Daily Archives: மே 25, 2010

”மீண்டும் யுத்தம்! தயாராகும் புலிப்படை” இந்திய – சிறிலங்கா தயாரிப்பில் புதிய திரைப் படம்!

”சிங்கள ராணுவம் எம்மை வேட்டையாட நினைக்கிறது. கடந்த வாரத்தில் ராணுவம் ஒரு படையை காட்டுக்குள் அனுப்பியது. அப்போது நடந்த சண்டையில் ராணுவத்தினர் 15 பேரை நாங்கள் சுட்டுக்கொன்றோம். எங்கள் தரப்பில் 12 பேர் பலியானார்கள். புலிகளின் உயிரிழப்பை மட்டுப்படுத்தி, சிங்கள ராணுவத்தை திணறடிக்கச் செய்யும் திட்டங்களுடன் செயல்பட்டு வருகிறோம்” என்ற காட்சி சிறி லங்காவின் தென் பகுதிக் காடு ஒன்றில் தத்ரூபமாக எடுக்கப்படுகிறது.

காட்சியில் திருப்தி அமைந்த இயக்குனர் பாண்டியன் ‘கட்’ சொல்ல, காமெரா அடுத்த காட்சிக்குத் தயார் படுத்தப்படுகின்றது. ”மீண்டும் யுத்தம்” என்ற இந்திய – சிறி லங்கா கூட்டுத் தயாரிப்பில் உருவாகும் இந்தத் திரைப்படத்தில் கேணல் ராம் அவர்களே நடிக்கிறார் என்பது ஆச்சரியமாக இருந்தது. இந்தத் திரைப்படம் பற்றி, அதன் இயக்குனர் திரு. பாண்டியன் அவர்களைக் கேட்டோம். ”கடந்த ஒன்பது மாத காலமாகவே இந்தத் திரைப்படத்திற்கான கதை வசனத்தை எழுதிவிட்டு, பல தயாரிப்பாளர்களையும் தொடர்பு கொண்டேன்.

யாரும் இப்படி ஒரு றிஸ்க் எடுப்பதை விரும்பவில்லை. அதனால், இந்தத் திரைக் கதையை இலங்கையின் சிங்களத் திரைப்படத் தயாரிப்பாளர் ஒருவருக்கு அனுப்பி வைத்தேன். அவர் மூலமாக சிறிலங்காவின் பாதுகாப்புச் செயலாளர் திரு. கோத்தபாய அவர்களது அறிமுகம் கிடைத்தது. அவர்தான், ”இந்தத் திரைப்படத்தில் கேணல் ராம் அவர்களை ஏன் நடிக்க வைக்கக் கூடாது?” என்று கேட்டதுடன், கேணல் ராம் அவர்களுடன் தொடர்பு கொண்டு அவரது சம்மதத்தையும் பெற்றுத் தந்தார் என்று கூறினார். ”விடுதலைப் புலிகளின் கிழக்கு மாகாணத் தளபதியாக இருந்த கேணல் ராம் அவர்கள் எப்படி இதற்குச் சம்மதித்தார்?” என்று ஆச்சரியத்தோடு அவரிடம் கேட்டோம்.

”அதுதான் நட்பின் மகிமை…. முள்ளிவாய்க்காலில் விடுதலைப் புலிகளது படை அணிகள் நிர்மூலமாக்கப்பட்ட பின்னர், கேணல் ராம் அவர்கள் தனது அணியுடன் சிறிலங்கா படையிடம் சரணடைந்தார். அதன் பின்னர், அவர் தானாகவே வழங்கிய ஏராளமான தகவல்கள் சிறிலங்கா படையினருக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்ததால், அவரை திரு. கோத்தபாய அவர்கள் நேரடியாகச் சென்று சந்தித்துள்ளார். அதனால் ஏற்பட்ட தொடர்பு, நட்பாக மலர்ந்தது. அதுவே, இந்தப் படத்தில் கேணல் ராம் அவர்கள் நடிப்பதற்குச் சம்மதம் தெரிவிக்கக் காரணமாக இருந்தது” என்றார்.

”இந்தக் கதையும் விடுதலைப் புலிகள் பற்றியதா…?” ”ஆம்…, விடுதலைப் புலிகள் பற்றியதுதான். முள்ளிவாய்க்கால் பேரழிவுக்குப் பின்னர்… தப்பிப் பிழைத்த போராளிகள் சிங்கள அரசைப் பழிவாங்கும் நோக்கோடு குழுக்கள், குழுக்களாகப் பிரிந்து சந்தர்ப்பத்திற்காகக் காத்திருக்கிறார்கள். அதனை முறியடிக்க, கேணல் ராம் அவர்கள் தலைமையில் சிங்கள இராணுவத்தால் நன்கு பயிற்றப்பட்ட ஒரு குழுவினர் களம் இறக்கப்பட்டு, அவர்கள் இந்தப் பழிவாங்கும் முயற்சிகளை முறியடிப்பதோடு, புலம் பெயர் தேசங்களில் சிறிலங்காவிற்கு எதிராக உருவாகி வரும் தமிழர் எழுச்சியையும் சிதைத்து முடிவுக்குக் கொண்டு வருகிறார் என்பதே கதை” ”இது தமிழர்களுக்கு எதிரான கதை போல் இருக்கிறதே, இதை அவர்கள் ஏற்பார்களா…? இந்தப் படம் வெற்றி பெறுமா…?” என்று எமது சந்தேகத்தை அவரிடம் முன் வைத்தோம். ”இது ஒரு யதார்த்தமான கதை.

இதைத் தமிழர்கள் ஏற்க மறுத்தாலும், சிங்களவர்கள் மத்தியில் பெரும் ஆதரவு கிடைக்கும். ஒரே நேரத்தில் இந்தப் படம் தமிழ், சிங்களம், இந்தி எனப் பல மொழிகளில் எடுக்கப்படுகின்றது. இந்தப் படத்தில் பெரும்பாலும் தமிழர்களே நடிப்பதால், தமிழிலும் வெற்றி பெறும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை உள்ளது.” என்றார் உற்சாகமாக. ”கதையின் தளம் பற்றிச் சிறிது கூறுங்களேன்…” ”கிழக்கு மாகாணத்தின் ஒரு காட்டில் நிகழ்வதான காட்சி தற்போது எடுத்து முடிக்கப்பட்டுள்ளது. அதில் நானும் தமிழகத்திலிருந்து வந்த பத்திரிகையாளர் பாண்டியனாக நடிக்கின்றேன்.” என்றவர், திரைக் கதையின் சுருக்கம் அடங்கிய கொப்பியை எங்களிடம் நீட்டினார். ”ஈழ மண்ணில் சுதந் திரக் காற்று வீசும் என்ற நம்பிக்கை இன்னமும் அற்றுப் போய்விடவில்லை.

கிழக்கு மாகாணக் காடுகளில் உள்ள மரங்களுடன் சேர்ந்து அந்த நம்பிக்கை உயர்ந்து நிற்கிறது. முள்ளி வாய்க்கால் கொடூரத்தின் ஓராண்டு நிறைவில்இ உலகத் தமிழர்கள் அனைவரும் ஈழத் துயர நினைவுகளில் மூழ்கி யிருக்கும் நிலையில்இ விடுதலை நம்பிக்கை வீழ்ந்துவிடவில்லை” ”2009 மே 17-க்குப் பிறகுஇ ஈழமக்களின் வாழ்வையும் விடு தலைப் போராட்ட நிலவரத்தையும் இலங்கை ராணுவக் கட்டுப்பாட்டை மீறி அறிந்து வந்து சொல்வதற்கான வாய்ப்புகள் இல்லாததால், புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் பரிதவிப்போடு இருந்தார்கள். அந்த வேனையில் பாண்டியன் என்ற பத்திரிகையாளருக்கு, ஐரோப்பிய நாடுகளில் புலிகளின் முக்கிய தளபதியாக விளங்கும் சங்கீதன் மூலமாக ஓர் அழைப்பு வருகின்றது. ஈழ நிலவரத்தை நேரில் அறிந்துவர அவருக்கான ஏற்பாடுகளைச் செய்திருப்பதாகத் தெரிவித்த சங்கீதன், கொழும்புக்குப் பயணம் மேற்கொள்ளும்படி அறிவுறுத்துகிறார்.”

”உரிய அனுமதியுடனும் ஆவணங்களுட னும் இலங்கைத் தலைநகர் கொழும்புக்கு விமானப் பயணம் மேற்கொண்ட பாண்டியன், அதற்கடுத்த சமிக்ஞைக்காக காத்திருக்க வேண்டியதாயிற்று. அதன்பின், திருகோணமலைக்கு வருமாறு அவருக்குத் தகவல் தெரிவிக்கப்படுகிறது. சாலை வழியே திரிகோண மலைக்குப் பயணித்தார் பாண்டியன். வெட்ட வெளியாய் காட்சியளிக்கும் தமிழர் பகுதிகளின் துயரங்கள் கண்ணில்படுகின்றன. சிங்கள ராணுவத்தின் வாகனங்கள் ரோந்து சுற்றிய படியே இருக்கின்றன.”

”விடியற்காலை நேரத்தில் திருகோணமலைக்குச் சென்ற பத்திரிகையாளர் பாண்டியனை அழைத்துச் செல்ல ஒரு வேன் வருகிறது. அந்த வேனில் இருந்தவர்கள் இளைஞர்கள். சிவில் உடையில்தான் இருந்தார்கள். ஆனால், அவர்கள் விடுதலைப்புலிகள். அவரை ஏற்றிக் கொண்ட வேன், கிழக்கு மாகாணத்தில் உள்ள ஒரு சுற்றுலாதலத்திற்குச் செல்கிறது. பக்கத்திலேயே ஒரு ராணுவ முகாம். ஜீப்புகளில் சிங்கள ராணுவத்தினர் சுற்றிச் சுற்றி வருகிறார்கள். வேனில் இருந்த இளைஞர்கள் பதற்றப்பட வில்லை. அந்த சுற்றுலாதலத்திற்கு வந்திருக்கும் மற்ற வாகனங் களுடன் ஒன்றாக விடுதலைப் புலிகளின் வேனும் செல்கிறது. உள்ளே இருந்த இளைஞர்களிடம் வாக்கி-டாக்கி இருக்கிறது. அதன் மூலமாக அவர்களுக்கு கட்டளைகள் வந்தபடியே இருக்க, இவர்களும் பதிலளித்துக் கொண்டே பயணிக்கிறார்கள்.”

”ஒரு குறிப்பிட்ட இடத்தில் வேன் நிற்கிறது. ”அது எந்த இடம் என்று அவருக்குத் தெரியவில்லை. இறங்கியவுடன், ‘வாருங்கோ..’ என்றபடி அவரை அந்த இளைஞர்கள் மலைக்காட்டுக்குள் அழைத்துச் சென்றார்கள். ஆள் நடமாட்டம் இல்லாத காடு. மரங்கள், அடர்த்தியான புதர்கள் என வெளியே இருந்து வருபவர்களுக்கு வழி தெரியாமல் திணறடிக்கும் வகையில் இருந்த மலைக்காட்டில், இளைஞர்கள் வழிநடத்த 4 கி.மீ. தூரத்திற்கு அவரை அழைத்துச் சென்றார்கள். புதிய அனுபவம் என்பதால் அந்தச்சூழலும் நடைப்பயணமும் சற்று சிரமமாகத்தான் இருந்தது.” ”காட்டுக்குள் ஒரு குறிப்பிட்ட இடத்தில் பாண்டியனைக் காத்திருக்கச் சொல்கிறார்கள்.

அந்த இடத்தில் 50 பேருக்கு குறையாத அளவில் தமிழர்களின் படை இருக்கிறது. உலக நாடுகளை வியக்க வைத்த போராளி இயக்கமான விடுதலைப் புலிகளின் உடையுடன் முதன்முதலாக புலிப்படை யினரைப் பார்க்கிறார் பாண்டியன். அவர்களிடம் ஆயுதங்கள் இருக்கின்றன. ஏ.கே.47 துப்பாக்கி, கைத்துப்பாக்கி, கையெறி குண்டுகள், கண்ணி வெடிகள் இந்த ஆயுதங்களுடன் மனத் தைரியம் என்கிற வலிமையான ஆயுதத்தையும் கொண்டவர்களாக அவர்கள் இருக்கிறார்கள்.” ”புலிப்படையில் உள்ள ஒவ்வொருவரின் முதுகிலும் ஒரு பை இருக்கிறது.

அது, அவர்கள் ஓரிடத்திலேயே நிலைகொண்டிருப்பதில்லை என்பதையும் மலைக்காடு முழுவதும் சுற்றி வந்தபடியே இருக்கிறார்கள் என்பதையும் காட்டுகிறது. அவர்களின் உற்சாக-உத்வேக மந்திரம் பிரபாகரன். விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் பெயரைச் சொன்னாலே அவர்களின் நாடிநரம்புகளில் முறுக்கேறுகிறது. காட்டில் அவர்கள் மேற் கொள்ளும் பயிற்சிகளில் பிரபாகரன் பாணியை பார்க்க முடிகிறது. குறைந்த அளவிலான போராளிப் படையை வைத்துக்கொண்டு ஒரு நாட்டின் ராணுவத்தை எதிர்கொண்டு முறியடிப்பது எப்படி என்கிற பயிற்சி களை அவர்கள் மேற் கொள்கிறார்கள். பயிற்சிகள் அனைத்தும் கடுமையான வை. காட்டுக்குள் போதிய வசதிகள் இல்லாத நிலையிலேயே இந்தப் பயிற்சிகள் தொடர்வதை புகைப்படம் எடுக்க அனுமதி கேட்கிறார் பாண்டியன்.

”நீங்க எங்களை மன்னிக்கணும். தற்போதைய சூழ்நிலையில் படம் எடுக்க ஏலாது. எங்கட நிலைமையை நீங்க புரிஞ்சவராய் இருப்பீர்கள் என நினைக்கிறோம்” என மென்மையான மறுப்பு வெளிப்படவே, புகைப்படம் எடுப்பதைத் தவிர்த்துவிடுகிறார் பாண்டியன். ”ரொம்ப நன்றிங்க அய்யா… ஏதேனும் ஒரு படம் வெளியே போய் பிரசுரமாகி, அதன்மூலம் எந்தக் காடு, எத்தனை நபர்கள் என்ற பின்புலம் தெரிந்து போகுமென்டால், மீண்டும் விடுதலைப் போராட்டத்தை வலிமைப்படுத்தும் எங்களின் முயற்சிகள் தோற்றுப்போகும்” என்கிறார்கள் புலிகள்.

”பயிற்சிகளுக்குப் பிறகு, காட்டுப்பகுதியிலேயே சமையல் நடக்கிறது. அதிகம் புகை வராத மரக்கட்டைகளைக் கொண்டு கச்சிதமாக அடுப்பு மூட்டி, உணவு தயாரிக்கிறார்கள். ‘தாய்த் தமிழகத்திலிருந்து வந்திருக்கிற பத்திரிகை சகோதரருக்கு நம்ம ஊரு சொதி செஞ்சு கொடுங்கோ” என்கிறார் ஒரு புலி. ”சகோதரர் கேட்பதை செய்து கொடுப்போம்” என்கிறார் இன்னொரு புலி. போராட்டக்களத்திலும் அவர் களின் விருந்தோம்பல் பண்பு குறையவில்லை. ”எங்கட பண்பும் வீரமும் ஒருநாளும் மறைந்து போகாது” என்கிறார்கள் புலிகள்.” ”அவர்களில் ஒருவர் கைக்கடிகாரத்தைப் பார்க்கிறார்.

பிறகு, தனது வாக்கி-டாக்கியில் யாரிடமோ பேசிவிட்டு, தயாராக இருங்கள் என்கிறார். அங்கிருந்த 50 புலிகளும் பொசிஷன் எடுத்து நிற்கிறார்கள். சிலர் தரையில் படுத்து, தலையை மட்டும் உயர்த்தி, துப்பாக்கியால் குறிபார்த்தபடி பொசிஷன் எடுக்கிறார்கள். சிலர், மலைக்காட்டில் உள்ள உயர்ந்த மரங்களில் ஏறி, அதன் கிளைகளில் படுத்தபடி, குறி பார்க்கிறார்கள். எல்லோரும் எதிர்பார்ப்புடன் இருந்த நேரத்தில், பத்திரிகையாளர் பாண்டியனை நோக்கி வேகமாகவும் கம்பீரமாகவும் வருகிறது அந்த உருவம்.”

”நடுத்தர வயது. நன்றாக ஷேவ் செய்யப்பட்ட முகம். பிரபாகரன் போலவே இடுப்பில் பெல்ட் அணிந் திருக்க, அதில் துப்பாக்கிகள் இருக்கின்றன. பாதுகாப்புக்கு, துப்பாக்கி ஏந்திய புலிகள். பாண்டியனை நெருங்கி வந்து, ”வாருங்கோ… வாருங்கோ.. உங்களைத்தான் எதிர்பார்த்திருந்தேன்” என்று கைகொடுத்த அவர், கேணல் ராம். கிழக்கு மாகாணமான அம்பாறையின் விடுதலைப்புலிகள் தளபதி.”

”புலிகளின் ராஜதந்திர உத்திகளின் படி, நான்காம் ஈழப்போரின் கடைசி கட்டத்தில் கேணல் ராம் தலைமையி லான படை பங்கேற்கவில்லை. கிழக்கு மாகாணத்திற்கு பொறுப்பு வகித்த அவரையும், வடக்கு மாகாணத்தில் உள்ள யாழ் மாவட்டத்திற்குப் பொறுப்பு வகித்த நகுலனையும் தங்கள் படையினருடன் பத்திரமாக இருக்கும்படி உத்தரவிட்டார் பிரபாகரன். தன்னிடமிருந்து கட்டளைகள் வந்தபிறகு களத்திற்கு வரலாம் என்பதுதான் அவரது உத்தரவு.” ”2009-ம் ஆண்டு மார்ச் மாதத்திலேயே 4000 பேருடன் இருவரது படைகளும் காட்டுப் பகுதிகளுக்குள் நுழைந்துவிடுகிறது.

முள்ளிவாய்க்கால் தாக்குதல்களின்போது, தலைமையின் கட்டளைப்படி இவர்கள் காட்டில்தான் இருந்தார்கள். அதனால்தான், இப்போதும் சிங்கள ராணுவத்திற்கு சவாலாக இருக்கிறார்கள்.” ”பாண்டியனுக்கு கைகொடுத்த கேணல் ராம், ”யுத்தத்தின் கடைசி நிமிடம் வரை தலைமை எங்களை அழைக்கவில்லை. காட்டுக்குள் இருந்து போரைத் தொடரவேண்டும் என்பது விருப்பமாக இருக்கும். எங்களுடன் இருந்த 4000 புலிகளுடன், முள்ளி வாய்க்கால் தாக்குதல்களின்போது, வெளியேறி வந்த புலிகளையும் சேர்த்து தற்போது 6000 புலிகளாக பலம் பெற்றிருக்கிறோம். பெண் புலிகளும் இருக்கிறார்கள். சிங்கள ராணுவத்தின் கண்கள் எங்களைத் தேடுகின்றன. நீங்கள் காட்டுக்குள் 4 கி.மீ. சிரமப்பட்டு நடந்து வந்திருப்பீர்கள். நான் 20 கி.மீ. நடந்து வந்து உங்களை சந்திக்கிறேன். இது 100 கி.மீ.க்கு பரந்திருக்கும் மலைக்காடு. இதுதான் எங்களுக்கான பாதுகாப்பு கேடயம் என்கிறார்”

”எங்களிடம் உள்ள தொலைத்தொடர்பு வசதிகள் மூலம் சர்வதேச அளவில் அழைப்புகளைப் பெற முடிகிறது. பல நாட்டு உளவுப்பிரிவினரும் எங்களைத் தொடர்புகொள்ளும் முயற்சியில் இருக்கிறார்கள். எங்களது செயல்பாடுகளை மிகவும் உன்னிப்பாக கண்காணிக்கிறது இலங்கை ராணுவம்.”

”செல்போன், வாக்கி-டாக்கி ஆகியவற்றை ஒட்டுக்கேட்டு நாங்கள் எந்தப் பகுதியில் நடமாடுகிறோம் என்பதை தெரிந்துகொண்டு, தாக்குதல் நடத்த நினைக்கிறார்கள். நாங்கள் இப்போது பாரிய அளவிலான தாக்குதலுக்குத் தயாராக இல்லை. இப்போதைய எங்கள் நோக்கம், புலிகளை ஒருங்கிணைத்து இயக்கத்தை வலிமைப்படுத்துவது, படைபலத்தையும் ஆயுதபலத்தையும் பெருக்குவது. அதன்பின்னர், தலைமை வழியில் செயல்படுவோம்.”

”சிங்கள ராணுவம் எம்மை வேட்டையாட நினைக்கிறது. கடந்த வாரத்தில் ராணுவம் ஒரு படையை காட்டுக்குள் அனுப்பியது. அப்போது நடந்த சண்டையில் ராணுவத்தினர் 15 பேரை நாங்கள் சுட்டுக்கொன்றோம். எங்கள் தரப்பில் 12 பேர் பலியானார்கள். புலிகளின் உயிரிழப்பை மட்டுப்படுத்தி, சிங்கள ராணுவத்தை திணறடிக்கச் செய்யும் திட்டங்களுடன் செயல்பட்டு வருகிறோம்” என்று சொன்ன கேணல் ராமிடம், பத்திரிகையாளர் பாண்டியன் கேள்விகளை முன்வைத்தார். ஈழப்பிரச்சினையின் இன் றைய நிலவரம் குறித்த மிக முக்கியமான அந்த கேள்வி களுக்குப் பதிலளிக்கத் தயாரானார் கேணல் ராம்” என்று கதை தொடர்கிறது.

”இந்தக் கதையில் வரும் காட்சிகள் நம்பக் கூடியதாக இல்லையே…?” ”இது ஆரம்பக் காட்சிகள். இடை வேளைக்குப் பின்னர் காட்சிகள் விறு விறுப்பாக இருக்கும். முதலில், விடுதலைப் புலிகளின் சிதறுண்ட அணிகளை நம்ப வைக்க இப்படியான காட்சிகள் முக்கியம். ரஜனி, விஜயகாந்த், விஜய், அஜித் என நூற்றுக்கணக்கான பயில்வான் போன்றவர்களை ஒத்தை ஆளாக நின்று அடித்துத் துவைக்கும் காட்சிகளை விசிலடித்து ரசிக்கும் எங்கள் மக்கள் இதையும் ரசிப்பார்கள்.

அத்துடன், இந்தப் படத்தைத் தயாரிப்பதற்கான பெரும் நிதியினை சிறிலங்கா அரசும், கணிசமான தொகையை இந்திய அரசும் ஏற்றிருப்பதால், தயாரிப்பாளர்கள் எந்த விதத்திலும் பாதிக்கப்பட மாட்டார்கள்.” என்று நம்பிக்கையோடு கூறிய பாண்டியன், காட்சிகளின் புகைப்படங்களை எம்மிடம் நீட்டினார். ”இது, நக்கீரன் கோபால் சந்தணக் கடத்தல் வீரப்பனைப் பேட்டி கண்ட காட்சிகளை நினைவு படுத்துகிறதே…?” படங்களைப் பார்த்துவிட்டு ஆச்சரியத்தோடு கேட்டோம்

”நக்கீரன் கோபால்தான் இந்தக் கதைக்கான கருவை என்னிடம் கூறினார். அவர் தயாரிப்பாளர்களில் ஒருவராகவும் இருப்பதால், நக்கீரன் சஞ்சிகையில் பல விபரங்களை வெளியிட்டு வருகின்றார். அவரது எண்ணப்படியேதான் இந்தக் காட்சிக்கான இடம், அமைப்பு தெரிவு செய்யப்பட்டது” என்றார் பெருமிதத்துடன்.

”உங்கள் முதல் படத்தையே, இப்படிப் பிரமாண்டமாக எடுக்கிறீர்களே… உங்கள் படம் வெற்றி பெறவும், கேணல் ராம் அவர்கள் சிறந்த நடிகருக்கான விருதைத் தட்டிக் கொள்ளவும் வாழ்த்துக்கள்!” என்று கூறி விடை பெற்றோம்.

சூரிய புத்திரன்.

source:puthinamnews

பின்னூட்டமொன்றை இடுக

Filed under Uncategorized

ஸ்ரீராம் சேனாவின் இந்துத்வா ரேட் அம்பலம ்! BREAKING NEWS!!

கலவரம், வாடகைக்கு

“கலியுகத்துல நாடு கெட்டுப் போச்சே”ன்னு அவாள்கள் அவ்வப்போது சபிப்பது வழக்கம். இந்த கலியுகப் புலம்பலில் மற்ற பிரச்சினைகளை விட இந்துத்தவத்திற்கு மட்டும் டன் கணக்கில் வில்லங்கம் வந்து சேர்கிறது. நித்தியானந்தா பள்ளியறை பலாபலன்களால் நாடே சிரிப்பாய் சிரித்த அதே பெங்களூருவில் இப்போது சீசன் 2வாக சிறிராம் சேனாவின் விவகாரம் நாடு முழுவதும் தொலைக்காட்சிகளில் பல்லிளித்துக் கொண்டிருக்கிறது.

ஜனவரி, 2009 இல் மங்களூரு பஃப்பில் குடித்துக் கொண்டிருந்த பெண்களைத் தாக்கி விரட்டியதில் இந்திய அளவில் ஒரே நாளில் பிரபலமானது சிரிராம் சேனா. அதற்கு முன் சிறுபான்மையினரை எதிர்த்து பல கலவரங்கள் செய்திருந்தாலும் மேட்டுக்குடி சீமாட்டிகளுக்கு ஏற்பட்ட அவமானமே பல தேசிய ஊடகங்களுக்கு கவலையாக இருந்தது. அந்தக் கவலையை சேனாவும் இலவசமான பிரபலமாக நன்கு அறுவடை செய்துகொண்டது. இப்போது இதன் தலைவர் பிரமோத் முத்தாலிக் காசு வாங்கிக் கொண்டு கலவரம் செய்வதாக ஒரு கேமராவில் ஒப்புக் கொண்டிருக்கிறார். தெகல்கா – ஹெட்லைன்ஸ் டுடே இணைந்து நடத்திய ஸ்டிங் ஆப்பரேஷனில் இந்த வானரங்கள் வகையாய் சிக்கியிருக்கின்றன.

இந்த நடவடிக்கையின் படி ஒரு நிருபர் டம்மி ஆர்ட்டிஸ்ட்டாக அதாவது ஓவியனாக நடித்து முத்தாலிக்கை அணுகியிருக்கிறார். அதன்படி அவரது ஓவியக் கண்காட்சியை முத்தாலிக்கின் ராமசேனா வானரங்கள் அடித்து கலவரம் செய்தால் பிரபலமாகிவிடலாமென்றும், அதற்கு எவ்வளவு பணம் தரவேண்டுமென்பதே டீல். இதற்காக முத்தாலிக்கை மட்டுமல்ல அவரது இயக்கத்தின் மற்ற தலைவர்களையும் அந்த நிருபர் பார்த்திருக்கிறார். அவர்களும் அந்த கண்காட்சி முசுலீம்கள் இருக்கம் பகுதியில் இருந்தால் பிரச்சினையை பெரிதாக கொண்டு செல்லலாமென்று வழிகாட்டியிருக்கிறார்கள்.

உரையாடலிலிருந்து சில பகுதிகள்:

நிருபர்: நான் பிரபலமானால் எனது வியாபாரம் வளர்வதற்கு உதவியாக இருக்கும். இதைச் செய்வதற்கு உங்களுக்கு எவ்வளவு ஆட்கள் தேவைப்படுவார்கள், எனக்கு எவ்வளவு செலவாகும் என்று சொல்லுங்கள். இந்த கலவரத்திற்காக நான் போலீசில் புகார் கொடுக்கமாட்டேன், இது நமக்குள்ளே மட்டும் நடக்கும் விசயம். முன்பணமாக எவ்வளவு தரவேண்டுமென்று சொல்லுங்கள், கொடுத்துவிடலாம்.

(இந்த வேலையைச் செய்வதற்கு தயாரான முத்தாலிக் அதற்கான ஏற்பாடுகளை பெங்களூருவிலேயே செய்துவிடலாமென்று சம்மதிக்கிறார்.)

நிருபர்: ஐயா, இதை நான் உறுதி செய்து கொள்ளவேண்டும். உடனடியாக இல்லையென்றாலும் சில நாட்கள் கழித்துக் கூட நான் வருகிறேன். இதற்கு மொத்தமாக எவ்வளவு செலவு பிடிக்குமென்று தெரிந்தால் நான் அதற்கு ஏற்பாடு செய்து விடுவேன்.

முத்தாலிக்: நான் என்ன சொல்ல வருகிறேன் என்றால் எங்களது கிளைத் தலைவர்…..

நிருபர்: பெங்களூருவில்…?

முத்தாலிக்: ஆமாம், பெங்களூருவில்தான். அவர், வசந்த் குமார் பவானி, பலமான கை. அவரோடு அறிமுகமாகியிருக்கிறீர்களா?

(இறுதியில் முத்தாலிக் கலவரத்தை நடத்துவதற்கு ஒப்புதல் தந்த உடன் மிச்சிமிருந்த ஒரே வேலை தொகையை நிர்ணயம் செய்வதுதான். அதற்கு முத்தாலிக் தனது தளபதிகளான பிரசாத் அட்டாவர் (சேனாவின் தேசிய துணைத் தலைவர்), மற்றும் வசந்த் குமார் பவானி (சேனாவின் பெங்களூரு தலைவர்) இருவரையும் சந்திக்க சொல்கிறார். இதில் அட்டாவர் என்பவனை சிறையில் சந்திக்கிறார் நிருபர்.)

நிருபர்: நாங்கள் பதினைந்து இலட்சமாக கொடுத்து விடுகிறோம்.

அட்டாவர்: ஆமாம் ஆமாம்? இருந்தாலும் நான் அதை கணக்கட்டு சொல்கிறேன்.

(நிருபர்கள் அட்டாவரை மங்களூர் சிறையில் இருமுறையும், பெல்லாரி சிறையில் ஒரு முறையும் சந்தித்து பேசுகிறார்கள். அட்டாவரும் மங்களூர் பஃப்பில் நடத்தப்பட்ட தாக்குதலைப் போல செய்துவிடலாமென்று உறுதி கூறுகிறார்.)

அட்டாவர்: எவ்வளவு பணம் வேண்டுமென்று சொல்வேன்.

நிருபர்: கலவரத்திற்கு எத்தனை நபர்களை கொண்டுவருவீர்கள்?

அட்டாவர்: ஐம்பது.

நிருபர்: ஆக கலவரம் செய்ய ஐம்பது பேர் வருவார்கள்?

அட்டாவர்: நிச்சயமாக. மங்களூர் பஃப்பில் நடந்த மாதிரிதான்.

(ஆனால் கலவரத்தை எப்படி பக்காவாக நடத்த வேண்டுமென்று சொன்னவர் சேனாவின் பெங்களூரு தலைவர் பவானிதான். அவரது உரையாடலைப் பாருங்கள்.)

பவானி: கண்காட்சியைத் திறப்பதற்கு மும்தாஸ் அலியைக் கூப்பிட முடியுமா?

நிருபர்: யார் அது?

பவானி: அவர்தான் கர்நாட வக்ப் போர்டு உறுப்பினர்.

(விசயம் இப்படி நல்லபடியாக போய்க் கொண்டிருந்தாலும் முத்தாலிக் தனது இமேஜூக்கு பிரச்சினை வரக்கூடாது என்பதில் குறியாய் இருந்தார்.)

முத்தாலிக்: இதில் நான் நேரடியாக சம்பந்தப்பட முடியாது. இந்துத்துவ விழுமியங்களின் ஆதரவாளனென்று சமூகத்தில் எனக்கு ஒரு இமேஜ் இருக்கிறது.

நிருபர்: ஆனால் ஐயா, இது யாருக்கும் தெரியாது.

முத்தாலிக்: எல்லாம் சரிதான். ஆனால் எனது மனசாட்சி நான் ஏதோ தவறு செய்கிறேனோ என்று எச்சரிக்கிறது.

நிருபர்: எம்.எப். ஹூசைன் மற்றும் மற்றவர்களது கண்காட்சியில் என்ன செய்தீர்களோ அது போல.

முத்தாலிக்: ஆமா ஆமாம்.

நிருபர்: அதே மாதிரி என் கண்காட்சியிலும் நடக்க வேண்டும். அது பெங்களூருவின் சிவாஜி நகரிலோ, மங்களூருவிலோ இல்லை முசுலீம்கள் இருக்கும் எப்பகுதியிலும் இருக்கலாம்.

முத்தாலிக்: என்ன மாதிரியான உதவியை எதிர்பார்க்கிறார்கள்? அது மங்களூர், பெங்களூரு இரண்டிலும் செய்ய முடியும்.

நிருபர்: அறுபது இலட்சம் போதுமா?

முத்தாலிக்: இதை யார் உங்களுக்கு சொன்னார்கள்?

நிருபர்: வசந்த்ஜியுடன் பேசியிருக்கிறோம்.

முத்தாலிக்: பணத்தை நான் உறுதி செய்ய முடியாது. அது அவர்களின் (சேனாவின் மற்ற தலைவர்கள்) வேலை, அவர்கள் பார்த்துக் கொள்வார்கள்.

மேற்கண்ட உரையாடலிலிருந்து ராம சேனாவின் தலைவர் முத்தாலிக்கும் அவரது சகபாடிகளும் கூலிக்கு கலவரம் செய்பவர்கள் என்பதை யாரும் மறுக்க முடியாது. இனி பிரமோத் முத்தாலிக்கின் ஜாதகத்தைப் பார்க்கலாம்.

பின்னூட்டமொன்றை இடுக

Filed under Uncategorized

இவைகள் அல்லாஹ்வின் குணங்களா? இல்லையா? பீஜ ே கூறவேண்டும்

பீஜே அவர்களுக்கு பதில்

"இயேசு இறைமகனா?" புத்தகத்திற்கு மறுப்பு

இவைகள் அல்லாஹ்வின் குணங்களா? இல்லையா? பீஜே கூறவேண்டும்

முன்னுரை: பீஜே அவர்கள் "இயேசு இறைமகனா?" என்ற புத்தகத்தை எழுதி அதில் இயேசுவின் தெய்வீகத்தன்மையை மறுப்பதற்கு அனேக விவரங்களை கூறியுள்ளார். அவருக்கு நாம் கடைசியாக அளித்த மறுப்பை இங்கு படிக்கலாம்: இயேசு "மனிதன்" என நிருபிக்க நினைத்து "இறைவன்" என நிருபித்த பீஜே.

பீஜே அவர்கள் பைபிளின் துணைக்கொண்டு, இயேசுவின் தெய்வீகத்தன்மையை மறுக்க முயற்சி எடுத்துள்ளார், ஆனால், இது சாத்தியமில்லாத ஒன்று என்பதை மேலே உள்ள கட்டுரையை மட்டும் படித்தாலே போதும் புரிந்துக்கொள்ளலாம். இதன் தொடர்ச்சியாக இந்த கட்டுரை அவருடைய புத்தகத்திற்கு மறுப்பாக முன்வைக்கப்படுகின்றது.

கீழே சில கேள்விகள் (36) தரப்பட்டுள்ளது, இக்கேள்விகளுக்கு பதிலை தரும் படி ஒரு இஸ்லாமியரை கேட்டால், அவர் பெரும்பான்மையான கேள்விகளுக்கு "இறைவன்" என்பது தான் பதில் என கூறுவார். பீஜே அவர்களை கேட்டாலும் கீழ் கண்ட அனேக கேள்விகளுக்கு அவர் "இறைவன் (அ) அல்லாஹ்" என்று கூறுவார் (இல்லை, நான் அப்படி கூறமாட்டேன் என்று பீஜே அவர்கள் சொல்வார்களானால், ஏன் என்று விளக்கட்டும், கீழ்கண்ட குணங்களில் ஒன்று கூட அல்லாஹ்விற்கு பொருந்தாது என்று விளக்கட்டும்).

நாம் அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய‌ கேள்விகளும் ப‌தில்க‌ளும்

1. யாருடைய‌ பெய‌ரில் ம‌க்கள் அனைவ‌ரும் தொழுதுக்கொள்ள‌ கூடி வ‌ருகிறார்க‌ள்? இறைவ‌னின் பெய‌ரில்
2. தொழுதுகொள்ள கூடி வரும் போது யாருடைய பிரசன்னம் அங்கு இருக்கும்? இறைவனின்
3. தூதர்களை அனுப்புவது யார்? இறைவன்
4. தெரிந்தெடுக்கப்பட்டவர்கள் யாருக்கு சொந்தம்? இறைவனுக்கு
5. இறைவனை பின்பற்றினவர்களோடு முடிவில்லாமல் யாருடைய பிரசன்னம் இருக்கும்? இறைவனின்
6. சொர்க்கத்தில் இருப்பவர் யார்? அங்கிலிருந்து வருபவரும் யார்? இறைவன்
7. சொர்க்கத்தில் இருப்பவர் யார்? இறைவன்
8. நித்திய வாழ்வு வேண்டுமானால், நாம் யாரிடம் நம்பிக்கை வைக்கவேண்டும்? இறைவனிடம்
9. யார் மூலமாக இரட்சிப்பு கிடைக்கிறது? இறைவன் மூலமாக‌
10. நம்முடைய ஆன்மீக பசியையும் தாகத்தையும் தீர்ப்பவர் யார்? இறைவன்
11. கடைசி நாளில் யார் மனிதர்களை உயிரோடு எழுப்புவார்கள்? இறைவன்
12. நித்திய வாழ்வின் ஏக்கத்தை (பசியை) தீர்ப்பவர் யார்? இறைவன்
13. யாருடைய வார்த்தைகள் அழிவதில்லை? இறைவனின்
14. நித்திய வாழ்வை தருபவர் யார்? இறைவன்
15. நித்திய வாழ்வு யார்? இறைவன்
16. நாம் அவரது பணிக்காக‌ நம்முடைய வாழ்வை இழந்தால், யார் நமக்கு வாழ்வு தருபவர்? இறைவன்
17. நாம் உயர்ந்த அன்பை யாரிடம் காட்டவேண்டும்? இறைவனிடம்
18. யாரிடம் நித்திய ஜீவ நீரூற்றுக்கள் (ஆன்மா) உண்டு? இறைவனிடம்
19. உலகத்தில் ஒளி யார்? இறைவன்
20. பாவங்களிலிருந்து மக்களுக்கு விடுதலை தருபவர் யார்? இறைவன்
21. பாவங்களை மன்னிக்க யாருக்கு அதிகாரம் உண்டு? இறைவனுக்கு
22. நித்திய நித்தியமாக வாழ்பவர் யார்? இறைவன்
23. உயிர்த்தெழுதலும் வாழ்வுமாக இருப்பவர் யார்? இறைவன்
24. ஆண்டவர் யார்? இறைவன்
25. நம்பிக்கையாளர்களுக்கு சொர்க்கத்தில் யார் இடத்தை ஆயத்தப்படுத்துபவர்? இறைவன்
26. யார் ம‌க்க‌ளுக்கு வ‌ழியாக‌ இருக்கிறார்? இறைவ‌ன்
27. யார் உண்மையாக‌ இருக்கிறார்? இறைவ‌ன்
28. ந‌ல்ல‌ க‌னிக‌ளை கொடுக்க (நல்ல செயல்கள் செய்ய) ம‌க்களுக்கு சக்தியை கொடுப்பவர் யார்? இறைவன்
29. யாருடைய‌ துணையில்லாம‌ல் உங்களால் ஒன்றும் செய்யமுடியாது? இறைவனின்
30. மரணம் மற்றும் பாதாளத்தின் திறவுகோல்களை (சாவியை) கொண்டுள்ளவர் யார்? இறைவன்
31. மக்களின் உள்ளங்களையும் நினைவுகளையும் அறிந்துள்ளவர் யார்? இறைவன்
32. மக்கள் செயல்களுக்கு ஏற்றபடி பலனை தருபவர் யார்? இறைவன்
33. மக்களை நியாயம் தீர்க்க வானத்தில் வரப்போகிறவர் யார்? இறைவன்
34. ஓய்வு நாளின் ஆண்ட‌வ‌ர் யார்? இறைவ‌ன்
35. உலகம் அனைத்தையும் புதிதாக்கி தம்முடைய மகிமையுள்ள சிங்காசனத்தில் உட்காருபவர் யார்? இறைவன்
36. தேசங்களை (அனைத்து மக்களை) நியாயம் தீர்க்கப்போகிறவர் யார்? இறைவன்

மேலே சொல்லப்பட்ட விவரங்கள் அனைத்தும் இறைவன் என்பதற்கான குணங்கள் அல்லது இறைவனுக்கு இருக்கவேண்டிய குணங்கள் என்று ஒப்புக்கொள்கிறீர்களா? மொத்தமாக இல்லையானாலும் மேலே சொல்லப்பட்டவைகளில் பெரும்பான்மையான குணங்கள் இறைவனுக்கு இருக்கவேண்டியது என்பதை ஒப்புக்கொள்கிறீர்களா?

ஆம், ஒப்புக்கொள்கிறோம் என்றுச் சொல்பவர்கள், கீழ்கண்ட‌ வசனங்கள் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

முக்கியமாக "இயேசு இறைமகனா?" என்ற புத்தகத்தை எழுதிய பீஜே அவர்கள் கீழ் கண்ட வசனங்களுக்கு என்ன பதில் சொல்லப்போகிறார்கள்? ஆம், இவைகள் ஒரு இறைவனின் குணங்கள் தான் என்றுச் சொல்வாரா அல்லது மேலே சொல்லப்பட்ட குணங்கள் ஒன்றும் இறைவனுக்கு (அல்லாஹ்விற்கு) இல்லை என்று ஒப்புக்கொள்ளப்போகிறாரா? இவைகள் எல்லாம் தன்னுடைய குணங்கள் என்று இயேசு கூறியுள்ளார், பீஜே அவர்கள் நிதானமாக இவைகளை படிக்கும் படி கேட்டுக்கொள்கிறேன்.

1. யாருடைய‌ பெய‌ரில் ம‌க்கள் அனைவ‌ரும் தொழுதுக்கொள்ள‌ கூடி வ‌ருகிறார்க‌ள்? ……..இயேசுவின் பெய‌ரில்

இயேசு கூறினார்: "இரண்டுபேராவது மூன்றுபேராவது என் நாமத்தினாலே எங்கே கூடியிருக்கிறார்களோ,…" மத்தேயு 18:20

2. தொழுதுகொள்ள கூடி வரும் போது யாருடைய பிரசன்னம் அங்கு இருக்கும்? ……..இயேசுவின்

இயேசு கூறினார்: "இரண்டுபேராவது மூன்றுபேராவது என் நாமத்தினாலே எங்கே கூடியிருக்கிறார்களோ,…" அங்கே அவர்கள் நடுவிலே இருக்கிறேன் என்றார்." மத்தேயு 18:20

3. தூதர்களை அனுப்புவது யார்? ……… இயேசு

இயேசு கூறினார்: மனுஷகுமாரன் தம்முடைய தூதர்களை அனுப்புவார்; … மத்தேயு 13:41

இயேசு கூறினார்: அப்பொழுது, மனுஷகுமாரனுடைய அடையாளம் வானத்தில் காணப்படும். அப்பொழுது, மனுஷகுமாரன் வல்லமையோடும் மிகுந்த மகிமையோடும் வானத்தின் மேகங்கள்மேல் வருகிறதைப் பூமியிலுள்ள சகல கோத்திரத்தாரும் கண்டு புலம்புவார்கள். வலுவாய்த் தொனிக்கும் எக்காள சத்தத்தோடே அவர் தமது தூதர்களை அனுப்புவார்… மத்தேயு 24:30 ,31

4. தெரிந்தெடுக்கப்பட்டவர்கள் யாருக்கு சொந்தம்? ………இயேசுவிற்கு

இயேசு கூறினார்: வலுவாய்த் தொனிக்கும் எக்காள சத்தத்தோடே அவர் தமது தூதர்களை அனுப்புவார்; அவர்கள் அவரால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களை வானத்தின் ஒரு முனை முதற்கொண்டு மறுமுனைமட்டும் நாலு திசைகளிலுமிருந்து கூட்டிச் சேர்ப்பார்கள். மத்தேயு 24:31

5. இறைவனை பின்பற்றினவர்களோடு முடிவில்லாமல் யாருடைய பிரசன்னம் இருக்கும்? …….இயேசுவின்

இயேசு கூறினார்: … இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன்… மத்தேயு 28:20

6. சொர்க்கத்தில் இருப்பவர் யார், அங்கிலிருந்து வருபவரும் யார்? ……..இயேசு

இயேசு கூறினார்: பரலோகத்திலிருந்திறங்கினவரும் பரலோகத்திலிருக்கிறவருமான மனுஷகுமாரனேயல்லாமல் பரலோகத்துக்கு ஏறினவன் ஒருவனுமில்லை. யோவான் 3:13

7. சொர்க்கத்தில் இருப்பவர் யார்? ……..இயேசு

இயேசு கூறினார்: நானே வானத்திலிருந்திறங்கின ஜீவ அப்பம்; …. யோவான் 6:51

இயேசு கூறினார்: நீங்கள் தாழ்விலிருந்துண்டானவர்கள், நான் உயர்விலிருந்துண்டானவன்; நீங்கள் இந்த உலகத்திலிருந்துண்டானவர்கள், நான் இந்த உலகத்திலிருந்துண்டானவனல்ல. : யோவான் 8:23

இயேசு கூறினார்: நான் பிதாவினிடத்திலிருந்து புறப்பட்டு உலகத்திலே வந்தேன்; மறுபடியும் உலகத்தைவிட்டுப் பிதாவினிடத்திற்குப் போகிறேன். யோவான் 16:28

8. நித்திய வாழ்வு வேண்டுமானால், நாம் யாரிடம் நம்பிக்கை வைக்கவேண்டும்? ……. இயேசுவிடம்

இயேசு கூறினார்: …மனுஷகுமாரனும், தன்னை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, உயர்த்தப்படவேண்டும். யோவான் 3:14,15

இயேசு கூறினார்: நான் அவைகளுக்கு நித்தியஜீவனைக் கொடுக்கிறேன்; அவைகள் ஒருக்காலும் கெட்டுப்போவதில்லை,….. யோவான் 10:28

9. யார் மூலமாக இரட்சிப்பு கிடைக்கிறது? ……….இயேசு மூலமாக‌

இயேசு கூறினார்: நானே வாசல், என் வழியாய் ஒருவன் உட்பிரவேசித்தால், அவன் இரட்சிக்கப்படுவான், … யோவான் 10:9

10. நம்முடைய ஆன்மீக பசியையும் தாகத்தையும் தீர்ப்பவர் யார்? ……. இயேசு

இயேசு கூறினார்: இயேசு அவர்களை நோக்கி: ஜீவ அப்பம் நானே, என்னிடத்தில் வருகிறவன் ஒருக்காலும் பசியடையான், என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் ஒருக்காலும் தாகமடையான். யோவான் 6:35

11. கடைசி நாளில் யார் மனிதர்களை உயிரோடு எழுப்புவார்கள்? …….. இயேசு

இயேசு கூறினார்: குமாரனைக் கண்டு, அவரிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் எவனோ, அவன் நித்தியஜீவனை அடைவதும், … கடைசிநாளில் நான் அவனை எழுப்புவேன். யோவான் 6:40-44

12. நித்திய வாழ்வின் ஏக்கத்தை (பசியை) தீர்ப்பவர் யார்? ………. இயேசு

இயேசு கூறினார்: ஜீவ அப்பம் நானே. யோவான் 6:48

13. யாருடைய வார்த்தைகள் அழிவதில்லை ? ……. இயேசுவின்

இயேசு கூறினார்: வானமும் பூமியும் ஒழிந்துபோம், என் வார்த்தைகளோ ஒழிந்துபோவதில்லை. மத்தேயு 13:31

14. நித்திய வாழ்வை தருபவர் யார் ? ……. இயேசு

இயேசு கூறினார்: என்னைப் புசிக்கிறவனும் என்னாலே பிழைப்பான். யோவான் 6:57

இயேசு கூறினார்: ஒருவன் என் வார்த்தையைக் கைக்கொண்டால், அவன் என்றென்றைக்கும் மரணத்தைக் காண்பதில்லை என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். யோவான் 8:51

15. நித்திய ஜீவன் யார்? …….. இயேசு

இயேசு கூறினார்: நானே … ஜீவனுமாயிருக்கிறேன்; யோவான் 14:6

16. நாம் அவரது பணிக்காக‌ நம்முடைய வாழ்வை இழந்தால், யார் நமக்கு வாழ்வு தருபவர்? ……. இயேசு

இயேசு கூறினார்: என்னிமித்தம் தன் ஜீவனை இழந்துபோகிறவன் அதைக் காப்பான். மத்தேயு 10:39

17. நாம் உயர்ந்த அன்பை யாரிடம் காட்டவேண்டும்? ………. இயேசுவிடம்

இயேசு கூறினார்: தகப்பனையாவது தாயையாவது என்னிலும் அதிகமாய் நேசிக்கிறவன் எனக்குப் பாத்திரன் அல்ல; மகனையாவது மகளையாவது என்னிலும் அதிகமாய் நேசிக்கிறவன் எனக்குப் பாத்திரன் அல்ல. மத்தேயு 10:37

18. யாரிடம் நித்திய ஜீவ நீரூற்றுக்கள் (ஆன்மா) உண்டு? ……….. இயேசுவிடம்

இயேசு கூறினார்: வேதவாக்கியம் சொல்லுகிறபடி என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் எவனோ, அவன் உள்ளத்திலிருந்து ஜீவத்தண்ணீருள்ள நதிகள் ஓடும் யோவான் 7:38

19. உலகத்தில் ஒளி யார்? ………. இயேசு

இயேசு கூறினார்: நான் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன். யோவான் 9:5 , 8:12

20. பாவங்களிலிருந்து மக்களுக்கு விடுதலை தருபவர் யார்? ………. இயேசு

இயேசு கூறினார் : பாவஞ்செய்கிறவன் எவனும் பாவத்துக்கு அடிமையாயிருக்கிறான் … ஆகையால் குமாரன் உங்களை விடுதலையாக்கினால் மெய்யாகவே விடுதலையாவீர்கள். யோவான் 8:34, 36

21. பாவங்களை மன்னிக்க யாருக்கு அதிகாரம் உண்டு? ……….. இயேசுவிற்கு

இயேசு கூறினார்: பூமியிலே பாவங்களை மன்னிக்க மனுஷகுமாரனுக்கு அதிகாரம் உண்டென்பதை நீங்கள் அறியவேண்டும். மத்தேயு 9:6

22. நித்திய நித்தியமாக வாழ்பவர் யார்? ………. இயேசு

இயேசு கூறினார்: ஆபிரகாம் உண்டாகிறதற்கு முன்னமே நான் இருக்கிறேன் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். யோவான் 8:58

23. உயிர்த்தெழுதலும் வாழ்வுமாக இருப்பவர் யார்? ……….. இயேசு

இயேசு கூறினார்: நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்; யோவான் 11:25

24. ஆண்டவர் யார்? ………. இயேசு

இயேசு கூறினார்: நீங்கள் என்னைப் போதகரென்றும், ஆண்டவரென்றும் சொல்லுகிறீர்கள், நீங்கள் சொல்லுகிறது சரியே, நான் அவர்தான். யோவான் 13:13

25. நம்பிக்கையாளர்களுக்கு சொர்க்கத்தில் யார் இடத்தை ஆயத்தப்படுத்துபவர்? ……… இயேசு

இயேசு கூறினார்: …ஒரு ஸ்தலத்தை உங்களுக்காக ஆயத்தம்பண்ணப்போகிறேன். யோவான் 14:2

26. யார் ம‌க்க‌ளுக்கு வ‌ழியாக‌ இருக்கிறார்? ………. இயேசு

இயேசு கூறினார்: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன். யோவான் 14:6

27. யார் உண்மையாக‌ இருக்கிறார்? ………. இயேசு

இயேசு கூறினார்: நானே … சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன். யோவான் 14:6

28. ந‌ல்ல‌ க‌னிக‌ளை கொடுக்க (நல்ல செயல்கள் செய்ய) ம‌க்களுக்கு சக்தியை கொடுப்பவர் யார்? ……… இயேசு

இயேசு கூறினார்: நான் மெய்யான திராட்சச்செடி, …. என்னில் நிலைத்திருங்கள், நானும் உங்களில் நிலைத்திருப்பேன்; கொடியானது திராட்சச்செடியில் நிலைத்திராவிட்டால் அது தானாய்க் கனிகொடுக்க மாட்டாதது போல, நீங்களும் என்னில் நிலைத்திராவிட்டால், கனிகொடுக்கமாட்டீர்கள். யோவான் 15:1-4

29. யாருடைய‌ துணையில்லாம‌ல் உங்களால் ஒன்றும் செய்யமுடியாது? ……… இயேசுவின்

இயேசு கூறினார்: … என்னையல்லாமல் உங்களால் ஒன்றும் செய்யக்கூடாது. யோவான் 15:5

30. மரணம் மற்றும் பாதாளத்தின் திறவுகோல்களை (சாவியை) கொண்டுள்ளவர் யார்? ……… இயேசு

இயேசு கூறினார்: நான் முந்தினவரும் பிந்தினவரும், உயிருள்ளவருமாயிருக்கிறேன்; மரித்தேன், ஆனாலும், இதோ, சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறேன், ஆமென்; நான் மரணத்திற்கும் பாதாளத்திற்குமுரிய திறவுகோல்களை உடையவராயிருக்கிறேன். வெளி 1:17, 18

31. யார் மக்களின் உள்ளங்களையும் நினைவுகளையும் அறிந்துள்ளவர்? ………. இயேசு

இயேசு கூறினார்: …. நானே உள்ளிந்திரியங்களையும் இருதயங்களையும் ஆராய்கிறவரென்று எல்லாச் சபைகளும் அறிந்துகொள்ளும்….. வெளி 2:23

32. மக்கள் செயல்களுக்கு ஏற்றபடி பலனை தருபவர் யார்? ……… இயேசு

இயேசு கூறினார்: …… அன்றியும் உங்களில் ஒவ்வொருவனுக்கும் உங்கள் கிரியைகளின்படியே பலனளிப்பேன். வெளி 2:23

33. மக்களை நியாயம் தீர்க்க வானத்தில் வரப்போகிறவர் யார்? ……… இயேசு

இயேசு கூறினார்: …. அப்பொழுது, பிரதான ஆசாரியன் அவரை நோக்கி: நீ தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்துதானா? அதை எங்களுக்குச் சொல்லும்படி ஜீவனுள்ள தேவன்பேரில் உன்னை ஆணையிட்டுக் கேட்கிறேன் என்றான். அதற்கு இயேசு: நீர் சொன்னபடிதான்; அன்றியும், மனுஷகுமாரன் சர்வவல்லவருடைய வலதுபாரிசத்தில் வீற்றிருப்பதையும் வானத்தின் மேகங்கள்மேல் வருவதையும் இதுமுதல் காண்பீர்களென்று, உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். மத்தேயு 26:63,64

34. ஓய்வு நாளின் ஆண்ட‌வ‌ர் யார்? ……..இயேசு

இயேசு கூறினார்: மனுஷகுமாரன் ஓய்வுநாளுக்கும் ஆண்டவராய் இருக்கிறார். மத்தேயு 12:8

35. உலகம் அனைத்தையும் புதிதாக்கி தம்முடைய மகிமையுள்ள சிங்காசனத்தில் உட்காருபவர் யார்? ……… இயேசு

இயேசு கூறினார்: மறுஜென்மகாலத்திலே மனுஷகுமாரன் தம்முடைய மகிமையுள்ள சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கும்போது …. மத்தேயு 19:28

36. தேசங்களை (அனைத்து மக்களை) நியாயம் தீர்க்கப்போகிறவர் யார்? ………. இயேசு

இயேசு கூறினார்: அன்றியும் மனுஷகுமாரன் தமது மகிமைபொருந்தினவராய்ச் சகல பரிசுத்த தூதரோடுங்கூட வரும்போது, தமது மகிமையுள்ள சிங்காசனத்தின்மேல் வீற்றிருப்பார். அப்பொழுது, சகல ஜனங்களும் அவருக்கு முன்பாகச் சேர்க்கப்படுவார்கள். மேய்ப்பனானவன் செம்மறியாடுகளையும் வெள்ளாடுகளையும் வெவ்வேறாகப் பிரிக்கிறதுபோல அவர்களை அவர் பிரித்து, மத்தேயு 25:31,32

இயேசு கூறினார்: ஆகையால் இனிச் சம்பவிக்கப்போகிற இவைகளுக்கெல்லாம் நீங்கள் தப்பி, மனுஷகுமாரனுக்கு முன்பாக நிற்கப் பாத்திரவான்களாக எண்ணப்படுவதற்கு, எப்பொழுதும் ஜெபம்பண்ணி விழித்திருங்கள் என்றார். லூக்கா 21:36

இயேசு கூறினார்: அன்றியும் பிதாவைக் கனம்பண்ணுகிறதுபோல எல்லாரும் குமாரனையும் கனம்பண்ணும்படிக்கு, பிதாவானவர் தாமே ஒருவருக்கும் நியாயத்தீர்ப்புச் செய்யாமல், நியாயத்தீர்ப்புச் செய்யும் அதிகாரம் முழுவதையும் குமாரனுக்கு ஒப்புக்கொடுத்திருக்கிறார். குமாரனைக் கனம்பண்ணாதவன் அவரை அனுப்பின பிதாவையும் கனம் பண்ணாதவனாயிருக்கிறான். யோவான் 5:22,23

இயேசு கூறினார்: நானும் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம். யோவான் 10:30

பிலிப்பு அவரை நோக்கி: ஆண்டவரே, பிதாவை எங்களுக்குக் காண்பியும், அது எங்களுக்குப் போதும் என்றான். அதற்கு இயேசு: பிலிப்புவே, இவ்வளவுகாலம் நான் உங்களுடனேகூட இருந்தும் நீ என்னை அறியவில்லையா? என்னைக் கண்டவன் பிதாவைக் கண்டான்; அப்படியிருக்க, பிதாவை எங்களுக்குக் காண்பியும் என்று நீ எப்படிச் சொல்லுகிறாய்? யோவான் 14:8 ,9

மனித வடிவில் வந்த இறைவன் தான் இயேசு என்று ஏன் கிறிஸ்தவர்கள் கூறுகிறார்கள்? இந்த கோட்பாட்டை கிறிஸ்தவர்கள் புதிதாக கண்டுபிடிக்கவில்லை. இயேசு தானே இறைவன் என்பதை பலமுறை சொல்லியுள்ளார்.

கிறிஸ்தவர்கள் இயேசு மொழிந்த வார்த்தைகளை நம்பி ஏற்றுக்கொள்கின்றனர். யார் யாரெல்லாம் இதனை நிராகரிக்கின்றார்களோ, அவர்கள் இயேசுவையும் அவர் சொன்னைதையும் நிராகரிக்கிறார்கள் என்று அர்த்தம்.

தொகுத்தவர் டெர்ரெல் ஸ்மித் – ஆங்கில மூலம்: What about God?


5/24/2010 11:25:00 AM அன்று ஈஸா குர்-ஆன் – Isa Koran இல் Isa Koran ஆல் இடுகையிடப்பட்டது

பின்னூட்டமொன்றை இடுக

Filed under Uncategorized