கிரிக்கெட்:அழகிகளின் கவர்ச்சி ஆட்டத்துக்கு தடை


கிரிக்கெட்:அழகிகளின் கவர்ச்சி ஆட்டத்துக்கு தடை

கவர்ச்சி ஆட்டத்துக்கு தடை

20 ஓவர் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளின் போது மைதான ஓரத்தில் இளம்பெண்களின் துள்ளாட்டம் ரசிகர்களுக்கு விருந்து படைப்பதாக உள்ளது. ஆனால் இதற்கு ஒரு சாராரிடம் இருந்து எதிர்ப்பும் கிளம்பி உள்ளது. நமது கலா சாரத்துக்கு எதிராக இருப்பதாக பலர் கண்டனம் தெரிவித்தபடி உள்ளனர்.

ஐதராபாத்தில் நேற்று கொல்கத்தா-ஐதராபாத் அணிகள் மோதிய போதும் அழகிகள் ஆட்டம் போட்டனர். ஆனால் முன்பு போல அவர்கள் அரைகுறை ஆடையில் இல்லை. உடலை முழுமையாக மறைத்து இருந்தார்கள்.

இந்த திடீர் மாற்றத்துக்கு ஆந்திர பிரதேச பா.ஜ.க.வினர்தான் காரணம். ஆட்டம் போடும் அழகிகள் ஒழுங்காக உடை அணியாவிட்டால் ஐ.பி.எல். ஆட்டத்துக்கு இடைïறு செய்வோம் என்று மிரட்டல் விடுத்தனர். இதனால் நேற்று அழகிகள் ஆடையில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது.

ஐதராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி மைதானத்தில் கிரிக்கெட் போட்டி நடக்கும்போது நடனம் ஆடுவதற்காக ஆஸ்திரேலியா நாட்டில் இருந்து 12 அழகிகள் வரவழைக்கப்பட்டுள்ளனர். திடீரென உடலை மறைத்து உடை அணிய சொன்னது அழகிகளை “அப்செட்” ஆக்கி உள்ளது. ஆனால் ஐதராபாத் அணியில் உள்ள அப்ரிடி “அப்பாடா…” என்று நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளார். இவர்தான் ஆரம்பத்தில் இருந்தே, அழகிகள் ஆடுவதால் வீரர்களின் கவனம் சிதறுகிறது என்று கூறி வந்தார்.

http://www.maalaimalar.com/

பின்னூட்டமொன்றை இடுக

Filed under Uncategorized

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s