Daily Archives: ஓகஸ்ட் 19, 2010

விடுதலைப் புலிகளோடு போரிடுவது போல விளையா ட புதிய வீடியோ கேம் அறிமுகம் !

இலங்கையில் போர் முடிந்துள்ள நிலையில், விடுதலைப் புலிகளுக்கு எதிராக சண்டையிடும் புதிய வீடியோ கேம் ஒன்றை இந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் பிரெஞ்சு நிறுவனமான உபிசாஃப்ட் வெளிவிடவுள்ளது. இந்த விளையாட்டுக்கு Gகொச்ட் றெcஒன் Pரெடடொர் என்ற தலைப்பிடப்பட்டுள்ளதாம். இதை விளையாடுவோர், காட்டில் உள்ள புலிகளுக்கு எதிராக போராடவேண்டும் ! அதை ஒத்த வடிவில் இது அமைக்கப்பட்டுள்ளதாம் !

இதில் காடுகளுக்குள் செல்லும் விளையாட்டு காரர்கள் புலிகளோடு மிகக் கடினமான சண்டையில் ஈடுபடவேண்டி இருக்கும் என அதன் ஆரம்ப கட்டத்தில் எச்சரிக்கப்படுகிறது. வழக்கமாகவே உலகில் நடக்கும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு வீடியோ கேம் நிறுவனங்கள் பல விளையாட்டுகளை அமைத்துள்ளது போல இவ்விளையாட்டும் அமைக்கப்பட்டுள்ளது என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

காணொளி இணைப்பு

பின்னூட்டமொன்றை இடுக

Filed under Uncategorized