விண்டோஸ் தரும் கிளிப் போர்டுக்கு, ஒருமுறை ஒரே ஒரு டெக்ஸ்ட் அல்லது படம் மட்டுமே அனுப்ப முடியும். அடுத்த என்ட்ரி அமைக்கையில், முதலில் உள்ளது நீக்கப்படும். எனவே நிறைய தனித்தனி டெக்ஸ்ட் அல்லது படத்தினை காப்பி மற்றும் பேஸ்ட் செய்திட வேண்டுமென்றால், தனித்தனியே ஒவ்வொரு முறையும் மேற்கொள்ள வேண்டும்.
இந்தக் குறையை நீக்குகிறது கிளிப் பாக்ஸ் என்னும் புரோகிராம். இது கிளிப் போர்டின் ஒரு விரிவாக்கம் என்று கூடச் சொல்லலாம். இதில் 2,000க்கும் மேற்பட்ட விஷயங்களை காப்பி செய்து வைத்து, தேவைப்படும்போது தேவையான விஷயங்களை மட்டும் எடுத்து பேஸ்ட் செய்திடலாம். இதில் ஒரு சின்ன சிக்கல் உள்ளது. இந்த கிளிப் பாக்ஸில் டெக்ஸ்ட் என்ட்ரிகள் மட்டுமே காப்பி செய்து வைக்க முடியும். படங்கள் மற்றும் பிற விஷயங்களை இது ஒதுக்கிவிடுகிறது.
இது எப்படி செயல்படுகிறது என்று பார்ப்போம். இந்த அப்ளிகேஷனை இயக்கியவுடனேயே செயல்படத் தொடங்குகிறது. இந்த சாப்ட்வேர் சிஸ்டம் ட்ரேயில் ஒரு ஐகானை அமைக்கிறது. இதனைக் கிளிக் செய்தால், கிளிப் போர்டில் உள்ள அனைத்து காப்பி செய்யப்பட்ட டெக்ஸ்ட்களைக் காட்டுகிறது. இதில் காப்பி செய்யப்பட்டுள்ள டெக்ஸ்ட்டை, காப்பி செய்திட வேண்டும் எனில் இரண்டு வழிகள் உள்ளன. அந்த டெக்ஸ்ட் இருக்கும் இடம் சென்று டபுள் கிளிக் செய்திடலாம். அல்லது கண்ட்ரோல் + சி அழுத்தலாம். வேறு ஷார்ட் கட் கீகள் எதுவும் இதில் செயல்படவில்லை என்பது சிறிய ஏமாற்றமே.
இதில் ரைட் கிளிக் செய்தால், பல ஆப்ஷன்கள் அடங்கிய மெனு ஒன்று கிடைக்கிறது. இதன் மூலம் ஒவ்வொரு டெக்ஸ்ட்டும் எப்போது கிளிப் பாக்ஸுக்குக் கொண்டு செல்லப்பட்டது என நாள் மற்றும் நேரத்தினைத் தானாக அமைக்கும் வசதி உள்ளது.
இந்த கிளிப் பாக்ஸ் விண்டோவினை எப்போதும் திறந்து வைத்து, வேகமாக டெக்ஸ்ட்களை எடுக்கலாம்.
கிளிப் பாக்ஸ் ஒரு ஓப்பன் சோர்ஸ் சாப்ட்வேர். இதனை இது போன்ற பல அப்ளிகேஷன்களைத் தரும் தளத்திலிருந்து டவுண்லோட் செய்து கொள்ளலாம். இதற்கான முகவரி: http://sourceforge.net/ projects/clipbox/ஆகும்

source:dinamalar

பின்னூட்டமொன்றை இடுக

Filed under Uncategorized

பீஜேவிற்கு மறுப்பு: இயேசு, தேவனின் தன்னிக ரற்ற குமாரன்

இயேசு இறைமகனா? புத்தகத்திற்கு மறுப்பு

முன்னுரை: பீஜே அவர்களின் "இயேசு இறைமகனா?" என்ற புத்தகத்திற்கு மறுப்பாக இக்கட்டுரை முன்வைக்கப்படுகின்றது. இறைக்குமாரர்கள் என்று அழைக்கப்பட்ட மற்றவர்களை விட இயேசு எவ்விதம் விசேஷித்தவர் என்பதை இக்கட்டுரை விளக்குகிறது.

இந்த புத்தகத்திற்கு அளிக்கப்பட்ட கடைசி இரண்டு மறுப்புக்களை கீழே தரப்பட்டுள்ள தொடுப்புக்களில் காணலாம்.

1. "இயேசு இறைமகனா?" புத்தகத்திற்கு மறுப்பு:இவைகள் அல்லாஹ்வின் குணங்களா? இல்லையா? பீஜே கூறவேண்டும்

2. இயேசு "மனிதன்" என நிருபிக்க நினைத்து "இறைவன்" என நிருபித்த பீஜே

பின்னூட்டமொன்றை இடுக

Filed under Uncategorized

சபலத்தின் சம்பளம் மரணம்

இன்றைய இளைஞர்களை முறையற்ற உறவுகளும்… சபலங்களும்… மோச மான பாதைக்கு அழைத்துப்போகின்றன. ஒருவித மன்மதக் கிக்கில் புத்தி பேதலிக்கிற… இத்தகையவர்களுக்கு… எப்படிப்பட்ட விபரீதங்கள் எல்லாம் படையெடுத்து வருகின்றன தெரியுமா?

சம்பவம்-1 :

திருவண்ணாமலையில் இருக்கும் பிரபல ’இந்தியன் ஹார்டு வேர்’ கடையில்… கல்லாவில் உட் கார்ந்திருந்தான்… கடை ஓனரின் மகனான ஷாசுதீன். இவன் ஒரு கல்லூரி மாணவன். அப்போது அந்தக் கடைக்கு இளம் விதவைப் பெண்ணான கல்பனா பெயிண்ட் வாங்க வந்தாள். கல்பனா பெயிண்ட்டின் வண்ணங்களைப் பார்த்துக்கொண்டிருக்க… ஷாசு தீனோ கல்பனாவின் உடல் வனப்பைக் கண்களால் மேய்ந்தான். செல்போனில் அவன் பதிந்து வைத்திருந்த பலான காட்சிகள் அவன் புத்தியை ஏற்கனவே கிறுகிறுக்க வைத்திருந்தன. எனவே படத்தில் பார்த்ததை எல்லாம் நேரில் பார்க்கும் வெறி அவனுக்குள் கொஞ்சநாளாய் மூண்டிருந்தது.

death1.jpgஇதை அறியாத கல்பனா… ‘"இந்த பிராண்டில் ஸ்கைபுளூ கலர்ல பெயிண்ட் இல்லையா?’’ என்றாள். ஷாசுதீனோ, "மேடம் நீங்க கேட்கிற கலர் இப்ப ஸ்டாக்கில் இல்லை. உங்க செல் நம்பரைக் கொடுத்துட்டுப்போங்க. பெயிண்ட் வந்ததும் போன் பண்றேன்’’என்று சொல்ல… கல்பனாவும் தன் செல்போன் எண்ணைக் கொடுத்துவிட்டுக் கிளம்பினாள்.

மறுநாளே அவள் எண்ணைத் தொடர்புகொண்ட ஷாசுதீன்… தன்னை அறிமுகப் படுத்திக்கொள்ளாமல் ""மேடம் உங்க உடம்புக்கட்டு அட்டகாசம். உங்க அழகு கிறங்க வைக்குது. திம்மு திம்முன்னு இருக்கும் உங்க மேனியை தொட்டுப் பார்க்கணும் போலிருக்கு”’ என்று ஜொள் விட…

""டேய் யார்றா நீ? பொறம்போக்கு. நேர்ல வாடா செருப்பால அடிக்கிறேன்”’ என்று கல்பனா காட்டமாய் டோஸ் விட்டாள். உடனே போனைத் துண்டித்துவிட்டான் ஷாசுதீன். மறுநாள் மீண்டும் கல்பனா எண்ணுக்குப் போன ஷாசுதீன் ‘""மேடம் என்னை மன்னிச் சிடுங்க. தப்புத் தப்பாப் பேசி உங்க மனசை நோக வச்சிட்டேன். என்னை மன்னிச்சிட்டேன்னு நீங்க சொன்னாதான் எனக்கு மனசு ஆறும்” என்றான் கெஞ்சலாக.

இதைக்கேட்டு மனம் இரங்கிய கல்பனா, ""சரிப்பா. தப்பு செய்யறது இயற்கை. அதை உணர்ந்தாலே போ தும். நீ நல்லவனா இருக்கே. உன் பேர் என்ன? எங்க இருக்கே?” என்று அக்கறையாக விசாரித்தாள்.

இவனும் தன்னை அறிமுகப் படுத்திக்கொண்டு ‘""உங்க பேச்சு எனக்கு சந்தோசமா இருக்கு. இனி நல்லதை மட்டுமே நினைப்பேன். உங்க நட்பு மட்டும் கிடைச்சாப் போதும். இந்த உலகத்தையே ஜெயிப்பேன்”’என்று சொல்ல… அன்று முதல் கல்பனா அவனுக்கு தோழியாகிவிட்டாள். ஒரே வாரத்தில் அவர்களின் பேச்சு காதலில் தொடங்கி கட்டில் வரை போனது.

தனிமைப் பசியில் இருந்த கல்பனாவை கொஞ்சம் கொஞ்சமாய் வளைத்து புதுவை, சென்னை என அவளுடன் அடிக்கடி டூர் அடித்து…. மன்மதம் படித்தான் ஷாசு. அவனுக்குத் தன்னைக்கொடுத்த கல்பனா… பதிலுக்கு 5 ஆயிரம், 10 ஆயிரம் என பணம் வாங்க ஆரம்பித்தாள். பிறகு?

வெறயூர் இன்ஸ்பெக்டர் முருகேசனே சொல்கிறார்…. ""இந்தக் கள்ள உறவு… கல்பனாவின் வீடுவரை தொடர ஆரம்பிச்சிருக்கு. ஷாசுதீனின் சபலத்தைப் பயன்படுத்திக் காசைப்பிடுங்க ஆரம்பித்த கல்பனா… அன்று தனக்கு அவசரமாக 40 ஆயிரம் ரூபாய் வேணும்னு போன்ல கேட்டிருக்காள். ஷாசுதீன் 20 ஆயிரம் ரூபாயை மட்டும் கொடுத்திருக்கான். கல்பனாவோ "என்னை விதவிதமா அனுபவிக்கத் தெரியுது. காசு கேட்டா மட்டும் நோகுதா? இன்னும் 20 ஆயிரம் இன்னைக்கே வேணும். தராட்டி.. நீ என்னோட சல்லாபிச்ச அசிங்கமான காட்சிகள் எல்லாம் என் செல்போன்ல இருக்கு. அதை போலீஸ்ல கொடுத்து உன்னை அசிங்கப்படுத்துவேன்’னு சொல்லியிருக்கா. இதில் கோபமான ஷாசுதீன்… கல்பனாவின் தலையை சுவத்தில் வேகமா மோதியிருக்கான். அவ்வளவுதான் இதில் கல்பனா செத்துட்டா. ஷாசுதீனின் சபலம்.. அவனை கொலைகாரனா இப்ப கம்பி எண்ண வச்சிருக்கு. செத்துப்போன பெண்ணுக்காக நாம வருத்தப்படறதா? இல்லை சிறைக்குப் போன இவனை எண்ணி வருத்தப்படறதா? இந்த ரெண்டு பேரின் நிலைமைக்கும் காரணம் சபலம்‘ என்கிறார்” வருத்த மாக.

சம்பவம்-2 :

சென்னை முகப்பேரைச் சேர்ந்த ப்ளஸ்-1 படிக்கும் மாணவி சித்ரா வுக்கும்.. அதே பகுதியில் இருக்கும் கார் ஓட்டும் இளைஞனான வினோத்துக்கும் இடையில் காதல் முளைத்தது. விவகாரம் சித்ராவின் வீடுவரை போக… நெருப்புக்குப் பக்கத்தில் பஞ்சை இருக்க விடக் கூடாது என்றபடி… சித்ராவை திருவண்ணாமலை அருகே இருக் கும் ஆலந்தூரில் உள்ள உறவினர் வீட்டுக்கு அனுப்பிவைத்தனர்.

காதலனைப் பார்க்காமல் தவித்துப்போன சித்ரா… தான் இருக்கும் முகவரியைச் சொல்லி… இரவு நேரத்தில் வீட்டுக்குப் பின்புறம் வரும்படி அழைத்தாள். உடனே சென்னையில் இருந்து டூவீலரிலேயே ஆலந்தூர் போன வினோத்… சித்ரா சொன்ன நேரத்துக்கு அந்த வீட்டின் பின்புறம் போய் காத்திருந்தான். சித்ரா சொன்னமாதிரியே வந்தாள். அவளை ஃபாலோ பண்ணிய அவளது சொந்தபந்தங்களும் ஊராரும் வினோத்தை மடக்கிப் பிடித்து அடித்தனர்.

தப்பி ஓடிய அவனைத் துரத்திப்பிடித்தும் செமையாய் கவனித்தனர். பிறகு?

அந்த வினோத்தின் உடல் அருகே இருந்த கிணற்றில் மிதந் தது. போலீஸோ.. அது கொலையா? தற்கொலையா? என தற்போது விசாரித்துக்கொண்டிருக்கிறது.

சம்பவம்-3 :

திருவாரூர் மாவட்டம் கண்கொடுத்தவனிதம் கிராமத்தைச் சேர்ந்த 22 வயது இளைஞர் ராமானுஜம். அவரது மனைவிக்கு பிரசவவலி உண்டாக.. மனைவியை திருவாரூர் அரசு மருத்துவ மனையில் சேர்த்தார். அதே மருத்துவமனையில் தன் பாட்டியை சேர்த்திருந்த குலமாணிக்கம் கிராமத்தைச் சேர்ந்த 17 வயது மாணவி பானுவைப் பார்த்து… அவளது அழகில் மயங்கிய ராமானுஜம்… அடிக்கடி பேசி நம்பிக்கையூட்டி… மருத்துவ மனையிலேயே தனிமையான பகுதிக்கு அவளை அழைத்துச் சென்று.. நினைத்ததை முடித்துக்கொண்டார்.

பானுமதியின் பாட்டி டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்குப்போக… ருசிகண்ட பூனையான ராமானுஜம்.. பானுவைத் தேடி குலமாணிக்கம் கிராமத்திற்குப் போனார். இவரை மடக்கிய கிராமத்தினர்… பானுவின் கழுத்தில் தாலியைக் கட்டு என்றனர். ராமானுஜமோ ""என்னை மன்னிச்சிடுங்க. எனக்கு ஏற்கனவே கல்யாணமாயிடிச்சி”’என்றார். இதைக்கேட்டு கடுப்பான கிராமத்தினர்… ’""கண்டவனும் வந்து தின்னுட்டுப்போக… எங்க ஊரு பொண்ணு என்ன ஓசிச் சாப்பாடா?”’ என்று அவரைத் தாக்கியதோடு… அவர் மீது மண்ணெண்ணையை ஊற்றி தீவைத்து விட்டு அவர் ஊருக்கும் தகவல் கொடுத்தனர். சபலத் தீயில் விழுந்த ராமானுஜம் உண்மையிலேயே தீயில் எரிந்து கரிக்கட்டையாய் இறந்துபோனார். தற்போது குலமாணிக்கம் கிராமத்தைச் சேர்ந்த 8 பேரை இது தொடர்பாகக் கைதுசெய்திருக்கிறது போலீஸ்.

-இப்படிப்பட்ட சபல மரணச் சம்பவங்கள்… நாளுக்குநாள் பெருகிவருகின்றன. ஏன்?
death2.jpg
பா.ம.க. மாநில மாணவரணி துணைச் செயலாளர் விஜயகுமாரின் கணிப்பு இது… “""படிப்பில் மட்டுமே கவனம் செலுத்தவேண்டிய மாணவ-மாணவிகள்… இன்றைக்கு குடிப் பழக்கத்தைக் கத்துக்கறது.. நள்ளிரவு வரை ஊர் சுத்தறது… காதல் என்கிற பெயரில் சபல விஷயங்களில் இறங்கறதுன்னு திசைமாறிப் போய்க்கிட்டிருக்காங்க. இன்றைக்கு வளர்ந்திருக்கும் மோசமான டெக்னாலஜிகள்தான் இதுக்கெல்லாம் காரணம். இந்த சமயத் தில் மாணவர்களுக்கு செக்ஸ் விழிப்புணர்வை ஏற்படுத்தணும். அதுக்குப் பாலியல் கல்வியைக் கொண்டு வரணும். அதில் விழிப்புணர்வு இருந்தா சபலமெல்லாம் வரவே வராது. அதே சமயம் பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகள் மீது அக்கறை வைத்து… அவர்களைக் கவனிக்கணும். அவங்கக்கிட்ட மனம் விட்டுப் பேசணும். அவங்க பிரச்சினைகளுக்கு பொறுமையா காது கொடுக் கணும்.

அப்படி பெற்றோர்களின் கனிவான அக்கறையான அரவணைப்பிற்குள் இருக்கும் பிள்ளைகள் கெட்டுப்போக மாட் டாங்க”’அவரது வார்த்தைகளில் தெளிவு தென்படுகிறது.

’பாவத்தின் சம்பளம் சபலம்; சபலத்தின் சம்பளம் மரணம்’ என்பதாகத்தான் இருக்கிறது இன்று பலரின் வாழ்க்கை.

-ராஜா, பகத்சிங்

source:nakkheeran

பின்னூட்டமொன்றை இடுக

Filed under Uncategorized

சூரியனைவிட 100 மடங்கு பெரிய மெகா நட்சத்திர ம் கண்டுபிடிப்பு

Tamil news paper, Tamil daily news paper, Tamil news, Tamil movie news, Tamil news paper online, political news, business news, financial news, sports news, today news, India news, world news, daily news update

லண்டன் :விண்வெளியில் சூரியனைவிட 100 மடங்கு பெரியதாகவும் பிரகாசமாகவும் உள்ள நட்சத்திரம் ஒன்று இருப்பது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. லண்டனில் உள்ள ஷெபில்டு பல்கலைக்கழக வான்வெளி ஆராய்ச்சியாளர் பால் க்ரவுத்தர் தலைமையிலான குழுவினர் மேற்கொண்ட ஆராய்ச்சியில் இந்த புதிய மெகா நட்சத்திரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

‘தரந்துலா நெபுலா’ என்று அழைக்கப்படும் நட்சத்திரக் கூட்டங்களுக்கு மத்தியில் இந்தப் புதிய நட்சத்திரம் இருந்தது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.
புழுதிப் புயல் போன்று புகை மண்டலமாக உள்ள மேகக் கூட்டங்களுக்கு இடையில் இந்த நட்சத்திரம் மிகப் பிரகாசமாக மின்னிக் கொண்டிருந்தது. ‘ஆர்136 ஏஎல்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த நட்சத்திரம் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட நட்சத்திரங்களிலேயே மிகவும் பெரியது என்பது ஆராய்ச்சியாளர்களின் கணிப்பு.

ஆனால் தற்போது உள்ள எடையை விட இது 2 மடங்கு பெரியதாக இருந்திருக்கும் என்றும் அதிக உஷ்ணத்தால் தன்னைத்தானே எரித்துக் கொள்ளும் குணம் உள்ள இத்தகைய நட்சத்திரங்கள் காலப்போக்கில் சுருங்கி சிறியதாகி முற்றிலும் அழிந்து விடும் என்று கூறும் விஞ்ஞானிகள் இதன் ஆயுட்காலமும் மிகக் குறைவே என்கின்றனர்.

நாம் பூமியில் இருந்து பார்க்கும் சூரியனை விட பன்மடங்கு அதிகப் பிரகாசமாக காணப்படும் இந்தப் புதிய நட்சத்திரம் அதன் உயர் வெப்பம் காரணமாக தன்னைத் தானே எரித்துக் கொள்ளும் என்பதும் பூமியின் வெப்பத்தைப் போல் 7 மடங்கு அதிக வெப்பம் அதனைச் சுற்றி இருக்கும் என்பதும் ஆராய்ச்சித் தகவல்கள். இதன் ஆயுட்காலம் அதிக அளவாக (3 மில்லியன்) 30 லட்சம் ஆண்டுகள். இத்தகைய நட்சத்திரங்கள் மிகக் குறைந்த ஆயுட்காலம் கொண்டது என்பதாலும் மிக அதிக தொலைவில் நட்சத்திரக் கூட்டங்களுக்கு இடையில் மறைந்து இருக்கும் என்பதாலும் இவற்றைக் கண்டுபிடிப்பது மிகவும் கடினம் என்கின்றனர்

விஞ்ஞானிகள். குறுகிய ஆயுளைக் கொண்டுள்ள இவை குறித்த தொடர் ஆராய்ச்சி என்பது இயலாத ஒன்று என்பது ஆராய்ச்சியாளர்களின் ஆதங்கம். பொதுவாக மிகக் குறைந்த எடையுடன் பிறந்து பின்னர் எடை கூடுவது மனித பிறப்பு. இதற்கு மாற்றாக நட்சத்திரங்கள் உருவாகும் போது மிக அதிக எடை மற்றும் உருவத்துடன் தோன்றி, பின்னர் தேய்ந்து மறைந்து விடும்.
புதிய நட்சத்திரம் ஆர்136 ஏஎல் அளவில் நமது பூமியை விட 10 மடங்கு பெரியது. மிகவும் அரியதும் அளவில் பெரியதும் அதிக ஒளி வீசுவதுமான புதிய வரவாக வந்துள்ள இத்தகைய நட்சத்திரங்கள் தன்னைத்தானே எரித்துக் கொள்ளும் என்பதால் இவற்றின் ஆயுள் மிகவும் குறைந்த காலம் தான் என்பது வருத்தத்திற்கு உரிய செய்தி.

source:dinakaran

பின்னூட்டமொன்றை இடுக

Filed under Uncategorized