Daily Archives: ஓகஸ்ட் 2, 2008

இஸ்லாம் வாளால் தான் பரவியது, முகமது எழுதிய கடிதங்களே இதற்கு சாட்சி…

இஸ்லாம் வாளால் தான் பரவியது, முகமது எழுதிய கடிதங்களே இதற்கு சாட்சி…

 

இஸ்லாம் வாளால் தான் பரவியது, முகமது எழுதிய கடிதங்களே இதற்கு சாட்சி…

 

இஸ்லாம் வாளால் தான் பரவியது, முகமது எழுதிய கடிதங்களே இதற்கு சாட்சி

(அபுமுஹை கட்டுரைகளில் மறைந்(த்)த உண்மைகள்)

 
 
 
முன்னுரை: இஸ்லாம் வாளால் பரப்பப்படவில்லை என்று முஸ்லீம்கள் ஏகமாக சொல்கிறார்கள். ஆனால், முகமது மற்ற நாட்டு மன்னர்களுக்கு எழுதிய கடிதங்களே போதும், நமக்கு இஸ்லாம் வாளால் பரப்பப்பட்டது என்பதை அறிந்துக்கொள்வதற்கு. மற்ற நாட்டு மன்னர்களுக்கு முகமது கடிதங்கள் மூலம் அழைப்பு விடுத்தார், அபுமுஹை அவர்கள் அக்கடிதங்களின் தமிழ் மொழியாக்கத்தை பதித்துள்ளார். இக்கடிதங்களை ரஹீக் என்ற புத்தகத்திலிருந்து பதித்ததாக, அபுமுஹை அவர்கள் குறிப்பு எழுதியுள்ளார்கள்.

இக்கட்டுரையில் நாம் கீழ் கண்ட இரண்டு விவரங்களைக் காணப்போகிறோம்.

1) தமிழில் மொழிபெயர்க்கும் போது, வேண்டுமென்றே சில வார்த்தைகளை மறைத்து, “இஸ்லாம் ஒரு அமைதி மார்க்கம்” என்பதை காட்ட‌ முயற்சி செய்த தமிழ் இஸ்லாமிய அறிஞர்கள்.

2) இக்கடிதங்கள் நமக்கு எதை போதிக்கின்றன, இஸ்லாம் அமைதி மார்க்கமா அல்லது மற்றவர்களை பயப்படவைத்து, வாளால் பரவிய மார்க்கமா?


முகமது எட்டு அரசர்களுக்கு கடிதம் மூலம் இஸ்லாமை தழுவும் படி அழைப்பு விடுத்ததாக அபூமுஹை அவர்கள் கட்டுரைகளை எழுதியுள்ளார்கள். இக்கடிதங்கள் ஆங்கிலத்தில் முஹம்மத் டாட் நெட் என்ற தளத்தில் பதிக்கப்பட்டுள்ளது. பஹ்ரைன் நாட்டு மன்னருக்கு முகமது அனுப்பிய முதலாவது கடிதம் கிடைக்காததால், அதை நான் இக்கட்டுரைக்கு எடுத்துக்கொள்ளவில்லை, அக்கட்டுரையை படிக்க இங்கே சொடுக்கவும்.

இந்த கட்டுரைகளில் சிலவற்றில், எங்கெல்லாம் இஸ்லாமைக் கொண்டு முகமது மற்றவர்களை பயப்பட வைத்தாரோ, அங்கெல்லாம் நம் தமிழ் இஸ்லாமிய அறிஞர்கள் அவ்வார்த்தைகளை மறைத்து, “இஸ்லாம் ஒரு அமைதி மார்க்கம் போல” காட்சி அளிக்கும் படி மொழிபெயர்த்துள்ளார்கள்.

அவைகளைப் பற்றிய விவரங்களை கீழே காணலாம்:

ஒப்பிட்டுப் பார்ப்பதற்கு நமக்கு உபயோகமாக இருக்கும் என்பதால், இக்கடிதங்களை ஆங்கிலத்தில் நான் கீழே பதித்து, அதன் பக்கத்தில் நம் தமிழ் இஸ்லாமிய அறிஞர்கள் தமிழில் மொழிபெயர்த்த விவரஙகளைத் தருகிறேன். முழு கடிதங்களைப் படிக்க கொடுக்கப்பட்ட தமிழ் அல்லது ஆங்கில தொடுப்புக்களை சொடுக்கவும்.  

வரிசை எண் எந்த நாட்டு அரசனுக்கு இக்கடிதம் அனுப்பப்பட்டது தமிழில்(அபூமுஹை த‌ள‌ம் எழுதிய‌து) இக்கடிதம் ஆங்கில‌த்தில்
1. அபிசீனியா மன்னர் நஜ்ஜாஷிக்கு ….. நான் உமக்கு இஸ்லாமிய அழைப்பை விடுக்கிறேன். நிச்சயமாக நான் இஸ்லாமியத் தூதராவேன். நீ இஸ்லாத்தை ஏற்றுக்கொள், ஈடேற்றம் பெறுவாய். …….

Source: http://abumuhai.blogspot.com/2008/07/1.html

…. I call you unto the fold of Islam; if you embrace Islam, you will find safety, ….

Source: A Deputation to Abyssinia (Ethiopia)

2. எகிப்து மன்னருக்கு நான் உங்களுக்கு இஸ்லாமிய அழைப்பை விடுக்கிறேன். இஸ்லாமை ஏற்றுக்கொள்க. ஈடேற்றம் அடைவீர்.

Source: http://abumuhai.blogspot.com/2008/07/2.html

… I invite you to accept Islam. Therefore, if you want security, accept Islam.

Source: Letter to the Vicegerent of Egypt, called Muqawqas

3. பாரசீக மன்னருக்கு நீங்கள் இஸ்லாமை ஏற்றுக் கொள்ளுங்கள் ஈடேற்றம் பெறுவீர்கள்.

Source: http://abumuhai.blogspot.com/2008/07/3.html

…… Accept Islam as your religion so that you may live in security,….

Source: A Letter to Chosroes, Emperor of Persia

4. ரோம் நாட்டு மன்னருக்கு ….நேர்வழியை பின்பற்றியவருக்கு ஈடேற்றம் உண்டாகட்டும்! இஸ்லாமை ஏற்றுக்கொள் ஈடேற்றம் அடைவாய்….

Source: http://abumuhai.blogspot.com/2008/07/4.html

……I invite you to embrace Islam so that you may live in security.

Source: The Envoy to Caesar, King of Rome

5. யமாமா நாட்டு அரசருக்கு ….குதிரையும் ஒட்டகமும் எதுவரை செல்ல முடியுமோ அதுவரை எனது மார்க்கம் வெற்றி பெரும். இஸ்லாமை ஏற்றுக் கொள்ளுங்கள். ஈடேற்றம் பெறுவீர்கள். உங்களுக்குக் கீழ் உள்ள பகுதிகளையெல்லாம் உங்களுக்கே தந்துவிடுகிறேன்.

Source: http://abumuhai.blogspot.com/2008/07/67.html

… Be informed that my religion shall prevail everywhere. You should accept Islam, and whatever under your command shall remain yours.

Source: A Letter to Haudha bin ‘Ali, Governor of Yamama

6. சிரியா நாட்டு மன்னருக்கு அல்லாஹ்வின் தூதர் முஹம்மது, ஹாரிஸ் இப்னு அபூ ஷமீருக்கு எழுதியது. நேர்வழியைப் பின்பற்றி, அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டு, அவனை உண்மையாக ஏற்றுக் கொண்டவருக்கு ஈடேற்றம் உண்டாகட்டும்! தனக்கு இணை துணை இல்லாத ஏகனான அல்லாஹ் ஒருவனையே நீர் நம்பிக்கை கொள்ள வேண்டும் என்று நான் உங்களை அழைக்கிறேன். அப்படி செய்தால் உங்கள் ஆட்சி உங்களிடமே நிலைத்திருக்கும்.’

அஸத் இப்னு குஸைமா கிளையைச் சேர்ந்த ஷுஜா இப்னு வஹப் இக்கடிதத்தை எடுத்துச் சென்றார். இவர் ஹாரிஸிடம் கடிதத்தை ஒப்படைத்த போது, அதைத் தூக்கி எறிந்துவிட்டு”என்னிடமிருந்து எனது ஆட்சியை யாரால் பிடுங்க முடியும். இதோ நான் அவரிடம் புறப்படுகிறேன்” என்று கர்ஜித்தான். இவன் இஸ்லாமை ஏற்றுக் கொள்ளவில்லை.

Source: http://abumuhai.blogspot.com/2008/07/67.html

From Muhammad, Messenger of Allâh to Al-Harith bin Abi Shamir. Peace be upon him who follows true guidance, believes in it and regards it as true. I invite you to believe in Allâh Alone with no associate, thenceafter your kingdom will remain yours.

Shuja’ bin Wahab had the honour of taking the letter to Harith, who upon hearing the letter read in his audience, was madly infuriated and uttered: “Who dares to disposs me of my country, I’ll fight him (the Prophet),” and arrogantly rejected the Prophet’s invitation to the fold of Islam.

Source:A Letter to Harith bin Abi Shamir Al-Ghassani, King of Damascus

7. ஓமன் நாட்டு அரசருக்கு நீங்கள் இருவரும் இஸ்லாமை ஏற்றுக் கொண்டால் உங்களையே நான் ஆட்சியாளர்களாக ஆக்கி விடுவேன். நீங்கள் இருவரும் இஸ்லாமை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டால் நிச்சயம் உங்களின் ஆட்சி கவிழ்ந்துவிடும் என்பதில் சந்தேகமேயில்லை. எனது வீரர்கள் உங்களது நாட்டிற்கு வெகு விரைவில் வந்திறங்குவார்கள். எனது நபித்துவம் உங்களது ஆட்சியை வெல்லும்.’

Source: http://abumuhai.blogspot.com/2008/07/8.html

If you two accept Islam, you will remain in command of your country; but if you refuse my Call, you’ve got to remember that all your possessions are perishable. My horsemen will appropriate your land, and my Prophethood will assume preponderance over your kingship.”

Source: Letter to the King of ‘Oman, Jaifer, and his Brother ‘Abd Al-Jalandi

2) இக்கடிதங்கள் நமக்கு எதை போதிக்கின்றன, இஸ்லாம் அமைதி மார்க்கமா அல்லது மற்றவர்களை பயப்படவைத்து, வாளால் பரவிய மார்க்கமா?

மேலே உள்ள சில கட்டுரைகளில்,

ஆங்கிலத்தில் “if you embrace Islam, you will find safety” என்று உள்ளதை

தமிழில் “நீ இஸ்லாத்தை ஏற்றுக்கொள், ஈடேற்றம் பெறுவாய்” என்று மொழிபெயர்த்துள்ளார்கள்.

ஆங்கிலத்தில் உள்ள வரிகளில் “ஒரு நிபந்தனை” இருப்பதை காணமுடியும், அதாவது, “நீங்கள் இஸ்லாமை ஏற்றுக்கொண்டால், பாதுகாப்பாக இருப்பீர்கள்” என்று உள்ளது. இதன் உள் அர்த்தம் என்ன? “நீங்கள் இஸ்லாமை ஏற்றுக்கொள்ளவில்லையானால், பாதுகாப்பாக இருக்கமாட்டீர்கள், அதாவது நான் வந்து போர் புரிந்து, உங்கள் மீது வெற்றிக்கொள்வேன்” என்று பொருள். இந்த விவரத்தை மிகவும் தெளிவாக, முகமது ஓமன் நாட்டு மன்னருக்கு எழுதிய கடிதத்தில் விவரித்துள்ளார்.

ஓமன் நாட்டுக்கு முகமதுவின் கடிதம்:

…நீங்கள் இருவரும் இஸ்லாமை ஏற்றுக் கொண்டால் உங்களையே நான் ஆட்சியாளர்களாக ஆக்கி விடுவேன். நீங்கள் இருவரும் இஸ்லாமை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டால் நிச்சயம் உங்களின் ஆட்சி கவிழ்ந்துவிடும் என்பதில் சந்தேகமேயில்லை. எனது வீரர்கள் உங்களது நாட்டிற்கு வெகு விரைவில் வந்திறங்குவார்கள். எனது நபித்துவம் உங்களது ஆட்சியை வெல்லும்.

…If you two accept Islam, you will remain in command of your country; but if you refuse my Call, you’ve got to remember that all your possessions are perishable. My horsemen will appropriate your land, and my Prophethood will assume preponderance over your kingship.

மேலே உள்ள கடிதத்தில் முகமது சொல்வதை கவனியுங்கள். ஓமன் நாட்டு அரசர் இஸ்லாமை ஏற்றுக்கொண்டால், தன் நாட்டை தானே ஆட்சி செய்யலாமாம். யார் யாருக்கு ஆட்சிப் பொறுப்பை தருவது? நான் ஆட்சி செய்யும் நாட்டில், எனக்கு யாரோ ஒருவர் கடிதம் அனுப்பி, இஸ்லாமை ஏற்றுகொள், அப்போது நீயே உன் நாட்டை ஆட்சி செய்யலாம் என்று சொன்னால், நான் என்ன காதில் பூவைத்து இருப்பேனா? ஒருவேளை எனக்கு இராணுவ பலம் குறைவாக இருந்தால், தோற்றுப்போவேன் என்ற பயத்துடன் இஸ்லாமை ஏற்றுக்கொள்ளமுடியும் [அப்படி தோற்றுப்போவேன் என்ற பயத்துடன் இஸ்லாமை ஏற்றுக்கொண்டால், இதனால் அல்லாவிற்கும், இஸ்லாமுக்கும் என்ன மேன்மை சொல்லுங்கள்?]. எனக்கு இராணுவ பலம் அதிகமாக இருந்தால், முகமதுவோடு போர் புரிவேன். எது எப்படியானாலும், இது தான் அல்லாவின் தீனை பரப்பும் விதமா? சிந்தியுங்கள்.

ஒரு வேளை முஸ்லீம்கள் இக்கடிதங்களுக்கு “அப்படி அர்த்தம் இல்லை, கிறிஸ்தவர்கள் பொய் சொல்கிறார்கள்” என்று சொல்லக்கூடும். ஆனால், சிரியா அரசன், இக்கடிதம் படித்து என்ன சொன்னார் என்பதை சிறிது படித்துப்பார்த்தால் புரியும், இஸ்லாமை முகமது எப்படி பரப்பினார் என்பதை. அந்த அரசன் “என்னிடத்திலிருந்து என் ஆட்சியை யார் பிடுங்க முடியும்?” என்றுச் சொல்கிறான், அப்படியானால், அக்கடிதத்தில் என்ன எழுதியிருக்கும் என்று தெரிந்துக்கொள்ள ஆராய்ச்சி செய்யவேண்டிய அவசியமில்லை.

அஸத் இப்னு குஸைமா கிளையைச் சேர்ந்த ஷுஜா இப்னு வஹப் இக்கடிதத்தை எடுத்துச் சென்றார். இவர் ஹாரிஸிடம் கடிதத்தை ஒப்படைத்த போது, அதைத் தூக்கி எறிந்துவிட்டு”என்னிடமிருந்து எனது ஆட்சியை யாரால் பிடுங்க முடியும். இதோ நான் அவரிடம் புறப்படுகிறேன்” என்று கர்ஜித்தான். இவன் இஸ்லாமை ஏற்றுக் கொள்ளவில்லை.


Shuja’ bin Wahab had the honour of taking the letter to Harith, who upon hearing the letter read in his audience, was madly infuriated and uttered: “Who dares to disposs me of my country, I’ll fight him (the Prophet),” and arrogantly rejected the Prophet’s invitation to the fold of Islam.

சிலர் சொல்லக்கூடும், முகமதுவின் இக்கடிதங்களுக்கு பலர் ஆமோதம் அளித்தார்கள், இஸ்லாமியர்களாக மாறினார்கள் என்று. உண்மை தான் பலர் அமோதம் அளித்தார்கள், சிலர் எதிர்த்தார்கள். இங்கு பிரச்சனை “இஸ்லாமின் கோட்பாடுகள், கட்டளைகள்” மற்றவர்கள் ஏற்றுக்கொள்ளும்படி இருந்ததா இல்லையா என்பதல்ல? முகமது இஸ்லாமை பரப்பிய விதம் சரியா? உடனே, முகமதுவை விட்டுவிட்டு மற்ற அரசர்களின் பெயர்களை குறிப்பிட்டு, இந்த நாட்டில் இப்படி அமைதியான முறையில் இஸ்லாம் பரவியது என்று சொல்லவேண்டாம், இப்போது கேள்வி, முகமது இஸ்லாமை எப்படி பரப்பினார்? என்பது தான். முகமதுவின் கடிதங்களில் உள்ள உண்மை என்ன? என்பதைப் பற்றியது தான்.

முகமது இஸ்லாமை வாளால் தான் பரப்பினார்:

இஸ்லாம் வாளால் பரப்பப்படவில்லை என்பதை காட்ட முஸ்லீம்கள், பல நாடுகளின் சரித்திரத்தைப் பற்றிப் பேசுவார்கள். ஆனால், முகமது எப்படி பரப்பினார் என்பதை இக்கடிதங்கள் படம் பிடித்துக்காட்டுகின்றன. இதற்கு முஸ்லீம்கள் என்ன பதில் சொல்லப்போகிறார்கள்? நான் ஒரு கேள்வியை கேட்கட்டும், அதாவது உலகத்தில் பல இஸ்லாமிய நாடுகள் உள்ளன. அப்படிப்பட்ட ஒரு நாட்டிற்கு, இந்திய அரசாங்கம் அல்லது வேறு ஒரு மேற்கத்திய நாடு அல்லது இராணுபலம் அதிகமாக உள்ள நாடு, கீழ் கண்டவாறு கடிதம் எழுதி அனுப்பினால், எப்படி இருக்கும்.

மான்புமிகு சூடான்/பாகிஸ்தான்/சௌதி அரேபியா etc… நாட்டு அதிபருக்கு, இந்தியாவின்/சைனாவின்/அமெரிக்காவின்/ஜெர்மனியின் etc… நாட்டு அதிபர் எழுதிக்கொள்வது. உங்களுக்கு சாந்தி உண்டாகட்டும்.

நாங்கள் a/b/c/x/y/z etc.. என்ற இறைவனை வணங்குகிறோம், மற்றும் இத்தெய்வமே உண்மையானவர். எனவே, உங்கள் அல்லாவை தொழுவதை இனி விட்டுவிடுங்கள். நீங்கள் பாதுகாப்பாக இருக்கவேண்டுமானால், இந்துத்துவத்தை / கிறிஸ்தவத்தை / புத்தமதத்தை / etc… ஏற்றுக்கொள்ளுங்கள், அப்போது பாதுகாப்பாக இருப்பீர்கள். நீங்க‌ள் இஸ்லாமை விட்டு விட்டு எங்கள் தெய்வ‌ங்க‌ளை ஏற்றுக்கொள்ள‌வில்லையானால், எங்க‌ள் இராணுவ‌ம் உங்க‌ள் நாட்டில் வ‌ந்து இற‌ங்கும், எங்க‌ள் வ‌லிமையை உங்க‌ளுக்கு காட்டுவோம். எங்க‌ள் மார்க்க‌த்தை ஏற்று, உங்க‌ள் இஸ்லாமை விட்டு விடுங்க‌ள் என்று உங்க‌ளுக்கு அழைப்பு விடுக்கிறோம். அப்ப‌டி நீங்க‌ள் மாற‌வில்லையானால், அல்லாவை வ‌ண‌ங்கும் மூஸ்லீம்க‌ளின் பாவ‌ங்க‌ள் எல்லாம் உங்க‌ள் மேல் சும‌ரும் என்ப‌தை தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்த மேலே உள்ள கடிதத்திற்கும், முகமது அனுப்பின கடிதங்களுக்கும் என்ன வித்தியாசம் என்று நினைக்கிறீர்கள். இதை படித்தவுடன் கோபம் வரவில்லையா உங்களுக்கு? அப்படித்தான், முகமதுவும் தன் தெய்வமாகிய அல்லாவை பரப்ப, ஆயுதத்தையும், போரையும், சர்வாதிகாரத்தையும் பயன்படுத்தினார். அதற்கு இக்கடிதங்களே சாட்சிகள். இக்கடிதங்களையும், அவைகளில் உள்ள செய்திகளையும், உலகத்தில் உள்ள மக்களுக்கு எப்படி விளக்குவீர்கள்? என்ன நியாயத்தை கற்பிப்பீர்கள்? சாதாரணமாக, கடவுள் நம்பிக்கையை பயன்படுத்தாமல், பொன்னுக்கும் மண்ணுக்கும் ஆசைப்பட்டு பல அரசர்கள் பக்கத்து நாட்டு அரசர்கள் மீது போர் தொடுப்பார்கள். ஆனால், தன்னை ஒரு இறைவனின் தூதன் என்றுச் சொல்லிக்கொண்டு, உலகத்திற்கு அமைதியை கொடுப்பேன் என்றுச் சொல்லிக்கொண்டு, இரத்தம் சிந்தியது சரிதானா என்று சிந்தித்துப் பாருங்கள். இப்படியும் ஒரு மதத்தை பரப்பனுமா? என்று உங்களை நீங்களே கேள்வியை கேட்டுப்பாருங்கள்.

முகமதுவை விட மற்ற இஸ்லாமிய அரசர்கள் நல்லவர்கள் என்று சொல்லும் இஸ்லாமியர்கள்:

இஸ்லாமை பரப்ப இஸ்லாமிய அரசர்கள் வாளைப்பயன் படுத்தவில்லை, அவர்கள் தங்கள் நல்ல நடத்தையினால் தான் பரப்பினார்கள் என்றுச் சொல்லி, இஸ்லாமுக்காக பரிந்துப்பேசும் இஸ்லாமியர்கள் ஒன்றை கவனத்தில் வைக்கவேண்டும். இப்படி நீங்கள் செய்வதினால், நீங்கள் மேற்கோள் காட்டும் இஸ்லாமிய அரசர்கள், “முகமதுவை விட நல்லவர்களாக இருந்தார்கள்” என்பதை மறைமுகமாக நீங்கள் சொல்கிறீர்கள் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள். உங்கள் முகமது கடிதங்களை அனுப்பி, அரசர்களை இஸ்லாமுக்கு அழைத்து, வரவில்லையானால் தொலைத்துவிடுவேன் என்று பயமுறுத்தி இஸ்லாமை பரப்பினார், ஆனால், அவரை பின்பற்றியவர்கள் அப்படி செய்யவில்லை என்று நீங்கள் சொல்வதினால், என்ன தவறு செய்துள்ளீர்கள் என்று சிந்தித்துப்பாருங்கள்.

முடிவுரை: இஸ்லாமிய நண்பர் அபூமுஹை அவர்களுக்கு, நீங்கள் எழுதிய கட்டுரைகள் ஒரு குறிப்பிட்ட புத்தகத்திலிருந்து எடுத்து எழுதினீர்கள் என்று சொல்லியுள்ளீர்கள். நான் கேட்க விரும்பும் கேள்வி: அப்புத்தகத்திலே இப்படி உண்மையை மறைத்து இஸ்லாம் ஒரு அமைதி மதம் போல காட்டித் தான் எழுதியிருந்ததா? அல்லது நீங்கள் அதனை மறைத்து எழுதினீர்களா?

எது எப்படியானால், அப்புத்தகம் எழுதியவரும் ஒரு முஸ்லீம் தானே, இக்கடிதங்களில் உள்ள பொருளை எங்களுக்கு விளக்கும் படி கேட்டுக்கொள்கிறேன். மட்டுமல்ல, உங்கள் நபி அன்று செய்தது இன்று கூட மக்கள் அல்லது நாடுகள் பின்பற்ற தகுந்தது என்றுச் சொல்லும் முஸ்லீம்கள், இப்படி இன்றுள்ள உலகில் கடிதம் மூலமாக பயமுறுத்தி மதத்தை பரப்ப நீங்கள் அனுமதிப்பீர்களா? அல்லது பாகிஸ்தானுக்கு, ஈரானுக்கு அல்லது சௌதி அரேபியாவிற்கு ஒரு கடிதம் அனுப்பினால், அவர்கள் என்ன பதில் தருவார்கள்? அக்கடிதம் அனுப்பியவர்களோடு போர் செய்வார்களா அல்லது இஸ்லாமை விட்டுவிட்டு வேறு மார்க்கத்திற்கு மாறிவிடுவார்களா?

காதுள்ளவன் கேட்கக்கடவன்

 
 

 

 

 

பின்னூட்டமொன்றை இடுக

Filed under Uncategorized

குர்‍ஆனில் கிறிஸ்துமஸ் பாகம் 2 – குர்‍ஆனின் சரித்திர தவறு:யோவான் ஸ்நானகனும் அல்லாவும் (குர்-ஆன் 19:7)

 

குர்‍ஆனில் கிறிஸ்துமஸ் பாகம் 2 – குர்‍ஆனின் சரித்திர தவறு:யோவான் ஸ்நானகனும் அல்லாவும் (குர்-ஆன் 19:7)

குர்‍ஆனில் கிறிஸ்துமஸ் பாகம் 2

குர்‍ஆனின் சரித்திர தவறு:யோவான் ஸ்நானகனும் அல்லாவும் (குர்-ஆன் 19:7) 

முன்னுரை: இயேசுவின் பிறப்பு சம்மந்தப்பட்ட குர்‍ஆனின் வசனங்கள் பற்றி நாம் சிந்தித்துக்கொண்டு வந்துக்கொண்டு இருக்கிறோம். குர்‍ஆனில் கிறிஸ்துமஸ் பாகம் 1ஐ தொடர்ந்து, இப்போது இரண்டாம் பாகமாக, அல்லா செய்த ஒரு சரித்திர தவறை காணப்போகிறோம்.

குர்‍ஆன் 19:7ல் அல்லா சொல்கிறார்:

 

குர்‍ஆன் 19:7

‘ஜகரிய்யாவே! யஹ்யா என்ற பெயர் கொண்ட ஒரு புதல்வனை(த் தருவது) பற்றி நிச்சயமாக நாம் உமக்கு நற்செய்தி கூறுகிறோம். இதற்கு முன்னர் இப்பெயர் கொண்டவரை நாம் ஆக்கவில்லை” (என்று இறைவன் கூறினான்).

யஹ்யா ( யோவான் or John ) என்ற பெயர் கொண்ட நபர்களை அல்லா, யோவான் ஸ்நானனுக்கு முன்பு ஒருவரையும் உருவாக்கவில்லையாம். அதாவது, யோவான் என்ற பெயர் கொண்ட ஒருவரும் யோவானுக்கு முன்பு வாழவில்லையாம். இப்படி அல்லா சொல்வதினால், அவருக்கு சரித்திரம் பற்றிய‌ விவரம் தெரியவில்லை என்று புலனாகிறது. சரித்திரத்தை நாம் புரட்டிப்பார்த்தாலும், மற்றும் பைபிளின் பழையை ஏற்பாட்டை புரட்டிப்பார்த்தாலும், யோவான் (John) என்ற பெயர் கொண்டவர்கள் அனேகர் இருப்பதாக நாம் கண்டுக்கொள்ளமுடியும். குர்‍ஆனில் உள்ள பல பிழைகளில் இதுவும் ஒன்று.

சரித்திரத்தில் யோவான்(JOHN) பெயர்களைக் கொண்ட நபர்கள்

1) ஜான் ஹிர்கானஸ் John Hyrcanus (Yohanan Girhan):

 

இவர் கி.மு. 2ம் நூற்றாண்டில் வாழ்ந்த “ஹாஸ்மொனியன்” நாட்டு அரச‌னாவார். ஆட்சிகாலம் கி.மு. 134 – 104, மரித்த ஆண்டு : கி.மு. 104. மேலும் விவரங்களுக்கு : பார்க்க John Hyrcanus – Wikipedia | John Hyrcanus-Brittanica | John Hyrcanus – Jewish Encyclopedia

2) “ஜான்” எஸ்ஸன் – John Essenes:

ஒரு கலகம் செய்த குழுவிற்கு தலைவராக இருந்த “ஜான்” எஸ்ஸன் என்வரைப்பற்றி ஜொஸெபாஸ் சொல்கிறார். “ஜான்” எஸ்ஸன் கி.மு. வில் வாழ்ந்தவர். பார்க்க: “ஜான்” எஸ்ஸன் – John Essenes

3) 1 மக்காபீஸ் 2:1

மக்காபீஸ் என்ற நூல் ( கி.மு 100) சொல்கிறது. மத்ததியாஸ் “ஜானின்” மகன், ஜான் சிமியோனின் மகன். மற்றும் அதிகாரம் 2 வசனம் 2 சொல்கிறது, மத்ததியாஸுக்கு “ஜான்” என்ற பெயரில் ஒரு மகன் இருந்தான் என்று. பார்க்க : 1 மக்காபீஸ் 2:1 :
மற்றும் 1 மக்காபீஸ் 16:19 ல் கூட ஒரு முறை “ஜான்” என்ற ஒருவரைப்பற்றி சொல்கிறது. பார்க்க : 1 மக்காபீஸ் 16:19

மேல் சொல்லப்பட்ட எல்லா “ஜான்” களும் , பைபிளின் யோவான் ஸ்நானகனுக்கு முன் வாழ்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

யோவானுக்கு முன்பு யோவான் என்ற பெயர் கொண்ட பழைய ஏற்பாட்டு நபர்கள்:

இந்தப்பெயர் “யோகனான்”(எபிரேய மொழியில்-“யோகனான்”) என்று பல முறை (27 க்கு அதிகமாக) பழைய ஏற்பாட்டில் வருகிறது. ( பார்க்க 2 இராஜா 25:23, 1 நாளா 3:15,24, 6:9,10, 12:4, 12:12, 26:3, 2 நாளா 17:15, 23:1, 28:12, எஸ்றா 8:12, 10:6, 10:28, நெகே 6:18, 12:13, 12:22,23,42, எரே 40:8 இன்னும் பல இடங்களில்.)

பல இஸ்லாமிய அறிஞர்களின் குர்-ஆன் மொழிபெயர்ப்பும். நாம் மேலே சொன்னது போல கருத்துள்ளது.

தமிழாக்கம்: டாக்டர். முஹம்மது ஜான், ஜான் டிரஸ்ட் நிறுவனம்,

19:7 ‘ஜகரிய்யாவே! யஹ்யா என்ற பெயர் கொண்ட ஒரு புதல்வனை(த் தருவது) பற்றி நிச்சயமாக நாம் உமக்கு நற்செய்தி கூறுகிறோம். இதற்கு முன்னர் இப்பெயர் கொண்டவரை நாம் ஆக்கவில்லை” (என்று இறைவன் கூறினான்).

தமிழாக்கம்: தமிழாக்கம்: பி.ஜைனுல் ஆபிதீன்

19:7 “ஸக்கரிய்யாவே! ஒரு புதல்வன் பற்றி உமக்கு நாம் நற்செய்தி கூறுகிறோம். அவரது பெயர் யஹ்யா. இப்பெயரிடப்பட்டவரை இவருக்கு முன் நாம் ஏற்படுத்தியதில்லை” (என இறைவன் கூறினான்)

ஆங்கில மொழி பெயர்ப்புக்கள்

Translation: Pickthall

(It was said unto him): O Zachariah! Lo! We bring thee tidings of a son whose name is John; we have given the same name to none before (him).

Translation: Arberry

‘O Zachariah, We give thee good tidings of a boy, whose name is John. No namesake have We given him aforetime.’

Translation: Palmer

‘O Zachariah! verily, we, give thee glad tidings of a son, whose name shall be John. We never made a namesake of his before.’

Translation: Rodwell

“O Zachariah! verily we announce to thee a son, – his name John: That name We have given to none before him.”

Translation: Sale

[And the angel answered him], o Zacharias, verily we bring thee tidings of a son, whose name [shall be] John; we have not caused any to bear the same name before him.

Translation: Yusuf Ali

(His prayer was answered): “O Zakariya! We give thee good news of a son: His name shall be Yahya: on none by that name have We conferred distinction before.

யூசுப் அலி மட்டும் சிறிது மாற்றிச் சொல்கிறார். அவருக்கு இவ்வசனம் சரித்திரப்படி தவறானது என்று தெரிந்திருக்குமோ! குர்-ஆனை தான் நினைத்தபடி மொழிபெயர்த்துள்ளார்.

ஜலால் இவ்வசனத்திற்கு கீழ்கண்டவாறு பொருள் கூறுகிறார்(tafsir).

God, exalted be He, in responding to his request for a son that will be the incarnation of His mercy, says: ‘O Zachariah! Indeed We give you good tidings of a boy, who will inherit in the way that you have requested – whose name is John. Never before have We made anyone his namesake’, that is, [never has there been] anyone with the name ‘John’.
Source- Tafsir al-Jalalayn

இந்த தவறைப் பற்றி இஸ்லாமியர்களின் கேள்வியும் மற்றும் பதிலும் இங்கு காணலாம்.
Question 1  Answer 1 (Historical)  Answer 2 (Scriptural)
Question 2  Answer 1  Answer 2


மேலும் படிக்க:

1) குர்‍ஆனில் கிறிஸ்துமஸ் – பாகம் 1 – இஸ்லாம் கல்விக்கு பதில்: பைபிளில் இல்லாத குழந்தை அற்புதம் முகமது “காப்பி” அடித்தது தான்.

2) குர்‍ஆனின் சரித்திர தவறு: “எஸ்றா அல்லாவின் குமாரனா?” யார் சொன்னது? குர்-ஆன் தான் சொல்கிறது

3) சாத்தானின் வசனங்களும் குர்-ஆனும்

4) குர்ஆன் பாதுகாக்கப்பட்டதா? – ஆசிரியர்: Khaled

 
 

 

 

பின்னூட்டமொன்றை இடுக

Filed under Uncategorized

எங்களைத் தீவிரவாதியாக மாற்றியது இஸ்லாமிய அமைப்புகள்தான்!-முஸ்லீம் தீவிரவாதியின் அதிரடி பேட்டி

எங்களைத் தீவிரவாதியாக மாற்றியது இஸ்லாமிய அமைப்புகள்தான்!-முஸ்லீம் தீவிரவாதியின் அதிரடி பேட்டி

பின்னூட்டமொன்றை இடுக

Filed under Uncategorized