Daily Archives: மே 24, 2010

உலகின் முதல் விளம்பரம்!

white_spacer.jpg

p102a.jpg

p102b.jpgப்போது, எப்படி ஆரம்பித்தன விளம்பரங்கள்?

‘மனிதன் தனக்குத் தேவையானதை மட்டும் உற்பத்தி செய்தபோது விளம் பரம் தேவைப்படவில்லை. தேவைக்கு அதிகமாக உற்பத்தி செய்துதபோதுதான் விளம்பரம் பிறந்தது’ என்கின்றனர் ஆய்வாளர்கள். முதன்முதலில் பாபிரஸ் இலைகள் மூலம் சுவரில் எழுதி விற்ப னையை மக்களிடம் விளம்பரப்படுத் தியவர்கள் எகிப்தியர் கள். பின்னர், வீடுகளுக்கு முன்சென்று கூவுவது, முச்சந்தியில் நின்று கத்துவது என்று விளம்பரம் படிப்படியாக வளர்ந்தது.

அப்போது படித்தவர் களின் எண்ணிக்கை சொற்பமாக இருந்ததால் வியாபாரிகள் தங்கள் பொருட்களை ஓவிய மாக வரைந்து விளம் பரங்கள் செய்தார்கள். அச்சு இயந்திரங்கள் தோன்றியபோது, விளம்பரங்கள் வேறு வடிவம் பெற்றன. 17-ம் நூற்றாண்டில் இங்கிலாந்து நாட்டில் பத்திரிகைகளில் முதல் முறையாக மருந்து, மாத்திரைகள் பற்றிய விளம்பரங்கள் இடம்பிடித்தன.

p103a.jpgஜூன் 1836-ல் பிரெஞ்சுப் பத்திரிகையான La Presse முதன் முதலாக விளம்பரங்களுக்குக் கட்டணம் வசூலித்தது. 20-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பெரும்பாலான வீடுகளில் பெண்கள்தான் முடிவு எடுத்தார்கள். எனவே, பெண்களைக் குறி வைத்தே வீட்டு உபயோகப் பொருட்களை விளம்பரம் செய்தார்கள். ‘அதையும் பெண் களைவைத்தே விளம்பரம் செய்யலாமே?’ என்று நினைத்தபோதுதான் ‘விளம்பர மாடல்கள்’ என்றொரு புதிய இனம் உருவானது. ஒரு குளியல் சோப் விளம்பரம்தான் பெண் மாடலைவைத்து எடுக்கப்பட்ட முதல் விளம்பரம். ‘நீங்கள் தொட விரும்பும் சருமம்'(The skin you love to touch) என்பதுதான் விளம்பர உலகில் எழுதப்பட்ட முதல் ஸ்லோகன்.

1920-களில் ரேடியோ புழக்கத்துக்கு வந்தவுடன் விளம்பர உலகம் விரிவு அடைந்தது. 1950-களில் டுமான்ட் டெலி விஷன் நெட்வொர்க் என்ற தொலைக் காட்சி நிலையம் முதல் முறையாக விளம் பரங்களை ஒளிபரப்பியது. 1960-களில் என்ன செய்தியோ, அதை மட்டுமே விளம்பரம் என்று சொல்லி வந்தனர். அதற்கடுத்துதான் ‘கிரியேட்டிவிட்டி’ முக்கிய அம்சம் ஆனது.

இன்று எல்லாமே விளம்பரமயம். தன்னைத்தானே விளம்பரப்படுத்திக் கொள்ளத் தெரிந்தவர்கள் மட்டுமே விலைபோகிறார்கள். இல்லை என்றால், செல்லாக் காசுதான்!

source:vikatan

பின்னூட்டமொன்றை இடுக

Filed under Uncategorized

டுவிட்டரில் தலாய் லாமா

தலாய் லாமா
தலாய் லாமா

திபெத் ஆன்மிகத் தலைவரான தலாய் லாமா முதல் தடவையாக சீனாவில் உள்ள சாமானிய மக்களுடன் டுவிட்டர் குறுந்தகவல் பரிமாற்ற சேவை மூலமாக உரையாடியிருக்கின்றார்.
டுவிட்டர் இணையதளத்துக்கும் தகவல் பரிமாற்ற சேவைக்கும் சீனாவின் கம்யூனிஸ்ட் அதிகாரிகள் தடைவிதித்துள்ளனர் என்றாலும் சீனர்கள் பல்லாயிரக்கணக்கானோர் குறுக்கு வழிகளில் டுவிட்டரைப் பயன்படுத்தி வருகிறார்கள்.

நாடு கடந்த நிலையில் வாழ்ந்துவரும் திபெத் தலைவர் தலாய் லாமா தற்போது அமெரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுவருகிறார்.

நியூயார்க் நகர விடுதியில் ஒன்றில் இருந்தபடி சீன மொழிபெயர்ப்பாளர் ஒருவரின் உதவியுடன் அவர் ஒரு மணி நேரம் டுவிட்டரில் குறுந்தகவல்களை பரிமாறிக்கொண்டுள்ளார்.

இந்த ஒரு மணி நேரத்தில் சுமார் முன்னூறு கேள்விகளுக்கு தலாய் லாமா பதில் அளித்துள்ளார்.

லாமாவின் பதில்கள்

திபெத் தொடர்பில் சீன அரசாங்கம் கடைப்பிடித்துவரும் கொள்கையை அவர் விமர்சித்துள்ளார். திபெத் பகுதிகளில் பதற்றம் உருவாக திபெத் மக்கள் காரணமல்ல சீன அரசாங்கமே காரணம் என்று அவர் கூறியுள்ளார்.

சீனாவின் ஹன் இன மக்கள் திபெத்தில் பெருமளவில் குடியேறி வருவதால் திபெத்தின் மொழி கலாச்சாரம் போன்றவை பெரும் நெருக்கடிக்குள்ளாவதாக தலாய் லாமா டுவிட்டர் மூலமாகத் தெரிவித்துள்ளார்.

சீனா நிலைப்பாடு

திபெத்துக்கு விடுதலை வழங்க வேண்டும் என்று வலியுறுத்துவதன் காரணமாக சீனாவின் இறையாண்மைக்குள் தலாய்லாமா தலையிடுவதாக சீன அரசு கூறுகிறது.

ஆனால் திபெத் பகுதிக்கு அர்த்தமுள்ள ஒரு சுயாட்சி கிடைக்க வேண்டும் என்றுதான் தான் பாடுபடுவதாக தலாய் லாமா கூறுகிறார்.

source:bbc

பின்னூட்டமொன்றை இடுக

Filed under Uncategorized