தஞ்சாவூர் : கொலை மிரட்டல் விடும் டாக்டரிடமிருந்து காப்பாற்றும்படி இளம் பெண், தஞ்சை எஸ்.பி.,யிடம் புகார் மனு அளித்துள்ளார்.
தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி சாலை, எல்.ஐ.சி., காலனியை சேர்ந்த மனோஜ் மனைவி அனுராதா (25), தஞ்சை எஸ்.பி.,யிடம் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது: சிறு வயதில் தாயார் இறந்து விட்டதால், என் தந்தை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். சித்தியின் கொடுமை தாங்காமல், 15 வயதில் திருமணமாகி, இரண்டு குழந்தைகள் உள்ளனர். முதல் கணவர் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதால், மதுரை நிறுவனம் ஒன்றில், புகார் செய்தேன். அவர்கள், "என் திருமணம் செல்லாது’ என அறிவித்தனர். தனியே குழந்தைகளுடன் வாழ்ந்து வந்தேன். மதுரை ஐ.சி.ஐ.சி.ஐ., இன்சூரன்ஸ் நிறுவனத்தில் பணிபுரிந்த போது, திருச்சி கண்டோன்மென்ட் பாரதிதாசன் சாலையை சேர்ந்த, மனோஜுடன் பழக்கம் ஏற்பட்டது. அப்போது அவர், மதுரை மருத்துவக் கல்லூரியில் மூன்றாம்ஆண்டு படித்து வந்தார்.
மனோஜ் ஒருநாள், குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து அனுபவித்துவிட்டு, நாங்கள் இருவரும் ஒன்றாக இருப்பது போன்ற ஆபாசப் படங்களை மொபைல் போனில் படம் பிடித்துள்ளார். தொடர்ந்து அந்த படங்களை காட்டி, மிரட்டி அனுபவித்தார். இப்பிரச்னை பெரிதாகாமல் இருக்க, திருமணம் செய்துகொண்டு அவருடன், மதுரை டி.வி.எஸ்., நகரில் குடும்பம் நடத்தினோம். படித்து முடித்தவுடன், தஞ்சை பொன்னகர் ஒன்றாம் தெருவில் வசித்து வந்தோம். ஒருநாள், அவரது மொபைல்போன் மெமரி கார்டை பார்த்தேன். அதில், பெண்களின் ஆபாசப் படங்கள் மற்றும் மதுரை அரசு மருத்துவமனையில், பயிற்சி டாக்டராக அவர் இருந்தபோது, கருக்கலைப்புக்கு வந்த பெண்களின் ஆபாசப் படங்கள் இருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தேன். அவரிடம் கேட்டதற்கு, "இதை வெளியில் சொன்னால் உன்னையும், உன் குழந்தைகளையும் கொன்று விடுவேன். உன் ஆபாசப் படங்களை இன்டர்நெட்டில் வெளியிடுவேன்’ என, மிரட்டுகிறார். போலீசார் அவரிடம் உள்ள மொபைல்போன் மெமரி கார்டை பறிமுதல் செய்து, அவருடன் என்னை சேர்த்து வைக்க வேண்டும். இவ்வாறு புகாரில் கூறப்பட்டுள்ளது. தொடர்ந்து, போலீசார் விசாரிக்கின்றனர்
source:dinamalar
avan sariyana mutta …(manoj)
//போலீசார் அவரிடம் உள்ள மொபைல்போன் மெமரி கார்டை பறிமுதல் செய்து, அவருடன் என்னை சேர்த்து வைக்க வேண்டும்//…. oru thadavai pattum unakku puthi varalaya????