ரயில்வே துறைக்கு எதிராக 65 தாக்குதல்; இன்ற ு பலி 65 ;காயம்; 200 ; ரூ. 500 கோடி இழப்பு


large_8188.jpg

கோல்கட்டா: மேற்கு வங்கத்தில் இருந்து மும்பை நோக்கி வந்து கொண்டிருந்த பயணிகள் ரயில் குண்டு வைத்து தகர்க்கப்பட்டது. இதில் 70 பேர் வரை பலியாகியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. 100 க்கும் மேற்பட்டோர் காயமுற்றனர். மாவோ., நக்சல்கள் நடத்தி வரும் வெறி தாக்குதல் தொடர்ந்த வண்ணமே உள்ளதே தவிர மத்திய அரசு இன்னும் ஓடுக்கும் விஷயத்தில் தெளிவான முடிவை அறிவிக்கவில்லை.

தொடர்ந்து வரும் தாக்குதல்கள் : இந்தியாவில் மவோயிஸ்ட் நக்சல்கள் கடந்த 5 ஆண்டுகளில் பல்வேறு தாக்குதலை நடத்தியுள்ளனர். பெரும் உயிரிழப்பு மற்றும் பொதுச்சொத்து தேசம் என மத்திய அரசுக்கு விடாத தலைவலியாகவே இருந்து வருகின்றனர். மலைப்பகுதியில் பதுங்கி இருக்கும் இந்த நக்சல்கள் தாக்குதலின் உச்சக்கட்டமாக கடந்த மாதம் சி.ஆர்.பி.எப்., வீரர்கள் 76 பேரை கண்ணி வெடி வைத்தும் துப்பாக்கியால் சுட்டும் கொன்றனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்தநேரத்தில் நக்சல்கள் ஒடுக்கும் விஷயத்தில் மாநில முதல்வர்களுடன் ஆலோசனை மட்டுமே நடத்தப்பட்டது. உறுதியான முடிவுகள் எடுக்கப்படவில்லை. 76 வீரர்களை கொன்றதாக 6 பேர் கடந்த வாரம் கைது செய்யப்பட்டனர். மே மாதம் 17 ம் தேதியன்று சட்டீஸ்கரில் பயணிகள் பஸ் ஒன்று கண்ணி வெடி வைத்து தகர்க்கப்பட்டதில் 36 பேர் கொல்லப்ட்டனர். இதில் 12 பேர் சிறப்பு படை போலீசார். தொடர்ந்து பாதுகாப்பு படை வீரர்கள் முகாம் மீதும் தாக்குதல் நடத்தினர், இதிலும் சில வீரர்கள் கொல்லப்பட்டனர். இன்னும் இவர்கள் தாக்குதல் வெறி அடங்காமல் அவ்வப்போது அதிரடி தாக்குதலை நடத்தி வருகின்றனர். கடந்த 14 ம் தேதி டீசல் ஏற்றிவந்த டாங்கர் ரயில் தீ வைத்து எரிக்கப்பட்டது.

வெடிக்கும் சப்தம் கேட்டது: இன்று ( வெள்ளிக்கி‌ழமை ) அதிகாலை 1. 30 மணி அளவில் மேற்குவங்கத்தில் இருந்து மும்பை நோக்கி ஞானேஸ்வரி எக்ஸ்பிரஸ் ரயில் சென்று கொண்டிருந்தது. மேற்கு மிட்னாபூரில் தண்டவாளத்தில் பெரும் வெடிக்கும் சப்தம் கேட்டது. இதனையடுத்து ரயில் கவிழ்ந்தது. இதில் 13 ரயில் பெட்டிகள் ஒன்றோடு ஒன்று மோதி சரிந்து விழுந்தன. பயணிகள் அலறல் சப்தம் மட்டுமே அதிகம் ஒலித்ததாக அருகில் இருந்த கிராம மக்கள் தெரிவிக்கின்றனர். இதில் 65 பேர் வரை உயிரிழந்து விட்டனர். 200 க்கும் மேற்பட்டோர் படுகாயமுற்றுள்ளனர். இதில் பலர் ரயில் பெட்டிகளின் இடிபாடுகளில் சிக்கியபடி இருக்கின்றனர். கோல்கட்டாவில் இருந்து 135 கி.மீட்டர் தொலைவில் கேமாசோலி, சார்தியா ரயில்வே ஸ்டேஷன் இடையே இந்த சம்பவம் நடந்துள்ளது. இன்னும் உயிர்ப்பலி அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

கவிழ்ந்த ரயில் மீது மோதியது சரக்கு ரயில் : கவிழ்ந்து கிடந்த ரயில்மீது இந்த வழியாக வந்த சரக்கு ரயிலும் மோதியது. இதனால் பெரும் சேதம் ஏற்பட்டது. பயணிகளை மீட்கும் பணிக்காக தீயணைப்பு மற்றும் பாதுகாப்பு அவசரகால படை வீரர்கள் மற்றும் விமான படையும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. சிக்கிய பயணிகளை மீட்கும் பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளது. ரயில்வே தண்டவாளத்தில் குண்டு வெடித்தது உண்மை தான் என ரயில்வே துறை அமைச்சர் மம்தா ஒப்புதல் தெரிவித்துள்ளார். உள்துறை அமைச்சகம் இது குறித்து இன்னும் எவ்வித செய்தியும் வெளியிடவில்லை. மத்திய அமைச்சர் பிரணாப்முகர்ஜி, ரயில்வே துறை அ‌மைச்சர் மம்தாவை அழைத்து விசாரித்தார், இந்த நிலைமை குறித்து பிரதமரிடம் விளக்கப்பட்டது. சம்பவத்தை அடுத்து இப்பகுதியில் ஹவுரா வழியாக செல்லும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. 150 பேர் வரை காயமுற்றிருப்பதாகவும், உயிர்ப்பலி அதிகம் இருக்கும் என அஞ்சப்படுவதாகவும், உள்துறை செயலர் ஜி.கே., பிள்ளை கூறினார். இந்த சம்பவத்தின் பின்னணியில் மாவோ., நக்சல்கள் இருப்பதாக சந்தேகிக்கப்படுவதாக ரயில்வே போர்டு போக்குவரத்து துறை உறுப்பினர் விவேக் ஷகாய் கூறினார்.

வெல்டிங் மூலம் உடைத்து மீட்பு : ரயில் பெட்டிகள் ஒன்றோடு ஒன்றாக மோதி கிடப்பதால் பயணிகள் பலர் பெட்டிகளின் உடைந்த இரும்பு தளவாடங்கள் இடையே சி்க்கியிருக்கின்றனர். இவர்கள் மீட்கும் பணியில் சி.ஆர்.பி.எப்., வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். இடிபாடுகளில் சிக்கிய பயணிகளை மீட்க வெல்டிங் மூலம் தளவாடங்கள் உடைக்கப்பட்டு மீட்கப்பட்டு வருகின்றனர்.

சம்பவ இடத்தில் மம்தா: சம்பவம் நடந்துள்ள பகுதிக்கு ரயில்வே துறை அமைச்சர் மம்தா பானர்ஜி விரைந்தார். தாக்குதல் நடந்த சம்பவம் குறித்து நேரிடையாக கேட்டறிந்தார். மேலும் அங்கு நடக்கும் மீட்பு பணிகளை பார்வையிட்டு அங்கிருந்தபடியே உத்தரவு பிறப்பித்த வண்ணமாக இருந்தார். இதில் பலியானவர்களுக்கு நிவாரணமாக ரூ. 5 லட்சமும், காயமுற்றவர்களுக்கு ரூ. 2 லட்சமும் வழங்கப்படும் என அவர் அறிவித்துள்‌ளார்.

தாமதமாக வந்த மீட்பு படையினர்: அதிகாலை பொழுதில் நடந்த இந்த விபரீதத்தில் சிக்கிய பயணிகள் மீட்பு படையினரின் தாமத வருகைக்காக காத்திருந்தனர். 1. 30 மணி அளவில் சம்பவம் நடந்து உதவி கேட்டு கதறிக்கொண்டிருந்தோம், ஆனால் மீட்பு படையினர் 5 மணி அளவில் தான் வந்து சேர்ந்தனர். என்றனர் விபத்தில் சிக்கிய பயணிகள் வே‌தனையோடு.

நாங்கள் பொறுப்பல்ல மம்தா பேட்டி : சம்பவ இடத்திற்கு வந்த ரயில்வே துறை அமைச்சர் மம்தா கூறுகையில்: இது நக்சல்கள் நடத்திய சதி திட்டம். இந்த சம்பவத்திற்கு ரயில்வே துறை பொறுப்பேற்க முடியாது. பாதுகாப்பு மற்றும் சட்டம் ஒழுங்கு மாநில மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. ஐ.முற்போக்கு கூட்ணியில் அங்கம் வகிப்பதால் உள்துறை குறித்து வெளிப்படையாக விமர்சிக்க முடியவில்லை என்பதே பேட்டியின் உள் குறிப்பு.

இது சதிச்செயலாக இருக்கும் என்கிறார் ப. சி., : இந்த தாக்குதல் சம்பவம் நக்சல்களின் சதிச்செயலாக இருக்கும் என கூறியுள்ளார். இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துகொள்கிறேன். மீட்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. வெடிகுண்டுகள் வெடித்தனவா என்பகு குறித்து ஆய்வு நடத்தப்படுகிறது. இவ்வாறு மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் கூறியுள்ளார்.

மம்தா பேச்சுக்கு எதிர்ப்பு : மம்தாவின் மாநில அரசின் மீது குறை கூறுவது பொறுப்பற்ற செயல் என்று பா.ஜ., மற்றும் இடதுசாரிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனரர். தனது பொறுப்பை தட்டிக்கழிக்கும் விதமாக நடந்து கொள்கிறார். இவரது பேச்சு தவறானது என்றும் ரயில்‌ பாதுகாப்பில் ரயில்வே துறைக்கும் பொறுப்பு உண்டு என எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரயில்வே துறைக்கு ரூ 500 கோடி நஷ்டம்: ரயில்வே துறைகை குறி வைத்து நக்சல்களின் கடந்த ஆண்டு தாக்குதல் மொத்தம் 65 . இதில் மே மாதம் மட்டும் 4 முறை தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. ரயில்வே சொத்துக்கு சேதம் ஏற்படுத்துதல், தண்டவாளம் தகர்ப்பு , ரயில்வே அலுவலகம் சூறை , குண்டு வைத்தல் முக்கிய வேலையாக ‌நக்சல்கள் செய்து வருகின்றனர். இதுவரை ரூ. 500 கோடி ரயில்வே துறைக்கு நஷ்டம் ஏற்பட்டிருப்பதாக ஒரு ஆய்வு அறிக்கை தெரிவிக்கிறது.

source:dinamalar

பின்னூட்டமொன்றை இடுக

Filed under Uncategorized

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s