Monthly Archives: ஓகஸ்ட் 2010

எக்ஸெல் டிப்ஸ்

E_1282556954.jpeg

எக்ஸெல் செல்களை இணைக்க

டேட்டாக்களைக் கொடுத்து எக்ஸெல் தொகுப்பில் அட்டவணைகளை உருவாக்குகையில் நாம் அட்டவணைகளுக்கு தலைப்பு கொடுக்க எண்ணுவோம். அப்போது அட்டவணைகளுக்கு மேலாக ஒரு நீளமான செல் இருந்தால் நன்றாக இருக்கும் என்று எதிர்பார்ப்போம். அப்படி இல்லாததனால் பலர் டைட்டில் உருவாக்கி அதற்கு முன் ஸ்பேஸ்களைத் திணிப்பார்கள். டைட்டிலை சார்ட் முழுவதும் இடம் பிடிக்கும் வரை பெரிதாக்குவார்கள். இந்த கூத்தெல்லாம் இல்லாமல் மிக எளிதான ஒரு வழி இருக்கிறது. அதனை மேற்கொண்டுவிட்டால் பெரிதாக்குவது, நடுப்படுத்துவது போன்ற வேலைகளைக் கம்ப்யூட்டரே பார்த்துக் கொள்ளும். என்ன வழி என்று பார்ப்போமா? இந்த வழியைத் தான் “merging cells”என்று அழைக்கின்றனர். இதற்கு முதலில் நீங்கள் ஒன்றாக ஆக்கிட விரும்பும் அனைத்து செல்களையும் தேர்ந்தெடுக்கவும். இரண்டாவதாக பார்மட்டிங் டூல்பார் (Formatting toolbar)செல்லவும். இங்கே Merge and Center என்று இருக்கும் பட்டனைக் கிளிக் செய்திடவும். இப்போது நீங்கள் தேர்ந்தெடுத்த அனைத்து செல்களும் ஒன்றாகத் தெரியும். இதில் நீங்கள் என்ன டைட்டில் வேண்டுமென்றாலும் அடித்துக் கொள்ளலாம். மிகச் சரியாக எந்தவிதமான எக்ஸ்ட்ரா ஸ்பேஸ் எதுவும் இல்லாமல் டைட்டில் உங்கள் டேட்டாக்களுக்கு மேலாக நடுவில் ஜம்மென்று அமர்ந்து விடும். நீங்கள் இன்னொன்றும் எதிர்பார்ப்பது தெரிகிறது! இப்படி இணைந்ததை வேண்டாம் என்று கருதி மீண்டும் செல்களாக வேண்டுமென்றால் என்ன செய்வது? சிலர் இந்தக் கேள்விக்குப் பதிலாக Merge and Center பட்டனை மீண்டும் கிளிக் செய்து பார்த்திருப்பார்கள். ஆனால் அது எதிர்பார்த்த பணியைச் செய்திருக்காது. ஏனென்றால் இந்தப் பிரச்னைக்கு அது வழியல்ல. அப்படியானால் செல்களை எப்படி பிரித்து பழைய நிலைக்குக் கொண்டு வருவது? இப்போது மீண்டும் எந்த இணைந்த செல்களைப் பிரித்து பழைய நிலைக்குக் கொண்டு வர எண்ணுகிறீர்களோ அவற்றைத் தேர்ந்தெடுக்கவும். பின் Format Cellsவிண்டோவினைத் திறக்கவும். இதற்கு Format மெனு சென்று Cells என்ற பிரிவில் கிளிக் செய்திடுக. அல்லது Ctrl + 1என்ற இரண்டு கீகளை அழுத்திடுக. இப்போது கிடைக்கும் விண்டோவில் Alignment டேப் திறக்கவும். இதில்Merge Cells என்ற பிரிவிற்கு முன்னால் ஒரு டிக் அடையாளத்தை ஏற்படுத்தி ஓகே கிளிக் செய்து மூடவும். ஆஹா!! ஒன்றாக இணைந்த செல்களெல்லாம் இப்போது தனித்தனியே செல்களாகப் பிரிந்து விட்டனவே!
எக்ஸெல்: ஒவ்வொரு பக்கத்திலும் தலைப்பு
அதிக பக்கங்களில் ஒர்க்ஷீட்டினைத் தயார் செய்துவிட்டால், அதனை அச்சில் பார்க்கையில், வரிசையில் உள்ள டேட்டா எதனைக் குறிக்கிறது என்ற ஐயம் வரும். ஒவ்வொரு முறையும் முதல் பக்கம் சென்று பார்ப்பது சிரமமான வேலையாக இருக்கும். எடுத்துக் காட்டாக, உங்கள் ஒர்க்ஷீட்டில் 10 நெட்டு வரிசை, 1000 படுக்கை வரிசை உள்ளது என வைத்துக் கொள்வோம். முதல் அல்லது இரண்டாவது வரிசையில், இதற்கான தலைப்பினை அமைத்திருப்போம். மற்ற பக்கங்களில் இந்த தலைப்புகள் இருக்காது, அச்சாகாது. அப்படிப்பட்ட சூழ்நிலையில், அடுத்தடுத்த பக்கங்களைப் படித்தறிவது நம்மைக் குழப்பமடையச் செய்திடும். இந்த தலைப்புகள் ஒவ்வொரு பக்கத்திலும் தோன்றும்படி அமைத்திடலாம்.
1. ஒர்க்ஷீட்டில் ஏதேனும் ஒரு இடத்தில் கிளிக் செய்திடவும். பின் File | Page Setup எனத் தேர்ந்தெடுத்துச் செல்லவும்.
2. கிடைக்கும் விண்டோவில்Sheet என்பதில் கிளிக் செய்திடவும். பின்னர் Print Titles என்பதின் கீழ், Rows To Repeat At Topஎன்ற வரியின் எதிரே உள்ள கட்டத்தில் கிளிக் செய்தால், Rows To Repeat At Top என மீண்டும் ஒரு நீண்ட சதுர பாக்ஸ் கிடைக்கும். இப்போது படுக்கை வரிசையில் தலைப்பு உள்ள செல்லின் எண் மற்றும் எழுத்தினைத் தரவும். $1:$1 என்ற வகையில் இதனைத் தர வேண்டும். இதே போல நெட்டு வரிசைக்குமாக அமைக்க வழி இருப்பதனைக் காணவும். அதுவும் வேண்டும் எனில், அதனையும் செட் செய்திடவும். ஓகே கொடுத்து வெளியேறவும். இனி அச்செடுக்கையில், ஒவ்வொரு பக்கத்திலும் முதல் படுக்கை வரிசையில், நீங்கள் செட் செய்த செல்களில் உள்ள தலைப்புகள் அச்சாகும்.

source:dinamalar

பின்னூட்டமொன்றை இடுக

Filed under Uncategorized

”முடி வெட்ட மாட்டோம்; சலவை செய்ய மாட்டோம்”

அதிரவைக்கும் தீண்டாமை கிராமம்!

முடி வெட்டாத தலை, மழிக்காத தாடியுடன் கூடிய முகம். இந்த அடையாளங்களோடு அந்தக் கிராமத்தில் வசிப்பவர்களைக் கண்டால் பரிதாபமாகத்தான் இருக்கிறது. அதேபோல துணிகளை அயர்ன் பண்ணிப் போடுவதற்கும் வழியில்லை. சம்பந்தப்பட்ட தொழிலாளர்கள் இருந்தும் அவர்களைப் பயன்படுத்திக் கொள்ள முடியாத நிலைமை. காரணம், தீண்டாமை அரக்கன்தான்.

15p2.jpg

""சலவை பண்ணுகிறவர், முடி வெட்டுபவர் எங்களுக்கும் அந்தத் தொழிலைச் செய்ய வேண்டும்” என்ற சமதர்மக் கொள்கையை உயர்த்திப் பிடித்து தலித்கள் போர்க்கொடி தூக்க, ஊருக்குள் வெடித்தது பிரச்சினை. நீதிமன்றத்திற்குப் போயும் பிரச்சினை தீரவில்லை. இதற்கிடையே, ""நாங்கள் யாருக்கும் வேலை பார்க்க மாட்டோம்” என்று சம்பந்தப்பட்ட தொழிலாளர்கள் எழுதிக் கொடுத்துவிட்டு ஒதுங்கிவிட, ஒட்டுமொத்த ஊரும் இப்போது அவஸ்தையை அனுபவித்துக் கொண்டிருக்கிறது.

விருதுநகர் மாவட்டம், திருச்சுழி தாலுகாவில் உள்ளது இருஞ்சிறை. முக்குலத்தோர் அதிகமுள்ள இந்தக் கிராமத்தில் நாடார், வெள்ளாளர், விஸ்வகர்மா உள்ளிட்ட பிற ஜாதியினரும் உண்டு. அதேபோல தலித்களும் இருக்கிறார்கள். பிற சமூகத்திற்கு வேலை செய்யும் சலவை மற்றும் முடிவெட்டும் தொழிலாளர்கள் ஆரம்பத்திலிருந்தே தலித்களுக்கு வேலை செய்ய மறுத்து வந்ததாகக் கூறப்படுகிறது. சம்பந்தப்பட்ட தொழிலாளர்கள் பிற்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சலவைத் தொழிலாளி பெரியசாமியிடம் தலித் தரப்பைச் சேர்ந்த ஒருவர் அவசரத்திற்கு துணி தேய்க்கச் சொல்ல, அவர் மெஜாரிட்டி சமூகத்திற்குப் பயந்து மறுத்துள்ளார். இதையடுத்து வார்த்தைகள் தடிக்க, விஷயம் ஊர் பஞ்சாயத்துக்குப் போயிருக்கிறது. கைகலப்பில் தலித்கள் சிலர் தாக்கப்பட்டதால் தீண்டாமை ஒழிப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவானதாம்.

இதற்கிடையே தலித்கள் உயர் நீதிமன்றத்தில் நியாயம் கேட்க, நீதித் துறையும் மாவட்ட நிர்வாகமும் ஊருக்கே சென்று விசாரணை நடத்தியது. ""தலித்களுக்கும் வேலை செய்ய வேண்டும்” என்று சம்பந்தப்பட்ட தொழிலாளர்களை அரசுத் தரப்பு வலியுறுத்தியது. ஆனால், ""நாங்கள் யாருக்கும் வேலை செய்யமாட்டோம்” என்று எழுதிக் கொடுத்துவிட்டார்களாம் அந்தத் தொழிலாளர்கள்.

இதையடுத்து பிரச்சினையைத் தீர்த்து வைக்க சலவைத் தொழிலாளர் ஒருவரையும், முடிவெட்டுவதற்கு இன்னொருவரையும் வெளியிலிருந்து கொண்டுவந்து ஊருக்குள் அரசுத் தரப்பே குடி வைத்தது. "பெரியார் நினைவு சமத்துவத் துணி தேய்ப்பு நிலையம்’ என்று எழுதப்பட்ட ஒரு வண்டியை சலவைத் தொழிலாளிக்கும் அதே போல முடி திருத்துபவருக்கு ஒரு பெட்டிக் கடையையும் ஏற்பாடு செய்து கொடுத்திருக்கிறார்கள். இப்படி வேண்டிய வசதிகளைச் செய்து கொடுத்தும் இருபது நாட்களுக்கு மேல் அந்தத் தொழிலாளர்கள் அக்கிராமத்தில் நீடிக்கவில்லை. கட்டுப்படியாகவில்லை என்ற காரணம் சொல்லி காலி செய்துவிட்டார்களாம். சம்பந்தப்பட்ட சாதனங்கள் மட்டும் அநாதையாகக் கிடக்க, முடி வெட்டவும் துணி தேய்க்கவும் வெளியூரைத் தேடிப் போகின்றனர் இருஞ்சிறை கிராம மக்கள். குழந்தையைக்கூட கூட்டிச் செல்ல வேண்டிய நிலைமை. சில பெரியவர்கள் அதற்கும் வழியில்லாமல் தாடியுடன் காணப்படுகிறார்கள்.

இவர்களுக்கிடையே சமத்துவத்தை உண்டாக்க அதற்கு முன்பே அரசு ஒரு முயற்சி மேற்கொண்டதாம். சமபந்தி விருந்து நடத்தினால் சரியாகப் போகும் என்றும் நம்பியிருக்கிறார்கள். அதற்குப் பொறுப்பேற்ற ஒரு தொழிலதிபர், தொடர்ந்து சில நாட்கள் உணவை லாரிகளில் கொண்டுவந்துள்ளார். ஊர் மக்களும் ஒன்றாக அமர்ந்து உணவருந்தியிருக்கிறார்கள். அதுபற்றி நம்மிடம் பேசிய இருஞ்சிறை கிராமத்தைச் சேர்ந்த ஒரு பெரியவர், ""சமபந்தியில் ஒரே இடத்தில் சாப்பிட்டோம். ஃபோட்டோ எடுத்தார்கள். ஆனால் அப்படி உட்கார்ந்து சாப்பிட்டால் மட்டும் சமத்துவம் வந்துவிடுமா? முடிவெட்டுகிற, தேய்க்கிற இடத்துக்கு அது வரணுமில்ல. மனமாற்றம் என்பது தானாக வரணும். அரசாங்கம் திணிக்க நினைக்கக் கூடாது” என்கிறார்.

நாம் இருஞ்சிறை கிராமத்திற்கே நேரடி விஸிட்டடித்து சிலரை சந்தித்தோம். முதலில் நம்மிடம் பேசிய சேதுராமன், ""நான் தாடி வளர்த்து ஒரு மாசமாச்சு. இன்னைக்குத்தான் நரிக்குடியில போய் ஷேவ் பண்ணிட்டு வந்திருக்கேன். கிராமத்திற்கென சில கட்டுப்பாடுகள் இருக்கும். நகர வாழ்க்கையை கிராமத்தோடு ஒப்பிடக் கூடாது. ஒற்றுமையாக இருந்த கிராமத்தில் நக்ஸலைட் மாதிரி உருவாகி அதைக் கெடுத்துட்டாங்க. தொழில் பண்ணுகிறவர்களுக்கும் சில வரம்புகள் இருக்கும். இன்னாருக்கு பார்க்கணும் என்று அவர்களைக் கட்டாயப்படுத்த முடியாது. அந்த உரிமை யாருக்கும் இல்லை. சட்டத்தாலும் சர்வாதிகாரத்தாலும் அரசாங்கம் அவர்களை மிரட்டி இப்ப எங்களுக்குக் கெடுதல் பண்ணிவிட்டது” என்றார் வேதனையோடு.

அதேபோல தனக்கு எண்பது வயதாகிவிட்டது என்று ஆரம்பித்த பெரியவர் ராசு, ""ஷேவ் பண்ணி மூணு மாசமாச்சு. என்னால பஸ் ஏறிப் போகமுடியல. கை காலெல்லாம் நடுங்குது. கூட்டிட்டுப் போகவும் ஆள் இல்லை. இங்கே நாங்க சம்பந்தப்பட்ட தொழிலாளர்களுக்கு வருஷக் கூலி கொடுப்போம். வருஷத்துக்கு 250 ரூபாய். வெளியூர்ல போய் அதிக பணம் கொடுப்பது என்னை மாதிரியான வயதானவங்களுக்குக் கட்டுபடியாகாது” என்கிறார் ஒருவித ஆதங்கத்துடன்.

""இருஞ்சிறை கிராமத்தில் இருந்த தொழிலாளிகளும் வெளியேறிட்டாங்க. அரசாங்கம் கொண்டு வந்தவங்களும் ஓடிப்போயிட்டாங்க. எங்க ஊர்ல யாருக்கு யார் வேலை பார்க்கணும் என்பது முன்னோர்கள் வகுத்தது. அரசாங்கம் இப்ப பிரச்சினையை இழுத்து வச்சிருச்சு. எல்லா சமூகமும் வேணும் என்று அரசாங்கம் நினைக்கணும். தனிப்பட்ட ஒரு சமுதாயத்திற்காக மற்றவர்களைப் புறக்கணிக்கக் கூடாது. எல்லா இனத்தவர்களும் ஓட்டு போட்டுத்தான் ஒரு முதலமைச்சர் உருவாகிறார். இப்பகூட கட்டனூர்ல சொலகு முடைய பணம் கொடுத்த ஒருவருக்கும் அந்தத் தொழிலாளிக்கும் பிரச்சினை. ஒண்ணு சொலகு கொடு.. இல்லேன்னா பணத்தைத் திருப்பிக் கொடுன்னு கேட்டதில் வார்த்தைகள் தடித்திருக்கிறது. காசை திருப்பிக் கேட்டவர் மீது உடனே தீண்டாமை வழக்கு போட்டுவிட்டார்கள். புகார் கொடுத்தவருக்கு மன உளைச்சலாம். அதற்காக அவருக்கு அரசு உதவித் தொகை ஆறாயிரம். ஆக கொடுத்த பணத்தைத் திருப்பிக் கேட்டவருக்கு பி.சி.ஆர். வழக்கு. அதைத் தராதவருக்கோ ஆதாயம். இதைச் சுட்டிக்காட்டி இப்ப சுற்றுவட்டாரக் கிராமங்களில் போஸ்டர் ஒட்டியிருக்காங்க” என்கிறார் பாலச்சந்திரன் என்பவர்.

நாம் தலித் தரப்பின் கருத்தறிய குருசாமி என்பவரை சந்தித்தோம்.

""மேல் ஜாதிக்கு வேலை பார்க்கிற நாங்க கீழ் ஜாதியான உங்களுக்கு எப்படிப் பார்க்க முடியும்?’ என்ற கருத்து சம்பந்தப்பட்ட தொழிலாளிகளிடம் இருக்கு. அவசரத்திற்குப் போய் துணி தேய்க்கக் கொடுத்தாலும் செய்து கொடுக்க மாட்டாங்க. தலித்களுக்கு எப்பவுமே அந்தக் கஷ்டம் இருக்கு. பிரச்சினைக்குப் பிறகு அதிகாரிகளே வெளியூரிலிருந்து ஆள் கொண்டுவந்தாங்க. எந்தப் பிரச்சினையும் இல்லை. அவங்களும் வந்து அந்தக் கடையில் முடி வெட்டினாங்க. நாங்களும் போனோம். ஆனால் அந்தக் கடை வச்சிருந்தவரோட எதிர்பார்ப்பு அதிகம். கடையை மூடிட்டுப் போயிட்டாரு. அதேபோல துணி தேய்க்கிறவரும் காலிபண்ணிட்டாரு. எப்பவுமே நாங்க மட்டும்தான் முடிவெட்டவும் துணி தேய்க்கவும் வெளியூர் தேடிப் போவோம். இப்ப அவங்களும் 8 கிலோ மீட்டர் போய் வருவதைப் பார்த்தால் கஷ்டமாத்தான் இருக்கு. புதுசா வேற ஆள் கிடைச்சுட்டா நிலைமை சரியாகிவிடும். அதை அதிகாரிகளிடமும் சொல்லியிருக்கிறோம். முடிவெட்டுகிறவர்கள் சங்கத்தில் பேசி வைத்திருக்கிறார்களோ என்னவோ… யாரைக் கேட்டாலும் இருஞ்சிறைக்கு வரமாட்டோம் என்றே சொல்கிறார்கள்.
15t2.jpg

அதேசமயம் நிலைமை முன்பைவிட இப்போ பரவாயில்லை. இந்தப் பிரச்சினைக்குப் பிறகு இரட்டை டம்ளர் முறை ஒழிக்கப்பட்டுள்ளது சந்தோஷமான விஷயம். ஆனால் எங்களுக்கும் விவசாய நிலங்கள் இருக்கு. அதற்கு மற்ற சமுதாயத்துக்காரங்க தண்ணீர் விடமாட்டாங்க. ஆழ்குழாய் கிணறு அமைத்துத் தரச் சொல்லி அரசாங்கத்திடம் கேட்டோம். அதை அமைக்கும்போது ஏற்பட்ட தவறால் குழாயே மூடிப்போச்சு. ஆறுமாசமா விவசாயம் பண்ண முடியல” என்றார்.

இதையடுத்து சம்பந்தப்பட்ட தொழிலாளர்களைச் சந்தித்துப் பேசினோம். முதலில் நம்மிடம் பேசிய முடிதிருத்தும் தொழிலாளி மாரிமுத்து, ""நாங்க ரெண்டு வீட்டுக்காரங்க. ஊரை மீறி நாங்க செயல்பட முடியாது. நாங்க எப்பவும் தலித் மக்களுக்கு வேலை செய்ததில்லை. இவங்களுக்காக ஊரைப் பகைச்சுக்க முடியாது. தலித்களுக்கு வேலை பார்க்க புதரைவண்ணான் ஜாதியிலிருந்து ஒருவர் இருக்கிறார். அவரைக் கூட்டிக் கொண்டுபோய் அதிகாரிகளிடம் நிறுத்தினோம். அதை அவங்க கண்டுக்கிடல. அதுமட்டுமில்லாம தலித்களுக்கு வேலை பார்க்கலேன்னா நீங்க யாருக்கும் பார்க்கக் கூடாது என்றும் மீறினால் இன்னின்ன செக்ஷன்படி வழக்குப் போடுவோம் என்றும் மிரட்டிட்டாங்க. நாங்க அதிகாரிகளையும் மீற முடியல. கிராமத்தையும் மீற முடியல. மொத்தத்துல யாருக்கும் வேலை பார்க்கலேன்னு எழுதிக் கொடுத்துட்டு வந்துட்டோம். இப்ப எங்களுக்கு பிழைப்பு போச்சு. நான் காங்கிரஸ்காரன். இதுவரை தேய்க்காமல் சட்டை போட்டதில்லை. இப்ப நானே வீரசோழம் போய்த்தான் தேய்ச்சுக்கிட்டு வர்றேன்” என்றார் வருத்தத்தோடு.

அடுத்து பிழைப்பு தேடி வெளியூரில் தங்கியிருக்கும் சலவைத் தொழிலாளி பெரியசாமியிடம் பேசினோம். ""நாங்க பாண்டிய வண்ணார் ஜாதி. தலித்களுக்கு நாங்க எப்பவுமே வேலை செய்யுறதில்லை. இப்ப புதுசா செய்யச் சொன்னதால மறுத்திட்டோம். புதரை வண்ணான் ஜாதியைச் சேர்ந்தவங்கதான் அவங்களுக்கு வேலை செய்வாங்க. இவங்க நாலு பேருக்காக நாங்க ஊரைப் பகைச்சுக்க முடியாது. இன்னொன்றையும் பார்க்கணும். இறந்தவர்களை குழிவெட்டி அடக்கம் செய்கிற வேலையை தலித் சமூகத்தைச் சேர்ந்தவங்கதான் பார்ப்பாங்க. அதேபோல இழவு செய்தி சொல்லப் போவாங்க. அதை இழிவாகக் கருதி அவங்க நிறுத்திட்டாங்க. கார்த்திகை மாதம் எங்க அப்பா இறந்துபோனாரு. அதுக்கு முன்னால என்னோட மாமியார் செத்துப்போனாங்க. குழி வெட்டி அடக்கம் செய்ய அவங்க வரல. மத்த சமுதாயத்தைச் சேர்ந்தவங்கதான் அந்தக் காரியத்தைப் பார்த்தாங்க. இப்படி எங்களுக்கு வேலை செய்ய வராதபோது நாங்க மட்டும் அவங்களுக்கு வேலை செய்யணுமின்னு எதிர்பார்க்கிறது என்ன நியாயம்?” என்று கேள்வி எழுப்பினார்.

இருஞ்சிறை பஞ்சாயத்துத் தலைவரின் கணவரும் கிராம முக்கியப் பிரமுகருமான முருகேசன் நம்மிடம், ""இந்தக் கிராமத்தில் தீண்டாமை என்பது சுத்தமா கிடையாது. யாரோ சிலர் தனிப்பட்ட ஆதாயத்திற்காக அந்த சட்டத்தைப் பயன்படுத்துகிறார்கள். அதனால் இப்ப ஊர் நிம்மதி கெட்டுப் போச்சு. இந்தப் பிரச்சினையை மையமா வச்சு அவர்களில் சில பேர் தொழில் பண்ண லோன் வாங்கினாங்க. ஆனால் இதுவரை ஒரு கடைகூட வைக்கல. எங்களைப் பொறுத்தவரை அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு கொடுக்கத் தயாராகவே இருக்கிறோம். எங்களுக்குத் தேவை ஊர் ஒற்றுமையும் அமைதியும். சலவைத் தொழில் செய்யவும், முடிவெட்டவும் உள்ளூர்காரர்கள் இருப்பதே சரியாக வரும். அடுத்து அரசாங்கம்தான் நல்லதொரு தீர்வைச் சொல்லணும்” என்கிறார்.

இருஞ்சிறையைப் பொறுத்தவரை அரசாங்கம் எடுத்த முடிவு வெற்றி பெறவில்லைதான். ஆனால் விலகியிருக்க முடியாது. அது தன் கடமையைச் செய்திருக்கிறது. மனித மனங்களிலிருந்துதான் ஜாதி என்னும் துவேஷம் அகலவேண்டும். இந்த சூழ்நிலையிலும் தலித் சமூகத்தைச் சேர்ந்த குருசாமி, ""எப்பவும் முடிவெட்ட, துணி துவைக்க நாங்க மட்டுமே வெளியூர் போவோம். இப்ப மத்தவங்களும் போய் வருவதை நினைத்தால் கஷ்டமாகத்தான் இருக்கு” என்று சொல்லியிருப்பது உருக்கமாக இருக்கிறது.

SOURCE:TAMILAN express

1 பின்னூட்டம்

Filed under Uncategorized

சமையல் செய்யும் முறை:கேரட் கேசரி

கேரட் கேசரி

22k11.jpg

தேவையானவை: கேரட் – 200 கிராம், பால் – 200 கிராம், பேரீச்சம்பழம் – 10, கோதுமை மாவு – 2 டீஸ்பூன், சர்க்கரை – 100 கிராம், தேங்காய் துறுவல் – 2 டீஸ்பூன், லவங்கம் – 3, நெய் – 2 ஸ்பூன், வறுத்த முந்திரிப்பொடி – 1 டீஸ்பன்

செய்முறை: பேரீச்சம் பழங்களின் கொட்டையை நீக்கி விட்டு அதில் கேரட் துறுவலைச் சேர்த்து கொஞ்சம் தண்ணீர் விட்டு குக்கரில் வேக வைக்க வேண்டும். நெய் விட்டு கோதுமை மாவை பொன் நிறமாக வறுக்க வேண்டும்.

பாலை பால்கோவா பதத்தில் காய்ச்ச வேண்டும். கேரட் தேங்காய்த் துறுவல் இரண்டையும் சேர்த்து மசிய அரைக்க வேண்டும். அடிகனமான பாத்திரத்தில் கொஞ்சம் தண்ணீர்விட்டு அடுப்பில் வைத்து சர்க்கரையைப் போட்டு பாகானவுடன் மற்ற எல்லாச் சாமான்களையும் போட்டு அடிபிடிக்காமல் கெட்டியாகச் கிளறவும். கேசரி பதம் வந்தவுடன் தட்டில் நெய் தடவி அதில் கொட்டிப் பரத்தி விட்டு மேலே முந்திரியை வறுத்து தூவினால் சுவையான கேரட் கேசரி ரெடி. அதிக சத்தும் நிறைந்து

source:dinamani

பின்னூட்டமொன்றை இடுக

Filed under Uncategorized

நாம் நினைப்பதை கண்டுபிடிக்கும் புதிய கம ்ப்யூட்டர் இன்டெல் அறிமுகப்படுத்துகிறது

390393.jpg
நியூயார்க் : இணையத்தில் தேட வேண்டுமா , உதவியாளருக்கு கடிதம் எழுதுவதற்கான வாக்கியங்கள் கூற வேண்டுமா மனதில் நினைத்தால் மட்டும் போதும். என்ன நினைக்கின்றீர்கள் என்பதை மூளையை படிப்பதன் மூலம் கண்டுபிடித்து செய்து கொடுத்து விடுமாம் கம்ப்யூட்டர்கள். கம்ப்யூட்டர் தொழில்நுட்பத்தின் அதிமேதாவியான இன்டெல் நிறுவனத்தை சேர்ந்த பொறியியல் வல்லுனர்கள் இது போன்றதொரு பணித்திட்டத்தில் இறங்கியுள்ளனர். இனிமேல் மவுஸ், கீபோர்ட் வைத்து நீங்கள் வேலை செய்ய வேண்டாம். கற்பனை மட்டும் செய்யுங்கள் போதும் எங்கள் கம்ப்யூட்டர் அனைத்தையும் செய்து கொடுக்கும் என்கின்றனர் இந்த பணித்திட்டத்தில் ஈடுபட்டுள்ளோர். இதற்காக கணினியை பயன்படுத்துவோரின் மூளையைப் பற்றிய விபரமான வரைபடக் குறிப்பு ஒன்றை உருவாக்கி மனிதன் என்ன நினைக்கும் போது எந்த வகையான மாற்றம் மூளையில் உருவாகும் என்பதையும் ஆராய்ச்சி செய்துள்ளனர் இந்த வல்லுனர்கள். ஆரம்ப கட்ட சோதனை முடிவுகளின் படி நினைப்பதை கண்டறிந்து அதை வார்த்தைகளாக மாற்ற முடியும் என்பது தெரிய வந்துள்ளதாகவும் இன்டெல் கூறுகிறது

source:dinamalar

பின்னூட்டமொன்றை இடுக

Filed under Uncategorized

சிறந்த இணைய உலாவி எது ?

E_1282556935.jpeg

இன்டர்நெட் உலாவிற்கு ஏற்ற பிரவுசர் தொகுப்பு எது? இன்டர்நெட் எக்ஸ்புளோரர், பயர்பாக்ஸ், குரோம், ஆப்பரா அல்லது சபாரி? இவற்றில் எது சிறந்தது? எதனைக் கொண்டு இதனை முடிவு செய்வது? அம்சங்கள், வசதிகள், வேகம், புதுமையாக உதவிடும் வசதிகள், வளைந்து கொடுக்கும் தன்மை எனப் பலவற்றை நம் பிரவுசர்கள் நமக்குத் தர வேண்டும் என எதிர்பார்க்கிறோம். சில அடிப்படைக் கூறுகள் சிலவற்றில் அதிகமாகவும், சிலவற்றில் குறைவாகவும் உள்ளனவே! ஒவ்வொன்றாக இவற்றை இங்கு காணலாம்.
வெப் பிரவுசர் என்னும் இணைய உலாவித் தொகுப்புகள் தொடக்க காலத்தில் வந்தது போல் இப்போது இருக்க முடியாது. இன்டர் நெட்டின் தளத்தி லிருந்து டெக்ஸ் ட்டை எடுத்து உங்கள் மானிட்டரில் காட்டுவதோடு பழைய காலத்து பிரவு சரின் வேலை முடிந்து விட்டது. இப்போது ஒவ்வொரு வரும் குடி இருக்கும் இடமே இணைய தளங்கள் என்றாகிவிட்டன. அன்றாடப் பணிகளும் சிறப்பு வேலைகளும் இணையத்தில் தான் நடைபெறுகின்றன. எனவே பிரவுசர்கள் சந்திக்கும் சவால்களும் கடுமையாகிவிட்டன. ஆவணங்களைத் தயார் செய்து திருத்தவும், பயணங்கள் மேற்கொள்ளவும், பிரியாணி ஆர்டர் செய்து சாப்பிடவும், மாப்பிள்ளை பெண் பார்க்கவும், திருமண நிச்சயதார்த்தத்தினை அறிவிக்கவும், நடந்த திருமணத்தைக் காட்டவும் என ஒவ்வொன்றுக்கும் ஒரு வெப்சைட் உள்ளது. இவை எல்லாவற்றிற்கும் ஈடு கொடுத்து ஒரு இணைய உலாவித் தொகுப்பு இயங்க வேண்டியுள்ளது. வேகமாக இயங்கவில்லை என்றால், பயணத்திற்கு டிக்கட் கிடைக்காமல் போய்விடும். சரியாகத் தகவல் போய்ச் சேரவில்லை என்றால், திருமண வரன்கள் மாறிவிடும். எனவே இவற்றின் இயங்குதன்மை அனைத்திற்கும் ஈடு கொடுக்க வேண்டியுள்ளது.
இன்டர்நெட் எக்ஸ்புளோரர், பயர்பாக்ஸ், குரோம், ஆப்பரா அல்லது சபாரி – இவற்றில் எதனைத் தேர்ந்தெடுப்பது என்று முடிவெடுப்பது அவ்வளவு எளிய காரியம் இல்லை. அனைத்து பிரவுசர்களுமே நல்ல பயனுள்ள பிரவுசர்களே. ஒன்று மற்றதைக் காட்டிலும் சில விஷயங்களில் சிறந்ததாக இருக்கலாம். இணையதளங்களை வடிவமைப்பவர்கள், தங்களின் விருப்பத்திற்கேற்ப அல்லது தாங்கள் பயன்படுத்திக் காட்டும் தொழில் நுட்பத்திற்கேற்ப ஈடு கொடுக்கும் பிரவுசரை அவர்களின் விருப்ப பிரவுசராக தேர்ந்தெடுக்கலாம். ஆனால் இணைய உலாவிற் கெனப் பயன்படுத்துகையில், ஒவ்வொருவருக்கும் சில அடிப்படை விருப்பங்கள் நிறைவேற்றப்பட வேண்டும் என நாம் எதிர்பார்க்கலாம்.
1.குரோம் பதிப்பு 5: இணைய தளங்களை வடிவமைக்கும் புரோகிராமர்களுக்கு குரோம் பதிப்பு 5 சிறந்த தோழனாக அமைந்துள்ளது. மேலும் இருக்கின்ற பிரவுசர்களில் மிக வேகமாக இயங்கி, இணையப் பக்கங்களைத் தருவதில், குரோம் முதல் இடத்தில் உள்ளது. ஜாவாஸ்கிரிப்ட் மற்றும் எச்.டி.எம்.எல். 5 வரையறைகளை மிக சாதுர்யமாகச் சந்தித்து இயக்குகிறது. அத்துடன் அடோப் தந்துள்ள பிளாஷ் தொகுப்பில் உருவான இயக்கங்களையும் சிறப்பாக இயக்குகிறது. இதனால் குரோம் பிரவுசர் பயன்படுத்துவதில் இடையே தடை ஏற்படுவதே இல்லை.
மேலும் குரோம் ப்ளக் இன் புரோகிராம்களை எளிதாகக் கையாள்கிறது. இந்த வகையில் பயர்பாக்ஸ் பிரவுசரைக் காட்டிலும் இது திறமையுடன் செயல்படுகிறது. இதனால் குரோம் பிரவுசருக்கான ப்ளக் இன் புரோகிராம்கள் அதிக எண்ணிக்கையில் உருவாக்கப்பட்டுக் கிடைக்கின்றன.
2. பயர்பாக்ஸ் சோதனைத் தொகுப்பு 4: நெட்ஸ்கேப் பிரவுசர் சந்தையிலிருந்து மறைந்த போது, அதிலிருந்து பயர்பாக்ஸ் உருவானது. இன்டர்நெட் எக்ஸ்புளோரர் மற்றும் பிற பிரவுசர்கள், இதில் உள்ள வசதிகளைக் கண்டு காப்பி அடிக்கும் அளவிற்கு, சிறப்பாய் உருவானது. தற்போது பயர்பாக்ஸ் தன் பிரவுசர் கிராஷ் ஆகி முடங்கிப் போகாமல் இருக்க ஒரு பாதுகாப்பினை உருவாக்கித் தந்துள்ளது. இதனால் அப்போது பார்க்கப்படும் அந்த தளம் மட்டுமே முடங்கும். மற்றவற்றுடன் தொடர்ந்து நாம் பணியாற்றலாம். பயர்பாக்ஸ் பிரவுசரின் ஒரு பெரிய பலம், அதற்கென உருவாக்கப்பட்ட ஆயிரக்கணக் கான ஆட் ஆன் தொகுப்புகளும், ப்ளக் இன் புரோகிராம்களுமே. இணைய தள வடிவமைப்பாளர்கள் பயன்படுத்தும் ஜாவா ஸ்கிரிப்ட் குறியீடுகளை வேகமாக செயல்படுத்துவதில் பயர்பாக்ஸ், மற்ற பிரவுசர்களைக் காட்டிலும் பின்தங்கியே உள்ளது என்பது பலரின் குறை. ஆனால், மிக வேகமாக அவற்றை இயக்கும் வகையிலான கட்டமைப்பை விரைவில் தருவதாக மொஸில்ல்லா அறிவித்துள்ளது.
3. மைக்ரோசாப்ட் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 9 சோதனைத் தொகுப்பு:
ஒரு காலத்தில் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் மட்டுமே அனைவராலும் இணைய உலாவிற்குப் பயன்படுத்தப்பட்டு வந்தது. அந்தக் காலம் இனி திரும்ப வருமா என்பது கேள்விக் குறியே. இதனை உணர்ந்த மைக்ரோசாப்ட், இழந்த இடத்தைப் பிடிக்க நவீன தொழில் நுட்பத்தின் அடிப்படையில், பல புதிய வசதிகளைத் தரும் முயற்சிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. டேப் வழி வசதி பல மாதங்களுக்கு முன் தரப்பட்டது. இதன் காலரியில் இப்போது பல ஆட் ஆன் தொகுப்புகள் கிடைக்கின்றன. பயர்பாக்ஸ் மற்றும் ஆப்பரா பிரவுசர்களில் தரப்பட்ட பல புதிய விஷயங்கள், இன்டர்நெட் எக்ஸ்புளோரர் தொகுப்பு 8ல் தரப்பட்டன.
இணையத்தில் உலா வருகையில், வைரஸ் மற்றும் பிற கெடுதல் தரும் புரோகிராம்களிலிருந்து, மைக்ரோசாப்ட் தன்னுடைய பிரவுசர் தொகுப்பு, மற்ற பிரவுசர்களைக் காட்டிலும் சிறந்த பாதுகாப்பினைத் தருவதாக அறிவித்துள்ளது. குரோம் பிரவுசரைக் காட்டிலும் 5 மடங்கு, பயர்பாக்ஸ் பிரவுசரைக் காட்டிலும் 2.9 மடங்கு கூடுதல் பாதுகாப்பு தருவதாக அறிவித்துள்ளது. குறிப்பாகப் புகழ்பெற்ற நிறுவனங்களின் இணைய முகவரிகளைப் போலக் காட்டிக் கொள்ளும், இணைய முகவரிகளைக் கண்டறிந்து எச்சரிப்பதில் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் மிகச் சிறந்தது என்று கூறியுள்ளது.
ஆனால் இந்த பெருமையை நாம் அப்படியே ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இப்படிக் கூறும் மைக்ரோசாப்ட், தன் பிரவுசரில் உள்ள பல பிழையான இடங்களைச் சரிப்படுத்தும் பணியைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக ப்ளக் இன் புரோகிராம்களுக்கு அதிக இடம் தந்ததால், அவற்றைப் பயன்படுத்தியே பலர் தங்கள் கெடுதல் விளைவிக்கும் புரோகிராம்களை அனுப்புகின்றனர்.
இருப்பினும், விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடனேயே இன்டர்நெட் எக்ஸ்புளோரரும் இணைந்து வருவதால், இணைய தளத்தை வடிவமைப்பவர்கள், இந்த பிரவுசருக்கேற்றபடியாகவும் தங்கள் தளங்களை உருவாக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். அதிக எண்ணிக்கையில் பயன்படுத்தப்படும் பிரவுசராக, இன்னும் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் தான் உள்ளது.
4. ஆப்பரா 10.6: ஆப்பராவின் ஒரு பெருமை அதன் அதிவேக இயக்கம் தான். மற்ற எந்த பிரவுசரைக் காட்டிலும் மிக வேகமாக இணையப் பக்கங்களை இறக்கித் தரும் பிரவுசராக இன்றும் உள்ளது. ஆனால் அதிகபட்ச அளவில் டேட்டா கிடைக்கும்போதும், கையாளப்படும்போதும் இந்த பிரவுசர் திணறுகிறது என்று பல ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். வேறு வசதிகளில் இது அதிகக் கவனம் செலுத்தாததால், சாதாரணமாக, இணையத்தைப் பயன்படுத்து பவரிடையே இது அவ்வளவாக எடுபடவில்லை.
5. ஆப்பிள் சபாரி 5.0: லினக்ஸ் உலகத்திலிருந்து பழைய Konqueror பிரவுசரை எடுத்து, அதில் நவீன தொழில் நுட்பத்தினை எக்கச்சக்க அளவில் புகுத்தி, விண்டோஸ் மற்றும் மேக் கம்ப்யூட்டர்களில் இயங்கும் வகையில் ஆப்பிள் நிறுவனம் சபாரி பிரவுசரைக் கொண்டு வந்தது. சபாரி ஒரு நல்ல மாற்று பிரவுசராக இன்று இடம் பெற்றுள்ளது. வேகம், கண்ட்ரோல் மற்றும் பயன்படுத்தப்பட்டுள்ள டெவலப்பர் டூல்ஸ் ஆகியவை நன்றாகவே இயங்குகின்றன. இணையப் பயனாளர் ஒருவர் விரும்பும் அனைத்துமே, சபாரி பிரவுசரில் நிச்சயம் உண்டு என்று சொல்லும் அளவிற்கு, இதனை உருவாக்கியுள்ளது ஆப்பிள் நிறுவனம். ஆனால் மற்ற பிரவுசர்களிடமிருந்து இதனைத் தனித்துக் காட்டும் வகையில் இதில் எந்த சிறப்பும் இல்லை. அடோப் நிறுவனத்துடன் ஏற்பட்டுள்ள பிரச்னையின் காரணமாக, ஆப்பிள், பிளாஷ் தொகுப்பினைக் காட்டிலும், எச்.டி.எம்.எல்.5 க்கு அதிக இடம் கொடுத்துத் தொடர்ந்து அதனைச் சிறப்பான இடம் பிடிக்க உதவி வருகிறது.
ஒவ்வொரு பிரவுசரும் ஏதேனும் சில தனிச் சிறப்பினையும், சில குறைவான வசதிகளையும் கொண்டுள்ளது. நம் தேவைகளுக்கேற்ப எது வேண்டுமோ அதனைப் பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால், ஒரே பிரவுசரை மட்டுமே பயன்படுத்தாமல், ஒன்றுக்கு மேற்பட்ட பிரவுசரைக் கம்ப்யூட்டரில் பதிந்து வைத்துப் பயன்படுத்துவதே நமக்கு வசதியாகவும் பயனுடையதாகவும் இருக்கும்.

source:dinamalar

பின்னூட்டமொன்றை இடுக

Filed under Uncategorized

ஃப்ளாஷ் ட்ரைவில் ஆன்ட்டி வைரஸ்

E_1282556954.jpeg

பிளாஷ் ட்ரைவின் கொள்ளளவுத் திறன் உயர்ந்து வருவதனால், இப்போதெல்லாம் புரோகிராம்களை, அதில் பதிந்து வைத்து இயக்குவது எளிதாகிறது. வைரஸ் எதிர்ப்பு மற்றும் ஸ்பைவேர் எதிர்ப்பு புரோகிராம்களை இதில் பதிந்து இயக்கும் வகையில் கிடைத்தால் நல்ல பயனுடைத்ததாய் இருக்கும் அல்லவா!
நாம் அடிக்கடி பொது மையங்களில், இதுவரை செல்லாத அலுவலகங்களில் உள்ள கம்ப்யூட்டர்களைப் பயன்படுத்தும் கட்டாயத்திற்கு உட்படுத்தப் படுகிறோம். அப்போது அதில் உள்ள வைரஸ் மற்றும் ஸ்பைவேர் புரோம்கிராம்களுக்கு எதிரான தடுப்புகளை நாம் கட்டாயப்படுத்த முடியாது. அப்படிப்பட்ட புரோகிராம்கள் பதிந்து வைக்கப்பட்டிருந்தாலும், அவை அண்மைக் காலத்தில் அப்டேட் செய்யப்பட்டுள்ளனவா என்பதையும் தீர்மானிக்க முடியாது. எனவே நாம் கையில் எடுத்துச் செல்லும் பிளாஷ் ட்ரைவ்களில் இந்த புரோகிராம்களைப் பதித்து இயக்க முடியும் என்றால் நமக்கு நல்லதுதானே! அது போன்ற பல புரோகிராம்கள் இப்போது இணையத்தில் கிடைக்கின்றன. அவற்றில் ஒன்று http://www.freeav.com என்ற முகவரியில் உள்ளது. இதன் பெயர் AntiVir. இதன் சிறப்பு தன்மை, இந்த புரோகிராமினை ப்ளாஷ் ட்ரைவில் இன்ஸ்டால் செய்து பயன்படுத்த முடியும். அடுத்ததாக, இது ஆண்ட்டி வைரஸ் புரோகிராமாக மட்டுமின்றி, ஸ்பைவேர் புரோகிராம்களுக்கு எதிராகவும் செயல்படுகிறது. இதனை ஹார்ட் டிஸ்க்கில் பதியாமல், ப்ளாஷ் ட்ரைவில் பதிந்தே இயக்கவும்.
ஸ்பைவேர்களுக்கு எதிரான இத்தகைய புரோகிராம் ஒன்றும் இணையத்தில் கண்ணில் பட்டது. இதன் பெயர்AdAware SE Personal Edition 1.06.இதனையும் பிளாஷ் ட்ரைவில் வைத்தே பயன்படுத்தலாம். ஆனால் இதனை இன்ஸ்டால் செய்கையில், முதலில் ஹார்ட் டிஸ்க்கில் இன்ஸ்டால் செய்திடவும். பின்னர், ஸ்டார்ட், ஆல் புரோகிராம்ஸ் சென்று அதில் உள்ள AdAware பைலை காப்பி செய்து, பிளாஷ் ட்ரைவில் பேஸ்ட் செய்து இயக்கவும். இந்த புரோகிராமினை http://www.imgsrv.worldstart.com/download/aawsepersonal.exe என்ற முகவரியில் உள்ள இணைய தளத்திலிருந்து இலவசமாக டவுண்லோட் செய்திடலாம்.

சொஉர்செ:டினமலர்

பின்னூட்டமொன்றை இடுக

Filed under Uncategorized

யு-ட்யூப் வீடியோ தானாகத் தொடங்குவதை நிறு த்த

E_1281859833.jpeg
பல வேளைகளில், நாம் ஒன்றுக்கு மேற்பட்ட வீடியோ பைல்களை, யு–ட்யூப் வீடியோ தளத்தில் கிளிக் செய்திடுவோம். அப்போது நம் ஸ்பீக்கரில் அவை அனைத்தின் ஒலி கிடைக்கும். சில வேளைகளில், ஒவ்வொன்றும் இறங்கும் போது, ஸ்ட்ரீமிங் வேகம் குறைவாக இருக்கும் என்பதால், விட்டு விட்டு ஒலி கேட்கும். இதனை நிறுத்த வேண்டும் எனில், ஒவ்வொரு வீடியோ திறந்திருக்கும் பக்கம் உள்ள டேப்பினைக் கிளிக் செய்து, ஆடியோ பட்டனை மொத்தமாகக் குறைக்க வேண்டும். அப்போதுதான், வீடியோ படம் மெமரியில் இறங்கும். பின்னர் எந்தவிதத் தொந்தரவும் இன்றி கேட்டுக் கொள்ளலாம்.
இந்த ஆட்டோ பிளே வசதியை யு–ட்யூப் தளத்தில் நிறுத்த பல ஆட் ஆன் தொகுப்புகள் இணையத்தில் இலவசமாகக் கிடைக்கின்றன. சில இயங்காமல் இருப்பது மட்டுமின்றி, முழு வீடியோ பைலும் இறக்கம் கண்டபின்னரே, இயங்கத் தொடங்கும் வகையிலும் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றை இங்கு காணலாம்.
கூகுள் குரோம் பிரவுசருக்கென Stop Autoplay என்ற ஆட் ஆன் தொகுப்பு தரப்பட்டுள்ளது. வீடியோ உள்ள தளத்தினைக் கிளிக் செய்தவுடன், அதற்கான விண்டோ கிடைத்தவுடன், அது இயங்குவதனை இந்த ஆட்–ஆன் தொகுப்பு தடுக்கிறது. அதே நேரத்தில் வீடியோ பைல் இறங்குவதைத் தடுப்பதில்லை. இதனால் பின்னணியில் வீடியோ பைல் 100% முழுமையாகக் கம்ப்யூட்டரை வந்தடைய முடிகிறது. அது மட்டுமின்றி, இந்த புரோகிராம் எச்.டி.எம்.எல். மற்றும் பிளாஷ் என இரண்டையும் சப்போர்ட் செய்கிறது.
இந்த ஆட் ஆன் புரோகிராமினைப் பெறhttps://chrome.google.com/ extensions/detail/lgdfnbpkmkkdhgidgcpdkgpdlfjcgnnh?hl=en என்ற முகவரியில் உள்ள தளத்திற்குச் செல்லவும்.
பயர்பாக்ஸ் பிரவுசருக்கான ஆட்டோ பிளே தடை செய்யப்படும் ஆட் ஆன் தொகுப்பு, யு–ட்யூப் மட்டுமின்றி, எந்த வீடியோ பைல் தளத்தில் பதிக்கப்பட்டிருந்தாலும், அது முழுமையாக இறங்காமல் இயக்கவிடுவதில்லை. முதலில் தானாக இயங்குவதனைத் தடுக்கிறது. பின்னர் தளத்தில் வீடியோ பைல் பதிக்கப்பட்டிருந்தால், அந்த இடத்தில் சிகப்பாக ஒரு கட்டத்தினைக் காட்டுகிறது. இதனைப் பெற இணையத்தில்https://addons.mozilla.org/enUS/firefox/addon/1765/ என்ற முகவரிக்குச் செல்லவும்.https://addons.mozilla.org/enUS/firefox/addon/6648/ என்ற முகவரியில் இதே போன்ற இன்னொரு ஆட் ஆன் தொகுப்பும் பயர்பாக்ஸ் பிரவுசருக்கெனக் கிடைக்கிறது

source:dinamalar

பின்னூட்டமொன்றை இடுக

Filed under Uncategorized