அமெரிக்காவில் இணைய பாவனையின் விநியோகத்தை கட்டுப்படுத்துவது யார் என்பது குறித்து தேசிய மட்டத்திலான விவாதம் ஒன்று ஆரம்பமாகியுள்ளது. இன்னும் 10 வருடங்களில் அனைத்து அமெரிக்கர்களுக்கும் அதிவேக இணைய இணைப்புக்களை வழங்கும் திட்டம் ஒன்றை அதிபர் ஒபாமாவின் நிர்வாகம் கொண்டிருக்கிறது. அத்துடன், அனைத்து இணைய தளங்களையும் சமமாக அணுகும் வாய்ப்பு அனைவருக்கும் உறுதி செய்யப்பட வேண்டும் என்றும், யார் எதனைப் பார்ப்பது என்பதை கேபிள் இணைப்புக்களை வங்கும் நிறுவனங்கள் அல்லது வயர்லெஸ் நிறுவனங்கள் நிர்ணயிக்க அனுமதிக்கக்கூடாது என்றும் அது விரும்புகிறது.
இணையங்கள் வகைப்படுத்தப்படும் முறையில் மாற்றத்தைக் கொண்டுவராவிட்டால், ”என்ன செய்யலாம், என்ன செய்யக்கூடாது” என்பதை இணைய விநியோக நிறுவனங்களுக்கு உத்தரவிடுவதற்கு அரசாங்கத்துக்கு அதிகாரம் கிடையாதுபோகும். டிஜிட்டல் தொழில்நுட்ப சேவைகளின் உரிமைகளுக்கான நிறுவனமான ‘பப்ளிக் நொலேட்ஜ்” ,அரசாங்கம் இணையத்தை தனது கட்டுப்பாட்டிலே எடுப்பதற்கு ஆதரவு வழங்குகிறது. இணையத்தை அணுகுவதற்கான அனுமதி குறித்த முடிவுகள் வணிக நிறுவனங்களிடம் போய்விடக்கூடாது என்கிறார் ”பப்ளிக்நொலேட்ஜ்” நிறுவனதத்தின் சட்ட இயக்குனரான ஹரோல்ட் ஃபெல்ட். ஆனால், சி ரி ஐ ஏ எனப்படுகின்ற அமெரிக்க வயர்லெஸ் அசோசியேசனைச் சேர்ந்த ஸ்டீவ் லார்ஜண்ட் அவர்கள், அரசாங்க தலையீடு ”முதலீட்டையும், துறைசார் புதிய கண்டுபிடிப்புக்களையும்” பாதிக்கும் என்று கூறுகிறார். அரசாங்கத்தின் ஒழுங்குபடுத்தும் திட்டம் குறித்த மறு ஆய்வு சட்டச் சவால்களால் சிக்கலுக்குள்ளாகும் போல் தெரிகிறது. நீதிமன்றமும், அமெரிக்க காங்கிரஸ் நாடாளுமன்றமுந்தான் அமெரிக்க இணைய விநியோகத் துறையை யார் கட்டுப்படுத்துவது என்பதை முடிவு சேய்ய வேண்டிவரும். source:BBC |
Daily Archives: ஜூன் 28, 2010
இணையத்தை கட்டுப்படுத்துவது யார்?
Filed under Uncategorized
பில்கேட்ஸ் சரியான வால்ப் பையன்!
பில்கேட்ஸ் சரியான வால்ப் பையன்! சொல்கிறார் அவரது அப்பா
"இளம் வயதில், பில்கேட்ஸ் சரியான "வால் பையனாக’ இருந்தான்’ என அவரது தந்தை கூறியுள்ளார்."மைக்ரோ சாப்ட்’ மென்பொருள் நிறுவனத்தின் நிறுவனரும், உலக பெரும் பணக்காரர்களில் ஒருவருமான பில்கேட்ஸ், பல்வேறு சமூக சேவைகளிலும் ஈடுபட்டு வருகிறார்.
அவரும், அவரது மனைவி மெலிண்டாவும் இணைந்து, "பில் அண்ட் மெலிண்டா கேட்ஸ் பவுண்டேஷன்’ என்ற அறக்கட்டளை மூலம், கல்வி மற்றும் மருத்துவ சேவைகளுக்கு பெருமளவில் உதவி வருகின்றனர்.
கடந்த 1996ம் ஆண்டு தங்களது அறக்கட்டளை மூலம், 1,800 கோடி ரூபாய் நிதி உதவி அளித்துள்ளனர். கடந்த ஆண்டும் ஏழை குழந்தைகளின் கல்விக்காக பெரும் தொகையை வழங்கியுள்ளனர்.
இந்நிலையில், நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டு பேசிய பில்கேட்சின் தந்தை,
தற்போது பொறுப்புள்ள பிள்ளையாக இருக்கும் பில்கேட்ஸ், இளம் வயதில், மிகவும் சுட்டித்தனமுள்ள "வால் பையனாக’ இருந்தான் என்று தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது:எங்களுடையது அளவான அழகான குடும்பம். மற்றவர்களுக்கு நாங்கள் எடுத்துக்காட்டாகவும் திகழ்ந்தோம். ஆனாலும், எங்களுக்குள் அவ்வப்போது சிறுசிறு சண்டைகள், ஊடல்கள் எழும்.
அவற்றை பேசி சரி செய்து கொள்வோம். பில்கேட்ஸ் இளம் வயதில் மிகவும் சுட்டித்தனமாகவும், வால் பையனாகவும் இருந்தான். அவனது அம்மாவுடன் அடிக்கடி சண்டை போடுவான். கண்மூடித்தனமாக கோபம் வரும்.
இதை கட்டுப்படுத்துவதற்காக, அவனை மனநல மருத்துவரிடம் காண்பித்து ஆலோசனை பெற்றிருக்கிறோம்.
அப்போது,"உங்களுக்கும், உங்கள் மகனுக்கும் இடையே ஏற்படும் பிரச்னைகளுக்கான காரணத்தை புரிந்து கொண்டு, நீங்கள் விட்டுக் கொடுத்து போனால், அவன் வாழ்க்கையில் பெரிய வெற்றிகளை குவிப்பான்’ என்று டாக்டர் கூறினார்.
அவரின் நம்பிக்கை இப்போது உண்மையாகி இருக்கிறது.இவ்வாறு கேட்ஸ் சீனியர் கூறினார்.
இது தொடர்பாக பில்கேட்ஸ் கூறியதாவது:சிறு வயதில் நான் அவ்வாறு இருந்தது உண்மைதான். எனது தந்தை மிகவும் அமைதியானவர்.
தாயார் முன்கோபக்காரர். இதனால் எனக்கும், அம்மாவுக்கும் தான் அடிக்கடி சண்டை நடக்கும்.
ஆனால், இறுதியில் நான் தான் வெற்றி பெறுவேன்.இவ்வாறு பில்கேட்ஸ் கூறினார்
source:tamilcnn
Filed under Uncategorized