Daily Archives: மே 29, 2010

அலிபாபா கதையில் ‘ஆபாசம்

ஆயிரத்தோர் அரேபிய இரவுக் கதைகள் புத்தகம்
பழங்காலத்து கதைகளில் ஆபாசம் இருப்பதாக புதிய சர்ச்சை

ஆயிரத்து ஓர் இரவுகள் என்ற பழங்காலத்து அரபுக் கதைகளின் சில பகுதிகள் ஆபாசமாக இருப்பதாகக் கூறி அக்கதைகளுக்கு தடை விதிக்க வேண்டும் என எகிப்தின் வழக்குரைஞர்கள் சிலர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கன்னித் தீவு சிந்துபாத், அலாவுதீனும் அற்புத விளக்கும், அலிபாபாவும் நாற்பது திருடர்களும் போன்ற சாகசக் கதைகள் உலகெங்கும் பிரசித்தி பெற்றவை.

இந்தக் கதைகள் மத்திய கிழக்குப் பகுதியையும் தெற்காசியாவையும் கதைக்களங்களாக கொண்டுள்ளன. சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமையானவை இவை.

ஆச்சரியங்களும் அற்புதங்களும் நிறைந்த ஓர் உலகத்தை வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தி இன்றளவும் இக்கதைகள் ரசிகர்களை ஈர்த்துவருகின்றன.

புத்தகமாக மட்டுமல்லாது திரைப்படங்களாகவும் கார்டூன் படங்களாகவும் வெளிவந்து எல்லா வயதினரையும் இக்கதைகள் வசீகரித்துள்ளன.

எகிப்தில் அண்மையில் வெளியான இக்கதைகளின் புதிய பதிப்பு கூட வெளிவந்தவுடன் விற்றுத் தீர்ந்துவிட்டுள்ளன.

ஆனாலும் தற்போது அங்கு இக்கதைகள் தொடர்பில் ஒரு புதிய சர்ச்சை கிளம்பியுள்ளது.

அந்தக் கதைகளில் சில இடங்களில் பாலியல் உணர்வையும் காம உணர்வையும் வெளிப்படுத்தும் பத்திகள் இருக்கின்றன. உடலின் அங்கங்களை வருணிக்கும் வாசகங்கள் இருக்கின்றன.

அந்தக் கதைகளில் வரும் கவர்ச்சியான வர்ணனைகள் ஆபாசமாக உள்ளதாக இஸ்லாமிய சட்டத்தரணிகள் சிலர் கூறுகின்றனர். ஆதலால் இந்தப் புத்தகத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று அவர்கள் கோருகின்றனர்.

‘கைவிலங்குகள் அற்ற வழக்குரைஞர்கள்’ என்ற பெயர் கொண்ட அமைப்பைச் சார்ந்த அவர்கள் ஆயிரத்தோரு இரவுகள் கதைகளில் வரும் இப்படியான வர்ணனைகள் மனிதன் தவறான பாதையில் செல்லத் தூண்டுவதாகக் வாதிடுகின்றனர்.

"ஆனால் இஸ்லாத்தை கட்டுப்பட்டித்தனமாக அர்த்தப்படுத்துகின்ற ஒரு போக்கிற்குள் இவர்கள் ஆட்பட்டிருக்கிறார்கள். ஆனால் எகிப்து காலாகாலமாக மதத்தைப் புரிந்துகொண்ட விதத்திலிருந்து இது முற்றிலும் மாறுபட்டது." என்கிறார் எகிப்திய எழுத்தாளர் அல்லா அல் அஸ்வனி.

இந்த சட்டத்தரணிகள் ‘ தாலிபான்கள் போல’ நடந்துகொள்கிறார்கள் என எகிப்திய எழுத்தாளர்கள் ஒன்றியம் குற்றம்சாட்டியுள்ளது.

பழமையும் செழுமையும் நிறைந்த இலக்கியப் பாரம்பரியம் கொண்ட எகிப்தில் கடும்போக்கு இஸ்லாத்துக்கும் சகிப்புத்தன்மை கொண்ட இஸ்லாத்துக்கும் இடையில் அவ்வப்போது உரசல்கள் வந்துகொண்டுதான் இருக்கும் என்பதற்கு இச்சம்பவம் மேலும் ஒரு எடுத்துக்காட்டு என்று விமர்சகர்கள் கூறுகிறார்கள்.

source:BBC

பின்னூட்டமொன்றை இடுக

Filed under Uncategorized

முஸ்லீம்களின் பள்ளிவாசலில் துப்பாக்கி ச ுடு நடத்தும் முஸ்லீம்கள்

முஸ்லீம்களில் ஒரு பிரிவினரான அஹமதியாக்களின் மசூதியில் தொழுகை நேரத்தில் உள்ளே புகுந்த சன்னி முஸ்லீம் தீவிரவாதிகள் செய்த அட்டூழியங்கள்

pak.jpg
பாகிஸ்தானில் தீவிரவாதிகள் தாக்குதல்
2 மசூதிகளில் புகுந்து சுட்டனர்: 80 பேர் குண்டு பாய்ந்து பலி

லாகூர், மே.29-

பாகிஸ்தானில் லாகூர் நகரில் உள்ள 2 மசூதிகளில் தீவிரவாதிகள் புகுந்து துப்பாக்கியால் சுட்டதில் 80 பேர் பலி ஆனார்கள். மேலும் 100 பேர் காயம் அடைந்தனர்.

மசூதிகளில் நுழைந்தனர்

பாகிஸ்தானில் அவ்வப்போது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி பலத்த உயிர்ச்சேதத்தை ஏற்படுத்தி வருகிறார்கள். நேற்று லாகூர் நகரில் 2 மசூதிகளுக்குள் தீவிரவாதிகள் புகுந்து தாக்குதல் நடத்தியதில் 80 பேர் பலி ஆனார்கள்.

லாகூரில் மாடல் டவுண், கர்கி சாகு ஆகிய இடங்களில் உள்ள சிறுபான்மை அகமதி பிரிவினரின் மசூதிகளில் உள்ளூர் நேரப்படி நேற்று மதியம் 1.45 மணி அளவில் வெள்ளிக்கிழமை தொழுகை நடந்து கொண்டு இருந்தது. அப்போது துப்பாக்கி மற்றும் வெடிகுண்டுகளுடன் திடீரென்று தீவிரவாதிகள் அந்த மசூதிகளுக்குள் புகுந்தனர். அவர்களில் சிலர் உடலில் வெடிகுண்டு ஜாக்கெட்டுகளையும் அணிந்து இருந்தனர்.

pak2.jpg
தாக்குதல்

உள்ளே நுழைந்த தீவிரவாதிகள் தொழுகை நடத்திக்கொண்டிருந்தவர்களை நோக்கி வெடிகுண்டுகளை வீசியபடி, துப்பாக்கியால் கண்மூடித்தனமாக சுட்டனர். இதனால் தொழுகையில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்து எழுந்து பாதுகாப்பு தேடி அங்கும், இங்குமாக ஓடினார்கள். சிலர் அங்குள்ள அறைகளுக்குள் சென்று பதுங்கினார்கள்.

இந்த தாக்குதல் பற்றிய தகவல் கிடைத்ததும் போலீசாரும், துணை ராணுவப்படையினரும் 2 மசூதிகளுக்கும் சென்று சுற்றி வளைத்தனர். தீவிரவாதிகளின் பிடியில் பணயகைதிகளாக இருந்தவர்களை மீட்க பாதுகாப்பு படையினர் அதிரடி தாக்குதல் நடத்தினார்கள். இதைத்தொடர்ந்து அவர்களுக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே பயங்கர துப்பாக்கி சண்டை நடந்தது.

80 பேர் பலி

தீவிரவாதிகள் நடத்திய இந்த கொடூர தாக்குதலில் 80 பேர் பலி ஆனார்கள். மேலும் சுமார் 100 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மாடல் டவுண் மசூதி தாக்குதலில் உயிர் இழந்தவர்களில் பாகிஸ்தான் ராணுவ முன்னாள் லெப்டினன்ட் ஜெனரலும் ஒருவர் ஆவார்.

கர்கி சாகு மசூதியில் நடந்த தாக்குதல் பற்றி செய்தி சேகரிப்பதற்காக சென்ற டி.வி. நிருபர் ஒருவர் குண்டு காயம் அடைந்து, பின்னர் சிகிச்சை பலனின்றி ஆஸ்பத்திரியில் உயிர் இழந்தார். இதில் சில போலீசாரும் அடங்குவார்கள்.

தீவிரவாதிகளுடன் நடந்த துப்பாக்கி சண்டையில் சிலர் போலீசாரும் உயிர் இழந்தனர். மேலும் ஒரு போலீஸ் சூப்பிரண்டு உள்பட 7 போலீசார் காயம் அடைந்தனர்.

தீவிரவாதிகளின் தலைகள்

மாடல் டவுண் மசூதியில் தாக்குதல் நடத்திய 7 தீவிரவாதிகளில் 5 பேரை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றதாகவும், 2 பேர் காயத்துடன் பிடிபட்டதாகவும் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

கர்கி சாகு பகுதியில் உள்ள மசூதிக்குள் புகுந்து தாக்குதல் நடத்திய 3 தீவிரவாதிகள் வெடிகுண்டுகளை வீசி துப்பாக்கியால் சுட்டதோடு, தங்கள் உடலில் கட்டி இருந்த வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்தனர். இதனால் அவர்கள் பலியானதாகவும், துண்டாகி கிடந்த அவர்களுடைய தலைகள் கண்டு பிடிக்கப்பட்டதாகவும் மாவட்ட நிர்வாக தலைவர் சஜ்ஜத் புட்டா தெரிவித்தார்.

கர்கி சாகு மசூதியில் நடந்த தாக்குதலில் மட்டும் 40-க்கும் அதிகமான பேர் உயிர் இழந்ததாக மீட்புக்குழுவின் செய்தித்தொடர்பாளர் பாகிம் ஜகன்ஜெப் கூறினார்.

இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானின் தெரிக்-இ-தலீபான் தீவிரவாத இயக்கம் பொறுப்பு ஏற்று உள்ளது.

source:dailythanthi

1 பின்னூட்டம்

Filed under Uncategorized

இதெல்லாம் கொஞ்சம் “ஓவர்!’

large_6789.jpg

பெங்களூரு : எட்டு மாதம் முதல் ஒரு வயது வரையுள்ள குழந்தைகளுக்கு மழலையர் பள்ளி தொடங்கப்பட்டுள்ளது. இங்கல்ல, பெங்களூரில்! கொஞ்சம், "ஓவரா’ தெரியுதுல்லே?

பெங்களூரிலுள்ள, "போடர் ஜம்போ கிட்ஸ்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த மழலையர் பள்ளிக்கூடத்தில், தற்போது குழந்தைகள் சேர்க்கை தொடங்கி, விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த பள்ளியில், எட்டு மாதம் முதல் ஒரு வயது வரையுள்ள குழந்தைகளுக்கென்றே பிரத்யேக பாடத்திட்டங்களும் வடிவமைக்கப்பட்டுள்ளன. அதில், குழந்தைகளின் மனவளர்ச்சி, பேச்சுத்திறன், உடல் தகுதி போன்றவற்றை மேம்படுத்தும் விதத்தில் தினசரி பாடங்களும், பயிற்சிகளும் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த பாடத்திட்டத்திற்கு, "மனவள மேம்பாடு’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

குழந்தைகள் விரும்பும் வண்ணங்களை கொண்டு, எளிமையான படங்களும், எழுத்துக்களும் உருவாக்கப்பட்டிருப்பது இந்த பாடத்திட்டத்தின் சிறப்பம்சமாகும். ஒரு வயதுக்குபட்ட இந்த குழந்தைகளுடன், அவர்களின் அம்மாக்களும் பள்ளிக்கூடத்திற்கு வர வேண்டும். வகுப்புகள் 30 நிமிடங்கள் முதல் 1 மணி நேரம் வரை, வாரத்திற்கு மூன்று நாட்கள் நடைபெறும். பெற்றோர்களிடம் இந்த மழலையர் பள்ளிக்கூடங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதால், பல்வேறு இடங்களில் இந்த பள்ளிகளை திறக்க முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. தாயின் அரவணைப்பில் வளரும் சூழ்நிலை மாறி போய், பள்ளிகளின் அரவணைப்பில் குழந்தைகள் வளரும் காலம் வந்து விட்டது.

source:dinamalar

பின்னூட்டமொன்றை இடுக

Filed under Uncategorized