பில்கேட்ஸ் சரியான வால்ப் பையன்!


bill-gates%201_200_200.jpg

பில்கேட்ஸ் சரியான வால்ப் பையன்! சொல்கிறார் அவரது அப்பா

"இளம் வயதில், பில்கேட்ஸ் சரியான "வால் பையனாக’ இருந்தான்’ என அவரது தந்தை கூறியுள்ளார்."மைக்ரோ சாப்ட்’ மென்பொருள் நிறுவனத்தின் நிறுவனரும், உலக பெரும் பணக்காரர்களில் ஒருவருமான பில்கேட்ஸ், பல்வேறு சமூக சேவைகளிலும் ஈடுபட்டு வருகிறார்.

அவரும், அவரது மனைவி மெலிண்டாவும் இணைந்து, "பில் அண்ட் மெலிண்டா கேட்ஸ் பவுண்டேஷன்’ என்ற அறக்கட்டளை மூலம், கல்வி மற்றும் மருத்துவ சேவைகளுக்கு பெருமளவில் உதவி வருகின்றனர்.

கடந்த 1996ம் ஆண்டு தங்களது அறக்கட்டளை மூலம், 1,800 கோடி ரூபாய் நிதி உதவி அளித்துள்ளனர். கடந்த ஆண்டும் ஏழை குழந்தைகளின் கல்விக்காக பெரும் தொகையை வழங்கியுள்ளனர்.

இந்நிலையில், நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டு பேசிய பில்கேட்சின் தந்தை,

தற்போது பொறுப்புள்ள பிள்ளையாக இருக்கும் பில்கேட்ஸ், இளம் வயதில், மிகவும் சுட்டித்தனமுள்ள "வால் பையனாக’ இருந்தான் என்று தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது:எங்களுடையது அளவான அழகான குடும்பம். மற்றவர்களுக்கு நாங்கள் எடுத்துக்காட்டாகவும் திகழ்ந்தோம். ஆனாலும், எங்களுக்குள் அவ்வப்போது சிறுசிறு சண்டைகள், ஊடல்கள் எழும்.

அவற்றை பேசி சரி செய்து கொள்வோம். பில்கேட்ஸ் இளம் வயதில் மிகவும் சுட்டித்தனமாகவும், வால் பையனாகவும் இருந்தான். அவனது அம்மாவுடன் அடிக்கடி சண்டை போடுவான். கண்மூடித்தனமாக கோபம் வரும்.

இதை கட்டுப்படுத்துவதற்காக, அவனை மனநல மருத்துவரிடம் காண்பித்து ஆலோசனை பெற்றிருக்கிறோம்.

அப்போது,"உங்களுக்கும், உங்கள் மகனுக்கும் இடையே ஏற்படும் பிரச்னைகளுக்கான காரணத்தை புரிந்து கொண்டு, நீங்கள் விட்டுக் கொடுத்து போனால், அவன் வாழ்க்கையில் பெரிய வெற்றிகளை குவிப்பான்’ என்று டாக்டர் கூறினார்.

அவரின் நம்பிக்கை இப்போது உண்மையாகி இருக்கிறது.இவ்வாறு கேட்ஸ் சீனியர் கூறினார்.

இது தொடர்பாக பில்கேட்ஸ் கூறியதாவது:சிறு வயதில் நான் அவ்வாறு இருந்தது உண்மைதான். எனது தந்தை மிகவும் அமைதியானவர்.

தாயார் முன்கோபக்காரர். இதனால் எனக்கும், அம்மாவுக்கும் தான் அடிக்கடி சண்டை நடக்கும்.

ஆனால், இறுதியில் நான் தான் வெற்றி பெறுவேன்.இவ்வாறு பில்கேட்ஸ் கூறினார்

source:tamilcnn

பின்னூட்டமொன்றை இடுக

Filed under Uncategorized

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s