Monthly Archives: ஜூன் 2010

ஸ்கூட்டரில் உள்ளது போல் சைக்கிளில் சைடு கேரியர் செய்வது எப்படி-Bicycle with Sidecar

Bike+Side+Car+-+020.jpg

This is not a movie "about the Germans and not the old Soviet great – this vehicle is built not on an industrial scale and in the backyard or in the garage. This cool bike with a sidecar collected Briton Steve Bodiley his own hands. More images after the break…

Bike+Side+Car+-+005.jpgBike+Side+Car+-+006.jpgBike+Side+Car+-+007.jpgBike+Side+Car+-+008.jpgBike+Side+Car+-+009.jpgBike+Side+Car+-+010.jpgBike+Side+Car+-+011.jpgBike+Side+Car+-+012.jpgBike+Side+Car+-+013.jpg
Bike+Side+Car+-+014.jpgBike+Side+Car+-+015.jpg
Bike+Side+Car+-+018.jpgBike+Side+Car+-+019.jpgBike+Side+Car+-+016.jpg

source:ritemail-amazing

பின்னூட்டமொன்றை இடுக

Filed under Uncategorized

கம்ப்யூட்டரும் தமிழும்

– டாக்டர் பெ.சந்திர போஸ் சென்னை

இந்த நூற்றாண்டின் பயன்பாட்டிற்கு வந்த கம்ப்யூட்டரும் இன்டர்நெட்டும், மனித சமுதாயத்தின் சிந்தனைப் போக்கினையே மாற்றி அமைத்தன என்றால் அது மிகையாகாது. கம்ப்யூட்டருக்குப் பின்னர், காலம், மனிதன் நினைத்தபடி ஓடத் தொடங்கியது. உலக உருண்டை அவன் கரங்களுக்குள் இருந்து உருளத் தொடங்கியது. உலகின் எந்த மூலையையும் அவனால் பார்க்க முடிந்தது. எந்த முகவரிக்கும் அடையாளம் காட்ட முடிந்தது.

இதுவரை மொழி மட்டுமே, சமுதாயத் தொடர்பிற்கு ஒரு வழியாய் இருந்த நிலையில், கம்ப்யூட்டர் வழித் தொடர்பு அனைத்து தடைகளையும் தகர்த்தது. ஒவ்வொரு மனிதனும், தன் மொழி கம்ப்யூட்டரில் வர வேண்டும் என எண்ணி, அதற்கான முயற்சியில் இறங்கினான். உலகம் முழுவதும் பரவி இருந்த தமிழ்ச் சமுதாயம் இந்த முயற்சியில் முழு மூச்சாய் இறங்கியது. பரவிக் கிடந்த தமிழர்கள் ஆங்காங்கே அவரவர் ஆர்வத்தில் தமிழைக் கம்ப்யூட்டரில் கொண்டு வரும் முயற்சியில் இறங்கினார்கள். இதனால் பல்வேறு வகைகளில், நிலைகளில் அவர்களின் முயற்சிகள் இருந்தன. இந்த முயற்சிகள், தமிழ்ச் சமுதாயத்தினைப் போலவே, ஒருங்கிணைந்த முயற்சியாய் இல்லாமல், தெருவீதிக் கோவில்கள் போல, பலவகை வெளிப்பாடுகளாய் வெளிச்சத்திற்கு வந்தன.

1980 ஆம் ஆண்டுவாக்கில், கம்ப்யூட்டர் பயன்பாடு பெருகத் தொடங்கிய காலத்தில், டாஸ் இயக்கம் செழிப்பான ஒரு நிலையை அடைந்த காலத்தில், கனடாவில் வசித்த தமிழரான சீனிவாசன், டாஸ் இயக்கத்தில் ஆதமி என்ற சிறிய தமிழ் எடிட்டரைக் கொண்டு வந்தார். இலவசமாக அனைவருக்கும் விநியோகித்தார். அப்போதே, வேர்ட் லார்ட் என்ற டாஸ் இயக்க வேர்ட் சாப்ட்வேர் மூலம் பல மேல்நாடுகளில் பிரபலமான, பெங்களூர் சாப்ட்வேர் நிறுவனம், தமிழுக்கு பாரதி என்றொரு தமிழ் சாப்ட்வேர் தொகுப்பினைக் கொண்டு வந்து பிரபலப்படுத்தியது. தினமலர் ஆசிரியர் தன் சொந்த முயற்சியில். புனே மாடுலர் நிறுவனத்தின் துணையுடன் பல எழுத்து வகைகளை உருவாக்கி, பத்திரிக்கையாக்கத்திற்குப் பயன்படுத்தினார். விண்டோஸ் புழக்கத்திற்கு வந்த பின்னர் சீனிவாசன் ஆங்கிலம் + தமிழ்+விண்டோஸ் பெயர் இணைத்து ஆதவிண் என்றொரு தமிழ் சாப்ட்வேர் தொகுப்பினை உருவாக்கி இலவசமாகத் தந்து உதவினார்.

இதே காலக் கட்டத்தில் மலேசியா மற்றும் சிங்கப்பூரினைச் சேர்ந்த அறிஞர்கள் மற்றும் வல்லுநர்கள் துணைவன், கணியன் மற்றும் முரசு அஞ்சல் ஆகிய தொகுப்புகளைக் கொண்டு வந்தனர்.

ஆஸ்திரேலியாவில் வாழ்ந்து வரும் பாலா பிள்ளை தமிழ் நெட் என்ற வலை அமைப்பினை ஏற்படுத்தி, தமிழர்களிடையே இந்த முயற்சிகளுக்கான ஒரு இணைய தளத்தை உருவாக்கினார். தமிழில் மின்னஞ்சல்கள் உருவாவதில் இவரின் முயற்சி முதலாவதாகவும் முன்னுதாரணமாயும் இருந்தது. பின்னர் சிங்கப்பூர் மாகோ உருவாக்கிய குளோபல் தமிழ், மலேசிய ஜேபி அமைத்த அகத்தியர், சிங்கப்பூர் பழனி கட்டமைத்த தமிழ் உலகம் ஆகிய மின்னஞ்சல் குழுக்களை, தமிழ் மின்னஞ்சல் குழுக்களின் முன்னோடிகள் எனலாம். இப்போது இணையத்தில் தமிழ் பயன்படுத்தும் குழுக்கள் பல இயங்குகின்றன. எந்த அஞ்சல் குழுவிலும் எந்த மொழியையும் பயன்படுத்தும் நிலை வந்துவிட்டது.

மலேசிய கம்ப்யூட்டர் ஆராய்ச்சியாளர் முத்து நெடுமாறன் உருவாக்கிய முரசு அஞ்சல் என்னும் தொகுப்பு இலவசமாக, இணையம் வழியாக வழங்கப்பட்டது. இது கம்ப்யூட்டர் மற்றும் இணையத்தில் தமிழைப் பயன்படுத்துவதில் ஒரு மைல் கல்லாக அமைந்தது. இதன் எளிமை, திறன், பயன்படுத்த வழங்கப்பட்ட இடைமுகம் அனைத்தும், தமிழ் மக்களைக் கவர்ந்திட, அதுவே தமிழின் சாப்ட்வேர் தொகுப்பாக உலகத் தமிழரிடையே உலா வந்தது. இன்றும் முன்னேறிய நிலையில் பலவகைகளில் மேம்படுத்தப்பட்டு இத்தொகுப்பினை இலவசமாகவும், கட்டணம் செலுத்தியும் பயன்படுத்தலாம். இணையத்தில் மட்டுமின்றி மின் அஞ்சல்களிலும், இன்ஸ்டண்ட் மெசேஜ் விண்டோக்களிலும் தமிழைக் கொண்டு வந்த பெருமை முரசு அஞ்சலையே சேரும். இதனை அடுத்து இணையத்தில் பயன்படுத்த வந்த தொகுப்புகளில், கனடாவைச் சேர்ந்த கலையரசன் உருவாக்கி, இலவசமாகத் தந்த, குறள் தமிழ்ச் செயலி பலராலும் மின்னஞ்சல்கள், மற்றும் பிற பயன்பாடுகளில் பரவலாகப் பயன்படுத்தப்பட்டது.

தொடர்ந்து பல தமிழ் சாப்ட்வேர் தொகுப்புகள் தமிழகத்திலிருந்தும், மற்ற நாடுகளிலுருந்தும் வெளியாகின. இந்திய அரசின் சி–டாக் நிறுவனம், வட இந்திய மொழிகளுக்கான கட்டமைப்பில், தமிழையும் கொண்டு வந்தது. ஆனால் அது மக்களிடையே வரவேற்பைப் பெறவில்லை. வர்த்தக ரீதியிலும் பல நிறுவனங்கள் தமிழ் சாப்ட்வேர் தொகுப்புகளை வெளியிட்டன. இதில் புனேயைச் சேர்ந்த மாடுலர் நிறுவனத்தின் லிபி சொல் தொகுப்பு, தமிழை அச்சுப் பணிகளில் பயன்படுத்துவோருக்கு மிகவும் உதவியாக இருந்தது; இருந்து வருகிறது.

ஆனால் இவற்றிற்கிடையே எழுத்து வகை, அதனை கம்ப்யூட்டருக்கென அமைக்கப்படும் என்கோடிங் எனப்படும் கட்டமைப்பு வகையில் ஒற்றுமை இல்லாததால், தமிழில் அமைக்கப்பட்ட ஆவணங்கள், தாங்கள் உருவாக்கப்பட்ட எழுத்து வகைகளுடன் வந்தால் தான் படித்து அறிய முடியும் என்ற நிலை தொடர்ந்து தமிழுக்கான தடுப்புக் கட்டையாக இருந்து வந்தது.

1999 ஆம் ஆண்டில், தமிழக முதல்வராய் இருந்த கருணாநிதி அவர்களின் முயற்சியால் கூட்டப்பட்ட இணைய மாநாடு தமிழ்நெட் 99,இதற்கு ஒரு தீர்வுகாணும் முயற்சியில் தீவிரமாக இறங்கியது. அந்த மாநாட்டுக் கருத்தரங்கத்தில் அமைக்கப்பட்ட குழு, டாம் மற்றும் டாப் என்னும் கட்டமைப்பில் உருவான எழுத்துவகைகளைப் பரிந்துரை செய்தது. வெளிநாட்டில் வாழும் தமிழர்களால்,திஸ்கி என்ற வகையும் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் உடன் இருந்தது. ஆனால் இந்த முடிவுகளை எல்லாம் பற்றிக் கவலைப்படாத தமிழ் உலகத்தினர் தொடர்ந்து தாங்கள் கொண்டிருந்த எழுத்து வகைகளிலேயே, இணைய தளங்களை உருவாக்கி, அவற்றைப்படிக்க தங்களின் எழுத்துருக்களை இறக்குவதனைக் கட்டாயமாக வைத்திருந்தனர்.

தொடர்ந்து வந்த கம்ப்யூட்டர் அறிவியல் வளர்ச்சி, இந்த சிக்கல்களுக்குத் தானாக ஒரு முடிவினைக் கண்டது. இது உலகின் அனைத்து மொழிகளுக்குமான ஒரு தீர்வாக இருந்தது. அதுவே யூனிகோட் ஆகும். ஏற்கனவே இருந்த எழுத்து கட்டமைப்புகள் எல்லாம் 8 பிட் என்னும் குறுகிய அமைப்பில் இருந்து வருகையில், யூனிகோட் 32 பிட் கட்டமைப்பில் உருவானதால், எழுத்துக்களை நாம் விரும்பிய வகையில் அமைக்கின்ற வசதி, நமக்குக் கிடைத்தது. இதில் கிடைத்த தமிழ் எழுத்து அமைப்பு முறை, பலரால் குறை சொல்லப்படும் வகையில் இருந்தாலும், இன்றைய நிலையில், அனைத்து தமிழரையும் இணைக்கும் பாலமாக தமிழ் யூனிகோட் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதன் காரணமாகவே, தமிழ்ப் பயன்பாடு இணையத்திலும், கம்ப்யூட்டர்களிலும் பெரும் அளவில் பெருகி உள்ளது. இன்றைக்கு இருக்கின்ற வலைமனைகள் என்னும் பிளாக்குகளே இதற்கு எடுத்துக் காட்டுகளாகும்.

மேலும் கூகுள், யாஹூ போன்ற இணையத்தில் இயங்கும் நிறுவனங்கள் தமிழுக்கு முக்கியத்துவம் கொடுத்து, தமிழைத் தங்கள் வலையகங்களில் பயன்படுத்த வசதி செய்து கொடுத்து வருகின்றனர். தமிழிலேயே தங்களின் தளங்களைத் தந்துள்ளனர். பயன்படுத்துபவர்கள் தமிழைப் பயன்படுத்த இடைமுகங்களை ஏற்படுத்தித் தந்துள்ளனர்.

தமிழக அரசு, கம்ப்யூட்டர் கல்வியைக் கற்பதில் மொழி ஒரு தடையாக இருக்கக் கூடாது என்ற எண்ணத்தில், +1,+2 வகுப்புகளில் கம்ப்யூட்டர் பாடங்களை அனைத்து தமிழ் மாணவர்களும், குறிப்பாக கிராமப்புற மாணவர்கள் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற இலக்குடன் தமிழ் வழியில் கம்ப்யூட்டர் பாடங்களைக் கற்றுக் கொடுக்கத் தொடங்கியது. இதற்கானப் பாட நூல்களை தமிழக அரசின் பாட நூல் கழகம் தமிழில் 1996 முதல் வெளியிட்டு வருகிறது.

தமிழில் பல கம்ப்யூட்டர் நாளிதழ்கள் வெளி வந்தன. முதன்முதலாக கம்ப்யூட்டர் பயன்பாட்டினை மக்களுக்குக் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற இலக்குடன், 1992 முதல் கம்ப்யூட்டர் குறித்து,தினமலர் நாளிதழ், தமிழில் கட்டுரைகளைத் தந்தது. மக்கள் பாராட்டுதலை மிகப் பெரிய அளவில் பெற்றதனாலும், அவர்களின் தொடர்ந்த வேண்டுகோள்களினாலும், வாரம் ஒரு முறை சிறிய இணைப்பு நூல் ஒன்றினை வெளியிட்டது. இலவசமாகத் தமிழில் கம்ப்யூட்டர் குறித்து இவ்வாறு இணைப்பு நூல் வழங்கும் ஒரே தமிழ் நாளிதழ் தினமலர் தான் என்பது குறிப்பிடத்தக்கது. கம்ப்யூட்டர் குறித்த முறையான கல்வி இல்லாத பல்லாயிரக்கணக்கானோர், தங்கள் வாழ்க்கை ஆதாரத்திற்கும், வேலைகளிலும் கம்ப்யூட்டரைப் பயன்படுத்த வேண்டிய நிலையில், கம்ப்யூட்டர் மலர் பெரும் அளவில் அவர்களுக்குக் கை கொடுத்தது.

இன்று தமிழ்ப் பத்திரிக்கைகள் பல தங்களின் இணைய பதிப்பையும் வெளியிட்டு வருகின்றன. தமிழ் யூனிகோட் எழுத்து முறையினை முதலில் பயன்படுத்தித் தன் இணையப் பதிப்பினை வெளியிட்ட பெருமை தினமலரையே சேரும். இதனால் உள் நாட்டில் மட்டுமல்ல, வெளிநாடுகளில் வாழும் தமிழர்களும் மிக எளிதாகத் தமிழகச் செய்திகளை அறிந்து கொள்ள முடிகிறது.

எந்த பிரவுசரைப் பயன்படுத்தி, எந்த தளத்தில் உலா வந்தாலும், இணையத்தில் இருக்கையில், செய்திகளைத் தமிழில் தரும் டூல் பார் சாதனத்தினையும் தினமலரே முதலில் தந்தது. இன்னும் தொடர்கிறது. இதனால் உலகெங்கும் வாழும் தமிழர்கள், தங்கள் தாய்த் தமிழ்த் திரு நாட்டில் என்ன நடக்கிறது என்பதனை உடனுக்குடன் அறிய முடிகிறது.

கம்ப்யூட்டர் இன்று உலக மக்களை நேயத்துடன் இணைக்கும் பாலமாக மாறி வருகிறது. அதில் தமிழ் பயன்படுத்தப்படுகையில், கம்ப்யூட்டர் தமிழ் தனது மக்களைப் பாசத்துடன் சேர்க்கும் கருவியாக மாறுகிறது. இனி கம்ப்யூட்டர் என்பது தமிழ் மக்களுக்குத் தமிழில் தான் அமையும் என்ற நிலை விரைவில் உருவாகும் என்பதில் ஐயமேதும் இல்லை. இந்த முயற்சியில் இப்போது நடைபெற்று வரும் செம்மொழி மாநாடு போன்ற நிகழ்வுகள் நிச்சயம் கை கொடுக்கும்.

கம்ப்யூட்டரில் தமிழைக் கொண்டு வரும் முயற்சியில் பாடுபட்ட, தொடர்ந்து உழைத்துவரும் ஆர்வலர்கள் அனைவருக்கும் உற்சாகம் தந்து உரமூட்டுவோம்.

source:dinamalar

பின்னூட்டமொன்றை இடுக

Filed under Uncategorized

மனித உருவில் ஆட்டுக்குட்டி காண மக்கள் கூ ட்டம்

large_20588.jpg

ஆத்தூர் : ஆத்தூர் அருகே, மனித உருவில் இறந்தே பிறந்த ஆட்டுக்குட்டியை ஏராளமானோர் பார்த்து வியந்தனர். சேலம் மாவட்டம், ஆத்தூர் நகராட்சி பைத்தூர் ரோடு பகுதியை சேர்ந்தவர் வெற்றிவேல். 50க்கும் மேற்பட்ட வெள்ளாடுகளை வளர்த்து வருகிறார். நிறைமாத சினையாக இருந்த ஆடு, நேற்று அதிகாலை 5 மணியளவில் கடும் சிரமத்துடன் குட்டியை ஈன்றது. பிறந்த ஆட்டுக் குட்டி மனித உருவத்தில் இறந்தே பிறந்ததை கண்ட வெற்றிவேல் அதிர்ச்சியடைந்தார். ஆட்டுக் குட்டியின் உடலில் முடிகள் இல்லை. ரப்பர் பொம்மை குழந்தை போல காணப்பட்டது. தகவலறிந்த அப்பகுதியினர், அதிசய ஆட்டுக் குட்டியை வியப்புடன் பார்த்துச் சென்றனர். கால்நடை மருத்துவ ஆய்வாளர் சேகரன், ஆட்டுக்குட்டியின் உடலை ஆத்தூர் கால்நடை மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு எடுத்து சென்றார்.

கால்நடை மருத்துவர் தேவேந்திரன் கூறியதாவது: ஒரே வகையான கிடா ஆடு மூலம் பெட்டை ஆடுகளுக்கு இனவிருத்திக்காக கருவூட்டல் செய்கின்றனர். மரபணு கோளாறு காரணமாக உடல் முழுவதும் நீர் நிரம்பி, ரப்பர் போன்ற குட்டி பிறந்துள்ளது. ஆடு சினை பிடிப்புக்கு வேறு கலப்பின கிடாவை பயன்படுத்த வேண்டும். மனித இனத்தில் நெருங்கிய உறவு முறையில் திருமணம் செய்தால் குறைபாடு உள்ள குழந்தைகள் பிறப்பது போல, ஆடுகளுக்கும் இனவிருத்தியில் குறைபாடு ஏற்படும். ஆத்தூரில் பிறந்த ஆட்டுக் குட்டி மனித உருவத்தில், ரப்பர் குழந்தை போல் உள்ளதால் பரிசோதனை செய்யவுள்ளோம். இவ்வாறு தேவேந்திரன் கூறினா

source:dinamalar

பின்னூட்டமொன்றை இடுக

Filed under Uncategorized

செம்மொழி மாநாட்டை ஈழத்தமிழ் மக்களின் உர ிமைக்கான குரலாக ஒலிக்கசெய்யுங்கள் -விடுதலை ப்புலிகள்

ஈழத்தமிழினம் இலங்கையில் படும் இன்னல்களைக் களைவதுடன், அம்மக்களுக்கு இழைக்கப்பட்ட பாரிய அநீதியைத் தட்டிக்கேட்டு அதற்கான நீதியைப் பெற்றுக்கொடுக்கும் பொறுப்பு இச்செம்மொழி மாநாட்டை நடாத்துபவர்களுக்கு உண்டு என நம்புகிறோம்.

அவ்வாறு நடைபெறும் பட்சத்தில், செம்மொழி மாநாடு தனது குறிக்கோளைத் திறம்பட அடைந்ததாக அனைத்துத் தமிழர்களாலும் ஏற்றுக்கொள்ளப்படும் என்று தமிழீழ விடுதலைப் புலிகள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

அறிக்கையின் முழுவடிவம் வருமாறு:

தலைமைச் செயலகம், தழிழீழ விடுதலைப் புலிகள், தமிழீழம். 15-06-2010

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டை தமிழக அரசியலில் இருந்து பிரித்துப் பார்க்க விரும்புகிறோம்.

தமிழக அரசு நடாத்தும் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு எதிர்வரும் யூன் 23 ஆம் நாள்முதல் 27 ஆம் நாள்வரை கோவையில் கொடிசியா வளாகத்தில் நடைபெறவுள்ளது.

முன்னர் நடைபெற்று வந்த உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டிற்கு வலுச் சேர்க்கும் வகையில் இந்த ஆண்டு தமிழக அரசு உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டை நடாத்த முன்வந்துள்ளது.

உலகத் தமிழாராய்ச்சி மாநாடு முதன்முதலில் கோலாலம்பூரில் 1966 ஏப்ரல் 16 – 23 நாட்களில் நடாத்தப்பட்டது. அதன் இரண்டாவது மாநாடு 1968 ஆம் ஆண்டு சனவரி 3-10 நாட்களில் அறிஞர் அண்ணாவின் தலைமையில் தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் நடைபெற்றது. அதன்பின், பாரிஸ், யாழ்ப்பாணம், மதுரை, கோலாலம்பூர், மொரீசியஸ், தஞ்சாவூர் எனப் பல இடங்களில் நடைபெற்றது.

முள்ளிவாய்க்காலில் ஈழத்தமிழ் மக்கள் சந்தித்த பேரிழப்பின் வலி குறையுமுன்னர் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடைபெறுவதை உலகத் தமிழர்கள் விரும்பவில்லை. அதன் காரணமாக அந்த மாநாட்டைப் புறக்கணிக்கும் வேண்டுகோளை பல அமைப்புக்கள் விடுத்தன. எம் மக்களின் இந்த உணர்வு நியாயமானதே என்பதனை சான்றோர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

மொழி என்பது வெறும் தகவல் தொடர்பு சாதனமாக இருந்தநிலை இன்று மாறிவிட்டது. மொழியே ஒரு தேசிய இனத்தை அடையாளப்படுத்துகிறது. தமிழரின் தேசிய அடையாளத்தை தமிழ்மொழியே குறிக்கிறது.

1974 ஆம் ஆண்டு தமிழீழத்தில் நடந்தேறிய நான்காவது உலகத் தமிழாராட்சி மாநாட்டில் எம்மக்கள் தமது உயிரையே காணிக்கை ஆக்கினர் என்பதனை நினைவூட்ட விரும்புகின்றோம்.

செம்மொழி மாநாடு நடைபெறுவது பல வழிகளிலும் தமிழ்மொழியின் வளர்ச்சிக்கு ஆக்கமும் ஊக்கமும் பெருமையும் வளமும் அளிக்கும் என மனதார நம்புகிறோம். ஒரு மொழியின் வளர்ச்சி அம்மொழியின் தொன்மை தொடர்பானது மட்டுமே அன்று. எதிர்கால பயன்பாட்டுக்கு அது எந்த அளவு உதவப்போகிறது என்பதுதான் ஒரு மொழியின் வளர்ச்சியைத் தீர்மானிக்கிறது.

இவை காரணமாக உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டை தமிழக அரசியலில் இருந்து பிரித்துப் பார்க்க நாம் விரும்புகிறோம்.

தமிழர்களின் நிலங்களை ஆக்கிரமிக்கத் தொடங்கிய சிங்களப் பேரினவாதம், மேலும் தனிச்சிங்களச் சட்டம் என்று எமது தாய்மொழி மீதும் தனது கைவரிசையைக் காட்டத் தொடங்கியது. தமிழ் மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட காரணத்தாலேயே தமிழர்கள் மீது படிப்படியாக அடக்குமுறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன.

இவற்றையெதிர்த்துத் தொடங்கப்பட்ட ஈழவிடுதலைப் போராட்டமென்பது அடிப்படையில் மண்மீட்புக்கானதும் மொழிக்காப்புக்கானதுமான போராட்டமே. ஒரு மொழி வாழவேண்டுமானால், அம்மொழி பேசும் மக்கட்கூட்டம் பிழைத்திருக்க வேண்டும். அவ்வகையில் ஈழத்தமிழினம் தப்பிப் பிழைத்திருக்கவும் ஒடுக்குமுறையிலிருந்து விடுதலை பெறவும் நடத்தப்படுவதே எமது போராட்டமாகும்.

விடுதலைப் புலிகள் இயக்கம் தமிழ்மொழியின் மேம்பாட்டுக்குப் போர்ச் சூழலுக்கு மத்தியிலும் கடுமையாகப் பாடுபட்டு வந்தமையை அனைவரும் அறிவர்.

குழந்தைகளுக்குத் தூய தமிழ்ப் பெயர்களைச் சூட்டுதல், விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர் அனைவருக்கும் தூய தமிழ்ப்பெயரை மாற்றியது, போர்ப்பயிற்சிக் கட்டளைகளைக்கூட தூய தமிழில் மாற்றிப் பயன்படுத்தியது, அங்காடிகளின் பெயர்ப் பலகைகளை நூறு விழுக்காடு தூய தமிழில் எழுதும் நடைமுறையைக் கொண்டு வந்தது என எமது இயக்கம் தமிழ்மொழியின் பால் கரிசனை கொண்டு எடுத்த நடவடிக்கைகள் பலவுண்டு. விடுதலைப் புலிகளின் தமிழ் வளர்ச்சிக் கழகம் "தமிழ்ப்பெயர்க் கையேடு – மக்கட்பெயர் 46,000" என்ற தொகுப்பைத் தயாரித்து வெளியிட்டது.

இது மட்டுமன்றி எமது மாவீரர்கள், மக்களின் தியாகத்தினால் உலகம் முழுவதும் எம் மொழி, இனம் புத்துயிர் பெற்று ஒரு மறுமலர்ச்சியினை ஏற்படுத்தியது என்றால் மிகையில்லை.

விடுதலைப் புலிகள் இயக்கம் தமிழ்மொழி மீது கொண்டுள்ள காதலுக்கு போர்க்களத்தில் விழுப்புண்பட்டு வீழ்ந்த வேங்கைகளின் கல்லறையில் நின்று எடுக்கும் உறுதிமொழி சான்றாக உள்ளது.

மொழியாகி எங்கள் மூச்சாகி நாளை முடிசூடும் தமிழ்மீது உறுதி! வழிகாட்டி எம்மை உருவாக்கும் தலைவன் வரலாறு மீதிலும் உறுதி! விழிமூடி இங்கே துயில்கின்ற வேங்கை வீரர்கள் மீதிலும் உறுதி! இழிவாக வாழோம்! தமிழீழப் போரில் இனிமேலும் ஓயோம் உறுதி!

மொழிக்காகவும் மண்ணுக்காகவும் இறுதிவரை போராடிய ஆயிரக்கணக்கான எம் வீரர்களும் மக்களும் முள்ளிவாய்க்காலில் மாண்டுபோயினர்; அனைத்துலக ஆதரவுடன் சிங்களத்தால் வதைக்கப்பட்டனர். இந்த இறுதிக் கணத்தில் நடந்தேறிய பேரவலத்தினை எம் அருகில் இருந்த கோடிக்கணக்கான தமிழர்களால் முயற்சித்தும் தடுக்க முடியவில்லை என்ற வேதனை எமக்கும் எமது மக்களுக்குமுண்டு.

தம்மையே கருக்கிய உயரிய தியாகங்கள் பல நடந்தபோதும், ஏதாவது செய்ய வேண்டுமென்ற துடிப்பு ஏராளமானவர்களுக்கு இருந்தபோதும் ஓர் அரசியற் சக்தியாக அதை முன்னெடுத்து நிறைவேற்ற முடியாமற்போன துயரம் தமிழகத்தில் நடந்தது.

இப்போதும் காலம் கடந்துவிடவில்லையென்றே நாம் நம்புகிறோம். மொழியின் வாழ்வும் வளர்ச்சியும் அம்மொழியைப் பேசும் இனத்தின் "இருப்போடு" தொடர்புபட்டது என்றவகையில், தமிழ்மொழியைப் பேசும் ஓர் இனக்குழுமத்தின் இருப்பை உறுதிசெய்வது அனைவரினதும் கடமையாகும்.

ஈழத்திலே தற்போது எமது மக்கள் படும் துன்பங்களைத் துடைத்து அவர்களின் நல்வாழ்வுக்கும் பாதுகாப்புக்கும் உத்தரவாதத்தை உலகளவில் பெற்றுக்கொடுக்கும் பணி எல்லாத் தமிழருக்குமுண்டு. இன்று நடைபெறும் சிங்களக் குடியேற்றங்கள், தமிழர் படுகொலைகள் என்பன நிறுத்தப்பட்டு தமிழர்கள் தம் சொந்த மண்ணில் சுதந்திரமாக வாழும் நிலை ஏற்படுத்தப்பட வேண்டும்.

இன்று மிகமுக்கியமான காலகட்டத்தில் இந்தச் செம்மொழி மாநாடு நடைபெறுகிறது. எம் தாய்மொழியாம் தமிழ் மொழியின் எதிர்கால வளர்ச்சிக்காக நடாத்தப்படவிருக்கும் இச்செம்மொழி மாநாட்டிற்கு எம் ஆதரவு என்றும் உண்டு.

இந்த மாநாடு தமிழ்மொழி வளர்ச்சிக்கு வழிகோலும் என்பதுடன் உலகம் முழுவதும் வாழும் தமிழர்களின் ஒன்றுபட்ட நிலைக்கு வலுச்சேர்க்கும் வகையில் அமைய வேண்டும் என்பதே தமிழீழ விடுதலைப் புலிகளாகிய எங்களின் அவா.

அதேவேளை, ஈழத்தமிழினம் இலங்கையில் படும் இன்னல்களைக் களைவதுடன், அம்மக்களுக்கு இழைக்கப்பட்ட பாரிய அநீதியைத் தட்டிக்கேட்டு அதற்கான நீதியைப் பெற்றுக்கொடுக்கும் பொறுப்பு இச்செம்மொழி மாநாட்டை நடாத்துபவர்களுக்கு உண்டு என நம்புகிறோம். அவ்வாறு நடைபெறும் பட்சத்தில், செம்மொழி மாநாடு தனது குறிக்கோளைத் திறம்பட அடைந்ததாக அனைத்துத் தமிழர்களாலும் ஏற்றுக்கொள்ளப்படும்.

அந்த வகையில், செம்மொழி மாநாடு தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும் எம்மினத்தின் ஒற்றுமைக்கும் உறுதுணையாக இருக்கும் என நம்புவதுடன் இந்த மாநாடு சிறப்பாக நடைபெற நாம் வாழ்த்துகின்றோம்.

நன்றி.

"புலிகளின் தாகம் தமிழீழ தாயகம்"

இராமு.சுபன்,
இணைப்பாளர்,
தலைமைச் செயலகம்,
தமிழீழ விடுதலைப் புலிகள்,
தமிழீழம்.

பின்னூட்டமொன்றை இடுக

Filed under Uncategorized

தொட்டுவிடும் தூரத்தில் “பொட்டு” ரகசியம்

p43b.JPG
bits_verline.jpg
p43a.JPGவிழுப்புரம் தண்டவாள அதிர்வுகளே இன்னும் அடங்காத நிலையில் சந்திரகுமார், அருள் செல்வம், பாலா, செல்வம் என்கிற புனைப் பெயர்களைக்கொண்ட ‘சிரஞ்சீவி மாஸ்டரை’ வளைத் திருக்கிறது தமிழக உளவுத் துறை போலீஸ்!

சிரஞ்சீவி மாஸ்டர், புலிகளின் உளவுத் துறையில் பொட்டு அம்மானின் அடுத்த கட்டத் தலைவர்களில் ஒருவர் என்று கூறப்படுகிறது. 12 வருடங்களுக்கும் மேலாக மத்திய, மாநில உளவுத் துறைகளால் தேடப்பட்டு வந்த சிரஞ்சீவி மாஸ்டர், ஈழப் போரின் இறுதிக் காலத்தில் களத்தில் நின்றவர். கடைசிக்கட்ட நேரத்தில் கை, கால்களில் பலத்த காயமடைந்தவர், அதன் பிறகு என்ன ஆனார் என்பது தமிழீழ ஆர்வலர்களாலேயே நேற்று வரை யூகிக்க முடியாத விஷயம்.

தமிழீழ ஆர்வலர்கள் சிலரிடம் பேச்சுக் கொடுத்த போது, நம் தகவலையே முதல் செய்தியாகக் கேட்டு அதிர்ச்சியின் விளிம்புக்கே போனவர்கள், ”சிரஞ்சீவி மாஸ்டர் பொட்டு அம்மானின் பேரபிமானத்தைப் பெற்றவர். புலிகளின் தமிழகப் புலனாய்வுத் தலைவராக இருந்தார். இலங்கைக்கும் தமிழகத்துக்கும் அடிக்கடி விசிட் அடிப்பார். ஈழப் போர் தீவிரம் எடுத்த கால கட்டத்தில் புலனாய்வுப் பிரிவிடம் இருந்து அழைப்பு வர… உடனடியாகக் கிளம்பிப் போனார். போரின் உக்கிரம் மிகக் கடுமையானபோது, தமிழகத்துக்கு வந்து அதன் பாதிப்புகளை பட்டவர்த்தனமாக எடுத்துச் சொல்லி, தமிழக அரசியல் தலைவர்களின் ஆதரவைத் திரட்டும் பொறுப்பு அவருக்குக் கொடுக்கப்பட்டது.

ஆனால், இந்திய – இலங்கை அரசுகளின் தீவிரக் கண்காணிப்புகளைத் தாண்டி, அவரால் இங்கே வந்து சேர முடியவில்லை. அதன் பிறகு அவர் என்ன ஆனார் என்பதே தெரியாத நிலையில்… அவர் தமிழகத்தில் பிடிபட்டிருப்பதாகச் சொல்வது பெரிய விந்தைதான்!” என்கிறார்கள்.

இன்னும் சிலரோ, ”திரிகோணமலையில் உள்ள பனகுளம் பகுதியில் பிறந்த சிரஞ்சீவி, 91-ம் ஆண்டு இயக்கத்தின் நம்பகத்தைப் பெற்று யாழ்ப்பாணம் பகுதியில் தீவிர ஆயுதப் பயிற்சி எடுத்தார். அதன் பிறகு புலிகளின் உளவுப் பிரிவுக்கு வந்தார். 98-ம் வருடம் கண்ணன் என்கிற கண்ணப்பனும், சிரஞ்சீவியும் தமிழகத்துக்கு அனுப்பப்பட்டார்கள். அசம்பாவிதச் சம்பவங்களிலோ, ஆயுதக் கடத்தலிலோ ஈடுபடும் ‘அசைன்மென்ட்’ இவர்களுக்குக் கிடையாது. தமிழகத்தின் அரசியல் நிலைமைகளைக் கணித்துக் கொடுக்கும் பணி மட்டும்தான். அதைச் செவ்வனே செய்யக்கூடியவர் சிரஞ்சீவி. அதனாலேயே அவரை ‘தமிழ்நாட்டு பொட்டு அம்மான்’ என்பார்கள்.

ராஜீவ் படுகொலைக்குப் பிறகு தமிழகம் வந்த சீரஞ்சீவி, இங்கு உள்ள அரசியல் நிலவரங்களை ஊன்றி ஸ்டடி செய்த பிறகு, இங்கு இருந்தே ஆயுதப் பரிவர்த்தனைக்கான பொறுப்பையும்ஏற்றார். அப்போதுதான் தமிழக போலீஸ் அவர் மீது கண் வைத்தது. அவரை மடக்கினால், புலிகளின் உளவு நெட்வொர்க்குகளைத் துல்லியமாகத் தெரிந்து கொண்டுவிடலாம் எனத் திட்டமிட்டு அவரை வளைக்க எவ்வளவோ முயன்றார்கள். ஆனால், சாதுர்யமாகத் தப்பிச் சென்றுவிட்டார்.

இலங்கைத் தமிழர் என சந்தேகிக்க முடியாத அளவுக்கு சென்னைத் தமிழிலும் சரளமாகப் பேசுவார். 2004-ல் அவர் மறுபடி சென்னைக்கு வந்து சென்றபோது, பல திசைகளிலும் ரூட் போட்டு அவரை வளைக்கத் துடித்தது போலீஸ். அவர் மீது எந்த வழக்குகளும் அப்போது இல்லை என்பதால் ஒன்றும் செய்ய முடியவில்லை. 2007-ல் சிவகரன் என்கிற போராளி வெடிமருந்து கடத்தியதாகப் பதிவான வழக்கில் சிரஞ்சீவி மாஸ்டர் பெயரும் சேர்க்கப்பட்டது. அப்போது போட்ட வழக்கு ஒன்றை வைத்தே அதன் பிறகு அவரை வெளிப்படையாக போலீஸ் தேடத் தொடங்கியது.

p43.JPG

தொண்டி வழியாக அவர் மீண்டும் சென்னைக்கு வரும் தகவலை அறிந்துகொண்ட உளவு போலீஸ், புலிகளின் அபிமானம் பெற்ற புதுக்கோட்டை மாவட்ட அரசியல் புள்ளியை வளைத்து, அவர் மூலமாக சிரஞ்சீவியை வளைக்கத் திட்டமிட்டது. ஆனால், கண்ணப்பன் என்ற போராளி மட்டும் சிக்க, போலீஸின் கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு எஸ்கேப் ஆனார் சிரஞ்சீவி.

தமிழகத்தின் முக்கிய அரசியல் புள்ளிகளை ஈழத்துக்கே அழைத்துச் சென்று… பிரபாகரன், பொட்டு அம்மான், தமிழ்ச்செல்வன் ஆகியோரிடம் அறிமுகம் செய்து வைத்தவர் சிரஞ்சீவிதான். போர் உக்கிரமான காலத்திலேயே தமிழகத்து அரசியல் புள்ளி ஒருவரை ஈழத்துக்கு அழைத்துப்போய், குண்டு மழைகளுக்கு நடுவே வீடியோ காட்சிகளைப் பதிவுசெய்து கொண்டுவந்தார். கடைசிக் கட்ட ஈழப் போரில் பல்வேறு படை அணிகளாகப் பிரிந்து ஊடறுப்புத் தாக்குதல் நடத்தி வெளியேறியவர்களில் சிரஞ்சீவியும் ஒருவர் என எங்களுக்குத் தகவல் வந்ததே தவிர, தப்பித்த அவர் எங்கே இருக்கிறார் என்கிற விவரங்கள் எங்களுக்குத் தெரியவில்லை!” என்றார்கள்.

மேற்கொண்டு நாம் விசாரித்தபோது, ”ஒரு வாரத்துக்கு முன்னரே உளவுத் துறை போலீஸார் அவரை வளைத்து விட்டதாகவும், புலிகளின் உளவுப் பிரிவுத் தலைவரான பொட்டு அம்மான் குறித்து அவரிடம் துருவிக்கொண்டு இருப்பதாகவும் தெரிகிறது. கூடவே, தமிழக அரசியல் தலைவர்களின் புலித் தொடர்புகள் குறித்தும், அவர்களைச் சிக்கவைக்கும் விதமான தகவல்கள் குறித்தும் விசாரிக்கப்பட்டு வருகிறதாம். விழுப்புரம் தண்டவாளத் தகர்ப்பு விவகாரத்தில் ஆரம்பகட்ட விசாரணையின்போதே ‘புலிகளின் ஆதரவாளர்கள் செய்திருக்கலாம்’ எனச் சொன்ன போலீஸார், தற்போது சிரஞ்சீவியைச் சிக்கவைக்கவும் வாய்ப்பு இருக்கிறது!” என்று கூறுகிறார்கள் காவல் வட்டாரத்தின் அசைவுகளை அறிந்தவர்கள்.

p44.JPGஇன்னும் சில போலீஸார், ”இலங்கை யில் போர் தொடங்கியபோது புலிகள் பலரும் தமிழகத்துக்குள் ஊடுருவினார்கள். சென்னை மடிப்பாக்கம் அருகே ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து பரமேஸ்வரன் என்பவரும் போராளிகளும் தங்கி இருந்தது தெரிந்து அவர்களை வளைத்தோம். அப்போது சிரஞ்சீவி மாஸ்டர் குறித்து பரமேஸ்வரன் சொன்ன தகவல்கள் படு பயங்கரமானவை. அப்போதே,

சிரஞ்சீவி குறித்துத் தீவிர விசாரணையைத் தொடங்கிவிட்டது எங்கள் துறை. போர்க் காலத்தில் அவர் ஈழத்தில் இருந்தார் என்ற தகவல் உறுதியானதாகத் தெரிகிறது. தற்போது சிக்கி இருக்கும் அவரிடம் பொட்டு அம்மான் குறித்து எங்கள் துறை அதிகாரிகள் கேட்ட கேள்விகளுக்கு லேசான புன்னகையை மட்டுமே சிரஞ்சீவி மாஸ்டர் பதிலாக்கியதாகவும் தெரிகிறது. ஈழத்தின் கடைசிக்கட்டப் போர்க் கொடூரங்களை மட்டும் மனம்விட்டுச் சொன்னவர், புலித் தலைவர்களின் நிலை குறித்த கேள்விக்கு எந்த பதிலையும் சொல்லவில்லை!” என்றார்கள்.

தமிழக உளவுத் துறை ஐ.ஜி-யான ஜாஃபர் சேட்டிடம், சிரஞ்சீவி கைது குறித்துக் கேட்டோம். ”விடுதலைப் புலிகளின் உளவுப் பிரிவில் சிரஞ்சீவி மிக முக்கியமான ஆள். தீவிரமாகத் தேடப்பட்ட இவர், இலங்கைப் போருக்குப் பிறகு சந்திரகுமார் என்ற பெயரில் தமிழகத்துக்கு வந்திருக்கிறார். 2007-ம் ஆண்டு வெடி மருந்து கடத்தல் விவகாரத்தில் சிவா என்கிற சிவகரனுடன் சிரஞ்சீவி சம்பந்தப்பட்டிருப்பதாக வழக்கு இருக்கிறது. மற்றபடி இலங்கைப் போருக்குப் பிறகு தமிழகம் வந்த சிரஞ்சீவி தவறான நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை. அவர் மீது புதிதாக வழக்குகள் ஏதும் இல்லை. மற்றபடி மேற்கொண்டும் அவரிடம் விசாரித்து வருகிறோம்!” என்றவரிடம்,

”விழுப்புரம் தண்டவாளத் தகர்ப்பில் சிரஞ்சீவியைச் சிக்க வைக்க முயற்சிகள் நடப்ப தாகச் சொல்லப்படுகிறதே?” எனக் கேட்டோம். ”கிடையவே கிடையாது. விழுப்புரம் தண்ட வாளத் தகர்ப்பு விவகாரத்தில் சிரஞ்சீவிக்கு எவ்விதச் சம்பந்த மும் கிடையாது. தண்டவாளத் தகர்ப்பு வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளைப் பிடிக்கத் தீவிர முயற்சிகளில் ஈடுபட்டிருக் கிறோம்!” என்றார்.

கை மற்றும் கால்களில் காயங்களோடு போலீஸ் விசார ணையில் இருக்கும் சிரஞ்சீவி புலிகள் குறித்தும்… குறிப்பாக பொட்டு அம்மான் குறித்தும் என்ன சொல்லப் போகிறார் என்பது மில்லியன் டாலர் கேள்வி!

‘பிரபாகரன் இருக்கிறாரா?’ என்ற உலகளாவிய கேள்விக்கும் அவரிடம்… உறுதியான பதில் இருக்கலாம்

source:vikatan

பின்னூட்டமொன்றை இடுக

Filed under Uncategorized

முஸ்லிம் பிரச்சாரகரான ஜாகிர் நாயக்கிற்க ு பிரிட்டனுக்குள் நுழைவதற்கு தடை!!

ஜாகிர் நாயக்
ஜாகிர் நாயக்

இந்திய முஸ்லிம் பிரச்சாரகரான ஜாகிர் நாயக்கிற்கு பிரிட்டனுக்குள் நுழைவதற்கு பிரிட்டிஷ் அரசாங்கம் அனுமதி மறுத்துள்ளது.
ஏற்க முடியாத நடத்தை என்று தாம் கருதும் நடத்தை உடையவர் ஜாகிர் நாயக் என்று காரணம் காட்டி விசா மறுக்கப்பட்டுள்ளது.

ஜாகிர் நாயக் லண்டனிலும், வடக்கு இங்கிலாந்திலும் பல உரைகளை நிகழ்த்தவிருந்தார்.

டாக்டர் ஜாகிர் நாயக் அவர்கள் இஸ்லாம் குறித்து ஆளுமை கொண்டவராக அங்கீகரிக்கப்பட்டவர் என்றும், ஆனால் ஏனைய மதங்களை நிந்திக்கும் வகையிலான கருத்துக்களை வெளளியிடுபவர் என்றும் ஒரு பிபிசி செய்தியாளர் கூறுகிறார்.

இந்த நாட்டின் பொது நலனுக்கு பொருத்தமற்றவர்கள் இந்த நாட்டுக்குள் நுழைய தாம் அனுமதிக்க மாட்டோம் என்று பிரிட்டிஷ் வெளியுறவு அமைச்சர் கூறியுள்ளார்.

source:BBC

english

பின்னூட்டமொன்றை இடுக

Filed under Uncategorized

குவைத் இளவரசர் சுட்டுக் கொலை: உறவினர் வெ றிச்செயல்

குவைத் இளவரசர் சுட்டுக் கொலை: உறவினர் வெறிச்செயல்துபாய், ஜூன். 19-

குவைத் நாட்டு இளவரசர் ஷேக் பாசல் (52). கடந்த சில நாட்களுக்கு முன்பு துபாயில் இவர் தனது உறவினருடன் காரில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இது முற்றி தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த உறவி னர் அவரை துப்பாக்கியால் சிட்டார்.

இதனால் உயிருக்கு போராடிய அவரை துபாயில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

அவரது இறுதி சடங்கு இன்று நடைபெறுகிறது. இந்த தகவலை குவைத் அரசு தெரிவித்துள்ளது. இதற் கிடையே, அவரை சுட்ட உறவினரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஏற்கனவே, இவர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு இருந்து வந்துள்ளது. பல முறை துப்பாக்கியால் சுட்டும் இவர் தப்பி விட்டார். தற்போது துப்பாக்கி குண்டுக்கு பலியாகி விட்டார் என்ற தகவல் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

சுட்டுக் கொல்லப்பட்ட இளவரசர் ஷேக் பாசல் குவைத்தின் 12-வது அரசர், ஷேக் ஷாப் அல்சலீம் அல்சபாவின் பேரன் ஆவார். இளவரசர் ஷேக் பாசலின் கொலைக்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

source:maalaimalar

பின்னூட்டமொன்றை இடுக

Filed under Uncategorized