Monthly Archives: ஜூன் 2010

ஆபீஸ் 2010: கட்டாயம் மாற வேண்டுமா?

E_1274527413.jpeg

ஆபீஸ் 2010, வரும் ஜூன் மாதம் சில்லரை விற்பனைக்கு வர இருக்கும் நிலையில், பல வாசகர்கள், இந்த தொகுப்பிற்கு நாம் கட்டாயம் மாற வேண்டுமா? இருக்கிற ஆபீஸ் தொகுப்புகள் போதாதா? அப்படி என்ன கூடுதல், அடிப்படை வசதிகள் இதில் கிடைக்கப் போகிறது? என்ற ரீதியில் கேள்விகளுடனான கடிதங்களை அனுப்பி உள்ளனர்.

இன்னும் முழுமையான ஆபீஸ் 2010 தொகுப்பு நமக்குக் கிடைக்கவில்லை என்றாலும், சோதனைத் தொகுப்பினைப் பயன்படுத்தியதிலிருந்து சில கூடுதல் வசதிகளை அறிய, அனுபவிக்க முடிந்தது. அவற்றின் சில அம்சங்களை இங்கு தருகிறோம். இவை வேண்டுமா? இவற்றுக்காக 2010 தொகுப்பிற்கு அப்டேட் செய்ய வேண்டுமா என்பதற்கான பதிலை வாசகர்களே முடிவு செய்து கொள்ளலாம்.
1. போட்டோ எடிட்: வேர்ட் 2010 அல்லது பிரசன்டேஷன் 2010 புரோகிராம்களில், புதியதாக போட்டோ எடிட்டர் தரப்பட்டுள்ளது. இதன் மூலம் நம் டாகுமெண்ட்களையும் பிரசன்டேஷன் காட்சிகளையும், இன்னும் அழகாகவும், பார்ப்பவர் மனதில் ஆழமான தாக்கம் ஏற்படுத்தும் வகையிலும் அமைக்க முடியும். போட்டோக்களை கிராப் செய்வது, கலர் காண்ட்ராஸ்ட் அமைப்பது, பிரைட்னெஸ் கொடுப்பது, தோற்றத்தினை ஷார்ப் ஆக அல்லது மிதமாக அமைப்பது, கலை நுணுக்கான எபக்டுகளை அமைப்பது போன்ற வேலைகளை இதன் மூலம் மேற்கொள்ளலாம்.
2.வீடியோ எடிட்டிங்: பவர்பாய்ண்ட் பிரசன்டேஷனில் வீடியோக்களை இணைக்கலாம். அத்துடன் அவற்றை எடிட் செய்திடும் வசதியும் தரப்பட்டுள்ளது. நீளமான வீடியோ கிளிப்களைத் தேவையான அளவிற்கு நறுக்கி அமைப்பது. இதன் மூலம் பைல் அளவைச் சுருக்குவது, எடுத்துச் செல்லும் வகையில் அளவைக் குறைப்பது ஆகியவற்றை இதில் மேற்கொள்ளலாம். மேலும் ஸ்லைடுகளையும் அனிமேஷன்களையும் இயக்குவதில் புதிய பல வழிகள் தரப்பட்டுள்ளன.
3. எங்கிருந்தும் எடிட் செய்திடலாம்: ஆபீஸ் 2010 தொகுப்பில் உருவாக்கும் டாகுமெண்ட்களை விண்டோஸ் லைவ் ஸ்கை டிரைவில் போஸ்ட் செய்து, பின் எந்த இடத்திலிருந்தும், எந்த கம்ப்யூட்டர் வழியாகவும் எடிட் செய்து அப்டேட் செய்திடலாம். இதற்கு ஆபீஸ் வெப் அப்ளிகேஷன்கள் தரப்படுகின்றன. வேகமான இன்டர்நெட் இணைப்பும், உயர்ந்த திறன் கொண்ட கம்ப்யூட்டரும் இருந்தால் போதும்.
4. ஒன் நோட் 2010: அனைத்து வகை தகவல்களையும், ஒன் நோட் 2010 (OneNote 2010) தொகுப்பில் வைத்துக் கையாளலாம். ஒருவருக்கு மேற்பட்டவர்கள் இவற்றை எடிட் செய்து, பின் இறுதியில் இணைத்துக் கொள்ளலாம். டெக்ஸ்ட், இமேஜ், ஆடியோ மற்றும் வீடியோ என எதனை வேண்டுமானாலும் இதில் பேஸ்ட் செய்து பயன்படுத்தலாம். பதிந்தவற்றை எந்த இடத்திலிருந்தும் பயன்படுத்தலாம் என்பது கூடுதல் சிறப்பு.
5.பிராட்காஸ்ட் ஸ்லைட் ÷ஷா: பவர்பாய்ண்ட் தொகுப்பில் உள்ள பிராட்காஸ்ட் ஸ்லைட் ÷ஷா (Broadcast Slide Show) பயன்படுத்தி, ஒரு பிரவுசர் வழியாக எந்த ஒரு இடத்தில் உள்ளவர்களுக்கும் காட்டலாம். அவர்களிடம் இதனைக் காண பிரசன்டேஷன் பேக்கேஜ் தேவையில்லை.
6. இமெயில்களைக் கையாளுதல்: அவுட்லுக் 2010 தரும் கான்வர்சேஷன் வியூவினைப் பயன்படுத்தி, உங்கள் இமெயில்களை சுருக்கலாம், வகைப்படுத்தலாம் மற்றும் பலவகைகளில் அவற்றைக் கையாளலாம்.
7. நிதி ஆளுமை: எக்ஸெல் 2010 தொகுப்பு தரும் ஸ்பார்க்லைன்ஸ் (Sparklines) என்பதன் மூலம் சிறிய சார்ட்களை ஏற்படுத்தி, உங்கள் நிதி நிலையினை அவ்வப்போது கண்காணிக்கலாம். அனைத்து வகை டேட்டாவிற்கும் இதே போல் தோற்றங்களை ஏற்படுத்தி கவனிக்கலாம்.
8. நெட்வொர்க் தொடர்பு: அவுட்லுக் 2010 தரும் சோஷியல் கனக்டர் மூலம் நாம் பயன்படுத்தும் சோசியல் மற்றும் வர்த்தக நெட்வொர்க்குகளுடன் எளிதாகத் தொடர்பு கொள்ள முடியும். இதனைப் பயன்படுத்தி மைக்ரோசாப்ட் ஷேர் பாய்ண்ட், விண்டோஸ் லைவ் மற்றும் பிற தர்ட் பார்ட்டி நெட்வொர்க்குகளுடனும் தொடர்பு கொள்ள முடியும்.
9. கட்டளைகள் கை வசம்: ஆபீஸ் தொகுப்பில் நீங்கள் அடிக்கடி பயன்படுத்தும் கட்டளைகளை ரிப்பன் ஒன்றின் மூலம் விரைவாக மேற்கொள்ள வசதி தரப்பட்டுள்ளது.

இது ஒரு முன்னோட்டம் தான். இன்னும் பல புதிய வசதிகள் தொகுப்பு நமக்கு முழுமையாகக் கிடைக்கும் போது தெரியவரும். எனவே இதற்கு மாறலாமா என்பது குறித்து நம் தேவைகள் அடிப்படையிலும், புதிய வசதிகளுக்கு மாறினால் நாம் பெறும் உயர்வுகள் அடிப்படையிலும் முடிவெடுக்கலாம்.

source:dinamalar

பின்னூட்டமொன்றை இடுக

Filed under Uncategorized

இஸ்லாமிய மதபோதகர் மீது பகீர் குற்றச்சாட ்டு

muslimhead.jpg

தர்ஹாவுக்கு வரும் பெண்களை வசியம் பண்ணி… அவர்களை தன் ஆசைகளுக்குப் பயன்படுத்திக் கொள்கிறார்கள், சிறுவர்களையும் ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுத்தி அவர்களது உடல் நலத்தையும் மன நலத்தையும் கெடுக்கிறார்’ – இப்படியாக காவல்துறைக்கு பகீர் குற்றச் சாட்டுகள் போக… அந்த இஸ்லாமிய மத போதகரை குறிவைத்திருக்கிறது போலீஸ்.

சென்னையில் இருந்து பாண்டிச் சேரிக்குப் போகும் வழியில் கிழக்குக் கடற் கரைச் சாலையில் இருக்கிறது கோவளம். இங்கு நபிகள் நாயகத்தின் நேரடி சீடரான தமீம் அன்சாரி அடக்கம் ஆகியிருக்கும் தர்ஹா அமைந்திருக்கிறது. முஸ்லிம்களும் இந்துக்களும் பெருமளவில் வந்து வழிபடும் இந்த பிரபல தர்ஹாவின் பக்கத்திலேயே… ‘போட்டியாக மஜ்லீஸ் மதி ரசூலுல்லா தைக்கா ஷெரிப்’ என்ற பெயரில் ஏ.சி.அறைகளுடன் கூடிய இஸ்லாமிய ஆசிரமத்தை நடத்திவருகிறார் ஷாகுல் ஹமீது. இவர் நெல்லை மேலப்பாளையத்தைச் சேர்ந்தவர். சர்க்கார் வாப்பா என இஸ்லாமியர்களால் மிகுந்த மரியாதையோடு அழைக்கப்படும் இந்த ஷாகுல் ஹமீது மீதுதான் மேற்படி குற்றச்சாட்டுக்கள் எழுந்து பலத்த பரபரப்பை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது.

ஆறடி உயரம், பருமனான தேகம், சிவந்த நிறம், உருது, அரபி, பாரசிகம் ஆகிய மொழிகளில் புலமை, குர்ரானில் தேர்ச்சி என பலரையும் வியப்பில் ஆழ்த்திவந்த இந்த 40 வயதுக்காரரை இப்போது வேறுபார்வை பார்க்க ஆரம்பித்திருக்கிறார்கள் கோவளவாசிகள்.
muslimhead1.jpg
கோவளம் தர்ஹாவின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவரும் நக்கீரன் வாசகருமான அன்சர் பாஷாவிடம் இந்த விவகாரம் குறித்து நாம் கேட்டபோது “""இந்த சர்க்கார் வாப்பா மீது 2008-லேயே பாலியல் புகார்கள் எழுந்தது. இதைத் தொடர்ந்து கோவளம் போலீஸ் எங்கள் ஜமாத்தினரையும் தர்ஹா நிர்வாகிகளையும் அழைத்து விசாரித்தார்கள். நாங்கள் எங்களுக்குத் தெரிந்த விசயங்களை… தெரிவித்துவிட்டு வந்தோம்” என்றார்.

இது குறித்து மேலும் சிலரிடம் விசாரித்தபோது, ""இவர் மீது பல மன்மத புகார்கள் -குறிப்பா கல்லூரி நடத்தும் ஒரு இஸ்லாமியத் தொழிலதிபரின் குடும்பத்தில் இருக்கும் பெண்களிடம் இவர் நடந்துகொண்ட முறை யால் அவர்கள் தந்த புகார்தான் 2008-ல் போலீஸுக்கு வந்தது. பெரிய குடும்ப விவகாரம் என்பதால் இதை சீரியஸா எடுத்துக்கிட்டு விசாரிச்சாங்க. ஆனா மதத்தின் பெயருக்கு இழுக்குன்னுதான் அவரைப் பத்தி மழுப்பலான பதில்களைச் சொல்லியும் அவர் நல்லவர்னு எழுதிக் கொடுத்தும் சிலர் அவரைக் காப்பாத்தினாங்க” என்றார்கள் ஆணித்தரமாய்.

கோவளம் மசூதி முத்தவல்லியும் ம.தி.மு.க. பிரமுகருமான காதர் பாஷாவிடம் இது குறித்து நாம் கேட்டபோது “""இந்த சர்க்கார் வாப்பாவின் ஆசிரமத்தில் சென்னை மண்ணடியைச் சேர்ந்த முகமது பாருக் என்பவர் கொஞ்சகாலம் தங்கி இருந்தார். அவர்தான் இப்போது சர்க்கார் வாப்பா குறித்து புகார் கொடுத்திருக்கிறார். கேட்க அதிர்ச்சியாகத்தான் இருக்கிறது”’என்று முடித்துக் கொண்டார்.

muslimhead2.jpgகாவல்துறையிடம் புகார் தந்திருக்கும் முகமது பாருக்கை மண்ணடியில் நாம் சந்தித்தபோது “""நான் அவரோட ஆசிரமத்தில் கொஞ்சகாலம் தங்கி யிருந்தேன். அப்பதான் அவரோட செக்ஸ் ரீதியிலான நடவடிக்கை களைப் பார்த்து அதிர்ந்துபோனேன். மந்திரிச்சி தண்ணீர் கொடுப்பார். பிறகு கற்கண்டு கொடுப்பார். அதை சாப்பிடும் பெண்கள்… கண்செருகிப் போய்டுவாங்க. அப்புறம் அவர் இஷ்டப்படிதான் அவங்க நடக்கணும். இதேபோல்… சின்ன பையன்களைக் கூப்பிட்டு… என்னோட செக்ஸ் விளையாடினால் உங்களுக்கு ஆயுள் அதிகரிக்கும்னு தன் அறைக்குள் கூட்டிட்டுப்போய்டுவார். இந்தக் கொடுமைகளையெல்லாம் பார்த்து… இஸ்லாத்தின் மாண்பை இப்படி இந்த ஆள் கெடுக்கிறாரேன்னு கோபமாகித் தான்… அங்கிருந்து வந்தேன். இதை என் நண்பர்கள்ட்டசொல்லி நான் புலம்பினேன். அவங்கதான் என்னை போலீஸ்ல புகார் கொடுக்கச் சொன்னாங்க. இந்த சர்க்கார் வாப்பாவின் முகமூடியை நான் கிழிக்காம ஓயமாட்டேன்”’’என்றார் எரிச்சல் மண்டும் குரலில்.

இந்த பகீர் புகார்கள் குறித்து சர்க்கார் வாப்பா எனப்படும் ஷாகுல் ஹமீதிடமே நாம் கேட்டபோது “""அந்த முகமது பாருக்குக்கு அவர் மனைவி யைப் பிடிக்கலை. அதனால் அவளை பிரிச்சிவிட்ருங்கன்னு என்னிடம் கேட்டார். நான் இது சம்பந்தமா அவருக்கு எந்த உதவியையும் செய்யலை. அந்தக் கோபத் தில்தான் என்மீது கண்ட படி புகார்களைச் சொல் றார்”’’ என முடித்துக் கொண்டார்.

""இங்க இருக்கும் நபிகளின் சீடரான தமீம் அன்சாரி தர்ஹாவுக்குப் போட்டியாக… சம்சுதீன் சங்கிலி வாலா என்ற சாமியார் ஒருவழிபாட்டு மையத்தை உருவாக்கி அதில் அமர்ந்துகொண்டு மந்திர மாயங்களைச் செய்துவந்தார். அவர் மறைந்த பிறகு அவரது சிஷ்யர்கள் சங்கிலி வாப்பா என்ற பெய ரில் இதே வேலையை இன்றுவரை செய்துக்கிட்டு இருக்காங்க. மந்திர மாயம், பில்லி சூன்யம் என்பதே இசுலாத்துக்கு விரோதமானது. இதைச் செய்பவர்களும் இசுலாத்துக்கு விரோதமானவர் களே”’என்று அடித்துச்சொல்கிறார் கோவளம் அன்சர் பாஷா.

நம்மிடம் மனம் நொந்து பேசிய இஸ்லாமிய நண்பர்களோ “""கோவளத்தில் மட்டுமல்ல; சென்னையின் பிரதான சாலையில் இருக்கும் மசூதியில் இமாமாக இருப்பவர் சிறுவர்களை ஓரினச்சேர்க்கைக்கு பயன்படுத்தி வர்றதா புகார்கள் வருது. கொளத்தூர் பகுதியில் இருக்கும் ஒரு மதரசாவில் அரபி பாடம் நடத்தும் மௌலவி ஒருவர், படிக்கும் பசங்களை அசிங்கமான காரியங்களுக்குப் பயன்படுத்திக்கிறதாவும் புகார். இசுலாத்தின் மாண்பைக் கெடுக்கும் இப்படிப்பட்டவர்களைக் களையெடுத் தாகணும்”’என்கிறார்கள் கோபம் கோபமாய்.

தேசிய லீக் கட்சியின் தலைவரான பஷீர் முகமதுவோ ""தர்ஹாக்களில் நடக்கும் மாந்த் ரீகம், பில்லிசூன்யம் போன்றவை ஏமாற்று வேலைகள்தான். இதை அனுமதிக்கக் கூடாது” என்கிறார் கவலையாய்.

ஆன்மீக போலி கள்… எல்லா மதங்களிலும் இருக்கிறார் கள். நித்யானந்தாக் களும் எல்லா மதங்களி லும் இருக்கிறார்கள்.

source:nakkheeran

1 பின்னூட்டம்

Filed under Uncategorized

பள்ளிக்கூடம் போகாத சிறுவன்: ஐ.ஐ.டி., நுழைவு த்தேர்வில் சாதனை

large_15877.jpg

புதுடில்லி : பள்ளிக்கூடத்திற்கே போகாத 14 வயது சிறுவன், ஐ.ஐ.டி., நுழைவுத் தேர்வில், இந்திய அளவில் 33வது இடம் பிடித்து சாதனை புரிந்துள்ளான்.ஐ.ஐ.டி.,யில் சேருவதற்கு வயது வரம்பு எதுவும் இல்லையென்றாலும், பிளஸ் 2 முடித்திருக்க வேண்டும். ஆனால், பள்ளிக்கூடத்திற்கே போகாமல், வீட்டிலிருந்தபடியே 10ம் வகுப்பு வரை படித்த, ஷால் கவுசிக் என்ற 14 வயது சிறுவன், ஐ.ஐ.டி., நுழைவுத் தேர்வில் இந்திய அளவில் 33வது இடம் பிடித்து சாதனை படைத்துள்ளான்.

ஷாலிடம் உள்ள அபூர்வ திறமையை கண்டு, அவன் தாய் ருச்சி கவுசிக், டாக்டர் தொழிலை விட்டுவிட்டு, பல்வேறு விதங்களில் அவனை ஊக்கப்படுத்தியுள்ளார். ஷாலின் தந்தை ராணுவத்தில் அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார்.கடந்த 2006ம் ஆண்டு பள்ளியில் சேர்ந்த ஷால், 2008 ம் ஆண்டில், 10ம் வகுப்பை முடித்து விட்டான்.தனது லட்சியம் குறித்து ஷால் கூறுகையில், "எனக்கு இன்ஜினியராவதில் விருப்பமில்லை. இயற்பியல் விஞ்ஞானி ஐன்ஸ்டீனை போன்று, இயற்பியல் மேதையாக வேண்டும்’ என்று தெரிவித்துள்ளான்.

இதுதொடர்பாக, ருச்சி கவுசிக் கூறியதாவது:ஷாலிடம், எதையும் உடனடியாக புரிந்து கொள்ளும் அபூர்வ திறமை இருப்பதை, அவன் குழந்தையாக இருந்தபோதே கண்டுபிடித்தேன். பள்ளிக்கூடத்தில் கற்றுத் தரப்படும் பாடங்கள், அவன் அறிவு பசிக்கு சோளப்பொறி என்பதை உணர்ந்தேன்.எனவே, அவனை பள்ளிக்கூடத்திற்கு அனுப்பும் எண்ணத்தை கைவிட்டுவிட்டு, 12 ஆண்டுகளாக, அவனுக்கு நானே வீட்டில் பாடங்களை சொல்லிக் கொடுத்தேன். இதற்காக, எனது டாக்டர் தொழிலை விட்டுவிட்டேன். இதற்காக, சமூகத்தில் நான் மிகப்பெரிய சிக்கல்களையும் சந்தித்திருக்கிறேன். அதையெல்லாம் மறக்கும் விதத்தில், நல்ல பலன் கிடைத்திருப்பது மிகுந்த சந்தோஷமாக இருக்கிறது.ஷால் எப்போதும், ஒரே விதமான பாடத்தை படிக்க மாட்டான். சில நேரங்களில் புவியியல் தொடர்பாக படிப்பான்; சில நேரங்களில் வரலாறு. போரடித்தால் நாவல்களை தொடர்ந்து படித்துக் கொண்டிருப்பான். சார்லஸ் டிக்கின்ஸ் நாவல்களை விரும்பி படிப்பான். அவன் படிப்பதற்காக 15 லட்ச ரூபாய் செலவில், வீட்டில் நூலகம் ஒன்றை அமைத்து கொடுத்திருக்கிறேன். இந்த நூலகத்தில் 2,000 புத்தகங்கள் இருக்கின்றன. அவை அனைத்தையும், ஷால் படித்து முடித்துவிட்டான். இந்திய புராணக் கதைகளை படிப்பதில் அவனுக்கு நிறைய ஆர்வம். அதேபோன்று, எகிப்தியர்களின் வரலாறுகளையும் விரும்பி படிப்பான்.இவ்வாறு ருச்சி தெரிவித்தார்.

ஷாலின் தங்கை சரசுக்கு ஒருவிதமான மறதி நோய் உள்ளது. எனினும், அவளுக்கும், ஷாலை போலவே வீட்டிலேயே ருச்சி பாடம் சொல்லித் தருகிறார்.

ஷாலுக்கு ஐ.ஐ.டி., நுழைவுத் தேர்வுக்கு பயிற்சி அளித்த ஆசிரியர்கள் கூறியதாவது:ஷால் அதிபயங்கர புத்திசாலி. மிகப்பெரிய சிக்கலான கணக்குகளைக் கூட, பேப்பர் பேனா உதவியின்றி, மனக்கணக்கு போட்டு, சில வினாடிகளில் பதில் சொல்லிவிடுவான். எங்களிடமிருந்து அவன் கற்றுக் கொண்டதை விட, நாங்கள் தான் அவனிடமிருந்து நிறைய கற்றுக் கொண்டோம்.இவ்வாறு கூறி அவர்கள் ஆச்சரியப்படுகின்றனர்.

source:dinamalar

பின்னூட்டமொன்றை இடுக

Filed under Uncategorized

இந்த வார இணையதளங்கள்

E_1274527458.jpeg

மாணவர்களுக்கான இலவச இ-நூல்கள்

+2 முடிவு வந்துவிட்டது. மாணவர்கள் தாங்கள் சேரப் போகும் பொறியியல், மருத்துவம், வேளாண்மை மற்றும் கலை அறிவியல் பட்ட வகுப்புகள் குறித்து பலவகைகளிலும் தகவல்களைத் திரட்டி ஆய்வு செய்து கொண்டிருப்பார்கள். தாங்கள் சேரப் போகும் பாடப்பிரிவுகளில் என்னவெல்லாம் பாடங்கள் இருக்கும், இவற்றிற்கான நூல்களை எங்கு வாங்கலாம் என்றும் சிந்திக்கத் தொடங்குவார்கள். குறிப்பாக பொறியியல் மாணவர்கள், பெரிய நகரங்களில் இயங்கும் புக் பேங்க் எனப்படும் புத்தக வங்கிகளில் பணம் செலுத்தி நூல்களைப் பெறும் வழிகளை அறிந்து அவற்றை நாடுவார்கள். அல்லது சீனியர் மாணவர்கள் படித்த நூல்களை வாங்கிப் படிக்கத் தொடங்குவார்கள். கூடுதலாக நூலகத்தில் உள்ள நூல்களையும் எடுத்துப் படிக்கத் தொடங்குவார்கள்.

இவர்களுக்கு இணையமும் உதவி செய்கிறது. பல தளங்கள் நூல்களை இ–நூல்களாக, பி.டி.எப். பார்மட்டில் தருகின்றன. இவை பெரும்பாலும் இலவசமாகவே கிடைக்கின்றன. இவற்றை டவுண்லோட் செய்து, சிடிக்களில் அல்லது பிளாஷ் ட்ரைவ்களில் பதிந்து, நண்பர்களுக்குள் பகிர்ந்து கொள்ளலாம். முக்கிய பக்கங்களையோ அல்லது நூல் முழுவதையுமோ, அச்சிட்டு எடுத்து வைத்துப் படிக்கலாம்.

இவ்வகையில் கீழ்க்காணும் தளங்கள் சிறப்பாக இயங்குவதனை அறிய முடிந்தது. அவை:
1. www.getfreeebooks.com இலவசமாக நூல்களைத் தரும் தளம் இது. எத்தனை நூல்களை வேண்டு மானாலும் டவுண்லோட் செய்து கொள்ளலாம். இணையம் முழுவதும் தேடிப் பார்த்து அனைத்து இ–புக்குகளையும் இங்கு வெளியிட்டுள்ளனர். சில நூல்களை அவர்களே தயாரித்து வழங்குகின்றனர். நீங்கள் சிறப்பானது என்று எண்ணும் இ–புக் இந்த தளத்தில் இல்லையா? இந்த தளத்தின் அட்மினிஸ்ட்ரேட்டருக்கு இமெயில் மூலம் தெரிவித்தால் அவர் அதனைத் தேடி, எடுத்து பதிந்துவிடுவார்.
2. அடுத்ததாகக் குறிப்பிட வேண்டிய தளம் www.freeebooks.net. இதில் உள்ள நூல்களில் எத்தனை நூல்களை வேண்டுமானாலும் இலவசமாக டவுண்லோட் செய்திடலாம். உங்களுக்கு வேண்டிய உதவியினைத் தந்து தேவையான பொருளில் உள்ள நூல்களைக் காட்டுகிறது. வகைப்படுத்தி தரப்படுவதால், மாணவர்கள் தேடும் நேரம் மிச்சமாகிறது.
3. www.ebooklobby.com என்ற முகவரியில் உள்ள இந்த தளம் குறிப்பிடப்பட வேண்டிய ஒன்று. இந்த தளத்தில் நூல்கள் அருமையாக வகைப்படுத்தப்படுள்ளன. வர்த்தகம், கலை, கம்ப்யூட்டிங், கல்வியியல் என அத்தனை பிரிவுகளிலும் நூல்கள் உள்ளன. எந்த வகையில் நூல்களைத் தேடுகிறீர்களோ அதனை கிளிக் செய்து உங்களுக்கான நூல்களை எடுக்கலாம், படிக்கலாம். பதிந்து வைத்துக் கொள்ளலாம்.

மாணவர்கள் மட்டுமின்றி, ஆசிரியர்களும் இந்த தளங்களை நாடித் தாங்கள் வகுப்புகளில் மாணவர்களுக்குக் கற்றுத் தர இந்த நூல்களை நாடுகின்றனர். பன்னாட்டளவில் உள்ள சிறந்த ஆசிரியர்களின் நூல்களை இந்த தளங்கள் வழங்குவதால், ஒரு பொருளில் மிகச் சிறந்த கருத்துக்கள் மாணவர்களுக்கு இந்த நூல்கள் வழியாகக் கிடைக்கின்றன. மாணவர்கள் அனைவரும் கட்டாயம் சென்று பார்க்க வேண்டிய தளங்கள் இவை.

source:dinamalar

பின்னூட்டமொன்றை இடுக

Filed under Uncategorized

ஒட்டகங்களுக்கு இன்சூரன்ஸ்: ராஜஸ்தான் மாந ில அரசு முடிவு

large_6391.jpg

ஜெய்ப்பூர் : ராஜஸ்தான் மாநிலத்துக்கே உரிய விலங்கான ஒட்டகத்துக்கு அம்மாநில அரசு இன்சூரன்ஸ் திட்டம் கொண்டு வந்துள்ளது. இத்திட்டத் தால் ஒட்டக உரிமையாளர்கள், வளர்ப்பவர்கள், பராமரிப்பவர்கள் என அனைத்துத் தரப்பினரும் பயனடைவர்.

ராஜஸ்தான் மாநிலத்தின் பெரும் பகுதி பாலைவனம் என்பதால், அதற்கேற்ற விலங்கான ஒட்டக வளர்ப்பு, அங்கு தனி இடம் பெற் றுள்ளது. தண்ணீருக்காக, பாலைவனப் பகுதியிலுள்ள கிணறுகளைத் தேடி பல மைல்கள் பயணம் செய்ய, ஒட்டகத்தைப் பயன்படுத்துவர். விவசாயம் மற்றும் போக்குவரத்துக்கு ஒட்டகங்கள் பெரிதும் பயன்படுத்தப்பட்டன. தற்போது இந்த இரண்டு துறைகளும் இயந்திரமயமாகி வருவதால், ஒட்டகங்களை வளர்க்க மிகவும் பாடுபட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், ஒட்டகங்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. கடந்த 2002ல், இம்மாநிலத்தில் நான்கு லட்சத்து 98 ஆயிரம் ஒட்டகங்கள் இருந்தன. 2007ல் நான்கு லட்சத்து 39 ஆயிரம் ஒட்டகங்கள் உள்ளன. இதற்கு முன்பு இருந்த அரசுகள், செம்மறியாடு, பசு, எருமை போன்ற வீட்டு விலங்கினங்களுக்கு பல்வேறு இன்சூரன்ஸ் திட்டங்கள், தீனியில் மானியம் போன்ற திட்டங்களைக் கொண்டு வந்தன. ஒட்டகங்கள் புறக்கணிக்கப்பட்டன.

பா.ஜ., ஆட்சியின் போது மாநிலத்தில் தண்ணீருக்குப் பெரும் பஞ்சம் ஏற்பட்டதால், செம்மறியாடு வளர்ப்போர் பெரும் இடரைச் சந்திக்க வேண்டியிருந்தது. இதனால் அவர்கள், செம்மறியாடுகளுடன் அண்டை மாநிலங்களான பஞ்சாப், அரியானாவுக்குச் செல்ல ஆரம்பித்தனர். இதைத் தடுக்க, முதன்முதலாக செம்மறியாட்டுக்கு இன்சூரன்சை பா.ஜ., கொண்டு வந்தது. அத்திட் டம், பின் பசு, எருமை என விரிவடைந்தது. இப்போது, ராஜஸ்தான் அரசு ஒட்டக வளர்ப்போர் எதிர்கொண்டு வரும் நஷ்டத்தைச் சமாளிக்க உதவும் வகையில், ஒட்டகங்களுக்கான இன்சூரன்சை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, பாலிசி தொகையில் 25 சதவீதத்தை அரசே வழங்கிவிடும்.

ஒட்டகம் வளர்ப்போர், இன்சூரன்ஸ் மூலம் ஒரு ஒட்டகத்துக்கு 20 ஆயிரம் ரூபாய் பெறமுடியும். இதற்காக கட்ட வேண்டிய பாலிசி தொகையான ஆயிரம் ரூபாயில் 25 சதவீதம் அரசால் வழங்கப்படும். ஒட்டகம் இறந்தால் ஒட்டக உரிமையாளருக்கு 25 ஆயிரம் ரூபாய் கிடைக்கும். ஆயுள் காப்பீடாக ஒட்டக உரிமையாளருக்கு 30 ஆயிரம் ரூபாயும், ஒட்டகம் பராமரிப்போருக்கு 35 ஆயிரம் ரூபாயும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. இதில் ஒட்டக உரிமையாளர் 200 ரூபாயும், பராமரிப்பவர் 100 ரூபாயும் செலுத்தினால் போதும். அரசின் மானியத் தொகையை 25 சதவீதத்திலிருந்து 50 சதவீதமாக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அரசு விரைவில் அதன் மீதான தன் முடிவை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பின்னூட்டமொன்றை இடுக

Filed under Uncategorized

இந்த வார டவுண்லோட்

கெட்டுப்போன "சிடி’யிலிருந்து டேட்டா

தொலைபேசி மூலமாகவும், கடிதங்களிலும் பல வாசகர்கள், தங்களிடம் உள்ள சிடியில் ஸ்கிராட்ச், கோந்து மற்றும் பிற பட்டதனால், சிடி ட்ரைவில் டேட்டா படிக்கப்படவில்லை, வெளியே தள்ளப்படுகிறது என்றும், இதற்கு ஏதேனும் தீர்வு உண்டா என்றும் கேட்டிருந்தனர்.

இதற்குத் தீர்வாக ஒரு இலவச புரோகிராம் ஒன்று இருப்பதனை அண்மையில் பார்த்தேன். அந்த புரோகிராம் பெயர் CDRoller. இந்த புரோகிராம், வழக்கமான விண்டோஸ் டூல்கள் மூலம், சிடி ட்ரைவினால் படிக்க இயலாத, சிடி/டிவிடி/புளுரே டிஸ்க் ஆகிய டிஸ்க்குகளிலிருந்து டேட்டாவினைப் பெற்றுத் தருகிறது. பெரும்பாலான சிடிக்களிடம் இது பலனளிக்கிறது. இந்த புரோகிராமினாலும் படிக்க இயலவில்லை என்றால், டேட்டாவினை, அத்தகைய சிடிக்களிடமிருந்து பெறுவது கஷ்டம்தான்.

இந்த புரோகிராமினை http://download.cnet.com/CDRoller/30102248_411384331.html என்ற முகவரியில் உள்ள தளத்திலிருந்து பெறலாம். சி.டி. ரோலரின் பதிப்பு 8.81 தற்சமயம் கிடைக்கிறது. இதனை இன்ஸ்டால் செய்து, படிக்க இயலாத சிடிக்களிடமிருந்து டேட்டா பெற முயற்சிக்கலாம். இதில் ஒரு யு.டி.எப். ரீடர்(UDF Reader) தரப்பட்டுள்ளது. இது பல முறை எழுதப்பட்ட (Multi Session CDs) சிடிக்களிலும் சிறப்பாக இயங்குகிறது. சிடிக்களிலிருந்து கவனக் குறைவாக அழிக்கப்பட்ட பைல்களையும் மீட்டுத் தருகிறது. சாதாரணமாகப் படிக்க இயலாத பைல்களை, ட்ராக் அண்ட் ட்ராப் முறையில் மீட்டுத் தருகிறது. இந்த புரோகிராமிலேயே டிவிடி –வீடியோ ஸ்பிளிட்டர் என்னும் வசதி தரப்படுகிறது. இதன் மூலம் டிவிடி வீடியோக்களைப் பிரித்து அமைக்கலாம். மேலும் சிடி/டிவிடி/புளு ரே டிஸ்க் ஆகியவற்றில் டேட்டா எழுதும் பர்னர் புரோகிராமும் தரப்பட்டுள்ளது. இதனைப் பயன்படுத்தி பிளாஷ் ட்ரைவ்களில் இருந்து காணாமல் போன பைல்களையும் மீட்கலாம். இந்த பதிப்பில் பல ட்ரேக்குகளை ஒரே நேரத்தில் ஸ்கேன் செய்திடும் வசதியும் தரப்பட்டுள்ளது.

source:dinamalar

பின்னூட்டமொன்றை இடுக

Filed under Uncategorized

“ஜாக்கி’கள் மூலம் வீட்டை அப்படியே தூக்கி உ யர்த்தி கட்டும் அதிசய தொழில்நுட்பம்

large_14554.jpg

சென்னை:மழைக்காலத்தில் ஏற்படும் பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில் 60 டன் எடை கொண்ட ஒரு அடுக்குமாடி வீட்டை பெயர்த்து, 260 "ஜாக்கி’கள் மூலம் அப்படியே தூக்கி, நான்கு அடி உயர்த்தும் புதிய கட்டட தொழில்நுட்ப பணிகள், தமிழகத்தில் முதல் முறையாக வேளச்சேரியில் நடந்து வருகிறது.

மழைக்காலம் என்றால் வேளச்சேரி, வெள்ளக் காடாகிவிடும். குடியிருப்பு பகுதிகளில் இடுப்பளவு மழைநீர் தேங்கும். படகுகள் மூலம் தான் பயணிக்க முடியும். இப்பிரச்னை தொடர்ந்து கொண்டே இருக்கிறது. அப்பகுதியை சேர்ந்த ராமன் என்ற ஆடிட்டர் ஒருவர், நவீன தொழில்நுட்பம் மூலம் தனது வீட்டை பெயர்த்து, வாகனங்களுக்கு பயன்படுத்தும் "ஜாக்கி’கள் மூலம் நான்கு அடி உயரம் தூக்கி, கட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

ராமன் மனைவி லட்சுமி கூறியதாவது: நாங்கள் வேளச்சேரி, பேபி நகர், பட்டுக்கோட்டை முத்துக்குமாரசாமி சாலையில் 2001ம் ஆண்டு இடத்துடன் புதியதாக கட்டப்பட்ட வீட்டை வாங்கினோம். கீழ் தளம், மேல் தளம் 2,600 சதுர அடியில் கட்டப்பட்டது. குடிவந்த சில மாதங்களில் மழைக்காலம் துவங்கியது. அப்போது, வேளச்சேரி பகுதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கை கண்டு அதிர்ச்சியடைந்தோம். எங்கள் வீட்டிற்குள் இடுப்பளவு தண்ணீர் புகுந்தது. ஒவ்வொரு ஆண்டும் மழைக்காலத்தில் எங்களுக்கு இதே நிலைதான். விமோசனம் கேட்டு மாநகராட்சியை அனுகினோம். பலரிடம் ஆலோசனை கேட்டோம். அப்போது, முகப்பு பகுதியில் தடுப்பு கட்டுங்கள்; வீட்டின் தரைத்தளத்தை உயர்த்துங்கள்; கீழ்தளத்தில் உள்ள அறைகளை அகற்றிவிட்டு கார் "பார்க்கிங்’ ஆக்கிவிடுங்கள் என தங்களின் கருத்துக்களை தெரிவித்தனர்.

வீடு கட்டும் கான்ட்ராக்டர் ஒருவரிடம் ஆலோசனை கேட்டபோது,"உங்கள் வீட்டை இடித்துவிட்டு அடுக்குமாடி வீடுகள் கட்டி விடலாம். அதில், எனக்கு 60 சதவீதமும்; உங்களுக்கு 40 சதவீதம்’ என பங்குபோட ஆரம்பித்தார். இதனால், நாங்கள் குழம்பிப் போனோம். இறுதியில், என் கணவர் டில்லியில் உள்ள தனது நண்பர் ஒருவரிடம் ஆலோசனை கேட்டார். அப்போது, வீட்டை இடிக்காமல் பெயர்த்து, வாகனங்களுக்கு டயர் மாற்றப் பயன்படுத்தும் "ஜாக்கி’களை பயன்படுத்தி தேவையான உயரத்திற்கு மாற்றியமைக்கும் தொழில்நுட்பம் குறித்து கூறினார். அவ்வாறு உயரமாக்கப்பட்ட, கட்டப்படும் சில வீடுகளையும் நேரில் கண்டு அதிசயித்தோம். தற்போது, எங்கள் வீட்டையும் அதே தொழில்நுட்பம் மூலம் பெயர்த்து நான்கு அடிக்கு உயர்த்தி வருகிறோம். இவ்வாறு லட்சுமி கூறினார்.

இந்த புதிய தொழில்நுட்பத்தை செயல்படுத்தி வரும் அரியானாவை சேர்ந்த அர்கேஷ் குமார் சவுகான் கூறுகையில்,""ஜாக்கி’கள் மூலம் பழைய வீடுகளை தரைமட்டத்தில் இருந்து பெயர்த்து,தேவையான அளவு உயர்த்தும் கட்டட தொழில்நுட்ப முறையை நாங்கள் கடந்த 1991ம் ஆண்டு முதல் செய்து வருகிறோம். முதன் முதலில் அரியானா பகுதியில் இருந்த பாலத்தை பெயர்த்து உயர்த்தினோம். அதன் பிறகு பல மாநிலங்களில் நூற்றுக்கணக்கான வீடுகளை இடிக்காமல், பெயர்த்து தேவையான உயரத்திற்கு உயர்த்திக் கொடுத்து வருகிறோம். தமிழகத்தில் முதல் முறையாக ராமனின் வீட்டை எங்கள் தொழில்நுட்பத்தில் உயர்த்தி வருகிறோம். கடந்த மாதம் 16ம் தேதி பணிகளை துவக்கினோம். இன்னும் சில நாட்களில் பணிகள் முடிந்து விடும். இந்த தொழில்நுட்ப முறையை நாங்கள் அரசிடம் முறைப்படி பதிவு செய்துள்ளோம். பல முறை லிம்கா சாதனை புத்தகத்தில் எங்கள் தொழில்நுட்பம் இடம் பெற்றுள்ளது. கின்னஸ் புத்தகத்திலும் பதிவு செய்துள்ளோம்’ என்றார்.

வீட்டை தூக்கும் நவீன தொழில்நுட்ப முறை: வேளச்சேரியில் உள்ள ராமன் வீட்டில் 16 பேர் கொண்ட குழுவினர் பணி புரிந்து வருகின்றனர். 2,600 சதுர அடி, 60 டன் எடை கொண்ட அவரின் வீட்டை தரை மட்டத்தில் இருந்து நான்கு அடி உயர்த்தி வருகின்றனர். முதலில் சுவர்களின் இருபுறமும் தோண்டி அதன் கீழ் ஒவ்வொரு பக்கமாக "ஜாக்கி’கள் வைக்கின்றனர். அந்த வீட்டிற்கு 260 "ஜாக்கி’கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. தேவையான உயரத்திற்கு 16 பேரும் ஒரே நேரத்தில் "ஜாக்கி’களை இயக்கி உயர்த்துகின்றனர். பின், பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட சிமென்ட் செங்கற்களை வைத்து கட்டுகின்றனர். இந்த முறையில் வீட்டின் தரைத்தளம் மட்டும் சேதமடைகிறது. சுவர்களில் விரிசல் கூட விழுவதில்லை. மூன்று அடி வரை உயர்த்துவதற்கு, சதுர அடிக்கு 225 ரூபாய் கூலி மட்டும் வசூலிக்கின்றனர். அதன் பிறகு ஒவ்வொரு சதுர அடிக்கும் ரூ.80, ரூ.100 என வசூலிக்கின்றனர். ஒரு மாதத்திற்குள் வீட்டை உயர்த்தும் பணிகள் முடிக்கப்படுகின்றன.

source:dinamalar

பின்னூட்டமொன்றை இடுக

Filed under Uncategorized

கையடக்க குர்-ஆன்

large_14500.jpgகடப்பா:இஸ்லாம் மதத்தினரின், புனித நூலான குர்-ஆன், மிகச்சிறிய அளவில் அச்சிடப்பட்டுள்ளது.ஆந்திர மாநிலம், கடப்பா நகர், மராட்டி வீதியை சேர்ந்த ஷேக் மஸ்தான். இவருக்கு, புருனை நாட்டில் வாழ்ந்து வரும் அவருடைய நண்பரான காஜா உசேன், ஓராண்டுக்கு முன், அன்பு பரிசாக புனித நூலான குர்-ஆனை அனுப்பியுள்ளார். இந்த நூல், உள்ளங்கையில் வைக்கும் அளவிற்கு 4.5 செ.மீ., நீளம், 3.5 செ.மீ., அகலம் கொண்டது. ஷேக் மஸ்தான் கூறுகையில், "ஆந்திர மாநிலத்திலேயே, இந்த குர்-ஆன் மிகவும் சிறிய அளவில் தயாரிக்கப்பட்ட நூல் ஆகும்’ என்றார்.

source:dinamalar

பின்னூட்டமொன்றை இடுக

Filed under Uncategorized

புலி இயக்கம்… புதுத் தலைவர்!

மிழ் ஈழத் தேசிய அரசாங்கத்தின் தலைவராக விசுவநாதன் ருத்திர குமாரன் பெரும் எதிர்பார்ப்புக்களுக்கு இடையே கடந்த வாரம் அமெரிக்காவில் உள்ள p42c.jpgஃபிலடெல்பியா நகரில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அங்கு நடந்த சர்வதேசப் பிரதிநிதிகளின் முதல் அமர்வுக் கூட்டத்தில்தான் இவர் ஏகமனதாகத் தேர்வானார். ஆட்சி மன்றக் குழு உறுப்பினர்களாக, புலம் பெயர்ந்த ஏழு ஈழத் தமிழர்களான மகிந்தன் சிவசுப்ரமணியம், சாம் சங்கரசிவம், ஜெரார்ட் ஃபிரான்சிஸ், செல்வா செல்வநாதன், வித்தியா ஜெயசங்கர், சசிதர் மகேஸ்வரன், ஜனார்த்தனன் புலேந்திரன் ஆகியோர் தேர்வாகினர்.

ருத்திரகுமாரனுக்கு எதிராக காஸ்ட்ரோ அணியைச் சேர்ந்த லண்டனில் வசிக்கும் ஜெயானந்த மூர்த்தி போட்டியிட மனு கொடுத்திருந்தார். ஆனால், அமெரிக்கா,

இங்கிலாந்து, இன்ன பிற நாடுகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் ருத்திரகுமாரனையே ஆதரித்ததால், ஜெயானந்த மூர்த்திக்கு ஆதரவு கிடைக்கவில்லை. ஈழத் தேசிய அரசின் அவைத் தலைவராக (சபாநாயகர்) கனடாவைச் சேர்ந்த பிரபல தமிழ் ஈழத் தலைவர் பொன்.பாலராஜன் தேர்வானார். இந்தத் தேர்தலில் கனடிய ஈழத் தமிழர்களை உற்சாகப்படுத்தும் விதமாக, அவர்களுக்கு பல முக்கிய பொறுப்புகள் தரப்பட்டன.

இந்தத் தேர்தலின் மூலம், பிரபாகரனுக்கு அடுத்ததாக தலைமைப் பொறுப்பை ஏற்கும் ருத்திரகுமாரன், தான் நினைத்ததைச் சாதித்துவிட்டார் என்றுதான் சொல்லவேண்டும். சர்வதேச அரங்கில் தனித் தமிழ் ஈழத் தேசிய அரசு அமையப் பேச்சுவார்த்தைகளை ஜனநாயக முறைப்படி ருத்திரகுமாரன் தொடங்க உள்ளதாகத் தெரிகிறது. அவர் இந்த அமர்வில் பேச எழுந்தபோது பலத்த கரகோஷம்!

p42b.jpg

”உலகின் பல திக்குகளிலும் சிதறி வாழும் ஒரு மில்லியன் ஈழத் தமிழர்களின் சார்பாக நாம் இங்கு இணைந்துள்ளோம். அமெரிக்காவின் சுதந்திரப் பிரகடனமும் இந்த ஃபிலடெல் பியாவில்தான் நிகழ்ந்தது. நாம் இங்கு கூடியிருப்பதும், நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசியல் அமைப்பை உருவாக்குவதற்கே!

ஈழத் தமிழரின் வரலாற்றில்இன்றைய தினம், மிக முக்கியமான நாள். கடந்த வருடம் இதே நாளில் எமது தாய கத்தின் முல்லைத் தீவுக் கடற்கரையில் முள்ளிவாய்க்கால் என்ற சிறு நிலப்பரப்பினுள் 50 ஆயிரத்துக்கும் அதிகமான அப்பாவித் தமிழ் மக்கள் கொடூரமாகக் கொல்லப்பட்டனர். நாகரிக உலகின் பண்பாட்டை, அரசியல் விழுமியங்களை எல்லாம் புறந்தள்ளி, இலங்கையில் சிங்களத் தேசியவாத அரசும் அதன் ராணுவமும் உச்சகட்ட இனப்படுகொலை நிகழ்த்திய நாள் அது. 21-ம் நூற்றாண்டில், மனிதகுலத்துக்கு எதிரான மிகக் கொடூரமான குற்றம் தன் கண் முன்னே நிகழ்வதைக் கண்டும், தடுப்பதற்கோ, மக்களைக் காப்பாற்றுவதற்கோ, உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்காமல், சர்வதேசச் சமூகம் செயலற்று மௌனித்து நின்ற நாள் அது. பல்லா யிரம் மக்களைக் குற்றுயிராகக் காயப்படுத்தியும், மூன்று லட்சத்துக்கும் மேற்பட்டவர்களை எதிரிகளாக்கி முட்கம்பி முகாம்களுக்குள் சிறைப் படுத்திய நாள் அது!” என்ற ருத்திர குமாரன் தொடர்ந்து,

ஈழத் தமிழ் தேசத்துக்கு எதிராக இலங்கை அரசின் திட்டமிடப்பட்ட இத்தகைய இன அழிப்பு அபாயத்தில் இருந்து தன்னைப் பாதுகாத் துக்கொள்ள, ஈழத் தமிழர் p42.jpgதேசம் தனக்கென ஒரு சுதந்திர நாட்டை அமைத்துக்கொள்வதற்கான கோரிக்கை எழுப்ப, சர்வதேசச் சட்டங்களில் இடம் உண்டு. இலங்கை ஆட்சியாளர்கள், தமிழ் மக்களின் போராட்டத்தை ராணுவ மேலாதிக்கத்தின் வலுக்கொண்டு சிதைத்து விட்டதாகப் பிரகடனப்படுத்தி உள்ளனர். இந்த நிலையில் நாடு கடந்த தேசமாக நாம் இங்கு கூடி நிற்பது, தமிழரின் ஒற்றுமையும் இலக்கும் உடைந்துபோகவில்லை என்பதை வெளிப்படுத்துகிறது. இனப் படுகொலையையும், தமிழ் மக்கள் மீது நிகழ்த்திய எதிரான குரூரமான குற்றங் களையும் நியாயப்படுத்த சிங்களத் தலைவர்கள் முயற்சிக்கின்றனர். ஆயினும், தமிழ் மக்கள் தமது இறைமையை சிங்கள அரசிடம் கொடுக்காத காரணத்தினால், நம்மால் அந்த அரசை சட்டப்பூர்வமான அரசாகக் கருத முடியாது. சிங்கள அரசு அந்தத் தகுதியை இழந்துவிட்டது.

ஈழத் தமிழர்களைச் சூழ்ந்துள்ள சிங்கள ராணுவ ஆக்கிரமிப்பு இல்லாமல் ஒழிக்கப்பட வேண்டும். அடுத்த ஆண்டு தென் சூடானில் நடைபெற உள்ளதுபோன்று, சர்வதேசச் சமூகத்தின் ஏற்பாட்டுடனும் ஒத்துழைப்புடனும், ‘ஈழத் தமிழர் தேசம்’ எனத் தனது சுய நிர்ணய உரிமையின் அடிப்படையில் சுதந்திரமும் இறைமையும்கொண்ட தமிழீழத் தனி அரசு அமைத்து வாழ விரும்புகிறார்களா என்ற ஒரு வாக்கெடுப்பு நடத்தப்படும் சூழல் உருவாக வேண்டும். ராணுவ ஆக்கிரமிப்பிலும் எதேச்சதிகார ஆட்சியின் கீழும் சிக்குண்ட மக்களின் சுதந்திரத்துக்காகவும் நல்வாழ்வுக்காகவும் பாதுகாப்புமிக்க எதிர்காலத்தை நாம் கட்டி எழுப்புவோம்.

தமிழரின் தாகம், தமிழீழத் தாயகம்!” என்று அவர் முடித்தபோது, கூட்டத்தினர் கைதட்டி ஆதரவைத் தெரிவித்தனர்.

இந்த நிகழ்வில் அமெரிக்காவின் முன்னாள் அட்டர்னி ஜெனரலான ராம்ஸே கிளார்க், சட்ட வல்லுநர்கள் ஃபிரான்சிஸ் பாயில், புரூஸ் ஃபெய்ன், கரன் பார்க்கர், எலின் ஷாண்டர் போன்ற அமெரிக்கர்களும் உறுதுணை காட்டியது குறிப்பிடத்தகுந்தது. அதோடு, இந்த முதல் தமிழ் ஈழ அரசுக்கான அமர்வில், தெற்கு சூடான் எனும் ஆப்பிரிக்க நாட்டின் சுதந்திரப் போராளிகளின் தலைவர்கள், சிறப்பு பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டனர். சுமார் 25 ஆண்டுகளாக இனக் கலவரம் நடக்கும் சூடானில் சன்னி இன இஸ்லாமியர்களும் கறுப்பர் இன ஆப்பிரிக்கர்களும் சண்டையிட்டதில், இரண்டு லட்சம் மக்கள் மாண்டனர். தெற்கு சூடான் தனி நாடாக வேண்டி ஜனவரி 2011-ல் வாக்கெடுப்பு நடைபெறுகிறது. ‘சூடான் பீப்பிள்ஸ் லிபரேஷன்’ அமைப்பின் தலைவரான காம்ரேட் சல்வாகிர், தமிழ் ஈழ அரசு அமைய தன் ஆதரவைத் தந்துள்ளார்.

p42a.jpg

”ஐக்கிய நாடுகள் சபையும் அமெரிக்காவும் சூடானில் அமைதி நிலவப் பாடுபடுகின்றன. அந்த வழியில்தான் ருத்திரகுமாரனும் ஜன நாயக வழியில் இலங்கை அரசுக்கு நிர்ப்பந்தம் ஏற்படுத்த முனைகிறார்!” என்கின்றனர், இந்த நிகழ்வுகளை அருகில் இருந்து கவனித்துவரும் சிலர்.

தமிழீழ அரசு பிரகடனம் நடந்ததைத் தொடர்ந்து, இலங்கையின் வெளியுறவுத் துறை அமைச்சர் பிரிஸ், அமெரிக்கா ஓடி வந்தார். ஐக்கிய நாடுகள் சபை பொதுச்செயலாளர் பான் கி மூன், துணைச் செயலாளர் விஜய் நம்பியார் ஆகியோரைச் சந்தித்து, தமிழீழ அரசு பற்றிய பிரகடனம் மேலும் வளரவிடாமல் தடுக்கும் வேலை களில் இலங்கை இறங்கியுள்ளதாகவே தெரிகிறது.

அடுத்தகட்ட முயற்சியாக, 195 நாடு களை உறுப்பினர்களாகக்கொண்ட ஐக்கிய நாடுகள் சபையில் பார்வை யாளர் என்ற தகுதியை முதலில் பெற முயற்சிகள் மேற்கொள்ளப்பட உள்ள னவாம். ஃபிலடெல்பியா நகரில் உள்ள தேசிய அரசியலமைப்பு அரங்கில்தான் சுதந்திர அமெரிக்காவின் முதல் அரசியல் அமைப்பு சட்டம் 1787-ம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது. அந்த முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் முன்வைக்கப்பட்டு இருக்கும் இந்தப் பிரகடனம், தமிழ் ஈழம் அமைவதற்கான நம்பிக்கையை மீண்டும் விதைத்திருப்பது நிஜம்!

source:vikatan

பின்னூட்டமொன்றை இடுக

Filed under Uncategorized

google-ல் தெரிவது – Holography தொழில்நுட்பம்


holography.gif

Holography தொழில் நுட்பத்தை கண்டுபிடித்தவரும், முப்பரிமாணக்காட்சி புகைப்படங்களை முதன்முதலில் உருவாக்கியவருமான ஹங்கேரிய மின் பொறியியலாளர் டென்னிஸ் கெபொர் (Dennis Gabor) இன் 110 வது பிறந்த தினத்தை நினைவு கூர்ந்து கூகிள் இணையதளம் இன்று தனது இலட்சினையை வடிவமைத்துள்ளது.

இக்கண்டுபிடிப்பிற்காக 1971 ம் ஆண்டு பௌதீகவியலுக்கான நோபல் பரிசும் இவருக்கு கிடைத்தது. ஹோலோகிராபி (Holography) என்பது ஒரு பொருளில் இருந்து வெளிப்படும் ஒளிக்கதிர்களை, அதன் வெவ்வேறு தோற்றவகைகளில் பதிவு செய்து, அப்பொருளின் அசைவுகளை முப்பரிமாணத்தோற்றத்தில் (3-D Picturs) காட்டும் தொழில்நுட்பம்!

எனினும், இது முப்பரிமாண கற்பனை உருவங்களை உருவாக்கும், கிரபிக்ஸ் தொழில்நுட்பத்துடன் தொடர்பு பட்டதல்ல. Holography யின் சிறந்த தொழில்நுட்பம் பயன்படுத்த ஆங்கில திரைப்படங்களாக Matrix, Avatar ஆகியயவற்றை கூறலாம். இதை விட சில தகவல் சேகரிப்புக்களுக்கும், அதி சிறந்த பாதுகாப்பு முறைமைகும், ஓயியக்கலை மெருகூட்டல் சம்பந்தமான விடயங்களுக்கும் இந்த Holographyதொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது

source:nakkheeran

1 பின்னூட்டம்

Filed under Uncategorized