Daily Archives: ஜூன் 5, 2010

google-ல் தெரிவது – Holography தொழில்நுட்பம்


holography.gif

Holography தொழில் நுட்பத்தை கண்டுபிடித்தவரும், முப்பரிமாணக்காட்சி புகைப்படங்களை முதன்முதலில் உருவாக்கியவருமான ஹங்கேரிய மின் பொறியியலாளர் டென்னிஸ் கெபொர் (Dennis Gabor) இன் 110 வது பிறந்த தினத்தை நினைவு கூர்ந்து கூகிள் இணையதளம் இன்று தனது இலட்சினையை வடிவமைத்துள்ளது.

இக்கண்டுபிடிப்பிற்காக 1971 ம் ஆண்டு பௌதீகவியலுக்கான நோபல் பரிசும் இவருக்கு கிடைத்தது. ஹோலோகிராபி (Holography) என்பது ஒரு பொருளில் இருந்து வெளிப்படும் ஒளிக்கதிர்களை, அதன் வெவ்வேறு தோற்றவகைகளில் பதிவு செய்து, அப்பொருளின் அசைவுகளை முப்பரிமாணத்தோற்றத்தில் (3-D Picturs) காட்டும் தொழில்நுட்பம்!

எனினும், இது முப்பரிமாண கற்பனை உருவங்களை உருவாக்கும், கிரபிக்ஸ் தொழில்நுட்பத்துடன் தொடர்பு பட்டதல்ல. Holography யின் சிறந்த தொழில்நுட்பம் பயன்படுத்த ஆங்கில திரைப்படங்களாக Matrix, Avatar ஆகியயவற்றை கூறலாம். இதை விட சில தகவல் சேகரிப்புக்களுக்கும், அதி சிறந்த பாதுகாப்பு முறைமைகும், ஓயியக்கலை மெருகூட்டல் சம்பந்தமான விடயங்களுக்கும் இந்த Holographyதொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது

source:nakkheeran

1 பின்னூட்டம்

Filed under Uncategorized

நாயைச் சுட்ட குண்டு – ரவிசங்கர் ஆசிரம சர ்ச்சை முடிவுக்கு வந்தது..!

பெங்களூரில் வாழும் கலை ஆசிரமத்தில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக பண்ணை வீட்டு உரிமையாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆசிரமத்தை ஒட்டியுள்ள தனது பண்ணை வீட்டில் திரிந்த நாய்களை விரட்ட வானை நோக்கி சுட்டபோது, அது தவறுதலாக ஆசிரமத்துக்குள் பாய்ந்துவிட்டதாக அந்த நபர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை வாழும் கலை ஆசிரமத்தில் ரவிசங்கர் பேசிவிட்டு காரில் ஏறிச் சென்ற பி்ன்னர் வானிலிருந்து வந்த குண்டு அங்கு நின்றிருந்த வினய் என்பரின் தொடையை உரசிச் சென்றது.

இது தனக்கு வைக்கப்பட்ட குறி என்று ரவிசங்கர் கூறினாலும், அவரை குறி வைத்து துப்பாக்கிச் சூடே நடக்கவில்லை என்று கர்நாடக போலீசாரும், மத்திய உளவுப் பிரிவுகளும் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளன.

சுடப்பட்ட துப்பாக்கி . 32 ரகத்தைச் சேர்ந்தது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த குண்டு 700 அடி தூரத்தில் இருந்து சுடப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது.

இதனால் ஆசிரமத்தை ஒட்டியுள்ள ஏராளமான பண்ணை வீடுகளில் ஏதோ ஒரு வீட்டில் யாரோ பறவைகளை குறி வைத்து சுட்டிருக்கலாம், அது தவறுதலாக ஆசிரமத்துக்குள் பாய்ந்து பக்தரை தாக்கியிருக்கலாம் என போலீசார் கருதினர்.

இதையடுத்து பண்ணை வீடுகளில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். அந்தப் பகுதியில் இந்த ரக துப்பாக்கி வைத்திருக்கும் பண்ணை வீட்டினர் குறித்து லிஸ்ட் எடுத்து விசாரிக்கப்பட்டது.

அப்போது ஆசிரமத்தை ஒட்டியுள்ள பண்ணை வீட்டின் உரிமையாளர் மாதவ்குமார் பிரசாத் என்பவர் சிக்கினார்.

அவர் அளித்துள்ள வாக்குமூலத்தி்ல், சில நாய்கள் எனது பண்ணைக்குள் நுழைய முயன்றன. அவற்றை விரட்டுவதற்காக நான் துப்பாக்கியை எடுத்து வானத்தை நோக்கி 3 முறை சுட்டேன். அதில் ஒரு குண்டு தவறுதலாக ஆசிரமத்துக்குள் பாய்ந்து ஒருவரை காயப்படுத்திவிட்டது. ரவிசங்கர் மீது சுடும் எண்ணம் எதுவும் இல்லை. அவருக்கும் எனக்கும் எந்த வித பகையும் இல்லை என்று கூறியுள்ளார்.

இது குறித்து கர்நாடக டி.ஜி.பி. அஜய்குமார் கூறுகையில், ஆசிரமத்திற்கு அருகே உள்ள பண்ணையின் உரிமையாளரிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போதுதான் தான் துப்பாக்கியால் சுட்டதாக தெரிவித்தார். தனது பண்ணைக்குள் நுழைந்துவிட்ட தெரு நாய்களை விரட்டத்தான் துப்பாக்கியால் சுட்டதாகவும், ரவிசங்கரை குறி வைத்து தான் சுடவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

அவரைப போலீஸார் கைது செய்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர் என்றார்.

இந்தக் கைதின் மூலம், ரவிசங்கர் ஆசிரம துப்பாக்கிச் சூடு சர்ச்சை முடிவுக்கு வந்துள்ளது.

source:tamilulakam

பின்னூட்டமொன்றை இடுக

Filed under Uncategorized

கிறிஸ்தவர்களின் மீது தாக்குதல் ; ஒரிசா – க ர்நாடகம்

எழுத்தாளர் / தொகுப்பாளர் : மார்க்ஸ்.அ
பதிப்பு : முதற் பதிப்பு (டிசம்பர் 2008 )
விலை : 65 .00 In Rs
பிரிவு : தொகுப்பு
பக்கங்கள் : 136
ISBN :
பதிப்பகம் : புலம்
முகவரி : 72, மதுரை நாயக்கன் தெரு
சின்னமேட்டு குப்பம், மதுரவாயல்
சென்னை 600095
இந்தியா
இந்துவத்தின் இலக்கு இப்போது கிறிஸ்தவர்கள். கந்தமால், மங்களூர் பகுதிகளுக்கு நேரடியாகச் சென்ற அனுபவங்கள் இங்கே பகிர்ந்துகொள்ளப்படுகின்றன. வெறும் அனுபவப் பகிர்வாக இல்லாமல் இந்தியக் கிறஸ்துவம், இந்துத்துவம் அதை எதிர்கொண்ட வரலாறு, மத மாற்றத் தடைச் சட்டங்கள் பற்றிய அலசல் என ஒரு விரிவான ஆய்வாக அமைகிறது இந்நூல்.

http://www.viruba.com/final.aspx?id=VB0002807

பின்னூட்டமொன்றை இடுக

Filed under Uncategorized

வேர்ட் டிப்ஸ்


E_1275209093.jpeg

டேபிளை மாறா நிலையில் அமைக்க:

பொதுவாக டேபிள் ஒன்றை வேர்ட் டாகுமெண்ட்டில் அமைத்த பின்னர், அதில் டேட்டா அதிகமாகும்போது, செல்கள் தானாகப் பெரிதாகி அட்ஜஸ்ட் செய்திடும் வகையில் அமைப்போம். ஒரு சிலருக்கு இது தேவையற்ற ஒன்றாகத் தெரியும். அவர்கள் தாங்கள் வைத்த அளவிலேயே டேபிளின் செல்கள், தொடர்ந்து அமைந்திருக்க வேண்டும் என விரும்பி, டேபிளின் அளவு மாறா நிலையிலேயே செட் செய்திட விரும்புவார்கள். இவர்களின் இந்த எண்ணம், நம் வசதியைச் சுருக்கும் என்றாலும், வேர்ட் இது போல டேபிளை முடக்கி வைக்க வழி தருகிறது. குறிப்பிட்ட சில செல்களை மட்டும் கூட, இது போல அளவு மாறாமல் வைத்திருக்கலாம்.
கீழே தரப்படும் நடவடிக்கைகள் வேர்ட் 97க்கானவை.

1.முதலில் நீங்கள் முடக்கி வைக்க விரும்பும் செல்களைத் தேர்ந்தெடுக்கவும். அனைத்து செல்களையும், அதாவது முழு டேபிளையும் மாறா நிலையில் அமைக்க வேண்டும் என்றால், முழு டேபிளையும் தேர்ந்தெடுக்கவும்.

2. அதன் பின் டேபிள் மெனு சென்று Cell Height and Width என்பதனைத் தேர்ந்தெடுக்கவும்.வேர்ட் உங்கள் டேபிளில் உள்ள செல்களின் அகலம் மற்றும் உயரம் எவ்வளவு என்று காட்டும்.

3. உயரம் எவ்வளவு இருக்க வேண்டும் என்பதனை Auto to Exactly என்பதில் அமைக்கலாம். இது அந்த டயலாக் பாக்ஸில் மேலாக உள்ள இடது மூலையில், கீழ் விரி மெனுவாகக் கிடைக்கும்.

4. இங்கு At பீல்டில்படுக்கை வரிசைக்கான உயரத்தினை அமைக்கவும். இதனை புள்ளிகளில் அமைக்க வேண்டும். ஒரு அங்குலம் என்பது 72 புள்ளிகள் என்பதனை நினைவில் வைக்கவும்.

5. பின் ஓகே கிளிக் செய்து Cell Height and Width பிரிவை மூடவும்.

நீங்கள் வேர்ட் 2000 மற்றும் அதற்குப் பின் வந்த தொகுப்பினைப் பயன்படுத்துவதாக இருந்தால், கீழ்க்குறித்தபடி செயல்படவும்.

1. டேபிள் மெனுவிலிருந்து Properties தேர்ந்தெடுக்கவும்.

2. வேர்ட் Table Properties டயலாக் பாக்ஸினைக் காட்டும்.

3. இங்கு Specify Height பாக்ஸைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர், படுக்கை வரிசைகளுக்கான (Row) உயரத்தினை இறுதி செய்திடவும்.

4. Row Height Is என்ற கீழ்விரி மெனுவினைப் பயன்படுத்தி, அதில் Exactly என்பதனைத் தேர்ந்தெடுக்கவும்.

5. அடுத்து டேபிள் டேப்பிற்குச் செல்லவும். அங்கு கிடைக்கும் Options பட்டனில் கிளிக் செய்திடவும். வேர்ட் Table Options டயலாக் பாக்ஸினைக் காட்டும்.

6. பின்னர் அங்கிருக்கும் Automatically Resize to Fit Contents என்ற செக் பாக்ஸில் டிக் அடையாளம் இருந்தால் எடுத்துவிடவும்.

7. அடுத்து Table Options டயலாக் பாக்ஸை மூட ஓகே கிளிக் செய்திடவும்.

8. பின்னர் Table Properties டயலாக் பாக்ஸை மூட ஓகே கிளிக் செய்திடவும்.

மேலே கூறியவற்றில் 4 முதல் 6 வரையிலான செயல்களைச் சரியாக மேற்கொள்ள வேண்டும்.
டேபிள்: படுக்கை வரிசை பிரியாமல் இருக்க டேபிள்களை வேர்ட் டாகுமெண்ட்டில் அதிகம் பயன்படுத்துகிறோம். டேபிள் மிகப் பெரியதாக அமைக்கும் நிலையில், அதில் உள்ள படுக்கை வரிசை பிரிந்து அமைய வாய்ப்புகள் உண்டு. ஒரு பக்கத்தின் இறுதியில் கொஞ்சமும், அடுத்த பக்கத்தில் மிச்சமும் அமையும் படி ஒரு படுக்கை வரிசை அமையலாம். இது டேபிளின் அமைப்பை வித்தியாசமாகக் காட்டுவதுடன், அந்த வரிசையில் உள்ள டேட்டாக்களைத் தேடிக் கண்டறியும் சூழ்நிலையை உருவாக்கும். எனவே இது போன்று பிரிக்கப்படுவதனை நாம் விரும்ப மாட்டோம். அவை பிரிக்கப்படாமல் காட்டப்பட வேண்டும் என வேர்ட் தொகுப்பில் செட் செய்திடலாம்.

1. எந்த வரிசையினைப் பிரிக்காமல் வைத்திருக்க வேண்டும் என விரும்புகிறீர்களோ, அதனை முதலில் தேர்ந்தெடுக்கவும்.

2. டேபிள் மெனுவில் இருந்து செல் உயரம், அகலம் (Cell Height and Width) சார்ந்த பிரிவைத் தேர்ந்தெடுக்கவும். இந்த டயலாக் பாக்ஸ் காட்டப்படும்.

3. இந்த டயலாக் பாக்ஸில் உள்ள Allow Row to Break Across Pages என்ற வரியின் முன் உள்ள டிக் அடையாளத்தை எடுத்துவிடவும்.

4. பின்னர் ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.

உங்களிடம் வேர்ட் 2000 அல்லது அதற்குப் பின் வந்த தொகுப்பு எனில் சற்று மாறுதலாக இதனை செட் செய்திட வேண்டும்.

1. முதலில் பிரிக்கக் கூடாத படுக்கை வரிசையினைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

2. டேபிள் மெனுவிலிருந்து Table Properties தேர்ந்தெடுக்கவும். கிடைக்கும் டயலாக் பாக்ஸில் Row என்ற டேப்பைக் கிளிக் செய்திடவும்.

3. இதில் Allow Row to Break Across Pages என்ற இடத்தில் உள்ள செக் பாக்ஸை கிளியர் செய்திடவும்.

4. ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.

இதில் உங்களுக்கு ஒரு சந்தேகம் எழலாம். எந்த படுக்கை வரிசை பிரியப் போகிறது என்று முன் கூட்டியே நமக்குத் தெரியாது. இந்நிலையில் எப்படி அதனைத் தேர்ந்தெடுத்து அமைப்பது. அமைத்த பின்னர் வரிசையைத் தேர்ந்தெடுத்து, செட் செய்வது நேரம் எடுக்கும் செயல் அல்லவா? மேலும் மேலே உள்ள வரிசைகளில் டேட்டா கூடுதலாக அமைக்கும் நிலையில் கீழே உள்ள வரிசை பிரியலாம் அல்லவா? இந்த கேள்விகள் நமக்கு நிச்சயம் ஏற்படும். எனவே குறிப்பிட்ட படுக்கை வரிசைக்குப் பதிலாக, அனைத்து வரிசைகளையும் தேர்ந்தெடுத்து மேலே காட்டியபடி செட் செய்து விட்டால் எந்தப் பிரச்னையும் எழாது.
மாற்று வழியில் டேபிள்:

வேர்ட் சில பார்மட்டிங் பணிகளைத் தானாக மேற்கொள்ளும். இவற்றில் மிகவும் பயனுள்ள பணி + மற்றும் – (ப்ளஸ் மற்றும் ஹைபன்) அடையாளங்களைப் பயன்படுத்தி டேபிள்களை உருவாக்குவதுதான். ஒரு + அடையாளத்தை டைப் செய்து பின் சில ஹைபன் அடையாளத்தை டைப் செய்திடுங்கள். மீண்டும் + அடையாளம் டைப் செய்து மீண்டும் ஹைபன் அடையாளங்களை அமைத்திடுங்கள். பின் என்டர் தட்டினால் டேபிள் ரெடி. பின் இதனை வழக்கம்போல் டேபிளில் என்ன மாற்றங்கள் மற்றும் டேட்டாவை அமைப்பீர்களோ அதே போல் அமைத்துக் கொள்ளலம்.
டேஷ் கோடாக மாறாமல் இருக்க:

வேர்டில் டேஷ் கோடு மூன்றை டைப் செய்தால் வேர்ட் உடனே அதனை பெரிய திக்கான கோடாக மாற்றி விடும். இதனை நீக்கும் வழியும் உடனே கிடைக்காது. இந்த செயல்பாடு வேர்ட் புரோகிராமில் பதியப்படும்போதே அமைக்கப்பட்டு விடுகிறது. இதனை நீக்க Format | Borders and Shading என்று செல்லவும். பின் Bordersடேப்பில் கிளிக் செய்து None என்பதைத் தேர்ந்தெடுத்து ஓகே கிளிக் செய்து வெளியே வரவும்.

source:dinamalar

பின்னூட்டமொன்றை இடுக

Filed under Uncategorized