மிஸ் யுனிவர்ஸ் அழகி போட்டி: ஆடை வடிவமைப் பு பெண் நிபுணருக்கு 40 சவுக்கடி; ஈரானில் தண்டன ை நிறைவேற்றம்


மிஸ் யுனிவர்ஸ் அழகி போட்டி: ஆடை வடிவமைப்பு பெண் நிபுணருக்கு 40 சவுக்கடி; ஈரானில் தண்டனை நிறைவேற்றம் திரைப்படம் திரைப்படம்

தெக்ரான், ஆக.30-

மிஸ் யுனிவர்ஸ் 2010 அழகிப்போட்டி அமெரிக்காவின் லாஸ்வேகாஸ் நகரில் சமீபத்தில் நடந்தது. இதில் கலந்து கொண்ட அழகிகளுக்கு நீச்சல் உடை வடிவமைத்து கொடுத்தவர் ராச்சி (27).

இவர் ஈரான் தலைநகர் தெக்ரானை சேர்ந்தவர். கடந்த சில நாட்களுக்கு முன்பு இவர் தனது பிறந்தநாளை நண்பர்களுடன் கொண்டாடினார்.

அப்போது கறுப்பு மினி ஸ்கர்ட, டி-சர்ட் மற்றும் ஹை கீல்ஸ் செருப்பு அணிந்திருந்தார். அதற்கு மேல் கறுப்பு நிற கவச உடை அணிந்திருந்தார். இது தங்கள் நாட்டு சட்டத்துக்கு எதிரானது என கூறி அவரையும், அவரது தோழிகளையும் போலீசார் கைது செய்தனர்.

ஆண்கள் அணியும் உடையை அவர் அணிந்திருந்ததாக குற்றம் சாட்டி அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. பின்னர் அவர் செய்த குற்றத்துக்காக 40 சவுக்கடி வழங்கி தீர்ப்பு கூறப்பட்டது.

இதை தொடர்ந்து 5 நாட்கள் கழித்து தெக்ரானில் ராச்சிக்கு சவுக்கடி தண்டனை நிறைவேற்றப்பட்டது. ஒரு தனி அறையில் வைத்து ராச்சியை சவுக்கால் அடித்தனர்.

அந்த அறைக்கு முன்பு அவரது பெற்றோர் காத்து நின்றனர். சவுக்கடியை தாங்காமல் அவர் அலறியதை கேட்டும் சத்தமின்றி மவுனமாக கண்ணீர் வடித்தபடி நின்றனர்.

source:maalaimalar

பின்னூட்டமொன்றை இடுக

Filed under Uncategorized

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s